LEELAI-2012/ லீலை தமிழ் சினிமாவில் புறக்கணிக்கப்பட்ட நல்ல திரைப்படம்.



குள்ளநரிக்கூட்டம் என்ற படம் வந்த போது அந்த படத்தை ஏதோ ஒரு லோபட்ஜெட் கத்துக்குட்டி படம் என்று நினைத்து அதனை பார்க்காமல் விட்டு விட்டேன்.. 
அதே படத்தை நன்றாக இருக்கின்றது என்  ரசனை அலைவரிசையில் இருப்பவர்கள் சொல்லக்கேட்டு   அந்த திரைப்படத்தை  பார்க்க தியேட்டருக்கு போனால் படத்தையே தூக்கி விட்டார்கள்.

 சும்மா சொல்லக்கூடாது,...  அந்த படம் முதல் 30 நிமிடங்கள் மிக சுவாரஸ்யமான இயல்பான காட்சிகளை கொண்டு இருந்த்து.. நல்ல நீட்டான ஒரு காதல் கதை.,. வெகு இயல்பாய் எடுத்து இருந்தார்கள்.


அது போல லீலை படத்தை பற்றி வந்த விமர்சனங்களில் அந்த படம்  நன்றாக இருக்கின்றது.. என்று கேள்விபட்டேன்..ஆனால் அந்த படத்தை தியேட்டரில் வந்த்து போலவே எனக்கு தெரியவில்லை...  இரண்டு வருடம் தயாரிப்பில் இருந்து வெளி வந்த வேகம் தெரியாமல் பொட்டிக்குள் போய்  லீலை சுருண்டுக்கொண்டு விட்டது...

பட்  நேற்று இரவு இந்த திரைப்படத்தை பார்த்த போது ரொம்ப நீட்டான  இந்த திரைப்படம் ஏன் தோல்வியை சந்தித்த்து என்று யோசித்துக்கொண்டு இருக்கின்றேன். ங ஆண் பெண்  உறவுகளை மிக நுட்பமாய் பதிவு செய்யும் திரைப்படங்கள் தமிழ் சூழலில் மிகவும் குறைவு  என்பேன்.. லீலை போன்ற அத்திப்பூத்த போல சில படங்கள் பெரும்பான்மை மக்களிடம் கவனம் பெற்றாமலே சென்று விடுவது கொடுமை.


எந்த திரைப்படத்தையும் நான் எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் கணக்காக போய் பார்த்து  ரசிக்கமாட்டேன்.....மிகச்சாதாரண சினிமா ரசிகனாக  ஒரு படத்தை ரசிப்பேன்...  நான் எப்போதும் சொல்வது போல எந்த திரைப்படம் உங்கள் இயல்பு வாழ்க்கையில் இரண்டு நாட்களுக்கு உங்கள் பணிகளின் ஊடே திரைப்படத்தின் காட்சிகள் உங்கள் மனக்கண்ணில் வந்து போனால் அந்த திரைப்படம் நல்ல திரைப்படம் என்பேன்...


லீலை திரைப்படத்தை  ஒன்றி பார்த்த போது குள்ளநரிக்கூட்டம் திரைப்படம் போலவே..என்னை  இயல்பாய் ஒன்றச்செய்தது. இயல்பான  காட்சிகள், நறுக்கான வசனங்கள்... கிளைமாக்சில் விழியோரம் நீர்வரச்செய்தது...வேறு என்ன வேண்டும்? ஒரு நல்ல திரைப்படம் உங்களை கவர...?


==========
லீலை படத்தின் ஒன்லைன்.


ஒருவன் பெயரை கேள்விப்பட்டாலே பிடிக்காத பெண்ணுக்கு அவன் மேல் காதல்  வந்தால்? இதான்  ஒன்லைன்.

================

லீலை படத்தின் கதை என்ன?

 கார்த்திக் (ஷிவ் பண்டிட்)பல பெண்களுடன் சுற்றி சரியில்லை என்றால் கழட்டி விடும் ரகம்...கழட்டி விடப்பட்ட பெண்களின் நண்பி கருணை மலர் (மானசி)....மலருக்கு கார்த்தியை முன் பின் தெரியாவிட்டாலும் அந்த கேரக்டரை பற்றியும் போனில் அவனோடு எதிர்பாராத தருணத்தில் சண்டையும் போட்டு இருக்கின்றாள்... 


கார்த்திக்கும் தன்னை வெறுக்கும் மலரை பிடிக்கவில்லை.. ஆனால் ஒரு முறை அவளை நேரில் பார்க்கும் கார்த்திக் அவளை  நேசிக்கின்றான்..கார்த்திக்கிக்கு மலர் யார் என்று தெரியும் .. ஆனால் மலருக்கும் கார்த்திக்கை தெரியாது..கார்த்திக் தன்னை சுந்தர் என்று அறிமுகப்படுத்திக்கொண்டு மலரோடு பழகுகின்றான்... 

மலரும் கார்த்திக் என்பதை  அறியாமல் கார்த்திக்கை சுந்தர் என்று நினைத்து காதலிக்கின்றாள்.... முடிவு என்ன என்பதை திரையில் பாருங்கள்...

=============
படத்தின் சுவாரஸ்யங்கள்.


வாவ் மிக அற்புதமான திரைக்கதையோடு சின்ன சின்ன டுவிஸ்ட்டுகளோடு புதுமுகங்களை வைத்துக்கொண்டு களம் இறங்கிய இயக்குனர் ஆண்ட்ரு  லூயிஸ் பாராட்டுக்கு உரியவர்...

திரைக்கதையில்  சில  சொதப்பல் லாஜிக்தனங்கள் இருந்தாலும் கதை என்று வந்து  விட்டால் சில லாஜிக்குகளை  கேள்வி கேட்காமல் பரண் மீது தூக்கி போட்டு விட வேண்டும்.


அறிமுக நடிகர்கள் அசத்தி இருக்கின்றார்கள். முக்கியமாக நாயகன் சில இடங்களில் நடிப்பில்  சொதப்பி இருந்தாலும் நாயகி மானசி சின்ன சின்ன எக்ஸ்பிரஷன்களில் நம்மை அதிகம் கவருகின்றார்.... இத்தனைக்கு மானசி ஆர்பாட்டம் இல்லாத அழகு..

நான்கே நான்கு முக்கிய கேரக்டர்களை வைத்துக்கொண்டு தொய்வில்லாத திரைக்கதையை அமைத்து இருக்கின்றார் இயக்குனர்.


படம் லோ பட்ஜெட் என்றாலும் காட்சிகளில் ரிச்னஸ் கொடுத்து இருக்கின்றார்  ஒளிப்பதிவாளர்  வேல்ராஜ்...

தங்கை சென்னையில் வில்லனிடம் மாட்டிக்கொள்ள ஊரில் இருக்கும் அண்ணன்  சென்னை வந்த வில்லன்களை புரட்டி எடுக்கும் ஒரே கதையை பல பேக்டிராப்புகளில் நடித்த பெரிய நடிகர்கள் படத்தை சலிக்க சலிக்க  தமிழ் ரசிகன்.. இந்த படத்தை ஏரெடுத்தும் பார்க்கவில்லை... சரியான விளம்பரம் இல்லை... அனைத்தும் புது முகங்கள் இந்த படத்தை புறக்கணிக்க இதுவும் காரணமாக இருந்து இருக்கலாம்.


சரி இந்த படத்தை இப்போது  எழுத என்ன காரணம்.. நல்ல படத்தை இந்த தளத்தில்  அறிமுகபடுத்தும்  வேளையில்  கண்டிப்பாக இந்த படத்தை இன்னும் பலரிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்ற ஆவல்தான்..


 சந்தானம் லொள்ளு சபா நடிக்கும் பொது உடன் நடித்த  நடிகர்களுக்கு இந்த படத்தில் வாய்ப்பு கொடுத்து இருக்கின்றார்.. நிறைய இடங்களில் டபுள்மீனிங்கில் கிச்சி  கிச்சி மூட்டுகின்றார்.


ஒரு ஒரு ஷாட்டும் விளம்பர படம் போல அவ்வளவு  ரிச்சாக ஷுட் செய்து இருக்கின்றார்கள்.
முக்கியமாக மலரிடம்  உண்மையை சொல்ல முடியாமல் மறுக்கும் போது நாயகி என்ன காரணம் என்று தெரியாமல் குழம்பும் இடம் ஆகட்டும், கிளைமாக்சில் உண்மை தெரிந்து அப்பாடா என்று அவள் யோசிக்கும் விதமும்  அவள் காட்டும் எக்ஸ்பிரஷனும்... அற்புதம்..

கார்த்திக் மற்றும் மலரின் நண்பியாக வரும் சுஹாசினி மிக இயல்பாய நடித்து இருக்கின்றார்.
புது இசையமைப்பாளர் சதிஷ் சக்கரவர்த்தியின் பாடல்கள்  சிலது மனதை கொள்ளை கொள்ளுகின்றன.


நீங்கள் காதலை ரசிப்பவராக இருந்தாலோ.. அல்லது காதலில் விழுந்தவராக இருந்தலோ  நிச்சயம் இந்த திரைப்படத்தை தூக்கி வைத்து கொண்டாடுவீர்கள்..


இதே  போல ஆர் பிலிம்ஸ் வெளியீடான மாஸ்க்கோவின் காவேரி ஒரு மொக்கையான படம்.. ஆனால் இந்த  படத்தை அதே  நினைப்பில் விளம்பரம் ஏதும் செய்யாமல் தயாரிப்பாளரே மொக்கையாக ரிலிஸ்  செய்து இருக்கின்றார்..


இந்த படம் நான் பார்த்தேன்... ஒரு மொக்கை படத்துக்கு  இவ்வளவுநாள் கழித்து விம்ர்சனம் தேவையா என்று சிலர் யோசிக்கலாம்.. உங்கள் உயர்வான ரசனைக்கு நன்றி... நம்ம  ரசனை இப்படித்தான்...


ஹாலிவுட்டில்  லோ பட்ஜெட்டில் வெறும் உறவுகளின்  பிரச்சனைகளை மட்டும் மையகருவாக வைத்துக்கொண்டு டஜன் கணக்கில் படங்கள் வெளிவந்து சக்கை போடு போடும்.. ஆனால் இங்கே நிலைமை இதுதான்.


இயக்குனர் ஆண்ட்ரு  லூயிஸ்... உங்களுக்கு திரைமொழி சிறப்பாக கை கொடுக்கின்றது..இந்த படத்தின் வரவேற்ப்பை பார்த்து  நொந்து போகாமல் அடுத்த உங்கள் திரைப்ப்பயணத்தை தொடருங்கள் ஆல் த பெஸ்ட்.


===== 
 படத்தின் டிரைலர்.


=======
படகுழுவினர் விபரம்.

 Directed by Andrew Louis
Produced by Ramesh Babu
Written by Andrew Louis
Starring
Shiv Pandit
Manasi Parekh
Music by Satish Chakravarthy
Cinematography Velraj
Editing by Saravanan
Studio R Films
Distributed by Aascar Films
Release date(s) 27 April 2012
Country India
Language Tamil
========
பைனல் கிக்..


இந்த திரைப்படம் பார்க்கவேண்டிய திரைப்படம்.. பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல்  இந்த படத்தை ரசிக்க உட்கார்ந்தால் நிச்சயம் இரண்டு மணி நேரம் என்ஜாய் செய்வீர்கள். இன்டர்வெல் வரை படம் போனதே தெரியவில்லை...நாயகன்தான் சில பிரேம்களில் சொதப்புகின்ன்றார்..  மற்றபடி மிக அற்புதமான ஆண், பெண் காதல் உறவை பற்றிய அற்புதமான சின்ன சின்ன டுவிஸ்டுகளுடன் கூடிய நைஸ் மூவி இது.. உலக சினிமாவை துரத்தும் ரசிகர்கள் இந்த உள்ளுர் சினிமாவை ஒரு முறை டவுன்லோட் செய்தோ அல்லது டிவிடியிலோ  பார்த்து விட்டு சொல்லுங்கள்... அல்லது படம் பார்த்தவர்கள் உங்கள் கருத்துக்களை பிகிர்ந்து கொள்ளுங்கள்.. நேற்று இரவு ஒரு மணிக்கு  பார்க்க ஆரம்பித்து விடியலில் நாலுமணிவரை இந்த திரைப்படத்தை பார்த்து விட்டுதான் உறங்கினேன்...  பீல் குட் மூவி...





பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.


நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

28 comments:

  1. oh my goodness. how did i missed such an amazing movie ? thanks jackeie !

    ReplyDelete
  2. நானும் பார்த்தேன் ஜாக்கி...இந்த படம் எனக்கு மிகவும் பிடித்தது...நல்ல படம்...இதை மற்றவர்களுக்கு அறிமுகம் செய்ததற்கு நன்றி ஜாக்கி.

    ReplyDelete
  3. yes true fact.....nice review sir . .

    ReplyDelete
  4. நானும் என் தம்பியும் இந்த படம் பார்த்தோம்.. ஆனால் நான் முழுவதுமாக பார்க்க வில்லை. தம்பி இந்த படத்தை பார்த்து நல்லா இருக்கு என்று சொன்னான். நிஜமாகவே நல்ல படங்கள் பெரிய நடிகர்களுக்கு போட்டி போடா முடியாமல் மறைந்து விடுகிறது.

    ReplyDelete
  5. Naan parthitten very nice movie , Anna too entru oru Tamil movie it's also good movie , latest ta vanthu kanama pochu. .... Parthitu eluthavam pls .

    ReplyDelete
  6. நல்ல பட அறிமுகத்திற்கு நன்றிகள்!

    ReplyDelete
  7. லீலை நல்ல படம்தான்....
    வழக்கு எண்ணையே நாம் வாழ்த்தவில்லையே...
    அப்புறம் லீலைகளுக்கு எங்கே மரியாதை இருக்கும்.

    ReplyDelete
  8. {{அதே படத்தை நன்றாக இருக்கின்றது என் ரசனை அலைவரிசையில் இருப்பவர்கள் சொல்லக்கேட்டு அந்த திரைப்படத்தை பார்க்க தியேட்டருக்கு போனால் படத்தையே தூக்கி விட்டார்கள்}}

    சார், எனக்கும் அதே (சூழ்)நிலை?!
    Doss.A

    ReplyDelete
  9. // முடிவு என்ன என்பதை திரையில் பாருங்கள்...

    ///

    காமெடி பண்ணாதீங்க சார்... எந்த ஊரு திரையில இந்த படம் ஓடுது?

    ReplyDelete
  10. ///முடிவு என்ன என்பதை திரையில் பாருங்கள்...//
    காமெடி பண்ணாதீங்க சேகர், எந்த ஊரு திரையில இந்த படம் ஓடுது?
    லாஸ்ட் பெரால சொன்னாப்புல டவுன்லோட் பண்ணித்தான் பார்க்கனும்!!

    ReplyDelete
  11. நல்ல படம், நல்ல விமர்சனம். தோழர் கார்க்கி இதை மொக்கை என்று சொன்னார் என்பதற்காகவே போய் பார்த்தேன். நன்றாகவே இருந்தது.

    ReplyDelete
  12. அருமையான விமர்சனம் அண்ணா.
    சமயம் கிடைத்தால் இந்த தம்பியின் வலைப்பக்கதிற்கு வந்து செல்லவும்.
    நன்றி.
    http://dohatalkies.blogspot.com/2012/07/schindlers-list_1072.html

    ReplyDelete
  13. thanks jackie anna for writing this review

    ReplyDelete
  14. sir, i havent seen the film leelai , but from your writing i think this might be an adaptation of rock hudson , doris day comedy "pillow talk " http://en.wikipedia.org/wiki/Pillow_Talk_%28film%29
    very good story , and while you are at it try also "Lover come back" similar themed great movie .

    cheers

    ReplyDelete
  15. sir , from what u said bout "Leelai's story i think it is an adaptation of the film "Pillow Talk " rock hudson doris day rom com . a very good one indeed

    http://en.wikipedia.org/wiki/Pillow_Talk_%28film%29

    if u liked it please also try "lover come back" another similar themed film a very good one too .

    ReplyDelete
  16. நல்லா சொல்லியிருந்திங்க இந்த படத்தை பற்றி. அதன் நிறைகளை பற்றியும் ஆனால் இப்படத்தில் பாரிய குறை ஒன்று உள்ளதை நீங்கள் அவதானித்திருந்தீர்களோ இல்லை கணக்கில் எடுக்கவில்லையோ தெரியவில்லை. காமெடியன் சந்தானம் திருநங்கை சமூகத்தில் நல்ல நிலையில் இருப்பவர்களேயே (திருநங்கை ரோஸ்ஸை)கிண்டல் பண்ணியிருப்பார் இதற்காக தணிக்கை குழுவரை திருநங்கையர் சமூகம் போராட வேண்டியிருந்தது. இதை பற்றி நீங்கள் கருத்து தெரிவிக்காதது ஏனோ அண்ணா....

    ReplyDelete
  17. Hi Jackie, Really interesting review. I really enjoyed the movie its very NEAT & the song are excellent. I m expecting the review for the movie "Mundhinam Parthene"
    many of them may missed this movie too but really interesting and enjoyable movie like Leelai... If you can please post a review on that movie too. Thanks...

    ReplyDelete
  18. ஜாக்கி....

    சமீப கால புதுப்படங்களில் பாடல்கள் கேட்க சகிக்காத நிலையில் இந்த “லீலை” படத்தின் இந்த பாடலை கேட்டு / பார்த்து எனக்கு மிகவும் பிடித்து போனது.... நீங்களும் பாருங்களேன் நண்பர்களே, உங்களுக்கும் பிடிக்கும்....

    படம் : லீலை
    பாடல் : ஜில்லென்று ஒரு கலவரம்

    http://www.youtube.com/watch?v=3It4ATedwCQ&feature=share

    (கேட்டு பாருங்க.... அருமையான பாடல், லவ்லி ம்யூசிக்....)

    ReplyDelete
  19. அருமையான படம், தேட்டரில் இருமுறையும், திருட்டு டவுன்லோட் செய்து சிலமுறையும் பார்த்து ரசித்தேன் !!

    ReplyDelete
  20. அருமையான படம், தேட்டரில் இருமுறையும், திருட்டு டவுன்லோட் செய்து சிலமுறையும் பார்த்து ரசித்தேன் !!

    ReplyDelete
  21. லீலை படத்தை நானும் பாத்தேன். பிவீஆரில் நல்ல கூட்டம். படமும் மிக நேர்த்தியான படம். எல்லாருமே புதுமுகங்களானது படத்தின் வெற்றியைப் பாதித்து விட்டதோ! பாடல்களில் இன்னும் சற்று கவனம் செலுத்தியிருக்கலாம். ஆனால் மொத்தத்தில் அந்த சமயத்தில் வந்த படங்களை விட நல்ல படம் என்பது என் கருத்து.

    ReplyDelete
  22. i'll c firstdy first show.fantastic movie.songs are superb.melting love scenes.so,plz c the movie(lovers must).

    ReplyDelete
  23. Naan indha padathai paarkum podhu perisaa edhir paarkala, aana manasa sandhosha paduthuchi, very good movie, raathiri oru manikku paarthen, koncham kooda salippu yerpadala.

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner