சவ ஊர்வலத்தில் அநாகாரிகமாக நடந்து கொண்ட ரவுடிகள்...


மிகச்சரியாக ஒரு மணிநேரம் எழு நிமிடங்களுக்கு முன்பு தமிழ் நாட்டின் தலைநகரம் சென்னையின் பிரதான சாலையான நெல்சன் மாணிக்கம் ரோட்டில் இருந்து அந்த சவ ஊர்வலம் பூத்மல்லி சாலையில் அபபோதுதான் திரும்பி இருந்தது, அப்போது நான் எக் மோரில் இருந்து மதுரவயல் நோக்கி வந்து கொண்டு இருந்தேன்.

வழக்கமான சவ ஊர்வலம் போல் இல்லாது மிக அமைதியாக போய் கொண்டு இருந்தது. வேட்டு சத்தம் மட்டும் கேட்டுக்கொண்டு இருந்தது, சவ ஊர்வலத்தில் இருக்கும் பினம் ஆனா? அல்லது பெண்ணா? தெரியாது. ஆனால் சாலை முழுவதும் பூக்கள் இறைந்து கிடைந்ததை வைத்து அது பெரிய சாவு என்பதை புரிந்து கொண்டேன்...

அண்ணா நகர் ரவுண்டான சிக்னல் அருகே சிக்னலுக்காகபஸ் மற்றும் இருசக்கர வாகனங்கள் நின்று கொண்டு இருந்தது... அபபோது சவ ஊர்வலத்தின் முன்னே சென்று கொண்டு இருந்த தமிழ் சினிமா வெள்ளை டாட்டா சுமோ ரவுடிகள் போன்ற எட்டு பேர் பிணத்தின் மீது இருந்த மாலையில் இருந்த பூக்களை எடுத்து அருகில் இருந்த எல்லோர் மீதும் வீசத்துவங்கினார்கள்...

இதில் கொடுமை பேருந்து ஓரத்தில் உட்கார்ந்து இருந்த பெண்கள்தான் அவர்கள் முக்கிய குறியாக இருந்தது, சாஸ்த்திரி பவனிலும் டி எம் எஸ்லிலும் வேலை முடிந்து வரும் வழியில் ஸ்பெஷல் கிளாசில் இருந்த பெண்ணையும் அழைத்துக்கொண்டு வரும் மாமிகள் மேல் எல்லாம் பிணத்தின் மீது இருந்து எடுத்த பூக்களின் அர்ச்சனையை திறம்பட செய்தான் ஒருவன்...

அவர்கள் என்ன செய்வ்து என்று ஒரு நிமிடம் திகைத்து அதன் பிறகு தலையில் அடித்துக்கொண்டு நகர்ந்தார்கள்

டூவிலரில் இருந்த பெண்கள் நிலைதான் ரொம்ப கொடுமையாக இருந்தது, போலிஸ் எந்த இடத்திலும் தென்படவில்லை.. எல்லோருத் தண்ணியில் மிதந்து கொண்டு இருந்தார்கள் நான் எனது டூவிலரை ஒரு ஜீக்ஸ் பெண்ணின் டூவிலர் பக்கத்தில் நிறுத்தி அவளுக்கு பாதுகாப்பு கொடுத்தேன்... சட்டென வந்து போதையில் வந்து பிணத்தின் மாலையை அவள் கழுத்தில் போட்டு வெறி குத்தாடினாலும் அச்சர்யபடுவதற்க்கு இல்லை
எல்லோரும் அந்த இடத்தை விட்டு வேகமாக செல்லதுடித்ததில் இரண்டு டுவிலர்காரர்கள் இடித்துக்கொண்டு சின்ன சண்டை வேறு நடந்தது. பேருந்தில் ஓரத்தில் உட்கார்ந்து இருந்த பெண்கள் வீட்டுக்கு போய் குளிக்க வேண்டிய கோபத்தில் மென்று விழிங்கினர்...

சாமி வீதி உலாவில் வரும் உற்சவர் பிரசாத பூக்களை போல் எல்லோர்மீதும் வீசினார்கள் எல்லாவற்றையும் விட உச்சக்கட்ட கொடுமை ஒரு குளிருட்டப்ட்ட கடையை திறந்து அதனுள் முழு பினத்தின் மீது போட்ட மாலையை வீசினான்...

பால்கானியில் நின்று ரைட்ரயலாக வேடிக்கை பார்த்த குடும்பத்து பெண்களும் தப்பவில்லை என்பதுதான் அவர்கள் மீதும் பாரதிராஜா படம் போல் பூக்கள் அர்ச்சனை நடந்ததுதான் உச்சகட்ட கொடுமை...

அந்த சவ ஊர்வலத்தை கடந்து போக பஸ்கள் எல்லாம் வலைந்து நெளிந்து தலை தெறிக்க ஒடியது ரொம்ப கொடுமையாக இருந்தது...


நாம் எப்போது திருந்த போகிறோம் சுதந்திரம் என்பது அடுத்தவன் மூக்கு நுனிவரைதான் என்பதை எப்போது உணர போகின்றோம்...
இன்றைக்கு நடந்து செயல் அந்த பக்கம் சென்ற அத்தனை பேர் மூக்கிலும் மொடக் என்று ஒரு குத்து குத்தி ரத்தம் வழிந்தது போன்ற உணர்வை ஏற்படுத்தியது எனக்கு அந்த feeling இருந்தது..

வீடு வந்த பிறகும் இன்னும் அந்த ரத்த வாசனையும் பிசு பிசுப்பும் என்னால் உணர முடிகின்றது....

அன்புடன் /ஜாக்கிசேகர்

33 comments:

 1. இந்த ரவுடிகளை தட்டி கேட்க யார் வருவார் சொல்லுங்கள்?

  ReplyDelete
 2. தெரியலை நைனாதெரியலை...

  ReplyDelete
 3. இவனுங்களை நம்பித்தான் இன்றைய
  அரசியல்வாதிகள் தைரியமாக உள்ளனர்.

  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 4. அவர்களை அடிக்கும் அடியில் எங்கு பூ வாசம் வந்தாலும் அவர்களுக்கு ஆய் வர வேண்டும். அப்போதுதான் திருந்துவார்கள்.

  ReplyDelete
 5. ஜாக்கி
  இவனுங்களோட பின்பலம் அரசியல் சார்ந்து இருக்கும்
  சாமானியானாள் என்ன செய்ய முடியும்.
  உங்கள் கோவம் இயல்பானதே.

  'நான் எனது டூவிலரை ஒரு ஜீக்ஸ் பெண்ணின் டூவிலர் பக்கத்தில் நிறுத்தி அவளுக்கு பாதுகாப்பு கொடுத்தேன்.'

  உந்தன் கடமை உணர்வு வாழ்க.

  ReplyDelete
 6. நன்றி அறிவே தெய்வம் தங்கள் வருகைக்கு

  ReplyDelete
 7. கொடுமை!!

  நன்றி சின்னபையன் தங்கள் வருகைக்கு

  ReplyDelete
 8. அவர்களை அடிக்கும் அடியில் எங்கு பூ வாசம் வந்தாலும் அவர்களுக்கு ஆய் வர வேண்டும். அப்போதுதான் திருந்துவார்கள்.//
  நிச்சயமாக அமர பாரதி நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை

  ReplyDelete
 9. ஒரு முறை திருமணமாகி வீட்டிற்கு புதுமணத் தம்பதியினர் சென்றுகொண்டிருந்த காரை இதே போல் சில பொறுக்கிகள் நிறுத்தி அந்த காரில் அஞ்சலி செலுத்தும் போஸ்டரை ஒட்டி அவமானப்படுத்தியதும் கூட நம் தமிழகத்தில் நடந்துள்ளது.
  4 பேரு கூடிட்டா என்ன வேணும்னாலும் செய்வாய்ங்கண்ணே. அதுலயும் மப்புல என்னவேணும்னாலும் செய்யிவாய்ங்க.

  இதுக்கு ஒரு நல்ல தீர்வு இருக்கு, அப்டி செஞ்சா ஒரு பய ஆடமாட்டான்.
  ஏன் தம்பி நீங்க யாரோ செத்ததுக்கு இம்புட்டு கொண்டாடுறீங்களே, உங்க சாவ நாங்க கொண்டாடுவோம்ல வாங்க தம்பி சாவுங்கன்னு சொல்லி அடி ரவுண்டு கட்டி அடிக்கனும்ணே.

  ReplyDelete
 10. அந்த வண்டி நம்பர நோட் பண்ணினீங்களா?

  ReplyDelete
 11. This comment has been removed by the author.

  ReplyDelete
 12. இதுக்கு ஒரு நல்ல தீர்வு இருக்கு, அப்டி செஞ்சா ஒரு பய ஆடமாட்டான்.
  ஏன் தம்பி நீங்க யாரோ செத்ததுக்கு இம்புட்டு கொண்டாடுறீங்களே, உங்க சாவ நாங்க கொண்டாடுவோம்ல வாங்க தம்பி சாவுங்கன்னு சொல்லி அடி ரவுண்டு கட்டி அடிக்கனும்ணே.\\ ஜோசப் அப்படியும் செய்யலாம்

  நன்றி ஜோசப் பால்ராஜ் தங்கள் வருகைக்கு

  ReplyDelete
 13. அந்த வண்டி நம்பர நோட் பண்ணினீங்களா?

  இல்லை இந்தியன் ஆனால் 5,45 மணிக்கு அண்ணா ஆர்ச் வழியாக அனைத்து மாநகர பேருந்து டிரைவர்களும் அதற்க்கு சாட்சி

  ReplyDelete
 14. நன்றி மங்களுர் சிவா தங்கள் வருகைக்கு தொடர்ந்து அதரவு கொடுப்பதற்க்கும்

  ReplyDelete
 15. தேடிப்பார்த்தால், கருணாநிதி கூட்டத்தின் ஒரு பகுதியாக இவர்கள் இருக்கலாம்.
  வழியே இல்லை. வாழந்து ஆக வேண்டிய கட்டாயம்
  நான் சிகப்பு மனிதன் ரசினி வருவாரா?//
  ரசினி வருவாரன்னு எனக்கு தெரியாது பட் பாக்கற ஆளு எல்லாம் கருனா அளுன்னு எப்படி சொல்லறிங்க தலைவா?

  ReplyDelete
 16. இவர்களின் இம்சை ரொம்ப ரொம்ப ரொம்ப கொடுமை

  ReplyDelete
 17. //தேடிப்பார்த்தால், கருணாநிதி கூட்டத்தின் ஒரு பகுதியாக இவர்கள் இருக்கலாம்.

  //

  எந்த ஆதாரத்தில் அப்படிச் சொல்லுகின்றீர்கள்?? ஏன் தமிழகத்தில் பிற கட்சிகள் அனைத்திலும் காந்திகள் மட்டுமே இருக்கின்றனரா??

  அந்த ரவுடிகளின் அனாகரீகத்திற்குச் சற்றும் குறைந்ததல்ல உங்கள் கூற்று.

  ReplyDelete
 18. ரவுடிகள் என்றும் திருந்தப் போவதில்லை. மக்கள் அவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும்

  ReplyDelete
 19. இன்று நம் நாட்டை இருவேறு கழங்கள் மாற்றி மாற்றி கண்ட சாதனை தான் என்ன, வளர்ச்சி தான் என்ன.

  சாதனை - மாதாமாதம் கூடும் டாஸ்மாக் கலக்ஷன்
  வளர்ச்சி - வேறு என்ன, இது போன்ற ரவுடிகள் முதலில் பிக்பாக்கட், பின் அரசியல் அடிதடி, பின்னாளில் பெரும் தலைவர் (மானம் கெட்டவர்கள்).

  இவனுங்களோட ஆட்டம் அடங்காமலா போய்விடும்?? எத்தனை பேரின் சாபம் பாக்கி இருக்கு........ அதுக்கு வட்டி போட்டு இவர்கள் அனுபவிப்பார்கள்.

  ReplyDelete
 20. இம்மாதிரி ஆட்களை நடுரோட்டில் வைத்தே தண்டனை கொடுக்க வேண்டும் :-(

  ReplyDelete
 21. இவை எல்லாவற்றையும் விட பிணத்தின் உறவினருக்கு எத்தனை மன வேதனை இருந்திருக்கும்?பாவம் இந்தியா!!!

  ReplyDelete
 22. இவர்களின் இம்சை ரொம்ப ரொம்ப ரொம்ப கொடுமை\\

  நன்றி கிரி தங்கள் கருத்துக்கு

  ReplyDelete
 23. ரவுடிகள் என்றும் திருந்தப் போவதில்லை. மக்கள் அவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும்//

  இதுவே கிராமமாக இருந்தால் அந்த கதையே வேறு நன்றி தீப்பெட்டி

  ReplyDelete
 24. இன்று நம் நாட்டை இருவேறு கழங்கள் மாற்றி மாற்றி கண்ட சாதனை தான் என்ன, வளர்ச்சி தான் என்ன.

  சாதனை - மாதாமாதம் கூடும் டாஸ்மாக் கலக்ஷன்
  வளர்ச்சி - வேறு என்ன, இது போன்ற ரவுடிகள் முதலில் பிக்பாக்கட், பின் அரசியல் அடிதடி, பின்னாளில் பெரும் தலைவர் (மானம் கெட்டவர்கள்).

  இவனுங்களோட ஆட்டம் அடங்காமலா போய்விடும்?? எத்தனை பேரின் சாபம் பாக்கி இருக்கு........ அதுக்கு வட்டி போட்டு இவர்கள் அனுபவிப்பார்கள்.//

  உங்கள் வாக்கு பலிக்கட்டும் நன்றி கோபி

  ReplyDelete
 25. இம்மாதிரி ஆட்களை நடுரோட்டில் வைத்தே தண்டனை கொடுக்க வேண்டும் :-(// கிராமமாக இருந்து இருந்தால் நிச்சயம் நடந்து இருக்கும்

  ReplyDelete
 26. இவை எல்லாவற்றையும் விட பிணத்தின் உறவினருக்கு எத்தனை மன வேதனை இருந்திருக்கும்?பாவம் இந்தியா!!//

  நீங்கள் சொல்வது உண்மைதான் சசிரேகா தங்கள் கருத்துக்கு நன்றி

  ReplyDelete
 27. எல்லாரும் போனப்புறம் கடைசிய போலீஸ் வந்திருக்கும்...அவங்க பழக்த்தை மாத்துவாங்களா

  ReplyDelete
 28. எல்லாரும் போனப்புறம் கடைசிய போலீஸ் வந்திருக்கும்...அவங்க பழக்த்தை மாத்துவாங்களா//

  தெரியிலை பிரதாப் அது ஒரு பத்து நிமிடத்தில் நடந்த நிகழ்வு அப்படி புகார் கொடுக்க வேண்டும் என்றால் அக்கே ரோட்டு ஓரத்தில் உள்ளவர்கள்தான் கொடுக்க வேண்டும்... பகார் கொடுத்து திரும்பவும் தண்ணி போட்டு வீட்டு எதிரே வந்து தகராறு செய்தால் என்ன செய்வது?

  ReplyDelete
 29. //தமிழ் சினிமா வெள்ளை டாட்டா சுமோ ரவுடிகள் போன்ற எட்டு பேர் பிணத்தின் மீது இருந்த மாலையில் இருந்த பூக்களை எடுத்து அருகில் இருந்த எல்லோர் மீதும் வீசத்துவங்கினார்கள்...//

  இந்த எச்சக்கல நாய்கள் எப்பொழுது திருந்துவார்கள்...? இதுபோல் பொறுக்கிகள் தான் கவுன்சிலர்களாகாவும் அரசியல் தலைவர்களாகவும் உருவாகுவர்கள்...
  செல்வாக்கு உள்ளவனுக்கு குலகும்பிடு போட்டு கூலிக்கு ஆள் அடித்து உடல் திமிரேடுத்து... கடைசியல் போலீஸ் என்கவுன்டரிலோ அல்லது சக குண்டர்களிடடோ அடிபட்டு செந்துபோகும் இந்த மிருகங்கள்.... யாருக்கு தெரியும் இதில் திறமை (??) உள்ளவன் போலீஸ் மந்திரியாக கூட வராலாம்...

  ReplyDelete
 30. that is the inborn culture of so called tamils.living among tamilians.

  ReplyDelete
 31. naan puthusunga.. thamila karuthu eluthurathu eppadinu theriyala... seekiram therinjukittu vanthu eluthuraen.. intha maathiri nerathula satham illaama 200g molaga podiya vaangi avanuga moonjila thoovittu poidanum....

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner