சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் /புதன்/27/06/2012


ஆல்பம்...
பதிய தலைமைசெயலக மாற்றத்துக்கு முதல்வர் ஜெ முன் வைத்த முதல் காரணம் அது இன்னும் கட்டி முடிக்கபடவில்லை..
அலுவலகங்கள் பாதி பழைய தலைமைசெயலகத்தில் இயங்குகின்றன... அதனால் வேலை தடைபடும்.. புதிய தலைமைசெயலகத்துக்கும் பழைய தலைமைசெயலகத்துக்கும் இரண்டு கிலோ மீட்டர் தூரம்தான்.. ஒரு பைல் வேண்டும் என்றால் கூட  மாட்டு வண்டியில் எடுத்துப்போட்டுக்கொண்டு வரபோவதில்லை... எல்லாத்துக்கும்  கார் இருக்கு... அது மட்டும் அல்ல.. நிர்வாகம் செய்ய முடியாது என்று சப்பைக்கட்டு சொன்னார்.. தோ கொட  நாட்டில் இருந்து அரசு நிர்வாகத்தை  ஒரு மாதத்துக்கு நடத்த முடியும் என்றால் புதிய தலைமைசெயலகத்தில் நடத்த முடியாதா?ஒரு வருடத்தில் இன்னேரம் பிதிய தலைமைசெயலகத்தை கட்டியே முடித்து இருக்கலாமே? சரி.... கட்ட முடியாவிட்டாலும் கட்டியதை  ரசிக்க முடியவில்லை அவரால்... இதுவும் கடந்து போகும்...
==========
முதல்வர் ஜெ எல்லா கவுன்ஸ்லர்களையும் அழைத்து பிடி பிடி என்ற பிடித்து இருக்கின்றார்.. சிலரை பர்சனனலாக கேள்வி கேட்டு வருத்து  எடுத்து இருக்கின்றார்..  வாழ்த்துகள்.. இது அடிக்க தொடர்ந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.

==========
எப்போதும்  இல்லாத அளவுக்கு ஜனாதிபதி தேர்தல்  செடையாக களை கட்டி இருக்கின்றது... பார்த்து ரசித்து பொதுமக்கள் என்சாய் செய்து கொண்டு இருக்கின்றார்கள்.
============
ஈழம் மலருகின்றது என்றால் என் உயிரையும் கொடுப்பேன்னு கலைஞர் பேசி இருக்கத்தேவையில்லை என்பது என் கருத்து.. நான்   அடிக்கடி    சொல்வதுதான்.... இந்திய பாஸ்போர்ட் வைத்துக்கொண்டு மத்திய அரசை மீற யாராலும் தனி ஈழத்தை பெற்றுத்தர வாய்ப்பேயில்லை... அது தமிழ்நாட்டில் பிறந்த எந்த கொம்பனாக இருந்தாலும் சரி.. கலைஞர் என்னவோ அவர் ஜேப்பியில் தனி ஈழத்தை வைத்து இருப்பதாகவும் அவர் எமாற்றி விட்டதாகவும் அவர் மீது வசைபாடிக்கொண்டு இருக்கின்றார்கள்... நான்காம் கட்ட ஈழப்போரின் போது அவர் மவுனம் காத்தது  எனக்கே  பிடிக்கவில்லை...ஆனால் ஒரு விஷயத்தை  நாம் புரிந்து  கொள்ள வேண்டும்.. ஈழத்தமிழர்களுக்காக  ஆட்சியை  இருமுறை இழந்தது திமுக கழகம்தான் என்பதை மறந்து விடக்கூடாது....  தமிழ்நாட்டில் நான்காம் கட்ட ஈழப்போரின் போது பொதுமக்கள் மத்தியில் என்ன பெரிய எழுச்சி நடந்து விட்டது... ? பொதுமக்கள் மத்தியில் என்ன பெரிய மாற்றம் வந்தது..?மத்திய அரசையோ மாநில அரசையோ எதிர்த்து  எகிப்திய புரட்சி போல ஏதாவது நடந்து இருக்க  வேண்டுமே?  யாருமே அதை பெரிய விஷயமாக  தமிழ்நாட்டில் எடுத்துக்கொள்ளாமல் டிவிசீரியில் பார்த்துக்கொண்டு இருந்தார்கள்... தமிழ்நாட்டில் இருக்கும் பல பெண்களுக்கும் இந்த  பிரச்சனை குறித்த எந்த புரிதலும் இல்லை....எதிர்ப்பு என்பது பெருமளவு இருக்க  வேண்டும்... 20 பர்சென்ட் பேர் தவிச்சா போதாது..80 பர்சென்ட் பேர்  ரோட்டுக்கு வந்து போர் நடக்கும் போது ஜனாநாயக வழியில்  போராடி இருக்க வேண்டும்...  ஆனால்  தமிழகம் மவுனம் காத்தது... கலைஞர் மவுனம்காத்தார்...பதவி ஆசை கலைஞரையும் காக்க வைத்து விட்டது.,...கலைஞரை திட்டுவது பெரிய விஷயமே இல்லை..ஆனால் மத்திய அரசு உதவி இல்லாமல் தனிஈழம் சாத்தியமில்லை என்பதே உண்மை. அதே மத்திய அரசில்  காய்களை நகர்த்தும் மிக முக்கிய சக்திவாய்ந்த பொறுப்பில் இருக்கும் பெண்மணியின் கணவர் ஸ்ரீபெரும்பத்தூர் அருகே சிதறிப்போனதை அவர் மறந்து இருப்பாரா? என்ன? பழிக்குப்பழியும்... தமிழக அமைதியும் அவர்களை நிறைய உதவிகளை இலங்கைக்கு  செய்ய வைத்த்து என்பதே  வரலாறு. இதையும் மீறி கலைஞரை திட்டுவேண்டும் என்றால் தாரளமாக திட்டலாம்.
===========
அம்மா  ஆட்சியின் ஒரு வருட சாதனைகளில்  உயர்ந்த சாதனை எது வென்றால் உயர் நீதி மன்றம் ஒரு வாரத்துக்கு மேல்  எரியும் குப்பை கிடங்கை அனைக்கவேண்டும் என்று உத்தரவு  பிறப்பித்து இருப்பதுதான்..   என்ன அவசரம் ?எதுக்கு போய் அணைச்சிகிட்டு? பருவ மழை இப்ப ஸ்டார்ட் ஆயிடும்.. அதுவே அணைச்சிடும் என்று ஆட்சியாளர்கள் மற்றும் சென்னை  மேயர்  யோசித்து விட்டார்கள் போல......மேயர் செய்யலாம்னு நினைச்சாலும் அவரும் கும்பிடு போட்டு அம்மா ஆர்டருக்கு காத்து இருக்கவேண்டும் என்று நினைகின்றேன்...  பல்லாயிரக்கணக்கான மக்கள் பயணிக்கு சாலையை புகை மூட்டத்தினால்  மூன்று   நாட்களுக்கு மேல் டிராபிக்கை திருப்பி விட்டது வரலாறு....
=====
ஒரு வருடம் ஆகி விட்டது..சென்னையின் சில முக்கியமான சாலையை புதுப்பித்து இருக்கின்றார்கள்... சின்ன சின்ன தெருக்களின்  சாலைகள்  மிக மோசமாகத்தான் இருக்கின்றன..
=======
இடைத்தேர்தலை நடத்தி பணத்தை வேஸ்ட்  செய்வதற்கு பதில்.. இறந்துபோன அதே கட்சியில்  தேர்ந்து எடுப்பவருக்கே அந்த எம்எல்ஏ பதவியை கொடுத்து விட்டால் எந்த பிரச்சனையும் இல்லை.. சரி.. தேர்தலில் இரண்டாவது இடத்துக்கு வந்தவருக்கு கொடுக்கலாம் என்றால் முதல்  இடத்தை பிடித்த எம்எல்ஏ வும் ரோட்டில் நிம்மதியாக நடமாட  முடியாது...  இரண்டாம் இடத்தில் வெற்றி பெற்றவர்.. முதல் இடத்தை பிடித்தவரை பரலோகம் அனுப்ப என்ன வேண்டுமானாலும் செய்வார்.. பின்னே மக்கள்  சேவை ரொம்ப முக்கியம்  அல்லவா?

==========
நீயா நானா கோபி போல கோட்டு போட்டு ஒரு படத்தை எடுக்கனும்னு எனக்கு ரொம்ப நாளா ஆசை..1998ல அந்த ஆசையை தீத்துக்கிட்டேன்.. அதுதான் இந்தப்படம்..அதுக்கு அப்புறம் அந்த கோட்டு சூட்டை மாட்டிக்கறதுக்கு வாய்ப்பே கிடைக்கலே.. கல்யாணத்துக்கு கோர்ட் சூட் சொன்னாங்க... சான்சே இல்லைன்னு சொல்லிட்டேன்

=======
மிக்சர்..
வேளச்சேரியில் இருந்து வரும் பேருந்துகள் மற்றும் அனைத்து வாகனங்களையும் மடுவங்கரை, மற்றும் கிண்டி ரேஸ் கோர்ஸ் வழியாக மவுண்ட் ரோட்டுக்கு திருப்பி விடுகின்றார்கள்... இதனால்  தினம் தினம் அந்த பகுதியில் டிராபிக்கில் மாட்டி விழி பிதுங்கி அலுவலகம் செல்ல வேண்டியதாக இருக்கின்றது. சாலை  ஓரமாக இருக்கும் ஆக்கிரமிப்புகளை எடுத்தலே ஒரு அளவுக்கு டிராபிக் தடை படாமல் செல்ல சாத்தியகூறுகள்    நிறையவே இருக்கின்றன.
===
தம்பி  கிண்டி பக்கமா  போறிங்க..? ஒரு ஆட்டோவுக்கு பிரேக் அடித்த போது வெகு அருகில் பதட்டத்துடன் ராமாபுரம் பஸ்ஸ்டாப்பில்  நின்றுக்கொண்டு என்னிடத்தில்  கேள்வியை வீசினார்..  நான்  ஆமாம் என்றேன். கொஞ்சம் கிண்டிக்கிட்ட டிராப் பண்ண முடியுமா? என்றார்.. சரி என்றேன்.. வண்டியில் ஏறி உட்கார்ந்த உடன்  பொலம்ப ஆரம்பித்து விட்டார்.. என் பொண்ணு கிண்டிகிட்ட இருக்கற கேட்ரிங் காலேஜில படிக்குது....  போன் அடிச்சா சுச்  ஆப்  பண்ணி இருக்கு.. அவ பிரண்டுச்சுங்க செல்லுக்கு போன் செஞ்சா எல்லாரும் ஆப்  பண்ணி வச்சி இருக்காளுங்க...  சனிக்கிழமை லீவ் ஆச்சே எங்கடி போறேன்னு? காலையில கேட்டேன் ஸ்பெஷல் கிளாஸ்ன்னு சொன்னா.. திடிர் மதியம் எனக்கு  ஒரு டவுட்  வந்த்தால.... அவளுக்கு போன் பண்ணா சுச் ஆப் ல இருக்கு... என் பொண்ணு எவன் கூடவோ ஓடீப்போகப்போறா தம்பி என்று ஓ ராமா, என்று  அழ ஆரம்பித்து விட்டார்.. என் புருசன்  சமையல் காண்டிராக்டர்... அவன் ஒரு மொடாக்குடிகாரன்... நான் என்ன செய்வேன்னு தெரியலையே?    அதுக்குள்ள கல்யாண ஆசை எப்படி தம்பி வரும்...? இவ்வளவு தூரம் வளர்த்த எங்களுக்கு கல்யாணம் பண்ணி வைக்கத்தெரியாதா? என்று பொலம்பிக்கொண்டு வந்தார்.. நான் ஆறுதல் கூறினேன்... நீங்க  நினைக்கறது போல எல்லாம் எதுவும் நடந்து இருக்காது  என்று சொன்னேன்.. இவ்வளவு பேசி விட்டு கடைசியாக  சில வாக்கியங்களை சொல்லாமல்  அவர் இறங்கி போய் இருக்கலாம்... தம்பி நாங்க ஐயருங்க... எங்க ஜாதியில லவ் மேரேஜ் ஏத்துக்குவே மாட்டாங்க.. வீட்டை  விட்டு ஒதுக்கி வச்சிடுவாங்க.. நான் என்ன செய்ய போறேன்னு தெரியலையே என்றார்...? அவர் புலம்பியதை பார்த்தால்  வீட்டை விட்டு ஒதுக்கி வைத்து விடுவார்கள் போல.,.

============
கடந்த ஞாயிறு .... மயக்கம் என்ன திரைப்படம் சன்டிவியில்... நானும் என் மனைவியும் இந்த படத்தை பார்க்க நினைத்து, வேண்டாம் என்று நான் மறுத்து விட்டேன்..

காரணம் படத்தை பார்த்து விட்டு என் மனைவி அழுது தொலைப்பாள் என்ற காரணம்தான்... நேற்று தவிர்க்க முடியவில்லை.... முழு படத்தையும் இருவரும் பார்த்தோம்.. யாமினி என் போட்டோவை ஒருத்தன் ஆய்ன்னு சொல்லிட்டான்..எனக்கு இது தவிற எனக்கு எந்த தொழிலும் தெரியாது.. என்று தனுஷ் அழும் போது நானும் என் மனைவியும் கண் கலங்கினோம்.. 

திரும்ப கிளைமாக்ஸ் காட்சியில் திரும்ப இருவரும் கண் கலங்கினோம்..அதனால்தான் அந்த படத்தை
 அவளை பார்க்க விடாமல் வைத்து இருந்தேன்... இத்தனை நாளும் தவிர்க்க அதுதான் காரணம்.... படம் முடிந்ததும்....வெகு நாட்களுக்கு பிறகு என் தலையில் இருக்கும் நாலு முடிகளின் ஊடே அவள் விரல்கள் வெகு ஆதரவாய் தடவி கொடுத்தன....சிறுவயதில் பள்ளி விட்டு வீடு வந்து, என் அம்மா மடியில் முகம் புதைத்து, கதை கேட்கும் போது ஆதராவாய் தலைகோதிய அந்த நிமிடத்தின் ஞாபகங்கள் நேற்று பின் இரவில் மீண்டும் புத்துயிர் பெற்றன....
===============
இந்தவாரகடிதம்.
Dear jackiesekar alias Dhanasekar,

This Ashraf from K.K. Nagar, chennai.

For the last one week I am reading your website. . .
Its interesting especially "Anbulla Ammavakku" is tear coming article ...

I would like know would you wrote review for the movies  "TROY, GLADIATOR & CLEOPATRA etc"
If you already post the review pls give the link, if not yet pls post the review . . 

Pls suggest me some other good History movies like TROY, CLEOPATRA  etc. . . 

Pls convey my regards to YAZHINI . . 
==========
நன்றி... அஷரப்..
எல்லா பதிவையும் வாசித்தீர்கள் என்பது பின்னுட்டங்கள் மூலம் அறிந்தேன்..

கிளாடியேட்டர்  டிராய் கண்டிப்பாக எழுத வேண்டும்..
 நேரமின்மைதான் காரணம்....

300 படங்களுக்கு மேல் எழுத லிஸ்ட் இருக்கின்றது... நேரம்தான் இல்லை... அதனால்தான்  இன்னும் எழுதாமல் இருக்கின்றேன்..

ஆமாம் கேகே நகரில் எங்கே இருக்கின்றீர்கள்.--?
==========
கோடம்பாக்க சினிமா உலகில் வெற்றிபெற்றவனை விட, வெற்றிக்காக உழைப்பவனையும் பார்த்து எள்ளி நகையாடுவது மிக அதிகம்....,தண்ணியில் எதையாவது பற்றிக்கொள்ள உயிர் பயத்தில் தத்தளிக்கும் போது, எதுக்கு இந்த ஆழமான தண்ணி பக்கம் வந்தே என்று சாவகாசமாக முகவாய் கட்டையில் கை வைத்து, உதவி செய்யாமல் கேள்வி கேட்பவர்களே மிக அதிகம்.. நெருங்கிய நண்பர்களும் இதில் விதிவிலக்கு அல்ல..

எனது நண்பர் கேமராமேன் விஜய் ஆம்ஸ்ட்ராங் எழுதிய பதிவுகளில் மிகவும் பிடித்த பதிவு இது... 
http://blog.vijayarmstrong.com/2012/06/blog-post.html

=========
பிலாசபி பாண்டி..
வாழ்க்கையில எந்த பிரச்சனை வந்தாலும் துவண்டு போகக்கூடாது.. வாழ்க்கையில் வரும் பிரச்சனைகள்தான் ரெட் சிக்னல்ன்னு வச்சிக்கோங்க.. அது அப்படியே இருக்குமா? கொய்யால கண்டிப்பா மஞ்சா வரும்.. அதுக்கு அப்புறம் கிரீன் சிக்னல் விழுமா விழாதா? கண்டிப்பா விழுந்தே ஆவனும் தக்காளி அதான் தலையெழுத்து...... என்ன?? சில பிரச்சனைக்கு 30 செகண்டுல சிக்னல் விழும், சில பிரச்சனைக்கு 90 செகன்டுல சிக்னல் விழும் அதனால நோ வொரிஸ்.... பிரச்சனை வந்தா வெயிட்டீஸ்.....
============
வாழ்க்கையில சின்ன சின்ன விஷயங்கள்தான் நம்மை ரொம்பவும் காய்ப்படுத்தும்...என்ன நான் சொல்லறதை நம்பமுடியலையா? சின்ன குண்டு ஊசி அதோட நுனி ரொம்ப சின்னது.. அதால குத்தி பாருங்க... அப்ப புரியம் நான் சொல்ல வந்தது..இப்ப இந்த பேராவோட முதல் லைன படிங்க....
==============
நான்வெஜ்18+
ஒரு ரோமன் கேர்ள்.. எகிப்த்திய பையன்கிட்ட  கேட்டா??, எனக்கா நீ என்ன செய்வாய்?.. அதுக்கு அந்த பெயன் சொன்னான்…  பிரமீட்டுக்கு பின்னாடி வா உன்னை மம்மியாக்குறேன்னு சொன்னான்





பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.


நினைப்பது அல்ல நீ 
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS... 

11 comments:

  1. அருமை...அதிலும்...கோட் போட்ட ஜாக்கி ? நம்ப முடியவில்லை...

    ReplyDelete
  2. NICE ARTICLE JACKIE BOSS..N HOW IS YAZHINI PAPPA... ROMBO KEETATHA SOLLUNGA... THN IAM EXPECTING YAZHINI APPA...ONCE AGAIN... JACKIE SIR MADIPAKKAM VANTHEGANA KANDIPPA CAL PANNUGA.... THKS....

    ReplyDelete
  3. Dear Jackie Anna,

    I got sudden sweet shock; when I read my letter in this mixture post ...

    I know U always give surprise to the people around;
    but i never expect this much earlier . ..

    Ungal Anbukku Nan Adimai . . .

    ReplyDelete
  4. Dear Jackie Anna,

    I got sweet shock, when I read my letter in this Mixture post ...

    I know that you surprise the people in around you,
    But I do not know this much earlier it will happen to me . . .

    Ungal anbukku nan adimai .. .

    ReplyDelete
  5. nice jackie....

    spl mistake takecare...

    ReplyDelete
  6. ஈழம் ~ கலைஞர் //

    உங்கள் புரிதல் தவறு...
    அவர் அன்று எதற்கும் லாயகற்றவராய் இருந்திருந்தால் தமிழ் சமூகம் இவ்வாறு இன்று வரை அவரை தூற்றி இருக்காது...

    The fact of the matter is...he had the influence then...he could have done atleast something more than the TV tea party he was part of...

    அவர் நினைத்திருந்தால் தேவையான காய்களை சுலபமாய் நகற்றி நிறைய அப்பாவி உயிரிழப்புகளை தவிர்த்திருக்கலாம்...அல்லது குறைந்த பட்சம் தள்ளிபோட்டிருக்கலாம்...

    அதனால் தான் இன்னும் நீங்கள் சொல்லும் டிவி சீரியல் தமிழனும்...அடிவாங்கிய ஈழ சமூகமும் அவரை மன்னிக்கவில்லை...

    இதில் வாதத்திற்கே இடமில்லை நண்பரே...

    இறப்பும் துயரமும் நம் வீட்டுக் கதவை தட்டும் வரை வெறும் புள்ளிவிவரம் தான் போலும்...

    ReplyDelete
    Replies
    1. Kalaignar avaroda ponnu jailikku porathayae thaduka mudiyala...avaru vera enna seyya mudiyum..

      Delete
    2. கலைஞர் அவரோட பொண்ணையே கபத்த முடியல... அவரு என்ன செய்து இருக்க முடியும் ???

      Delete
  7. அரசியலும், சமூக அக்கறையும் கலந்து..... இந்த சாண்ட்விச் நல்ல டேஸ்ட்! பின்றீங்களே தலைவரே! :)

    ReplyDelete
  8. அருமையான பதிவு பிலாசபி பாண்டி.ஜோக்ஸ் சூப்பர்

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner