ஆய் வந்து விட்டால் டிச்சரிடம் சொல்லி விட்டு பள்ளிக்கு வெளியே போய் ஆய் இருக்க வேண்டும் என்று எனக்கு
தெரியாது..
பள்ளியிலும் பள்ளிக்கு வெளியேயும் டாய்லட் என்று
ஒன்று இருக்கவேயில்லை… பள்ளியில் இருந்து அரைகிலோமீட்டர் நடந்தால் ஒரு குட்டை
வரும் அந்த குட்டையின் கரையில் ஆய் போய் விட்டு
கால் கழுவிக்கொண்டு வீட்டுக்கு போக வேண்டும் …
ஆனால் ஒன்றாம் வகுப்பு படிக்கும் போது
எல்லாம் ஆய் வந்து விட்டால் என்ன செய்வது என்று தெரியாமல் டிச்சரிடம் சொல்ல பயந்து கொண்டு
டிரவுசரிலேயே போய் விடுவேன்… அப்படியே அவமானம் பிடிங்கி தின்ன அழுதுக்கொண்டே வீட்டுக்கு
போய் இருக்கின்றேன்..
மற்ற பசங்க போல குட்டை கிட்ட போய் ஆய்
போயிட்டு கழுவிக்கிட்டு வரக்ககூட துப்பில்லாத ஒரு பிள்ளையை
பெத்து வச்சிருக்கிறேறேனேன்-னு எங்க ஆத்தா என்னை போட்டு சாத்து சாத்துன்னு சாத்துவா…. அந்த அளவுக்கு மக்கு பிள்ளை நான்…
வாலுத்தனமும் அதிகம் என்பதால் நான்உதை
வாங்காத நாளே இல்லைன்.னு சொல்லலாம்.. சட்டு சட்டுன்னு எங்க அப்பா போட்டு அடிப்பார்…ஒரு
சைக்கிள்காரன் என்னை இடிச்சி என் பல் உடைஞ்சி குடம் குடமா ரத்தம் கொட்டுது அப்ப கூட என்னை போட்டு உதைச்சி தள்ளி இருக்கார்….
ஓத்தா என்னை புடிக்கலைன்னு சாவடிச்சவது
போட்டு தொலை .. எதுக்குடா என்னை போட்டு இப்படி டெய்லி டெய்லி அடிச்சி துவைக்கறே என்று நான் நினைக்காத நாளே இல்லை.
நான் உதை வாங்கினதிலேயே ரொம்பப கொடுமையான விஷயம் சம்பபவத்தை பத்தி இப்ப சொல்லறேன்…
ஆய் வந்தா பள்ளிக்கு பக்கத்துல இருக்கற குட்டைக்கு வந்து ஆய் போயிட்டு
காலக்கழுவிக்குனு வரனும்னு … அம்மா ஒரு நாள்
பள்ளிக்ககூடத்துக்கு வந்து என்ன அழைச்சிகிட்டு
போய் குட்டையை எல்லாம் காட்டி விட்டு போனா….
ஒரு வாரத்துலேயே அதுக்கு நேரமும் வந்துச்சி… ஆய் வந்து தொலைஞ்சிது நானும் அந்த குட்டைக்கு போனேன்…. டவுசரை போட்டுகிடே
ஆய் போற தொழில்நுட்பம் நான் அப்ப கத்துக்கலை… டவுசரை கழட்டி கக்கத்துல
வச்சிகிட்டு போறதுதான் எனக்கு தெரியும்…
அஞ்சாப்புக்கு மேலதான் டவுசரை முட்டி வரை இறக்கிவிட்டு
கிட்டு ஆய் போறதை கத்துக்கிட்டேன்.
டவுசரை பூண்டு செடி மேல வச்சிட்டு பக்கத்துல
இருக்கற சின்ன சின்ன கல்லை எடுத்து எதிரில்
இருக்கும் காணி கல்லில் அடித்துக்கொண்டு நேரத்தை கடத்திக்கிட்டு இருந்தேன்.. டவுன் லோட் பக்காவா முடிஞ்சிடுத்துன்னு கன்பார்ம்
ஆனதுக்கு அப்புறம், குட்டைக்கு கால் கழுவ போனேன்.. டவுசரை எடுத்துக்கிட்டு போய் கால் கழுவும் போது குட்டையில் டவுசர் விழுந்துட்டா..?
அதுக்கும் உதை வாங்கி தொலைக்குனுமேன்னு டவுசரை பூண்டு செடி மேல வச்சிட்டு குட்டைக்கு போய் கால் கழுவிட்டு வந்து டவுசரை எடுக்க வந்தா
என் டவசரை அந்த பொறம் போக்கோ எடுத்துகிட்டு
போயிடுச்சி… சத்தியசோதனைன்-னு நினைச்சாலும்.. எங்க அப்பன் மூஞ்சியும் என் ஆத்தா மூஞ்சியும்
குளோஸ்ல வந்து போச்சி
ஸ்கூல்ல இருந்து இரண்டு கிலோ மீட்டர் தூரம் வெறும் சட்டை மற்றும் பள்ளிக்கூட
பைய மாட்டிகிட்டு நிர்வாண நடை நடந்து வீட்டுக்கு வந்தேன்.. எங்க அம்மா இரண்டாவது தெருவுல மஞ்சள் நீர் பங்ஷனுக்கு போய் இருந்தாங்க.. அதனால
முதல் அட்டாக்ல இருந்து தப்பிச்ச்சிட்டேன்… நாவம்மான்னு எங்க அப்பாவோட சித்தி இருந்தாங்க..
டிரவுசரை தொலைச்சிட்டேன்னு அழுதுகிட்டே
சொன்னேன்.. இப்படி உங்க குழந்தை அம்மனமா எதிர்க்க
நின்னு அழுதுகிட்டு சொன்னா நீங்க என்ன செய்விங்க..?? ஒரு டவுசரை மாட்டி விட்டு எங்க தொலைச்சேன்னு கேட்போம் இல்லையா? எங்க பாட்டி என்ன
செஞ்சா தெரியுமா? அப்படியே என்னை தர தரன்னு நிர்வாணமா அழைச்சிக்கிட்டு டவுசரை கண்டு பிடிக்க என்னை அழைச்சிகிட்டு போனா…. ஒரு வேளை அப்படி அழைச்சிகிட்டு போனாதான் டவுசர் கிடைக்கும்னு எங்க ஆயாவோட சிற்றவுக்கு எட்டி இருக்கு பாருங்க..
ஸ்கூல்ல இருந்து வரும் போது என் மானத்தை பள்ளிக்கூட பொஸ்தக பை காப்பத்துச்சி...ஆனா வீட்டுக்கு வந்து திரும்ப போகும் போது... என் மானத்தை காப்பத்திக்க எதுவும் எனக்கு கை கொடுக்கலை..
சாயந்திரம் ஐந்தரைக்கு என் ஆயாவுடன்
நடத்திய தேடுதல் வேட்டை இரவு எட்டுமணிக்கு முடிவுக்கு வந்தது.. அதுவரை நான் நிர்வாணமாக
நடந்து சலித்து போய் விட்டேன் வீட்டுக்கு- வந்தேன்.. அம்மாவுக்கு மட்டும் அல்ல எங்கள் ஊருக்கே என் டவுசர் தொலைச்ச விஷயம்
தெரிஞ்சி போயிடுச்சி.. எல்லாம் என் ஆயா கைங்கர்யம்..
(முதுகில் துணி துவைத்த என் அப்பாவும் என் எதிர்காலம் குறித்து அதிகம் கவலைப்பட்ட என் அம்மாவும்...)
என் அம்மா எனக்கு தெரவுசு சுத்தமா இல்லைன்னு வருத்தப்பட்டாங்க…. எங்க அப்பா நைட்டு பத்து மணிக்கு மேல வந்த காரணத்தால்
உதை மற்றும் திட்டுல இருந்து தப்பிச்சிட்டேன்…
மறுநாள் காலையில செக்க மாத்து… எங்க அப்பா துணி துவைச்சிக்கிட்டு இருந்தார்…
துணி கல்லுல போட்டு பெரிய பெட்ஷிட்டை போட்டு துவைச்சி கிட்டு இருந்தார்.. பக்கத்துல நான் குளிச்சிகிட்டு இருந்தேன்.. அப்படியே அந்த
பெட்ஷிட்டை என் முதுவுல போட்டு அடிச்சி துவைக்க ஆரம்பிச்சிட்டார்… குளிக்கற தண்ணியோட என் அழுகை தண்ணியும் அடிச்சிகிட்டு போச்சி…
இரண்டு நாள் நரக வேதனைதான்.. மூன்றாம் நாள் வேற கிளாஸ்ல
படிக்கற ஒரு பால்க்கார பையன் என் டிரவுசரை போட்டுக்கிட்டு வந்தான்…
என் அம்மா கிட்டயும் என் அப்பா கிட்டயும் வந்து சொன்னேன்… என் அப்பா டிரவுசர் பில்லை காட்டி அந்த
டிரசரை வாங்கி எடுத்து வந்து என் மூஞ்சி எரிஞ்சார்… அதுக்கு அப்பறம் அந்த டிரவுசரை நான் போடவே இல்லை…
எனக்கு நினைவு தெரிஞ்ச நாளில் இருந்து
என் அப்பா மடியில் நான் உட்கார்ந்து விளையாடினதாவோ
எந்த ஒரு சம்பவமும் என் நினைவு அடுக்குகளில் இல்லவே இல்லை..
நானும் என் அப்பாவும் சேர்ந்து பார்த்த ஒரே படம்... தூறல் நின்னு போச்சிதான்...
சொன்னா ரொம்ப காமெடியா இருக்கும்… சில வருடங்ளுக்கு முன்ன எங்க அப்பாவுக்கு ஸ்பைனல்
கார்டுல ஒரு ஆப்ரேஷன் செய்ய ஆப்ரேஷன் தியேட்டருக்கு அழைச்சிகிட்டு போகும் போது எங்க
அப்பா நெத்தியில நான்தான் கிஸ் பண்ணேன்…. அவரு
இதுவரைக்கும் என்னை எதுக்கும் பாராட்டியதும் இல்லை தட்டிக்கொடுத்ததும் இல்லை… இது மட்டும்
இல்லாம எனக்கு அவர் செஞ்சி கொடுத்த வாக்கை மீறினார்…. இவ்வளவு எல்லாம் செஞ்சி என்னை என்ன
கிழிச்சிட்டே என்று என்னை கேட்ட போதுதான் கோவத்தில் அவரை கையை நீட்டிட்டேன்…
பட் இப்ப முன்னை போல அவர் என்னை அதிகம் நக்கல் விடுறதில்லை.. பையன் சென்னைல
சொந்தமா வீடு வாங்கிட்டான்… என்று எல்லோரிடமும் பெருமையாக சொல்லி வருகின்றார்…
இப்பக்கூட என் அப்பாகிட்ட யாழினியை அழைச்சி போய் காட்டிட்டு ஒருநாள் புல்லா என் வீட்டுல இருந்துட்டு வந்தேன்…
சென்னை வீட்டுக்கு நிறைய வாட்டி கூப்பிட்டு விட்டேன்.. ஆனா அவரு வரும் போது வரேன்னு சொல்லறார்.. அவருக்காகதான் கிரவுண்ட் புளோர்ல வீடு வாங்கினேன்..
கம்பீரமா சுத்தின மனுஷன் எட்டு வருஷாமா
வீட்டை விட்டு எங்கேயும் போகலை..ஒரே ஒரு கட்டிலில் தன் வாழ்க்கையை எட்டு வருஷம் கொடுமையான
விஷயம்… தானே புயல் கடலூரை உலுக்கிய போது அப்பாவை
கார் வச்சிகிட்டு அழைச்சி போய் புயல் பாதித்த இடங்களை காட்டினேன்…இப்ப அவருகிட்ட சரிக்கு
சரியா பேசறது இல்லை….
சில பசங்களை பெற்றோர் பார்த்துக்கறதை எல்லாம் பார்க்கும் போது நான் ரொம்பவே ஏங்கி போய் இருக்கேன்....
இந்த உலகத்துல எனக்கு பிடிக்காத ஒரு நபர் யாருன்னு கேட்டா.. எங்க அப்பான்னு சொல்லுவேன்.. ஆனாலும் இந்த உலகத்துல நான் நடமாட காரணமா இருந்தவர் அவர்தான்...
ஆரண்யகாண்டம் படத்துல ஒரு டயலாக் வரும்…
உங்க அப்பான்னா உனக்கு ரொம்ப புடிக்குமா? புடிக்காது…. ஆனாலும் அவரு எங்க அப்பான்னு அந்த பையன் சொல்லுவானே… அதுதான் என் நிலைமையும்.. அப்பா நீ என்னை கொஞ்சமாவது தட்டி கொடுத்து இருந்தா… நல்லா இருந்து இருக்கும்……
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.
ஜாக்கிசேகர்.
EVER YOURS...
//
ReplyDeleteஎன் டவசரை அந்த பொறம் போக்கோ எடுத்துகிட்டு போயிடுச்சி… சத்தியசோதனைன்-னு நினைச்சாலும்
//
Nice one...
JAKIE BOSS,,,, KAN KALANGA PADITHEN....
ReplyDeleteJAKIE BOSS,,,, KAN KALANGA PADITHEN....
ReplyDeleteMr. Jackie
ReplyDeleteNot only your father but most of the fathers were like that only in those days. They did not know how to show their atachments towards their children and that does not mean they hate us. In fact, they were very strict in our early days so that we can be comfortable and devoid of any vices at a later stage. Your father looks very nice in the photo and I can see a sort of divinity in his face.
Silaperuku Appa ippadi vaicha, silaperuku Ammavum iddaipol irukathan Cheigirargal, Jacki Sir.
ReplyDeleteKavalai vidugal.
Sundar Raj.G
கலங்க வச்சிட்டீங்க ஜாக்கி . ..
ReplyDeleteTouching Jackie
ReplyDeleteIam very near to ur flat
Will meet u when I c u there
Ur writing is superb
I seen Dhansekar
Touching Jackie
ReplyDeleteIam very near to ur flat
Seen te name Dhansekar at the flat name board
So many times I seen u there but today got confirmed
Will meet u when I c u there
Ur blogs are always emotional than sensational
Superb
Happy fathers day
Dear ஜாக்கி, தாங்கள் எழுதிய இந்த பதிவு எனது கடந்த கால நினைவுகளை எழுப்பிற்று, உங்களைப்பொலத்த்தான் நானும் நிறைய பட்டிருக்கின்றேன். ஆனால் நாம் நம் பிள்ளைகளுக்கு நல்ல தகப்பனாக இருக்கவேண்டும். நன்றி.
ReplyDeleteசகலமும் தாமதமாக புரிந்து கொள்ளும் விசயத்தில் அப்பாவின் பொறுப்பும் அவஸ்தைகளும் ஒன்று .அதை ஒரு அப்பாவாக ஆகும்போது உணர முடிந்தது .நீங்கள் மிக அழகாக உணர்ந்ததை அழகாக சொல்லிவிட்டீர்கள்
ReplyDeleteJackie as already said our father's are those day. They don't know how to express their feelings.But what your wife said is true but not to the older persons. Their environment was totally different those days and only few fathers are attached to their kids those days. And also I feel as you again and again saying that your father has cheated you and you have beaten him-- this doesn't look good at all. This will hurt your father again and again. More than asking "forgive me daddy" you please atleast dont publish it again.
ReplyDeleteEven my dad also like that, but what to do they are our fathers definitely they would have done these only because of our benefit. Also did you ask why did your father did like that? Go and ask him - you will know the other side of your father.
Thanks
I strongly second ur view gobs.
DeleteI strongly second ur view gobs
Deleteநன்றி நண்பர்களே.... புரிதலுக்கும் பிரியத்துக்கும்.. பசங்களை மிரட்டினால்தான் ஆண்மை என்று அப்போது நினைத்துக்கொண்டு இருந்த காலக்கட்டம் என்று எனக்கும் புரிகின்றது.. நிறைய பேர் பாதிக்கப்பட்டு இருப்பதை போனிலும் பின்னுட்டத்திலும் தெரிவிக்கையில் என்னால் புரிந்து கொள்ள முடிகின்றது.
ReplyDeleteபிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.
I am one of the victim but my father shows his love always but he beating and scolding like anything.. we can not forget those words in my life.. he might not know the pain of those words. so I forgot his love but remember those painful words.
ReplyDeleteOn those days culture was mother have to take care kids Fathers have to earn so fathers not know how to speak with kids.Mothers always show fathers like villan .Mother told always father would beat for our mistakes.So we grew with a fear about our fathers and not attach with fathers even nowadays.In our mental we always kept in a distance to father.
ReplyDeleteOn our stage of father we 1st take a decision that we not like our father to our children and nowadays kids also know how to deal with father and mother
Jackie anyway u try to close with your father from now b'coz they living end of their life
The true hit...Jackie returns...The real real life story of all village students, Still have the village school's without toilet,Still the teachers are using neighborhood house- Touched, Thanks u
ReplyDeleteஅருமை ஜாக்கி..சத்தியசோதனை செம டைமிங்..நான்கூட கடேசில அப்பாவ சிலாகிப்பீங்கன்னு நினைச்சேன். ஆனா மங்காத்தா அஜித் மாதிரி கடைசி வரைக்கும் அவர் கேரக்டர மாத்தல..:)
ReplyDelete