சாமியே
சைக்கிள்ள போகும் போது பூசாலி புல்லட் கேட்டானாம்..
அந்த மாதிரி கதைதான் என்
கதையும்...
வெளியே சொல்ல
முடியாத அளவுக்கு பொருளாதார பிரச்சனைகள். என்னால் எந்த உதவியும் செய்ய முடியாது என்பத்துதான் நிதர்சன
உண்மை.
என்னுடைய
தளத்தை பார்த்து விட்டு கருனை இல்லம் கணக்காக நிறைய மெயில்கள் அனுப்பிய படி
இருக்கின்றார்கள்...
ஜாக்கிக்கு
ஒரு மெயில் தட்டி விட்டு விட்டா அவர்
பார்த்துக்கொள்ளுவார் என்ற அளவில் நிறைய
மெயில்கள் வந்து இருக்கின்றன... நான் அந்த அளவுக்கு ஒர்த் இல்லைங்க
சாமியோவ்... அதனால் தவிற்க்க முடியாத காரணம் என்ற அளவில் இருக்கும்
விஷயங்களைமட்டுமே மெயில் செய்யவும்...
ஒரு நண்பர்
போன் செய்தார்.. அவர் அம்மாவுக்கு கால்
உடைந்து விட்டது..மருத்துமனை சென்று சேர்த்து இருக்கின்றார்.. நண்பர் பணபலமுடையவர்..
அதனால் பெரிய பணப்பிரச்சனை இல்லை...ஆனால் பக்கத்து பெட்டில் கொஞ்சம் கஷ்டப்படும்
குடும்பத்தை பார்த்து விட்டு என் நியாபகம் வந்ததாகவும் உன் பிளாக்கில் அவர்களை
பற்றி எழுதி ஏதாவது உதவி செய்ய முடியுமா? என்ற அளவுக்கு பில் செய்தது மட்டும் அல்லாமல் நீ சொன்னா நான் டிடெயில்
அனுப்பறேன்... நம் கண் எதிரில் நிறைய மனதை பிசையும் விஷயங்கள் நிறைய நடந்தாலும்
எல்லவற்றிர்க்கும் தீர்வு காண நம்மால் முடியாது நண்பரே என்று சொன்னதோடு மட்டும்
அல்லாமல் இது போல விஷயங்களை என்னிடம் சொல்லி என்னை தர்மசங்கடமாக்கி விடாதீர்கள்
என்று கெஞ்சி கேட்டுக்கொண்டேன்..நன்றாக யோசித்து பாருங்கள்... இந்த தளத்தை
படிக்கும்ஒரு சிலர் பக்கத்து பெட் கதையை கேட்டு என்னிடத்தில் உதவி கோரினால் நான்
என்ன செய்ய முடியும்-?
எனக்கு
தெரிந்து இரண்டு பெண்களுக்கு மட்டுமே உதவி செய்து இருக்கின்றேன்... ஒன்றை
செய்தாலும் நன்றே செய்யவேண்டும். ஒன்று பிளட்கேன்சர்... மற்றது
கல்விக்கானது..அதுவும் பிளட்கேன்சர் டீன் ஏஜ் பெண்ணுக்கு என்பதால்... மேலும்விவரம் அறிய இங்கே கிளிக்கவும்.
மைதிலி....
மைதிலிக்கு மட்டுமே கல்வி உதவிக்கு
நண்பர்களிடம் வேண்டுகோள்
விடுத்தேன்.. காரணம் மைதிலி வீட்டை நேரில் போய் பார்த்து
விட்டு வந்து இருக்கின்றேன்... அதனால்
அந்த உதவியை கோரினேன்... அவள் இருக்கும் வாழ்க்கை சூழலில் வாழ்க்கை நடத்துவதே
கடினம்...
மைதிலி படிப்பு செலவை எனது நண்பர்கள் ஸ்ரீராம் மற்றும்
க,ராமசாமி ஏற்றுக்கொண்டு
இருக்கின்றார்கள்..
மைதிலி மார்க்
லிஸ்ட்டை ஏற்கனவே இணைத்து இருந்தேன்.. அது கீழே..
மைதிலி எழுதிய
கடிதம்.
Respected sir,
I am mythili doing BE 1st yr in St.Peter's College of Engineering and Technology. I
lost my father in my child hood.My mom is a cooli.Under this situation I
studied hard and scored good marks in 12th.While i was
about to join the college i was not able to pay my college fees.Under this
critical situation I got the help
through Mr.Jakie Sekar from
Mr.Ramaswamy kannan and Mr.Sriram.I really thank you very much for your
timely help.With your financial support, I successfully completed my BE 1ST year with 81%.Actually I was expecting
for more marks but i was not able to achieve it.I really feel sorry for that.I
assure you that this time i will study hard and will give good marks.I have
already sent my fees details for your cosideration.So, i humbly request you to
transfer the amount as soon as possible..Anticipating your help..
With regards,
Mythili.
==============
மைதிலிக்கு
ஸ்ரீராம் எழுதிய கடிதம்...
ஜாக்கி
மைதிலிக்கு
எங்க வாழ்த்துக்களை சொல்லிடு, மதிப்பெண்கள் சூப்பராக இல்லா விட்டாலும் ஓரளவுக்கு இருக்கு,
முடியும் போது
நானும் ராமசாமியும் அவளுடன் பேசி இன்னும் சிறப்பா பண்ண ஊக்குவிக்கறோம்.
இந்த இமெயில்
ஃபீஸ் டீடெயில்ஸ் இல்லை, அதை அனுப்பச் சொல்லு... மாமனார் நேத்துதான் இங்க வந்தார்,
அவர் இல்லாம பணம் ஏற்பாடு பண்றது கஷ்டம் (Difficult
but not impossible), பண்ணிடுவேன்னு
நம்பிக்கை இருக்கு
என்றும்
அன்புடன்
பாஸ்டன்
ஸ்ரீராம்
** மைதிலி
சம்பந்தமான இமெயில்கள் அனைத்திலும் ராமசாமியை காபி பண்ணு.
==============
திடிர் என்று
மைதிலியின் கல்லூரியில் இந்த வார இறுதியில் 24,500 பணம் கேஷாக கட்ட வேண்டும் என்று சொல்லி இருக்கின்றார்கள்... அது டொனேஷன்...
அதுக்கு ரெசிப்ட் கிடையாதாம்....
மற்றபடி
14,500
மற்றும் 2000 ரூபாயை டிடி எடுத்து கொடுக்கலாம் என்று சொல்லி இருக்கின்றார்கள்...
... ஏம்மா கொஞ்சடம
முன்னாடியே நியாபக படுத்தி இருக்கலாமே என்றால் உங்களை டிஸ்டர்ப் செய்ய ரொம்ப கஷ்டமாக இருக்கின்றது என்று சொன்னாள்...
========
எனக்கு இருந்த
வேலை பளு காரணமாகவும் என் சூழ்நிலை காரணமாகவும் இந்த விஷயத்தை நான் மறந்தே போய்
விட்டேன்...
ஸ்ரீராமும் க.ராமசாமியும் என்னை மன்னிக்க ....
அந்த பெண்ணுக்கு நல்ல உடைகள் இல்லை.. பழைய உடைகள் கொடுக்க மனம ஒப்பவில்லை.. இந்த தீபாவளிக்கு ஒரு இரண்டு செட் சுடிதார் எடுத்து கொடுக்க வேண்டும்...மைதிலிக்கு ஒரு 150 ரூபாய் பணம் நான் கொடுக்க வேண்டும்.. போன முறை பணம் கொடுக்க சென்ற போது என்னிடத்தில் 150 பணம் இல்லை.. அவளுக்கு சேர வேண்டிய தொகை அது... காலையில் மைதிலிக்கு போன் செய்து விட்டு இந்த பதிவை எழுதுகின்றேன்.
பார்ப்போம்....
==========
நினைப்பது அல்ல
நீ நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
ஃபீஸை நாங்க பாத்துக்கறோம், Consider it done.
ReplyDeleteநாளைக்கு போன் பண்றேன்
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
யாராவது காலேஜுக்குப் போயி மைதிலியின் நிலையை எடுத்துச் சொல்லி டொனேஷனிலிருந்து அவளுக்கு விலக்கு அளிக்கச் சொல்லி கேக்க முடியுமா?
ReplyDeleteHard earned Money ஜாக்கி, படிப்புக்கு கொடுப்பதில் எனக்கு தயக்கமில்லை, ஆனா ஏதோ ஒரு பேராசை பிடிச்ச கல்லூரிக்கு ரசீது இல்லாத இனாம் தருவதில் எனக்கு விருப்பமில்லை. மேலும் இது கருப்புப் பணம் பெருகுவதற்கு வழி செய்கிறது - இதற்கு துணை போக நான் விரும்பவில்லை
மச்சி.. இது என்ன அமெரிக்காவா? இங்கே எல்லாத்துக்கும் லஞ்சம்... நேர்மையாக இருப்பது என்பது இந்தியாவை பொருத்தவரை தகுதி இழப்பு... இங்கு எல்லாம் இப்படித்தான்.. உன்னால் இங்கு நேர்மையாக ஒரு பர்த் சர்ட்டிபிகேட் கூட வாங்க முடியாது... இன்னும் புரியவில்லை என்றால் இந்தியன் திரைப்படத்தை மறு முறை பார்க்கவும்....
ReplyDeleteஆஹா... எவ்வளவு அருமையான காரியம்... அதுஇதுன்னு அளக்க என்னால் முடியாது. மைதிலிக்கு சரியான உடைகள் இல்லை என்று எழுதியிருக்கிறீர்கள். அவளுடைய வங்கி விவரத்தை கீழே உள்ள என் மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். அவள் படிப்பு முடியும் வரை, ஆண்டுதோறும் அவளுக்கு தீபாவளி நேரத்தில் என்னால் இயன்றதை அனுப்பி வைக்கிறேன். அடுத்த மாதம் தீபாவளி வருகிறது என்று நினைக்கிறேன். உடனே விவரம் அனுப்பவும்.
ReplyDeleteshahjahanr@gmail.com
பி.கு. இதே விவரத்தை உங்களுக்கு மின்னஞ்சலிலும் அனுப்பியிருக்கிறேன். ஆனால் என் பேர் ராசி - அது பெரும்பாலும் ஜங்க் மெயிலில் போய்விடும், நீங்கள் பார்க்காமல் போகக்கூடிய ஆபத்து உண்டு என்பதால் இங்கே எழுதியிருக்கிறேன்.
ஜாக்கி அவர்களுக்கு வணக்கம்,அந்த பெண்ணுக்கு நல்ல உடைகள் இல்லையென்று சொல்கிறீர்கள் இந்த தீபாவளிக்கு ஒரு இரண்டு செட் சுடிதார் நாண் எடுத்து கொடுக்கிறேன் அவரது முகவரியையும்,தொடர்புகொள்ள அவரது தொலைபேசி எண்ணையும் கொடுக்கவேண்டுகிறேன்.
ReplyDeleteமு.கோவிந்தசாமி.
மும்பை.
க,ரா முதல் செமஸ்டர் பிஸ் 41,000 இதில் 24, 500க்கு ரசிது வராது... இது காலேஜ் நண்கொடை. ஆனால் அந்த பணத்தை யார்வேண்டுமானாலும் அவள் கல்லூரியில் அவளை அழைத்து போய் கட்டலாம்... அவவோடு படிக்கும் மாணவர்களையும் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.. மற்றது 14,500 மற்றும் 2000 அரசு நிர்ணியத்து இருக்கும் பணம்.
ReplyDeleteகோவிந் சார் உங்க எண்ணை கொடுங்கள்.. நான் பேசுகின்றேன்.. பொது இடத்தில் அவள் கைபேசி எண் வேண்டாம் என்று நினைக்கின்றேன்.
ReplyDeleteமிக்க நன்றி ரகுமான் சார்.. விபரங்கள் தெரிவிக்கின்றேன்/.
ReplyDeleteThis comment has been removed by the author.
DeleteSir
DeleteI would like to sponsor Rs 2000/= could you please give her bank details so that i can transfer the amount.
My email id : venkatesmail@gmail.com
Venkatesan
This comment has been removed by the author.
Deleteநல்ல விஷயம் தொடருங்கள்.
ReplyDelete81 % நிச்சயம் மிக மிக நல்ல மார்க்.
ஸ்ரீராம்: அவள் சூழ்நிலைக்கு இதுவே பெருசு. ஏன் ஆவரேஜ் மார்க் என்று சொல்றீங்க.
நா னும், நண்பர்களும் சிலரின் படிப்புக்கு கடந்த ஆறு வருடங்களாய் ஸ்பான்சர் செய்கிறோம். அவர்கள் மார்க் ரெகுலராய் follow செய்வது வழக்கம். அதனால் தான் இது மிக நல்ல மார்க் என்கிறேன்
Hi Jackie,
ReplyDeleteI can sponsor 2000. Can you give me her acc details.
-Arivu
Dear Mr.Jakie Sekar,
ReplyDeleteI want to help her. I don't want to know her details. Pls send ur a/c no. I'll send what i can.
Best regard,
Mohanraj G.
Dear IMr.Jakie Sekar,
ReplyDeletei'll send what i can do to ur account.
Thank u.
Best regards,
Mohanraj G.
//வெளியே சொல்ல முடியாத அளவுக்கு பொருளாதார பிரச்சனைகள். என்னால் எந்த உதவியும் செய்ய முடியாது என்பத்துதான் நிதர்சன உண்மை.//
ReplyDeleteVERY TRUE WORD MOST OF THE MIDDLE FAMILIES SUFFERED LIKE THIS BUT YOU HAVE DONE WHAT YOU CAN HATS OFF JAKIE SIR.
Dear Mr.Jackie Sekar,
ReplyDeleteI am regular visitor your blog.At many times, I can see myself in your words and activities. I am working in Singapore for Marine Industry. I can sponsor education fees of Ms.Mythili's, including tuition fee,monthly expenses,Mess fee, project fees and exam fees. Please send the bank account details to the below email.
krishnasang@gmail.com / arunanindian@gmail.com
Regards
Krishna
Mobile : 0065-98229197
Thalaivare.. Intha post kum, intha comment kum sambantham illai...
ReplyDeleteVarnam endru oru padam paarthen... Kandippaaga parka vendiya padam... athai paarthirunthaalo, illai paartho vimarsanam ezhuthungal... naan ezhuthinaal silarai sendradaiyum...neengal ezhuthinaal palarai sendraiyum... thats y...
If you already written, plz give me that link
வெளியே தெரியாமல் நானும் சில உதவிகளை செய்திருக்கிறேன் என்று சொல்லத் தோணியது... இப்போது வெளியே தெரிந்து விட்டது... :-)
ReplyDeleteமுடிந்தவரை உதவ முயலும் உங்கள் நல்ல எண்ணத்துக்கு எனது வாழ்த்துகள்...