Thadaiyara Thaakka-2012/தடையறத் தாக்க/2012 அசத்தலான படம்...




தடையறத் தாக்க திரைப்படத்தை நீங்கள் எந்த காரணத்துக்காக வேண்டுமானாலும் போய் பார்த்து இருக்கலாம்.


 இயக்குநர் மகிழ்திருமேனி கவதம்மேனன் அசிஸ்டேன்ட் என்பதாக இருக்கலாம், அல்து நீங்கள் அருண்விஜய் ரசிகராக இருக்கலாம், படத்தின் எட்டாவது சீனில் கட்டையை எடுத்துக்கொண்டு துரத்தும் ஸ்டண்ட்மேனின்  நெருங்கிய நண்பராக நீங்கள் இருக்கலாம்..

இந்த திரைப்படத்தை பார்க்கஉங்களுக்கு எந்த காரணமும் இல்லாமல் கூட இருக்கலாம்.. அது எனக்கு  பிரச்சனை இல்லை..

நான் ஏன் இந்த படத்தை  பார்க்க போனேன்? என்பதை உங்களிடம் பகிர்ந்தே ஆக வேண்டும்.. 

எனக்கு ம்ம்தா என்றால்  உயிர் மற்றது எல்லாம் மயிர் என்று ரைமிங்கா எழுதலாம்  ஆனால் என் மனைவி   நான் தின்னும்  சோற்றில்  விஷம் கலக்கும் சாத்திய கூறுகள் அதிகம் இருக்கும் காரணத்தால் மம்தா மோகன்தாசை ரொம்பவே பிடிக்கும் என்பதை மட்டும் சொல்ல நான் கடமை பட்டு இருக்கின்றேன்.

 மம்தா அப்படி என்ன ஐஸ்வர்யாராய் போல அழாக என்று நீங்கள்  ஒரு கேள்வியை கேட்கலாம்.. ?  இது போல மொக்கை கேள்விகளால் என்னை கவுத்து விட முடியும் என்று கனவிலும் நினைக்க வேண்டாம்... என்னிடத்தில் பதில் இருக்கின்றது...

மனம் திறந்து ஒத்துக்கொள்கின்றேன்...திடிர் என்று பார்க்க மம்தா மிக அழகாக இருப்பார்..ஒரு பெக் அடித்து விட்டு பார்த்தால், அட்டு பிகர் போல காட்சி அளிப்பார்... இருந்தாலும் அந்த பெண்ணை எனக்கு மிகவும் பிடிக்கும்...

இயக்குநர் கரு பழனியப்பன் மீது எனக்கு பொறாமை உண்டு.. பின்னே அவர் இயக்கிய சிலப்பதிகாரம் படத்தில் வரும் பாடலான அற்றைத்திங்கள் வானிலில் பாடலை எடுத்து,எனது தூக்கத்தை கெடுத்த எனது மதிப்புக்குறிய எதிரி அந்த ஆள்... 

பாண்ட்ஸ் பவுடர் பேக் ரவுண்டில் மம்தா  காஸ்ட்யூம் வாவ் ரகம்..


சும்மா திறமை இல்லாதவங்க மேல எல்லாம் நான் ஆசை வைக்க மாட்டேன்...பாட்டு பாடறதுலை  மம்தா செமை கில்லி.. ஆட்டம் போடதுலேயும்தான்.. தெலுங்குல எமதுங்கா படத்துல செமை ஆட்டம் போட்டு இருக்கு...பட் திடிர்ன்னு அந்த செய்தி என்னை தாக்குச்சி.. 



மம்தாவுக்கு கேன்சர்ன்னு.. நான் முழுசா நொறுங்குனது அந்த செய்தியை கேட்டபிறகுதான்... மனமுருக  பிரார்த்தனை செஞ்சேன்...ம்மதா மீண்டு வந்து  தொடாமலே தொடாமலே பாட்டுக்கு தடையறத்தாக்க பாட்டுக்குஆடறாங்க.... ஆல்த பெஸ்ட் மம்தா..

சரி விடுங்க.. ஒகே தடையறத் தாக்க படத்தை எதுக்கு பார்க்கபோவனும்னு நினைச்சேன் என்று வரலாற்றுல பதிவு பண்ணிட்டேன்...


படம் படம் வெளியே வந்துச்சி... படத்தை பற்றிய விமர்சனங்கள் வேறு விதமா இருந்திச்சி...விகடன் வேற 44 மார்க் கொடுத்து இருந்திச்சி.. சரி   மத்த காரணத்துக்காகவும் இந்த படத்தை முதல்ல பார்த்து வைப்பாம் என்று பார்த்து வைத்தேன்..

 சும்மா முதல் ஷாட்டுலே அசத்திட்டாங்கன்னுதான் சொல்லனும்...
============

தடையறத் தாக்க  படத்தின் ஒன்லைன் என்ன?

சாதரண மனிதன் எப்படி ஒரு ரவுடி கும்பலை எதிர்த்து பிரச்சனை இல்லாமல் வெளியே வரான் என்பதுதான் கதை..

=========

 தடையறத் தாக்க படத்தின் கதை என்ன??

அருண்குமார் ஒரு டாக்சி டிரைவர்..ரொம்ப க்ஷ்டப்பட்டு முன்னுக்கு வந்து கொண்டு இருப்பவர்.. மம்தா மோகன்தாசுடன் காதல் வேறு.. அவரை திருமணம் செய்து கொள்ள முடிவு எடுக்கின்றார்.. அந்த நேரத்தில் ஒரு ரவுடி கும்பலுடன் பிரச்சனை ஏற்பட அதில் இருந்து எப்படி மீண்டு ம்ம்தாவை கரம் பிடிக்கின்றார் என்பதுதான் கதை.

=============
 படத்தின் சுவாரஸ்யங்களில் சில...

படத்தின் முதல் காட்சி... துரோகம் செய்த ஒருவனை கட்டி வைத்து உதைக்கும் இடமும் போர்கிரவுண்டில் அவனது மனைவியை எடுத்து வந்து  சித்தரவதை செய்வதுமாக அந்த ஓப்பனிங் காட்சியில் நம்மை நிமிர்ந்து உட்கார  வைக்கின்றார்கள்.. தடையறத்தாக்க டீம்..


இயக்குனர் மகிழ்திருமேனி தமிழ் திரைப்படஉலகுக்கு கிடைத்து இருக்கும் அடுத்த ஸ்டைலிஷ்  இயக்குநர் என்று தைரியமாக காலரை தூக்கி விட்டுக்கொண்டு சொல்லலாம்.


அருண் விஜய்க்கு இந்த படம் பெரிய பிரேக் இந்த படத்தில் இருந்துதான்  அவரின் கேரியர் ஆரம்பிக்க போகின்றது என்று தாரளமாக சொல்ல்லாம்.. முக்கியமாக அவர் ஆக்ஷன் ஹீரோ என்பதை வாழ் வாழ் என்று தொண்டை தண்ணி கிழிய கத்தாமல்  பிரேமில் ஸ்டைலாக அவரை கொண்டு வந்தமைக்கு இயக்குநருக்கு ஒரு ஸ்பெஷல் தேங்க்ஸ்..


மம்தாவுக்கு உடம்பு சரியில்லாதது போல பல காட்சிகளில் தெரிகின்றார்... உள்ளே எதுவும் போடவில்லை என்று டயலாக்கில் சொல்லி விட்டு ஸ்லிப் மட்டும் போட்டுக்கொண்டு வரும் காட்சியில் கிறக்கம் ஏற்படசெய்கின்றார்.

 தமிழ் சினிமாவில் முதல் முறையாக ஹீரோ ஹீரோயினுக்கு கொடுக்கும்  கிப்ட் பேக்  இதுவரை யாரும் கொடுக்காதது..... எழு கலரில் எழு ஜட்டி வாங்கி கொடுக்கின்றார்.. அதை வைத்து சின்ன ரொமான்ஸ் தீர்வும் மிக அழகாக ரசிப்பது போல இருக்கின்றன...

 இடைவேளைக்கு பிறகு நைட் எபெக்ட்டில் கேமராமேன் சுகுமார்.. அசத்தி இருக்கின்றார்... லோ பட்ஜெட் பங்களுக்கு கேமராமேன் சுகுமார் மிக அழகாக செட் ஆகின்றார்.

முக்கியமாக தொடாமலே.. தொடாமலே பாடலில் முதல் காஸ்ட்யூம் மற்றும் டோன்களில் மம்தாவை காட்டிய விதம் மிக அழகு...

ரவுடி கடத்தி வைத்து இருக்கும் பெண் செமை கியூட்.. 

 சரி படத்துக்கு திருஷ்ட்டிபொட்டு ஏதாவது வேண்டும் அல்லவா..?கிளைமாக்சில் டெல்லி பெண் போர்ஷனை  சொதப்பி இருக்கின்றார்கள்.. ஒரு திரைப்படம் உண்மை என்று நம்பிக்கொண்டு படம் பார்க்க வைத்த  ரசிகனை நாடகத்தனமான கிளைமாக்ஸ் மூலம் ஒரு நிறைவை கெடுத்து குட்டி சுவராக்கி இருக்கின்றார்கள் என்பதே உண்மை...

=================

படத்தின் டிரைலர்.


===========
 படக்குழுவினர் விபரம்.

Directed by Magizh Thirumeni
Produced by N. S. Mohan
Susil Mohan
M. Hemanth
Starring Arun Vijay
Mamta Mohandas
Rakul Preet Singh
Music by S. Thaman
Cinematography N. Sukumar
Editing by Praveen K. L.
N. B. Srikanth
Studio Feather Touch Entertainment
Release date(s)
1 June 2012
Country India
Language Tamil

============


பைனல்கிக்.

 இந்த படம் பார்க்க வேண்டிய திரைப்படம். தமிழ் திரைப்படங்களில் லோ பட்ஜெட்டில் ஸ்டைல் மேக்கிங்கில், புது ஆட்களை வைத்து அசத்த முடியும் என்று இந்த படம் நிரூபித்து இருக்கின்றது... 

தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திர இயக்குநர்கள்  பட்டியலில் மகிழ் திருமேனியும்... நடிகர்கள் வரிசையில் அருணுக்கும் இந்த திரைப்படம் பெயரை பெற்று தந்து  இருக்கின்றது என்பது மறுக்கமுடியாத உண்மை.


பிரியங்களுடன்
ஜாக்கிசேகர் 

==========
நினைப்பது அல்ல நீ 
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS..
.

10 comments:

  1. நல்ல விமர்சனம் ஜாக்கி.

    ReplyDelete
  2. நல்ல விமர்சனம் ஜாக்கி. வாழ்த்துகள்

    (இங்கே ஏன் வாழ்த்துகள் சொல்லணும்னு தெரியலை. ஆனா ‘நல்ல விமர்சனம்’ ‘நல்ல பதிவு’ன்னு பின்னூட்டம் போட்டா கூடவே ‘வாழ்த்துகள்’ சொல்லணும் என்பது தமிழ் பதிவுலக சம்பிரதாயம்)

    ReplyDelete
  3. படம் நன்றாகத்தான் இருக்கு .ஆனால் நான் பார்த்தபோது கூட்டமே இல்லை.
    தடையற தாக்க என் விமர்சனம் http://scenecreator.blogspot.in/2012/06/blog-post_13.html
    --

    ReplyDelete
  4. நல்ல விமர்சனம் ஜாக்கி. வாழ்த்துகள்

    ReplyDelete
  5. இது என்ன படத்தை பற்றிய விமர்சனமா இல்லை மம்தா பற்றிய விமர்சனமா :))

    ReplyDelete
  6. நன்றி நண்பர்களே... லக்கி... சிலது எல்லாம் அப்படித்தான் ஆராயக்கூடாது... ரோமியோ சாய்ஸ் உன்னோடது.

    ReplyDelete
  7. மிகச்சிறந்த விமர்சனம். படம் பார்க்கும் ஆவலை தூண்டுகிறது.

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner