Prometheus/2012/பிரமோத்தியஸ்/ ஏமாற்றம் அளித்த ஏலியன்கள்
 எந்த பொறம் போக்கு என்று தெரியவில்லை...
.இயக்குனர் Ridley Scott  போதையில் இருக்கும் போது, எத்தனையோ பேரு காப்பியடிச்சி... நீங்க எடுத்த ஏலியன் படத்தை எடுத்து இருக்கானுங்க.. ஆனா உங்க பினிஷிங்.. உங்க மேக்கிங், எந்த பு...........  மேக்கிங்கிலும் இல்லை என்று   நாற வாயை  திறந்து இருக்க வேண்டும்...


 அண்ணே ஒரு  நிமிஷம்  அந்த பில்லின் த பிளாங்கில் என்ன  சொன்னிங்க...?? எந்த புதிய ஏலியன்   மேக்கிங்லும் இல்லை என்று நாற வாயை திறந்து இருக்க வேண்டும்.. என்று சொன்னேன்...


ஓகே ஓகே நீங்க கண்டினியு பண்ணுங்க...

Ridley Scott யோசித்து இருக்கலாம்... நம்மால் முடியமா? திரும்பவும் மொதல்ல இருந்தேவா? ஏலியன்சை வச்சி பிரிடியேட்டர் கூட எல்லாம் சண்டை போட வச்சி கிழி கிழி ன்னு கால மாஸ்டர் சொல்வது போல கிழிச்சி தொங்க விட்டுடானுங்களே.. 

நாம திரும்பவும் இந்த ஸ்கிரிப்ட்டை  கையில் எடுக்கலாமா? என்று  இஷ்ட தெய்வத்தை வேண்டிக்கொண்டாவது அந்த ஸ் கிரிப்ட்டை கையில் எடுத்து இருக்க வேண்டும்... வீதி  யாரை விட்டது..?????

சரி அவன்தான்   அல்லக்கை என்று தெரியும் அல்லவா? அப்புறம்  எதுக்கும் அவன் பேச்சை  அவ்வளவு சீரியாசாக Ridley Scott எடுத்துக்கொள்ள வேண்டும்? என்று எனக்கு தெரியவில்லை... இந்த மனுஷனுக்காவது சுதி மதி வேண்டாம்... அட விடுய்யா சொல் புத்தியாவது வேண்டும் அல்லது சுய புத்தியாவது வேண்டும்...


மில்லியன் கணக்குல பணம் புழங்கற ஏரியா மட்டும் இல்லை... பேர வேற காப்பாத்திக்கனும் அல்லவா? ஆனா Ridley Scott  இந்த படத்துல செமையா  சருக்கி இருக்கார்.


 கிளிடியேட்டர் என்ற வரலாற்று காவியத்தை படைத்தை கைகளினால் இன்று  Prometheus என்ற கோடு விழுந்த ரெக்கார்ட் டைப் படத்தை எடுத்து இருக்கின்றார்...

==============
Prometheus படத்தின் ஒன்லைன்

நம்மை யாரு   படைச்சி இருப்பாங்க? என்ற மனித குலத்தின்  தேடல்தான் இந்த படத்தின் ஒன்லைன்..

============

Prometheus படத்தின் கதை என்ன?

2089 இல் ஒரு விண்கலம் சில  திறமையான சயின்டிஸ்டுகளை  பூமியில் இருந்து எற்றிக்கொண்டு நம்மை படைத்தவர்கள் யார்? அவர்கள் எலியன்களா?

அப்படி என்றால் அவர்களை படைத்தவர்கள் யார் என்று Prometheus என்ற விண்கலத்தில் பயணித்து ஒரு கிரகத்தை  அடைகின்றார்கள். 

அங்க என்ன நடக்குது? நம்மை வடிவமைத்தவர்களை கண்டு பிடித்தாகளா? இல்லையா? என்பதை  பொறுமை இருந்தால் வெண் திரையில்  பாத்துக்கொள்ளுங்கள்...
==============
படத்தின் சுவாரஸ்யமான காட்சிகள். என்ன சுவாரஸ்யத்தை சொல்லறதுன்னு  எனக்கு தெரியலை...

இந்த ஆங்கில படத்தை  ஹாலிவுட் படங்களை தொடர்ந்து பார்க்கும்  யார் பார்த்தாலும் அடுத்த சீனை சொல்லி விடலாம்.. அப்படி கிளிஷே தனமான காட்சிகள்  படம் நெடுகிலும் உண்டு...

Ridley Scott என்ற பெயருக்காக போய் இரண்டு மணி நேரத்தை வீணாக்கி விட்டேன். அதுவும் படம்  ரிலிஸ் ஆன  நைட்டே  நானே போய் ஆப்பில் தேடி போய் உட்கார்ந்து  விட்டேன்.

 ஒரே ஒரு உதாரணம் மட்டும் சொல்லிட்டு நான் அப்படியே எஸ் ஆயிக்கிறேன்..


வாய்ல உட்டு ஆட்டறதுன்னு ஹாலிவுட்காரன்களுக்கு ரொம்ப பிரியம் போல.... தொடர்ந்து எல்லா ஏலியன் படத்துலேயும் இருக்கும்  எல்லா ஏலியன் பூச்சியும் மனுஷங்க வாயில உட்டு ஆட்டி தண்ணிவர...ச்சே படம் பார்க்கற நம்ம கண்ணுல தண்ணி வர வச்சிடுறானுங்க...

===============
Prometheus டிரைலர்.


=============
படக்குழுவினர் விபரம்.
Directed by Ridley Scott
Produced by
Ridley Scott
David Giler
Walter Hill
Written by Jon Spaihts
Damon Lindelof
Starring
Noomi Rapace
Michael Fassbender
Guy Pearce
Idris Elba
Logan Marshall-Green
Charlize Theron
Music by Marc Streitenfeld
Cinematography Dariusz Wolski
Editing by Pietro Scalia
Studio Scott Free Productions
Brandywine Productions
Distributed by 20th Century Fox


============

பைன்ல்கிக்
இந்த படம் டைம்பாஸ் படம்.. 


=========
நினைப்பது அல்ல நீ

நிரூபிப்பதே நீ.....

EVER YOURS..

 

2 comments:

  1. ரெண்டு நாளுக்கு முன்னாடி இத எழுதி இருக்காலம். :(

    ReplyDelete
  2. எனக்கு நேரம் கிடைக்கும் போதுதாளே நான் எழுத முடியும்.. நண்பரே..:-)))))))

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner