சனிக்கிழமை ( 24/04/09)பதிவர் சந்திப்பு ஒரு பார்வை....பொதுவாக ஞாயிறு மாலை நடைபெறும் பதிவர் சந்திப்பு இந்த முறை சற்றே முந்திக்கொண்டு சனிக்கிழமை நடந்தது, இது எனது மூன்றாவது பதிவர் சந்திப்பு...இரண்டு மூறை மறத்தமிழனாய் தியேட்டரில் படம் போட்டு கால் மிதித்து மன்னிப்பு கேட்டு உட்கார்ந்து படம் போட்டு பத்து நிமிஷம் இருக்கமா? என்ற கேனக்கேள்வி கேட்பவன் போலதான் நான் பதிவர் சந்திப்புக்கு போய் இருக்கிறேன்.

அதனால் இந்த முறை எப்படியும் முன்பே போய் விட வேண்டும் என்று மெரினா சாலையில் விரைந்து காந்தி சிலை சென்ற போது மொத்தம் 4 பேர் இருந்தார்கள் அப்போது மணி 5,10 என்க்கு ரொம்ப சந்தோஷம்....

ஆசிப் மீரான் , செல்வேந்திரன், மற்றம் இரண்டு பேர்.
நிறைய பேர் வந்த கொண்டு இருந்ததாலும் நிறைய பேசியதாலும் பெயர்கள் இயல்பாய் மறந்து விட்டன மன்னிக்கவும் ,மன்னிக்கவும் ...

ஜெயரோம் சுந்தர், காவேரிகனேஷ் அக்னிபார்வை, பாலபாரதி,செல்லமுத்து குப்புசாமி(கிழக்கு பதிப்பக பிரபாகரன் புத்தகம் எழுதியவர்) , பைத்தியக்காரன் , தண்டோரா, வால்பையன் மூத்த பதிவர் சிவஞானம், வெயிலான்,டோண்டு,லக்கிலுக்,புருனோ,அதிஷா,அப்துல்லா,நர்சிம்,தமிழ் ஸ்டுடியோ அருன்,
ஸ்ரீ,கேபிள் சங்கர் போன்றவர்கள் வந்ததும் பதிவர் சந்திப்பு கலை கட்ட தொடங்கியது....


பொதுவாக இந்த முறை பழம் தின்று கொட்டை போட்ட பதிவர்கள் எல்லோரும் ஒத்துக்கொண்ட விஷயம்இந்த சந்திப்பு போல் எப்போதும் கூட்டம் இருந்தது இல்லை என்று, அதாவது 40பேருக்கு மேல் வந்து இருந்தார்கள்...


முன்பு எல்லாம் பதிவர் சந்திப்பு என்றால் 5 பேர் பத்து பேர்தான் வருவார்கள் என்று சொன்னார்கள்

வழக்கம் போல் டோண்டு தன் கைப்புத்தகத்தை கொடுத்து அனைவர் பெயரையும் எழுத சொன்னார் நான் பார்த்த சந்தித்த பதிவர்களிளேயே, சின்சியர் சிகாமணி டெடிகெஷன்னு சொன்னா இந்த விஷயத்துல டொண்டு சார்தான்,

எங்களிடம் கூட ஒரு அலட்சியம் குடி கொண்டு இருக்கும் அவர் எப்போதும் வந்தாலும் பதிவர்கள் பெயரை கேட்டும் அவர்கள் டீடெயில் வாங்கி உடனே வீட்டுக்கு போய் பதிவு போடுவதில் அவருக்கு நிகர் அவரே..

பதிவர்சந்திப்பில் எனக்கு பிடித்த விஷயம் கலைஞரை திட்டினவனும் ஜெயலலிதாவுக்கு வக்காலத்து வாங்கியவனும் ஒன்னா நின்னு சிகரெட்டும் டீயும் குடிப்பாங்க...

இதுதான் ஆரோக்யம், இந்த நட்புக்காகவே எத்தனை முறை வேண்டுமானாலும் போய் பதிவர் சந்திப்பில் கலந்து கொள்ளலாம்...

வால்பையன்ன ஒரு கேரக்டர்தான் இந்த முறை என்க்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியவர்,. அவர் பதிவுல லாங்ஷாட்ல சின்ன பையன் போல போட்டோ போட்டு இருந்தார் நானும் ரொம்ப சின்ன பையன் நினைச்சிட்டேன்,ரொம்ப இல்ல கொஞ்சம்தான் சின்ன பையன் காது பக்கம் கொஞ்சம் நரைச்சிறுக்கு...

டோண்டு என்னோடு அறிமுகம் அவும் போது காசி தியேட்டர் ஓனர் நலமா என்று கூசாலம் விசாரித்தார்...

அப்புறம் எல்லோரும் அறிமுகப்படலம் நடந்தது எல்லோரும் உள்ளேன் அய்யா என்று பள்ளி்யில் பெயர் சொல்வது போல் கைஉயர்த்தி பெயர் சொன்னார்கள்.

நான் வந்ததும் சில போட்டோக்கள் எடுத்தேன் நான் போட்டோ எடுக்கும் போது கொஞ்சம் அட்டேன்ஷனில் வந்தார்கள் எனென்றால் நான் போட்டோகிராபர் என்பதால் ஆனால் கொண்டு போனது டப்பா கேமரா அனால் அடுத்த முறை பதிவர்கள் போட்டோவை தெள்ளதெளிவாக எடுத்து அவர்கள் பற்றிய கருத்துக்களை எழுதுகிறேன்...


அரசியல்வாதி போல் கஞ்சி போட்டோ வெள்ளை சட்டை வெள்ளை வேட்டியில் முத்த பதிவர் சிவானம் வந்து இருந்தார் ....

ஈழத்தை பற்றிதான் டாபிக் இருந்தது பதிவர்சந்திப்பில் சூடாக எதாவது விவாதிப்பார்கள் என்றால் அப்படி எதும் கிடையாது விவாதிப்பு என்றால் அது ஒரு சிறு சிறு குழுவாக விவாதிக்க ஆரம்பிப்பார்கள் அது அவர்கள் என்ன ஓட்ட அலைகளுக்கு செட் ஆனாவர்கள் அந்த குழுவில் இருப்பார்கள்... அதே போல் உண்மையான விவாதம் அல்லது கலை கட்டுதல் என்றால் லைட்ஹவுஸ் பக்கத்தில் இருக்கும் டீக்கடைதான்.

நான் எப்போதும் ஒரு குழுவில் பேசினாலும் மற்ற குழுக்களில் என்ன டாபிக் ஓடுகின்றது என்று எட்டிப்பார்பது வழக்கம்...நான், அக்னிபார்வை புருனோ, பைத்தியக்காரன் தண்டோரா என்று குழுவாக பேசிக்கொண்டு இருந்தோம், செல்வமுத்து குப்புசாமி ரொம்பவும் பேசுவதற்க்கே கூச்சப்பட்டதால் அவரிடம் பேசிக்கொண்டு இருந்தேன்..

பீச்சில் நல்ல கூட்டம் லீ்வ் வேறு விட்டு விட்டதால் டாடி பீச்சக்கு கூட்டிட்டு போங்க போன்ற வேண்டுகோள்களை ஒருவாரத்துக்கு கேட்டு கொண்டுஅதற்க்காக பிள்ளைகளை பீச்சுக்கு கூட்டிக்கொண்டு வந்தவர்கள் ஏராளம்... அழகான பெண்களாய் இருக்கிறார்கள் ஆனால் கையில் ஒரு குழந்தை வைத்து இருக்கிறார்கள் எப்படி? என்று தெரியவில்லை...

40 பேர் கொண்ட கூட்டம் என்பதால் சுண்டல் பையன்கள் இலங்கை ராணுவம் போல் சுற்றி வளைத்து முகத்துக்கு நேரே சுண்டல் பாத்திரத்தை நீட்டி அண்ணா சுண்டல் என்றார்கள்... நாங்கள் சோனியா மன்மோகன் போல் எதற்க்கும் மசியவில்லை என்பது குறிப்பிடதக்கது...

இதற்க்கு நடுவில் ரெண்டு வாண்டுங்க புடிக்கிற ஆட்டம் வெளையாடுச்சிங்க அதுங்க மறைச்சிக்கறதுக்கு பதிவர் சந்திப்பு கூட்டத்தல வந்து மறைச்சிக்கிட்டு ஆட்டம் ஓட்டம் காட்டி கொண்டு இருந்துச்சிங்க..

வேலை வாய்ப்பு கேள்வி குறி ஆனதால் ஐகாக்ஸ் வளாகம் தவிர்த்து காந்தி சிலை பின்பு இரண்டு நவ நாகரிக பெண்கள் உட்கார்ந்து ஒரு பையணிடம் பேசிக்கொண்டு இருந்தார்கள் உடம்பு நன்றாக காற்று வாங்கும் உடை அணிந்து இருந்தார்கள். நம் கழுகு கண்ணக்கு தப்பவில்லை.. ஒரு பெண் முன்பக்கம் பாதி காற்று வாங்வது போல் உடை அணிந்து இருந்தால் இன்னோரு பெண் பின்பக்கம் முழுவதும் திறந்து வைத்து இருந்தாள்.பதிவர்கள் லைட்ஹவுஸ் டீக்கடைக்கு போகும் போது இந்த காட்சியை பார்த்து இருக்கலாம் பார்த்தவர்களுக்கு மச்சம் பார்க்காதவர்களுக்கு மச்சம் இல்லை அவ்வளவுதான்.

லைட்ஹவுஸ் டீக்கடையில் காரசாரமான சிறு குழு விவாதங்கள் நடைபெற்றன. நான், அக்னி ,புருனோ, ஊர்சுற்றி,தன்டோரோ, தமிழ் குரல் போண்றவர்கள் நிறைய பேசினோம் , பாலபாரதி, லக்கி,அதிஷா,கேபிள் சங்கர் போண்றவர்கள் விடை பெற்றார்கள்..

என்னவோ தெரியவில்லை இந்த சந்திப்பில் திடிர் அறிமுகமாய் மருத்துவர் புருனோவோடு நான் அதிகம் நட்பு பாராட்டினேன்... அப்புறம் அவரரைசென்னை மருத்துவக்கல்லூரியில் அவர் அறையில் விட்டு விட்டு, விருந்தோம்பலாய் தண்ணீர் காரசேவ் கொஞ்சம் சாப்பிட்டு விட்டு, சில பதிவர் கைபேசி எண்கள் வாங்கி கொண்டு, பூந்த மல்லி சாலையில் இரவு பத்து மணிக்கு வண்டியில் வேகம் கூட்ட சில்லென காற்று முத்த மிட்டது

எவ்வளவுதான் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் நேரில் பார்க்கும் போது நட்பு பாராட்டவதும், அப்த ரெக்கர்ட் விஷயங்கள் மனம் விட்டு பேசவும், நம் கருத்துக்களை எந்த சோடைனையும் இன்றி பறிமாறவும் வலைபதிவர் சந்திப்பு வாரா வாரம் நடத்தபட வேண்டும்

வாரா வாரம் பதிவர் சந்திப்பு நடத்தலாம். நானும் கலந்து கொள்ளலாம் ஆனால் என் மனைவி பத்திரக்காளியாக மாறி விடுவாள்...காளி வேஷத்தை விட என் மனைவிக்கு மதுரை மீனாட்சி வேஷம் மிக பொறுத்தமாய் இருக்கும் அதனால் பாத்து செய்யுங்க... அதே போல வாரா வாராமான்றதையும் முடிவு செய்யுங்க...


அன்புடன் /ஜாக்கிசேகர்

34 comments:

 1. நிச்சய்ம் சந்திக்க்லாம்..மாத்மொருமுரை என்கிர போது இருக்கும் பரபரப்பு வாரமொருமுறை என்றால் வருமா?

  ReplyDelete
 2. ஹாப் தெ ரெக்கார்டாக சந்த்திதுக்கொல்லலாம்.

  ReplyDelete
 3. ஏன்யா என்னைய படம் எடுக்கலயோ

  ReplyDelete
 4. ஹாப் தெ ரெக்கார்டாக சந்த்திதுக்கொல்லலாம்.--// நிச்சயமாக அக்னி

  ReplyDelete
 5. ஏன்யா என்னைய படம் எடுக்கலயோ //

  முதல்ல பத்து படம் எடுத்தன் அப்புறம் பேச்சு சுவாரஸ்யத்துல மறந்துட்டேன் மன்னிக்கவும்

  ReplyDelete
 6. பதிவிற்கு நன்றி ஜாக்கி.

  ReplyDelete
 7. பதிவர்களீன் போட்டோ கீழே பெயர் போட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும் சேகர்..

  ReplyDelete
 8. //கலைஞரை திட்டினவனும் ஜெயலலிதாவுக்கு வக்காலத்து வாங்கியவனும் ஒன்னா நின்னு சிகரெட்டும் டீயும் குடிப்பாங்க...//

  இரண்டுபேருமே ஒரே குரூப்தானே?!!!!

  ReplyDelete
 9. சந்திப்பு பற்றிய நல்லதொரு விரிவான பதிவு!

  ReplyDelete
 10. டக்ளஸ்....... said...//பதிவர்களீன் போட்டோ கீழே பெயர் போட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும் சேகர்..//

  எங்களையெல்லாம் யார்யாருன்னு தெரிஞ்சுக்க அம்புட்டு ஆர்வமா?!!

  ReplyDelete
 11. நான் இல்லாமலே இருந்ததாக உண்ர்கிறேன் உங்கள் பதிவில்

  ReplyDelete
 12. நல்ல பதிவு, சேகர்.
  அழகான வர்ணனை.
  புகைப்படங்களுக்கு கீழே யார் யார் என பெயர் போட்டிருக்கலாம்.
  //
  பதிவர்கள் லைட்ஹவுஸ் டீக்கடைக்கு போகும் போது இந்த காட்சியை பார்த்து இருக்கலாம் பார்த்தவர்களுக்கு மச்சம் பார்க்காதவர்களுக்கு மச்சம் இல்லை அவ்வளவுதான்.
  //
  2009-ல கூட பாக்குறதுக்கு மச்சம் வேணும்னு பேசி திரியிறாங்க? ... சரி விடுங்க. எதுக்கு பிரச்சினை?

  ReplyDelete
 13. என்னங்க??? படத்துல எல்லாரும் இம்புட்டு பெரியவங்களா இருக்கீங்க??? ஏற்கனவே பதிவர் சந்திப்ன்னாலே பயமா இருக்கும்.. இவ்ளோ பெரியவங்க இருந்தா என்ன மாதிரி சின்ன பசங்க எல்லாம் எப்படிங்க ஒட்டுவோம் தல??? (இதுவரை ஒரு பதிவர் சந்திப்புகூட நான் கலந்து கொள்ளாத்தற்கு இதுவே காரணம் தல..)

  ReplyDelete
 14. பதிவிற்கு நன்றி ஜாக்கி :).

  ReplyDelete
 15. பதிவர்களீன் போட்டோ கீழே பெயர் போட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்

  ReplyDelete
 16. உங்களுக்கு எந்தப் பாதிப்பும் வராத வகையில் பதிவர் சந்திப்பை நடத்தி விடலாம். அருமையான பதிவு.

  ஸ்ரீ....

  ReplyDelete
 17. தல எல்லாம் சரி அடுத்த தடவை நல்ல போட்டாவ எடுக்கனும் தொழில் நுட் பதிவுகள் எங்கே

  ReplyDelete
 18. கடைக்குட்டி... என்னங்க நீங்க.
  நானெல்லாம் அங்க வந்திருந்தவங்க எல்லாத்துலயும் கடைக்குட்டி தெரியுமா? நிச்சயமா உங்களை விட கடைக்குட்டியாத்தான் இருப்பேன். நீங்க தாராளமா வரலாம்.
  என் புரொஃபைல் படத்தை பாருங்க உங்களுக்கே புரியும். :)))

  ReplyDelete
 19. பதிவிற்கு நன்றி ஜாக்கி.--//

  நன்றி பூச்சியார்

  ReplyDelete
 20. பதிவர்களீன் போட்டோ கீழே பெயர் போட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும் சேகர்..//

  டக்ளஸ் பெயர் போட்டு இருந்தால் நன்றாக இருந்து இருக்கம் இது ஒரு அவசர பதிவு

  ReplyDelete
 21. //கலைஞரை திட்டினவனும் ஜெயலலிதாவுக்கு வக்காலத்து வாங்கியவனும் ஒன்னா நின்னு சிகரெட்டும் டீயும் குடிப்பாங்க...//

  இரண்டுபேருமே ஒரே குரூப்தானே?!!!!//

  உண்மைதான் ஊர் சுற்றி

  ReplyDelete
 22. enjoyed your article// நன்றி க்ரு கேர்

  ReplyDelete
 23. சந்திப்பு பற்றிய நல்லதொரு விரிவான பதிவு!// நன்றி வெயிலான் தங்கள் வருகைக்கு

  ReplyDelete
 24. நான் இல்லாமலே இருந்ததாக உண்ர்கிறேன் உங்கள் பதிவில்//

  நன்றி சுரேஷ் தங்கள் வாழ்த்துக்கு

  ReplyDelete
 25. 2009-ல கூட பாக்குறதுக்கு மச்சம் வேணும்னு பேசி திரியிறாங்க? ... சரி விடுங்க. எதுக்கு பிரச்சினை?// நன்றி ஜோ நீங்கள் அப்படி வர்றிங்களா?

  ReplyDelete
 26. என்னங்க??? படத்துல எல்லாரும் இம்புட்டு பெரியவங்களா இருக்கீங்க??? ஏற்கனவே பதிவர் சந்திப்ன்னாலே பயமா இருக்கும்.. இவ்ளோ பெரியவங்க இருந்தா என்ன மாதிரி சின்ன பசங்க எல்லாம் எப்படிங்க ஒட்டுவோம் தல??? (இதுவரை ஒரு பதிவர் சந்திப்புகூட நான் கலந்து கொள்ளாத்தற்கு இதுவே காரணம் தல..)//

  கடைக்குட்டி நீங்கள் என்ன சொல்ல வர்றீங்க எல்லாம் பால் மனம் மாறத பாலகர்கள்தான் கலந்து கொண்டவர்கள் எல்லாம்

  ReplyDelete
 27. பதிவிற்கு நன்றி ஜாக்கி :).//

  நன்றி பட்டாம் பூச்சி

  ReplyDelete
 28. பதிவர்களீன் போட்டோ கீழே பெயர் போட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்//

  உண்மை மலர் சனிக்கிாமை எழுத வேண்டியதை இன்று காலை தான் போட முடிந்தது டைம் இல்லை

  ReplyDelete
 29. உங்களுக்கு எந்தப் பாதிப்பும் வராத வகையில் பதிவர் சந்திப்பை நடத்தி விடலாம். அருமையான பதிவு.//
  நன்றி ஸ்ரீ

  ReplyDelete
 30. தல எல்லாம் சரி அடுத்த தடவை நல்ல போட்டாவ எடுக்கனும் தொழில் நுட் பதிவுகள் எங்கே// கண்டிப்பாக சிந்தாமணி

  ReplyDelete
 31. //இதுதான் ஆரோக்யம், இந்த நட்புக்காகவே எத்தனை முறை வேண்டுமானாலும் போய் பதிவர் சந்திப்பில் கலந்து கொள்ளலாம்...
  //

  //எவ்வளவுதான் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் நேரில் பார்க்கும் போது நட்பு பாராட்டவதும், அப்த ரெக்கர்ட் விஷயங்கள் மனம் விட்டு பேசவும், நம் கருத்துக்களை எந்த சோடைனையும் இன்றி பறிமாறவும் வலைபதிவர் சந்திப்பு வாரா வாரம் நடத்தபட வேண்டும்//

  மாதம் ஒரு முறை நடத்தலாம் :)

  ReplyDelete
 32. அண்ணே நம்புங்க!
  நான் சின்னப்பையன் தான்!

  ReplyDelete
 33. //கலைஞரை திட்டினவனும் ஜெயலலிதாவுக்கு வக்காலத்து வாங்கியவனும் ஒன்னா நின்னு சிகரெட்டும் டீயும் குடிப்பாங்க...//

  well said


  /
  வாரா வாரம் பதிவர் சந்திப்பு நடத்தலாம். நானும் கலந்து கொள்ளலாம் ஆனால் என் மனைவி பத்திரக்காளியாக மாறி விடுவாள்
  /

  பாத்து சூதனமா பொழைச்சிக்கங்க!
  :))))))))

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner