( ரோகினி தியேட்டர் பூந்த மல்லி ரோடு)
எதை தின்னால் பித்தம் தெளியும் என்று தெரியாததால் கலைஞர் இன்ஸ்டன்ட் பந்த் அறிவித்தார். இன்று காலை பல இடங்களில் கடைகள் திறந்து இருக்க வில்லை, அத்தியாவசிய பொருள் பால் மட்டும் ஜரூராக விற்பனை ஆனது...
சென்னையில் மெயின் ரோட்டில் இருந்த கடைகள் அனைத்தும் மூடியிருந்தன, கிளைச்சாலைகளில் இருந்த சிறு கடைகளில் பக்கத்து வீட்டு செங்கேனி அக்காவின் அவசரத்தேவையான கடுகு உளுத்தம் பருப்பு பிரச்சனைகள் சிறு கடைகள் மூலம் நிவர்த்தி செய்யப்பட்டன.
எந்த நேரமும் திறந்து இருக்கும் இட்லி மாவு கடைகள் மூடப்பட்டு இருந்தன பெட்ரோல் பங்குகள் திறந்து இருந்ததால் இரு சக்கர வாகனங்கள் சிரமம் இல்லாமல் ஓடின...
என் நண்பர் நெல்சன் பள்ளிக்கரனை கிரஹபிரவேசத்திற்க்கு போய் ஆட்டோக்கள் சொத்தை எழுதி கேட்ட காரணத்தால் 30 ரூபாய் கொடுத்து 17 பேர் வரும் ஷேர் வேனில் 30 பேர் வியற்வை நாற்றத்துடன் தி நகர் வந்து சேர்ந்தார்களாம்....
பாருங்க சார் இப்படி திடுதிப்புன்ன பந்த அறிவிச்சதால என்பாடுல்லாம் இன்னைக்கு நாய் பொழப்பா போச்சு என்ற அலுத்துக்கொண்டார்... இதனாலே கலைஞருக்கு நிச்சய்ம் ஓட்டு குறையும் பாருங்க என்று ஆருடம் வேறு சொன்னார்..
( ஈகா தியேட்டர் எதிர் பாலம்)
மதியம் டீயும் பொறை கூட சாப்பிட வழியில்லாமல் அலையும் போது என்வாழ்க்கையில் காலையில பிஸ்கெட் சாப்பிட்டு உயிர் வாழ்ந்தது இன்றுதான் என்றார் என் நண்பர் சகாதேவன் ...
எக்மோரில் எங்கு தேடியும் சாப்பாடு கிடைக்காததால் ஒரு சந்து கடையில் ஆயா ஒன்று வடை சுடாமல் தக்காளி சாதம் விற்றது... அது எல்லோருக்கம் மெக்கனஸ் கோல்டு கிடைத்த சந்தோஷத்தை கொடுத்தது...
( ஏக்மோர் மேயர் ரோடு சந்திப்பு)
பசியில் வாயில் சோறு வைத்துக்கொண்டு என் நண்பர் செந்தில் சொன்னார் நமக்கு ஒரு வேளை சாப்பாட்டுக்கே கண்ணை கட்டி காட்டுல விட்டா மாதிரி இருக்கே பல மாசமா காட்டுல குடும்பத்தோட வாழற ஈழத்தமிழரை நினைச்சா மனதுக்கு ரொம்ப கஷ்டமா இருப்பதாக சொன்னார், பசி மயக்கத்தில் அதை எல்லோரும் உணர்நது ஆதரித்தோம்... ( ஷாப்பர்ஷாப் சிக்னல்)
எங்கும் ஆட்டோக்கள் ஓடவில்லை, ஒடிய ஒரு சில ஆட்டோ டிரைவர்கள் ராஜபக்ஷேவைவிட மிக கேவலமாக நடந்து கொண்டார்கள்...
மாநகர பேருந்துகள் ஒரு பேருந்து கூட கண்ணில் படவில்லை அவர்கள் மிகத்தீவிரமாக இருக்கின்றார்கள் போலும்?...
( ஹரிங்டன் ரோடு வெறிச்சோடிய ஷாப்ர் ஷாப்)
எப்போதும் டி ஷர்ட்டில் மிதமிஞ்சிய மார்புடன் காணப்படும் ஹாரிங்ட்டன் ஷாப்ர் ஷாப் எந்த கலர்களும் இல்லாததால் வெறிச்சோடி காணப்பட்டது.
பொது மக்களை இந்த பந்த் அதாவது அன்றாடம் காட்சிகள் என்று சொல்லப்படும் பொது மக்களை இந்த வேகாத வெயி்லில் காட்சி எடுத்துவிட்டது என்பதுதான் உண்மை....
எல்லாக்கடைகளும் மூடப்பட்டு இருந்தன அரசின் நேரடி கஜானாவான டாஸ்மார்க் மட்டும் இல்ங்கை தமிழர் பற்றி கிஞ்சித்தும் கவலை கொள்ளாமல் காலையிலே திறந்து விட்டது ... (மதுரவாயல் அருகே ஒரு..........)
தமிழக குடி மகன்கள் எல்லோரும் ஒரு கட்டிங் போட்டு விட்டு 40 ரூபாய்க்க சிக்கன் லெக் பீஸ் சாப்பிட்டு ஈழத்தமிழர்களுக்கான போர் நிறுத்த எதிர்ப்பை பதிவு செய்தார்கள்
அன்புடன்/ஜாக்கிசேகர்
இந்த பந்த் மூலம் அதிக லாபம் அடைந்தது டாஸ்மாக், ஆட்டோ, ஷேர் ஆட்டோ, ஆங்காங்கே திறதிருந்த சிக்கன் கடைகள், பந்த அன்னைக்கும் அதை பற்றி கவலைப்படாமல் புதுப்படங்கள் போடு மக்களை குஷி படுத்திய தொலைக்காட்சிகள்...
ReplyDeleteஒரு காலத்தில பந்த என்றால் அதில் மக்களின் உணர்வும் சேர்ந்திருக்கும்...... ஆனா இன்னைக்கு அதை சொல்லியும் வியாபாரம்....... வாழ்க தமிழினத்தலைவன் கலைஞர்
எங்கே செல்லும் இந்தப்பாதை....
ReplyDeleteஅதை... யாரோ... யாரோ அறிவாரோ....
(சத்தியமா நான் சினிமா பாட்டுதான் பாடினேன்....)
இந்த பந்த் மூலம் அதிக லாபம் அடைந்தது டாஸ்மாக், ஆட்டோ, ஷேர் ஆட்டோ, ஆங்காங்கே திறதிருந்த சிக்கன் கடைகள், பந்த அன்னைக்கும் அதை பற்றி கவலைப்படாமல் புதுப்படங்கள் போடு மக்களை குஷி படுத்திய தொலைக்காட்சிகள்...
ReplyDeleteஒரு காலத்தில பந்த என்றால் அதில் மக்களின் உணர்வும் சேர்ந்திருக்கும்...... ஆனா இன்னைக்கு அதை சொல்லியும் வியாபாரம்....... வாழ்க தமிழினத்தலைவன் கலைஞர்//
உண்மைதான் அத்திரி
எங்கே செல்லும் இந்தப்பாதை....
ReplyDeleteஅதை... யாரோ... யாரோ அறிவாரோ..// நீ மெய்யாலுமே அந்த பாட்டு சும்மாங்காட்டிங்குன்னு பாடி இருப்பன்னு எனக்கு தெரியும்....
ஆப்புரேஷன் சக்ஸஸ்
ReplyDeleteபேஷண்ட் அவுட்!
இன்றைய பந்த் இது தான்!
சடலங்களுக்கென்ன வெற்றி தோல்வி...?
ReplyDeletethank valpaiyan
ReplyDeleteசடலங்களுக்கென்ன வெற்றி தோல்வி...? nice line magenthiran
ReplyDeleteஅதான பாத்தேன்.. கேக்கணும்னு நெனச்சேன், டாஸ்மாக் இன்னிக்கு திறந்திருந்ததான்னு.. பின்ன திறக்காம? நேத்தே சொல்லிட்டாங்கல்ல, அரசு அலுவலகங்கள் வழக்கம் போல திறந்திருக்கும்னு.. :(
ReplyDeleteபுகைப்படங்களுடன் பதிவு நன்று.
ReplyDeleteஉங்க கேமிராவை அடிக்கடி வெளியே எடுங்க நண்பரே.
பஸ்கள் ஏன் ஒடவில்லை.
இதை படிங்க:
http://thatstamil.oneindia.in/news/2009/04/23/tn-dawn-to-dusk-hartal-begins-in-tn-and-puducherry.html
நல்ல புகைப்பட பதிவு
ReplyDeleteஅதான பாத்தேன்.. கேக்கணும்னு நெனச்சேன், டாஸ்மாக் இன்னிக்கு திறந்திருந்ததான்னு.. பின்ன திறக்காம? நேத்தே சொல்லிட்டாங்கல்ல, அரசு அலுவலகங்கள் வழக்கம் போல திறந்திருக்கும்னு.. :(//
ReplyDeleteவெண்பூ ஊர்ல இருக்கிங்களா, பார்த்து ரொம்ப நாளாச்சும்மா,,, நன்றி
உங்க கேமிராவை அடிக்கடி வெளியே எடுங்க நண்பரே. // எடுத்துடுவோம் வண்ணத்து பூச்சி மிக்க நன்றி கருத்துக்கு
ReplyDelete//வால்பையன் said...
ReplyDeleteஆப்புரேஷன் சக்ஸஸ்
பேஷண்ட் அவுட்!
இன்றைய பந்த் இது தான்!//
:-)))))))))))
கட்சிகளின் வேலை நிற்த்தத்தினை கண்டுகொள்ளாத கவர்மெண்ட் நல்லா....யிருக்கட்டும்...(5 வருசமும்)
ReplyDelete//வால்பையன் said...
ReplyDeleteஆப்புரேஷன் சக்ஸஸ்
பேஷண்ட் அவுட்!
இன்றைய பந்த் இது தான்!//
:-)))))))))))--//
நன்றி கிரி
கட்சிகளின் வேலை நிற்த்தத்தினை கண்டுகொள்ளாத கவர்மெண்ட் நல்லா....யிருக்கட்டும்...(5 வருசமும்)//
ReplyDeleteநன்றி தீப்பெட்டி அது சாபமா? வாழ்த்தா?