கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (ஏடிஎம்)


கால ஓட்த்தில் காணாமல் போனவை எழுதும் போதே கால ஓட்த்தில் புதிதாய் வந்தவையையும் எழுதுவது தானே முறை அதனால் கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவைகளை எனது பார்வையில் எழுத போகிறேன்.

உலகில் மாற்றம் என்பது மட்டுமே மாறாதது என்பதுதான் உலகில் மாற்றவே முடியாத விதி.

நீங்கள் சேமிக்கும் பணத்தை பாதுகாப்பாக வைக்கும் இடம் தேசிய மயமாக்கப்ட்ட வங்கிகள்தானே அப்படி பட்ட வங்கிகளில் பணம் எடுக்க வேண்டம் என்றால் அவ்வளவுதான் எழு கடல் எழு மலைதாண்டி கிளி உயிரை எடுத்து வரும் விஷயம். அதுவும் சனிக்கிழமை என்றால் 11.30 வரைக்கும்தான் அன்னைக்கு வேற பேங்குல கூட்டம் அல்லும்.

கவுன்டரின் உள்ளே இப்படித்தான் சம்பாஷனைகள் நடக்கும்...

நங்க நல்லூர் ஒரு கிரவுண்டு இடம் இருக்காம் நீ வாங்கிக்கிறியா?

அட நீங்க வேற பையனுக்கு வாங்கின லோனே மாசம் ஆன கழுத்தை கடிக்கிது...

ஒரு காலத்துல காடா இருந்த இடம் அந்தப்பக்கம் போகவே அப்பெல்லாம் பயமா இருக்கும்

இது ஆண்களின் சம்பாஷனை...

இதுவே பெண்களின் சம்பாஷனை வேறு மாதிரியாக இருக்கும்....

“மேடம் கொஞ்சம் சிக்கரம் பணம் எண்ணி கொடுங்க மேடம்”
நான் என்ன பத்ரகாளியா பத்துக்கை இருக்க நான் மனுசி சார் அத புரிஞ்சிக்கோங்க... அவசரத்துல ஒரு நோட்டு தப்பா வந்துட்டா நீங்க நேர்மையா கொடுத்துடுவிங்கலா? பணம்சார் உங்க வேகத்துக்கு எல்லாம் என்னால ஆட முடியாது.....

பெண் ஊழியர்களையும் குத்தம் சொல்ல முடியாது ஆனால் அவர்கள் பணத்தை மிக மெதுவாக எண்ணுவார்கள்.

காலையில வேலைக்கு போகனும் என்று புருஷனிடம் கெஞ்சியும் மீறி ஏதாவது நடந்து இருக்க வேண்டும்

அது அப்பட்டமாய் வெளியே தெரியும், தலை காய்ந்தவனிடம் எல்லாம் எறிந்து விழுவார்கள் ..

“ஏன் சார் ஒரு டேட்டை கூட பில்லப் கூட செய்யாம செலனை நீட்டறிங்க”?
என்று சொல்ல டென்ஷன்ல மறந்துட்டேன் என்று இவர் தன்னிலை விளக்கம் வேறு கொடுக்க அப்புறம் சண்டை நடக்க ஒரே காமெடியாக இருக்கும்...


எல்லா குறைகளையும் தீர்க்க ஏடிஎம் வந்தது அனைவர் வயிற்றிலும் பீர் வார்த்தது...

டேட் எழுதவில்லை என்ற சண்டை இல்லை, அவசரத்துக்கு பேனா எடுக்காமல் போய் எவரிடமும் வழிய வேண்டாம். மிக முக்கியமாக 100 ரூபாய் எடுக்க கால் கடுக்க கவுண்டரில் காத்து இருக்க தேவை இல்லை...
ரெகுலர் கஸ்டமர் என்றால் கவுண்டர் பின்புறம் போய் பணம் கட்டி விட்டு வரலாம்... இங்கு அப்படி இல்லை .இது மெஷின்....


எல்லோலரயும் எண்களாக ஞாபகம் வைத்துக்கொண்டு தாள்களாக கொடுக்கும் அதிசயம்.. ராமசாமியும் ஜாபர் அலியும் இதற்க்கு ஒன்றுதான்.

என்ன ஒரு குறை ஏட்டிஎம்மில் பணம் எடுத்து பர்ச்செஸ் போகலாம் என்று கையில் 100 வைத்துக்கொண்டு ஏட்டிஎம் சென்றால் நெட் ஒர்க் பெயிலர் நியரஸ்ட் ஏட்டி்எம்முக்கு செல்லவும் அங்கு சென்றால் இதே நிலமைதான்.

எவனோ ,

“உன் பணத்தை உன் முகத்துல இன்னும் பத்து நிமிஷத்துல வீசி எறியறேன் இல்லைன்னா நான் ரத்ன வேலுக்கு பொறக்கலடா”

என்று தொடை சவால் வீட்டு பணம் எடுக்க ஏடிஎம் வந்து நெட் ஒர்க் பெயிலியர் என்றால் எவ்வளவு ஆத்திரம் வரும் விளைவு


வடபழனி கே கே நகர் அசோக் பில்லர் கனாரா பேங்க் ஏடிஎம் டிஸ்பிளேக்களில் கோப முத்திரையாக சாவியால் கோடு கிழித்து இருப்பதை இன்றும் காணலாம்



ஏடிஎம் என்றால் எனி டைம் மணி என்று அர்த்தம்.....

எனது ஏடிஎம் கவிதை....




ஒவ்வோறுமுறை ஏடிஎம்மில்
பணம் எடுக்கும் போதும்
எடுக்கும் தொகையை விட
ஒருதாளாவது அதிகம்
இருக்கும் என்று
திரும்ப திரும்ப
சலிக்காமல் இன்றுவரை
எண்ணுகிறேன்....

என்ன செய்வது அது
என்னை விட பெரிய பிராடு போலும்...


அன்புடன்/ ஜாக்கிசேகர்

13 comments:

  1. அன்பு ஜாக்கி.

    Automatic Teller Machine க்கு Any Time Money என்கிற உங்கள் பெயரும் சுவாரஸ்யமாகத்தான் இருக்கிறது.

    சமீபத்திய RBI உத்தரவு, ஏப்ரல் 1 முதல் எந்த வங்கி ATM கார்டையும் எந்த வங்கியின் ATM மெஷினிலும் பயன்படுத்தலாம் என்றது.

    ஆனால் இன்னும் பல வங்கி ATM களில் இந்த வசதி முறையாக்கப்படவில்லை. செயல்படுத்தும் முறை தெரியாதவர்கள் என்ன ____________க்காக புதிய வசதிகளை கொண்டு வருகிறார்கள் என்றே புரியவில்லை. Kotak Mahindra Bank ATM ல் Karur Vysya Bank ATM கார்டை பயன்படுத்தி நேற்று பணம் எடுத்தேன். ஆனால் தாதாக்களான, ICICI மற்றும் SBI ATMகளில் செல்லுபடியாகவில்லை. இதைப்பற்றியும் எழுதுங்களேன்.

    அன்பு நித்யன்

    ReplyDelete
  2. நான் சொல்ல வந்த இரு விசயத்தையும் நித்யகுமாரன் சொல்லிட்டார்.

    இன்னும் அது போல் பணம் பிடித்தால் முறையீட்டு உரிய நடவடிக்கை எடுக்கலாம் நித்யா... விசாரித்து பாருங்கள்...

    ReplyDelete
  3. இப்ப நிறைய பேருக்கு பேங்கல போயி பணம் எடுக்க தெரியல...

    ReplyDelete
  4. ATM கார்டை பயன்படுத்தி நேற்று பணம் எடுத்தேன். ஆனால் தாதாக்களான, ICICI மற்றும் SBI ATMகளில் செல்லுபடியாகவில்லை. இதைப்பற்றியும் எழுதுங்களேன்.-//

    முயற்ச்சி செய்கிறேன் நித்யா

    ReplyDelete
  5. ஆனால் இன்னும் பல வங்கி ATM களில் இந்த வசதி முறையாக்கப்படவில்லை. செயல்படுத்தும் முறை தெரியாதவர்கள் என்ன ____________க்காக புதிய வசதிகளை கொண்டு வருகிறார்கள் என்றே புரியவில்லை.//

    அந்த டேஷ்ல் என்ன போடுவது நித்யா
    மயிரா?

    ReplyDelete
  6. இன்னும் அது போல் பணம் பிடித்தால் முறையீட்டு உரிய நடவடிக்கை எடுக்கலாம் நித்யா... விசாரித்து பாருங்கள்...//

    விசாரித்து அந்த அம்பது ரூபபய் வாங்குவதுக்குள்ள தாவு தீந்திடும், நன்றி நாகை சிவா

    ReplyDelete
  7. இப்ப நிறைய பேருக்கு பேங்கல போயி பணம் எடுக்க தெரியல...//

    சரியா சொன்னிங்க சரவனகுமாரன் நன்றி

    ReplyDelete
  8. ///

    ஆனால் இன்னும் பல வங்கி ATM களில் இந்த வசதி முறையாக்கப்படவில்லை. செயல்படுத்தும் முறை தெரியாதவர்கள் என்ன ____________க்காக புதிய வசதிகளை கொண்டு வருகிறார்கள் என்றே புரியவில்லை.//

    அந்த டேஷ்ல் என்ன போடுவது நித்யா
    மயிரா?

    ///

    ஜாக்கிண்ணா நீங்க இவ்வளவு டீசண்டாவனர்னு நான் இப்பதான் தெரிஞ்சுக்கிட்டேன்..

    வாழ்க வளமுடன்

    அன்பு நித்யன்

    ReplyDelete
  9. போனவை போய் வந்ததை வந்தாச்சா!

    கொஞ்ச நாளில் ஏடிஎம்மும் போய் ஒரு சிகரெட் வாங்க கூட கார்டு தேய்க்கும் காலம் வந்துரும் போல!

    ReplyDelete
  10. /
    காலையில வேலைக்கு போகனும் என்று புருஷனிடம் கெஞ்சியும் மீறி ஏதாவது நடந்து இருக்க வேண்டும்
    /

    பின்னறீங்க போங்க!
    :)))))))))

    ReplyDelete
  11. // கொஞ்ச நாளில் ஏடிஎம்மும் போய் ஒரு சிகரெட் வாங்க கூட கார்டு தேய்க்கும் காலம் வந்துரும் போல//

    உண்மை தான் அருண் alias வால் பையன். இந்த கணையாழி-ஒன் கார்டும் Hind/CM ம் இந்தியா முழுவதும் வந்துவிட்டால் உங்களின் கனவு நிறைவு பெற்றிடும். இந்தியாவில் கணக்கில் வராத கள்ள பணமும் ஒழிக்கப்பட்டுவிடும். அந்த (அபாக்கிய ஸ்தான் தேசத்திலிருந்து நமக்கு எவ்வளவு கள்ள பணம் அச்சடித்து அனுப்பினாலும் ஒன்றும் வேலைக்காவாது. மேலும் பணத்தை திருட இயலாது. ஆனால் இங்குள்ள ஒரு சில அரசியல்வியாதிகள் இதை வரவிட மாட்டார்கள். காரணம் அவர்களது அனைத்து செயல்களும் கணிணியால் கண்காணிக்கப்பட்டுவிடும் என்ற பயம் தான். சுவிஸ் வங்கியில் மட்டும் உள்ள இந்தியப் பணம் 1456 பில்லியன் டாலர்களாம். மற்ற வங்கிகளில் எவ்வளவு என்ற கணக்கு இல்லை.

    குறிப்பு - இந்த கணையாழி-ஒன் கார்டின் டிசைனில் தான் ரஜினி நடித்த சிவாஜி படத்தின் இறுதியில் காட்டப்படும் மணி கார்டு இருக்கும். ஆனால் இந்த கணையாழி-ஒன் ஆனது 2005 லேயே டிஸைன் செய்யப்பட்டுவிட்டது. தற்போதைய MNIC - க்கும் முன்னால். இதன் மாதிரியானது எழுத்தாளர் சுஜாதாவிற்கும் அனுப்பப்பட்டது. ஆனால் அவரிடமிருந்து பதில் வரவில்லை. அந்த நேரத்தில் அவரின் உடல்நிலை சீர் கெட்டிருந்தது. அது ஒரு காரணமாக இருக்கலாம்.

    இங்கே அதன் உதாரணம் உள்ளது.
    http://www.iibc.in/itws/k1_adult_front.jpg

    இங்கே அதற்காக நிகழ்ந்த கலந்துரையாடல் உள்ளது.
    http://tech.groups.yahoo.com/group/Indian_Techies_Zone/message/81


    இது பற்றி உங்களின் கருத்தை அறியத்தாருங்களேன்.


    with care and love,

    Muhammad Ismail .H, PHD,
    gnuismail.blogspot.com

    ReplyDelete
  12. Hi.. ATM means not Any Time Money...

    It's Automated Teller Machine

    ReplyDelete
  13. என்ன ஜாக்கி கால ஒட்டத்தில் புதிதாய் வந்தது நம்ப அக்ஷ்ய திருதியை பற்றி யும் சுவாரசியமாய் எழுதுங்கள்

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner