Maalai Pozhudhin Mayakathilaey /2012-மாலைபொழுதினின் மயக்கத்திலே... சினிமா விமர்சனம்.



கடந்த ஒன்பது வருடமாக   சென்னையில் இன்டர்வேஷனல் பிலிம் பெஸ்ட்டிவல்   தொடர்ந்து நடந்து வருகின்றது..
அதில் தொடர்ந்து படம் பார்த்த  அனுபவம் இருப்பவர்களுக்கும், உலக பட ஆர்வலர்களுக்கும் இந்த படத்தை முழுவதுமாக பார்க்க வாய்ப்பு இருக்கின்றது..


ஆனால்   கமர்சியல் மசாலாக்களை அதிகம் ரசிக்கும் தமிழ்சினிமா ரசிகனால் ஒரு அரைமணி நேரத்துக்கு மேல் இந்த படத்தை ரசிக்க பொறுமை இருக்காது என்பதே நிதர்சன உண்மை...
பெரியதாய்  அறிமுகம் இல்லாத இயக்குனர்களின்  புதிய வாய்ப்புகள் எப்படி நம்மை கவரும்... டிரைலர்,  போஸ்டர் டிசைன்தான்.. இந்த படத்தின் போஸ்டர் டிசைன் என்னை ரொம்பவே கவர்ந்தது.. அந்த போஸ்ட்டர் மிக மிக அற்புதமாக வடிவமைக்கப்பட்டு இருந்தது.



சார் ஸ்பீடுன்னு  ஒரு படம்.. பஸ்லேயே முழு படமும் எடுத்து  இருப்பாங்க......50 கிலோ மீட்டருக்கு கீழ பஸ் வேகம் கொறஞ்சா அதுல இருக்கும் பாம் வெடிச்சிடும்.. அந்த படத்தோட காட்சிகள்  பரபரப்பாய் இருக்கும்... இப்படி ஒரு  பரபரப்பான திரைக்கதை இருந்தா,  நம்ம ஊரு ரசிகனும் உட்கார்ந்து பார்ப்பான்...ஆனால் இரண்டு மூன்று  காட்சிகளை தவிர முழு படமும் ஒரு  காபி டே காப்பி ஷாப்பின் பின்புலத்தில் எடுத்தால் ?  அப்படி ஒரு முழு படத்தையும் காபி டே காபி ஷாப்பில் எடுத்து முடித்து இருக்கின்றார்கள்... அந்த படம்தான்.. மாலைபொழுதின் மயக்கத்திலே... ஆனால் சாதாரண தமிழ்சினிமா ரசிகனால் அதை ஏற்றுக்கொள்ள முடிவதில்லை..

=========

 சரி  மாலைபொழுதின் மயக்கத்திலே படத்தின் ஒன்லைன்...
பல்வேறு பிரச்சனைகளோடு இருக்கும் மனிதர்கள்.. மழை பேயும் ஒரு மாலைப்பொழுதில்,காபிஷாப்பில் ஒதுங்குகின்றார்கள்.. அவர்கள் தேவைகளும் தீர்வுகளும்தான்  படத்தின் ஒன்லைன்.


==============

 மாலைபொழுதின் மயக்கத்திலே படத்தின் கதையை  பார்ப்போம்...


மழைபேயும் ஒரு மாலைப்பொழுதில் ஒரு காப்பி ஷாப்பில், தயாரிப்பாளரிடம் வாங்கிய பணத்தை கொடுக்க முடியாமல் சிக்கலில் தவிக்கும் உதவி இயக்குனர் அஜய், பிறந்தநாள் அதுவுமாக தன் நண்பனுக்காக  வெயிட்  செய்யும் டீன் ஏஜ் பெண் ஜியா,காதல் திருமணம் செய்து பிள்ளை பெற்றவுடன் காதலில் முன்பு இருந்து அந்நியோன்யம் இழந்து போய்  நிரந்தரமாய பிரிய முடிவு எடுக்க இருக்கற தம்பதிகள் மற்றும் அவர்களின் மகன், ஒரு சினிமா காதாசிரியர்,காபி ஷாப்பின் இரண்டு மாறுபட்ட சிந்தனை  கொண்ட வெயிட்டர்கள்..அதன் மேற்பார்வையாளர், என்று காப்பி ஷாப் என்ற ஒரு புள்ளியில் இணைகின்றார்கள்.. இதில் உதவி இயக்குனர் அஜய்யின் எதிரில் தன் நண்பருக்காக  காத்திருக்கும் ஜியா மீது காதல் வருகின்றது.. இவர்கள் பிரச்சனைகள் எப்படி தீர்வை  நோக்கி பயணிக்கின்றன என்பதே  மீதிக்கதை...

===============
படத்தின் சுவாரஸ்யங்களில் சில....


  போன உலக படவிழாவில் ஒரு படம் பார்த்தேன்... பிரபல இயக்குனர் இயக்கிய படம்..  படம் நினைவில் இல்லை.. ஒரு காப்பி ஷாப்பில் ஒரு ரைட்டர் உட்கார்ந்து இருப்பான்... அவனை காண அவனது வாசகி வருவாள்.. இரண்டு பேரும் காபி ஷாப்பில் பேசிக்கொண்டே இருப்பார்கள்.. பக்கத்தில் ஒரு திருமணம் நடக்கும்... படம் நினைவில் இல்லை.. ஆனால் அந்த படத்தின் சாயல் இந்த படத்தில் இருப்பது போல ஒரு பிரமை..



படம் தொடங்கி இரண்டு மூன்று  காட்சிகளுக்கு பிறகு இடைவேளை வரை காப்பிஷாப்பில் மட்டுமே காட்சிகளை படமாக்கி இருப்பது  திரைக்கதையை நகர்த்தி  இருப்பதும் தமிழ் சினிமாவுக்கு புதுசு..இடைவேளைக்கு பிறகும் அதே காப்பிஷாப்தான்..




காபிஷாப்  பின்புலத்தை வைத்துக்கொண்டு மட்டுமே காட்சிகளை நகர்த்துவதில் இயக்குனர் ஓரளவுக்கு  சுவாரஸ்யபடுத்தி இருக்கின்றார் என்றாலும் தமிழ் சினிமா பார்வையாளனுக்கு இந்த அனுபவம் மிக மிக புதுது..


தமிழ் சினிமாவில் வாழ்க்கை தத்துவத்தை  உச்ச நடிகர் இரண்டு வரியில் சொல்வதை  மட்டுமே நம்மவர்கள்  ரசிப்பார்கள்.. வேறு யார் சொன்னாலும் ரசிக்க வாய்ப்பில்லை... இந்த படத்தில் வாழ்வியல்  பிரச்சனைகளை கேரக்டர்கள் மூலம் அலசுகின்றார்கள்...   நம்ம ஆட்களுக்கு பிலாசபி பேசினா புடிக்கவே புடிக்காது..


உதவி இயக்குனர் அஜய்ஆக ஹரி நன்றாகவே நடித்து இருக்கின்றார்...மேன்லியாக   இருக்கின்றார்.. முக்கியமாக அந்ததாடியும்  பளீர்  சிரிப்பும் பெரிய பிளஸ்பாயிண்ட்.
நாயகி ஜியாவாக  சுபா பாட்டேலா நடித்து இருக்கின்றார். வழக்கம் போல உதட்டுக்கு மேல மச்ச்சம் இருக்கும் அழகு பதுமையாக வருகின்றார்..


 பத்து நிமிடத்தில் ஒரு பெண்ணோடு நட்பாவது என்பது தமிழகத்தை பொருத்தவரை பெரிய விஷயம்.. ஆனால் நாயகி கேரக்டர் எப்படி பட்டது என்பதை சொன்னாலும் அதனை ஏற்றுக்கொள்வது நம்ம ஆட்காளால் முடியவே முடியாது..

நிறைய காட்சிகள்  கவித்துவமாக இருக்க கோபியின் கேமராவுக்கு முக்கிய பங்கு உண்டு. எல்லா  பிரேமும் கண்ணில் ஒத்துக்கிகொள்ளலாம்..
ஒ பேபி கேர்ள் பாடலை சிப்பிளாக ஆனால் ரிச்சாக படம் முடித்து இருப்பதே திறமைக்கு சான்று..  படத்தில்  நிறைய குட்டி குட்டி கட் ஷாட்டுகள் படத்துக் பெரிய பலம்.
இசை அச்சு.. இரண்டு பாடல்கள் நன்றாகவே இருக்கின்றது...

இயக்குனர்  நாராயண் நகேந்திராவ்.. நிறைய உலக சினிமா பார்த்தவையின் தாக்கம் படத்தின் ஒவ்வோரு பிரேமிலும் தெரிகின்றது... அதே போல  நாடகங்களின் மேலும் தியேட்டர் ஆர்ட்டிஸ்டுகள் மேலும் மிக பெரிய  காதல் இருப்பது படத்தின் பல காட்சிகளில் தெரிகின்றது..தமிழ்சினிமாவுக்கு  இது புது முயற்சி என்றாலும் தமிழ்சினிமாரசிகன் இது போன்ற திரைப்படங்களுக்கு பழக வெகு நாள் ஆகும்..


பெங்களுர் தமிழ் பெண் என்பதால் தமிழ் சரியாக வரவில்லை என்று இயக்குனர் கதாபாத்திரத்துக்கு சப்பை கட்டு கட்டினாலும் கிளைமாக்சில் உணர்வு பூர்வமாய் வைத்து இருக்கும் சில வசனங்கள் புரியவில்லை என்றால் படத்தை எப்படி ரசிப்பது.. படம் லைவ் ரெக்கார்ட்டிங் என்பதால் டப்பிங்கில் பார்த்துக்கலாம் என்று சொல்லக்கூட முடியாது... நிறைய குறைகள் படத்தில் தென்பட்டாலும் இந்த திரைப்படம் ஒரு நல்ல புது முயற்சி என்று சொல்லலாம்

கண்டுகொண்டேன் கண்டு கொண்டேன் திரைப்படத்தில் காலம் சென்ற எழுத்தாளர் சுஜாதா ஒரு வசனம் எழுதி இருப்பார்... உதவி இயக்குனராக இருக்கும் அஜித்துக்கு அப்பா மாத்ரபூதம் கல்யாண வீட்டில் சொல்லுவதாக அந்த வசனம் இருக்கும்... வெள்ளக்காரனுக்கு பிளேட்டுல ஒரே  ஒரு சாண்ட்வெஜ் வச்சா திருப்தி ஆயிடுவான்...ஆனா இங்க பாரு இலை முழுக்க பதார்த்த்தை அடுக்கனாதான் நம்ம ஆளு திருப்த்தி படுவான்..என்று  எழுதி இருப்பார்அந்த வசனத்தில் நிதர்சனமாண உண்மை இல்லாமல் இல்லை..

==============
 படத்தின் டிரைலர்.


======================

படக்குழுவினர் விபரம்.

Directed by Narayan Nagendra Rao
Produced by Mayuri Sekar
Written by Narayan Nagendra Rao
Starring
Aari
Shubha Phutela
Subbu Panchu
Music by Achu
Cinematography Gopi Amarnath
Studio Sri Lakshmi Narasimha Creations
Release date(s)
July 27, 2012
Country India
Language Tamil


================

பைனல் கிக்....


இந்த திரைப்படம்  மொக்கை என்று சொல்லி விட்டார்கள்... வரிக்கு வரி எழுதி தள்ளி விட்டார்கள்.. பட் எனக்கு இந்த திரைப்படம் பிடித்து இருக்கின்றது... இந்த படத்தை நான் டைம்பாஸ் பட லிஸ்ட்டில் கூட வைக்கவில்லை... இந்த படத்தை பார்க்கவேண்டிய படத்தின் லிஸ்ட்டில்தான் வைத்து இருக்கின்றேன்... முழு படத்தையும் ஒரு  காபி ஷாப்பில் காம்பரமைஸ் செய்து  கொள்ளாமல் எடுத்த  அந்த புது முயற்சிக்காக இந்த படத்தை பார்க்கவேண்டும்....நிறைய சொதப்பலான காட்சிகள்..ஆனாலும் ஒரு நீட்நெனஸ் படத்தில் இருக்கின்றது.. அதை என்னவென்று சொல்ல  தெரியவில்லை.




பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.




நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ....
.EVER YOURS... 

12 comments:

  1. நல்ல அலசல்...எல்லாம் சொல்லிவிட்டு கடைசியில் சுஜாதா டயலாக் சொன்னீங்க பாருங்க...அதுதான் உண்மை..கண்டிப்பா டிவி யில் போடுவாங்க தானே அப்ப பார்த்து கொள்கிறேன்...

    ReplyDelete
  2. thanks for review jackie anna..

    expecting your post about low cost incubator

    ReplyDelete
  3. Vanthu sila naatkalee aana puthamputhiya thirai padam ulaga tholaikaatchil muthal muraiyaaga enndru title poodumpoothu paarththu koolkirom jacki annaea.

    ReplyDelete
  4. I watched it and liked this movie... Eventhough screenplay is slow... It is a very good attempt by a debutant...

    ReplyDelete
  5. sir nanum unga oorudhan(cuddalore) but settled in b'lore.unga paecha nambi padatha pakkalamannu therilayae?

    ReplyDelete
  6. டிரைலர், போஸ்டர் டிசைன்தான்.. இந்த படத்தின் போஸ்டர் டிசைன் என்னை ரொம்பவே கவர்ந்தது.. me 2....fr tat nly i read review of tis movie...gud review ....

    ReplyDelete
  7. Dear Jakie, I am also a native of Cuddalore District. It is nice to read your blog. Keep it up

    ReplyDelete
  8. Dear Jackie, I am also a resident of Cuddalore District. it is nice to read your blog and I really enjoy your anger on society but at the same time I appreciate your quest for good cinema.

    ReplyDelete
  9. அனைவருக்கும் நன்றிகள். ராஜவேலு மிக்க நன்றி கடலூர்ல மாவட்டத்துல எந்த இடம்னு சொல்லவேயில்லையே..?

    ReplyDelete
  10. வலைப்பதிவும் விமர்சனங்களும் பிரமாதம்! ஒரு தீவிர உலக சினிமா ரசிகனின் பாராட்டுக்கள்!
    Cincinnati, USAவிலிருந்து, Ravi Ramachandran

    ReplyDelete
  11. வலைப்பதிவும் விமர்சனங்களும் பிரமாதம்! ஒரு தீவிர உலக சினிமா ரசிகனின் பாராட்டுக்கள்!
    Cincinnati, USAவிலிருந்து, Ravi Ramachandran

    ReplyDelete
  12. Indruthan oru malai / Mahai pozuthil intha padam parthen neengal solliathu pol kaaranam theriavillay aanal padam romba piduthirukkirathu

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner