(kick- telugu)கிக் இல்லாத வாழ்க்கை ஒரு வாழ்க்கையா?







கிக் என்பது வாழ்வில் இருக்க வேண்டும் அப்போதுதான் வாழ்க்கை இனிக்கும்....அதற்காக பலர் பல விதமான முடிவுகளை தங்கள் தகுதிக்கு ஏற்றவாறு எடுத்துக்கொண்டுதான் இருக்கின்றார்கள்...

சிலர் பீர் சாப்பிடுவதை நிறுத்திவிட்டு ஹாட் அடிக்கின்றார்கள் ஏன் என்று கேட்டால் கிக் கம்மியாக இருக்கின்றது.. என்று சொல்கின்றார்கள்..

தனது மனைவி இருக்கும் போது இரண்டாவது தொடுப்பு வைத்து கொள்கின்றார்கள்... ஏன் என்று கேட்டால் கிக் இல்லை என்று சொல்லுகின்றார்கள்...

டக்குனு ஐலவ்யூ சொல்லாம ஏண்டி அந்த பையனை இழுத்து அடிக்கிற் என்றால் உடனே சொன்னால் எப்படி கிக் இருக்கும் என்று சொல்லிகன்றாள் அந்த பெண்...

இப்படி நம்மில் நம் வாழ்க்கை முறையில் கிக்கை அனுபவித்து இருப்போம்... ஆனால் கிக்கையே வாழ்க்கையாக ஒரு கதாநாயகன் கொண்டு இருந்தால்....

கிக் படத்தின் கதை இதுதான்....

மலேஷியாவில் இருக்கும்Naina (Ileana) வுக்கு கல்யாணத்துக்கு மாப்பிள்ளை பார்க்கின்றார்கள்... மாப்பிள்ளை Krishna (Shyam) நம்ம 12bஷாமேதான்...
ஷாம் Naina(இலியான) இருவருக்குமே திருமணத்தில் இஷ்டம் இல்லை... இருவரும் குடும்ப உறுப்பினர்கள் விருப்பத்துக்கு இணங்க இருவரும் சந்திக்கின்றனர்... ஷாமிடம் உங்கள் பேர் என்ன என்று கேட்க கல்யான் கிருஷ்னா என்று முழு பேர் சொல்ல ... அந்த பேரை மட்டும் மாற்றிக்கொள்ளுங்கள் உலகத்தில் நான் வெறுக்கும் முதல் பேர் அந்த பேராகத்தான் இருக்கும் என்றுNaina( இலியானா )சொல்ல... காரணம் என்ன என்று கேட்க?காரணம் சொல்ல காட்சி விரிகின்றது....
இந்தியாவில்Kalyan (Ravi Teja) ஒரு நண்பியின் திருமணத்தின் போதுதான் ரவிதேஜாவை இலியான முதலில் பார்க்கின்றாள்... அவன் கேரக்டர் மற்றவர்களை போல் இல்லை...

அதாவது 50000ரூபாய் மாத சம்பளத்தில் ஒரு கம்பெயினில் சேர்ந்து ஒரு மாதத்தில் அவன் திறமையை நிருபித்து அடுத்து உனக்கு என்ன வேனும் அதிக சம்பளமா? என்று கேள்வி கேட்கும் போது எனக்கு ரஜினாமா வேனும் என்று வெளியில் வரும் கேரக்டர்....

எனென்னறால் அந்த கம்பெனியில் கி்க் இல்லை என்று சொல்லும் கேரக்டர்... ஒரு கட்டத்தில் அவன் மீது காதல் வயப்படுகின்றாள்...இது போல் பல விஷயங்களை ஷாமிட்ம் பகிர்ந்து கொள்கின்றாள்...ஆனால் கிக் என்ற விஷயத்துக்காக அவன் எந்த வேலையிலும் நிலையாக இல்லை அதனால் பிரிந்து வந்து விட்டேன் என்று சொல்கின்றாள்... ஒருவருடம் ஆகிவிட்டது...அதனால்நான் அவனை மறந்து விட்டேன், நாம் திருமணம் செய்து கொள்ளலாம் என்று தன் எண்ணத்தை வெளிபடுத்துகின்றாள்... Krishna(ஷாமும்) அப்படியே...
ஆனால் ஷாம் 150 கோடியை இந்தியாவில் தடயம் இல்லாமல் கொள்ளை அடித்தவனை தேடி மலேஷியா வந்து இருக்கும் கதையை சொல்கின்றான்...Kalyan(ரவிதேஜா)வும் மலேஷியாவில் இருக்கு மீதி என்ன... இலியான ஷாம் கல்யாணம்...நட்ந்ததா?
ரவிதேஜா இலியபன காதல் என்னவாயிற்று? வழக்கம் போல் வெண்திரையில்...
படத்தின் சுவாரஸ்யங்களில் சில...

மொத காட்சியிலேயே நம்மை நிமிர்ந்து உட்கார வைத்து விடுகின்றார்கள் இலியான யோகா செய்வதை சொன்னேன்...

லாஜிக் என்ற விஷயத்தை தூக்கி தூர போட்டு விட்டு படம் பார்த்தால் இந்த படம் ஒரு சுவாரஸ்யமான படம் என்பதில் சந்தேகம் இல்லை...

படம் நெடுகிலும் காமெடியை துவி வைத்து இருக்கின்றார்கள்...

இலியான இந்த படத்தில் நடிக்கவும் செய்து இருக்கின்றார்....

படம் முழுவதையும் தூக்கி சுமப்பவர் ரவிதேஜாதான்... இந்த படத்தில் அவரின் பாடிலாங்வேஜ் அற்புதம்...


மொழிபடத்தில் காமெடியில் பின்னிய பிரமானந்தம் இந்த படத்தில் அல்வா ராஜ் என்ற கேரக்ட்ரில் நடித்து கமெடியில் பின்னி பெடல் எடு்கின்றார்

ஷாம் நல்ல ஸ்மார்ட்டாக துடிப்பான் போலிஸ் ஆபிசராக வந்து கலக்குகின்றார்..
இலியான இந்த படத்தில் கூடுதல் அழகுடன் மிளிர்கின்றார்...

நல்ல மசாலா படம் தான் அதை சொன்ன விதத்தில் ரசிக்க வைத்து இருக்கின்றார்கள்... இந்த படத்தை பாருங்கள் நான் சொல்வதின் அர்த்தம் விளங்கும்
Cinematography by Rasool இலியான யோக காட்சியின் போது லைட்டிங் சூப்பருருருருரு

இந்த படத்தின் இரண்டு பாடல்கள் ஓக்கே ரகம்... இசைதமன் பாய்ஸ் படத்தில் ரொம்பவும் தடியாக வருவாரே அவதோன்..

படம் ஜென்டில்மேன் படத்தை நினைவு படடுத்தினாலும் பிரசன்ட் செய்த விதத்தில் ஜெயித்து விட்டார்கள்...

இந்த படத்தை ஜெயம் ரவி அண்ணன் இயக்க அவர் அண்ணன் ராஜா இந்த படத்தை எடுப்பார் என்று தெரிகின்றது...

படத்தின் டிரைலர்...



படத்தின் குழுவினர் விபரம்

Banner: RR Movie Makers
Cast: Raviteja, Shaam, Ileana and others
Direction: Surender Reddy
Production: Venkat
Music: Thaman S

அன்புடன்
ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றும் டைம்பாஸ் படங்களையும்,மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....

(Lolitas Club) must see 18+++ ஸ்பேனிஷ் மொழிப்படம்... எளியாரையும் விட்டு வைக்காத வலியாரின் மனம்..


மனித மனம் என்பது மிகவும் வி்சித்திரமான ஒன்று... நமக்கு எவ்வளவு கிடைத்தாலும் அதுதிருப்தி பட்டு கொள்ளாது... அடுத்தவனுக்கு எந்தளவுக்கு கிடைத்து இருக்கின்றது என்பதில்தான் புத்தி போய் முடியும்...

நீங்கள் என்னதான் புத்தியை கன்ரோல் செய்தாலும் அது மேய்ச்சல் மாடு போல் மேய்ந்து கொண்டுதான் இருக்கும்... அல்லது எதையாவது நினைத்து அசை போட்டுகொண்டு இருக்கும்...

இது எல்லோருக்கும் பொதுவான ஒன்று உதாரணத்துக்கு நீங்கள் கல்யான வீட்டில் சாப்பிட போகும் போது இலை போடும் போதே பக்கத்து இலையை பார்த்து விட்டு இலை மாற்றுபவர்களை பார்த்து இருக்கின்றீர்களா?.. மனம் என்பது திருப்தி அடையாத ஒன்று..

சரி தனக்கு சரி சரிக்கு சமமான மனிதர்களுடன் வளர்ச்சியில் போட்டி வைத்து கொண்டாலும் பரவாயில்லை... நம்மை விட எந்த வகையிலும் நிகரில்லாத சின்ன பசங்களிடம் கூட சில நேரத்தில் போட்டி போடுவோம்... அப்படி மன வளர்ச்சி இல்லாத தனது தம்பியின் ஆசையில் மண் அள்ளி போடும் ஒரு போலிஸ் ஆபிசரின் கதை இது ...

இது ஸ்பேனிஷ் மொழிப்படம் ஆகும்.....

Lolitas Club ஸ்பேனிஷ் படத்தின் கதை இதுதான்....

Raul Fuentes ஒரு முரட்டுதனமான போலிஸ் ஆபிசர் ஆனால் அவனின் தம்பிValentin அப்படியே நேர் எதிர் ரொம்பவும் சாது பழி பாவத்துக்கு அஞ்சுபவன்.. இருவருமே இரட்டைகுழந்தைகள்...எல்லோருக்கும் பிடித்தமானவன் சற்று மன நிலை சரியில்லாதவன்... ரவுலுக்கு லோக்கல் போதை மருந்து கும்பலிடமும் ரவுடிகும்பலிடமும் மோதல் ஏற்பட, இவனை போலிஸ் தலைமை கடிந்து கொள்கின்றது... லோக்கல் போதை மருந்து ஆசாமிகள் விபச்சாரத்தின் மூலம் அதனை செயல் படுத்துகின்றார்கள் என்ற தகவல் அவனுக்கு கிடைக்கின்றது... அதே போல் சில காலம் தனது சொந்த ஊருக்கு போக எண்ணுகின்றான்....

சொந்த ஊரில் தம்பி வேலன்டின் ஒரு விபச்சார விடுதியில் எடுபுடி வேலை செய்கின்றான்... அந்த விடுதி பெண்களுக்கு அவன்தான் எல்லாம்... அந்த விடுதியில் உள்ள பேரழகி Milena மெலினாவுக்கு ...வேலன்டின் மேல் காதல் தம்பியை சந்திக்கவும் மபியா கும்பலின் நெட்ஒர்க் கண்டு பிடிக்க வந்தவனிடம் அவளின் அழகு ஈர்க்கின்றது... ரவுலின் ஒரே குணம் எந்த பெண்ணையும் படுக்கயில் வீழ்த்தும் குணம்...

தனது மனநிலை சரியில்லாத தம்பி காதலி என்றாலும் தன் தம்பிக்கு இவ்வளவு பேரழகியா? என்ற ஈகோவால் அவளை பணத்தை வீசி எறிந்து கூப்பிடுகின்றான். அவள் ஒத்துக்கொள்ளவில்லை.. அதன் பிறகு வலுகட்டாயமாக அவளை ஒத்தக்கொள்ள செய்ய... அதை தம்பி பார்த்து விடுகின்றான்... வெளியே ரவுலை கொலை செய்ய மாபியா கும்பல் காத்து இருக்கின்றது.. முடிவு என்ன என்பதை வழக்கம் போல் வெண்திரையில் காண்க...

படத்தின் சுவாரஸ்யங்களில் சில...

படத்தின் பெரிய பலம் பேரழகியாக, மெலினாவாக நடித்த பிளோரா மார்ட்டின்ஸ்தான்... என்ன அழகு? என்ன உடல்கட்டு.... ?அப்பா.... அந்த பெண்ணின் நிர்வாணம் பார்க்கும் ரசிகனின் வெகுநாள் தூக்கம் கெடுக்கும்....

Eduardo Noriega - Raul\ Valentin இருவருமாக நடித்து இருவருக்கமான வேறுபாட்டை மிக அழகாக செய்து இருப்பார்....

பொதுவாக தன்னை நேசிப்பவனை, தன்னை பூப்போல் பார்த்துக்கொள்பவனை எந்த பெண்ணுக்கும் பிடிக்கும் அது லுசு பயலாக இருந்தாலும் சரி...

தினமும் பல பேரிடடம் உடலுறவு கொண்டு விட்டு டயர்டாக படுத்து உறங்கும் பெண்ணை லுசாக இருந்தாலும் அவளை கருனையோடு பார்த்துக்கொள்வதும்... அவளை குழந்தை போல் நடத்துவதும்... அற்புதமான காட்சிகள்....

இந்த படத்தின் மேக்கிங் வீடியோவில் பார்க்கும் போது நிர்வான காட்சிகளின் போது அந்த பெண்கள் எந்த ஒரு சலிப்பும் இல்லாமல் நடிப்பது ஆச்சர்யமாக இருகின்றது....

இந்த படம் 2007,ல் வெளிவந்தது...

இந்த படத்தின் கிளப் காட்சிகளில் ஓட்டல் அறைகளில் இருக்கும் லைட்டிங் ரொம்பவும் அருமை... José Luis Alcaine ஒளிப்பதிவுக்கு பாராட்டுக்கள்....

மிக முக்கியமாக அந்த ஊர் மிக அழகாக இருக்கின்றது....
Vicente Aranda படத்தின் இயக்குனருக்கு இந்த படம் 22வது படம்... வயதான ஆள்தான் ஆனாலும் எடுத்த படம் இளமை துள்ளுகின்றது...

படத்தின் டிரைலர் (must see 18+++)




படத்தினர் குழு விபரம்
Directed by Vicente Aranda
Produced by Andres Vicente Gomez
Written by Vicente Aranda
Starring Eduardo Noriega,
Flora Martínez,
Belen Fabra
Hector Colome
Music by José Nieto
Cinematography José Luis Alcaine
Release date(s) Flag of Spain 30 November 2007
Running time 101 minutes
Language Spanish

அன்புடன்
ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றும் டைம்பாஸ் படங்களையும்,மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....

(the bone collector ) உயிரோடு இருக்கும் மனிதனின் எலும்புகளை சேகரிக்கும் சைக்கோ....

சைக்கோ கொலைகாரபடங்கள் அமெரிக்கர்களுக்கு அப்படி பிடிக்கும் போல...நிறைய படங்கள் இது போன்ற சாயலில் வந்து இருக்கின்றது....
சைக்கோ கொலைகாரர்கள் பற்றி பல படங்கள் வந்தாலும் இந்த படம் சற்று விறுவிறுப்பையும் நல்ல திரில்லருக்கு உண்டான சூட்டை கொடுத்த படம் இது....

தி போர்ன் கலெக்டர் படததின் கதை இதுதான்....

நியுயார்க் உள்ள ஒரு டாக்சியில் எறுபவர்கள் சொன்ன இடத்துக்கு அழைத்து போகாமல் அவர்களை ஊருக்கு ஒதுக்கு புறமாக அழைத்து போய் கொடுரமாக கொன்று அல்லது அனு அனுவாக சித்திரவதை செய்து..அவர்களுக்கு எந்த மயக்க மருந்தும் கொடுக்காமல் உயிரோடு இருக்கும் போதே கையை வெட்டி அதில் இருந்து ஒரு எலும்பு துண்டை எடு்த்து வைத்துக்கொள்வான் அந்த சைக்கோ....
கதநாயகன் டென்சில் வாஷிங்டன்னால் நடக்க முடியாது... ஒரு இடிந்த போன கட்டிடத்தில் மீட்பு குழுவில் இருக்கும் டென்சில் சக நண்பனை காப்பற்ற போக நடுமுதுகில் நங் என காண்கிரிட் விழுந்து விபத்தில் சிக்கி, டென்சில் கை மற்றும் கால் ஏன் உடலில் எந்த அசைவும் இல்லாமல் இருக்கும் அவன், ஒரு பெண் போலிஸ் ஆபிசர் என்ஜலினா கிரைம் நட்ந்த இடத்தில் இருந்து டெலிபோனில் கொடுக்கும் தகவல்களை வைத்து எப்படி குற்றவாளியை கண்டுபிடிக்கின்றான் என்பதே கதை....

படத்தின் சுவாரஸ்யங்களில் சில....
உடலில் அசைவில்லாத புத்திசாலி போலிஸ் ஆபிசர் எப்படி சைக்கோ கொலையாளியை கண்டுபிடிக்கின்றான் என்பதே ஒற்றைவரி... கதை..

இந்த படம் jeffery deaver எழுதிய கிரைம் நாவலின் திரைவடிவம்..இந்த படம்...


டேலிபோனில் வரும் செய்திகளை வைத்தே படுத்த படுக்கையாக இருக்கும் கதநாயகன்துப்பறிவது இந்த படத்தின் சுவாரஸ்யம்....

என்ஜலினா ஜோலியின் உதடுகள் பார்த்து கொண்டே இருக்கலாம்...

முதலில் இந்த கொடுர கொலைபற்றி தப்பறிவது பிடிக்காமல் பின்பு ஒத்துக்கொள்ளும் காட்சி ரொம்ப அற்புதமாக இருக்கும்...

அதே போல் டென்சிலிடம் காதல் வயப்படுவதை ரொம்ப அழகாக படமாக்கி இருப்பார்கள்
படத்தின் டிரைலர்....



படத்தின் குழு விபரம்


Directed by Phillip Noyce
Produced by Dan Jinks
Written by Jeffrey Deaver
Starring Denzel Washington
Angelina Jolie
Music by Craig Armstrong
Cinematography Dean Semler
Editing by William Hoy
Distributed by Columbia Pictures
Universal Pictures
Release date(s) November 5, 1999
Running time 118 min.
Country Flag of the United States
Language English
Budget $73 million
Gross revenue Domestic
$66,488,090
Foreign
$84,975,000
Worldwide
$151,493,655


அன்புடன்/ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றும் டைம்பாஸ் படங்களையும்,மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....

(THE WALL) (உலக சினிமா/ தைவான்) 18+தலைவனுக்காக மனைவியை தாரை வார்ப்பவன்...


சிலருக்கு சில விஷயங்கள் மேல் பிடிப்பு எற்ப்ட்டு விட்டால் அதற்க்காக எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் ரிஸ்க் எடுக்க தயங்காதவர்களாக இருப்பர்கள்.. சிலருக்கு சினிமா, சிலருக்கு சமுக அக்கரை, சிலருக்கு அரசியல் என்று சொல்லிகொண்டு போகலாம்....

தன் மகன் செய்தது தவறு என்று நினைத்த காரணத்தினால் தேர் சக்கரத்தில் வைத்து தன் மகனை கொன்றான் மனு நீதி சோழன்... அது போல் தன் எடுத்துக்கொண்ட கொள்கைமேல் பற்றோடு இருப்பவர்கள் உயிரையே மயிராக மதிப்பவர்கள் மற்ற விஷயங்கள் எல்லாம் அவர்களுக்கு சும்மா...

ஒரு மனித வெடிகுண்டாக செல்லும் ஆணோ பெண்ணோ அவர்கள் மனநிலையை சற்றே யோசித்து பாரு்ங்கள்... எவ்வளவு அடக்கு முறையை தன் மக்கள் மேல் செலுத்தி இருந்தால் அல்லது எந்தளவுக்கு அவள் இழப்புகளை சந்தித்து இருந்தால் உயிரை துச்சமாக நினைத்து அவள் அந்த செயலை செய்ய துணிவாள் என்பதை நாம் நினைத்து பார்க்கவேண்டும்.... அப்படி ஒரு தலைவனுக்காக எதையும் தியாகம் செய்யும் ஒரு தொண்டனின் கதைதான் THE WALL படத்தின் கதை...

THE WALL படத்தின் கதை இதுதான்....

A-chen (Huang Tsai Yi)மற்றும் A-yi (Sunny Yu) இருவரும் புதிதாய் திருமணம் செய்து கொண்ட இளம் தம்பதிகள் ஊருக்கு ஒதுக்குபுறமான ஒரு வீட்டில் வசிக்கின்றார்கள்.... மனைவிக்கு அந்த வீட்டில் ஏதோ ஒரு மாற்றம் இருப்பது மட்டும் புரிகின்றது... அந்த வீட்டில் அவர்கள்ள இருவரை தவிர வேறு யாரும் இல்லை... அவள் வீட்டை சுற்றி வந்து பார்க்கின்றாள் ... வீட்டை இன்ச் பை இன்ச் ஆக அலசுகின்றாள்... ஆனால் எந்த தடயமும் இல்லை... ஆனால் யாரோ நகரும் சத்தம் இரும்பும் சத்தம் எல்லாம் அவளுக்கு கேட்கின்றது... அது கிச்சனில் இருந்து வருகின்றது என்பது மட்டும் அவளாள் உனர முடிகின்றது... நடு இரவில் சத்தம் வந்த திசை நோக்கி நடந்து போய் பார்க்க எத்தனிக்க கணவன் தடுக்கின்றான்....

ஒரு கட்டத்தில் அந்த கிச்சன் சுவற்றுக்கு பின்னால் ஒரு ரகசிய அறையில் ஒரு மணிதன் உட்கார்ந்து இருப்பது தெரிகின்றது... உள்ளே இருப்பவன் ஒரு சமுக போராளி அரசை எதிர்த்து பல போராட்டங்கள் நடத்தியவன் அதனால் அரசால் தேடப்படும் குற்றவாளி... கண்டதும் சுடப்பட வேண்டியவன்... அவன் தலைவனாக இருந்தவன்... தலைவனுக்கு தொண்டனாக இருந்தA-chen யாருக்கும் தெரியாமல் அவனது வீட்டில் கிச்சன் பக்கத்தில் ஒரு ரகசிய அறையை ஏற்படுத்தி வெளியில் இருந்து பார்க்கும் போது அது சுவர் போல் தெரியும் வகையில் செட் செய்து சிறு ஒட்டை வழியாக உணவுபொருள் கொடுத்து கழிவுகளை அகற்றி அரசிடம் இருந்தது தன தலைவனை பாதுகாக்கின்றான் ஒரு வருடம் அல்ல இரு வருடம் அல்ல 10 வருடங்கள் யோசித்து பாருங்கள்....

ஒருநாள் சென்னின் மனைவி கிச்சன் பக்கத்து ரூமில் குளிக்க அதனை பத்து வருடங்களாக தனிமை சிறையில் இருப்பபவனுக்கு அந்த பெண்ணின் நிர்வாணம் அவனை சுண்டி இழுக்க அவன் அந்த அறையில் இருப்பதை அவளுக்கு புரிய வைக்கின்றான்... அவ்ள அவனை வெளியே வர வைத்து அவனை சுத்தபடுத்தி அவனோடு உறவு கொள்கின்றாள்....

கணவனுக்கு விஷயம் தெரிகின்றது... கணவன் கொஞ்சமம் அலட்டிக்கொள்ளவில்லை என் தலைவன் எது ஆசைபட்டாலும் அதை நீ செய்வதே நி என் மீது கொண்டு உள்ள உண்மையான அன்புக்கு நீ செய்யும் கைமாறு என்று மனையிடம் சொல்லுகிள்னறான்....

போலிஸ் அந்த தலைவன் மறைந்து இருக்கும் இடத்தை கண்டு பிடிக்கின்றார்கள்.. முடிவு என்ன என்பதை திருட்டடு டிவிடி கிடைத்தால் அல்லது நெட்டில் டவுண்லோட் செய்மு நெகிழ்ச்சி அடையுங்கள்...

படத்தின் சுவாஸ்யங்களில் சில....

முதல் பத்து நிமிடத்துக்கு தொய்வாக செல்லும் திரைக்கதை அந்த கிச்சன் சத்தம் வந்ததும் படம் வேகம் எடுக்கின்றது...


முதலில் பேய் என்று எல்லோரும் எண்ணி இருக்கு அதன் பின்னனியில் இப்படி ஒரு உயிருள்ள மனிதன் இருப்பது திரைக்கதையில் நல்ல திருப்பம்..

அந்த சுவற்றை பார்த்து அந்த பெண்ணின் தினமும் வணங்கி அங்கு எதோ பேசுவது போல இருக்கும் போதே அங்கு இருந்து குரல் கேட்க இவன் சட்டென தரையில் படுத்து வணங்கும் போது அந்த தலைவன் மீதான மதிப்பு ஆச்சர்ய படுத்துகின்றது...

தன் மனைவியை தலைவன் படுக்கையில் சாய்த்து விட்டான் என்பது தெரிந்ததும் சற்றே யாசித்தாலும் என் தலைவன் மகிழ்ச்சியே தன் மகிழ்ச்சி என்று சட்டென சூழ்நிலை புரிந்து கொண்டு சகஜமாவது நல்ல நடிப்பு..

இந்த படத்தில் கொஞ்சமும் லாஜீக் மீறாமல் எடுத்து இருப்பது இந்த படத்தின் சிறப்பு...

இந்த படத்தை 5ம் சென்னை உலக படவிழாவில் பைலட் தியேட்டரில் திரையிட்ட போது நானும் என் மனைவியும் இந்த படத்தை பார்த்து விட்டு வேகு நேரம் இந்த படத்தை பற்றி பேசிக்கொண்டு இருந்தோம்....


இந்த படத்தின் கிளைமாக்ஸ் ரொம்ப அற்புதமாக இருக்கும் பேராட்டங்களும் போராளிகளும் ஒரு போதும் அழிவதில்லை என்று உணர்த்தும் விதமாக இந்த படம் முடியும்....

படத்தின் விபரம்....
Title : The Wall (Taiwan Version)
Artist Name(s) : You An Shun | Kageyama Yukihiko | Huang Cai Yi
Release Date : May 8, 2008
Language : TAIWANESE, Mandarin, Japanese
Subtitle : English
Duration : 100 Minutes
Genre : Drama

அன்புடன்/ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றும் டைம்பாஸ் படங்களையும்,மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....

சினிமா சுவாரஸ்யங்கள் (பாகம்/1)


சினிமா இந்த மூன்று எழுத்து மந்திர சொல்லுக்கு மயங்காதவர்கள் தமிழ் நாட்டில் குறைவு என்றாலும்,எனக்கு அந்த மந்திர வார்த்தை ரொம்பவும் பிடிக்கும். பத்தாம் வகுப்பு பொது தேர்வின் போது ஜாக்கிசான் நடித்து வெளிவந்த ஸ் பேனிஷ் கனெக்ஷன் படத்தை தினமும் பார்த்து விட்டு பரிட்சை எழுதியவன் நான்... பத்தாம் வகுப்பு மொத்த டோட்டல் 500க்கு 277தான்.. நான் பாஸ் செய்தது என்பது பெரிய விஷய்ம்...

என் மீது பெரிய கனவுகள் வைத்து இருந்த என் அம்மா சட்டென எனது பத்தாம் வகுப்பு பொது தேர்வு ரிசல்ட், பெயில் என்று கேள்வி பட்டு, ஹார்ட் அட்டாக்கில் இறந்து விடக்கூடாது என்பதற்காக கடவுள் என்னை பாஸ் செய்துவிட்டார் என்று நான் மனதில் நினைத்து கொள்வேன்...

சினிமா என்பது ஒரு கூட்டு முயற்ச்சி மொத்தம் 24 டிப்பார்ட்மென்ட் ஆட்கள் நெற்றி வியற்வை நிலத்தில் சிந்தி காதலோடு உழைத்தால் தான் நல்ல சினிமா வந்து தொலைக்கும்..

பொதுவாய் நம்மவர்களுக்கு நல்லா சினிமா எது என்பதில் பயங்கர குழப்பம் இருக்கின்றது... அப்படியே ந்லல படங்கள் எடுத்தாலும் அந்த படத்திற்க்கு உரிய அங்கீகாரம் கொடுக்க மறுக்கின்றோம்... அலையாயுதே படத்துக்கு கொடுத்த வெற்றியை கன்னத்தில் முத்தமிட்டால் படத்துக்கு நாம் கொடுக்க தவறினோம் அதை கொண்டாட மறுத்து விட்டோம்....

அமெரிக்க அதிபர் ஒரு பெண்னை உடலுறவுக்காக அழைக்க அவள் மறுக்க, அதன் பின் கொலையாவது போல் காட்சிகளை வைத்த அப்சலுட் பவர் படத்தை இந்தியாவில் எடுத்தால்??? ஒரு நாட்டின் முதல் குடிமகனை எப்படி இவ்வளவு கேவலமாக காட்ட முடியும்? என்று ஒருவர் கேள்வி எழுப்ப அதன் பிறகு பிளாக்கில் சுடு பறக்கும்....

அதை விட ஒரு இயக்குனர்கள் படத்தை எப்படி எடுத்து இருக்கலாம் என்று அட்வைஸ் மற்றும் கருத்து வேறு சொல்வார்கள்.... சினிமா என்பது கதை,கட்டுரை எழுதவது போல் சாதாரன விஷயம் அல்ல, அது தனிமனித திறமையும் அல்ல அது ஒரு கூட்டு முயற்ச்சி... என்பதை நம்மவர்கள் புரிந்து கொள்வேதே இல்லை....

7வருட சின்ன திரை அனுபவம் 4வருட ஆசி்ரியர் அனுபவம்,6 மாத சினிமா அனுபவம் எனும் போது என்னால் சினிமா பற்றிய சுவாரஸ்யங்களை தொடர்ந்து எழுதலாம் என்று நினைக்கின்றேன்.... சினிமாவில் ஒரு காட்சிக்கு எடுத்துக்கொண்ட உழைப்பு, அதன் வலி, டெக்னிக்ல் போன்ற விஷயங்களை நேரம் கிடைக்கும் போது உங்களோடு பகிர்ந்து கொள்கின்றேன்... நிறைய சினிமா நண்பர்களிடம் பேசம் போது நிறைய விஷயங்கள் காதில் விழுகின்றன.. அதுநம்பகமானதுதானா என்று ஒன்றுக்கு இரண்டு முறை கேட்டுவிட்டு எழுதுகின்றேன்.. டெக்னிக்கல் விஷயங்கள் பற்றி லைட்டாக சொல்ல இருக்கின்றேன்..... 34 வயதில் சினிமாவுக்குள் நான் நுழைந்தது எல்லாம் அதன் மேல் உள்ள காதலால்...இந்த 6மாதத்தில் சினிமாவில் நிறைய அனுபவங்கள்.... 700 எபிசோட் எழுதும் அளவுக்கு நிறை விஷயங்கள் இருக்கின்றன...

நானே சொல்லி இருக்கின்றேன்... சிரியலுக்கு சினிமாவுக்கும் பெரிய வித்யாசம் கேமரா என்ற ஒன்று மட்டும்தான் என்று விளையாட்டுக்கு சொல்லி இருக்கின்றேன்... சினிமாவுக்கான மெனெக்கெடல் என்ன என்பது எனக்கு தெரியும்....


அதேபோல் ஒரு வேண்டுகோள் நான் எந்த படத்தில் வேலை செய்கின்றேன்...யாருடன் வேலை செய்கின்றேன் போன்ற விஷயங்கள் தயவு செய்து கேட்காதீர்கள்... நேரம் வரும் போது சொல்கின்றேன்... அல்லது வெற்றி பெற்றவுடன் சொல்கின்றேன்... நடுவில் கூட குடும்ப சூழலுக்கு ஏற்ற வாறு திரும்பவும் எதாவது ஒரு கல்லூரிக்கே வேலைக்கு போனாலும் ஆச்சர்யபடுவதற்க்கு இல்லை...

வாழ்க்கை கனவுகளை செயல் படுத்த பொருளாதாரம் ரொம்ப முக்கியமான விஷயம்...


அன்புடன்/ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றும் டைம்பாஸ் படங்களையும்,மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....

(NIGHT TRAIN) படத்தில் எல்லோரும் சாகின்றார்கள்


டைம்பாஸ் படங்கள் என்பது வெட்டியாக சன் மியுசிக்கில் எதாவது ஒரு நடிகையின் தொப்புளின் குலுக்களை பார்ப்பதற்க்கு பதில் இந்த படத்தை பார்க்கலாம் என்று அறிமுகபடுத்தவே டைம்பாஸ் படங்கள் கேட்டகிரி....
இந்த படங்களோடு எந்த படத்தையும் கம்பேர் செய்யாதீர்கள்... இது போல் அல்லது இதே போல் கதையம்சம் சதை அம்சம் கொண்ட படங்கள்79800 சொச்ச படங்கள் இதுவரை வந்துள்ளன ....

நைட் டிரைன் படத்தின் கதை இதுதான்...
ஒரு ரயில் அது கிருஸ்மஸ் விடுமுறைக்காக போய் கொண்டு இருக்கின்றது... நமது ஊர் டரயில் போல பாத்ரூம் பக்கத்தில் எல்லாம் உட்கார்ந்து கொண்டு பயணம் செய்ய வில்லை... ஒரு கம்பார்ட்மென்டில் இரண்டு பேர் அல்லது 3 பேர் அவ்வளவுதான்....வெளியே உறைபனி கொட்டிக்கொண்டு இருக்கின்றது... ஒரு வயதானவர்... ஒரு ஆண், பெண் பயணம் செய்யும் கம்பார்ட்மென்டில் ஏறி மாத்திரை போட்டதும் உட்கார்ந்த நிலையில் பரலோகம் சென்று விட... அதாவது ரயி்லில் டிக்கெட் வாங்குவதற்க்கு முன் அவர் மேலோகத்துக்கு டிக்கெட் வாங்கி விட...அவர் எடுத்து வந்து விலை மதிக்க முடியாத ஜுவல் பாக்சை பார்த்து...ரயிலின் டிக்கெட் பரிசோதகர் அந்த பெண் , அந்த ஆண் மூவரும் ஆசை படுகின்றார்கள்... அந்த பெரியவர் ரயி்லில் ஏறி டிக்கெட் எடுக்காமல் இறந்து போனதால்... பெசஞ்ஜர் லிஸ்ட்டில் பெயரும் இல்லை ... ரயில் நிலையத்தில் அந்த பெரியவ்ர் ஏறியதற்க்கு எந்த சாட்சியும் இல்லை அதனால் ரயில் போகும் வரியில் உள்ள ஆற்று பாலத்தில் இருந்து ஆற்றில் அந்த பெரியவ்ர் உடலை தள்ளி விட்டு அந்த பெட்டியில் உள்ள நகையை பங்கு போட்டுக் கொள்ளலாம் மூவரின் பிளான்...

ஒரு பெட்டியில் உடலை வைத்து தள்ளி விடலாம் என்று மூவரும் யோசிக்க... அந்த பெட்டியில் அந்த பெரியவரின் உடல் உள்ளே வைக்க முடியவில்லை... அந்த பெண் மட்டன் வெட்டும் கத்தியால் கிழவர் பிணத்தை கூறு போட்டு பெட்டியில் தினித்து ரயில் போகும் வழியில் உள்ள ஆற்றில் வீசி எறிகின்றனர்... அடுத்த ஸ்டேசனில் ரயில் நிற்க்கும் போது அந்த கிழவரை தேடி ஒருவன் வருகின்றன்... அடுத்து வழக்கம் போல் வெண்திரையில் காண்க...


படத்தின் சுவாரஸ்யங்களில் சில....

ரயில் வேகமாக பனி பிரதேசத்தில் போகும் காட்சிகளை மினியேச்சர் ரயில் செட் போட்டு எடுத்து இருக்கின்றார்கள்... இது போன்ற படங்கள் பலது வந்தாலும் ஹாலிவுட்காரர்கள் இந்த மாதிரி படங்கள் எடுக்க சலிக்கவே மாட்டேன்கின்றார்கள்...

வேறு என்ன அப்படி ஒன்றும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கும் இல்லை...
கதாநாயகியாக நடித்து இருக்கும் பெண்ணின், சின்ன உடைகளையும் காட்சியை தவிர்த்து பெரிய சுவாரஸ்யம் இந்த படத்தில் எனக்கு எற்படவில்லை ...

என்னதான் டொக்கு படமாக இருந்தாலும் ஒளிப்பதிவு அருமை....ஒரு சிலருக்கு இந்த படம் பிடித்தமானதாக இருக்கும்


படத்தின் டிரைலர்...




படத்தின் குழுவிவரம்....

Directed by Brian King
Produced by Christopher Eberts
Brian R. Etting
Steve Markoff
Bruce McNall
Wendy Park
Michael Philip
Arnold Rifkin
Written by Brian King
Starring Danny Glover
Leelee Sobieski
Steve Zahn
Geoff Bell
Release date(s) 2009
Country USA
Language English
அன்புடன்/ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றும் டைம்பாஸ் படங்களையும்,மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....

வெகு நாட்களுக்கு பிறகு...சாண்ட்வெஜ் அன்டு நான்வெஜ்(07.10.2009)

ஆல்பம்..

ஒரு வழியாக உங்களுக்கு இம்சை கொடுக்க நெட் கனெக்ஷன் இழுத்துவிட்டேன்....கடைசியில் ஏர்டெல்தான் கிடைத்தது டாடாவை கம்பேர் பண்ணும் போது இது ரொம்ப சிறப்பாகவும் வேகமாகவும் இருக்கின்றது...
வந்து கனெக்ஷன் கொடுத்த நண்பர் ரொம்ப சிறப்பாகவும் நிறைவாகவும் வேலை செய்தார்... அவரை தெம்புட்டும் விதமாக அவருக்கு 100 பணம் கொடுக்க, அவர் எங்க கம்பெனியில் கஸ்டமரிடம் பத்து பைசா கூட வாங்க கூடாது என்று கட்டளை போட்டுள்ளதை சொல்ல அதனால் உங்க அன்புக்கு நன்றி... என்று சொன்ன போது எனக்கு காலடியில் பூமி நழுவியது... எர்டெல் வாழ்க...

கடந்த பதினைந்து நாட்களில் நான் ஒரு சில போஸ்ட் போட்டு இருந்தாலும் உங்கள் பின்னுட்டம் என்னை உற்சாகபடுத்தியது உண்மை... அதே போல் தொடர் வாசிப்புக்கு பலர் எனது தளத்தை தேர்ந்து எடுத்துள்ளது எனக்கு மிகுந்த மகிழ்வை கொடுத்தது என்பேன்.. அது போல் தமிழ் டைப்புக்கு பதில் சொல்லி பலர் லிங் கொடுத்து சின்ன பிள்ளைக்கு சொல்வது போல் எனக்கு சொல்லி கொடுத்தார்கள் .. எனக்கு பழைய டைப்ரைட்டர் பழகி வி்ட்டது என்னால் புதிதுக்கு என்னால் மாற முடியவில்லை முயற்ச்சி்த்து பார்க்கின்றேன்... இந்த பத்து நாட்களில் பலர் நான் அறிமுகபடுத்திய பல படங்களை
பார்த்து விட்டு நேரிலும் தொலைபேசியிலும் வாழ்த்தும் போதும், பின்னுட்டம் போடும் போதும் முன்னை விட உற்சாகமாய் எழுத ஆசை வருகின்றது...


மிக்சர்...

பதிவுலகில் நான் பத்துநாள் இல்லை... எல்லோரும் சொன்னது உன்னை போல் ஒருவன் படத்தை பற்றிய விமர்சனங்களைதான்...எல்லோரும் அடித்துக்கொண்டு மங்கம் மாய்ந்து கொண்டு இருக்கின்றார்கள்...
இப்போதுதான் கனெக்ஷன் வந்த காரணத்தால் பொறுமையாக படிப்போம் என்று இருக்கின்றேன்...

அதே போல் பதிவர் மு இரா அவர்கள் தொடர்ந்து குழந்தைகள் படம் மற்றும்
அனிமேஷன் படங்கள் எழுத சொல்லி அவர் விருப்பத்தை தெரிவித்து கொண்டு இருக்கின்றார்.... எனக்கு அது போன்ற படங்கள் கொஞ்சம்தான் பார்த்து இருக்கின்றேன்... நேரம் கிடைக்கும் போது நிச்சயம் எழுதுவேன்...

விஷுவல் டேஸ்ட்....நான் எடுத்ததில் பிடித்தது....
கடலுர் பக்கத்தில் ஒரு கடலோர கிராமம்...
பெங்களுரின் புறநகர் ரயில் பாதை...


நான்வெஜ்....
ஜோக்...1
அவளுக்கு கல்லூரி படிக்கும் போதே பல பெண் நண்பிகள் செக்ஸ் பற்றி பேசும் போது உடலுறவில் வலி ஏற்படும் என்று சொல்லி அவளை கிலி பிடிக்க வைத்து இருந்தார்கள்...அதன் பேரின்பத்தையும் அவளுக்கு சொல்லி இருந்தார்கள்... எப்படி வலியுடன் பேரின்பம் அடைவது? அது எப்படி சாத்தியம்? என்று அவள் மண்டை குழம்பி போனாள்... யாரிடமாவது கேட்கவும் பயம்.. எதாவது நினைத்து விட்டாள்... அவளுக்கு திருமணம் நடந்து... முதல் இரவை பற்றி பயத்துடன் இருந்தாள் திருமணத்துக்கு வந்த நண்பர்களுடன் நிற்க்கும் போட்டோக்களுக்குகூட வலுக்கட்டாயத்துடன் கொஞ்சம் சிரித்து வைத்தாள்... இரவை பற்றிய பயம் மனதுள் இருந்தது கொண்டே இருந்தது...

முதல் இரவு.... மிரண்டு போன விழிகளுடன் இருந்தவளிடம் கணவன் காரணம் கேட்டான்..... கணவனிடம் தன் பயத்தை தெரிவித்தாள்... அவன் சொன்னான்... நான் மெல்ல முயங்குகின்றேன்... உனக்கு வலி ஏற்ப்பட்டால் சொல்... அதாவது 1 லிருந்து 9 வரை மெதுவாக சொல் பத்து என்ற எண்னை மட்டும் சொல்லி விட்டாள் உனக்கு வலிக்கின்றது என்று நினைத்து நான் உடன் நகர்ந்து விடுவேன் என்று சொல்ல அவளும் மண்டையை மண்டையை ஆட்டி வைத்தாள்... அவன் முயங்கினான்...
அவள் வாய் அடுத்த பத்து நிமிடத்துக்கு இப்படித்தான் சொல்லிக்கொண்டு இருந்தது...
123456789ஐயோ, 8765432ஆ , ஸ்25687459 , 214556687632561545456456454545645645645536664478533 .....

அன்புடன்/ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....

(Men of Honor) பொறுமையின் வெற்றி...




தங்கம் இருப்பதாக சொல்லப்பட்ட இடத்தில் 8 அடி ஆழம் வரை தோண்டி இது வேலைக்காகாது என்று சொல்லிவிட்டு அடுத்த வேலை பார்க்கப் புறப்படுகிறவர்களே நம்மில் அதிகம். 2 அடி, 5 அடி அதிக முயற்சி செய்து 9 அடி வரை சென்று “சீச்சீ இந்த பழம் புளிக்கும்” என்று வியர்வையை துடைத்து விட்டு போகிறவர்கள் மத்தியில் பொறுமையோடு தொடர்ந்து முயல்பவனுக்கு 10வது அடியில் தங்கம் கிடைக்கிறது.

எழுத்தாளர் பாலகுமாரன் “வெற்றி பெறுபவன், வெற்றி பெற நினைப்பவன், வெற்றியில் குளித்து மகிழ்பவன் - ஒரு கர்ப்பிணி பெண்ணைப் போல் வாழ வேண்டும்” எனச் சொல்வார். ஒரு கர்ப்பிணிப் பெண் சதாசர்வ காலமும் தன் வயிற்றில் உள்ள குழந்தையைப் பற்றியே நினைத்துக் கொண்டிருப்பாள். அவள் செய்யும் ஒவ்வொரு செயலிலும் குழந்தையே நினைவிலிருக்கும். புலியே துரத்தினாலும் அதிர்ந்து ஓடக்கூட மாட்டாள். தனது முழுக்கவனத்தையும் தன் வயிற்றின் மீதே குவித்திருப்பாள்.


அது போல் வெற்றி பெற நினைப்பவனும் சதாசர்வ காலமும் வெற்றி குறித்தே நினைத்திருக்க வேண்டும். எத்தனை அவமானம் வரினும், எத்தனை இடர்ப்பாடு வரினும், எத்தனை வேதனை வரினும் அவனது எண்ணமும் செயலும் வெற்றியை நோக்கியே இருக்க வேண்டும்.





அப்படி வெற்றிக்காக தனது காலையே இழந்த ஒரு அமெரிக்கக் கடற்படை வீரனின் உண்மைக்கதைதான் Men of Honor.

Men of honor படத்தின் கதை இதுதான்...
Carl Brashear (Gooding, Jr.) ஒரு ஏழை விவசாயியின் மகன். தன் அப்பா வானம் பார்த்த நிலத்தில் படும் கஷ்டங்களை நேரில் கண்டு மனம் வருந்துபவன். தனது வாலிப வயதில் அமெரிக்க கடற்படையில் பணியில் சேர செல்கிறான். அவனுக்கு விடைதரும் அப்பா தயவுசெய்து இந்த ஊருக்கு திரும்பி வராதே என்றும் தன்னைப்போல் இங்கே இருந்து கஷ்டப்பட வேண்டாம் என்றும் போகும் இடத்தில் சிறப்புற பணியாற்ற வாழ்த்தி அனுப்புகிறார்.


வந்த இடத்தில் Master Chief Petty Officer Leslie William "Billy" Sunday (De Niro) போல தானும் மிகச்சிறந்த Diver ஆக வேண்டும் என்ற ஆசையோடு கடற்படையில் சேருகிறான். அமெரிக்கக் கடற்படையில் நிற வேறுபாட்டின் காரணமாக அவன் படும் அல்லல்களையும் மீறி அவன் dive அடிக்கும் கலையை மிகவும் பொறுமையோடு கற்றுக் கொள்வதும் அதற்காக அவன் படும் அவமானங்களும் அதையும் மீறி அவன் எப்படி ஜெயித்தான் என்பதே மீதிக்கதை.








படத்தின் சுவாரஸ்யங்கள் சில...

இந்தப்படம் ஸ்டேன்லி க்யூப்ரிக் இயக்கிய full metal jacket படத்தின் பல காட்சிகளை நினைவு படுத்துகிறது. அமெரிக்க ராணுவம் அதன் உள் கட்டமைப்பு எந்த அளவு ஈகோவோடு இருக்கின்றது என்பதற்கு இந்தப்படம் ஒரு மிகச்சரியான உதாரணம் என்றால் அது மிகையல்ல.

எந்த இடத்திலும் திறமையானவர்கள் மிகவும் கஷ்டப்பட்டே உயரத்திற்கு வரவேண்டியது மனித அவலம்.




டைவிங்கிற்கு மிக முக்கியமான அவனது கால்கள் விபத்தில் செயலிழந்தாலும் அந்த காலையே எடுத்துவிட்டு, தன் பணி மீது உள்ள அடங்காக் காதலால் அவன் தன் பணியில் முழு வெற்றியடையும் உச்சகட்ட காட்சி கண்ணில் நீரை வரவழைக்கும்.



இந்தப் படம் நிறைவடையும் போது உங்களுக்கு உங்கள் கண்ணீர் இலவசம்.

ஒரு காட்சியில் கணவன் தன் மனைவியிடம் கேட்பான். “ஒரு வேளை நான் தோற்றுவிடுவேன் என்று நினைத்தாயோ...” என்று அதற்கு அவள் அழகாய்ச் சொல்லுவாள் “நான் காதலித்து கரம் பிடித்தவன் தோல்வியடைபவன் அல்ல”. Robert de Nero நடிப்பை இன்று முழுதும் பார்த்துக் கொண்டே இருக்கலாம். நடிக்க விருப்பமுள்ளவர்கள் இவரது அனைத்துப் படங்களையும் பார்க்கும் படி என் தனிப்பட்ட வேண்டுகோளையும் வைக்கிறேன்.

Gooding Jr. நடிப்பை அதுவும் குறிப்பாக கோபத்தில் அவர் காட்டும் முக வெளிப்பாடுகளை இன்றைக்கெல்லாம் பார்த்துக்கொண்டேயிருக்கலாம். இந்தப் படம் உண்மைச் சம்பவத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டது. It is inspired by the true story of Master Chief Petty Officer Carl Brashear, the first African-American Master Diver in the United States Navy.
George Tillman, Jr. இயக்கிய இந்தப் படம் தன்னம்பிக்கை குறைந்தவர்கள் கட்டாயம் பார்த்து தங்களின் தன்னம்பி்க்கையை வளர்த்துக் கொள்ள சரியான படம். தவறவிடாமல் பார்க்கவும்.

படத்தின் ட்ரைலர்...



படக் குழுவினர் விபரம்...

Directed by George Tillman, Jr. Produced by Bill BadalatoRobert Teitel Written by Scott Marshall Smith Starring Robert De NiroCuba Gooding, Jr.Charlize Theron Music by Mark Isham Cinematography Anthony B. Richmond Editing by John CarterDirk Westervelt Distributed by 20th Century Fox Release date(s) November 10, 2000 Running time 129 min. Language English Budget $32,000,000[1] Gross revenue $15,250,312[1]

அன்புடன்/ஜாக்கிசேகர்தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றும் டைம்பாஸ் படங்களையும்,மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்நன்றி.....


(கேரளா)ஆலப்புழா ஒரு பார்வை....

ஆலப்புழா பெயர்காரணம்... சின்னதும் பெரிதுமாய் நகரினுள்ளே கால்வாய்களில் ரிப்பன் போல்6 ஓடி கடலில் கலக்கின்றன... அதில் படகு பயனிக்கின்றது....நகரம் மிக சோம்பலாய், இரவு வேகுநேரம் பிட்டு படம் பார்த்து விட்டு துக்கம் கலையாமல் எழுவது போல் எழுகின்றது...காலையில் ஏழே முக்காவுக்கே இங்கு டீக்கடை திறக்கின்றார்கள்... காலை ஆறு மணிக்கு ஆள் நடமாட்டம் அறவே இல்லை..

நமது ஊர் அது கிராம புறமாக இருந்தாலும் சிறு நகரமாக இருந்தாலும் 5 மணிக்கு டீக்கடை திறந்து விடுவார்கள்...பாமை வாய்ந்து நகரம் மிக குறுகலாய் சாலைகள்.. சொற்ப மக்கள்...

நாடு எவ்வளவு முன்னேறினாலும் இன்னும் மலையாளிகள் மணி ஆட்டிக்கொண்டுதான் பஸ் ஓட்டுகின்றார்கள்.. நமது கரூரில் பாடி கட்டிய தமிழக பஸ்களை பார்த்து விட்டு இந்த பஸ்களை பார்த்தால் வாந்தி வந்து விடுகின்றது....

நமத ஊரில் வழக்கு ஒழிந்து போன லாட்டரி டிக்கெட் வியாபாரம் மிக சிறப்பாக நடைபெறுகின்றது... பழைய ஞாபகத்தை கிளறி வேறு விட்டு விட்டு விட்டது..நானும் ஒரு லட்டசத் ரூபாய் பரிசி சீட்டு வாங்கி விழுந்தால் எப்படி இருக்கும் என்று இரவு ஜாலியாக நினைத்து பார்த்தேன்...

காலையிலேயே பரோட்டாவும் பீப்பும் சாப்பிட்டு மலையாளிகள் மயக்கம் வரமால் நடந்து போகின்றார்கள்... ஆப்பம் முட்டைகறி ரொம்ப பேமஸ்இங்கே...
பிரியானியில் சிக்கன் இரண்டு பீஸ் வைத்து85 ரூபாய் என்று பாக்கெட்டை வலுவிழுக்க வைக்கின்றார்கள்...4 வண்டி நிற்க்கும் சிக்னலுக்கு ஒரு போக்குவரத்து போலிஸ்காரர் ரொம்ப சலித்து வேலை செய்வதை பார்த்த போது இவரை சென்னை பிராட்வே சிக்கனலில் மாற்றல் போட்டால் மயக்கம் போட்டு விடுவார்...

எல்லா இடத்திலும் விளம்பர ஹோர்டிங்குகள் மிக முக்கியமாக நகை கடை விளம்பரங்கள்... துபாயிலிருந்து சம்பாதித்து அனுப்பும் சேட்டனின் பேக்ங் பேலன்ஸ் கரையவைக்க விளம்பரங்களில் கட முதளாளிகள் அதகம் செலவழிக்கின்றார்கள்... எல்லா இடத்தி்லும் பேக் ரவுண்ட பச்சை நிறம் என்பதால் விளம்ப்ர ஹோர்டிங்குகள் மிக அற்புதமாக இருக்கின்றன...

எல்லா விளம்பரத்திலும் அண்மை சாயல் சற்றே இருக்கும் பெண்கள் தங்கள் சிறு மார்பை பாதிவரை வரை திறந்து லட்சோப லட்ச மங்ககள் ஜொள்ளுவிட ஏதுவாக நகை அணிந்து நிற்க்கின்றார்கள்...

பசிக்கின்றது பானி பூரி சாப்பிடலாம் என்றால் வாய்ப்பே இல்லை... சுண்டல் சமோசா அதற்க்கும் வாய்பு இல்லை...இரவு 8 மணிக்கே கடை அடைக்க தொடங்கி விடுகின்றார்கள்...

கேரளாவிலும் மதுக்கடைகளை அரசே ஏற்று நடத்துகின்றது..நம் ஊரில் எல்லோரும் பணத்தை நீட்டி சரக்கு வாங்க முயற்ச்சி செய்வார்கள் இங்கே கம்பி கட்டி ரேஷனில் அரிசி வாங்குவது போல், தியேட்டரில் டிக்கெட் வாங்குவது போல் குடிமகன்கள் சரக்கு வாங்குகின்றார்கள்....

ஆலப்புழா மெடிக்கல் காலேஜ் ஜங்ஷன் பக்கத்தில் ஒரு தியேட்டர் இருக்கி்ன்றது.. அது நமது சென்னை கெயிட்டி தியேட்டரை நியாபகபடுத்துகின்றது...

இங்கு எல்லார் வீடும் முன்புறம் தோட்டம் வைத்தே வீடு கட்டி இருக்கின்றார்கள்.. எலக்காய் பயிரிட வந்த வெளிநாட்டினர் அனைவரையும் கிருத்து மதத்தை அறிமுகப்படுத்தி எகப்பட்ட சர்ச்சுகள் இருக்கின்றன.. அதே போல் இங்கு தெருவுக்கு தெருவுக்கு மசூதிகளும்....

பெண்கள் எல்லோரும் அவ்வளவு அழகாக இருக்கின்றார்கள்...தேங்காய் எண்ணெயின் செழுமை எல்லா பெண்களின் கழுத்துக்கு கிழேயும் பிரம்மன் ஓவர் டைம் எடுத்து இருப்பது கண்கூடாக தெரிகின்றது...

முன்பு ஜோதி தியேட்டரில் மலையாள பிட்டு படங்களில், அடுத்த மாத கரண்ட் பில்லுக்கும் கேஸ் வாடகைக்கும், தன் வீட்டு வறுமைக்கும், தொப்பையில் அரைஞான் கயிறு கட்டி நிர்வாண குளியல் குளித்த ஆண்டிகள் போல் இல்லமல் எல்லா ஆண்டிகளும் பளிச்சென அழகாய் இருந்தார்கள்...

இங்கு ஆட்டோ டிரைவர்கள் எல்லாம் பதினைந்து 20 ரூபாயிலேயே நகரத்தின் பல பகுதிகளக்கு சென்று விடுகின்றார்கள்... விருகம் பாக்கத்தில் இருந்து வளசரவாக்கம் செல்ல நமது ஆட்டோகாரர்கள்40 ரூபாய் என்று சொன்னால் இங்கு பதினைந்து ரூபாய்தான்....

தலை குளித்து துவட்டாமல் கூந்தலில்ன நுனியில் மெல்ல நீர் சொட்ட சொட்ட ஒரு ஆண்டி அவசரமாக ஆட்டோ பிடித்த போது, நானும் ஆட்டோ பிடிக்கலாமா என்று இருந்தேன்... என் மனைவியின் கோப முகம் ஞாபகம் வந்ததும்.... ஆட்டோ பிடிக்கும் திட்டத்தை கைவிட்டேன்...

இருப்பினும் தமிழர்கள் என்றால் ஒரு நக்கல் பார்வை எல்லா மலையாளிகளிடமும் இருக்கின்றது... சிலர் வெளிகாட்டவில்லை அவ்வளவுதான்... என்ன தமிர் படத்தை டப் செய்யாமல் தமிழிலேயே பார்க்கின்றார்கள்... எல்லோருக்கும் தமிழ் நன்றாக தெரிகின்றது புரிகின்றது... மலையாள பாடல் எதோ ஒரு சில இடத்தில் மட்டுமே கேட்டேன்... தமிழ்பாடல்கள்தான் எல்லா இடத்திலும் வியாபித்து இருக்கின்றது...

மிக சோம்பலாய் கண் விழித்து சீக்கரம் தூங்கும் நகரம் ஆலப்புழா...

குறிப்பு எனது கேமரா ரிப்பேர் என்பதால் அதை சரிபடுத்த இப்போது நிலமை சரியில்லாத காரணத்தால்.. எனது விஷூவல் டெஸ்ட் மிஸ்சிங்... அடுத்தமுறை நிச்சயம் படங்கள் எடுப்போம்... எங்கே போய் விட போகின்றது ஆலப்புழா????


அன்புடன்/ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றும் டைம்பாஸ் படங்களையும்,மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner