மனதை கவர்ந்த சென்னை காசி தியேட்டர் ஓனர்...
நானும் என் மனைவியும் படம் பார்த்து பல நாட்கள் ஆகின்றன காதலித்த போது பார்த்த படங்கள் ஏராளம் ஆனால் திருமணம் ஆனதும் பார்த்த படங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்,பார்க்க நேரம் அமையவில்லை, அப்புறம் கண்ணை கட்டும் டிக்கெட் விலை.
ரொம்ப நாளைக்கு பிறகு அயன் படம் பார்க்கலாம் என்று எண்ணி படம்பார்க்க நானும் என் மனைவியும் காசி தியேட்டர் சென்றோம், காசி தியேட்டர் பற்றி என் சொந்த ஊர் கடலூரில் நான் சிறு வயதாக இருக்கும் போதே கேள்வி பட்டு இருக்கிறேன். அப்போது என் மாமா குடும்பம் மொத்தமும் விஜய் அப்பா சந்திர சேகர் இயக்கி நடிகை ராதிகா நடித்த நீதி்க்கு தண்டனை படம் பார்க்க போய் சின்ன பசங்களான என் மாமா பசங்களை தியேட்டருக்குள் அனுமதிக்க வில்லை. ஏனென்றால் அது ஏ சர்டிபிக்கேட் படம். நம்ம ஊரில் அந்த கதையெல்லாம் கிடையாது. அப்போதே அந்த தியேட்டர் பற்றி பிரமாண்டமாக நினைத்து இருக்கிறேன்
அதன் பிறகு சென்னை வந்து பல தியேட்டர்கள் பார்த்தாகி விட்டது, சென்னை வந்து காசி தியேட்டரில் கூட சேது படம் பார்த்ததாக ஞாபகம் அப்போது அந்த தியேட்டரின் ஸ்கிரின் ரொம்பவும் சின்னதாக இருந்தது அதன் பிறகு அன்பே சிவம் பார்த்த போது அந்த தியேட்டர் தன் முகத்தை மாற்றிக்கொண்டு விட்டது. டாய்லட்டுக்கெல்லாம் டைல்ஸ் போட்டு பெரிய திரை அமைத்து டிடிஎஸ் சவுண்டு எல்லாம் போட்டு பக்காவாக மாறி விட்டது. சமீபத்தில் நான் அந்த தியேட்டரில் நான் பார்த்த படம் வேட்டையாடு விளையாடு...
நான் நேற்று மாலை சென்னை காசி தியேட்டர் சென்றேன்
டிக்கெட் முடிந்து விட்டது... இருப்பினும் நான் மனைவியுடன் சென்றதால் நிறுத்தி வைத்த இரண்டு டிக்கெட்டுகள் கொடுத்தார்கள்.... அயன் படம் பார்க்க இரண்டு பாக்ஸ் டிக்கெட் எடுத்து உள்ளே சென்றால் அந்த பாக்சில் டிடிஎஸ் சவுண்ட் சரியாக கேட்கவில்லைஆனால் நான் தரை டிக்கெட்டில் கூட படம் பார்க்க தயார்.
தியேட்டர் ஹவு்ஸ்புல் ஆகிவிட்டதால் அது சாத்தியம் இல்லை என்பது எனக்கு தெரியும்.... இருந்தும் நான் டிக்கெட் கிழிப்பவரிடம் அரை மணி நேரத்தில் புக்கிங் குளோஸ் ஆகிவிடும் அப்போது வேறு எங்காவது இரண்டு சீட் காலியாக இருந்தால் அதில் உட்கார அனுமதி கேட்டேன்..... அவர் சூப்பரவைசரிடம் அனுமதி கேட்கச்சொன்னார். படம் அங்கே ஓடிக்கொண்டு இருந்தது.
சூர்யா பள பளக்கும் பகலா நீ பாட்டில் தெலுங்கு காஸ்ட்யுமில் டான்ஸ் ஆடிக்கொண்டு இருந்தார்.
சூப்பரவைசரிடம் கேட்டேன்....
“ அவர் கொடுத்த சீட்டு கொடுத்ததுதான் நீங்கள் அங்கேதான் உட்கார வேண்டும்”
என்று என்னை ரொம்ப கேவலமாக பார்த்து கத்தினார். அவர் தன்னை அமெரிக்கா நாசாவில் வேலை பார்ப்பதாக நினைத்து நடந்து கொண்டார்.
சார் சீட்டு ஏதாவது இருந்ததா கண்டிப்பாக உட்கார அனுமதிக்கிறேன் என்று அவர் சொல்லி இருக்க வேண்டும். அதுதான் அவர் வகித்த பதவிக்கு அழகு. என்னை போன்ற பார்வையாளர்கள் சென்றால்தான் அது காசி தியேட்டர் இல்லை என்றால் காசி கல்யாண மண்டபம் ஆகிவிடும். என்பதை அவர் மறந்து விட்டார்.
நான் நிர்வாகியை பார்க்க வேண்டும் என்று சொன்னேன் அந்த நேரத்தில் எனக்கு டிக்கெட் கொடுத்தவரே தீயேட்டர் ஓனர் சுப்ரமணி என்பதை அறிந்தேன் அவரிடம் அவர் சூப்பர்வைசர் எகிறியதை சொன்னேன்.
பார்வையாளரிடம்அவர் நடந்து கொண்ட விதத்தை சொன்ன போது அவர் சொன்னார் ஒன்னு புரி்ஞ்சிக்கோங்க இந்த வேலைக்கு படிச்சவன் எவனும் வேலைக்கு வர மாட்டேங்குறான். அப்படி வந்தாலும் காலையில 9 மணிக்கு வந்து 7 மணிக்கு வீட்டுக்க போக துடிக்கிறான்
காலையில10 மணிக்கு வந்து நைட் 12 மணிக்கு மேல போகற வேலை இது... இந்த மாதிரி ஆட்கள்தான் கிடைக்கிறாங்க.. நான் என்ன செய்ய? அவர் அப்படி பேசி இருக்க கூடாது என்றார் .
டிக்கெட் குளோஸ் ஆகி உங்களுக்கு டிக்கெட் கொடுத்ததுக்கு காரணம் பேமிலியா வந்து இருக்கிங்க.. இப்பெல்லாம் பேமிலியா படம் பார்க்க வர்றவங்க கம்மியாகிட்டாங்க...ஒரு பேமிலி படம் பார்க்க வந்து திரும்பி போனா அடுத்து அவுங்க படம் பார்க்க எப்படியும் 2 மாசம் கழிச்சிதான் வருவாங்க...
அதனால எந்த புது படம் காசியில வந்தாலும் 50 டிக்கெட் நிறுத்தி வச்சு பேமிலியா வர்றவங்களுக்கு கொடுத்து என் தியேட்டரை ஆறுமாசமா டெவலப் பண்ணி வச்சு இருக்கேன் என்றார். இது எவ்வளவு பெரிய விஷயம். அவர் சொன்னது போல் பால்கனி முழுவதும் நிறைய குடும்பத்தினரை காண முடிந்தது.
உங்களுக்கு நைட் ஷோவுக்கு டிக்கெட் மாத்தி தர்ரேன் என்று சொன்னார்,
நான் அவருக்கு நன்றி சொன்னேன். மனைவியோடு வீடு வந்து திரும்ப இரவு காட்சிக்கு போனோம்....
அவர் ரேஞ்சுக்கு இவ்வளவு டிடெய்ல் எல்லாம் எனக்கு சொல்ல வேண்டும் என்று அவசியம் இல்லை, அதே போல் தியேட்டரில் முன்பு போல் படம் ஓடும் போது ஏசி எல்லாம் ஆப் செய்யாமல் படம் முடியும் வரை ஏசி குறையாமல் இருந்தது.
கியுப் புரஜெக்ஷனில் படம் துல்லியமாக ஓடியது... டிடிஎஸ் சவுண்ட் ரொம்பவும் அற்புதமாக இருந்தது...
காசி தியேட்டர் ஓனர் சுப்ரமணி என் நினைவில் என்றும் இருப்பவர்.... பணம் எவரிடம் வேண்டுமானாலும் இருக்கும் அனால் ஒரு சிலரிடம் மட்டுமே பண்பை காண முடியும்.
எல்லாம் முடிந்து அயன் படம் இரவு பார்த்து விட்டு வீடு வரும் போது என்னையும் என் மனைவியும் அயன் பட இயக்குநர் கேவி ஆனந் எங்களை நன்றாக ஏமாற்றி விட்டார்....
அன்புடன்/ஜாக்கிசேகர்
Labels:
அனுபவம்
Subscribe to:
Post Comments (Atom)
நல்ல முறையான நடவடிக்கை
ReplyDeleteநன்றி இலா தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
ReplyDeleteஜாக்கிசேகர் உங்கள் அனுபவம் நன்றாக இருந்தது.
ReplyDeleteகாசி திரையரங்கு முதலாளி நடந்து கொண்ட விதமும் அருமை.
நன்றி கிரி தங்கள் கருத்துக்கு, வருகைக்கும் மிக்க நன்றி
ReplyDeleteமிக நன்றாக காசி தியேட்டர் ஓனர் நடந்து கொண்டார் கிரி
நல்ல மனிதர்.
