அலைகள் பாலா திருமணம். மதுரை.
போன மாசம் இதே நாளில் குடும்பத்தோட  மதுரையில் இருந்தேன்...25-05-2012
தம்பி அலைகள் பாலா திருமணம்.. 26-05-2012 மதுரையில செம்ம வெயிலுக்கு நடுவில் செமை ரெஸ்ட்....


 பல வருடங்களுக்கு முன் மதுரை அரவிந் கண் மருத்தவமணையில்  என் பெரியப்பா கண்  ஆப்பரேஷன் செஞ்சிகிட்ட போது, மதுரை போனதும் ஒரு நான்கு நாட்கள் மதுரையில் தங்கி இருந்து இருக்கேன்..  அதுக்கு அப்புறம் மதுரையில் தங்கி இருக்கும் அளவுக்கு  பெரிய வேலையோ நண்பர்கள் வட்டமோ அங்க இல்லை..


 ஏதாவது ஷுட்டுக்கு போனாக்கூட,  நைட்டு பஸ்  ஏறி காலையில் இறங்கி,  சின்ன பேட்டிகளை எடுத்துட்டு நைட்டு அதே பஸ்சில்  திரும்புவும் சென்னைக்கு வந்து விடுவோம்...

பொதுவா  பதிவுலகில் பழக்கமான  ஒருத்தரோட திருமணத்துக்கு குடும்பத்தோட போனது இதுதான் முதல் முறை..நானே பொதுவா  எல்லாருகிட்டயும் அதிகம் ஒட்டமாட்டேன்.. நானே போயி வலிய பேசி வழியவும் மாட்டேன்... அப்படியே நான் ஒட்டினாலும்  என் மனைவி அவர்களை  அங்கீகரிக்க வேண்டும்...  அதெல்லாம் பெரிய பிராசஸ்.

இரண்டு வருடங்களுக்கு முன் மதிய வேளையில் ஒரு நாள் ஒரு  போன் கால் வந்தது..

ஹலோ ஜாக்கிசேகர் அண்ணாவா?


ஆமாம்.. நான் ஜாக்கிசேகர்தான் பேசறேன்.. சொல்லுங்க...

நான் வேலூர்ல இருந்து அலைகள் பாலா பேசறேன்...

சொல்லுப்பா.

 எப்படிஅண்ணே இருக்கிங்க?

 நல்லா இருக்கேன் தம்பி..

உங்க பதிவு எல்லாம் படிச்சி இருக்கேன். ரொம்ப நல்லா இருக்கு... நானும்  அலைகள் பாலான்னு ஒரு பிளாக் எழுதி கிட்டு இருக்கேன்...

நல்லது...

 உங்க எல்லா பதிவுகளும் எனக்கு பிடிக்கும் மிக முக்கியமா உங்க போல்ட் நஸ் சான்சே இல்லை. எப்படின்னா இப்படி எல்லாம் எழுதறிங்க..? உங்களை எனக்கு ரொம்ப புடிக்கும்... சென்னைக்கு வந்தா நான் கண்டிப்பா  உங்களை வந்து பார்ப்பேன்... 

கண்டிப்பா வாடா என்று சொன்னேன். பேச்சு நீண்டுக்   கொண்டு சென்றது.  அவன் பேச ஆரம்பித்த நேரத்தில் இருந்து சிரித்துகொண்டே இருந்தான்.. அதுதான் அவன் சுபாவமா? எப்படி எல்லா  வாக்கியத்துக்கும்  சிரிக்க முடிகின்றது...? டேய் எப்படிடா சிரிச்சிகிட்டே பேசற?
அது அப்படிங்கதான்னா என்றான்.. அண்ணி நலமா? என்றுதும் the boy next door போல அவன் பேச்சு சட்டென்று மனதில் ஒட்டிக்கொண்டது.. கள்ளமில்லாமல்  அந்த பேச்சு மற்றும் சிரிப்பில்  ஒரு வசீகரம் இருந்தது...


சரி  சென்னைக்கு வந்தா  அவசியம் சத்திக்கலாம்...  சரி வேலூர்ல என்னடா பண்ணறே..? படிக்கிறியா?


 இல்லைன்னா நான் டாக்டர் இப்ப வேலூர் பிராக்ட்டிஸ் பண்ணிகிட்டு இருக்கேன் என்றான்... என்னது டாக்டரா?


ஒரு டாக்டர் என்றால் கொம்பு முளைத்து இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.. ஆனால்  சந்தானம் சொல்வது போல... பேச்சில் ஒரு திமிர்த்தனம் நிச்சயம் இருக்கும்.  அதை நிறைய பேரிடம் பார்த்தும் இருக்கின்றேன்....அப்படி எதுவும் அந்த பேச்சில் இல்லை.. பேச்சு முழுக்க சிரிப்பும்  மரியாதை மட்டுமே இருந்தது...


திரும்ப ஒரு மாதத்துக்கு பிறகு அடுத்த போன்..

அண்ணே நான் அலைகள் பாலா பேசறேன்...

சொல்லுப்பா நான்  சென்னைக்கு ஷிப்ட் ஆயிட்டேன்..  இன்னைக்கு பிரியா இருந்தா இன்னைக்கு உங்களை பார்க்கலாம் என்று இருக்கேன் என்றான்..

நீ எங்க இருக்கே..?

நான்  போரூர்ல இருக்கேன்..

ரொம்ப பக்கத்துலதான் இருக்கே... வீட்டுக்கு வா என்றேன்.

 ரொம்ப சின்ன  பையன் என்  எதிர்க்க வந்து நின்னு.. அண்ணே  நான்தான் அலைகள் பாலா என்றான்..... என்னது நீயா? சில நேரங்களில் இது  போல அதிர்சிகள் நடப்பது சகஜம்.

வீட்டுக்கு  அழைத்து   போனேன்.... நீண்ட நேரம் பேசினோம்.. அதன் பிறகு சில பதிவுகளை பாராட்டி இருக்கின்றான்..


மனைவி  மாசமாகி வாந்தி அடிக்கடி எடுத்து, அவள் உடல் பலகினமாகி விட்டது.. என்ன செய்வது ?நிறைய பயம் .. பெரியவர்கள் யாரும் இல்லை.. சட்டென பாலா நம்பரை அலுவலகத்தில் இருக்கும் என் மனைவிக்கு அனுப்பிவைத்து விட்டு, பாலாவுக்கும் தகவல் சொன்னேன்.

என் மனைவிக்கு போன் செய்தான்...என் மனைவி போன் எடுத்தும் அண்ணி என்ன பிரச்சனை என்று  ஆரம்பித்தான்...? அண்ணி என்று  எதிரே  வந்த குரலை கேட் மாத்திரத்தில், என் மனைவி டாக்டர் அதாவது என்று ஆரம்பிக்க.. அவன் அதுவந்துங்க அண்ணி என்று ஆரம்பிக்க  இப்படியாக அந்த  பேச்சு போனது.. இன்றும் எங்கள் இரண்டு பேரின் சந்திப்பையும்  சொல்லி  சொல்லி சிரிப்போம்.

அதன் பிறகு ஒரு புள்ளதாச்சி  பொம்பளைக்கு என்ன? என்ன? சந்தேகம் வருமோ அதையெல்லாம் போன் பண்ணி பயத்தோடு கேட்கும் போது ,அந்த பயத்தை பாலா போக்கி இருக்கான்.. ஸ்கேன் ரிபோர்ட்டை வீட்டுக்கு வந்து பார்த்துட்டு பயப்பட வேணாம்னு சொன்னான்.. முதல் தடவை அவனை பார்த்த என் மனைவிக்கு சுத்தமா அவனை டாக்டர்ன்னு ஏத்துக்க மனசே வரலை..காரணம் அந்த அளவுக்கு சின்ன பையன் தோற்றம்.....


அண்ணி அண்ணி என்று உயிரை விடுவான்.. பாலா.. அண்ணன் தண்ணி இப்ப எல்லாம் அதிகமா அடிக்கறாங்கடா என்பதில் இருந்து எனக்கு ஏதாவது உடல் சோர்வு என்றாலோ உடனே  அவனுக்கு போன் செய்து விடுவாள்...


 எத்தனை மணியாக இருந்தாலும் பதில் சொல்லி இருக்கின்றான்.... அதுதான் பாலா....

 என்னிடம் அவன் காதலை பற்றி சொல்லி இருந்தால் கூட, நான் அதிகமாக விசாரித்து இல்லை...ஆனால் என் மனைவியிடம் சொல்லி இருக்கின்றான்.. அவளோடு என் மனைவி பேசி இருக்கின்றாள்..அவர்கள் இருவரின் ஊடலை பல முறை தீர்த்து இருக்கின்றாள்...ஏதாவது அவர்களுக்குள் பிரச்சனை என்றால் முதலில் அண்ணியிடம் ஓடி வந்து சின்ன புள்ளை போல பாருங்க அண்ணி அவ இப்படி எல்லாம் பேசறா என்று கம்ளெயின்ட் கொடுப்பான்...


யாழினி பிறந்த போது பெங்களுருக்கு வந்து குழந்தையை பார்த்து விட்டு  உடைகள் கொடுத்து விட்டு குழந்தையை ஆசிர்வதித்தான்....

டேய் அண்ணன் முழு குடிகாரன் இல்லைன்னு உனக்கே தெரியும்... ஆனாலும் கை விரலை மடக்க சில நேரத்துல  வலிக்குது.. குடிக்காதன்னு சொல்லாம நீட்டா ஒரு அட்வைஸ்  சொல்லு என்றேன்... தண்ணி அடிச்சா அதுல சோடாவை மிக்ஸ் செய்யாதிங்க... நிறைய தண்ணி குடிங்க...திரும்புவும் சொல்லறேன்.. நிறைய தண்ணி குடிங்க என்றான்.. இப்போது தண்ணி நிறைய குடித்துக்கொண்டு இருக்கின்றேன்...


அது மட்டும் அல்ல.. மருத்துவஉதவிகள் எனக்கு மட்டும் அல்ல.. எனக்கு தெரிஞ்சி என் உறவுகளுக்கு எந்த அவசர பிரச்சனையா இருந்தாலும் சரி..  அவனிடம் ஒரு அட்வைஸ் கேட்டுக்குவேன்..இவ்வளவு ஏன்?  என்  நண்பரின் மனைவி மாசமாக இருந்தார். என் நண்பரின் மனைவி, என் கூடபொறந்த தங்கச்சியை விட என் மேல பாசத்தை  அப்படியே பொழிவா... எனக்கு நான்வெஜ் பிடிக்கும்னு..... மாமி சமையலே சாப்பிட்டு நாக்கு செத்து போய் இருக்கும்னு நான் வெஜ் அயிட்டம் எல்லாத்தையும் செஞ்சி இலையில பரப்புவா...

அவளுக்கு ஆறு மாசத்துல கர்பத்துல சிக்கல் குழந்தை இறந்துடுச்சி... அப்ப நண்பர் மருத்துவ உதவிள் மற்றும் அடுத்த கட்ட பிரச்சனைகளை குறித்து மருத்துவ ஆலோசனைகளை அவன்தான் வழங்கினான்...


அது மட்டும் அல்ல.... என் நண்பரின் மனைவி எனது உடன்பிறவா தங்கை மருத்துவமனையில் குழந்தை இறந்த சோகத்தோடு மனது முழுதும் நோவோடு இருக்கும் போது அவளை பார்க்க எனக்கு மனசே இல்லை...இருந்தாலும் நான் போய்  பார்த்தால் கொஞ்சம் தெம்பாக இருக்கும் என்று நான் கிளம்பும் போது... அண்ணே நானும் வரேன்.. என்று என்னோடு பாலா வந்தான்...அவன் வர வேண்டும் என்று அவசியம் இல்லை....ஆனாலும் வந்தான்.. அந்த அளவுக்கு மனிதர்களுக்கு மதிப்பு கொடுப்பவன்.


 என் நண்பரின் மனைவி கிழிந்த நாராய் மருத்துவமனையில் இருந்தவளை நான் பார்த்தேன்... ஏதும் பேசவில்லை...  கண்ணீர் பெருக்கெடுத்து ஒடுகின்றது... எனக்கு எவ்வளவுக்கு எவ்வளவு  கோபம் வருதோ அந்த அளவுக்கு நான் ரொம்ப சென்ட்டி... சட்ன்னு இளகி எனக்கு கண்ணு கலங்கிடுச்சி..  வெளிய  வந்து ஆதரவா அவன்தான் என்கிட்ட பேசினான்..


 அதன் பிறகு என் தங்கை போன் செய்த போது அண்ணே உங்களால எங்களுக்கு கிடைச்ச நல்ல நட்புன்னே  அந்த டாக்டர் தம்பி... என்று வாய் நிறைய நன்றி கூறி இருக்கின்றாள்...போனவாட்டி தீபாவளிக்கு என் பொண்டாட்டி அவள் தம்பிக்கு டிரஸ் எடுத்துட்டு இன்னோரு டிரஸ் எடுத்தா... எதுக்குடி  எக்ஸ்ட்ரா எடுக்கறே? என்றேன்.. 
பாலா பயலுக்கு என்று சொன்னாள்...

ஆனால் தீபாவளிக்கு அவனதுநெருங்கிய நண்பனோடு வீட்டுக்கு வந்து இருந்தான்...அவன் பெயர் ராஜேஷ்... அண்ணே இவனும் உங்க பிளாக்க ரெகுலரா படிக்கறான். உங்களை பார்க்கனும்னு சொன்னான்... அதான் கூட்டியாந்தேன்...


தீபாவிளி டிரஸ் பாலாவுக்கு மட்டும் கொடுக்க அவன் நெகிழ்ந்து போனான்... ராஜேஷுக்கு ஸ்வீட் தவிர வேறு ஏதுவும் கொடுக்க முடியவில்லை என்று  தர்மசங்கடமாகிவிட்டது. அடுத்து பல  சத்திப்புகளில் எனக்கு பாலா போலத்தான் ராஜேஷும் என்று பல சந்தர்ப்பங்களில் அவன் உணர வைத்தான்...


 என் மனைவி போன் செய்தால் கூட வேலை பளுகாரணமாக  போன் எடுக்க மறந்து போய் இருக்கின்றான்.. ஆனால் நான் போன் செய்தாள்.. அடுத்த நிமிடமே எந்த வேலை  எப்படி இருந்தாலும் போட்டது போட்ட படி போட்டு விட்டு எனக்கு போன்  செய்து விட்டுதான் மறுவேலை பார்ப்பான்.. அதில் எனக்கு நிறையவே கர்வம் என்பதை நான் ஒத்துக்கொள்ளவே வேண்டும்...


 நிச்சயதார்த்தம் பிக்ஸ் ஆனதில் இருந்து மண்டபம் வரை அவனது பிரச்சனைகள் என்று எல்லாத்தையும் என் மனைவியிடம்   பகிர்ந்து கொள்வான்..


108 ஆம்புலன்ஸ் சர்விஸ்ல கொஞ்சநாள் வேலை பார்த்தான்.. அதை பத்தி நிறைய சொல்லி இருக்கான்.. ஒரு பதிவே எழுதனும் நினைச்சி நேரமின்மை காரணமா விட்டு இருக்கேன். யாழினியை பெங்களுர்ல பார்க்க வந்துட்டு நானும் அவனும் சென்னைக்கு டிக்கெட் புக் பண்ணாம, ஓசூருக்கு வந்து,  சென்னை பஸ் அடிச்சி பிடிச்சி ஏறி, நைட்டு புல்லா பேசிக்கிட்டு ஜாலியா வந்ததை என்னைக்கும்  என்னால மறக்கவே முடியாது.பாலாவின் லட்சியம்... எலும்பு முறிவு குறித்து மேற்படிப்பு படித்து விட்டு தனது நண்பன் ராஜேஷோடு தமிழகம் முழுவதும் வாசன் ஐகேர்  போல எலும்பு முறிவுக்கான  சிகிச்சையை குறைந்த  செலவில் அளிப்பதுதான்... குடும்பத்துல யாராவது ஒருவருக்கு....இன்னைக்கு ஒரு மைனர் ஆப்பரேஷன்னா அதுல ஒரு குடும்பத்தோடு மொத்த சேமிப்பும் கரைஞ்சி போயிடுது... அதை குறைக்கனும் என்பதுதான் பாலாவின் லட்சியம்.


மதுரையில் எனக்கு கல்யாணம்னான்.. ஒரு 5 நாள் லீவு போட்டு விட்டு அண்ணியும் நீங்களும் வந்தா.. அப்படியே கல்யணாம் முடிஞ்சிட்டு நேரா  கொடைக்கானல்  போயிட்டு வரலாம் என்று  சொன்னான்... டேய் தோனி தொலங்கி இப்பதான் வேலைக்கு  போக ஆரம்பிச்சி இருக்கேன்.. இப்ப போய் அவ்வளவுநாள் லீவு  போட்டா.. வீட்டுக்கு  அனுப்பிச்சிடுவாங்க என்றேன்... கல்யாணத்துக்கு அவசியம் வந்துடனும் நான் சொல்லமாட்டேன்..  அது உங்க கடமைன்னு சொன்னான்..


25 ஆம் தேதி இவன் கல்யாணம் 30 ஆம் தேதி பதிவர் கார்த்திகை பாண்டியன் கல்யணாம்..  இரண்டு கல்யாணத்துக்கு  போகனும்.... ஆனா நாங்க ரெண்டு பேரும் போனா பாலாவுக்கும் அவன் கட்டிக்கபேறவளுக்கும், ரொம்ப சப்போர்ட்டா இருக்கும்  என்பதால் பாலா கல்யாணத்துக்கு போக முடிவு எடுத்தேன்..வெகு நாட்களுக்கு பிறகு டிபிக்கல் மதுரை கல்யாணத்தை கண்டு களித்தோம்.  டிபிக்கல் மதுரையையும்தான்.. அது அடுத்த பதிவில்...அலைகள் பாலா பதிவுகளை வாசிக்க... இங்கே கிளிக்கவும்..
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.
நினைப்பது அல்ல நீ


நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

13 comments:

 1. பகிர்வுகள்...அருமை...

  ReplyDelete
 2. எனக்கு ஒரு மருத்துவ உதவி தேவைப்பட்ட போதும் இவர் எண் கொடுத்து தான் பேசச்சொன்னீங்க... நிறைய தகவல்களையும் அடுத்து என்ன செய்யவேண்டும் என்பதையும் பொறுமையாக நம்பிக்கையாக சொன்னார்....

  ReplyDelete
 3. சங்கவி இது குறித்து எழுதலாம் என்று நினைத்து மறந்து விட்டேன்... குறிப்பிட்டமைக்கு மிக்க நன்றி.

  ReplyDelete
 4. அருமையான, நெகிழ்ச்சியான பதிவு ஜாக்கி

  ReplyDelete
 5. மிக நெகிழ்ச்சியான பதிவு ஜாக்கி..

  ReplyDelete
 6. அருமை. இப்படியும் கூட உறவுகள் கிடைக்குமா என ஆச்சரியமாய் இருக்கு

  பாலாவுக்கு திருமண வாழ்த்துகள். அவர் நல்ல மனம் போல, நீடூழி வாழ வாழ்த்துகிறேன் !

  ReplyDelete
 7. Mr. Jackie you have proved that you can write a blog in tamil without using your favourite KETTA VARTHAI

  ReplyDelete
 8. இந்த விஷயத்தில் நீங்க நிச்சயம் பணக்காரன் தான் !!!

  ReplyDelete
 9. இந்த விஷயத்தில் நீங்க நிச்சயம் பணக்காரன் தான் !!!

  ReplyDelete
 10. பாலாவுக்கு திருமண வாழ்த்துகள். அவர் நல்ல மனம் போல, நீடூழி வாழ வாழ்த்துகிறேன் !

  ReplyDelete
 11. \* பாலாவுக்கு திருமண வாழ்த்துகள். அவர் நல்ல மனம் போல, நீடூழி வாழ வாழ்த்துகிறேன் !*\

  அருமையான நெகிழ்ச்சியான பதிவு Sekar Sir

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner