உப்புக்காத்து...14



 சாதாரண மனிதர்கள் அசாதாரண வாழ்க்கைக்கு எப்படி மாறி விடுகின்றார்கள் என்பதை இந்த  உப்புக்காத்து பகுதியில் பகிர்ந்துகொள்கின்றேன்..


தன்னலமற்ற உழைப்பு எப்போதுமே ஒரு மனிதனுக்கு நல்ல இடத்தை பெற்றுக்கொடுக்கும்... அதே போல யாருக்காக  உழைக்கின்றோம் எதற்காக உழைக்கின்றோம் என்பதையும் நாம் மனதில்லை  வைத்தக்கொண்டு உழைக்க வேண்டும்..

செங்கல் சூளையில் அடிமை வாழ்க்கை வாழ்ந்து கொண்டு நான் கடினமாக உழைக்கின்றேன் என்ற உழைப்பது விழலுக்கு  இரைத்த நீர்தான்.. அதனால்தான் சொல்லுகின்றேன்.. எங்கே  உழைக்க வேண்டும் யாருக்காக உழைக்கின்றோம் என்பதை உறுதி செய்துக்கொள்ள வேண்டும்.

 சில இடங்களில் நல்ல அதிகாரிகள், நல்ல  நிர்வாகிகள் இருப்பார்கள், நல்ல தலைமை இருக்கும் அது போலான  இடங்களில் வேலை செய்யும் போது  நம் கடினமான உழைப்பை நிச்சயம் கொடுக்கலாம்.. என்றாவது ஒரு நாள் அங்கீகரிக்கப்படுவீர்கள்

ஆனால்  ஒன்று எந்த இடத்தில் வேலை  செய்தாலும், எந்தவேலையை  செய்தாலும் உங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை ரசித்து செய்யுங்கள். நிறைய பேர் மிக சுத்தமாக, உண்மையாக  மாடு போல வேலை செய்து கொண்டு இருப்பார்கள்.

 ஆனால் கடைசி வரை அவர்களுக்கு பதவி உயர்வு என்பது கிடைக்கவே கிடைக்காது காரணம் அதிஷ்டமின்மை.... என்னதான் உண்மையா வெறித்தனமா உழைச்சாலும் அதிஷ்ட்டம் கொஞ்சம்  நிச்சயம் வேண்டும். அப்படி அதிஷ்டமும் துணை கொண்டு முன்னேறிய நபரை பற்றி இப்போது பார்க்கலாம்.


 அவர் என் நண்பரின் நண்பர்.... அவர் சென்னையில் பல கிளைகள்  கொண்ட கார் சர்விஸ் சென்டர் ஒன்றில் ஒர்க்ஷாப் மேனேஜர் ஆக இருக்கின்றார்..
ஞாயிறு  அன்று அவரை பார்க்க  வீட்டுக்கு போய் இருந்தேன்.. ஞாயிறு அன்றும் அவர் ஆபிசுக்கு சென்று இருப்பதாக  சொல்ல.. திரும்ப அவர்  வேலை செய்யும் சர்விஸ் சென்டருக்கு  சென்றேன்.


 கேஷுவல் உடையில் ஒர்க்ஷாப்பில் வேலை  செய்து கொண்டு இருக்கும் வேலையாட்களிடம் பேசிக்கொண்டும், கட்டளைகளை இட்டுக்கொண்டும் இருந்தார்..
 என்னச சார்  ஞாயிற்றுக்கிழமை  கூட ஆபிசுக்கு வந்து களப்பணி ஆற்றுகின்றீர்கள் என்று நக்கலாக நான்  சிரித்து வைத்தேன்...

 சம்பளம் கொடுக்கறாங்க.. நான் எதிர்பார்க்கத பொசிஷனை எனக்கு கொடுத்து இருக்காங்க..  வீடும் பக்கத்துலதான் இருக்கு..  வீட்டுல இருக்கற வேலையை  எல்லாம் முடிச்சிட்டேன்...  சும்மா இருந்தேன்.. அப்படியே ஒர்கர்சை உற்சாக்கபடுத்தினா போலவும் இருக்கும் ஞாயிற்றுக்கிழமையானாலும் ஒர்க்ஷாப்புக்கு வருவருன்ற பயமும் இருக்கும் என்றார்...


  கிரீஸ் கையோடு பயணித்துக்கொண்டு இருந்த பையனை பார்த்து விட்டு இவனை போல இந்த ஆபிஸ்ல ஒரு சாதாரண லேபரா  பதினைஞ்சு வருஷத்துக்கு முன்ன துவங்கினேன்...
வேலையில ரொம்ப கவனமா இருப்பேன்.... ரப்பகலா வேலை செஞ்சி இருக்கேன்.. 


பொருட்களை  எடுத்த இடத்தில் வைப்பேன்... எத்னை மணிக்கு வேலை முடிஞ்சாலும் நாளைக்கு வந்து எடுத்து  வச்சிக்கலாம்னு போட்டது போட்டபடி என்னைக்கும் நான் கிளம்பனது இல்லை.. நாளைக்கு வந்து இந்த வேலையை செய்யறதுக்கு, இன்னைக்கே இந்த வேலையை செஞ்சிடலாம்னு  நீட்டை எல்லா பொருளையும் எடுத்து  வச்சிட்டுதான் கிளம்பவேன்....


வண்டிவிடும் கஸ்டமர்களிடம் அவ்வளவு மரியாதையா நடந்துக்குவேன்...  எந்த நேரத்துல போன் பண்ணி  வண்டி பிரேக் டவுன் ஆச்சின்ன்னாலும், என்ன  பிரச்சனைன்னு பார்த்து அதை தீர்க்க முயற்சி  செய்வேன்.. இல்லை அங்க பக்கத்துல என்ன விதமான உதவி கிடைக்கும் அப்படின்னு சொல்லி  பல கஸ்டமர்களுக்கு  உதவி இருக்கேன்..


இன்னைக்காவது எங்க காருக்கு  இந்தியாவுல தெருவுக்கு தெரு சர்விஸ் சென்டர் வந்துடுச்சி ஆனா அப்ப ரொம்ப கம்பி...  இந்தியர்கள் ஸ்கூட்டரை விட்டு விட்டு காருக்கு மாறிக்கொண்டு இருந்த நேரம்..  கார் வாங்கன யாருக்கும் அது பற்றிய பேசிக் நாலேட்ஜ் கிடையாது... போன் வந்து கிட்டே இருக்கும் நானும்   சலிக்காம பதில் சொல்லி இருக்கேன் சந்தேகத்தை தீர்த்து  வச்சி இருக்கேன்.


கார் சர்விஸ் முடிஞ்சி வண்டிஎடுத்துகிட்டு போற எல்லா கஸ்டமர்கிட்டயும் என் செல்நம்பரை கொடுத்துருவேன்.. எநத நேரத்துலேயும் போன் பண்ணுங்கன்னு சொல்லுவேன்...
கார்ல ஏதாவது பார்ட்ஸ் மாத்தி இருந்தா நானே இரண்டு நாளைக்கு அப்புறம் கஸ்டமருக்கு  போன் செய்து கார் டிரபிள் இல்லாம போகுதான்னு கேட்பேன்.... நாம செஞ்ச வேலை சரியா இருக்கான்னு செக் பண்ணிக்கறது ஒரு விஷயம் அது போல கஸ்டமர் சதோஷமா இருக்கரான்னு தெரிஞ்சக்கவும் நான் போன் செய்யறது உண்டு.. சரி எதாவது பிரச்சனைன்னு சொன்னா வண்டியை எடுத்துகிட்டு வரச்சொல்லி உடனே  சரி பண்ணி அனுப்பி இருக்கேன்....
எங்க கம்பெனி ஜி எம்மெல்லாம்  ஆறு மாசத்துக்கு ஒரு வாட்டி வருவாங்க.. அவுங்க கூட எல்லாம் பேச எனக்கு பயமா இருக்கும்...


 பட் என் சின்சியரான வேலையை பார்த்து விட்டு என்னை ஒர்க்ஷாப் மெயின்டென்ஸ் ஹெட்டா போட்டாங்க... என் வேலை ரவுண்ட த கிளாக்கா  ஓடிகிட்டு இருந்துச்சி..
ஏர்செல் நம்பர் வச்சிக்கிட்டு இருந்த எங்க நம்பர் எல்லாம் ஏர்டெல் நம்பருக்கு  எங்க கம்பனியில்  மாத்தினாங்க.. அப்பதான் அதிஷ்ட்ட தேவதை எனக்கு கதவை தட்டினா..


 நம்பர் மாறிடுச்சி... கஸ்டமர் டேட்டா  எடுத்து   எல்லா கஸ்டமரோட போனுக்கு போன் பண்ணி   ஆபிஸ்ல காண்டாக்ட் நம்பர்   மாறிடுச்சின்னு சொல்ல  சொன்னப்போ.. முக்கால்வாசி கஸ்டமருங்க்கிட்ட ஆபிஸ் காண்டாக்ட்  நம்பர்  என் நம்பரா இருந்திச்சி…
இரண்டு வாரம் கழிச்சி எங்க  ஜோன் ஜி எம் வந்தார்… நான் வேலை  செஞ்கிட்டு இருக்கேன்.. திடிர்னு  ஒர்க்ஷாப்பே அமைதியாயடுச்சி நான் திரும்பி பார்க்கிறேன் அவரு நிக்கறாரு எனக்கு பக்குன்னு  ஆயிடுச்சி…


கைய கால கழுவிக்கிட்டு வர சொன்னார்… வேலை பாக்கி இருக்குன்னு தயக்கமா சொன்னேன்.. பராவாயில்லை அதை மத்தவங்க பார்த்துக்குவாங்க..


 நீ கிளம்பி வரேன்னு சொல்லிட்டு போயிட்டார்.. நான் ரூமுக்கு போனேன்..25 ஆயிரம் ரூபா கேஷா எடுத்து கொடுத்தார்… உனக்கு பத்து நாள் லீவு… பொண்டாட்டி புள்ளையோடு சந்தோஷமா ஊட்டி கொடைக்கானல்னு ஜாலியா ஊர் சுத்திட்டு வா… உனக்கு கார் லோனுக்கு ஏற்ப்பாடு பண்ணி இருக்கேன்..  நம்ம கம்பெனி  கார் எடுத்துக்கோ.. ஊர் சுத்திட்டு வா… பத்து நாளைக்கு அப்புறம் இங்க வேலைக்கு வராதே…


 புறநகர் பகுதியில் ஒரு புது  கார் சர்விஸ் சென்டர்  தொறக்கறோம் இல்லை அதுல நீதான் ஒர்க்ஷாப் மேனேஜர்….
ஏசி ரூம் மடிப்பு கலையாத சட்டை, இன்பண்ணிய பேன்ட், கருப்பு ஷு என்று கலக்கலாக் இருக்கின்றார்..



இன்றும்  பிரச்சனை செய்யும் காரின் மென்னியை பிடித்து திருகி, கையில் கிரிஸ்கரையோடு பரபரப்பாக இருப்பதை பார்க்கும் போது… சிலர் செய்யும் உண்மையான உழைப்புக்கு அதிஷ்டதேவைதையின் துணையோடு ஒரு நல்ல நிலைமைக்கு வருபவர்களை பார்க்கும் போது மனது  சந்தோஷம் கொள்கின்றது…..


 உப்புக்காத்து இன்னும் பிசு  பிசுக்கும்………

பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்



நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

27 comments:

  1. உப்பு காத்து 14 தானே வரணும் ?

    ReplyDelete
  2. உழைப்பின் அருமையை பதிவாக்கிய உங்களுக்கு நன்றி..me the first..

    ReplyDelete
  3. Hard work and commitment in work will pay for it today if not tomorrow.

    ReplyDelete
  4. Inspiring post.
    Kudos to that person for his commitment and customer focus.

    ReplyDelete
  5. Very Inspiring.. Kudos to him..
    என்றும் அன்புடன்
    பாஸ்டன் ஸ்ரீராம்

    ReplyDelete
  6. Today i awake and called my TL told am leave because i felt my work not motivated. But after read this am going to office

    Hard work and commitment in work will pay for it today if not tomorrow.

    ReplyDelete
  7. It will be helpful to me who is going to take a first step in the working field after doing my B.tech....

    ReplyDelete
  8. It will be helpful to me who is going to take a first step in my carrier after completing my B.Tech....

    ReplyDelete
  9. Jackie, Very Inspiring!!! Thanks for sharing your friend story..

    ReplyDelete
  10. Jackie, Very inspiring one..thanks for sharing your friend story..

    ReplyDelete
  11. //உப்புக்காத்து இன்னும் பிசு பிசுக்கும்//

    இதுதான் சரியில்லைன்னு நினைக்கிறேன்..மற்றபடி குட் ரை அப்..

    ReplyDelete
  12. Excellent - Thanks for sharing such true stories.

    ReplyDelete
  13. He has been walking the extra mile..Passion towards what one does, backed with devotion and sincerity will definitely get noticed.Thanks for the inspiring post..

    ReplyDelete
  14. பழைய பாலகுமாரனின் ஒரு அத்தியாயமோ-யென்று நினைக்க தோன்றியது.

    கடமையை செய்! பலனை எதிர்பாராதே!! - இது பகவத்கீதை.

    ஆனால் சற்றே பிராக்டிகலாக... நான் எனக்குள் சொல்வது -"கடமையை செய்; பலனை எதிர்பாராதே அங்கெயே கிடைக்குமென்று!" உண்மையான உழைப்பின் பலன், உழைத்தயிடத்தில் கிடைக்காவிட்டாலும் வேறெரிடத்தில் கண்டிப்பாக கிடைத்தேதீரும். (உடனே, இந்த நிலத்தில் உழுதுட்டு, பக்கத்து நிலத்தில் நாற்று நட்டாலுமா? என்று கேட்ககூடாது ஆமாம்.:-)! ஒருவேளை கிடைக்கக்கூடும்- என்னெமாதிரி ஒரு பொருமையில்லாதவன் ஏற்கனவே உழுதுட்டுபோயிருந்தா...)

    ReplyDelete
    Replies
    1. Yuva,

      I 100 percent agree with you, but it is hard for everybody to believe...

      Happy to see you quoted about "Bala" he write almost all the books to convey this.

      Regards,
      Suresh Durairajan

      Delete
  15. jackie...super post boss...first class

    ReplyDelete
  16. Super.. 100% உண்மையான உழைப்பு 100% உயர்வைத் தரும்

    ReplyDelete
  17. Today i awake and called my TL told am leave because i felt my work not motivated. But after read this am going to office

    Hard work and commitment in work will pay for it today if not tomorrow.//

    நான் எழுதிய போஸ்ட்டின் வெற்றி... இதுதான்...

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner