ஏன் இப்படி?



 சில மாதங்களுக்கு முன் போனில் ஒரு வெகுளியான குரல்.. அண்ணே சவுக்கியங்களா? நான் ராஜா பேசறேன்.. அண்ணி ,யாழினி நல்லா இருக்காங்களா?


நல்லா இருக்காங்க..

அண்ணே நம்ம பதிவர்களோட சாப்பிடனும்னு ஆசை .. நான் கூப்பிடும் போது நீங்க கண்டிப்பா வந்துடனும்... சரிப்பா...

இரண்டு நாள் கழித்து திரும்பவும் போன்..

அண்ணே இடம் பிக்ஸ் பண்ணிட்டேன்... சாந்தி தியேட்டர் கிட்ட இருக்கற ஓட்டல் நாளைக்கு லஞ்சுக்கு அங்க வந்துடுங்க...  கேபிள், லக்கி, அதிஷா, எல்லோரும் வராங்க... நீங்களும் வந்தா  சந்தோஷம்...  என்றான்..

இல்லை தம்பி டிரை பண்ணறேன்.. என்னால லீவு எல்லாம் போட முடியாது... இங்க ஓஎம்ஆர் பக்கம் இருந்தா கண்டிப்பா வருவேன் என்று  சொன்னேன்..

நான் அன்று போகவில்லை... அதன் பிறகு நேற்று இரவு  பத்து மணிக்கு அவனே போன் செய்தான்...

ஜாக்கி அண்ணன்தானே..?

ஆமாம் யார் பேசறது???

நான் ராஜா பேசறன்னே...

சொல்லுப்பா...

அண்ணி, யாழினி சவுக்கியமா?

நல்லா இருக்காங்க...

நான் சாவப்போறேன்.. விஷம் குடிச்சிட்டேன்..

அப்படியா?

 சீரியாசாவே விஷம் குடிச்சிட்டன்னே.. என் லவ்வர் என்னை ஏமாத்திட்டா இதுதான் உங்க கிட்ட பேசற லாஸ்ட் கால்... என்னவோ உங்க கிட்ட பேசனும்னு தோனுச்சி..அதான் லட்டர்லாம் எழுதி வச்சி இருக்கேன்.. என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை. ஜாக்கி அண்ணனை எனக்கு ரொம்ப  பிடிக்கும் அவருகிட்டதான் கடைசி கால்  பேசினேன்னு  எல்லாத்தையும் எழுதி வச்சி இருக்கேன்...

டேய் இரண்டு நாளைக்கு அப்புறம் இதை யோசிச்சா உனக்கே காமெடியா இருக்கும் அதனால தற்கொலை அது இதுன்னு பைத்தியம் போல பேசாதே என்றேன்.

அண்ணே அவ உட்பியோட வந்து எனக்கு கல்யாண பத்திரிக்கை வச்சி இருக்கா.. எனக்கு என்ன குறை.. நான் சாரயத்தை கையால தொட்டது கூட கிடையாது.. ஆனா இன்னைக்கு என்னை விஷம் குடிக்க வச்சிட்டான்னே..  நல்லா இருங்க அண்ணே... ஏதோ உங்க கிட்ட பேசனும்னு தோனுச்சி அதான்... இதுதான் என் லாஸ்ட் கால்

என்று டொக் என்று போனை கட் செய்து விட்டான்...

சாவப்போறவன் இவ்வளவு தெளிவாக பேசமுடியமா என்ன?..

இருந்தாலும் அந்த  போன் காலை அலட்சியப்படுத்த மனது ஏற்க்கவில்லை...
உடனே கேபிளுக்கு  போன்  செய்தேன்.

எங்க இருக்க   கேபிள்...?

அசோக் நகர்ல  சொல்லு ஜாக்கி..

பையன் ஒருத்தன் போன் செஞ்சான்.. ஆமாம் இதுவரைக்கு லாஸ்ட் கால்ன்னு  சொல்லி ஒருபத்து பேருக்கு போன் செஞ்சி இருக்கான்... லூசுக்கூ.......... என்று சொன்னதுமே அந்த தற்கொலைக்கான காமெடி சென்ஸ் புரிந்தாலும், உயிர் என்றுவரும் போது சிலதை மனது ஏற்றுக்கொள்ள மறுக்கின்றது..

செல்வீன் கூட ஏதாவது செய்ய முடியுமான்னு போன் செஞ்சார்.. டிரிப்ளிகேன் மேன்ஷன்லதான் எங்கோ இருக்கான்  சரி நான் டிரை பண்ணறேன்.. என்று சொல்லிவிட்டு கேபிள் போனை வைச்சிட்டார்..,

நான் மனது  கேக்காமல் திரும்புவும் லக்கிக்கு டிரை செய்தேன்...  என்மனைவி வேற  என்ன  பிரச்சனை? என்ன பிரச்சனை? என்று உயிரை எடுத்துக்கொண்டு இருந்தாள்.. லக்கிக்கு விபரத்தை சொல்லி விட்டு அவருக்கு  அந்த பையனின் நம்பரை எஸ்எம்எஸ் அனுப்பி வைத்தேன்..

ஆனாலும் மனது  கேட்கவில்லை... சப்போஸ் நிஜமாலுமே செத்துட்டா?

இரவு பதினோரு மணிக்கு  போரூரில் இருந்து  திருவல்லிக்கேணி நோக்கி மனது கேட்காமல் பைக்கில்  விரைந்தேன்.. கிண்டி மேம்பாலம் அருகில் சென்ற போது கேபிள்  போன் செய்தார்..

அந்த லூசுக்கூ.......... விளையாட்டுக்கு செஞ்சேன்னு சொல்லி பரோட்டா தின்னுகிட்டு இருக்கான்..

ஹேய் நான் கிண்டி வரைக்கு வந்துட்டேன்....

அப்படியே திரும்பி வீட்டுக்கு போ..இரு... நீ அவனை அசிங்க அசிங்கமா   அவனை திட்டு என்றார்... நான் மறுத்தேன்...

புலி வருது கதை  நிஜமாகவேண்டும் என்று ஆண்டவனிடம் வேண்டிக்கொண்டேன். இந்த கட்டுரையின் முதல் பாராவில் வெகுளியான குரல் என்று சொல்லி இருந்தேன் அல்லவா? அதை மனதளவில் வாபஸ் வாங்கிக்கொண்டேன்.. 

அந்த பையனிடம் இருந்து மேசேஜ் வந்து இருந்தது.. anna I was kidding. Good night. என்று செய்தி வந்து இருந்தது

நான் வண்டியை திருப்பினேன்  ரோட்டோரம்   சைக்கிளில் டீ விற்றுக்கொண்டு இருந்தவரிடம் டீ வாங்கினேன்... டீ  கப் ரொம்பவும்  மெலிதாக  சல்லையாக இருந்தது... எப்போது வேண்டுமானலும் பிளாஸ்டிக் கப்  கிழிந்து டீ வெளியே கொட்டுவது போல இருந்தது. பிளாஸ்ட்டிக்  கப் ரொம்பவும் மட்டமாக வடிவமைக்கப்பட்டு இருந்தது.. இருந்தாலும் அவசரத்துக்கு நம்பிக்கை வைத்து வாங்கினேன்... டீயை வாங்கும் போதே செம சூடாக இருந்தது..ஆவி பறந்தது.. ஆனாலும் கொஞ்சமும் பொறுக்காமல் தெரிந்தே  உதட்டில் வைத்தேன்... டீ  சுட்டது-..................




நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

23 comments:

  1. ஜாக்கி, நீ பாதி வழியில் திரும்பியிருக்கக் கூடாது, போயி செவுட்டில ரெண்டு அப்பு செமயா அப்பிட்டு வந்திருக்கணும். நானாக இருந்திருந்தா அதைத்தான் செய்திருப்பேன்

    என்றும் அன்புடன்
    பாஸ்டன் ஸ்ரீராம்

    ReplyDelete
  2. ராஜா இருக்கும் மேன்ஷன் எதுன்னு தெரியுமான்னு கேபிள் எனக்குத்தான் ஃபோன் செஞ்சு கேட்டார். முருகேசநாய்க்கர் மேன்ஷன் என்று சொன்னேன். நான் சென்னையில் இல்லைவேறு இல்லை. எனக்கும் பதட்டம். நடுராத்திரில அவரு சாகுறேன்னு நம்மளை கொன்னுட்டாரு :(

    ReplyDelete
  3. டோண்டு சமீபமா கோயமுத்தூர்ல கூட இப்படி ஒரு சம்பவம் நடந்ததா சொன்னாங்க...

    ஆமா பைக்லாம் எடுத்துட்டு அவ்வளவு தூரம் போயிருக்கீங்க..அதை நினைச்சாத்தான் சங்கடமா இருக்கு..

    ReplyDelete
  4. ஜாக்கி.. என்றோ ஒரு முறை அவன் திருவல்லிக்கேணியின் ப்ழைமையான மேன்ஷன் என்று சொன்னதை ஞாபகம் வைத்து, உடனே அப்துல்லாவிடமும், திருவல்லிக்கேணியில் உள்ள ஒரு பத்திரிகையாளரிடமும் கன்பார்ம் செய்து கொண்டு தேடிப்பிடித்து போனேன். செம டென்ஷனாய் இருந்தது. அசிங்க அசிங்கமாய் திட்டிவிட்டு வந்தேன். முக்கியமான டிஸ்கஷனில் இருந்தேன். பாவம் செல்வின் கூட திருவான்மியூரிலிருந்து அடித்துப் பிடித்து பத்து நிமிடத்தில் திருவல்லிக்கேணி வந்தார். அடிப்படை மனிதாபிமானத்தை நோண்டிப் பார்ப்பவர்களை பற்றி என்ன சொல்லி என்ன?

    ReplyDelete
  5. இல்லை மச்சி.. புறக்கணிப்புதான் மச்சி இதுக்கு பதில்.. நல்ல நட்பை இழந்துட்டான்.. அதான் இதுக்கு பதில்... செத்த பாம்பை எதுக்கு அடிக்கனும் சொல்லு...பெட்ரோல் 75 ரூபா மச்சி..

    ReplyDelete
  6. கேபிளுக்கு போன் செஞ்சதும் அப்துல்லா உன் பேரைத்தான் சொன்னான்..இருந்தாலும் நம்ம எல்லரையும் அவன் டென்ஷன் ஆக்கிட்டான் அப்துல்லா.. அதுக்குதான் புலி வருது கதை உண்மையாகனும்னு சொன்னேன்....

    ReplyDelete
  7. இன்பாக்ட் கேபிள், நீ போன் பண்ணதும் எனக்கு ரொம்ப நிம்மதியா இருந்திச்சி... விடு...உண்மையா உதவி தேவைப்படுறவங்கதான் பாவம்.. சில நேரத்துல பொய்யோன்னு நினைக்க தோனிடும்...

    ReplyDelete
  8. அருமையான பதிவு--- ஜாக்கி-யின் உண்மையான பதிவுக்கு எது ஒரு உதாரணம். முப்பது வார்த்தைகளில் எழுதுவது எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் உண்மையாக இருக்க வேண்டும். இதை போல!!!

    என்றும் அன்புடன்
    பாவாணன்
    http://paavaanan.in

    ReplyDelete
  9. அருமையான பதிவு. ஜாக்கி-யின் உண்மையான பதிவுக்கு எது ஒரு உதாரணம். முப்பது வார்த்தைகளில் எழுதுவது எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் உண்மையாக இருக்க வேண்டும். இதை போல.
    என்றும் அன்புடன்
    பாவாணன்
    http://paavaanan.in

    ReplyDelete
  10. நான் கோவத்தில் ஹெல்மட்டை தூக்கி மூஞ்சியில் எறிந்தேன் . அது சரியா படவில்லை என்ற வருத்தம் எனக்கு இருக்கு .. நான் வண்டி ஒட்டி வந்த வேகத்தை நினைத்தால் இப்போதும் பதறுகிறது .......

    ReplyDelete
  11. ஜாக்கி - விளையாட்டாக என் நண்பன் ஒருவன் என்னை ஏமாற்ற அதன் நீட்சியாய் நான் தொடர்ந்த கிறுக்குத்தனம் இது. இந்த அளவு பத்ருவீர்கள் என்று கற்பனை கூட செய்யவில்லை. போனிலே சினிமா டயலாக் எல்லாம் தெளிவாய்ச் சொன்னேனே, கண்டுபிடித்து இருப்பீர்கள் என்று நினைத்தேன்.
    ஸ்ரீராம் - நீங்க வர்றப்ப அவர் சார்பா நீங்களே மனதார வந்து அப்பிக்கோங்க.
    அப்துன்னே - நான் மிகவும் வருத்தியது உங்கள் வரையில் விஷயம் வந்தது தான்.கேபிள் நீங்கள் எல்லாம் இதை நம்புவீர்கள் என்றோ, உங்கள் வரை இந்தச் சின்ன விஷயம் வரும் என்றோ நினைக்கவில்லை.
    இதில் அநியாயமாய் பாதிக்கப்பட்ட அஞ்ச்சாசிங்கம் அவர்களுக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை.

    ReplyDelete
    Replies
    1. Avana neeye.... (read with vadivelu modulation)

      Delete
  12. Even if he commits suicide tomorrow for the same reason as mentioned by him, nobody will help him if he informs in advance. He loses not only the good hearted friends but also he has set a wrong precedent.

    ReplyDelete
  13. அக்கப்போரு செய்தது 100 % தவறு; ஆனாலும் ஜாக்கி

    //அதுக்குதான் புலி வருது கதை உண்மையாகனும்னு சொன்னேன்....//

    நீங்கள் இப்படி சொல்ல வேணாம். இன்றைய கோபத்தில் அப்படி தோணினாலும், அது உண்மையில் நடந்தால், இப்படி எழுதியதற்கு நம் மனது நம்மை குத்தும்

    அலட்சியபடுதுவது நிச்சயம் நல்ல தண்டனை. தொலை பேசி எண்ணை பொதுவில் போட்டு வைப்பது என்ன விளைவுகளை உண்டாக்குது பாருங்கள்

    ReplyDelete
  14. ஜாக்கி பாஸ்... உங்க போன்ல ரெகார்டிங் ஆப்சன் இல்லையா?

    எனக்கு இந்த மாதிரி போன் செஞ்சிருந்தா, அழகா ரெகார்ட் பண்ணி 100-க்கு போன் பண்ணி இப்படி இப்படி... இந்த லாட்ஜில தான் பையன் இருக்கான்னு போட்டு கொடுத்துட்டு கமுக்கமா இருந்துருவேன்... தற்கொலை பண்ண முயற்சி பண்ணி போலீஸ் வந்து அள்ளிக்கிட்டு போனா ரெண்டு வருஷம் உள்ளே இருந்து களி தின்னிருக்க வேண்டி வரும்...

    ReplyDelete
  15. ஜாக்கி பாஸ்... உங்க போன்ல ரெகார்டிங் ஆப்சன் இல்லையா?

    எனக்கு இந்த மாதிரி போன் செஞ்சிருந்தா, அழகா ரெகார்ட் பண்ணி 100-க்கு போன் பண்ணி இப்படி இப்படி... இந்த லாட்ஜில தான் பையன் இருக்கான்னு போட்டு கொடுத்துட்டு கமுக்கமா இருந்துருவேன்... தற்கொலை பண்ண முயற்சி பண்ணி போலீஸ் வந்து அள்ளிக்கிட்டு போனா ரெண்டு வருஷம் உள்ளே இருந்து களி தின்னிருக்க வேண்டி வரும்...

    ReplyDelete
  16. மனிதாபிமானம் இப்படி சோதனைக்குள்ளாக்கப்பட்டால் உண்மையிலேயே கஷ்டத்தில் இருப்பவர்களைக் கூட நம்ப முடியாமல் போய் விடுமே சேகர். அந்த லூசுப் பயல் மேல கேபிள்ஜி கோபப்பட்டது நியாயம்தான்.

    ReplyDelete
  17. பெரிய அக்கப்போரா போச்சிங்க :-(

    ReplyDelete
  18. ஜாக்கி அண்ணா..
    அப்படியே போயி அந்த நாயை நாலு இலுப்பு இலுத்துட்டு வந்திருக்கணும்...
    விட்டுட்டிங்களே...

    ReplyDelete
  19. Jackie, you should have slapped that stupid idiot.

    ReplyDelete
  20. I feel sorry for the ones who really need help , because of this bastard real ones will be affected . What if some one or anja singam got hit when he was riding his bike

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner