சத்தியம் தியேட்டர் ஃபியூல் கார்டு...(SATHYAM THEATER FUEL CARD)



 சத்தியம் சாந்தம் சுபம் இருக்கும் போது ஆறு ரூபாய் ஜம்பது காசு டிக்கெட்டுக்கு கால் கடுக்க நின்று இருக்கின்றேன்
சிந்துநதிப்பூ , ஹாட் ஷாட்ஸ், சிலிவர், போன்ற படங்களை எல்லாம் அப்போதுதான் பார்த்தேன்... 

அதிக  பட்சம் 30 ரூபாய்...  ஏசி இயங்கவில்லை என்றால் சிறு தொகை மைனசாகும் என்று அறிவிப்பு செய்து இருப்பார்கள்.. நான்  சொல்வது 1994களில்..

 அப்போதும் இப்போதும் சத்தியம் தியேட்டரில் படம் பார்ப்பது ரொம்ப  பிடித்த விஷயம்... அடுத்து எனக்கு சென்னையில் எனக்கு படம் பார்க்க ரொம்பவும் பிடித்த தியேட்டர் தேவி தியேட்டர்தான்... காரணம் அந்த தியேட்டடிரின் பெரிய ஸ்கீரின்...

ஆனால் சத்தியம் தியேட்டரின் சுத்தம் வேறு எங்கேயும் பார்க்க முடியாது அந்தஅளவுக்கு செம நீட்டாக வைத்து இருப்பார்கள்.. இது குறித்து சுஜாதா கூட எழுதி இருப்பார்.  பெரிய டிஸ்டர்ப் இல்லாமல் படம் பார்க்கலாம்.. எல்லோருக்கும் ஸ்கிரின் தெரியும்.... எவர் தலையும் மறைக்காது... சவுண்ட் சிஸ்டம் நல்லா இருக்கும் என்று பல காரணங்களை சொல்லிக்கொண்டு போகலாம்.

அதன் பிறகு திடிர் என்று பார்க்கிங் டுவீலருக்கு  10 ரூபாய் ஏற்றினார்கள்... கொடை காலங்ஙகளில் மவுன்ட்ரோட்டில் வியர்வையோடு பயணித்துக்கொண்டு இருக்கும் போது, மதிய மொட்டை வெயிலில் சட்டென   சத்தியம்  போய் ஏதாவது ஒரு  கிடைக்கும் படத்துக்கு  பத்து ருபாய் டிக்கெட் எடுத்து   உள்ளே போய் ஏசியில் உட்கார்ந்து விட்டு வந்து இருக்கின்றேன்..


வெயில் கொடுமைக்கு   சில மொக்கை படத்துக்கு தொடர்ந்து பத்து ரூபாய் டிக்கெட் எடுத்து போய்  எசியில் உட்கார்ந்து தூங்கி விட்டு வந்து இருக்கின்றேன்.

 அதன் பிறகு 120 டிக்கெட் ரேட் ஏற்றியதும்... அந்த வளாகத்தில் படம் பார்க்க போக ரொம்பவே யோசிக்க ஆரம்பித்தேன்...
( சத்தியத்தில் ஆறு ரூபாய் ஐம்பது காசு டிக்கெட்டுக்கு ஒரு மணிநேரத்துக்கு முன்னயே போய் கால் கடுக்க நின்ற  பழைய சத்தியம்)


120 ரூபாய் வாங்கினாலும் ஒன்னுக்கு போற இடத்துல கூட டிஸ்ப்ளே மானிட்டர் வச்ச ஒரே தியேட்டர் சத்தியம்தான்.. அதன் சுத்தம்.. அந்த தியேட்டரின்  அற்புதமான ஒளி ஒலி அமைப்பு  சான்சே இல்லை...

இன்னைக்கும் சந்தியம் தியேட்டர்ல படம் பார்க்கறது ஒரு தனி அனுபவத்தை கொடுப்பதை மறுக்க முடியாது..
 சரி மிக நல்ல படத்தை ஆர்டிஎக்சில் பார்க்க வேண்டும் என்பதற்க்காக பியூல் கார்டு அறிமுகபடுத்தியதுமே வாங்கி வைத்துக்கொண்டேன்...

சரி பியூல் கார்டு என்றால் என்ன?

300 ரூபாய் பணம் கட்டினால் 50ரூபாய் கார்டுக்கு பணம் எடுத்துகிட்டு 250 ருபாய்  பேலன்ஸ் தொகையோட ஒரு ஏடிஎம் கார்டு போல ஒரு கார்டை கொடுப்பாங்க...

 அந்த கார்டு எவ்வளவு பணம் வேண்டும் என்றாலும் போட்டு வச்சிக்கிட்டா.. அதன் மூலமா போன்லயோ அல்லது ஆன்  லைன் மூலமா டிக்கெட் புக் பண்ணிக்கலாம் நெரிசல் மிகுந்த கூட்டத்துல போய் முண்டி அடிக்க வேண்டாம்.. அதனால அந்த கார்டை எடுத்து  வச்சேன்.. 

வருடத்துக்கு ஒரு முறை அந்த கார்டு வேலிடிட்டி போயிடும்... வேலிடிட்டி டேட்டுக்கு முன்ன திரும்ப ஒரு 300 ரூபாய் மொய் வச்சி,  கார்டுக்கு 50 ரூபாய் எடுத்துக்குனு  மீதம் 250 ரூபாய் உங்க பழைய அக்கவுண்ட்ல ஆட் பண்ணி  புதுக்கார்டு  ஒன்னை கொடுப்பாங்க...

 என் காட்டு வேலிடிட்டி டேட்டுக்கு முன்ன போன போது, கார்டு தீர்ந்து போயிடுச்சி ஆர்டர் கொடுத்து இருக்கோம் இன்னும் வரவில்லை என்று சொன்னார்கள்.

 அதுக்கு பிறகு சத்தியம் பக்கம் போகவேயில்லை.. எல்லா படத்தையும் சைதை ராஜ் உள்ளகரம் குமரன்னு  கொஞ்சம் கம்மி விலையில், அதே அளவுக்கு கொஞ்சம் கம்மியா  தரம் இருக்கும் தியேட்டருக்கு போக ஆரம்பிச்சேன்...120 ரூபாய் ஒரு படத்துக்குன்னா.... மாசத்துக்கு  பத்து படம் பார்த்தா 1200 ரூபாய், பிளஸ் பார்க்கிங் டூவிலருக்கு 100 ரூபாய் மொத்தம்  1300 ரூபாய்... இதுக்கு  மாசத்துக்கு  இரண்டு  கேஸ் சிலின்டர் வாங்கலாம், நாலு வாரத்துக்கு காய்கறி வாங்கலாம்..

குடும்பஸ்தன் மயிரா மாறினதுக்கு அப்புறம் இப்படி எல்லாம் கணக்கு  போட்டு தொலைக்க வேண்டி இருக்கு என்ன செய்ய?? ...

 எங்க வீட்டம்மாஒரே சாய்ஸ் சத்தியம்தான்........ படத்துக்கு கூட்டிகிட்டு போறியா--? சத்தியத்துக்கு கூட்டிகிட்டு போ..

 ஒரே ஒரு படம் மாசத்துக்கா என்றாலும் சத்தியத்துக்கு  அழைச்சிகிட்டு போ என்பது அவரது தாரக மந்திரம்... அவர் உயரம் குறைவானவர் என்பதும் முன் சீட்டில் இருக்கும் எவர் தலையும் மறைக்காது என்ற காரணத்தால் இரண்டு பேரும் சேர்ந்து படத்துக்கு போனால் சத்தியம்தான்... 

காதலிக்கும்  காலத்திலும் சரி கல்யாணம்  முடிந்த பிறகும் சரி... எங்க வீட்டு அம்மாவின் ஒரே சாய்ஸ் சத்தியம்தான்... அதனாலே பியூல் கார்டு வாங்கினேன்...

21/06/2012 அன்று  சிக்ஸ் டிகிரியில் ஷாங்காய் படத்துக்கு போனேன்... சரி ரொம்ப நாளா பீயுல் கார்டு வேலிடிட்டி போய் இருக்கே அதை  ரீசார்ஜ் பண்ணி வைப்போமே.. என்று பியூல் கார்டு கவுண்டருக்கு போனேன்..

 கார்டை கொடுத்தேன்...



(நான் செலக்ட் பண்ணது பர்ஸ்ட் மஞ்சகலர் மாரியாத்தா.. மத்த எல்லா கலர்லயும் யூஸ் பண்ணி இருக்கேன்..)


கார்டை செக் பண்ணி விட்டு அந்த பெண்   சொன்னாள்...

மிஸ்டர் தனசேகரன் (ஜாக்கிசேகர்)

உங்க கார்டு எக்ஸ்பியரி ஆயிடுச்சி... ஜீரோ பேலன்ஸ் இருக்கு என்றாள்... 

எனக்கு  இதயமே வெடித்து விட்டது...

பட் புது கார்டு போட்டா அந்த பணம் இந்த  கார்டுக்கு வந்துடும் என்றாள்.. வழக்கம் போல 300 ரூபாய் மொய் வைத்தேன்...

  நான்கு வர்ணங்களில் எந்த கலர் கார்டு வேண்டும் ??என்று குறிப்பில் மஞ்ச கலர் மாரியாத்தா போல இருந்த ஒரு நிறத்தை தேர்வு செய்தேன்..

  சார்  அந்த கார்டு எல்லாம் இப்ப இல்லை... இந்த கார்டு  மட்டும்தான் அவய்லபிளா இருக்கு என்றார். ஒரு கருப்பு கலர் கார்ட்டை கொடுத்தார்... பழைய பேலன்ஸ் 720 ரூபாய் இருக்கின்றது.. அது இந்த அக்கவுண்டுக்கு  மாறிடும் என்றார்.

(அவர்களே கொடுத்த கார்டு)


வேற போன் நம்பர் இருக்கா என்றார்.. என் மனைவியின் எண் இருக்கின்றது என்று சொல்ல அந்த நம்பரை வாங்கி பதிவு  செய்தார்....

புதுகார்டில்  தற்போதைக்கு 250 ரூபாய் பேலன்ஸ் இருக்கின்றது.. மீதம் 720 ரூபாய் பத்து நாளில் உங்க அக்கவுண்டுக்கு மாறிடும் என்றார்.. அதுக்கு பின் அவர் சொன்ன தகவல்தான் எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது...

 அதாவது  இனி எந்த அப்டேட்டும் என் மனைவியின் செல்போன் எண்ணுக்கு போகும் என்றார்..

என்னங்க இது அநியாயமா இருக்கு....?? வெல்லம் தின்னறது ஒருத்தன் விரல் சூப்பரது இன்னோருத்தனா? என்றேன்.

ஏன் என் போன் நம்பருக்குவராது-?

 உங்க கார்டு வேலிடிட்டி முடிஞ்சி போச்சி..  ஒரு கார்டுக்கு ஒரு நம்பர்தான்.. அதனால உங்க  போன் நம்பரும் கேன்சல் ஆயிடுச்சி... என்றார்...

ஏங்க நான் எக்ஸ்பயரி டேட்டுக்கு முன்னயே வந்துட்டேன்... கார்டு ஸ்டாக் இல்லைன்னு திரும்பி அனுப்பிச்சிங்க. அதுக்கு நான் எப்படி பொறுப்பாகமுடியும்... இது என்ன கரண்ட் பில்லு  போல அவ்வளவு முக்கியமா? கார்டு எக்ஸ்பயிரி ஆயிடுச்சின்னா பியூசை புடுங்கிடுவாங்களேன்னு பயப்பட.. என்று சொன்னேன்...

சார் அந்த நம்பர் அவ்வளவுதான்.. என்றார்..

 ஏங்க திடிர்ன்னு டிக்கெட் புக் பண்ணா பாஸ் வேர்டு மறந்து போயிட்டா சட்டுன்னு என் மொபைலில் இருந்து எடுத்து டிக்கெட் புக் பண்ணுவேன்... இதுக்காக என் மனைவி போனை தேடி போவச்சொல்லறிங்களா?

 என் கள்ளக்காதலிகளை கூட்டிகிட்டு சினிமாவுக்கு வரனும்னு நினைக்கறேன்... நான் இரண்டு டிக்கெட் புக் பண்ணா, அது என் பொண்டாட்டி மொபைலுக்கு செய்தி போச்சின்னா என் நிலமை என்ன ஆகும் என்று  விளையாடுக்கு சொல்லி பார்த்தேன்.. அப்போதும் அந்த  பெண்  அசைந்துகொடுக்கவில்லை..

 ஏங்க டிக்கெட் புக் பண்ணா...புக்கிங் நம்பர் என் மொபைலுக்கும் வரும் நான் கவுண்ட்ர்ல என் மொபைலில் இருக்கும் நம்பரை  காமிச்சி டிக்கெட் வாங்கிக்குவேன்.. டிக்கெட் வாங்க  என் பொண்டாட்டி மொபைலை இதுக்குன்னு எடுத்துகிட்டு வரணுமா என்றேன்?


இது சரிவாராது.. என்று குரல் உயர்த்த அப்போதும் அந்த பெண் அவ்வளவுதான் இப்ப முடியாது இன்னும் ஒரு பத்து நாள் கழிச்சி வேணா மாத்தலாம் என்றார்... சிஸ்டம் ஸ்லோ என்று  சப்பை காரணம் எல்லாம் சொன்னார்..

சட்டென ஒரு பெண் புயலென நுழைந்தார் நான்    சொன்ன அத்தனை பிரக்டிகல் டிபிகல்ட்சையும் கேட்டுக்கொண்டு இருந்தார்..  நின்று கொண்டு இருந்த ஊழியரிடம் உதவி கேட்டு, கம்யூட்டரில் சில ரீசெட் செய்து என் மொபைலுக்கே அனைத்து செய்திகளும் வர போராடினார்...

 அந்த ஊழியர் கூட இப்போது முடியாது எப்படியும் ஒரு வாரம் ஆகும் என்று உதட்டை பிதுக்கினார்... சத்தியம்ல கார்டு  சரி பண்ண போரூரில் இருந்து ஒரு லிட்டர் பெட்ரோல் எல்லாம் போட்டுக்கொண்டு இங்கு வரமுடியாது  என்றேன்...

 அந்த பெண் தொடர்ந்து போராடி எனது மொபைலுக்கே எல்லாம் செய்திகளும் வருவது போல செய்து கொடுத்தார்..

அந்த  பெண்ணிடம் பெயர் என்ன என்று கேட்டேன்... முபினா என்றார்.... அந்த பையனின் பெயர் கேட்டேன்... விஜய் என்று சொன்னார்...

முபினா, விஜய்... உங்க ரெண்டு பேருக்கு எனது  நெஞ்சார்ந்த நன்றிகள் என்று சொன்னேன்.... நெஞ்சார்ந்த நன்றி என்று நான் நுனி நாக்கு ஆங்கிலத்தில் சொன்னது அவர்கள் இருவருக்கும் முதலில் புரியவில்லை...

 அதன் பிறகு  தமிழநாட்டின் தாய்  மொழியில் தேங் யூ சோ மச் யூவர் டைமிங்  ஹெல்ப் என்று சொன்னதும் இரண்டு பேரும் உதட்டை  பிரித்து   சிரித்தார்கள்...


(உடனே வரிந்து கட்டிக்கொண்டு வருபவர்களுக்கு, நானும் ஆங்கிலம் பேசுவேன் எழுத்தில் உபயோகப்படுத்துவேன்.. ஆனால் தமிழில் பேசினால் அதிர்ச்சி அடைய மாட்டேன்.)

இதை செய்ய முடியாது .. அவ்வளவுதான் ......என்று சொல்ல  உங்க  நிர்வாகம் உங்களுக்கு சம்பளம் கொடுக்கலை..

 சின்ன விஷயம் , சின்ன மெனக்கெடல் அதுக்காக முயற்சி எடுத்த முபினாவுக்கு தனிப்பட்ட முறையில் எனது நன்றிகள் என்று சொன்னேன்...

முடியவே முடியாது என்று சொன்ன பெண்ணின் முகத்தை திரும்ப பார்க்கவோ நன்றி  சொல்லவோ எனக்கு மனம் ஒப்பவில்லை..

சத்தியத்தில் வேலை செய்வதை... நாசாவில் வேலை செய்வதாக நினைத்துக்கொண்டால் நாம் எப்படி பொறுப்பாக முடியும்... நீங்களே சொல்லுங்க..--?



பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.





சிலவருடங்களுக்கு முன் சத்தியம் தியேட்டர் பற்றி எழுதிய பதிவு உங்களுக்காக.... இங்கே கிளிக்கவும்.






நினைப்பது அல்ல நீ 
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

13 comments:

  1. muthala.. 50 ethukku cardukku kodukkanum.? athuvum namma kasu avan kitta irukka solla?

    ReplyDelete
    Replies
    1. இதுக்கு தான் கேபிள் வேணும் .எங்க புடிச்சாரு பாருங்க ஜாக்கி

      Delete
    2. கேபிள் கமெண்டுக்கு லைக் போட முடியாதா? கார்டுக்கு என்னத்துக்கு 50 ருவா, அதும் வருசா வருசம் தண்டம் அழனும்? அவனவன் கார்ட்ல 500,1000னு லோட் பண்ணி, அதுல வர்ற காச டெபாசிட் செஞ்சி வட்டி வரைக்கும் எடுத்துப்பானுங்க..எனக்கு இது ரொம்ப அநியாயமா படுது..

      Delete
  2. Card renewal pannumbodhum service charge eduththukkaraanga...

    ReplyDelete
  3. பழைய சத்யம் தியேட்டர் முகப்பு படத்திற்கு அடுத்ததாக ஒரு தியேட்டரின் உட்புறம் இருக்கிறதே அதுவும் சத்யம் தியேட்டரா?

    2006-2007ல் நான் சென்னையில் இருந்தேன். அப்போது சத்யம் தியேட்டரின் முகப்பு மாற்றப்பட்டு ஹட்ச் போன் விளம்பரம்தான் பிரமாண்டமாய் ஆக்ரமித்திருந்தது.
    -----------------------------------------------

    நான் 1995 ஆண்டின் இறுதிப்பகுதியில் திரையரங்குகளில் பகுதி நேரமாக வேலை செய்து கொண்டு தாராளமாக படங்கள் பார்த்துக்கொண்டிருந்தேன். 1996,1997,1999,2000 ஆண்டுகளில் உள்ளூர் திரையரங்குகளில் புரொஜக்டரை இயக்கி தனியாக படங்களை திரையிட்டிருக்கிறேன். அந்த கால கட்டங்களில் நான் பணியாற்றிய இரண்டு திரையரங்குகளைத் தவிர மற்றவற்றில் படம் பார்க்கவே புடிக்காது. அப்படியே சென்றால் சோழா தியேட்டர்தான். அது ஒன்றில்தான் சவுண்ட் நன்றாக இருக்கும். நன்றாக என்றால் மிக அதிகமாக இருக்கும்.

    தொழில் நுட்ப வளர்ச்சியில் மேம்படுத்தப்பட்ட திரையரங்குகளில் படம் பார்க்கும் வாய்ப்பு இல்லாமலே போய் விட்டது. எல்லாவற்றிற்கும் டிக்கட் விலை தான் காரணம்.

    ReplyDelete
  4. ஒரு சினிமா தியேட்டருக்கு, எவ்வளவு தான் தரமாக இருந்தாலும், எளிதாக படம் பார்க்கும் வசதிக்கு வருடா வருடம் ஐம்பது ருபாய் சார்வீஸ் சார்ஜ் கொடுப்பதை ஒத்துக்கொள்ளவே முடியவில்லை!

    ReplyDelete
  5. இதுல இவ்ளோ விவகாரம் இருக்கா....இங்கயும் (பரூக் பீல்ட்ஸ் சத்யம் ) வாங்க சொன்னாங்க...நமக்கு அந்த அளவுக்கு விவரம் பத்தாது..அதனால் டிக்கட் கிடைக்கும் போது பார்த்துக்கலாம் என்று விட்டு விட்டேன்

    ReplyDelete
  6. Every body face the same Problem . .

    ReplyDelete
  7. Every body has the same problem . . .

    ReplyDelete
  8. romba nalla pathivu anna

    namakku ullagaram kumaran thaan pakkam madrasla irunthappo anga thaan povom

    ReplyDelete
  9. சில நேரங்களில் சில (தொல்லைகள்) மணிதர்கள் இறுதியில் சொன்ன நன்றியும் சொன்ன விதமும் நன்று.

    ReplyDelete
  10. கருத்துக்களை பகிர்ந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  11. superb nan ipo than fuel card vangalam nu irunthen... ana ungaluku yerpatta kastam vera yarukum yerpada kooodathu... kandipa ipo nan fuel card vanga maten... thanx nanba...........

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner