சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் /வெள்ளி/06/07/2012


ஆல்பம்.
திமுக சிறை நிரப்பும் போராட்டத்துக்கு ஒரு வாரத்துக்கு முன்பு இருந்தே திமுகவினரை பயமுறுத்த நிறைய  ஆருடங்களை அம்மா சார்ந்த பத்திரிக்கைகள் தொடர்ந்து எழுதி வந்தன.
ரிமாண்ட் பண்ணிடுவோம், ஆந்திரா ஜெயிலில் வைத்து விடுவோம்..  ஜாமீன் கிடையவே கிடையாது என்றார்கள்.. கலைஞர் அறிக்கை விட்டார்... கைதாகின்றவர்கள் யாரும் ஜாமீன் கேட்கக்கூடாது என்றார்... சரி  ஜாமீன் கேட்க முடியவில்லை என்றால் 15 நாள் உள்ள இருக்க வேண்டி வரும்.. புள்ள குட்டிங்கள்,  செய்யற தொழில்  என்னத்துக்கு ஆவும் என்று போராட்டத்தில் கலந்து கொள்ள திமுக தொண்டர்கள் தயங்குவார்கள் என்றுதான் கட்சி தலைமையே எதிர்பார்த்தது..50000 பேர் கலந்து கொண்டால் எதேஷ்ட்டம் என்று நினைத்தது... இரண்டு லட்சம் பேர் திரண்டு சாதித்து விட்டார்கள்..15 நாள், இரண்டு லட்சம் பேரை வைத்துக்கொண்டு மாரடிக்க முடியாது என்ற காரணத்துக்காக வெளியே விட்டு விட்டார்கள்...தமிழக அரசு கவிழ்ந்து விழுந்தாலும் மீசையில் மண் ஒட்ட வில்லை என்று அறிக்கை விடுகின்றது.. வழக்கம் போல கீர்த்தன ஆரம்பத்திலே என்று கச்சேரி ஆரம்பிக்கும் போதே ஆமாம் ஆமாம் என்று சொல்வதை போல அம்மா சார்ந்த பத்திரிக்கைகள் மற்றும் இணையபுலிகள் , அதிமுக நட்ட நடு சென்டர்கள் எல்லாம் திரும்ப கும்மி அடிக்க ஆரம்பித்து விட்டார்கள்..
கலைஞர் ஏன் சிறை  நிரப்பும்  போராட்டத்துக்கு செல்லவில்லை என்று சில பத்திரிக்கை மற்றும் அதிமுக நட்ட நடுசென்டர்கள்  கேட்கின்றன.. கலைஞர்  அரசியல் பாதையில் தெருவுக்கு  வந்து கலந்து கொண்ட போராட்டங்கள் எத்தனை... முதல்வர் ஜெ மக்கள் பிரச்சனைக்காக தெருவில் இறங்கி போராடிய போராட்டங்கள் எத்தனை என்று சொல்ல முடியுமா?

====
 அது என்னவென்றே தெரியவில்லை தமிழகம் மற்றும்  தேசிய அளவில் சொல்லி வைத்தது போல ,  முக்கிய  அரசு அலுவலகங்கள் எரிந்து  தொலைக்கின்றதுநல்லா இருக்கு நடத்துங்கடே..

=========
 சென்னையில் அண்ணா மேம்பாலத்தில்  பேருந்து கவிழ காரணம்..  ஒட்டுனர் செல்  பேசியில் பேசியதான் என்று  சொல்லுகின்றார்கள். அதுக்காக செல்போனே பேருந்து ஓட்டுனர் வைத்துக்கொள்ளக் கூடாது என்று சொல்வது எந்த விதத்தில் நியாயம்.. போன் வந்தால் ஓரம் நிறுத்தி பேசலாம் என்று சொல்லலாம்..  பேருந்து ஓட்டும் போது டிரைவர் போன்  பேசக்கூடாது என்று சொல்வது நியாயம்.. ஆனால் போனே பாக்கெட்டில் வைத்துக்கொள்ளக்ககூடாது என்று சொல்லுவது அநியாயம்பத்திரிக்கையில் இப்படித்தான்  செய்திகள் வெளியிட்டுக்கொண்டு இருக்கின்றார்கள்.. அது   உண்மையாக இருக்கும் பட்சத்தில்   ஐடியா கொடுத்த ஐடியா மணியை  இழுத்து  நாலு சாத்து சாத்த வேண்டும்..
============
மிக்சர்
ஏர்டெல் வோடோபோன் எல்லாம் ரேட்  எற்றிய விஷயம் எதுவும் எனக்கு தெரியாது.. சமீபமாக 225 ரேட் கட்டர் போட்டு பயண்படுத்திக்கொண்டு இருந்தேன்..மேசேஜ்க்கு தனியாக 35 என்றார்கள் கொடுத்து அழுதோம்... இப்போது ரேட் கட்டர் 240 என்கின்றார்கள்.. அதையும் கொடுத்து அழுதும், இனியும் கொடுப்போம்...  ஏர்டெல்லில் இன்னும் எர்டெல்டூ ஏர்டெல் பத்து பைசா ஸ்கீமை இன்னும் வைத்துக்கொண்டு இருக்கின்றார்கள்.. மற்ற மொபைலுக்கும் எல்லாம் எழுபது பைசா ஒரு நிமிடத்துக்கு காலியாகின்றது.பெருமாளே நேக்கு ஒரு வாரமாதான் கவனிக்க  ஆரம்பிதேன்.

========
 உடைந்து போன அண்ணா பாலத்தை சரி  செய்து விட்டார்கள்.. எங்கே வளையும் இடத்தில் ஸ்பிட் பிரேக் வைத்துவிடுவார்களோ என்று பயந்து விட்டேன்.. காரணம் நெடுஞ்சாலைதுறையில் வேலை செய்யும் எதாவத ஒரு  மொக்கை பிரகஸ்பதி ஐடியா மணியாக  மாறி ,ஐடியா கொடுத்து  ஸ்பீட்  பிரேக் போட்டு இருந்தால் அண்ணாசாலை டிராபிக்கில் தினறி இருக்கும்..
===========

இந்தவாரகடிதம்.

Este scrito uppukkaththu em moito gusto e mais marvel…continuer pela tembo jabem.  Yazhini seu sempre sorriso………. போன மாசம் ஜுன் 27, 2012ஆம் தேதி ஒரு எஸ் எம் எஸ் என் மொபைலுக்கு வந்துச்சி...இங்கிலிஷே எனக்கு ததிங்கனத்தோம்.. இப்பதான் ஏதோ கொஞ்சம் கொஞ்சம் புரியுது.. நாய் தேங்காயை உருட்டற கதையா? எல்லாருகிட்டயும் கேட்டு விட்டேன்..  எல்லாரும் உதட்டை பிதுக்கறாங்க.,. என் அலுவலக  தோழி ஒருவரிடம் காட்டினேன். இன்னும்  மிக அழகாக உதட்டை பிதுக்கிவிட்டு என்ன ஜாக்கி? என்னை நக்கல் விடுறியா அடுத்த வாட்டி ஏதாவது  இங்கிலிஷ் புரியாத வேர்டுக்கு அர்த்தம் கேட்டா சொல்லமாட்டேன் என்று கோபிக்கின்றார். எனக்கு தெரிஞ்சி இது  பிரேஞ்சு மொழியா இருக்கும்னு நம்பறேன். எந்த புண்ணியவான் அனுப்பிச்சானோ அல்லது அனுப்பிச்சாளோ...?  நான்  அந்த அளவுக்கு ஒர்த் இல்லை.. உப்புகாத்து மற்றும் யாழினி மட்டும்தான் எனக்கு புரியுது. ஒரு வேளை உலகபடம்  அதிகமா பார்க்கறதால எல்லா மொழியும் எனக்கு அத்துபடின்னு பயபுள்ள நினைச்சிடுச்சி போல... சத்தியசோதனை.
==========

Dear Sekhar,
 
I am Thilak from Sydney Australia regular reader of your blog.  My Sister Divya with her family lives in Melbourne. Her son Sathyankar (who will be turning 5 on July 8th) had a fever since last Friday evening and Sunday his temperature went down (less than body temperature) and taken to hospital, The doctor’s noticed his heart beat is slowing down and took him to the bigger hospital ( Royal Melbourne Children Hospital) in the ambulance, He had cardiac arrest in the ambulance and  the nurse in the ambulance did cardiopulmonary resuscitation (CPR). In one hour they put him in life support. They identified the root cause for this issue is “Flu B” (1 in 10,000 will get such a big impact). Since Sunday night till today morning he is in ICU with LIFE SUPPORT.
They will be trying to see how he will cop without the LIFESUPPORT for next 72 hours. I believe mass blessings & prayers will help him to recover soon. Could you please pray for him & publish this in your blog.  If not its fine, Even your prayer is sufficient to help him to recover.
 
Thanks for your help.
 
Thanks & Regards,
Thilak

நலம்பெற பிரார்த்திப்போம்.

========


===========
பிலாசபி பாண்டி.
லவ்வு பண்ணறது ரோட்டை கிராஸ் பண்ணறது போல.. பொறுமையா சமயம் பார்த்து கிராஸ் பண்ணா ரோட்ரைட கிராஸ் பண்ணிடலாம்.. பறக்கவெட்டி போல அவசரப்பட்டா டல் கொலாப்ஸ் ஆயிடும்..இப்படிக்கு... இன்னமும் ரோட்டை கிராஸ் பண்ணலாமா வேண்டாமான்னு யோசித்துக்கொண்டு இருப்போர் சங்கம்.

===============


இப்படி ஒரு காம்பயர் நம்ம ஊர்ல இண்டர்வியூ எடுக்க முதல்ல  சம்மதிக்க மாட்டாங்க.. சப்போஸ் இப்படி  என்னை இண்டர்வியூ எடுத்த நான் எப்படி பேசுவேன்னு யோசிக்கும் போதே மயக்கம் மயக்கமா வருது..

========== 

நான்வெஜ்18+

ஏன்  எல்லா இந்திய பெண்களும் அடுத்த ஜென்மத்துலயும் அதே புருசன் வேணும்னு கேட்கறாங்க தெரியுமா?
ஒன்னுமே தெரியாம வரும் ஞானபழம்களுக்கு , நல்லா டிரைனிங் கொடுத்து வச்சாஅடுத்த ஜென்மத்துல எவளாவது கொத்திகிட்டு போயி நோகாம நோம்பு கும்பிடவா? அதுக்குதான் 



பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.








நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

22 comments:

  1. Este scrito uppukkaththu em moito gusto e mais marvel…continuer pela tembo jabem. Yazhini seu sempre sorriso…

    the english translation of the above lines are:

    This Super scripted uppukkaththu moito in taste and more Marvel ... continuer by tembo jabem. Yazhini its always smile ...

    ReplyDelete
  2. அது portuguese என்று கூகிள் சொல்கிறது. நீங்கள் பார்த்து இருப்பீர்கள் ...இருந்தாலும் அதன் அர்த்தம்"This writing uppukkaththu much fairer and marvel ... continuer by tembo jabem. Yazhini its always smile"

    ReplyDelete
  3. அது portuguese என்று கூகிள் சொல்கிறது. நீங்கள் பார்த்து இருப்பீர்கள் ...இருந்தாலும் அதன் அர்த்தம்"This writing uppukkaththu much fairer and marvel ... continuer by tembo jabem. Yazhini its always smile"

    ReplyDelete
  4. //போன் வந்தால் ஓரம் நிறுத்தி பேசலாம் என்று சொல்லலாம்..//
    இது குழப்பத்தையே ஏற்படுத்தும்.. ஒரு மணி நேர பயணத்தில் டிரைவருக்கு ஐந்து போன் கால்கள் வந்தால் என்ன செய்வது? .. ஒரு போன் கால் மட்டும் பேசலாம் என்று சொல்வதா? அதுவும் ஓரிரு நிமிடத்தில் பேசி முடித்து விடவேண்டும் என்று சொல்வதா?
    போன் எடுத்து செல்வது தவறு. எடுத்து சென்றால் அதை கண்டக்டரிடம் கொடுத்து விடவேண்டும் என்ற சட்டத்தை அமலாக்குவது எளிது. அதுவே பிரக்டிகல் கூட.

    ReplyDelete
  5. try google translate, it will defect the language and also translate it your desired language.

    ReplyDelete
  6. JACKIE SIR,, IAM ALSO USING AIRTEL ONLY FOR MORE THAN 7 YEARS....JUS TYPE PORT UR MOBLIE NO N SEND TO 1900... FOR MNP REQUEST... APURAM PARUNGA AIRTEL KARANGA KITTA IRUNTHU PH VARUM... NANGA UNGA CAL RATE KAMMI PANROM SO PLS CONTD IN AIRTEL NU,, NETWORK MARATHINGA NU,, THEY WILL REDUCE OUR CAL RATE FOR AIRTEL TO AIRTEL 10,, OTHER NETWORK 30P FOR 3 R 6 MONTHS WITHOUT ANY RATECUTTER,,, JUST ENJOY THT AFTER 3 R 6 MONTHS AGAIN CONTD THE SAME PROCEDURE,,,,AGAIN THEY WILL CAL U N REDUCE THE CAL RATES... IAM DOING THE SAME FOR PAST 10 MONHTS,,,, NALLA DHAN POITUDU IRUKU JACKIE SIR... U CAN ALSO TRY N ENJOY SIR.. AVANUGALA EPPADI DHAN PANNANUM...

    ReplyDelete
  7. //..தமிழக அரசு கவிழ்ந்து விழுந்தாலும் மீசையில் மண் ஒட்ட வில்லை என்று அறிக்கை விடுகின்றது.. //
    ஜாக்கி அண்ணே எல்லாம் நல்லா வக்கணையாத்தான் பேசுறீங்க, அதே சமயம் தொண்டர்களுக்கு இந்த போராட்டத்தில் கலந்து சிறைக்கு போனாத்தான் கட்சி மற்றும் ஆட்சியில் பொறுப்புகளும் பதவிகளும் தரப்படும்னு திமுக தலைவர்கள் காட்டிய கேரட்டை பற்றி மட்டும் பொத்துனாப்புல சொல்லாம போறிங்க... அதையும் சொல்லுங்க பாஸூ...

    ReplyDelete
  8. its Portuguese!!! Kalakunga Jackie...

    ReplyDelete
  9. பாஸ். அது போர்த்துகீசிய மொழியில் எழுதப்பட்டது. அதை அப்படியே கூகுள் மொழிபெயர்ப்பு தரவில் இட்டு நீங்கள் என்ன அர்த்தம் என்று கண்டுபிடித்து இருக்கலாம்... அதன் அர்த்தம் கீழே...

    This writing uppukkaththu much fairer and marvel ... continuer by tembo jabem. Yazhini its always smile

    ReplyDelete
  10. பாஸ். அது போர்த்துகீசிய மொழியில் எழுதப்பட்டது. அதை அப்படியே கூகுள் மொழிபெயர்ப்பு தரவில் இட்டு நீங்கள் என்ன அர்த்தம் என்று கண்டுபிடித்து இருக்கலாம்... அதன் அர்த்தம் கீழே...

    This writing uppukkaththu much fairer and marvel ... continuer by tembo jabem. Yazhini its always smile

    ReplyDelete
  11. Chitra ku Oru GooGle Translator parcel...........
    ponnuna idi irukanumm.......
    ஏர்டெல் Customer ellam ,

    ReplyDelete
  12. use docomo .. very cheep d to d 10 paisa others 30 paisa 3 month rate cutter only 35 rs

    ReplyDelete
  13. Driver was kept in police station for more than 4 hours with out any medical help , no one talks about this . Even if he has committed a mistake is it right to keep him in station w/o any medical help . Many of us r blaming the union , have we ever shouted for proper maintenance of buses .

    ReplyDelete
  14. I pray for the speedy recovery of that child!

    ReplyDelete
  15. சுவையானதகவல்கள்! நலம் பெற பிரார்த்திப்போம்!

    ReplyDelete
  16. தி மு க எல்லாம் வக்காலத்து வாங்க தெரியுது ......ஆனா இந்த வார கடிதத்துல வந்த வெளி நாடு மொழி லெட்டர் மட்டும் google translate போட்டு பார்கதேரியலையா .... ( அது portuguese language - இதோ அதன் மொழியாக்கம் "This Super scripted uppukkaththu moito in taste and more Marvel ... continuer by tembo jabem. Yazhini its always ஸ்மைல்"...
    --------------------------நீ இன்னும் வளரனும் தம்பி-----------------------------------

    ReplyDelete
  17. இந்த எழுத்து uppukkaththu அதிகமாக இன்னும் அழகாக மற்றும் அற்புதம்--portughese

    ReplyDelete
  18. கையறு நிலை....

    Dear Sekhar,

    I am Thilak from Sydney Australia regular reader of your blog. My Sister Divya with her family lives in Melbourne. Her son Sathyankar (who will be turning 5 on July 8th) had a fever since last Friday evening and Sunday his temperature went down (less than body temperature) and taken to hospital, The doctor’s noticed his heart beat is slowing down and took him to the bigger hospital ( Royal Melbourne Children Hospital) in the ambulance, He had cardiac arrest in the ambulance and the nurse in the ambulance did cardiopulmonary resuscitation (CPR). In one hour they put him in life support. They identified the root cause for this issue is “Flu B” (1 in 10,000 will get such a big impact). Since Sunday night till today morning he is in ICU with LIFE SUPPORT.
    They will be trying to see how he will cop without the LIFESUPPORT for next 72 hours. I believe mass blessings & prayers will help him to recover soon. Could you please pray for him & publish this in your blog. If not its fine, Even your prayer is sufficient to help him to recover.

    Thanks for your help.

    Thanks & Regards,
    Thilak

    =====================
    காலையில் அந்த மெயிலை பார்த்ததும்.....

    Thanks for your prayers and support.
    Unfortunately we lost him.

    Thilak

    ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்.

    ReplyDelete
  19. Thanks for your help and prayers Sekhar. We are getting him to chennai in 2-3 days.

    ReplyDelete
  20. I was about to say that we would certainly wish and pray that the child recovers from illness. How sad - the last comment dashed the hopes. We can only say that God bestow on the grieving family all solace and peace at this hour. Only Time can heal such sorrows.

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner