சென்னையில்
முதல் வங்கி கணக்கு கனரா வங்கியில்தான்…
ஏடிஎம்
அறிமுகமான நேரம்…. ஏடிஎம் கார்டு வாங்கி விட்டேன்… முதல் பணத்தை என் காதலியோடு எடுக்க சென்னை கிரிம்ஸ்ல் இருக்கும் கனரா வங்கி ஏடிஎம்முக்கு
சென்றேன்… நம்ம படிப்பு அறிவும், அது எதையாவது ஆங்கிலத்தில் கேட்டு தொலைத்தால்? அந்த
ஏடிஎம் அறையும் கிராமத்து ஆளான எனக்கு ஒரு பதற்றத்தை கொடுத்த காரணத்தால் என் காதலியை தைரியத்துக்காக அழைத்து சென்றேன்…
சேமிப்பு வங்கி 500 ரூபாய்க்கு மேல் தாண்ட ரொம்பவே யோசித்து தொலைத்த காலகட்டம்… கரிம்ஸ் ரோடு
ஏடிஎம்முக்கு போய் விட்டோம் .. நான் என் காதலி அவள் நண்பி பப்பி மூன்று பேரும் போய் இருந்தோம்…ஏசிஎஸ் படித்துக்கொண்டு இருந்தார்கள்.. கிளாஸ் முடித்து
வரும் போது அவளிடம் புது ஏடிஎம் கார்டு காட்டி எடிஎம்முக்கு அழைத்து போனேன்.. செம பதட்டம்…
செம டென்ஷன்… முதல் முறையாக பணத்தை ஒரு மெஷின் கொடுக்க போகின்றது…
பணம் வேண்டும் என்றால் செலான் பில்லப் செய்ய… பேனா
பிச்சை எடுத்து, பில்லப் செய்து சோடா புட்டி
போட்ட பெண்மணியின் அலட்சிய பார்வை உள் வாங்கி நம்மை திருடனை போல பாவித்து ஒரு வெறுப்போடு
இரண்டு பெரிய டிக் போட்டு, டோக்கன் கொடுத்து பின் அழைத்து
பணம் எண்ணி கொடுக்கும் இம்சையில் இருந்து எதிரில்
இருக்கும் மெஷின் இனி காப்பாற்ற போகின்றது என்ற சந்தோஷம் எல்லாம் சேர்ந்து
கார்டை போட்டு பின் நம்பர் கன்பார்ம் செய்து
முதல் பணமாக 100 ரூபாய் எடுத்து காதலியிடம் பெருமையாக காட்டினேன்…. பணம் எடுத்து
கார்டை வெளியே எடுக்க வேண்டும்…
நேரம் ஆகி விட்ட காரணத்தால் கார்டை ஏடிஎம் மெஷின் சனியன்
முழுங்கி தொலைத்து டென்ஷன் ஏற்படுத்தி மறுநாள்
காலை பேங்குக்கு போய் அடையாள அட்டையை காட்டி
திரும்ப கார்டு பெற்றது வேறு விஷயம்..
அதே
போல கார்டு செறுகினால் மட்டுமே ஏடிஎம் கதவு
திறக்கும்,… இப்போது அந்த சிஸ்டமே இப்போது இல்லை…
சரி
மேட்டருக்கு வருவோம்…..
சமீபத்தில் பெங்களூர் ஏடிஎம் கொள்ளையும் கொலையும் நாடு முழுக்க ஒரு அதிர்ச்சி அலையை உண்டு பண்ணி விட்டது.. விடி காத்தாலே காசு எடுக்க போனது ஒரு
கூத்தமாய்யா..? காலையில் எழுந்து பெங்களுர் குளிர்ல காசு எடுக்க போய் நடு மண்டையில
வெட்டு வாங்கி மயக்கமாவோம்ன்னு மொத நாள் நைட்டு
சாப்பிட்டு வாய் துடைக்கும் போது கூட அந்த
பெண்மணி யோசிச்சி பார்த்து இருக்க மாட்டாங்க…
முதலில்
இந்த பெண்மணி ஏடிஎவம்மில் நுழைகின்றார்… அண்ணாசாலையில்
கேப் கொடுக்காத ஆட்டோ போல பின்னாடியே… அவனும்
நழைஞ்சி ஷட்டரை கீழ இறக்கி விடறான்… இப்ப என்னதான்
கத்தினாலும் ரோட்டுல நடந்து போறவங்க யாருக்கும் கண்டிப்பா கிஞ்சித்தும் கேட்காது..
சட்டென அவன் அந்த பெண்மணியை மிரட்ட இந்த திடும்
சூழலை எதிர்ப்பார்க்காத அந்த பெண்மணி ஷட்டரை நோக்கி ஒடுவதில் குறியாக இருக்கின்றார்…
அவன் தடுத்து பார்க்கின்றான்…காரணம் கதவை நோக்கி ஒடி டப டப என்று கதவை கட்டி விட்டடால்
அவன் கதி அதோ கதிதான்.. என்ன சத்தம் என்று கதவை யாராவது கவனித்து கதவை திறந்தால் அவனுக்கு
சங்குதான்…
அவன்
அந்த பெண்மணியை துப்பாக்கி எடுத்து மிரட்டும் போது அவன் சுட மாட்டான் என்று தீர்மானமாக நம்புகின்றாரர்…. பணத்தை எடுத்துக்கொடுக்க சொல்லுகின்றான்…
ஆனாலும் அவர் கதவை நோக்கி ஓடுவதில் குறியாக
இருக்கின்றார்….கழுத்தை நெறித்து மிரட்டுகின்றான்… அந்த பெண் ஓடுவதில் குறியாக இருக்கின்றார்…
அவன் எடுத்த உடனே துப்பாக்கி எடுத்து காட்டுகின்றான்… அந்த பெண்மணி மிரளுகின்றார்.. அதன் பின் காசப்பு கடையில் பயண்படுத்தும் கத்தி வைத்து
இருக்கின்றார்… படித்தவன் தோற்றத்தில் ஒரு பை…
பணத்தை எடுத்து கொடுக்க சொல்கின்றான்…திரும்ப திரும்ப
அவர் கதவை நோக்கி ஓடுவதில் அந்த பெண்மணி குறியாக இருக்கின்றார்… அவன் சுவற்றில் சாத்தி
வைத்து, மிரட்டுகின்றான்.. திரும்ப முரண்டு பிடிக்க அரிவாளல் வெட்டி பின் பையில் இருந்து
செல்போன், மற்றும் சொச்ச பணம் 2500 ரூபாய் எடுத்து செல்கின்றான்… அவன் நோக்கம் கொல்வது
அல்ல என்பது என் அனுமானம்....நாளை அவன் பிடிபட்டஉடன் அப்படியே ஊகத்துக்கு ஏதிராகவும் மாறலாம்..
அந்த
பெண்மணியை மிரட்டி பணத்தை எடுத்துக்கொண்டு உள்ளே வைத்து ஷட்டரை மூடி விட்டு செல்ல வேண்டும் என்பதே அவன் நோக்கமாக
இருந்து இருக்கலாம்.. பணம் தேறும் என்று வந்தவனுக்கு முரண்டு பிடித்தல்
மேலும் பயத்தை உருவாக்கி பின் கோவத்தை உருவாக்கி வெட்டி போட்டு மிச்ச சொச்சத்தை
எடுத்து சென்று இருக்கின்றான்…தொழில் முறை திருடனாக இருந்து இருந்தால் அவன் ஏடிஎம்மில் பணத்தை கொள்ளை அடித்து இருக்க மாட்டான்..
கேமரா இருப்பது அவனுக்கு தெரியும்… அதே போல
செல்போன் எடுத்து சென்று இருக்கமாட்டான்… பஞ்சத்துக்கு திருட வந்து திருட்டை தொழிலாக கொண்ட புது திருடன் அவன்..… பணம் கிடைக்காத கோபம்
மிருகமாய் மாறி வெட்டி இருக்கின்றான்… இது அனுமானம் மட்டுமே.. அவன் போலிசில்
மாட்டினால் மட்டுமே விஷயம் வெளியே வரும்.
சரி
நாம் என்ன செய்யலாம்…..
கத்தி
முனையில் எது கேட்டலும் கொடுத்து விடவேண்டும்… எதிர்ப்பு தெரிவிப்பது என்பது நாம் பலசாலியாகவும்…
சூழல் சாதகமாக இருந்தால்தான்
நாம் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும்.,… அப்படி எதுவும் இல்லை என்றால்… நிராயுத பாணியாக
இருந்தால் வாயை மூடிக்கொண்டு என்ன கேட்டாலும் கொடுத்து விடுவது உசிதம்.. அப்படி கழட்டி கொடுத்தும் வெட்டி
விட்டு செல்லும் கும்பலும் உண்டு… மிரட்டி கேட்ட… உடனே எதிர்ப்பு தெரிவிக்காமல் கேட்டதை கொடுத்தவுடன்… அப்படியே சேதம் இல்லாமல் உயிரோடு விட்டு வைத்து சம்பவங்கள் நிறைய… அப்படி
அவிழ்த்து கொடுத்து விட்டு சேதாரம் இல்லாமல் போலிஸ் கம்ளெயின்ட் கொடுக்க வந்த
பாதிக்கப்பட்டவர்கள் ஏராளம்….
பணம் எப்போது வேண்டுமானாலும் சம்பாதித்து கொள்ளலாம்..
ஆனால் இப்போது அந்த பெங்களூர் பெண்மணிக்கு ஒரு பக்கம் உடல் செயல் இழந்து போய் விட்டது…உயிர்
பிழைத்ததே பெரிய விஷயம்….
வட இந்திய கொள்ளை கும்பல் ஒன்று இருக்கின்றது…அவர்கள் வட இந்தியாவில் இருந்து பல லாரிகள் மூலம் சென்னைக்கு வருவார்கள்… ஒன்று கூடுவார்கள்..
திட்டம் தீட்டுவார்கள். வீட்டை கண்காணிப்பார்கள்.. எதிர்பாராத கணத்தில் உள்ளே நுழைவார்கள்…
முதல் வெட்டு யார் கண்ணில் படுகின்றார்களோ.. அவர்களுக்குதான்… அது குழந்தையாக இருக்கலாம், வயதுக்கு
வந்த பெண்ணாக இருக்கலாம்.. சின்ன பையனாக இருக்கலாம்… என்பது வயது கடந்த முதியவராக இருக்கலாம்.. யாராக இருந்தாலும் வெறித்தனமான வெட்டு.. கொஞ்ச நேரத்துக்கு முன் நம்மோடு பேசிய குடும்ப உறுப்பினர் வெட்டு பட்டு
ரத்தமும் சதையுமாக துடித்துக்கொண்டு இருந்தால் குடும்ப உறுப்பினர்களுக்கு எப்படி இருக்கும்?? பித்து பிடித்த மன நிலைக்கு வந்து
விடுவார்கள் அல்லவா-?
அந்த பதட்டம்தான்
அவர்கள் வேண்டுவது…. பயத்தின் காரணமாக உடமைகளை எல்லாம் கொடுப்பார்கள்.. அவர்கள் மிக
சாவகாசமாக கொள்ளை அடித்து வெளியேறுவார்கள்… அப்படி ஒரு கொள்ளை சம்பவம் பூந்த மல்லி
பக்கம் ஒரு எம்எல்ஏ வீட்டில் அப்படி ஒரு சம்பவம் நடந்தது.. அதனை மோப்பம் பிடித்து தமிழக
காவல்துறை அவர்களை அவர்கள் ஊருக்கே சென்று பொறி வைத்து குற்றவாளிகள் பிடித்து இழுத்து வந்தவர்கள் நம்ம
போலிஸ்…
அதனால்
கத்தி முனையில் யாரும் உங்களை மிரட்டினால்….
சூழ்நிலை உங்களை நிராயுதபாணியாக வைத்து இருந்தால்..
தயவு செய்து மிருகங்கள் கேட்பதை கொடுத்து விடுங்கள்.. பணம் காசு எப்போது வேண்டுமானாலும்
சம்பாதித்துக்கொள்ளலாம் என்று உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள்…தயவு செய்து ஏதிர்ப்பு
ஏதும் தெரிவிக்காமல் நகைகள் கேட்டால் கழட்டி கொடுத்து தொலையுங்கள்..
எனக்கு
இது நடக்காது என்று யாரும் இந்த காலத்தில்
அலட்சியமாக இருக்க முடியாது…. முகவரி கேட்பது போல பக்கத்தில் வந்து கத்தியை காட்டி
நகை பறித்துக்கொண்டு செல்லும் சம்பவங்கள் அதிகரித்த
வண்ணம் உள்ளன,
அதனால்
யாருக்கு ஏதுவும் நேரலாம்.. ஏடிஎம்மில் பணம் எடுக்க வந்து மண்டையில் வெட்டு வாங்குவோம்
என்று யாரும் செருப்பு போட்டுக்கொண்டு வீட்டில் இருந்து வெளியே வருவதில்லை என்பதை புரிந்துக்கொள்ளுங்கள்..
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
Arumaiyana pathivu jii
ReplyDeleteநல்லா சொண்ணீங்க
ReplyDeletegood one keep it up
ReplyDeleteimportant post
ReplyDeletenaan andha video paaakkum podhum idhadhaan ninachen,
ReplyDeleteandha Lady pesama ATM la kaasu eduhthu kudththuttu thappichu vandhu irukkalaamnu....
போலீஸ் தரப்பும் இதையேதான் கூறினார்கள்..
ReplyDeleteபகிர்தலுக்கு மிக்க நன்றிகள் நண்பர்களே.
ReplyDelete