இன்றைய தினகரன் வெள்ளிமலரில் நான்...20/07/2012




1994 ஆம் வருடம் செக்யூரிட்டி  வேலைக்கு சென்னைக்கு வந்து ஏமாற்றப்பட்டு பாக்கெட்டில் பத்து பைசா இல்லாமல்
மெரினாபீச்சில் இருக்கும் சாகார் விகார் ஓட்டல் அருகில் இருக்கும் புல் தரையில் மேரி பிஸ்கெட் பெட்டியின் அட்டைபெட்டியை விரித்து  அதில் படுத்து எதிர்காலம் குறித்த நிறைய பயங்களுடன் அதீத தன்னம்பிக்கையுடன்   யோசித்து இருக்கின்றேன்.

மகாநதி  திரைப்படம்  சென்னை ஆன்ந் தியேட்டரில் ரிலிஸ்..  மெரினாவில் இருந்து ராதாகிருஷ்ணன்  சாலையில் நடந்தே தியேட்டருக்கு  போய் படம் பார்த்து விட்டு அதே ராதாகிருஷ்ணன் சாலையில்  கண்களில்  நீருடன் மனது முழுவதும் வலியோடு நடந்து வந்து ஓட்டலுக்கு பின்புறம் இருக்கும் மரத்துக்கு அடியில் என் பிளாட்பார படுக்கையை விரித்து கமல் சொன்ன  பாதியார் கவிதையை  மனதில் ஓட்டிப்பார்த்தேன்....

"தேடிச் சோறு நிதம் தின்று பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி மனம்
வாடி துன்பம் மிக உழன்று பிறர்
வாட பலசெயல்கள் செய்து நரை
கூடி கிழப்பருவமெய்தி கொடுங்
...கூற்றுக் கிரையெனப் பின்மாயும் பல
வேடிக்கை மனிதரைப் போல் -நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ..'

- பாரதி

ஒரு முறைக்கு பல முறை இந்த பாடலை படித்து இருக்கின்றேன்..மனதில் வாசித்து பார்த்து இருக்கின்றேன்...  ஆனால் எதிர்கால பயம் மட்டும் என்னை பயமுறுத்திக்கொண்டு இருந்தது..ஆனால் நான் நம்பிக்கையுடன் கனா கண்டேன். அதே மகாநதி படத்தின் அறிமுக ஒளிப்பதிவாளர் ,எனது ஆசான் எம்எஸ்பிரபு அவர்களிடம்  இரண்டு படங்கள்  பணிபுரிந்து இருக்கின்றேன்.. ஆனால் அன்றைய காலத்தில் அது சாத்தியம் என்று அந்த கிருஷ்ண பகவானே என் எதிரில்  தோன்றி சொல்லி இருந்தால் கூட.. போங்க சாமி காமெடி பண்ணாதிங்க என்று சிரித்து தொலைத்து இருப்பேன்.. ஆனால் அது சாத்தியம் ஆகியது.. உண்மையானது...

 சரியாக 18 வருடங்களுக்கு பிறகு  நான் வேலை பார்த்த ஆதே ஓட்டலின் எதிரில் ஒரு திரைப்பட கலந்துரையாடல் கலந்து கொள்வேன் என்று நான் நினைத்துக்கூட பார்த்திருக்கவில்லை....

நான் –ஈ படம் ரிலிசுக்கு இரண்டு நாளைக்கு முன் நண்பர் சிவராமன் தொலைபேசியில் அழைத்தார்.. நான் ஈ திரைபடத்தின் கலந்துரையாடலில் கலந்த கொள்ள வேண்டும் என்றார் அதற்கு முன் திரைபடத்தை பார்த்து விடுங்கள்.. திரு நீலகண்டன்  உங்களை தொடர்பு கொள்வார் என்றார்..
சென்னை மயிலாபூரில் இருக்கும் நகேஸ்வ்வரராவ் பூங்காவில் கலந்துரையாடலை வைத்துக்கொள்ளலாம் என்றார்கள்..  சரியாக  பதினோரு மணிக்கு பூங்காவுக்கு வரச்சொல்லி இருந்தார்கள். நான்  சரியா  பதினோரு மணிக்கு சென்று விட்டேன்.. ஆனால் பதினோரு மணிக்கு பூங்காவை பூட்டி விட்டார்கள்.. உள்ளே நிறைய பேர் இருந்தார்கள். எல்லோரும் எப்படி  செல்வார்கள் என்று பார்த்தால் சின்ன  கட்டை சுவர் மேல் ஏறி குதித்து வெளியே சென்று கொண்டு இருந்தார்கள். நானும் அது போல வெளியே வந்தேன்..

பீச் காந்தி சிலை அருகே கலந்துரையாடலை வைத்துக்கொள்ளலாம் என்று சொல்ல நான் எழுத்தாளர் பாஸ்கர் சக்தி, முத்துராமலிங்கம்,பிரியா தம்பி போன்றவர்கள் அந்த  இடத்தை அடைந்தோம்...

 எனக்கு பேட்டியை விட 18 வருடங்களுக்கு முன் நான் வாழ்ந்த கணங்களை அசைபோட்டு பார்த்தேன்... ஊரில்  பத்திரிக்கை வாசிக்கும் போது கூட நான் நினைத்து பார்த்த்தில்லை.. இப்படி ஒரு கலந்துரையாடலில் கலந்து கொள்வோம் என்று நினைத்துக்கூட பார்த்து இருக்கமாட்டேன்..... இந்த நேரத்தில் எனக்கு பிளாக்கை அறிமுகபடுத்திய நண்பர் நித்யகுமாரனுக்கு நன்றிகள்.

 நிறைய பேசினோம் என் முதல் கலந்துரையாடல் நிறைய பேசினோம்.. வானம் மேகமூட்டத்தோடு காணப்பட்டது... நல்ல லைட்டிங்..


2007 இல் பிளாக் ஆரம்பித்து இன்று உலகம் முழுக்க நிறைய சொந்தங்களையும் நண்பர்களையும் நான் பெற்று இருக்கும் அதே வேளையில் கனிசமான எதிரிகளை சம்பாதித்து வைத்து இருக்கின்றேன்... மிக தீவிரமாக என்னை நக்கல் விட்டால் பயந்து விடுவேன் என்று நினைக்கும் சில அடிவருடிகளையும் நான்சம்பாதித்து வைத்து இருக்கின்றேன்...மகாநதி படத்தில்தலைவாசல் விஜய் ஒரு டயலாக் சொல்லுவார்.. ஐயரே உனக்குதான்   எல்லாம்.. எனக்கு மேல ஆகாயம் கீழ பூமி.. அவ்வளவுதான் என்று  அந்த டயலாக்தான் எனக்கு நினைவுக்கு வருகின்றது. ஹா ஹா ஹா


கலந்துரையாடல் முடிந்து... ராதகிருஷ்ணன் சாலையில் இருக்கும் அஞ்சப்பர் ஒட்டலில் லஞ்சு சாப்பிட்டோம்...பாஸ்கர் சக்தி, முத்துராமலிங்கம்,பிரியா தம்பி போன்ற என்னைவிட  பத்திரிக்கை துறையில் அனுபமுள்ள மனிதர்களோடு நிறைய பேசி  சாப்பிட்ட கணங்கள் வாழ்வில் மறக்கவே முடியாது...கீழே வந்து விடைபெற்றோம்...

 எந்த ராதகிருஷ்ணன் சாலையில் கண்களில் கண்ணீரோடு என் எதிர்கால்ம் குறித்த கவலையோடு நடந்து வந்தேனோ... அதே சாலையில் எனது சீடி100டில் பயணித்தேன்.. திரும்ப அந்த பாரதியின் வரி நினைவுக்கு வந்தது..

பல
வேடிக்கை மனிதரைப் போல் -நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ..'

 நன்றி
சிவராமன்
நீலகண்டன்
மாதவன்
பரணி
====

பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.











நினைப்பது அல்ல நீ 
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS... 

58 comments:

  1. அருமை ! மென் மேன்லும் வளர வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  2. Hats of Anna .....

    Antha Kavithayai Padithathu mattum illai,
    Neengal Niraya Uzathirukireergal . . . .

    Athanalathanne Intha Munnetram ungalukku ...

    Sila per, Antha Kavithayai Padipadhodu mattum Nindru vidugirargal . . .

    ReplyDelete
  3. o my dad ! என் கமெண்ட் முதலாவதா இருக்கனும் !!

    ReplyDelete
  4. இனிய வாழ்த்து(க்)கள்.

    ReplyDelete
  5. வாழ்த்துக்கள் ஜாக்கி .... பழைய நினைவுகளை அசைபோட வாய்த்த வாய்ப்பு ......

    ReplyDelete
  6. வாழ்த்துகள் ஜாக்கி. மகிழ்ச்சியாக இருக்கிறது.

    ReplyDelete
  7. நிரூபிப்பதே நீ (ஜாக்கி சேகர்)...
    வாழ்த்துக்கள்...
    தாஸ், திருப்பூர்

    ReplyDelete
  8. மென்மேலும் வளர வாழ்த்துகள்.

    ReplyDelete
  9. வாழ்த்துகள் ஜாக்கி

    ReplyDelete
  10. great job... keep up more and achieve more.... http://www.rishvan.com

    ReplyDelete
  11. வாழ்த்துக்கள் தல :-)

    ReplyDelete
  12. you have proved jackie anna about you to others

    ReplyDelete
  13. வாழ்த்துக்கள் ஜாக்கி

    ReplyDelete
  14. பாராட்டுக்கள் உங்களுக்கு புதிதல்ல..இருப்பினும் மீண்டும் மீண்டும் பாராட்டுவதில் நாங்கள் சலிப்பதில்லை..

    வாழ்த்துக்கள்!!1

    ReplyDelete
  15. இந்த பயணம் இன்னும் தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  16. கஷ்ட படுறவங்க எல்லாம் கண்டிப்பா மேன்மை அடைவார்கள் வாழ்த்துக்கள் ஜாக்கி

    ReplyDelete
  17. கஷ்ட படுறவங்க எல்லாம் கண்டிப்பா மேன்மை அடைவார்கள் வாழ்த்துக்கள் ஜாக்கி

    ReplyDelete
  18. வாழ்த்துக்கள் பங்காளி.... சந்தோசமா இருக்கு...

    ReplyDelete
  19. வாழ்த்துக்கள் நண்பரே!

    ReplyDelete
  20. வாழ்த்துக்கள் ஜாக்கி...

    அர்த்தங்களுடான உன் வாழ்வு பெருமை கொள்கிறது..

    ReplyDelete
  21. வாழ்த்துக்கள்,

    ReplyDelete
  22. வாழ்த்துக்கள் அண்ணாச்சி பாரதியார் கவிதை போலவே உங்கள் வாழ்க்கையும் வீறு நடை போடட்டும்.

    ReplyDelete
  23. வாழ்த்துகள் ஜாக்கி!

    ReplyDelete
  24. வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுகள் அண்ணா!!!!

    தம்பி, ஈரோடு

    ReplyDelete
  25. வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுகள் அண்ணா!!!!

    தம்பி, ஈரோடு

    ReplyDelete
  26. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  27. வாழ்த்துக்கள் நண்பரே.....

    ReplyDelete
  28. வாழ்த்துக்கள் நண்பரே!

    ReplyDelete
  29. Thala.. kalakkunga... keep rocking :)

    ReplyDelete
  30. பழைய நினைவுகளை அசைபோடுதலே ஒரு இனிமையான அனுபவம்... டச்சிங்காக இருந்தது ஜாக்கி.....

    எனக்கு பில்லா-2 தல வசனம்தான் ஞாபகம் வந்தது....

    தோல்லியடைந்தால் நீ தீவிரவாதி
    வெற்றிபெற்றால் போராளி....

    ReplyDelete
  31. பழைய நினைவுகளை அசைபோடுதலே ஒரு இனிமையான அனுபவம்... டச்சிங்காக இருந்தது ஜாக்கி.....

    எனக்கு பில்லா-2 தல வசனம்தான் ஞாபகம் வந்தது....

    தோல்லியடைந்தால் நீ தீவிரவாதி
    வெற்றிபெற்றால் போராளி....

    ReplyDelete
  32. மனதார வாழ்த்தும் நண்பர்களை அதிகம் கொடுத்த பரம்பொருளுக்கு நன்றிகள். வாழ்த்து சொன்ன அத்தனை நண்பர்களுக்கும் என் நன்றிகள்.

    ReplyDelete
  33. வாழ்த்துகள் ஜாக்கி. மகிழ்ச்சி

    ReplyDelete
  34. வாழ்த்துக்கள் sir...

    ReplyDelete
  35. மென் மேன்லும் வளர வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  36. Dear..Thala..

    unakku ithellam..oru matterey illa, innum, innum..uyara..kandippa..oru naal varuva..

    NTR.

    ReplyDelete
  37. வாழ்த்துக்கள் ஜாக்கி...

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner