வை கோ என்ன செய்து இருக்க வேண்டும்???


தாய் கழகமான திமுகழகத்தில் பிரச்சனை அதனால் வெளி வந்தார் பல உயிர்கள் பலி ஆகின அதன்பிறகு புதியதாக மதிமுக என்ற கட்சி துவங்கப்ட்டடது... இது நாம் அனைவரும் அறிந்த விடயம்தான் ....

உயிர் வாழ தகுதி உடையதாக மாறும் போது ஜாக்கிசேகர், கலைஞர், வைகோ எல்லாம் ஒன்றுதான் அதன் பிறகுதான் மனிதாபிமானம், கண்ணியம், போன்றவைகள்...

தனித்த போட்டி என்ற நிலைப்பாட்டை எடுத்து அவர் கட்சியினரை ஆரம்ப கட்டத்தில் சோர்ந்து போக செய்தார், அதன் பிறகு களம் கண்ட பாமக, மக்கள் தொலைக்காட்சி, அச்ரப்பாக்கம் அருகே ஆர்ட்ஸ்அண்டு சயின்ஸ் காலேஜ், தினப்பத்திரிக்கை,மாதப்பத்திரிக்கை என்று வளர்ந்து விட்டது...


பாமக வுக்கு தெரியும் தனித்த நிலைப்பாடு என்பது இப்போதைய தமிழக அரசியலில் தம்படி பெறாத விஷயம்... அதுகளம் கண்ட ஜெவுக்கும் கலைஞருக்கும் மிக நன்றாகவே தெரியும்...


அவர் ஏதாவது கட்சியுடன் அப்போதே கூட்டனி அமைத்து இருக்க வேண்டும், காரணம் மக்களின் மறதி.... கலைஞர் துரோகம் செய்து விட்டார் அதனால் உயிர் பலி அதனால் மதிமுக பிறந்தது என்று இப்போது எவருக்கும் தெரியாது....

அதே போல் தமிழக மக்கள் விட்டை விட்டு ஓட்டுபோட போக வேண்டும் என்றால் எதாவது வலுவான காரணங்கள் தமிழகத்தில் நடந்து இருக்க வேண்டும்...

அதாவது ராஜிவ் காந்தி இறந்து இருக்க வேண்டும். கலைஞர் கைது செய்யப்ட்டு இருக்க வேண்டும், ரஜினி வாய்ஸ் கொடுத்து இருக்க வேண்டும். அல்லது ஜெ நகைகள் டிவியில் காண்பித்து இருக்க வேண்டும்...

இப்படியெல்லாம் நடந்தால்தான் ஓட்டு சதவிகிதம் 60 பர்சென்ட்க்குமேல் தாண்டும் இல்லையென்றால் , அவ்ளவு நல்லது செய்த காமராஜரை வீட்டுக்கு அனுப்பியிருப்போமா? நாம்... இதில் சூப்பராக சூளுரைக்கும் வைகோ எம்மாத்திரம்...

பாமக ராமதாஸ், எடுக்கும் நிலைப்பாட்டை ரொம்ப லேட்டாக எடு்த்தார் வைகோ. திரும்பவும் பொடவில் கைது செய்யப்ட்டு பாசிச வெறி பிடித்த ஜெயலலிதா என்று கழுத்து நரம்பு புடைக்க கத்தி சிறையில் இருந்து.... பூந்த மல்லி சிறையில் கலைஞரை பார்த்து கட்டி பிடித்து அழுது, தேர்தல் களம் கண்டு திரும்பவும் ஜெவிடம் கூட்டனி கண்டதை மக்கள் ரசிக்கவில்லை...

வைகோ நல்ல பேச்சாளர் , தோளில் தொங்கும் விழாத துண்டை எடுத்து எடுத்து போட்டு பேசும் பாடி லாங்வேஜ் எல்லாம் இன்றைய எந்த அரசியல் தலைவரிடமும் காணக்கிடைக்காதவைகள்... நல்ல உணர்ச்சி பேச்சாலன், ஹிட்லர் போல் சூளுரைப்பதில் வேகம், தமிழர் பாதுகாப்பில் தமிழர் விடுதலையில் காட்டும் கோபம் எல்லாம் இருந்தும் அவர் வளரவில்லை காரணம்?.

திரும்ப தாய் கழகமான திமுகாவில் போய் சேர்ந்ததும், எனெக்கென்ன என்று இப்போது ஜெ யோடு கூட்டனி வைத்துக்கொண்டு எப்படி இருக்கின்றாரோ அதே போல் அப்போதும் அங்கே இருந்து இருக்க வேண்டும்.

ஏனென்றால் கலைஞருக்கு பிறகு என்ற கேள்வி திமுகாவில் வரும் போது அங்கே வைகோ அளவுக்கு பேச வேற யாரும் இல்லை... ஸ்டாலி்ன் என்னதான் அடுத்த கட்ட தலைவராக பிரகடனப்டுத்தி இருந்தாலும் அந்த ஆளுமை, வெறிப்பேச்சு அவரிடம் இல்லாதது போல் தெரிகின்றது...

பேச்சை வைத்தும் அட்சியை பிடித்த திமுகழகம் என்பதை எவரும் எளிதில் மறக்கவும் மறுக்கவும் முடியாது...

கொக்கு மீனுக்கு காத்து இருப்பது போல் தாய் கழகத்தில் சேர்ந்ததும் வைகோ காத்து இருந்து இருக்க வேண்டும்... அவருக்கு தமிழகத்தில் நல்ல இடம் வரலாற்றில் கிடைத்து இருக்கும்

எளிதில் உணர்ச்சிவசப்படும் வைகோ போன தேர்தலில் உணர்ச்சிவசப்பட்டுவிட்டார்... அதை இப்போது அனுபவிக்கின்றார்....

அன்புடன்/ஜாக்கிசேகர்

16 comments:

 1. /
  அதே போல் தமிழக மக்கள் விட்டை விட்டு ஓட்டுபோட போக வேண்டும் என்றால் எதாவது வலுவான காரணங்கள் தமிழகத்தில் நடந்து இருக்க வேண்டும்...

  அதாவது ராஜிவ் காந்தி இறந்து இருக்க வேண்டும். கலைஞர் கைது செய்யப்ட்டு இருக்க வேண்டும், ரஜினி வாய்ஸ் கொடுத்து இருக்க வேண்டும். அல்லது ஜெ நகைகள் டிவியில் காண்பித்து இருக்க வேண்டும்...

  இப்படியெல்லாம் நடந்தால்தான் ஓட்டு சதவிகிதம் 60 பர்சென்ட்க்குமேல் தாண்டும் இல்லையென்றால் , அவ்ளவு நல்லது செய்த காமராஜரை வீட்டுக்கு அனுப்பியிருப்போமா?
  /

  சூப்பரா சொன்னீங்க!

  ReplyDelete
 2. எனக்கென்னவோ அவர் இருபது வருடம் காத்திருந்தாலும் திமுகவில் அவருக்கு தலைமைப் பதவி கிடைத்திருக்காது என்று தான் தோன்றுகிறது.

  ReplyDelete
 3. உங்களுக்கு அரசியலையும் அலச தெரியும் என்பதை காண்பித்து விட்டேர்கள் .

  சரி இது என்ன ஒரு பன்ச்

  கிரிக்கெட்டுன்னு சொன்னதும் மட்டை ஞாபகத்துக்கு வருதோ இல்லையோ? மந்தரா பேடியோட பூப்போன்ற?

  ReplyDelete
 4. ஜாக்கி
  தி.மு.க குடும்ப அரசியலே அதன் வீழ்ச்சிக்கு மிக பெரிய காரணமாக இருக்கும்.

  அந்த வீழ்ச்சி மற்ற கட்சிகளுக்கு பாடமாக இருக்கும்.

  ReplyDelete
 5. அழகான அலசல். நல்லவேளை அவர் திமுகவிலிருந்து போய் விட்டார்...திமுக வாவது பிழைத்தது.

  ReplyDelete
 6. எனக்கென்னவோ அவர் இருபது வருடம் காத்திருந்தாலும் திமுகவில் அவருக்கு தலைமைப் பதவி கிடைத்திருக்காது என்று தான் தோன்றுகிறது.
  \\

  ReplyDelete
 7. எனக்கென்னவோ அவர் இருபது வருடம் காத்திருந்தாலும் திமுகவில் அவருக்கு தலைமைப் பதவி கிடைத்திருக்காது என்று தான் தோன்றுகிறது.
  \\

  illai joe.

  asan biragu dmk vil all illai

  ReplyDelete
 8. உங்களுக்கு அரசியலையும் அலச தெரியும் என்பதை காண்பித்து விட்டேர்கள் .

  nan kobathudan aazhuthinal en vittukkku autto varum

  thanks malar your value comment

  your
  jackiesekar

  ReplyDelete
 9. கிரிக்கெட்டுன்னு சொன்னதும் மட்டை ஞாபகத்துக்கு வருதோ இல்லையோ? மந்தரா பேடியோட பூப்போன்ற?\\\

  sila punch linea arayakkudathu,anupavikkanum///

  your
  jackiesekar

  ReplyDelete
 10. அழகான அலசல். நல்லவேளை அவர் திமுகவிலிருந்து போய் விட்டார்...திமுக வாவது பிழைத்தது.\\


  thanks madhi, thanks for value comment, i think you are comeing first time in my blog///


  your
  jackiesekar

  ReplyDelete
 11. இன்று இருக்கும் நிலைமையை பார்த்தால் கருணாநிதிக்கு வைகோ எவ்வளவோ மேல், இன்று வரை தன் ஈழ கொள்கையை மாற்றி கொள்ளவில்லை. பதவிக்கு பயந்து நித்தம் ஒரு கபட நாடகம் இப்படி ஒரு பிழைப்பு பிழைப்பதற்கு ..............

  ReplyDelete
 12. இன்று இருக்கும் நிலைமையை பார்த்தால் கருணாநிதிக்கு வைகோ எவ்வளவோ மேல், இன்று வரை தன் ஈழ கொள்கையை மாற்றி கொள்ளவில்லை. பதவிக்கு பயந்து நித்தம் ஒரு கபட நாடகம் இப்படி ஒரு பிழைப்பு பிழைப்பதற்கு ..............-//

  மாற்றிக்கொள்ளவில்லை ஆனால் பிரபாகரனை பிடித்து வர வேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நீறைவேற்றியவருடன் ஏன் கூட்டு வைத்து இருக்கின்றார்

  ReplyDelete
 13. வைகோ ஏன் வீழ்கிறார், ராமதாஸ் ஏன் வளர்கிறார்?இந்தா பிடிங்க உயிர்ம்மை உயிரோசையில் வந்த ஒரு அற்புதமான அலசலை.//

  உண்மை

  ReplyDelete
 14. Nalla manithar thaan, makkaloda thunbangala purinja alavukku intha arasiyala avaraala purinjukka mudiyalayo...ennavo..

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner