Safe House-2012-சேப் ஹவுஸ்/ஹாலிவுட் சினிமா விமர்சனம்




  என்ன தான் நாம சின்சியரா நம்ம நாட்டுக்காக உழைச்சாலும்  உனக்கு மேல இருக்கற அதிகாரிங்க சரியில்லைன்னாலோ
? அல்லது உன்னை ஆளும் அரசியல்வாதி சரியில்லாட்டாலும் , நீ சின்சியரா உழைக்கறதே வேஸ்ட்.. இது எல்லா நாட்டுக்கு மட்டுமல்ல எல்லாத்துறைக்கும் பொருந்தும்..


 படத்தோடு விமர்சனத்தை படிக்கறதுக்கு முன்ன Safe House  அப்படின்னா என்னன்னு பார்த்துடுவோம்..


 அமெரிக்காவில இருந்து சிஐஏக்காரனுங்க  நம்ம  கோடம்பாக்கத்துல  வந்து ஒரு தீவிரவாதியை கைது செய்யறாங்கன்னு வச்சிக்குவோம்... அடுத்த பிளைட்டு பிடிச்சி அமெரிக்காவுக்கு அவனை கூட்டிகிட்டு போய் விசாரிக்கறதுக்குள்ள அவனை வேலை தீர்த்துடுவானங்க..


 அதுக்காக லீராயல் மெரிடின்ல ரூம் போட்டு  interrogation ஐ ஆரம்பிக்க  முடியாது... உதைக்கும் போது உயிர் போர வலி வந்து கத்தின ஓட்டல்காரன் அடுத்த நிமிஷம் அறையை காலி  செய்ய சொல்லிடுவான்...


அதுக்காகவே இந்த சிஐஏக்கார பசங்க எல்லா நாட்டுலேயும் ஊருக்கு ஒதுக்குபுறமா ஒரு வீட்டை ரெடி பண்ணி அதுல ஒரு ஆளையும் போட்டு வச்சி இருக்கானுங்க.. அவனுங்களுக்கு வேலையே, பிடிச்ச ஆளுங்களை கூட்டிகிட்டு வந்து உதைக்கு போது ஹெல்ப் பண்ணறதுதான்..  

மத்த நேரத்துல  சும்மா செவனேன்னு மோட்டுவாளையை  பார்த்துகிட்டு உட்கார்ந்து கிட்டு இருக்க வேண்டியதுதான்..

சோ இப்ப சேப் அவுஸ் அப்படின்னா என்னன்னு  தெரிஞ்சிடுச்சி இல்ல இப்ப கதைக்கு போவோம்..

==
Safe House (2012 film) படத்தின் ஒன்லைன்..
சின்சியரா தன் நாட்டுக்கு உழைக்கும் நபர்கள் எப்படி உரு தெரியாமல் லஞ்சம் வாங்கும் அதிகாரிகளால் அழிக்கப்படுகின்றார்கள் என்பதுதான்  சேப் ஹவுஸ் படத்தின்  ஒன்லைன்
 ==========
Safe House (2012 film) படத்தின் கதை என்ன??

Denzel Washington (Tobin Frost) ஒரு முன்னாள் சிஐஏ அதிகாரி, டென்சில் மேல இருக்கும் குற்றச்சாட்டு என்னவென்றால் சிஐஏவின் ரகசிய ஆதாரங்கள் இருக்கும் பைலை வேற்று நாட்டுக்கு விற்று காசாக்க  இருக்கின்றார் அதனால் அவரை கொலை செய்து பைலை  எடுத்துக்கொள்ளவேண்டும் என்று   சிஐஏ ஆட்களும், வேறு ஒரு குழுவும் துரத்துகின்றன.. 

துரத்தலில் ஒரு கட்டத்தில் சிஐஏவிடம் மாட்டிக்கொள்ள சேப்  ஹவுசுக்கு டென்சில்லை அழைத்து வருகின்றார்கள்.. அங்கே ஹவுஸ் கீப்பராக இருக்கும்  Ryan Reynolds (Matt Weston) டென்சில்லிடம்   அதிகாரிகள்  interrogation ன் செய்யும் போது உதவி செய்கின்றான்..

 ஆனால் அதற்குள் வேறு ஒரு குழு டென்சில்லை கொலை செய்து பைலை மீட்க வர ஓட்டம் ஆரம்பமாகின்றது...டென்சில் மீது சுமத்தப்பட்ட பழியை அவர் துடைத்தாரா? Ryan Reynolds  போன்ற உண்மையாக சிஐஏவுக்காக நாட்டுக்காகவும் உழைக்கும் நபர்களின் கதி என்ன என்பதை வெண்திரையில் காணுங்கள்.
===========
படத்தின் சுவாரஸ்யங்கள்..


 ரொம்ப நாள் கழித்து ஒரு பரபரப்பான ஆக்ஷன் தமாக்கா பிலிமை பார்த்த்தில் பெருமகிழ்ச்சி..
 நடிகர் டென்சில்வாஷிங்டனின்  கள்ளமில்லா வெள்ளை  சிரிப்புக்கு  நான் ரசிகன். மனிதர் இந்த படத்தில் ரொம்ப கேஷுவலாக மிரட்டி இருக்கின்றார்..


 சேப் ஹவுசில்  interrogation நடத்தும் போது என்ன கேள்வி கேட்டாலும் அசராமல் இருப்பது சான்சே இல்லை..


அது என்ன தண்ணி மாதிரி ஒரு  விஷயத்தை துண்டுல நனைச்சி  டென்சில் முகத்துல போடறது என்ன சமாச்சாரம்னு தெரியலை தெரிஞ்சவங்க நம்ம  கிட்ட சொல்லுங்கப்பு நானும்  தெரிஞ்சிக்கிறேன்.


டென்சில் எஸ்கேப்ஆகறது அவனை புடிக்க Ryan ஓடுவது நல்ல சேசிங்.. முக்கியம ரெண்டு பேரையும் ஒரு கும்பல் துரத்தும் போது அந்த சேசிங் சான்சே இல்லை..
Ryan லவ் டிராக் ரசிக்கும் படியா எடுத்து இருக்காங்க...


படத்துல கேமராமேன் Oliver Wood அசத்தி இருக்கார்... முக்கியமா நிறைய எக்ஸ்ட்ரீம் குளோசப் மற்றும் சப்ஜக்ட்டை ஆப்ஜக்ட் டிஸ்டர்ப் செய்யறது போல ஷாட் வச்சி இருக்கறதால  நாமும்  லைவ்வா  அந்த சேசிங்கில் பயணிப்பது போன்ற உணர்வை கொடுக்கின்றது..

சண்டைகாட்சிகளை முக்கிய  சொல்லனும் தற்காப்பு  சண்டையா இருக்கட்டு கார் சேசிங்கா இருக்கட்டும் சும்மா  மெரட்டி இருக்கானுங்க..

===========
படத்தின் டிரைலர்..


===========

படக்குகுழுவினர் விபரம்.

Directed by Daniel Espinosa
Produced by Scott Stuber
Written by David Guggenheim
Starring Denzel Washington
Ryan Reynolds
Vera Farmiga
Brendan Gleeson
Music by Ramin Djawadi
Cinematography Oliver Wood
Editing by Rick Pearson
Studio Relativity Media
Stuber Productions
Distributed by Universal Pictures
Release date(s)
February 10, 2012[1]
Running time 117 minutes
Country United States ‹See Tfd› South Africa
Language English
Budget $85 million[2]
Box office $202,482,728





பைனல் கிக்

ரொம்ப நாளுக்கு அப்புறம் பரபரப்பான  ஒரு   கிரைம் திரில்லர் திரைப்படத்தை பார்த்தேன்.. இந்த படம் பார்க்கவேண்டிய படம்.. இந்த படம்  பாரிஸ் மூவிஸ் நவ் டிவிடிகடையில்  கிடைக்கின்றது..





நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

12 comments:

  1. டென்சலுக்காகவே இப்படத்தை பார்க்க காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  2. பாத்துடுவோம் . . .

    ReplyDelete
  3. Thanks Jackie. I loved this movie very much.

    ReplyDelete
  4. "அது என்ன தண்ணி மாதிரி ஒரு விஷயத்தை துண்டுல நனைச்சி டென்சில் முகத்துல போடறது என்ன சமாச்சாரம்னு தெரியலை தெரிஞ்சவங்க நம்ம கிட்ட சொல்லுங்கப்பு நானும் தெரிஞ்சிக்கிறேன"

    It is a form of torture known as waterboarding in which water is poured over the face of an immobilized captive, thus causing the individual to experience the sensation of drowning. Waterboarding can cause extreme pain, dry drowning, damage to lungs, brain damage from oxygen deprivation, other physical injuries including broken bones due to struggling against restraints, lasting psychological damage and death.[1] Adverse physical consequences can manifest themselves months after the event, while psychological effects can last for years.[2] The term water board torture appears in press reports as early as 1976. Although a variety of specific techniques are used in waterboarding, the captive's face is usually covered with cloth or some other thin material, and the subject is immobilized on his/her back. Water is then poured onto the face over the breathing passages, causing an almost immediate gag reflex and creating the sensation that the captive is drowning. (Source:Wikipedia)

    ReplyDelete
    Replies
    1. hi advocate r u a criminal lawyer ? or interrogation expert?

      Delete
  5. "அது என்ன தண்ணி மாதிரி ஒரு விஷயத்தை துண்டுல நனைச்சி டென்சில் முகத்துல போடறது என்ன சமாச்சாரம்னு தெரியலை தெரிஞ்சவங்க நம்ம கிட்ட சொல்லுங்கப்பு நானும் தெரிஞ்சிக்கிறேன்"

    It is a form of torture known as "WATERBOARDING" in which water is poured over the face of an immobilized captive, thus causing the individual to experience the sensation of drowning. Waterboarding can cause extreme pain, dry drowning, damage to lungs, brain damage from oxygen deprivation, other physical injuries including broken bones due to struggling against restraints, lasting psychological damage and death.[1] Adverse physical consequences can manifest themselves months after the event, while psychological effects can last for years.[2] The term water board torture appears in press reports as early as 1976.[3]
    Although a variety of specific techniques are used in waterboarding, the captive's face is usually covered with cloth or some other thin material, and the subject is immobilized on his/her back. Water is then poured onto the face over the breathing passages, causing an almost immediate gag reflex and creating the sensation that the captive is drowning. (source:wikipedia.com)

    ReplyDelete
  6. அவர்கள் டென்ஷலை சித்தரவதை செய்யும் முறையின் பெயர் : waterboarding. CIA technique!


    http://en.wikipedia.org/wiki/Waterboarding

    ReplyDelete
  7. Denzel Washington is an excellent method actor and he usually picks movies with good story line. Thanks for the review.

    ReplyDelete
  8. அட்வகேட் சுரேஷ் விளக்கத்துக்கு மிக்க நன்றி...

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner