ஐஸ் ஏஜ் திரைப்படத்தின் முந்தைய பாகங்களில்
பனியுகத்தில் நடப்பது போலான திரைக்கதை..
ஆனால் இந்த நான்காம் பாகம் பனியுகம்
முடிவில் பூமியில் ஒன்றாய் இருந்த கண்டங்கள் பிரிவதில் இந்த திரைப்படம்
தொடங்குகின்றது..
அனிமேஷன் திரைபடங்களின் அடிப்படை விதி
என்னவென்றால் பொய்யான கதாபாத்திரங்கள்,
ஆனால் அவர்கள் மனிதனின் மெல்லிய உணர்வுகளை வெளிப்படுத்தும் தன்மை
கொண்டவையாக இருக்க வேண்டும்.. அது அனிமேஷன்
விலங்கினமாக இருக்கலாம் அல்லது மனிதர்களாக இருக்கலாம்… அடிப்படை விதி மனித உணர்வுகளை அனிமேஷன் கேரக்டர்கள் வெளிப்படுத்த
வேண்டும்.. ஐஸ் ஏஜ் திரைப்படங்களின் சீரிஸ் அந்த
அடிப்படை விதியை மிக சரியாக பயண்படுத்தி வெற்றி பெற்று
இருக்கின்றது..
Ice Age: Continental Drift/2012
ஒன்லைன்
மம்முத் யானை மேனி தன் பிரிந்த குடும்பத்தை சாகசங்களுக்குகிடையே எவ்வாறு சந்திக்கின்றது?
=============
Ice Age: Continental Drift/2012
கதை என்ன?
மம்முத் யானை மேனி மனைவி மற்றும்
டீன் ஏஜ் மகளான Peaches உடன் பனியுகத்தில் வசித்து
வருகின்றது. வழக்கம் போல புலி டியாகோ,
மற்றும் அதன்சகாக்களோடு வாழ்ந்து வரும் வேளையில் பனியுகத்தின்
முடிவில் கண்டங்கள் பிரிகின்றன.
இதனால் மேனி தன் மனைவி மற்றும் மகளை
பிரிந்து விடுகின்றது.. மேனி தன் நண்பர்களோடு திரும்ப தன் மனைவி மற்றும் மகளை பல
சாகசங்களுக்கு மத்தியில் எ எப்படி கண்டு பிடிக்கின்து என்பதை காமெடி திரில்லர்
கலந்து அனிமேஷனில் சுவாரஸ்யமாக சொல்லி
இருக்கின்றார்கள்.
===========
மற்ற
ஐஸ்ஏஜ் திரைப்பட பாகங்களை காட்டிலும் இந்த படம் அட்வென்சரில்
பின்னி பெடலெடுத்து இருக்கின்றார்கள்… பனி யுக
முடிவில் கண்டங்கள் பிரிவைதையும் அதனால் பனி
யுகத்தில் வாழ்ந்த மிருகங்களின் வாழ்வியல் முறை மாற்றம், இடபெயர்வு
,போன்றவற்றை மிக தத்ரூபமாக படமாக்கி இருக்கின்றார்கள்..
முக்கியமாக பனியுக முடிவில் பனிக்கட்டிகள் பெரிய
பெரிய கண்டங்கள் ரேஞ்சிக்கு கடலில்
அடித்து செல்வதும்... பெரிய பெரிய
நிலப்பரப்புகள் கடல் மட்டத்தில் இருந்து உயர்ந்து அனிமேஷனில் நிற்க்க
வைத்து நம்மை நம்ப வைத்து இருக்கின்றார்கள்.
அனிமேஷன் மிக
அருமையாக இருக்கின்றது.. முக்கியமாக மம்முத் யானை மேனியின் டீன் ஏஜ்
மகள் Peaches கேரக்டரின் அங்க அசைவுகள் ஒரு யானையின் அசைவு
போல் இல்லாமல் ஒரு டீன் ஏஜ் பெண்ணின் நளினம் அசத்தல் ரகம்.
முக்கிய கேரக்டரான புலி டியாகோ வின் காதல் காட்சிகள்
சுவாரஸ்யமாக இருக்க காரணம்.. மோதலுக்கு பின்
வரும் காதல்தான்.. டியாகோ காதல் வயப்பட்டு தனிமையில் புலம்பும் காட்சிகள்
அற்புதம். இந்த படத்தை ஆங்கிலத்தில் பார்ப்பதை விட தமிழில் பார்ப்பது உசிதம். அந்த
அளவுக்கு காமெடியில் வயிறு குலுங்க சிரிக்க வைத்து இருக்கின்றார்கள்.
முந்தைய படங்கள் போலவே சித் கேரக்டர் வல வலவென
பேசிக்கொண்டு கேனத்தனமான வேலைகளை செய்து வருவதும் ,
தீவில் இருக்கும் பழத்தை தின்னாதே என்று சொல்லும் போதே
அந்த பழத்தை தின்று விட்டு பேராலிஸ் அட்டாக்கில் மாட்டி கிழிந்த
நாறாக கிடப்பதும் அசத்தல் ரகம்.
ஸ்கார்ட் இந்த படத்திலும் தன் உயிரை பற்றி கவலை
படாமல் ஓட்ரி பழத்தோடு சுற்றி திரியும்
காட்சிகளும், கிளைமாக்சில் ஒரு பெரிய பேலஸ் முழுக்க விதைகள் இருக்க என்ன செய்வதறியாது தினறும் காட்சிகள்
கியூட் கவிதை.. ஸ்கார்ட் போஷன் இந்த படத்தில் அசத்தல் ரகம். முக்கியமாக படத்தின்
இன்ட்ரோவில் ஓட்ரி பழத்தை தேடி பூமியின் மையப்பகுதி வரை தேடி செல்லும் காட்சிகள்..
கற்பனை விருந்து.
பைரட்ஸ் ஆப் கரிபீயன் போல இந்த பாகத்தில் ஒரு
குரங்கு தனது வில்லத்தனத்தை காட்டி படத்தினை சுவாரஸ்யப்படுத்துகின்றது..
நிறைய
ஷாட்டுகளுக்கு இயக்குனர் பெரிதாய் மெனக்கெட வில்லை.. காரணம் நிறைய ஷாட்டுகள்..
டைட்டானிக், பைரட்ஸ்ஆப் கரீபியின் படத்தின்
காட்சிகளை நினைவுக்கு கொண்டு வருவதை தவிர்க்க முடியவில்லை.
என்ட் கார்டு டைடிலில் படத்தில் அனிமேஷன் பாத்திரங்களுக்கு குரல் கொடுத்த பிரபல ஹாலிவுட் நடிகர்கள் பாட.. அனிமேஷன் பாத்திரங்கள் ராப் டான்ஸ் ஆடுவது படம்பார்க்கும் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்ப்படுத்துகின்றது..
=======================
படத்தின் டிரைலர்..
=================
படக்குழுவினர் விபரம்.
Directed by Steve
Martino
Mike Thurmeier
Produced by John
C. Donkin
Lori Forte
Screenplay by Michael
Berg
Jason Fuchs
Mike Reiss
Starring Ray
Romano
John Leguizamo
Denis Leary
Wanda Sykes
Seann William Scott
Josh Peck
Chris Wedge
Peter Dinklage
Heather Morris
Nicki Minaj
Drake
Keke Palmer
with Jennifer Lopez
and Queen Latifah
Music by John
Powell
Cinematography Renato Falcão
Editing by James
Palumbo
David Ian Salter
Studio Blue
Sky Studios
20th
Century Fox Animation
Distributed by 20th Century Fox
Release date(s)
June 27, 2012
(Europe)
July 13, 2012
(North America)
Running time 94 minutes
Country United
States
Language English
Budget $95 million
Box office $626,249,000
==========
தியேட்டர் டிஸ்கி..
சத்தியம் தியேட்டரில் இந்த படத்தை பார்த்தேன்.. என் பக்கத்தில் ஒரு வாண்டு பையன் உட்கார்ந்து கொண்டு அவன் அம்மாவிடம் தொண தொண என பேசிக்கொண்டு இருந்தான்.. 3டி கண்ணாடி அணிந்து பார்க்கும் போது அம்மா ஏன் அது கிட்டக்க தெரியுது..? அது என்ன? இது என்ன? என்று ஏகப்பட்ட கேள்விகளை கேட்டுக்கொண்டு இருந்தான். ஸ்டெப் அப் படத்தின் டிரைலர் போட்டார்கள்... நிறைய கிஸ்ஸிங் சீன் எல்லாம் படத்தில் இருந்துச்சி... அந்த அம்மா டிரைலர் முடியற வரைக்கும் நிம்மமதியா இருந்திச்சி... பையன் எதுவும் பேசவேயில்லை..
==========
பைனல் கிக்.
குழந்தைகளும் குழந்தைமனம் கொண்ட பெரியவர்களும்
இந்த படத்தை தவர விடவேண்டாம்.. அனைத்து தரப்பினரையும் மகிழ்விக்கும் அற்புதமான அனிமேஷன் திரைப்படம் இந்த
ஐஸ் ஏஜ் 4 என்றால் மிகையில்லை. இந்த படம் பார்க்கவேண்டிய திரைப்படம்.. வாய்ப்பு இருந்தால் தமிழ் டப்பிங்கில் பாருங்கள்..
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.
=========
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
//அந்த அம்மா டிரைலர் முடியற வரைக்கும் நிம்மமதியா இருந்திச்சி... பையன் எதுவும் பேசவேயில்லை..//
ReplyDelete:-)
arumayana review jackie anna
ReplyDeletegud review.........gives the feel of asst.director tells abt the characters.....
ReplyDeleteKandipa padaththai paarththee aagaveandum.poi paarthuttu varean jaki annee.
ReplyDeleteGOOD REVIEW . .
ReplyDeleteGOOD REVIEW .. .
ReplyDeleteகருத்தை சொன்ன நண்பர்களுக்கு என் நன்றிகள்.
ReplyDelete