நம்ம ஊர்
கவிஞர் வைரமுத்து போல தனது வாழ்க்கை
கேரியரை ஓப்பன் செய்த ஓருவர்
உலகமெங்கும் திகைக்க வைக்கும் கருத்துக்களை தன் திரைப்படங்கள் வாயிலாக சொல்லும் இயக்குநராக தன்
வாழ்க்கை கேரியரை மாற்றிக்கொண்டால் எப்படி இருக்கும்....? ஆம்
ஜப்பான் இயக்குநர் Sion Sono பற்றித்தான் சொல்லுகின்றேன்..
Sion Sono
யார்... எவனுக்கு தெரியும்...சென்னை உலக திரைப்படவிழாவில் Cold Fish என்ற திரைப்படத்தை திரையிடும் முன் என்னை போல பல சென்னைவாசிகளுக்கு , திரைப்பட
ஆர்வலர்களுக்கும் அவரை பற்றி எதுவும் தெரியாது.,..ஆனால் Cold Fish படத்தை பார்த்தவுடன் யாருடா இந்த படத்தை எடுத்தது என்ற தேடல்
அதிகமாகியது.. Cold Fish விமர்சனத்தை வாசிக்க... இங்கே கிளிக்கவும்
முதன் முதலில்
இந்த பக்கத்தை நீங்கள் வாசித்தீர்கள் என்றால் சற்று குழப்பமாகத்தான் இருக்கும் போன வருடமே நான்
இந்த படத்தை பற்றி எழுதி இருக்கின்றேன். Cold Fish படத்தை பற்றிய
விமர்சனத்தை படித்து விட்டு மேல படித்தால் ஒரளவுக்கு நான் சொல்ல வருவதின் அர்த்தம் உங்களுக்கு
புரியலாம்.... அல்லது புரியாமல் போகலாம்.. அது என் தவறு இல்லை.
Sion Sono
17 வயதில் கவிஞராக தனது வாழ்க்கை
பயணத்தை தொடங்கி ஷார்ட் பிலிம், ஆவணபடம் என்று களம் இறங்கி, அதன் பின் சினிமா கொஞ்சம் பிடிபட்டு, எல்லாரும் செய்யறதை
நாம எதுக்கு செய்யனும் நாம வித்தியாசமா எடுத்து அசத்துவோம் என்று நினைத்த
காரணத்தால் என்னை போன்ற மக்கு ஆட்களை எல்லாம் அவரை பற்றி பேச வைத்து
இருக்கின்றார்..
Cult movie மேக்கிங்தான் இவரோட ஸ்டைல்... Cult movie ன்னா என்ன்ன்னு
எங்களுக்கு தெரியாது சார்... நாங்க என்ன சாப்ட்வேர் கம்பெனியில வேலை செஞ்சிகிட்டு ,நாலு
சினிமா புக்கை டவுண்ட்லோட் பண்ணி
படிச்சிட்டு, எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரம்
கணக்கா சினிமாவை கரைத்துக்குடித்த சிற்பி ரேஞ்சிக்கு எங்களால பேச
முடியாது... விக்கிபிடியாவுல ஆங்கிலத்துல படிச்சி எங்களால தெரிஞ்சிக்கவும் முடியாது.. அதனால Cult movie ன்னா என்னன்னு சொல்லுங்க.. குட்... எனக்கு புரிஞ்சி வரைக்கும் சொல்லறேன்...
ஜப்பான்
இயக்குனர்....Sion Sonoம் Cult movie ஸ்டைலில் படம் எடுப்பதுதான் அவரோட ஸ்டைல்... கல்ட மூவி என்பது ஜனரஞ்சகமா சினிமா ரசிக்கும்
மக்களுக்காக படம் எடுக்காம தான் நினைச்சதை
வெகு குறைந்த பார்வையாளர்கள் கொண்ட ரசிகர்களுக்கு எடுப்பது.. சொதப்பலா
சொல்லிட்டேனோ? சரி லீவ் இட்..
நம்மஊர்ல எப்படி தமிழ்வாணன் கண்ணாடி, கலைஞர் மஞ்சதுண்டு, எம்ஜியார்குல்லா,
பாலுமகேந்திரா தொப்பின்னு அடையாளபடுத்திக்கிறாங்களோ.. அது போல Sion Sono வும் வெளியிடத்துக்கு வந்தா
கருப்பு தொப்பி போட்டுகிட்டுதான் வெளியே வருவாராம். சரி படம் எப்படின்னு பார்த்துடுவோம்.
==========
சரி Guilty of
Romance-2011 படத்தோட ஒன்லைன் பார்த்துடுவோம்.
புறக்கணிக்கப்பட்ட ஒரு நாவலாசிரியனின் மனைவி எப்படி பாதை
மாறுகின்றாள் என்பதுதான் ஒன்லைன்.
=========
Guilty of Romance-2011 ஜப்பான் படத்தோட கதை என்ன?
விலைமாதர்கள் அதிகம் இருக்கும் பகுதிகளில் கொடுர
கொலைகள் நடக்கின்றன...அதன் பின்னனியை ஒரு டிடெக்ட்டிவ் பெண்மணி ஆராய்கின்றாள்...
மெல்ல கதை பின்னோக்கி பயணிக்கின்றது.ரோமாண்டிக் நாவலாசிரியனின் மனைவி Izumi.
கணவனுக்காகவே வாழ்பவள்.. ரொமாண்டிக் நாவலாசிரியன் என்று பெயர் எடுத்து
விட்டு மனைவியை தொடாமல் இருக்கின்றான் கணவன்.. ஒரு கட்டத்தில் Izumiயை தவறான பாதைக்கு ஒரு கூட்டம்
அழைத்து செல்லுகின்றது.. எப்படி மீண்டாள்
என்பதை வெண்திரையில் பாருங்கள்.
==========
படத்தின்
சுவாரஸ்யங்களில் சில.
இயக்குனரின் கோல்ட் பிஷ் படத்தை போன்று இந்த படம் இல்லை
என்றாலும்.. சில காட்சிகளை தமிழக பார்வையாளன் ஏற்றுக்கொள்வது மிகவும் கடினம்.
Sion Sono
படங்களின் அடிப்படை என்னவென்றால்.. நீ
ஜாக்கிரதையாக இல்லையென்றால் உலகம் உன்னை
ஏய்த்து விடும் என்பதுதான் அவருடைய படங்களின் அடிநாதம்.
கணவனே
கண்கண்ட தெய்வம் என்று வாழும் மனைவி ஆனால்...ஆண்குறியை தொட்டுப்பார்க்க
மட்டுமே அனுமதிக்கும் கணவன்... மனைவி
எப்படி தடம் மாறுகின்றாள் என்பதையும் எப்படி ஒரு கூட்டம் அவளை மிக அழகாக
வளைக்கின்றது என்பதையும் மிக அழகாக காட்சி படுத்தி இருக்கின்றார்கள்..
கணவனை விட்டு வேறு ஒரு ஆடவனுடன் உடலுறவு கொள்ளும் வேளையில் உச்சக்கட்டத்தின் போது, போன் செய்து கணவனிடம்
இரவு வரமாட்டேன் என்று சொல் என்று அவளை அடிக்கும் காட்சி கொடுமையிலும் கொடுமை.
இந்த
உலகத்தில் அணுக்கு தேவை செக்ஸ்.. அதை ஏன் மனைவி என்ற பெயரில் இலவசமாக தரவேண்டும்..
காசு வாங்கி கொண்டு உடலை கொடுக்க வேண்டும் என்று ஒரு புரோபசர் கேரக்டர் ஒன்று வக்காலத்து வாங்கும்
காட்சிகளில் லாஜிக்காக பேசுவது போலவே
வசனத்தை எழுதி தந்து இருக்கின்றார்கள்..
கணவனே விலைமாதுவாகிவிட்ட மனைவியிடம் படுப்பது
எதிர்பாராத திருப்பம்.
ஒரு தப்பை
செய்ய ஆரம்பிச்சிட்டா அதுல இருந்து அவ்வளவு சீக்கிரம் வெளியே வர முடியாது..நூல்
பிடிச்சிகிட்டு அப்படியே கிளை கிளையா விரிந்து
மேலும் மேலும் உங்களை தப்பு செய்ய வைக்கும் என்பதுதான் இந்த படத்தின்
பேசிக்..
கண்ணாடி
எதிரில் சேல்ஸ்கேர்ள் போல நிர்வாணமாக
நின்று கூவி கூவி விற்கும் காட்சியில் நாயகியாக நடித்து
இருப்பவர் நடிப்பில் அசத்தி இருக்கின்றார்.
இரண்டு சின்ன
பையன்கள் பார்த்துக்கொண்டு இருக்கும் போது அவர்கள் எதிரில் தனது பேன்டிசை கழட்டி
அந்த சின்ன பையன்கள் எதிரிலேயே சிறு நீர் கழிப்பது கல்ட் பிலிம் வகையாறாக்களில்
மட்டுமே சாத்தியம்.
1990 களில்
நடந்த உண்மை சம்பவங்களின் அடிப்படையில் இந்த திரைக்கதை எழுதப்பட்டு இருக்கின்றது..
===========
படத்தின்
டிரைலர்.
=======
படக்குழுவினர்
விபரம்.
Directed by Sion Sono
Written by Sion Sono
Starring Miki Mizuno
Makoto Togashi
Megumi Kagurazaka
Release date(s)
November 12, 2011
Country Japan
Language Japanese
==============
பைனல்கிக்.
இந்த படம் கல்ட் பிலிம் வகையை சார்ந்த காரணத்தால்.... ஒரு சிலருக்கு இந்த
படம் பிடிக்காது. ஆர் ரேட்டிங் வகையை
சார்ந்த்து...ஆனால் இந்த படத்தை பார்க்கவேண்டிய படங்கள் லிஸ்ட்டில் நான் பரிந்துரைக்கின்றேன்.
=======
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.
நினைப்பது அல்ல நீ நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
நம்ம ஊர்ல இந்த மாதிரி படம் எடுத்தா ஓடுமா தலைவா? ஆனா நல்லாருக்கும், ஏன்னா இது நம்ம ஊர்ல அதிகமா நாம பார்க்கற யதார்த்தமான கதை
ReplyDeleteபடத்த பத்திலாம் சொல்லிடு எப்டி எங்க டவுன்லோட் பண்ணி பாக்குறதுன்னு சொல்லலையே
ReplyDeleteBill review please Jackie..!
ReplyDeleteநாங்க என்ன சாப்ட்வேர் கம்பெனியில வேலை செஞ்சிகிட்டு ,நாலு சினிமா புக்கை டவுண்ட்லோட் பண்ணி படிச்சிட்டு, எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரம் கணக்கா சினிமாவை கரைத்துக்குடித்த சிற்பி ரேஞ்சிக்கு எங்களால பேச முடியாது... //
ReplyDeleteabove lines avoid pannirukkalaam anne...Software aalunga mela ungalukkum gaanda... ayoo..
விரைவில் பிரபல இயக்குனர்கள் யாராவது இதில் இருந்து எதையாவது சுட்டு நம்ம ஊர்ல ஓடுற அளவுக்கு தருவாங்க இல்ல அட்லீஸ்ட் பேசப்படற அளவுக்கு தருவாங்கனு நினைக்கிறேன்...
ReplyDeleteபதிவு பயனுள்ளதாக இருந்தது நண்பரே..
வர வர எனக்கு தோன்றுவதை சொல்றேன் அப்படின்ற பேர்ல.. ஒங்களோட ஓர் பக்க சார்பு உடைய விமர்சங்கள எழுதுறீங்க.. போன பதிவு ல வெளிநாடு வாழ் மக்களை பத்தி.. இப்போ கணினி துறை ல இருக்கறவங்கள பத்தி.. நாம வேலை பார்க்கிற துறை பத்தி நாலு பேர் தேவை இல்லாம பேசறப்போ எப்படி இருக்கும் நு கொஞ்சம் யோசிங்க.. ஒங்களுக்கு சொல்ல தேவை இல்லை.. எல்லா இடத்திலும் எல்லாரும் ஒரே மாதிரி இல்லை அண்ணே.. சொன்னதில் பிழை இருந்தால் மன்னிக்கவும்..
ReplyDeleteவர வர எனக்கு தோன்றுவதை சொல்றேன் அப்படின்ற பேர்ல.. ஒங்களோட ஓர் பக்க சார்பு உடைய விமர்சங்கள எழுதுறீங்க.. போன பதிவு ல வெளிநாடு வாழ் மக்களை பத்தி.. இப்போ கணினி துறை ல இருக்கறவங்கள பத்தி.. நாம வேலை பார்க்கிற துறை பத்தி நாலு பேர் தேவை இல்லாம பேசறப்போ எப்படி இருக்கும் நு கொஞ்சம் யோசிங்க.. ஒங்களுக்கு சொல்ல தேவை இல்லை.. எல்லா இடத்திலும் எல்லாரும் ஒரே மாதிரி இல்லை அண்ணே.. சொன்னதில் பிழை இருந்தால் மன்னிக்கவும்..
ReplyDelete