ReplyDeleteஉண்மை சிவா ஒரு தலமை பண்பில் இருப்பவர் எப்படி நடந்த கொள்ள வேண்டுமோ அது போல் அவர் நடந்து கொண்டார்
ReplyDeleteசிலரிடம் இன்னும் மனிதம் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறது.. பதிவிற்கு நன்றி
ReplyDeleteபடம் பரவால்லன்னாங்களே? :)
ReplyDeleteஒரு நல்ல முதலாளி, நல்ல நிர்வாகியின் நடவடிக்கைதான் இது.
ReplyDeleteஅவருக்கு எங்கள் வாழ்த்து(க்)களும், நல்லவரை அறிமுகம் செஞ்சதுக்கு உங்களுக்கு இனிய பாராட்டுகளும்.
//பணம் எவரிடம் வேண்டுமானாலும் இருக்கும் அனால் ஒரு சிலரிடம் மட்டுமே பண்பை காண முடியும்.
ReplyDelete//
கண்டிப்பா
ஆச்சர்யபட வைக்கும் நடவடிக்கைதான்.
ReplyDeleteஅயன் பின்னனி இசை படு இரைச்சலா இருந்தது எனக்கு.
மையாளர் பாராட்டுக்கு உரியவர்.
ReplyDeleteஆனால் அதில் என்ன பாகுபாடு, குடும்பஸ்தன், தனி ஆள் வருகை என்று. எல்லாரும் மனிதர், திரை அரங்கின் வாடிக்கையாளர்.
காசி திரை அரங்கில் தான் ஒரு காலத்தில் எத்தனை வெற்றி படங்கள் ஓடின.
அபூர்வ சகோதர்கள், வெற்றி விழா, கரகாட்ட காரன், சின்ன தம்பி, அக்னி நட்சத்ரம்.
இன்று காசி, ஆல்பர்ட் போன்ற திரை அரங்குகள் பொலிவு இழந்து காணப் படுகின்றன.
ஆனால் அன்று இந்த திரை அரங்கு உரிமையாளர்கள், ஊழியர்கள் ரசிகர்களிடம் முதல் வாரம் காட்டிய பந்தாதான் என்ன.
இணையத்திற்கும், குருந்தக்டிர்க்கும், இல்லத்து திரை அரங்க அமைப்பிற்கும் கோடி நன்றிகள் சொல்ல வேண்டும்.
பொதுவாக திரை அரங்கு, உணவகம் போன்ற தொழில்களில் ஊழியர்க்கு குறைந்த சம்பளமே வழங்க படுகின்றன.
தகுந்த சம்பளம், வசதிகள் கொடுத்தால் ஊழியர்கள் ஏன் வேறு நிறுவனம் தேட போகிறார்கள். ஊழியர்களின் இட மாற்றத்திற்கு காரணம் உரிமையாளர்களே.
kuppan_யாஹூ
சிலரிடம் இன்னும் மனிதம் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறது.. பதிவிற்கு நன்றி--///
ReplyDeleteநன்றி லோயர் தங்கள் வருகைக்கு தங்கள் கருத்துக்கும்
படம் பரவால்லன்னாங்களே? :)//
ReplyDeleteஎந்த உலக கினிமா பார்க்காதவர்களுக்கு இந்த படம் ஒரு புது வித அனுபவம். அதில் சொன்ன கதைகளங்கள் உள்ள படத்தினை நான் பார்த்து விட்டேன் அதனால்தான் சர்வேசன் அப்படி எழுத நேர்ந்தது...
ஒரு நல்ல முதலாளி, நல்ல நிர்வாகியின் நடவடிக்கைதான் இது.
ReplyDeleteஅவருக்கு எங்கள் வாழ்த்து(க்)களும், நல்லவரை அறிமுகம் செஞ்சதுக்கு உங்களுக்கு இனிய பாராட்டுகளும்.//
நன்றி துளசி கோபால் தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் என் நன்றிகள்
ஆச்சர்யபட வைக்கும் நடவடிக்கைதான்.
ReplyDeleteஅயன் பின்னனி இசை படு இரைச்சலா இருந்தது எனக்கு.///
குடுகுடுப்பை நீங்கள் சொல்வது உண்மைதான்... ஒலிப்திவை விட படத்தின் ஒளிப்பதிவு மிக அருமை...
//பணம் எவரிடம் வேண்டுமானாலும் இருக்கும் அனால் ஒரு சிலரிடம் மட்டுமே பண்பை காண முடியும்.
ReplyDelete//
கண்டிப்பா/
நன்றி பித்தன் தங்கள் வருகைக்கு...
மையாளர் பாராட்டுக்கு உரியவர்.
ReplyDeleteஆனால் அதில் என்ன பாகுபாடு, குடும்பஸ்தன், தனி ஆள் வருகை என்று. எல்லாரும் மனிதர், திரை அரங்கின் வாடிக்கையாளர்.//
இல்லை குப்பன் குடும்பத்தோடு படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை முன்பு எப்போதும் இருந்ததை விட இப்பேது ரொம்பவும் குறைவு...
மாமனார் மாமியார் பர்மிஷன் வாங்கி தியேட்டர் வந்து திரும்பி போக கூடாது என்ற நல்ல எண்ணத்தில்தான்...
ஆனால் அன்று இந்த திரை அரங்கு உரிமையாளர்கள், ஊழியர்கள் ரசிகர்களிடம் முதல் வாரம் காட்டிய பந்தாதான் என்ன.//
ReplyDeleteகுப்பன் மறுக்க முடியாத உண்மை இது...
நீங்கள் சொன்னது போல் குறுந்தட்டு வந்து நம் அனைவர் குடும்ப மானத்தை காப்பாற்றியது ...
குப்பன் விரிவான கருத்துக்க என் நெஞ்சார்ந்த நன்றிகள்
ReplyDeletenalla manitharaaga irukkiraare.. adhu sari ayan padatthukku enna kurai?
ReplyDelete//காசி தியேட்டர் ஓனர் சுப்ரமணி என் நினைவில் என்றும் இருப்பவர்.... பணம் எவரிடம் வேண்டுமானாலும் இருக்கும் அனால் ஒரு சிலரிடம் மட்டுமே பண்பை காண முடியும்.//
ReplyDeleteபண்பு இல்லாதவனிடம் இருக்கும் பணம் என்பது பேப்பருக்கு சமம்... இவர் போல் உள்ளங்களும் இவரது அன்புக்குடும்பமும் பல்லாண்டு வாழ்க வேண்டும்...
நல்ல பதிவு ஜாக்கியாரே..!
ReplyDeleteபத்தாண்டுகளுக்கு முன்பாக அங்கே வாராவாரம் வரும் அனைத்துப் படங்களையும் பார்த்திருக்கிறேன்..
தியேட்டர் பராமரிப்பு முன்புக்கு இப்போது பரவாயில்லைதான்..
தியேட்டர் ஓனர் கண்டிப்பாக பாராட்டுக்குரியவர்..
அயன் படத்தை நான் இன்னும் பார்க்காததால் பார்த்த பின்பு கே.வி.ஆனந்த் பற்றிய உங்களது கமெண்ட்டுக்கு பதில் சொல்கிறேன்..
nalla manitharaaga irukkiraare.. adhu sari ayan padatthukku enna kurai?
ReplyDeletethanks adhavan
you seee
catch me if you can, maria full of gress ponra padangal parungal appuram theriyum
பண்பு இல்லாதவனிடம் இருக்கும் பணம் என்பது பேப்பருக்கு சமம்... இவர் போல் உள்ளங்களும் இவரது அன்புக்குடும்பமும் பல்லாண்டு வாழ்க வேண்டும்...
ReplyDeletethanks tamil saravanan
i agree sir
பத்தாண்டுகளுக்கு முன்பாக அங்கே வாராவாரம் வரும் அனைத்துப் படங்களையும் பார்த்திருக்கிறேன்..
ReplyDeleteதியேட்டர் பராமரிப்பு முன்புக்கு இப்போது பரவாயில்லைதான்..
தியேட்டர் ஓனர் கண்டிப்பாக பாராட்டுக்குரியவர்..
thank unmai thamilan,
thanks your remembernes
கண்ராவிகளை விமர்சிக்கும் போது நல்லவற்றையும் பகிர வேண்டும்.
ReplyDeleteஅருமை பதிவு ஜாக்கி.
விடா கொண்டானா அயன் பார்த்தாச்சு...
வாழ்த்துகள்.
கண்ராவிகளை விமர்சிக்கும் போது நல்லவற்றையும் பகிர வேண்டும்.
ReplyDeleteஅருமை பதிவு ஜாக்கி.
விடா கொண்டானா அயன் பார்த்தாச்சு...
வாழ்த்துகள்.-//
நன்றி வண்ணத்து பூச்சி வேறென்ன செய்யறது...
//எல்லாம் முடிந்து அயன் படம் இரவு பார்த்து விட்டு வீடு வரும் போது என்னையும் என் மனைவியும் அயன் பட இயக்குநர் கேவி ஆனந் எங்களை நன்றாக ஏமாற்றி விட்டார்....
ReplyDeleteஏன் ஜாக்கி?