வெயில் (சிறுகதை)


நான் யார்...? என்னை பற்றிய முழு விபரமும் உங்களுக்கு தேவையில்லாதது..
தினமும் பேருந்து, ரயில், வாகனம் என லட்சக்கணக்கான மக்கள் உங்களை கடந்து போகின்றார்கள்.. அவர்களிடம் எல்லாம் நீங்கள் யார்? என்ற   கேள்வியை கேட்கமுடியுமா? அது சாத்தியமா?- அது போல உங்களை கடந்து செல்லும் லடச்க்கணக்கான ஆட்களில் நானும் ஒருவன்   என்று வைத்துக்கொள்ளுங்கள்..

சென்னை போரூர் பக்கம் வீட்டை மாற்றிக்கொண்டு வந்து  சிலவருடங்கள் ஆகின்றது..பேங்க் மேட்டர்ல எனக்கு ஒரு பிரச்சனை.... வடபழனியில் இருந்த போது, கனரா பேங்கில் கணக்கு துவங்கினேன்.. இன்னமும்  அதே  பேங்கில்தான் என் கணக்கு  இருக்கின்றது...

வடபழனி கனரா  வங்கியில் வேலை  செய்யும் அத்தனை  பேருக்கும் கம்யூட்டர் எதிரே உட்கார்ந்து விட்டால் காதே கேட்காது... நாசாவில் வேலை செய்வதாக  நினைப்பு.. எந்தக்கேள்வியை  கேட்டாலும் காது கேட்காதவங்க போலவே இருப்பாங்க.. ச்சே பேசாமா போரூர் பிராஞ்சுக்கு மாத்திகிட்டு  போயிடுலாமா? என்று நினைத்தேன்... சரி அட்ரஸ் புரூப் எடுத்துகிட்டு வந்து கொடுத்தா அப்படியே மாத்திக்கலாம்ன்னு போருர் பிராஞ்சுல சொன்னாங்க..  அதுக்காகத்தான் இப்ப  பேங்குக்கு போயிகிட்டு இருக்கேன்.. இங்க இருக்கறவங்களுக்காவது காது கேட்குமா?  கேட்காதான்னு   தெரியலை...  என்று மனதில் நிறைய கேள்விகளுடன் வண்டியை போரூர்  சிக்னல்  பக்கம் ஓட்டினேன்.


  போரூர் சிக்னலில் காலை பதினோருமணியளவில்  நின்றுகொண்டு இருந்தேன்..  இரண்டு கார்களுக்கு முன்னால் ஒரு கருப்புகலர் மாருதி ஆம்னி அமரர் ஊர்தி நின்று கொண்டு இருந்தது.. சின்ன பையன்...... 14 வயசு இருக்கலாம்...முகத்தில் மஞ்சள் பூசி பொட்டு வைத்து இருந்தார்கள்.. அவன் முகத்தில் ஈக்கள் முய்த்துக்கொண்டு இருந்தன. மொய்த்த ஈயை பக்கத்து சீட்டிலே  உட்கார்ந்து இருந்த ஒரு  பெரியவர் ஈயை ஓட்டிக்கொண்டு இருந்தார்....

 நட்ட நடுவெயிலில்  இறந்து போன சிறுவனின் முகம் வெயிலில் காய்ந்து கொண்டு  இருந்தது.. நல்ல உயரம் என்பதால் , ஆம்னி மாருதி விட்டு தலை வெளியே  இருந்தது. வண்டியில் பின்பக்கம்   உட்கார்ந்து இருந்த பெரியவர் விடாமல் ஈ ஓட்டிக்கொண்டு இருந்தார்.. 

சின்ன பையன் என்பதால் தலையில் முடி கரு கரு என்று இருந்தது...மஞ்சள்மட்டும் முகத்தில் பூச வில்லை என்றால், இரண்டாம் ஆட்டம் சினிமா பார்த்து விட்டு தூங்கும் பையன் போல இருந்து இருப்பான்...

 முன் பக்கம் அவனின் அப்பா  கொள்ளி சட்டியோடு உட்கார்ந்து இருந்தார்..அவருடைய தாடையில் மற்றும் முகத்தில் வறுமையின் மேடு பள்ளங்கள் வியாபித்து இருந்தன...

ஆம்னி டிரைவர் கொள்ளி சட்டியில் இருந்து வந்த அதீத புகைகாரணமாக இரும்ப ஆரம்பித்தார்..கொள்ளி சட்டியை பதட்டத்துடன் மாருதிக்கு வெளியே தொங்க விட்டார் இளம்வயதில் மகனை பறிகொடுத்த தந்தை.... நெற்றியில்  விபூதி பூசி முகமெல்லாம் வேர்த்து  திட்டு திட்டாக காட்சி அளித்தார்.... முகத்தில் வெறுமை மட்டுமே இருந்தது சோகத்துக்கான எந்த சுவட்டினையும் அவர் முகம் பிரதிபலிக்கவில்லை......

ஒருவேளை நேற்று இரவு முழுவதும் அழுது புரண்டு இருப்பாரோ?? கண்களிலும் முகத்திலும் வெறுமையும் அசதியும் மட்டுமே இருந்தது..

 திரும்பி பார்த்தேன் யாராவது சொத்தக்காரர்கள் ஆட்டோவிலோ  அல்லது பைக்கிலே நிற்கின்றார்களோ என்று பார்த்தேன்.. அப்படி யாரும் இல்லை.. என்னிடம்  குடை  இருந்து இருந்தால் கூட அந்த ஈ ஓட்டும் பெரியவரிடத்தில் கொடுத்து அந்த பையனின் முகத்தில் வெயில் படாமல்  பிடிக்க சொல்லி  இருப்பேன்..

ஏன் யாருமே இல்லை... எல்லோரும் வாகனத்துக்கு முன்னே சென்று விட்டார்களா? ஒரு வேளை இடுகாட்டுக்கு வெயிலுக்கு பயந்து  முன்பே போய் விட்டார்களா? அப்படி என்ன  அவசரம்...? வெயிலில் கருத்து போய் விடுவார்களா என்ன??

ஒருவேளை யாருமே இல்லையோ...? இந்த இறுதிசடங்குக்குகூட கடன் உடன் வாங்கி வந்து இருப்பார்களோ? ஒரே ஒரு மாலை மட்டுமே இருக்கின்றது... அந்த பையனுக்கு   கிரிக்கெட் விளையாடும் நண்பர்கள் கூட இல்லையோ??

யாருமே இல்லை என்பதால் அந்த சிறுவனின் இறுதி சடங்குக்கு சென்று வரலாமா? என்று கூட நினைத்தேன்.. கண்டிப்பாக பேங்க் போயாக வேண்டும். இல்லையென்றால் ஒருநாள் இதுக்காக லீவ் போட வேண்டி இருக்கும்....  அந்த பக்கம் பார்வையை திரும்பினால் ஏகப்பட்ட கேள்விகள் ஏழுப்பி, இன்னும் மனம் சஞ்சலப்படும் என்பதால் அந்த பக்கம் பார்வை செலுத்துவதை தவிர்த்தேன்..அந்த சிறுவனின் ஆன்மா சாத்தியடைய மனதுக்குள் பிரார்த்தித்தேன்.... அஞ்சலி செலுத்தும் குணத்தையாவது சென்னை பெருநகரம் என்னிடம் விட்டுவைத்து இருக்கின்றதே என்று நினைத்துக்கொண்டேன்..

எல்லா வாகன ஓட்டிகளும் ஒரு சேர ஹாரன் அடித்து, வெயிலில் தூங்கும் அந்த பையனின் தூக்கத்தை கெடுப்பதில் குறியாக இருந்தார்கள்...அமரர் ஊர்தி அடித்து பிடித்து சிக்கனலை கடக்க  விரைந்தது....வாகனம் வேகமாக சென்றதால் ஈ ஓட்டுவதை அந்த பெரியவர் நிறுத்திக்கொண்டார்...

நான் மெதுவாக பேங்க்கு சென்றேன்.

சார் இன்னைக்கு சனிக்கிழமை 11.30 வரைதான் பேங்க்... இன்னைக்கு வந்தா என்ன பண்ணறது.? இரண்டு போட்டோ அட்ரஸ்புரூப் இருக்கா? இருக்குங்க... இந்தாங்க இந்த பார்மை பில்லப் பண்ணி கொடுத்துட்டு போங்க  என்றார்கள்..

 பார்ம் பில்லப் பண்ண பேனா எடுத்து எழுத எத்தனிக்க.. அந்த பையன் ஏப்படி இறந்து போனான்? என்ன பிரச்சனை அவனுக்கு இந்த இளம் வயதில்? என்ற கேள்வி திடும் என எழ..? நான் பார்ம் பில்லப் பண்ணாமல், பக்கத்தில் எழுதி அடித்து  போட்டு விட்டு போன செலான் பேப்பரில், கண்டதையும் பேனா மை  தீரும் வரை கிறுக்கிக்கொண்டு இருந்தேன்....
நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS... 

19 comments:

 1. finishing innum nalla irunthu irukkalam talaivare..

  ReplyDelete
 2. உணர்வுகளின் வெளிப்பாடுகளாய் அமைந்திருக்கிறது சிறுகதை.. முற்றிலும் படித்தேன்... ரசித்தேன்.. இறுதியில் ஏதோ சொல்ல முடியா துயரம் மனதில் படந்ததை உணர முடிந்ததை மறுப்பதற்கில்லை..

  ReplyDelete
 3. சென்னையின் எதார்த்த வாழ்க்கையை மிகவும் அழகாக எடுத்து கூறியதற்கு பாராட்டுக்கள். அரவிந்தன்.

  ReplyDelete
 4. பார்க்கும் ஒரு நிகழ்வை சிறப்பாக புனைந்தமைக்கு பாராட்டுக்கள்!

  ReplyDelete
 5. kathai mutinthu vitta thaa jacki anna.mutiyaatha maathiriyea oru feiilingku.

  ReplyDelete
 6. Nagarathil ( Narakathin )nagarvalangal
  Jacky awaiting the movie review...on your view
  I know your busy ..your works..Yazhini..Call from lot more friends...still
  AGUIRRE WRATH OF GOD.........I feel lucky if it reaches to all

  ReplyDelete
 7. Nagarathil ( Narakathin )nagarvalangal
  Jacky awaiting the movie review...on your view
  I know your busy ..your works..Yazhini..Call from lot more friends...still
  AGUIRRE WRATH OF GOD.........I feel lucky if it reaches to all

  ReplyDelete
 8. Yes, unknown answers for many umpteen questions in life! I believe that ultimately at the ripe age, one might feel just vacuum - I've seen such looks in very old persons absolutely ready to die any moment. Nothing matters at the end, perhaps. Mentally, they already left behind all perplexing questions about life like the ones you raised in this little story.

  ReplyDelete
 9. புகழ்ச்சிக்காக சொல்லவில்லை... நிஜமாகவே பாலகுமாரனின் சாயல் உங்கள் எழுத்துக்களில் ஒளிர்கிறது... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 10. புகழ்ச்சிக்காக சொல்லவில்லை... நிஜமாகவே பாலகுமாரனின் சாயல் உங்கள் எழுத்துக்களில் ஒளிர்கிறது... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 11. It is realy a heart tuching incident sir!

  ReplyDelete
 12. கதை நல்லா வந்திருக்கு ஜாக்கி

  ReplyDelete
 13. naan romba nattakkal kazhithu oru naala sirukathai athuvum naalla oru kathaiyennai padithen nantry

  ReplyDelete
 14. ’அஞ்சலி செலுத்தும் குணத்தையாவது சென்னைப் பெரு நகரம் என்னிடம் விட்டு வைத்திருக்கிறதே’.....
  மனதில் ஆழப் பதிந்துவிட்ட தொடர்.

  கதையும் மனதில் பதிந்துவிட்டது.

  பாராட்டுகள் நண்பரே.

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner