உப்புக்காத்து...16(ஊட்டி/2)




இரண்டு பேரும் மேலே மலைப்பகுதியையே  வெறித்து பார்த்துகொண்டு இருக்கும் போது,
ரொம்ப தூரத்தில் வளைவுகளில் கார் ஒன்று வெகு நிதனமாக பயத்துடன்  முதலிரவுக்கு அறைக்கு வரும் புது பெண்ணை போல இறங்கி வந்து கொண்டு இருந்தது..

அது இன்னவோ கார்..... டிரைவர் எங்களையும் பஞ்சர் ஆன வண்டியையும் பார்த்து விட்டு தலையில் கை வைத்துக்கொண்டார்..
ஆக்ஷூவலா நான் அவசரமா மைசூர் போயிகிட்டு இருக்கேன். வண்டிமேல கேரியர் இல்லை... இருந்தா  வண்டியை ஏத்தி மசினக்குடியில் விட்டு விடுவேன்...

 இரண்டு பேர் தலைக்கு மேல் இந்த பைக்கை தூக்கி வண்டி மேல வைக்கறது ரொம்ப  கஷ்டம் என்று ஆறுதலாக இரண்டு வார்த்தை பேசி விட்டு இயலாமையோடு  அவர்  கிளம்பி விட்டார்...

கார் போன அதே சத்தத்தில் ஊடக ஏதோ ஒரு சத்தம் கேட்க,  திரும்பினேன்.. ஹீரோ ஹோண்டா பைக்கில் தாடியோடு ஒருவர் வந்து  விசாரித்தார்..எது எப்படி இருந்தாலும், இந்த இடம் ரொம்ப டேஞ்சர்.. முதல்ல  இந்த இடத்துல இருந்து காலி பண்ணுங்க..யானைங்க இனிமே வர அதிகமான வாய்ப்பு இருக்கு என்றார்...நான் மசினக்குடி போறேன்.. அங்க இருந்து ஒரு ஜீப்பை வேண்டுமானால் பேசி அமர்த்தி விடுகின்றேன் என்றார்...

உதவி செய்ய வந்து இருப்பவர் ஒரே ஒருவர்.. அவரும் மசினக்குடி போய் அவர் சொந்த பிரச்சனையில் நம்மை மறந்து போய் விட்டால்?  என்ன செய்யவது...?ஒரு பைக்கில் உதவி செய்ய ஒரு ஆள் இருக்கின்றார்.. இவரை எப்படி இந்த நேரத்தில் பயண்படுத்திக்கொள்ளவேண்டும் என்று மனது பரபரவென யோசிக்க ஆரம்பித்தது.. என்ன என்ன செய்யலாம் ? என்ன செய்யலாம்-?

முதலில் பாதுகாப்பாக இருக்க ஒரு இடம்... அதுக்கு அப்புறம்தான் எதுவாக இருந்தாலும் என்பதில் மிக தெளிவாக இருந்தேன்..

சார் ,ஒரு உதவி இவுங்களை நீங்க ஏத்திக்கிங்க.. பஞ்சரான எனது வண்டி டேங்குல உட்கார்ந்துகிட்ட நான் இந்த வண்டியை ஓட்டிகிட்டு வரேன்..  என்றேன்.. இங்க பாதுகாப்பான மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிக்கு முதலில் போய் விடுவோம் என்றேன்.. அவர் ஆமோதித்தார்... இங்க இருந்து நாலு கிலோ மீட்டர்ல ஒரு ஆறு ஒன்னு வரும்... அதுக்கு முன்னாடி ஒரு காட்டேஜ் இருக்கு என்றார்..

ஓகே அந்த காட்டேஜ் வாசலில் இவுங்களையும் வண்டியையும் நிறுத்திட்டு நான் உங்க கூட பைக்கில  மசினக்குடி வந்து ஒரு ஜீப் புக் பண்ணி அதுல பஞ்சர் ஆன வண்டியை தூக்கி போட்டுகிட்டு ஊட்டிக்கு போயிடுறோம் என்றேன்.. நல்ல ஐடியா என்றார்..

 என் மனைவி அவர் வண்டியில் ஏறிக்கொள்ள, நான் என் முழு வெயிட்டையும் பெட்ரோல் டேங்க் மேல் கொடுத்து  சர்க்கஸ்காரன் போல வண்டியை ஓட்ட ஆரம்பித்தேன். எனக்கு சீக்கிரம் காட்டேஜ் போக வேண்டும் என்பதால் நான்  வேகமாக மலையில் இருந்து இறங்க ஆரம்பித்தேன்.. அதீத பதட்டத்தின் காரணமாக  யோசிப்பு மிக குறைவாகவே இருந்தது.. புத்திசாலிதனத்தை விட தேவையற்ற கற்பனைகள் மனதை அலைகழித்தன....

இரண்டு ஹேர்பின் பெண்டுகளை வேகமாக கடந்து திரும்பி பார்த்தால் இரண்டு பேரும் கண்ணுக்கே புலப்படவில்லை...எனக்கு பகீர் என்றது..

ஒருவேளை  இங்கிலிஷ் படம் போல நல்லவனா உதவி செய்ய வந்துட்டு அப்படியே, கெட்டவனா மாறிட்டா? சரி அப்படியே வண்டியை கீழ இறக்காம ஊட்டி பக்கம் வண்டியை திரும்பிகிட்டு மலையில ஏற ஆரம்பிச்சா என்ன செய்யறது? திரும்ப வண்டியை இந்த நிலைமையில் வச்சிகிட்டு துரத்தி புடிக்க கூட முடியாது,..

வண்டி கீழ இறங்கறதானல வெயிட் முன் பக்கம் இருக்கறதால  பிரச்சனை இல்லாம வண்டிய கீழ இறங்கிகிட்டு வர முடியுது.. என்று கேவலமான யோசனைகளோடு  வண்டியை மெதுவாக்கினேன்.. வண்டி மெதுவாக வரும் சப்தம் மட்டும் கேட்டது.. வளைவில்  அவர் தெரிந்தார்..நிம்மதிபெருமூச்சு வந்தது.. அவர்களை முன்னால் விட்டு விட்டு, நான் பின்னாடி செல்ல ஆரம்பிதேன்.. நாலாவது கிலோ மீட்டரில் அந்த காட்டேஜ் வந்தது பெரிய மரம் வாசலில் இருந்தது..

 அந்த இடத்தில் பஞ்சரான எனது வண்டியை நிறுத்தி விட்டு, என் மனைவியை  வண்டிக்கு காவல் போட்டு விட்டு ,அவள் கைபிடித்து மைரியம் சொல்லி விட்டு,மசினக்குடி போய் ஜீப் பேசி அழைத்து வருகின்றேன் என்று சொல்லி என் மனைவியை பிரிய மனம் இல்லாமல் பிரிந்து அவர் வண்டியில் ஏறிஉட்கார்ந்தேன்...

காட்டேஜ் உள்ளே இரண்டு பெண்கள் நான்கு ஆண்கள் பேட் மிட்டன் விளையாடிக்கொண்டு இருந்தார்கள்.  ஒரு வேளை, யானை அல்லது ஏதாவது மிருகம் வந்தால் காட்டேஜ் உள்ளே ஓடி விடு என்று சொல்லி விட்டு நான் கிளம்பினேன்..

எங்களுக்கு வண்டியில் லிப்ட் கொடுத்தவர் பெயர் உதயக்குமார் தாடி வைத்து இருந்தார்..   ஹீரோஹோண்டா ஸ்பிளன்டர் வைத்து இருந்தார். பைக்காரடேம் மின்சார வாரியத்தில் வேலை செய்வதாக சொன்னார்...

முதல்ல எல்லாரையும் போல கடந்து போகாம நிறுத்தி உதவி செய்யும் உங்கள் நல்லஉள்ளத்துக்கு நன்றி என்றேன்.

எங்களை பற்றிய விபரங்களை விசாரித்தார்...சில மாதங்களுக்கு முன் யானை ஒரு வெளிநாட்டு பெண்மணியை  சாகடித்ததையும்.... சில வருடங்களுக்கு முன் பல வருஷ எக்ஸ்பீரியன்ஸ் உள்ள டிரைவர் ஓட்டிய அரசு பஸ் கவிழ்ந்து இந்த ரூட்டில் பல பேர் இறந்து போனார்கள் என்று சொன்னார்...



 இரண்டு பேரும்  வண்டியில் மசினக்குடி புறப்பட்டோம்..  அவரே ஆரம்பித்தார்.. இங்கத்திய ஆளுங்களால எந்த பிரச்சனையும்  இல்லை..கேரளாகாரனுங்க பண்ற அலும்புதான் அதிகம்.. யானையை மிரள வைக்கறது போல  ஹரன் அடிக்கறது.. சைடு கூடுக்காம வண்டிய ஓட்டறது.. ரொம்ப அபாயமான மலைப்பாதை வளைவா இருந்தாலும் வேணும்மின்னே ஏறிவர்ரது என்று படுத்துவார்கள் என்று சொன்னார்..

நான் எதையும் காதில்  போட்டுக்கொள்ளவில்லை... மனம் எதிலும்  லயிக்கவில்லை.. வேகம் என்றால்  வேகம் அப்படி ஒரு வேகம். மசினக்குடியில் இறக்கிவிட்டார்.. நன்றி தெரிவித்தேன்.. நல்லபடியா போய் விட்டு வாங்க என்றார்..மசினக்குடியில் நான் கால் வைக்கும் போது மாலைமணிசரியாக 5மணி பத்து நிமிடங்கள்... இன்னும் அரைமணியில் இருட்ட ஆரம்பித்து விடும்.. மழைமேகங்கள் அவசரகதியில் திரள ஆரம்பித்து பயத்தை ஏற்படுத்தின.. தனியாக நிற்கும் மனைவியை யோசித்து பார்த்தேன்.. அடுத்த ஏதாவது  ஆங்கிலதிகில் படம்  ஞாபத்துக்கு வரவோ என்று அனுமதி கேட்டது..? துடப்பக்கட்டையும் விளக்குமாத்தும்  சில்லி சில்லியா  பிச்சிக்கும் என்று சொல்ல, கொஞ்சநேரத்துக்கு பயந்து வராமல் இருந்தது..

ஜீப் ரேட் பேசினேன்... ஊட்டிக்கு போயிட்டு வரும் போது சவாரி இல்லாம எம்டியா வருவேன்.. அதனால் டபுள்   வேண்டும் என்றார்.. ஓகே என்றேன்.. வண்டி கிளம்பியது ஒரு கிளினர் ஓடி வந்து ஏறிக்கொண்டான்... ஊட்டி பக்கம் போகாமல் ,ஒரு சின்ன குடியுருப்பு  சந்துக்குள் போனது ..ஏதுக்கு இந்த பக்கம் என்றேன்.? இல்லை வீட்டுக்கு ஏழுமணிக்கு தண்டல்காரன் வந்துடுவான்..அதான் பணத்தை கொடுத்துட்டு போலாம் என்று சாவகாசமாக சொன்னார்.. ஏங்க காட்டுல  என்  பொண்டாட்டி தனியா நிக்கறா- ? நீங்க இப்படி கேஷூவலா  உங்க வீட்டுக்கு போயிகிட்டு இருக்கிங்களே நியாயமா? என்றேன்...சார் பத்து நிமிஷத்துல எதுவும் ஆயிடாது என்றார்.. எனக்கு அவரை பகைத்துக்கொள்ளவும் முடியவில்லை.. சப்போஸ் வரமாட்டேன் என்று சொல்லி விட்டால் என்ன செய்வது-? அதனால்  நான்  கோபத்தை குறைத்து அண்ணனை சேர்த்து, குழைவாக சீக்கரம் போலம்னே  என்றேன்.. வீட்டில் பணத்தை கொடுத்தார். பத்துமணி ஆயிடும்  சாப்பிட்டு தூங்கு...  கறியை பிரை பண்ணிடு என்றார்..  அவர் மனைவி தலையசைத்தார்.

அதன் பிறகு  ஜீப் ரெக்கை கட்டி பறக்க ஆரம்பித்தது.. என்னை பார்த்ததும் என் மனைவி மிகுந்த சந்தோஷம் கொண்டாள்..வண்டியை ஏற்றி வைக்க  அந்த கிளினர் பையன் உதவினான் ..ஜீப்பின் பின்பக்கத்தில் டிஸ்க்கவரை திணிக்க ரொம்பவே சிரமபட்டோம். அந்த கிளினர் பையனின் காலையும், என் கையையும் லைட்டாக கீறி ரத்தசுவை எப்படி என்று பஞ்சரான டிஸ்கவர் அறிந்து கொண்டது...

திரும்ப நாங்கள் வந்த அதே வழியில் மலைப்பாதையில் ஜீப் ஏற ஆரம்பித்தது.. ஏழரைக்கு பஸ் என்று சொன்னேன்.. வண்டி சிட்டாய்பறந்தது..நடுவில் மழை பிடித்துக்கொண்டது..ஜீப்பின் முன் பக்கம் கிளியும் டிரைவரும்,  பின் பக்கம் நானும் என் மனைவியும் உட்கார்ந்து கொண்டோம்..மனைவியின் கத கத அனைப்பில் மழைச்சாரல் தெரிக்க மனது  எல்லாத்தையும் மறந்து விட்டு அந்த நொடியை ரசிக்க ஆரம்பித்தது.

செமையான மழை... ஏழுமணிக்கு ஊட்டிக்கு வந்தோம்... வண்டியை நண்பி வீட்டில் நிறுத்தி  வண்டி கொடுத்தவனுக்கு போன் செய்து விபரம் சொல்லி மீதப்பணத்தை கொடுத்து விட்டு அதே ஜீப்பில் ஊட்டி பேருந்து நிலையத்தில் இறங்கி கொண்டோம்..

டிரைவருக்கு கூடுதலாக 100ரூபாயும், சின்னதாக காயம் பட்ட கிளிக்கு டிரைவர் பார்க்காத போது 150ரூபாயை கையில் திணித்து விட்டு அரசு பேருந்தில் ஏறிக்கொண்டோம்.

புஷ்பேக் செய்து நடந்தவைகளை நினைத்து பார்த்தோம் இருவரும் சிரித்துக்கொண்டோம்..தனியா இருந்தியே எப்படி இருந்திச்சி? ஒரு பொம்பளை சுள்ளி பொரிக்கிட்டு நடந்து போச்சு.. அது சொல்லிச்சி...யானை வந்தா காட்டேஜ் உள்ளே  போயிடுங்கன்னு.... சான் பெருமாளை வேண்டிண்டேன் என்றாள்....காலை எட்டு மணிக்குதான்பேருந்து  தாம்பரம் வந்தது.. வீட்டுக்கு வந்து ஒரு மணிநேரம் பர்மிஷன் போட்டு விட்டு திரும்ப இரண்டு பேருமே ஆபிசுக்கு போனோம்.

அதன் பிறகு அதே நண்பியின் கல்யாணாத்துக்கு சென்றோம்... கல்யாணத்துக்கு பெங்களூரில் இருந்து என் மச்சானும் மாமியாரும் வந்து இருந்தார்கள்..நானும் என் மனைவியும்  ஊட்டிக்கு போய் மீட் செய்தோம்.. திருமணத்தை நால்வரும் அட்டன் செய்தோம் என் மச்சானிடம் அந்த மசினக்கூடி ரூட் பற்றி சொன்னேன்... கார் புக் செய்தோம் அதே ரூட்டில் பயணித்தோம். நின்ற இடங்கள் தவித்த தவிப்புகள்  எங்கள் நினைவில் வந்து மோதின..

இந்த கட்டுரை எழுதும் போது என் மச்சான் முந்தாநாள் திங்கள் கிழமை வரை  ஊட்டியில்தான் இருந்தான்.. அவனிடம் கேட்டேன் நம்ப ரூட் எப்படி இருக்கின்றது என்று கேட்டேன்.
 வளைவுகளில் எதிரில் வரும் வாகனம் தெரியும் படி கண்ணாடி வைத்து இருக்கின்றார்கள் என்று சொன்னான்...

உதயகுமார்...
தாடி வைத்து இருப்பார்...
ஹீரோ ஹோண்டா ஸ்பிளன்டர் வைத்து இருப்பார்....
பைக்கார மின்சார வாரியத்தில் வேலை செய்கின்றார்...

அவர் வண்டி நம்பர் தெரியாது...
அவர் போன் நம்பர் தெரியாது..
அவர் விலாசம் தெரியாது...

உங்கள் வாழ்நாளில் சந்திக்க விரும்பும் நபர் யாரேன்று கேட்டால் நான் உதயகுமாரின் பெயரை சொல்லுவேன்.. அவரை நான் திரும்ப சந்திக்கவேண்டும்....குடும்பத்துடன் சென்னைக்கு வந்தால்  என் வீட்டுக்கு விருந்துக்கு அழைக்க வேண்டும்.  அவரோடு ஒரு போட்டோ எடுத்துக்கொள்ளவேண்டும்...


நானும் நிறைய முயற்சி செய்து பார்த்து விட்டேன்.. கண்டுபிடிக்க முடியவில்லை..  பதட்டத்தில் வண்டியை விட்டு இறங்கியதும்,  அவருக்கு  நன்றி சொல்லிவிட்டு ஜீப்பிடிக்க ஓடினேனே தவிர அவரிடம் விலாசமோ? செல்போன் எண்ணோ பதட்டத்தில் வாங்க மறந்து விட்டேன்.. எப்படியும் அவரை  திரும்ப சந்திப்பேன் என்று மனதில் படுகின்றது.. நம்பிக்கை அதானே எல்லாம்.....சில உதவிகளையும் உதவி செய்தவர்களையும் ஜென்மத்துக்கும் மறக்க முடியாது... எப்படி உதயக்குமாரை மறக்க முடியும்...?? சொல்லுங்கள்..



பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.





நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

28 comments:

  1. நம்ப முடியவில்லை போன்ற, நம் வாழ்கையில் சில நேரம் நம்பிக்கை கொடுக்கும் செயல்கள் யாரோ ஒருவரால் நடந்து தான் நம் வாழ்க்கையை நம்பிக்கையுடன் வாழ வைக்கிறது.. வாழ வைக்கும் :) இப்படி பட்ட சமூகத்தில் ஏன் வாழ வேண்டும் என நினைக்கும் போது, சில சம்பவங்கள் நேரும் போதோ, கேட்கும் போதோ மீதம் உள்ள வாழ்க்கையை அழகாக மனிதத்துடன் வாழ வைக்கிறது... நன்றி பகிர்தலுக்கு ஜாக்கி அண்ணா!!

    ReplyDelete
  2. சுவராஷ்யமான பதிவு..

    ReplyDelete
  3. நெகிழ்ச்சியான பதிவு.உதயகுமார் அவர்களை நீங்கள் மீண்டும் சந்திக்க வேண்டிக்கின்றேன்.ஏனென்றால் அவர் முகத்தை,உங்கள் பதிவினூடே நான் பார்க்கலாம் அல்லவா???

    ReplyDelete
  4. நெகிழ்ச்சியான பதிவு.உதயகுமார் அவர்களை நீங்கள் மீண்டும் சந்திக்க வேண்டிக்கின்றேன்.ஏனென்றால் அவர் முகத்தை,உங்கள் பதிவினூடே நான் பார்க்கலாம் அல்லவா???

    ReplyDelete
  5. உதயகுமார் is a God ? Some time God will appearance in Man

    ReplyDelete
  6. அடுத்த ஏதாவது ஆங்கிலதிகில் படம் ஞாபத்துக்கு வரவோ என்று அனுமதி கேட்டது..? துடப்பக்கட்டையும் விளக்குமாத்தும் சில்லி சில்லியா பிச்சிக்கும் என்று சொல்ல, கொஞ்சநேரத்துக்கு பயந்து வராமல் இருந்தது..

    sema comedy boss

    ReplyDelete
  7. அடுத்த ஏதாவது ஆங்கிலதிகில் படம் ஞாபத்துக்கு வரவோ என்று அனுமதி கேட்டது..? துடப்பக்கட்டையும் விளக்குமாத்தும் சில்லி சில்லியா பிச்சிக்கும் என்று சொல்ல, கொஞ்சநேரத்துக்கு பயந்து வராமல் இருந்தது..

    intha ranakalathulayum oru kuthukalam kekkuthu hmm

    ReplyDelete
  8. பிறருக்கு உதவி செய்ய ,நாமும் உதயகுமார் போல இருக்க முற்சி செய்வோம்

    ReplyDelete
  9. Sir பஞ்சரான ஆன வண்டியோடு போட்டோ எடுக்கவில்லையா?
    செரி செரி அசிங்கம திட்றது தெரியுது

    ReplyDelete
  10. அட்டகாசம் ஜாக்கி. கொஞ்சம் நகாசு வேலை பார்த்து இதை சிறுகதையாக செதுக்குங்கள். உங்கள் எழுத்திலேயே அதுதான் மாஸ்டர் பீஸாக இருக்குமென எனக்குத் தோன்றுகிறது.

    ReplyDelete
  11. superb post nice experience good lessons

    ReplyDelete
  12. There is still humanity around us - this story proves it.
    Thanks for sharing.

    ReplyDelete
  13. மிகவும் சுவாரஸ்யமான பரபரப்பான பதிவு! உண்மயில் உதயகுமார் கடவுள்தான்!

    ReplyDelete
  14. ungal mana-ootamea, entha pathivil therikirathu.suvarasiyamaana marakka mutiyaatha pathivil ithuvum orunru.

    ReplyDelete
  15. மிக அருமையான மற்றும் மிக மிக த்ரில்லிங் பொஸ்ட்! ஒரு படம் பார்த்த எஃபேக்ட்! நாம என்னதான் அனுபவித்து இருந்தாலும், அத அப்படியே அடுத்தவங்க படிக்கும் அளவு ஸ்வாரஸ்யமா எழுதரதுக்கு.... கம்யுனிக்கேட்டிவ் ஸ்கில் வேனும்.... இதுதான் தங்கள் ப்லாக்கில் நான் படித்த முதல் போஸ்ட்.... அது அப்டியே செம ஃபேன் ஆயிட்டேன் சார்! மிக்க நன்றி!

    ReplyDelete
  16. Brindavanam -Ooty
    Nondakumaran- jacky enkira Sekar

    ReplyDelete
  17. ஒரு திகில் படம் பார்த்த அனுபவம்....

    ReplyDelete
  18. ஒரு திகில் படம் பார்த்த அனுபவம்....

    ReplyDelete
  19. Good sharing. Your. Narration is good.- Subash Manickam

    ReplyDelete
  20. Good sharing. Your. Narration is good.- Subash Manickam

    ReplyDelete
  21. Good sharing. Your. Narration is good.- Subash Manickam

    ReplyDelete
  22. Good sharing. Your. Narration is good.- Subash Manickam

    ReplyDelete
  23. ippadiyellaam risk edukkave koodaathu.....naan seitha thavarukalai en aduththa thalaimurai kuzhandaikalidam solluven.....avarkl ushaaraaka irukka...

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner