உங்களை
பார்க்கும் போதே ரெஸ்ட்லெஸ்சாக
இருக்கின்றீர்கள். நியூயார் நகரத்தின் உயரமான ஒரு ஓட்டலில் 21 மாடியில் ரூம்
எடுக்கின்றீர்கள்..
சப்பாடு ஆர்டர்
கொடுக்கின்றீர்கள்.. சாப்பிடுகின்றீர்கள் , ஓட்டல் அறையின் ஜன்னல் கதவை திறக்கின்றீர்கள்... 21 மாடியில் இருந்து பார்க்கும்
போது சாலையில் பரபரப்பான நியூயார்க்
நகரத்து டிராபிக் கண்ணுக்கு தெரிகின்றது...
ஜன்னல் கதவை திறந்து கட்டிடத்தின்
விளம்பில் நிற்கின்றீர்கள்... நீங்கள் குதிக்க முயற்சிப்பதை பார்த்த ஒரு நடுத்தர வயது பெண்மணி பயத்தில் கத்த
எல்லோரும் 21 மாடியை பார்க்கின்றார்கள்.. நகரம் பரபரப்பாகின்றது... இந்த படத்தை பார்க்க ஆரம்பித்த நாமும்
பரபரப்பாகின்றோம்.
=================
Man on a Ledge படத்தின் ஒன்லைன்..
பாவம் ஒரு பக்கம்
பழி ஒரு பக்கம் இதுதான் படத்தோட
ஒன்லைன். குற்றமே செய்யாத ஒரு முன்னாள் போலிஸ்காரன் தண்டனை
அனுபவிச்சிக்கிட்டு இருக்கான்... தன் மேல் உள்ள பழியை எப்படி களைந்தான் என்பதுதான் படத்தின் ஒன்லைன்.
================
Man on a Ledge படத்தின் கதை என்ன?
Sam Worthington( Nick Cassidy) ஒரு முன்னாள் போலிஸ்காரன்..40 மில்லயின் மதிப்புள்ள வைரத்தினை திருடிய
குற்றத்துக்காக சிறையில் தண்டனை பெற்று
வருபவன். அப்பாவோட இறுதி சடங்குக்காக அவனை பரோலில் வெளியே விட அவன் தப்பிச்சிடுறான்..
தம்பிச்சி எங்கேயும் போகலை நியூயார்க்கில் இருக்கும் 21 வது புளோரில் ரூம் போட்டு விட்டு
அதன் எட்ஜில் நின்றுக்கொண்டு தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மிரட்டிக்கொண்டு இருக்க போலிஸ் அவனை காப்பாற்ற வருகின்றது...
எவன்
என்னைகாப்பாத்தினாலும் நான் ஒத்துக்க மாட்டேன்... என்னை காப்பாத்தனும்னா போலிஸ்காரி
Elizabeth Banks (Lydia
Mercer) வரனும்னு சொல்லறான்.. அவளும் வந்து அவன் கிட்ட பேச்சு
வார்த்தை நடத்திகிட்டு இருக்கும் போது
நின் யாருகிட்டயோ போனில் பேசிக்கொண்டு இருப்பதை எலிசெபத் கண்டு பிடிக்கின்றாள்...
சாம்
பேசுவது தன் தம்பியிடம்... அவன் ஒரு வைரத்தை கொள்ளை அடிக்க தனது காதலியுடன்
முயற்சித்துக்கொண்டு இருக்கின்றான்.... இந்த பக்கம் தற்க்கொலை முயற்சி, அந்த
பக்கம் போலிஸ், இன்னோரு பக்கம் வைரத்தை ஒரு இளம் ஜோடி கொள்ளை அடிக்க முயற்சி
நடக்குது.. முடிவு என்ன? திரையில் பாருங்கள்..
====
படத்தின் சுவாரஸ்யங்களில் சில...
படம் ஓட ஆரம்பித்த
பத்தாவது நிமிடம் பரபரப்பான திரைக்கதை ரெக்கை கட்டிக்கிட்டு பறக்கறதுதான் இந்த
படத்தின் பிளஸ் என்பேன்.
அற்புதமான
டுவிஸ்ட்டு சீன்கள் படம் முடியும் வரை கொண்டு சென்று இருப்பது படத்தின் மிகப்பெரிய
பலம்.
படத்தின் சில
டுவிஸ்ட்டுகளை நாம் ஏற்கனவே பார்த்த பல கிளஷேக்களுடன் ஒப்பிட்டு பார்த்த
காரணத்தால் இந்த படத்தை விமர்சகர்கள் போட்டு தாக்கி இருக்கின்றார்கள்.
நியூயார்க் நகரத்தின் பிசியான சாலையில் படபிடிப்பு
நடத்துவது சாதாரண விஷயம் அல்ல.. அதே போல ஓட்டல் மாடியில் எட்ஜில் நிற்கும் ச்சாம்
மற்றும் எலிசெபெத் ரெண்டு பேருக்கும் சேப்ட்டிக்கு ரோப் கட்டிதான் இறக்கி
இருக்கின்றார்கள்....
கேமரா டிராலிக்கு
தனியா ஒரு பிளாட்பார்ம் செட் செய்து அதில் டிராலி வைத்து படத்தை எடுத்து
இருக்கின்றார்கள்.. அநியாயத்துக்கு
சேப்ட்டி மெஷர் பாலோ செஞ்சி படத்தை எடுத்து இருக்கின்றார்கள்.
ரொம்ப நாள் கழிச்சி
நான் பார்த்த பரபரப்பான படம் இந்த படம் சில பேருக்கு இந்த படம் பிடிக்காம கூட
இருக்கலாம்...
தம்பியோட காதலியா வரும்
கேரக்ட்ர் செமையான கட்டை என்பதை மட்டும் தமிழ் கூறும்நல்லுலகத்துக்கு நான் தெரிவித்துக்கொள்ள கடமைபட்டு
இருக்கின்றேன்.
=============
படத்தின் டிரைலர்...
==============
படக்குழுவினர்
விபரம்..
Directed by Asger Leth
Produced by Lorenzo di Bonaventura
Mark Vahradian
Written by Pablo Fenjves
Starring Sam Worthington
Elizabeth Banks
Anthony Mackie
Jamie Bell
Ed Harris
Génesis Rodríguez
Music by Henry Jackman
Cinematography Paul Cameron
Editing by Kevin Stitt
Studio Di Bonaventura Pictures
Distributed by Summit Entertainment
Release date(s)
January 27, 2012
Running time 102 minutes
Country United States
Language English
Budget $42 million[1]
Box office $42,644,373
=========
பைனல்கிக்.
இந்த படம் பார்க்கவேண்டிய திரைப்படம்... செம மொக்கையான
படமாக இல்லாமல் ஒரு எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்த இந்த படம் தவறவில்லை.. இந்த படம் சென்னை பாரிஸ் முவிஸ் நவ் கடையில் கிடைக்கின்றது
======
நிரூபிப்பதே நீ.....
இந்த படத்தை சில நாட்களுக்கு முன் பார்த்தேன்.ரொம்பவும் பரபரப்பாக ஆரம்பித்த படம்,நடுவில் தடம் மாறி,எப்படியோ சென்று கடைசியில் ஒரு மாதிரி முடித்திருப்பார்கள்.படம் தொடங்கும் போதிருந்த ஆவல் நேரம் செல்ல செல்ல குறைந்து இறுதில் சப்பென்று ஆகிவிட்டது.படம் வேஸ்ட் .
ReplyDeleteபோன வாரம்தான் ட்ரோண்ட் மூலம் டவுன்லோடி பார்த்தேன். விறுவிறுப்பான படம். செம “கட்டை” ட்ரஸ் மாற்றும்போது நல்லா தெரியுது. சேஸ்-ஸிங் சீன் -ம் பரபரப்பாக இருக்கும்
ReplyDeletenice review jackie
ReplyDeleteI like this movie and your review. Tq
ReplyDelete