( MAHANADHI) மகாநதி திரைப்படம் கமலின் மாஸ்டர் பீஸ்...


நம்ம சொர்கம் என்பது மண்ணில் உள்ளது வானில் இல்லையடி...
நம்ம இன்பம் என்பது கண்ணில் உள்ளது கனவில் இல்லையடி... கவிஞர் வாலி எழுதி மகாநதியில் இடம் பெற்ற... பொங்கலோ பொங்கல் பாடலில் வரும் லைன் அது..அதை என் டைரியி்ல் அந்த வரிகளை எழுதி வைத்து இருந்தேன்....

எல்லோருக்கும் நல்ல வாழ்க்கை வாழ வேண்டும்.... நல்ல உடை உடுத்த வேண்டும் என்ற கனவு உண்டு...ஒரளவுக்கு வசதியாக வாழ்ந்தவன் இன்னும் நன்றாக வசதியாக வாழ நினைத்து வழுக்கி விழுந்த கதை இது....


ஒருநாள் காலை என் அம்மா என்னையும், என் நான்கு தங்கைகளையும் அழைத்தாள்... அப்பாவுக்கு வேலை போய் விட்டது... இனி நாளை காலையில் இருந்து யாரும் அம்மாவை காப்பி கேட்டு நச்சரிக்க கூடாது... அம்மா உங்களுக்கு கேழ்வரகு மாவை தண்ணிரில் போட்டு அலசி, வரும் வெண்மையான நீரை நன்றாக காய்ச்சி சக்கரை போட்டு உங்களுக்கு தருகின்றேன்... பால் வாங்க காசு இல்லை என்றாள்... எங்களுக்கு கேஷ்வரகு கஞ்சி சக்கரை போட்டு அன்றிலிருந்து கொடுக்க ஆரம்பித்தாள்...

அரிசி வாங்காத ரேஷன் கார்டுகளை நண்பிகளிடத்தில் வாங்கி, ரேஷன் அரிசி வாங்கி அதனை கொஞசம் நல்ல அரிசியுடன் சரிபாதியாக கலந்து அதனை இட்லிக்கு போட்டு எங்கள் பசியாற்றியவள்....

எல்லோருடைய வீட்டு இட்லியும் மல்லிகை பூவாக காட்சி அளிக்க எங்கள் வீட்டு இட்லி மட்டும் ரேஷனில் போட்ட சிவப்பு அரிசி மி்க்ஸ் செய்ததால்... சிவப்பு கலரில் இருக்கும்.... படிக்கும் போது காமராஜர் போட்ட மதிய உணவுதான் எங்கள் படிப்பை தடையில்லாமல் தொடர செய்தது...

அப்போது அப்பா வாங்கும் ஒரே பத்திரிக்கை குமுதம்தான் ....வறுமை வீட்டில் தொடர்ந்ததால் அப்போது 1ரூபாய்10 பைசாவுக்கு விற்ற குமுதம் என் வீட்டுக்கு வர யோசித்தது... என் அம்மா ஒரு போது அடுத்தவர் வீட்டில் தலை சொரிந்து நின்று அரை டம்பளர் காபி பொடி கொடுங்கள் ...என்று ஒரு போதும் இரவல் கேட்டதில்லை... இருப்பதை வைத்து மானத்துடன் வாழ்க்கை நடத்த வேண்டும் என்ற கொள்கை கொண்டவள் என் அம்மா...அத்தனை வறுமையிலும் எங்கள் வீட்டு கவுரவகொடியை கிழே இறக்க வண்ணம் தாங்கி பிடித்தவள் அவள்தான்.....போதும் என்ற மனம் போதும். ரசம்சாதமாக இருந்தாலும் பழைய சோறாக இருந்ததாலும் மானத்தோடு உண்டு வளர்ந்தோம்... அடுத்தவன் வாழ்வை பார்த்து எங்கள் அம்மா ஒரு போதும் சூடு போட்டுக்கொண்டதில்லை.... பந்தாவுக்காக இருப்பதை விட்டு விட்டு பறப்பதை ஒரு போதும் பிடிக்க எங்களுக்கு என் அம்மா கற்றுக்கொடுத்தது இல்லை....

தானும் தன் குடும்பமும் சபிட்சமாக வாழும் பொருட்டு... ஒரு தனிமனிதன் எடுத்த சில தவறான முடிவுகள் எங்கனம் அவனையும் அவன் குடும்பத்தையும் அலை கழிக்கின்றன என்பதே மகாநதி படத்தின் கதை....

மகாநதி படத்தின் கதை இதுதான்....


கிருஷ்ணசாமி (கமல்) மனைவியை வாரி கொடுத்துவிட்டு தனது இரண்டு குழந்தைகளுடனும் (ஆண் ஒன்று, பெண் ஒன்று) தனது மாமியாருடனும் (வரலட்சுமி) திருநாகேஷ்வரத்தில் சிவல் பேக்டரி நடத்தி வருபவன்... ஊரில் கையெடுத்து கும்பிட வைக்கும் குடும்பம் அவனுடையது...

வெளிநாட்டில் இருந்தது பொங்கல் பண்டிகைக்கு குடும்பத்தோடு கொண்டாட ஊருக்கு வரும் நண்பனின் வசதியான வாழ்க்கையும், அவன் பிள்ளைகள் பேசும் ஆங்கிலமும் அவன் மனதை கெடுக்கின்றன...ஒரு விபத்தில் எதெச்சையாக சந்திக்கும் பிராடு தனுஷ் கிருஷ்ணசாமியின் மனதை மாற்றி சென்னை வாழ்க்கையை ஆசைகாட்டி கிருஷ்ணசாமிக்கு அனுபவம் இல்லாத சிட் பண்ட் கம்பெனி ஆரம்பிக்க வைத்து,அந்த கம்பெனி பணத்தை மோசடி செய்து தனுஷ் தலைமறவாக, மக்கள் பணத்தை ஏமாற்றி குற்றத்திற்க்காக 4 வருட சிறை தண்டனையுடன் ஜெயிலுக்கு வருகின்றான்கிருஷ்ணசாமி..., அங்கே அவனுக்கு பாஞசாபி கேசன் (பூர்ணம் விஸ்வநாதன்) என்ற பெரியவர் நட்பாகின்றார்...ஒரு கட்டத்தில் அவர் பெண்ணை (சுகன்யா) கிருஷ்னசாமிக்கு திருமணம் செய்து கொடுக்க சம்மதிக்கின்றார்..அவன் ஜெயிலில் இருக்கும் போது அவன் குழந்தைகள், மாமியார் என்னவாயினர்? அவன் ஜெயிலில் சந்திக்கும் பிரச்சனைகள்... பிராடு தனுஷ் மாட்டினனா? கிருஷ்ணசாமி... பஞசாபி கேசன் பெண்ணை திருமணம் செய்தானா? போன்ற கேள்விகளுக்கு வெண்திரையில் பார்த்து மகிழுங்கள்....

படத்தின் சுவாரஸ்யங்களில் சில.....

இந்த படம் சென்னை ஆனந் தியேட்டரில் பார்த்தேன்....கிருஷ்ணசாமி போல நான் சென்னைக்கு செக்யூரிட்டி வேலைக்கு வந்து எங்களை ஏமாற்றி, எல் ஐ சி எதிரில்... அப்போது இருந்த சென்டிகோ ஸ்கூட்டர்சில் நான் செக்யூரிட்டி வேலை பார்த்து , எதிரில் இருந்த அலங்கார் தியேட்டரில் பிளாக்கில் டிக்கெட் விற்று வயிற்றை கழுவி, மெரினா பீச்சில் சில மாதங்கள் பிளாட்பாரத்தில் படுத்து தூங்கிய போது பார்த்த படம் இது...

இன்று சென்னையில் என் பைக் போகாத சந்து பொந்துகளே இல்லை எனலாம்... ஆனால் இந்த படம் பார்த்து விட்டு கணத்த இதயத்தோடு விழிகளில் நீருடன். என் நிலை நினைத்தும், கமல் நிலை நினைத்தும், ஆனந்தியேட்டரில் நடுநிநசி காட்சி பார்த்து விட்டு அழுதுக்கொண்டே, ராதகிருஷ்ணன் தெருவில் நடந்தே காந்தி சிலை வந்து மேரி பிஸ்கட் அட்டையை பாய் போல் விரித்து மெரினா பிளாட்பாரத்தில் படுத்து, கனத்த இதய்த்தோடு வெகுநேரம் உறக்கம் வராமல்5,10 மலேசியா ஏர்லைன்சை பிளைட்டை பார்த்து மணி 5,10 என்று மன்துக்குள் சொல்லி ஒரு மணிநேரம்தூங்கி எழுந்தேன்.... அப்போது என் கைகளில் வாட்சு கூட கிடையாது பறக்கும் விமானங்கள்தான் எனக்கு கை கடிகாரம்..... அதன் பிறகு ஒரு வாரத்துக்கு மகாநதி படத்தை பற்றிய நினைவாக இருந்தது என்பது குறிப்பிட வேண்டிய செய்தி...

சென்னை ஆனந் தியேட்டர் ஆண் பெண் வித்யாசம் இல்லாமல் கண்ணீர் சிந்தி தியேட்டரை நச நசப்பாக்கினர்... படம் பார்த்து கொண்டே நாம்தான் அழுவுகின்றோமா? அல்லது வேறு யாராவது அழுகின்றார்களா? என்று பார்த்தால் எல்லா ஆண்களும் அழுதது வியப்பு...

சிறை வாழ்க்கை மனிதனை திருத்துவதற்க்கு பதில் சில விஷமிகள் மற்றும் சுய நலக்காரர்களால் சிறைகைதிகள் எவ்வாறு துன்பப் படுகின்றார்கள் என்பதை அற்புதமாக சொல்லி இருப்பார்கள்.....

இது காப்பி அடித்த படமா? அல்லது காப்பி அடிக்காத படமா? என்பது எனக்கு தெரியவில்லை ஏனென்னறால் இதே போன்ற கதை அமைப்பிள் பல படங்கள் வந்து உள்ளன...

சிறையில் கமலும் பூர்ணம் விஸ்வநாதனும் சந்தித்து அறிமுகம் ஆகும் காட்சியும் அதன் லைட்டிங்கும் அருமை...உப்புமாவை துலுக்கானத்துக்கு சுவைக்க கொடுத்து அவன் சூட்டில் துடிக்க அதுவரை சோகமாக முகத்தை வைத்து இருந்து விட்டு அவன் போனதும், அவனுக்கு நன்றாக வேண்டும் என்று சிரிக்கும் அந்த சிரிப்பு சுவையான ஒன்று....

சென்னை மத்திய சிறை கைதிகளின் நித்திரையேடு விளையாடும் ரயில் போக்குவரத்தை சொல்லி இருக்கும் காட்சி அழகு... அதே போல் கமல் படுத்து கண் சிமி்டிய படி தன் கடந்த காலத்தை நினைத்து பார்க்க கேமரா டாப் ஆங்கிளில் இருந்தது மெல்ல கமல் முகம் நோக்கி ஜும் இன் ஆக, கண் சிமிட்டவும் அதே ரயில் சவுண்டில் தடக் தடக் ஒளியோடு அவன் சொந்த ஊரில், ஒவ்வோறு கதவாக திறக்க, அவன் ஊரில் வீட்டு பக்கத்திலும் ரயில் டீராக் இருக்க, அதில் ரயில் வருவது போன்று விரியும் பிளாஷ் பேக் காட்சி அருமை... தீ லாஸ்ட் எம்பரர் படத்தில் கேம்பிள் இருக்கும் ராஜா பாத் ரூமில் கையை வெட்டிக்கொள்ள ஒரு சீப்பாய் ஓப்பன் த டோர் என்று சொல்லியபடி இருக்க, அவன் ராஜ காலத்தில் சிறுவயதாக இருக்கும் போது நடந்த நிகழ்வுகளை நினைத்து பார்க்கும் காட்சிக்கு சமம்..அந்த கமல் நினைத்து பார்க்கும் இந்த காட்சி... அதே போல் ரயில் தடக் தடக் ஒலியோடுஇளையராஜாவின் இசையும் சேர்ந்து கொள்ள, பொங்கலோ பொங்கல் என்று தொடங்கும் பாடல் உற்சாக ரகம்...

பூர்ணம் விஸ்வநாதன் தன் நிலை நினைத்து மந்திரத்தின் ஊடே கடவுளிடம் புலம்புவதும், கனகதார ஸ்தோத்திரம் சொன்னால் பணம் கூறையை பிச்சிகிட்டு கொட்டும் என்பதை சொல்ல... கமல் உனக்கு கொட்டி இருக்கின்றதா என்று எதிர் கேள்வி கேட்பதும்... நீ நாத்திகமா என கமலை பார்த்து கேள்வி கேட்டு பதில் சொல்லாமல் இருக்க... உண்டு இல்லை என்று எதாவது சொல் என்று சொல்ல உண்டு இல்லை என்று சொல்லி கமல் நக்கல் விடுவது அழகு...

சிறையில் மனு போட்டுபார்க்கும் குழந்தைகளிடம் கமல் கத்தி பேசி அட்வைஸ் செய்வது ஒரு சிறையின் பார்வையாளர் அறையின் இரைச்சலை ஒலி வடிவில் பார்வையாளனுக்கு புரியவைப்பது சினிமா மொழி....

கமலை பார்த்துவிட்டு சுகன்யா நடக்க ராஜா ஒரு ரோமான்ஸ் மீயுசிக் போட்டு இருப்பார் பாருங்கள்... கவிதையான நெகிழ்வான காட்சி அது..

காவேரி எங்கே ?என்று மாமியாரை கேட்க அவள் பாட்டி பின்புறத்தில் இருந்து தலை நீட்டி பாவாடை தாவானியோடு வந்து சட்டேன கிழே விழுந்து கும்பிடும் பெண்ணை, கம்பிக்கு உள் இருந்து ஆசிர்வாதம் செய்யமுடியாமல் தவிப்பது கண்ணில் நீர் வரவைக்கும் காட்சி...
நான் போர்த் ரேங் அப்பா... என்ற சொல்லும் மகனை ஏன்? என்று கேட்க என்னை விட கெட்டிக்கார பையன்கள் 3 பேரு இருக்காங்க, அவுங்களை துரத்திட்டா நான்தான் பஸ்ட் என்று சொல்லும் காட்சி கவிதை. வீட்டை வாடகை விட்டது தெரிய தன் இயலாமை நினைத்து கட்டை விரலை வாயில் நுழைத்து கமல் கண் கலங்குவது உணர்வு பூர்வமான காட்சி...


கமலை பார்த்து பேசம் சுகன்யாவை ஜெயிலர் ராஜேஷ் கண்டித்து ...காதலிகின்றோம், கட்டிக்க போறோம் என்று மனு எழுதி கொடும்மா... என்று சகன்யாவிடம் சொல்ல,அதற்க்கு எங்கு கொடுக்க வேண்டும் என்று சொல்லும் காட்சியில் அவர்கள் காதலை ரொம்ப டிசன்டாக வெளிபடுத்தி இருப்பது அருமை..

அதே போல் நர்ஸ் உடையில் தனியாக மனு போட்ட பார்க்க வரும் போது இருவரும் பேசாமல் ராஜாவின் வயலினும், பியனோவும் பேசுவது கவிதை.. இந்த காட்சியில் எல்லோரும் ஸ்டாப் பிளாக்கில் காணமல் போக கமலும் சுகன்யா இருவர் தலைக்கு பின்னும் ஸ்பாட் லைட் அடித்து அப்படியே அவுட்டோர் போய் குடும்ப உறுப்பினர்கள் அத்தனை பேரும் வெளியே போக கமல் மட்டும் கம்பிக்குள் சிறைபட்டு பாவமாக நிற்பது சோகமான காட்சி....


“‘வழுக்கி விழுதுட்டேன்”, “என்ன ஐயரு மூத்திர வாசனை அடிக்குது” போன்ற டயலாக்குகளும் அதற்க்கு லீட் காட்சிகளும் கொடுரத்தின் உச்சம்...

எல்லாம் பகவான் பாத்துக்குவான் என்று பூர்னம் சொல்லும் போது... சும்மா இருங்க ஐயரே, நி்ன்னு கொல்லும் தெய்வமும் சும்மா இருக்கு... அன்றே கொல்லர சட்டமும் சும்மா இருக்கு.... ஆனா எனக்குமட்டும் தண்டனை.... என்ற டயலாக் மூலம் வாழ்வின் நிதர்சனத்தை புரியவைத்து இருப்பார்கள்.. நேர்மையாக இங்கு யாரும் இல்லை என்று ராஜேஷ் விளக்கம் கொடுக்கும் காட்சியும் அந்த டயலாக் வீரியமும் சுரீர் ரகம்...

ஒரு காட்சியில் வந்தாலும் தலைவாசல் விஜய் நடிப்பில் பின்னி எடுப்பார்...
பிள்ளையை விட்டில் படுக்கவைத்து விட்டு சுகன்யாவுக்கும் கமலுக்குமான அந்த மெல்லிய காமம் கலந்த காதலும் அதற்க்கான புளு லைட்டும்,காலையில் காபியை சுகன்யா கமலுக்கு கொடுக்கும் போது அந்த மெல்லிய சன்லைட் காட்சி அருமை....
அதில் பின்னனியில் ராஜாவின் பியானோ அருமையிலும் அருமை....
சோனாகாட்சி காட்சிகள் மனதை வலிக்க வைக்கும் ரகம் அதில் ஒரு விலைமாதர் தன் பெண்ணை ஜலஜா என்று அழைத்து இது காவேரி அப்பாடி என்று அறிமுக படுத்த அந்த பெண் அப்பா என்று கமலை கட்டி கன்னத்தில் முத்தமிட இரண்டு கைகளையும் கும்பிட்ட படி கண்ணீர் விடும் காட்சியில் கமல் உலகநாயகன்தான்...

தன் மகள் இரவில் பினாற்றுவதை பார்த்து, அதை நினைத்து கலங்கும் காட்சியில் அழுது மூக்கை சிந்தும் போது கமல் கமல்தான்....
ஒரு நல்லவனுக்கு கிடைக்க வேண்டிய மரியாதை எல்லாம் ஒரு கெட்டவனுக்கு கிடைச்சிடுதே அது ஏன் என்ற டயலாக்கும், தனுஷ் புரோக்கர், ஆனா நீ புள்ள கறி கேக்கறவன் என்று மோகன் நடராஜை பின்னும் காட்சிகளில் கமல் ஆக்டிங்கில் பின்னி இருப்பார்....

இந்த படத்தில் கமல் பல பாடல்கள் பாடினாலும் கல்கத்தா படகில் தன்மானம் உள்ள நெஞ்சம் என்ற பாடல் சூப்பர்.. காவேரி தாய் மடியில் வாழ்ந்த பிள்ளையடி கான சோகம் எல்லாம் கால்கள் கண்டதடி... போன்ற வாலியின் வரிகள் கண்களில் நீர் வர வழிப்பவை....

அயன் படத்தின் கேமராமேன் எம் எஸ் பிரபுதான் இந்த மகாநதி படத்துக்கும் ஒளி ஓவியம்.... இந்த படம்தான் இவருக்கு தமிழ் திரையுலகில் அறிமுகத்தை கொடுத்த படம்.... இவர் ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம் உதவியாளர்...


இந்த படத்தில்தான் முதன் முதலாக ஆவிட் என்கிற எடிட்டிங் சாப்ட்வேர் பயன் படுத்தபட்டது....

இன்றைய பக்தி பாடல்கள் அதிகம் பாடும் பாடகி ஷோபனா குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானது இந்த படத்தில்தான்....

படத்தின் குறைகள்...

மாமியார் சாவுக்கு பிள்ளைகள் இருவரும் எங்கே என்று கமல் கேட்காதது ஏன்?

கூத்தாடியிடம் தன் பிள்ளையை பார்த்ததும் அடுத்த கேள்வி அக்கா எங்கே? என்று தன் பிள்ளையிடம் கேட்காமல் மறுநாள் காலை காபி சாப்பிடும் போது சாவகாசமாக கேட்பது ஏன்??
கல்கத்தாவில் இருந்து அழைத்து வந்த பெண்ணையே இரவில் பினாற்றுவது போல் எடுக்காமல் அந்த காட்சிக்கு மட்டும் நடிகை சங்கிதாவை பயன்படுத்தியது ஏன்?

படத்தின் இயக்குனர் சந்தானபாராதி கமலை வைத்து இதே போல் இயல்பாய் குணா என்ற படத்தை கொடுத்தவர்..இவர் கமலின் பால்யகால தோழனும் ஆவார்

மொத்தத்தில் இந்த படம் சமுகத்தில் நல்லவனாக இருப்பது என்பது தகுதி இழப்பு என்று சொல்ல வந்த படம்....

இயக்கம்.. சந்தானபாராதி

கதை, திரைக்கதை... கமலஹாசன்

வசனம்...கமல்ஹாசன் ...ராகி ரங்கராஜன்

ஒளிப்பதிவு... எம் எஸ் பிரபு (அறிமுகம்)
இசை ...இளையராஜா....
தயாரிப்பு... ராஜ்கன்னு


அன்புடன்/ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....

எழுத்தாளர் பாலகுமாரனுக்கு என் நன்றிகள்....


ஒரு எழுத்தாளனால் ஒருவனை உருப்பட வைக்க முடியுமா?
என் அம்மா அந்த காலத்து பியூசி,
கதை புத்தகங்களில் என் அம்மா என் கவனத்தை பதியவைத்தாள்....அம்மாவை தான்டிய உலகம் தன் பிள்ளைக்கு தெரிய வேண்டும்... எது நல்லது, எது கெட்டது என்று அலசி ஆராயும் பக்குவம் தன் மகனுக்கு கிடைக்க வேண்டும் என்று பேராசை கொண்டாள்.....

கதை படிக்கும் போது பலரது வாழ்க்கையை நெருங்கி, கதாபாத்திரங்கள் அருகில் மிக அருகில் இருந்து பார்த்து அந்த பாத்திர படைப்புகளுக்கு ஏற்படும் சிக்கல்களை தீர்ப்பது போன்ற பல புத்திக்கொள்முதல்களை தன் மகனுக்கு கதை புத்தகங்கள் தரும் என்று நம்பினாள் ... அதுவே ஒரு காலகட்டத்தில் படிப்பில் நாட்டம் இல்லாமல் கதை புத்தகத்தின் மேல் கவனம் அதிகமான போது அம்மா என்னை சிறிது கடிந்தும் கொண்டால்.....

என்னை முதலில் கிரைம்கதைளே என்னை வசீகரித்தன... அதில் தவறு ஒன்றும் இல்லை அந்த திரில் அந்த வயதுக்கு போதைதான்... ஆனால் குடும்ப பொறுப்புகள் என் தோள்களில் பாத்மாசனம் போட்டு வெகு சீக்கரமாய் உட்கார்ந்த போது, வாழ்க்கை பற்றிய பயம் வந்து துக்க்ம் வராமல் தவித்த இரவுகள் கணக்கில் அடங்கா.....
அம்மா உயிரோடு இருக்கும் போதே பாலகுமாரன் எழுத்துக்கள் அறிமுகம். அதன் பிறகு அந்த எழுத்துக்கள் மீது காதல் இயல்பாய் வந்தது..

அப்பாவுக்கு கைத்தொழில் இல்லை, ஜவுளிக்கடையில் குமாஸ்தா உத்யோகம் வெகு சொற்ப மாத வருமானம், என்னை சேர்த்து 5 பிள்ளைகள், நானே பெரியவன், எனக்கு கீழே நான்கு தங்கைகள் இப்படி ஜீவிதம் போய் கொண்டு இருக்கையில், காசநோய் முற்றி அம்மா எங்களை நடுத்தெருவில் விட்டு விட்டு போனாள்.... எந்த பெண்ணுக்கு திருமணம் ஆகவில்லை....

என் அம்மா உயிரோடு இருந்த போதே வெற்றி பெற வேண்டும் என்று, சென்னை வந்து அந்த பயணம் தோல்வியில் முடிந்தது பழைய கதை என்றாலும் என்னை தோல்வியில் இருந்து காப்பாற்றியது பாலுகுமாரன் எழுத்துக்கள்தான்.......

அப்படி என்ன பெரிதாய் கிழித்து விட்டார் என்றால்? அவர் கதைகள்என்னை யோசிக்க வைத்தன... நான் யார் என் பிளஸ் என்ன? என் மைனஸ் என்ன? என்றும் என் பின் புலம் என்ன என்பதையும், என்னவெல்லாம் என்னால் செய்ய முடியம் என்பதையும் தனியாக உட்கார்ந்து யோசிக்க வைத்தார்.... எது எனது பக்கம் மைனசாக இருந்ததோ அதனை முயன்றவரை பிளஸ் ஆக்க இன்றுவரை முயற்ச்சிக்கின்றேன்....

மற்ற கதைகள் எல்லாம் இரவில் ஆரம்பி்த்து விடியலில் முடியும்.... பாலகுமாரன் கதைகள் மட்டும்தான் விடியலில் ஆரம்பித்து இரவில் முடியும்....வாழ்க்கை பற்றியும், வாழ்க்கை போராட்டத்தையும் பற்றியும் தன் கதைகளில் அதிகம் சொன்னவர் எனக்கு தெரிந்து அவராகத்தான் இருக்கும்...

எல்லா கதைகளிலும் ஒரு தொழில் அதன் சாதக பாதகங்கள் என்று அலசுவார் அந்த தொழிலில் உள்ள பிரச்சனைகள், அதன் தீர்வுகளை கதாபாத்திரங்கள் உடன் சொல்லுவார்....

அவருடைய பல கதைகள் எனக்கு பிடித்தாலும் குறிப்பிட்ட சொல்ல வேண்டும் என்றால் பயணிகள் கவனிக்கவும்,உள்ளம் கவர் கள்வன், இரும்பு குதிரைகள்,மெர்க்குரி பூக்கள்,தாயுமானவன், சிநேகமுள்ள சி்ங்கம்,பந்தைய புறா, கடலோர குருவிகள், இனி இரவு எழுந்திரு, வெற்றிலைக்கொடி, தலையனை மந்திரம், போன்றவைகளை சொல்லலாம்

என் பத்து வருட காதலை அவசரபடுத்தாமல், சொதப்பாமல் இருக்க ஒரே காரணம் அவர் எழுதிய உள்ளம் கவர் கள்வன்தான்...நான் காதலில் ஜெயித்தது அதனால்தான்...அவர் படைப்புகள் பலது இருந்தாலும் என் ஆல்டைம் பேவரிட் பயணிகள் கவனிக்கவும்தான், எப்போது வேண்டமானாலும் அந்த கதையை வாசிப்பேன்... மதன் முதலாக சென்னை வந்த போது மீனம்பாக்கம் ஏர்போர்ட்டையும், அதன் குடியிருப்பு பகுதிகளையும் ஆர்வமாய் பார்த்தவன் நான்....சரி அது பற்றி தனியே ஒரு பதிவை போடலாம்...


சோம்பி திரியாமல், பல உயரத்துக்கு போக வேண்டும் என்று வாழ கற்றுக்கொடுத்தவர்... எதையாவது கற்றுக்கொள்ளவேண்டும் என்று தன் எழுத்துக்களில் ஊக்கபடுத்தியவர்.... எந்த வேலை செய்தாலும் த பெஸ்ட் என்று செய்ய வேண்டம் என தன் எழுத்துக்களில் போதித்தவர்...அவர் எழுத்துக்களை நான் பொதுவாய் எனக்கு எற்பட்ட அனுபவமாக எடுத்துக்கொண்டவைதான் அதிகம்.... வாழ்க்கை போராட்டத்துக்கு எந்த வயதிலும் தயாராக இருக்க வேண்டும் என்று தன் எழுத்து மூலம் சொல்லிக்கொடுத்தவர்....


அவரை சந்திக்க வேண்டும் என்ற ஆவல் இருந்தாலும் ஊரில் இருந்து மஞசள் பை எடுத்துக்கொண்டு மயிலாபூரில் அலையும் நபர் நான் அல்ல.... இருப்பினும் அவரை சந்தித்தேன்.... 1995ல் நான் சென்னை மெரினா பீச் காந்தி சிலை பின்புறம் உள்ள சாகர் விகார் ரெஸ்ட்டாரண்டில் டீ ஊற்றிக்கொடுப்பவனாக வேலை செய்த போது, அப்போது ஷங்கர் ஜென்டில்மேன் முடிந்து காதலன் படத்தினை ஆரம்பிக்க இருந்த நேரம் அப்போது அந்த ஹோட்டலுக்கு பாவ் பஜ்ஜி சாப்பிட வந்தார்கள் அப்போது அவர்களை இருவரையும் அருகில் இருந்து பார்த்து இருக்கி்றேன்.. அப்போதுபாலகுமாரனிடம் உங்கள் கதைகள் எனக்கு பிடிக்கும் என்று ஒரு வார்த்தையில் முடித்துக்கொண்டேன்... அதுதான் என் கேரக்டர்.... அவரும் நன்றி என்றார்...

சென்னையில் பிளாட்பாராத்தில் தூங்கி, சைக்கிளில் சந்து பொந்துகளில் அலைந்து, இப்போது பைக்கில் சுற்றவும், பத்தாவது படித்த நான் ஒரு கல்லூரியில் வகுப்பெடுக்கும் அளவுக்கு என்னை மென் மேலும் உயர வைத்ததற்க்கு பாலகுமாரன் எழுத்துக்கள்தான் காரணம்....

ஆனால் ஒன்று அப்படி தொடர்ந்து பல வருடம் தீவிர வாசகனாய் பாலகுமாரன் வாசித்த நான், ஆன்மீகம் பக்கம் போனதில் இருந்து அவர் எழுத்துக்களை வாசிப்பது குறைந்து போனது....இருப்பினும் அவர் எழுதிய பல கதைகள்தான்,என் வாழ்க்கையை ஓரளவுக்கு தெளிவாக சிந்திக்க உதவுகின்றன... இப்போதும் அவரின் பல சமுக கதைகளை திரும்பவும் வாசிக்கின்றேன்....

அவருடைய கற்றுக்கொண்டால் குற்றமில்லை புத்தகம் தமிழக இளைஞர்கள் அனைவரும் வாசிக்க வேண்டும்.... இருப்பினும் அவரின் பல கருத்துக்களோடு எனக்கு உடன்பாடு இல்லை... ஒரு மனிதன் எல்லோரையும் திருப்தி படுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை...ஒரு எழுத்தாளன் எழுதும் அத்தனை எழுத்துக்களையும் கண்முடித்தனமாக நம்ப வேண்டும் என்ற எண்ணமும் எனக்கு இல்லை... அவர் ஒரு மனிதர்.அவ்வளவே...அவர் எனக்கு நல்லவைகளை கற்றுக்கொடுத்தார்.... அதற்க்கான நன்றி தெரிவித்தலே இந்த பதிவு....

இந்த பதிவின் மூலம் பாலகுமாரனுக்கு நன்றி சொல்லி இருக்கின்றேன்...அப்படி பாலகுமாரன் உங்களையும் பாதித்து இருந்தால் பின்னுட்டத்தில் தெரிவியுங்கள்..

என் வளர்ச்சிக்கு பின்புலமாய் இருந்த, இப்போதும் இருந்துக்கொண்டு இருக்கின்ற எழுத்தாளர் பாலகுமாரனுக்கு என் நன்றிகள்....

அன்புடன்/ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....

நான் அப்துல்கலாமுக்கு எழுதிய கடிதமும் அதற்க்கு அவர் எழுதிய பதிலும்....


ஒரு ஜனாதிபதி அதுவும் நம் தாய் மொழி நன்கு தெரிந்த நபர்.... இனிவரும் காலம் இளைஞர் காலம் என்பதை கண்டு ,தனக்கு பிள்ளை இல்லாவிட்டாலும் இந்த தேசத்தில் உள்ள எல்லா பிள்ளைகளையும் தன் பிள்ளையாக நினைக்கும் அந்த பெரியவர். அப்படி எளிமையாக நம் இந்தியநாட்டின் ஜனாதிபதியாக இருந்த அப்துல்கலாமுக்கு, அவர் ராஷ்ட்ரபதி பவனில் வாசம் செய்த போது அவருக்கு ஒரு கடிதம் எழுதினேன்.... என்னவென்றால் அவர் சென்னை வந்த போது அவர் பாதுக்காப்பு எல்லை தாண்டி துரு துரு என்று வெளியே வந்து விடுகின்றார் என்ற செய்தி பத்திரிக்கைகளில் படித்த போது அவருக்கு ஒரு கடிதம் எழுத தோன்றியது.... அது உங்கள் பார்வைக்கு.....

20/12/2002
வெள்ளிக்கிழமை
காலை 10.30
சென்னை 87

“பாதுகாப்பு வளையங்களை மீறி பொதுமக்களை ஜனாதிபதி சந்தித்தார்” என்று நாளேடுகளில் செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன...
ஐயா , நீங்கள் எளிமையானவர்தான்... இந்தியாவை தவிர வேறு எது குறித்தும் கவலை கொள்ளாதவர் நீங்கள்... ஆனால், எதிர்கால இந்தியா உங்களை போன்ற ஒரு சிலரை மிகுந்த நம்பிக்கையோடும், மிகுந்த எதிர்பார்ப்புகளோடும் கவனித்து கொண்டு இருக்கின்றது....

கவர்னர் மாளிகை காட்டுக்குள் 2 மணிநேரம் நடைபயணம்...
“அதுவும் பாதுகாப்பு வளையத்தை தாண்டி” இதே இடத்தில் தமிழர் வெங்கட்ராமன் ஜனாதிபதியாக இருந்த போது இது போல் கவலை கொண்டதில்லை...

நாட்டின் எதிர்காலம் இளைஞர் கையில் என்பது பலரின் எண்ணம்... சாரி அது பலரின் தவறான கணிப்பு... ஆம் உங்கள் எண்ணப்படி பள்ளிக்குழந்தைகள் கையில்தான், இந்தியாவின் எதிர்காலம் உள்ளது...அவர்கள் மனதில் இந்திய முன்னேற்ற விதை ஊன்றினால் அது பசு மரத்தானிபோல் பதிந்து விடும்... என்பதை புரிந்தவர் நீங்கள் ... அந்த வகையில் நான் உங்களுக்கு நன்றி சொல்கின்றேன்....

எந்த ஒரு தீவிரவாத குழுவும் தமிழகத்தை சிறந்த இடமாக தேர்வு செய்து கொள்கின்றன... இங்குள்ள மக்கள் வெகுளிகள்... வெளுத்தது எல்லாம் பால் என்று நம்புபவர்கள்...ஸ்ரீ பெரும்பத்தூர் சோககறை இன்னும் மறையவில்லை, மறக்கடிக்கபடவில்லை... சோ தயவு செய்து பாதுகாப்பு வளையத்தை மீறாதீர்கள்...
எல்லா தீவிரவாத அமைப்புகளும் உலகத்தின் கவனம் தங்கள் மீது திரும்ப எதுவும் செய்ய தயாராகிவிட்டன என்பதை நாம் கவனித்து கொண்டுதான் இருக்கின்றோம்...

வார்வில் எவ்வளவோ பிரச்சனைகளை சந்தித்து வருகின்றோம் இந்த விஷயங்கள் கவலை அளிப்பதால் இந்த கடிதம் உங்களுக்கு எழுத தோன்றியது... அதுவும் தாய் மொழியில் நான் எழுதிய விஷயங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ளவிரும்பினேன் நீங்கள் தமிழர் என்பதால்.....

ஆடம்பரம் இல்லாத ஜனாதிபதிக்கு இந்த மடல் பிடிக்கும் என்று நம்புகின்றேன்...நிகழ்ச்சி நிரல் படி நடக்கும் விழாக்களை யே புறக்கனிக்கும் இந்த காலத்தில்....உங்கள் நிகழ்ச்சி நிரலில் இல்லாம ஆலந்தூர் மகளீர் கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பித்தமைக்கு மிக்க நன்றி...
இந்த கடிதத்தை நீங்கள் எந்தளவுக்கு மதிப்பீர்கள் அல்லது புரிந்து கொள்வீர்கள் என்று தெரியவில்லை எதிர்காலத்தில் நீண்ட ஆயுளும், நல்ல ஆரோக்கியமான உடம்புடன் நீர் நலமுடன் இன்னும் பபல அரிய சேவைகள் செய்ய எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கின்றேன்.....

அன்புடன்...
தனசேகரன்(ஜாக்கிசேகர்)

ஒரு மூன்றுமாதம் கழித்து அவர் அனுப்பிய பதில் கீழே....

ஆ.பெ.ஜெ. அப்துல் கலாம்
ராஷ்ட்ரபதி பவன்
நியூடெல்லி. 1100004


திரு தனசேகரன் அவர்களுக்கு,
வணக்கம்
தங்கள் அன்பான கடிதம் கிடைத்தது
என் வாழ்த்துக்கள்.

அன்புடன்
ஆ.பெ.ஜெ. அப்துல் கலாம்....

கடிதம் என்கைகளில் தவழ்ந்த அன்று நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை....

அவரை ஜனாதிபதியாக சென்னை சிவானந்த குருகுலத்துக்கு வந்த போது பத்தடி தூரத்தில் கேமரா அசிஸ்டென்டாக அந்த நிகழ்ச்சிக்கு போன போது பார்த்தது....
மிகவும் எளிமையான மனிதர் கலாம்...

அந்த நிகழ்ச்சியில் பல பிள்ளைகளின் கேள்விக்கு பதில் அளித்ததும் ரொம்ப பொறுமை காத்ததும் எனக்கு மிகுந்த ஆச்சர்யத்தை தந்தன....இப்படியும் ஒரு மனிதர் சுயநலமில்லாமல்.....நம்மோடு வாழ்கின்றார் அதுவே பெரிய விஷயமில்லையா???,

அன்புடன்
ஜாக்கிசேகர்

சாண்ட் விச் அன்ட் நான்வெஜ்.18+ (06/08/09)

ஆல்பம்...

பாஸ்டன் ஸ்ரீராமோடு இரண்டு மணிநேரம்தான் பேசி இருக்கின்றேன்.... முத்துக்குமார் பதிவர் அஞ்சலி நிகழ்ச்சியில்தான் நான் முதன் முதலாக கலந்து கொண்டு பல பதிவர்களை பார்த்தேன்.... ஒரு பதிவுக்கு பின்னுட்டம் இட்டு அதற்க்கு அந்த பதிவர் பதில் போடவில்லை என்றால் யாருக்கும் ரொம்பவும் வருத்தமாக இருக்கும்.. ஆனால் தமிழ்மண நட்சத்திரமாக ஆனதும் நான் யாருக்கும் பதில் போடவில்லை காரணம் அடுத்த பத்தியில் சொல்கின்றேன் அதற்க்காக பாஸ்டன் ஸ்ரீராமுக்கும் அவரை வழி மொழிந்த நண்பர் யூஎம் கிருஷ்க்கும் என் வருத்தங்கள்....


பத்துபேர் பெயரை ஒன்றாக எழுதி அனைவருக்கும் நன்றி என்று பதில் எழுதும் ரகம் நான் அல்ல... அதனை என் பின்னுட்ட பகுதியை பார்த்தால் தெரியும்..... எல்லோருக்கும் முடிந்தவரை தனித்தனியாக அல்லது மூவரும் ஒத்தகருத்தாக இருந்தால் மூவருக்கு ஒன்றாக நன்றி சொல்வதே எனது பாணி....

சரி ஏன் நான் தமிழ்மண நட்சத்திரமாக வந்த கடந்த சில நாட்களாக, யாருக்கு பதில் சொல்லவில்லை.... இப்போதுதான் நான் சினிமாவில் ஜாயின்ட் செய்து இருக்கின்றேன்... பார்சூட் ஆப் ஹாப்பினஸ் கிரிஸ்கார்ட்னர் போல் இது எனக்கு டிரைனிங் பிரியட்.... எந்த எக்ஸ்க்யுஸ்க்கும் அங்கே இடமில்லை....காலை 5 மணிக்கு வீட்டு வாசலுக்கு வண்டி வந்து விடுகின்றது.... ஷுட்டிங் நடப்பது ஒரு மொட்டை மாடி, ஒதுங்க நிழல் இல்லை... சினிமா என்பது இளைப்பாறி வேலை செய்யும் இடம் இல்லை.... மனிரத்னம் உட்கார்ந்து வேலை செய்ததே இல்லை அவருக்கும் பிசிஸ்ரீராமுக்கும் சேர் என்பதே கிடையாது... என்று பதிவர் தண்டோரா சொல்லி இருக்கின்றார்....கல்லூரி வாழ்க்கை , அப்படி இல்லை ஏசி வாழ்க்கை, கீழே தவறவிட்ட பொருளை எடுத்துக்கொடுப்பதற்க்கு கூட எனக்கு அங்கே உடன் ஓடி வந்து எடுத்துக்கொடுக்க நிறைய ஆட்கள்.... ஆனால் இங்கே அதே வேலைகளை நாங்கள் பம்பரமாய் சுற்றி செய்ய வேண்டி உள்ளது...

வேலை வேலை என்று வேலை செய்து கொண்டே இருப்பார்கள்...எனென்றால் ஒரு மணிநேரத்துக்கு பலரது உழைப்பும் பல லட்சங்களையும் கண் எதிரில் விழுங்கும் இடம்.... மதியம் சாப்பாட்டுக்கு மட்டும் ஒரு பத்து நிமிடம் உட்கார்ந்து அதன் பிறகு இரவு 8 மணிக்கு காரில் ஏறும் போதுதான் உட்காருவேன்....22 ம் தேதியில் இருந்து ஷும்டடிங் நடக்கின்றது.... 3ம்தேதிக்கு பிறகு போடும் பதிவுகளை ஒரு வாரத்துக்கு மன்பே அடித்து வைத்து விட்டேன் அந்த ஐடியாவை கொடுத்து தினமும் போன் பண்ணி விசாரித்த பதிவர் அன்பு தம்பி நையான்டி நைனாதான்.... அதே போல் என் மனைவி ஏற்க்கனவே நான் எழுதி வைத்ததை பத்து மணிக்கு அவள் வேலைக்கு போகும் முன்பு போஸ்ட் செய்து அதனை தமிழ்மணத்திலும் தமிலி்ஷ்லும் இனைப்பதற்க்குள் என் டாட்டா இன்டிகாம் படுத்தும் பாட்டால் எல்லாம் நேரமும் விழுங்கி அவள் கேப் பிடிக்க அவசரம் அவசரமாய் எனக்காக ஓடுகின்றாள்....

இரவு வீட்டுக்கு வந்ததும் உடல் சோர்வு பயங்கரம் ஒரு குவாட்டர் வைத்தால் தான் நல்ல தூக்கம் வரும்... அந்த அளவுக்கு ஒரு டயர்ட்.... ஒரு பேச்சுக்கு சொன்னேன்.... அப்படி இரவு 9 மணிக்கு எனக்கு உற்சாகம் கொடுப்பவை மெயில் ஓப்பன் பண்ணியதும் உங்களை போன்றவர்களின் உற்சாக பின்னுட்டங்கள்தான்..... அதை பார்த்து விட்டு நாளை எந்த பதிவை போஸ்ட் செய்ய வேண்டும் என்று மனைவியிடம் சொல்லி விட்டுபடுத்தால் காலை 5 மணிக்கு வண்டி வந்து நிற்க்கின்றது...இந்த பத்தாம் தேதி வரை பொறுங்கள் நேரம் கிடைக்கும் போது நானே பதில் போடுகின்றேன்....நன்றி பாஸ்ட்டன் ஸ்ரீராம்..... உங்கள் நியாயமான கோபத்துக்கும்



பதிவர் புருனோவை தொடர் ஓட்டத்துக்கு அழைத்து வெகு நாட்களுக்கு பிறகு நேற்று இரவு அவரது பதிவை படிக்க நேர்ந்தது அவருக்கு ஒரு நண்றி தெரிவிக்கும் ஒரு பின்னுட்டம் டைப் அடித்து போஸ்ட் செய்வதற்க்குள் டட்டா இன்டிகாம் சதி செய்து மூட் ஸ்பாயில் செய்து, டயர்டில் தூங்கி விட்டேன்.... இன்னும் இரண்டுமாதத்தில் அதனை தலை மூழ்கி விடுகின்றேன் எப்போது போன் செய்தாலும்... சர்வர் டவுன் என்ற வார்த்தையை கேட்டு போர் அடிக்கின்றது.... இதனால் பல பதிவர்களுக்கு பின்னுட்டம் போஸ்ட் செய்வதற்க்குள் சர்வர் டவுனாகி போனது ஏராளம்......... இருப்பினும் பதிவர் புருனோ நான் எழுதியதில் பிடித்த பதிவை அவர் பதிவில் லிங் கொடுத்து அசத்திவிட்டார்.... நன்றி டாக்டர்...சந்தித்து நாட்கள் ஆயினும் அந்த இழையோடும் பாசம் உங்களிடத்திலும் என்னிடத்திலும்..நன்றி இறைவா.....


அதே போல் பாசூட் ஆப் ஹேப்பினஸ் படத்திற்க்கு பல சுவாரஸ்ய தகவல்களை அள்ளி வழங்கிய நண்பர்களுக்கு மிக்க நன்றி குறிப்பாக ஆதித்தன்,ரூட்டு, செந்தில் பான்றறவர்களுக்கு என் நன்றிகள்....


மிக்சர்...

மதுரையில் 45 வயது மதிக்கதக்க பெண் ஒருவர் கள்ள காதலுக்காக பெற்ற மகனையே கைமா பண்ணி கொலை செய்து உள்ளார்...பிரிட்ஜல் வைத்து, பாடியை டிஸ்போஸ் செய்ய போகும் போது நாற்றம் வீசியதால் பக்கத்து வீட்டில் இருந்த ஒருவர் போலி்சுக்கு தகவல் சொல்லி அவரை போலிஸ் கைது செய்து உள்ளது.... கரண்ட் இரண்டு மணி நேரத்துக்கு மேல் வராமல் போனதால் பினவாடை அடித்து அந்த பெண் கைதாக உதவிய தமிழக மின்சார வாரியத்துக்கு மிக்க நன்றி....காமத்துக்கு வயது ஒரு தடை இல்லை என்பதை அந்த அம்மா முகம் பார்த்தால் உங்களுக்கே புரியும்.

பெண்களுக்கான யில் தேவை இல்லை என்று நான் சொல்ல என் மனைவி வரிந்து கட்டிக்கொண்டுபதில் சொன்னதும் அதன் பாதிப்புகளை விளக்கியதும் அடியேன் கப்சிப்.... ரங்கநாதன் தெரு கூட்ட நெரிசலில் நான் எருமை மாதிரி பக்கத்தில் போகையிலேயே, என் மனைவி பக்கம் தெரியாமல் உரசுவது போல் வரும் நபர்களை இரண்டு அடியில் இனம் கண்டு தவிர்த்து காப்பாற்றி இருக்கின்றேன்....இத்தனைக்கும் நடந்து போகும் போது....அதுவே ரயில் என்றால் நகர கூட முடியாத கூட்டம் என்றால் நம்மவர்கள் ஆட்டத்தை யோசிக்கும் போது என் மனைவியின் கோபத்தில் அர்த்தம் இல்லாமல் இல்லை அதனால் அடியேன் கப்சிப்........


விஷுவல் டேஸ்ட்....எடுத்ததில் பிடித்தது....

பெசன்ட் நகர் பீச்சில், ஒரு சோளக்கதிர் மனிதனுக்கு இரையாவதற்க்கு சற்று நேரத்துக்கு முன்.....

ஊட்டியில் முதுமலையில், மகனிடம் பாசத்தை வெளிப்படுத்தும் எனது மாமியார் காட்சிகளை சிறைபடுத்த துடிக்கும் எனது மச்சான்....அந்த யாரும் இல்லாத சாலையும் சிகப்பு காக்கா பூக்கள் ரோட்டில் சிதறி கிடக்கும் அழகே அழகு.....
ஊட்டியில் ரோஸ் கார்டனில் வெகுநேரம், பரதநாட்டியம் அபிநயம் பிடிக்கும் ரோஜா மொக்கு....
நான்வெஜ்....
ஜோக்1
ஒரு சின்ன பையன் பக்கத்து வீட்டு ஆண்ட்டிகிட்ட, எங்க அப்பா, அம்மா ரெண்டு பேருமே வேலை செய்யறாங்க... எங்களால ஒரு கார் கூட வாங்க முடியலை நீ்ங்க எப்படி வேலைக்கு போகாம வீட்ல இருந்துகிட்டே 4 காரு வாங்கி இருக்கிங்க, இவ்வளவு பெரிய வீட்டை வாடகைக்கு வேற எடுத்து இருக்கிங்க அது எப்படி என்று கேள்வி கேட்டாள்? அதற்க்கு அந்த ஆண்ட்டி , பேட்டா ஆண்டடி சின்னதா ஹோல்சேல் பிசினஸ் டெய்லி செய்றேன் என்றாள்....
ஜோக்2
மச்சி ஒன்னோட ஆளு பஸ்டாண்டுல என் பக்கத்துல வந்தாட, ரொம்ப பக்கத்தல வந்தா, இன்னும் ரொம்ப நெருக்கமா வந்து.... நண்பர் அழுகையோடு மச்சான் என்டா சொன்னா அவ.... ஓரமா போங்க குப்பை பொறுக்கனும்... நண்பர் செருப்பை வேகமாக கழட்டுகின்றார்...

தத்துவம்...

ஒரு நாய் செவுத்தல ஒன்னுக்கு அடிக்கும் போது, அது நேரம் அந்த உளுத்து போன செவுரு உழுந்து அந்த நாய் செத்து போச்சு அதை துரத்துல இருந்து பார்த்த இன்னொறு நாய் அவுங்க போர்ட் மீட்டிங்ல சொல்லி வருத்தப்பட்டிச்சு அதல இருந்துதான் எப்ப நாய் எங்க ஒன்னுக்கு அடிச்சாலும் அது செவுற இருந்தாலும் கார் டயரா இருந்தாலும் ஒரு சப்போர்ட் கொடுத்துதான் உச்சா போகுது... எப்புடி...


அன்புடன்/ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....

(காமிக்ஸ் பத்தகங்கள்)கால ஓட்டத்தில் காணாமல் போனவை

சிறு வயதில் பள்ளி செல்லும் போது எங்கள் பள்ளி அருகே உள்ள கிளை நூலகத்தில், தினமும் கையெழுத்து போட்டு விட்டு படிக்க செல்லுவோம். படிப்பதை விட அந்த வயதில் கையெழுத்து போடுவதுதான் எங்களுக்கு பெரிய சந்தோஷமான விஷயம்... குப்புசாமி என்று பெயர் இருக்கின்றது என்று உதாரணத்ததுக்கு வைத்துக்கொள்வோம்..முதல் ஒரு வாரத்துக்கு குப்புசாமி பெயர் புரியும் படி எழுத்து இருக்கும் அதன் பிறகு இரண்டாவது வாரத்தில் வெறும் கிறுக்கலாய் இருக்கும்.... அதன் பிறகு முதல் எழுத்து மட்டும்தான் இருக்கும் அதன் பிறகு இதயதுடிப்பு கிராப்போல் வளைந்து நெளிந்து இருக்கும்....

அப்படி அடித்து பிடித்த கையெழுத்து போட்டு விட்டு முதன் முதலாக வாசிக்கும் வாசிக்கும் பேப்பர் தினத்தந்திதான்... அந்த பேப்பர் எடுத்த இரண்டாவது பக்கத்தில் படக்கதை கன்னித்தீவு இருக்கும். லைலா என்னவானாள், அவள் கடத்திய அரக்கனிடம் இந்து தப்பித்தாலா? சிந்துபாத் அவளை எப்படி காப்பாற்ற போகின்றான் என்ற கவலை எல்லாம் அப்போது எழும் அது பற்றி பேசிக்கொள்வோம்.......

அந்த சின்ன இடத்தில் மூன்றாக துடுத்து படம் போட்டு இருப்பார்கள் சில நாட்கள் சிந்துபாத் போடும் கத்தி சண்டையை வைத்து இரண்டு நாட்களுக்கு ஒப்பேற்றுவார்கள், சில நாட்களில் அவர் மட்டும் பிரேமில் இருப்பார்... அவர் யோசிப்பதாக இருக்கும் லைலாவை உடன் காப்பாற்றவேண்டும்... அவள் எங்கிருக்கின்றாள் என்று தெரியவில்லை? இதுதான் சில நாட்களில் இருக்கும் இருப்பினும் அதனை தொடர்ந்து வெக்கம் இல்லாமல் படித்துக்கொண்டு இருப்போம்....


அதன் பிறகு மெல்ல ராணிகாமிக்ஸ் வந்தது...ராணிகாமிக்சில் செவ்விந்தியர்கள், ஷெரிப், போன்ற கௌபாய் கதைகள் தொடர்ந்து வந்தன... அதிலும் அந்த கொள்ளையர்களிடமும், ஷெரிப்பின் ஷு கால்களிலும் ஒரு சின்ன சக்கரம் இருக்கும் ... அது தீபாவளி பண்டிகைக்கு அம்மா சோமாஸ் செய்யும் போது மாவின் உள்ளே தீனி வைத்து விட்டு அதனை இது போன்ற சக்கர கத்தியால்தான் கட் பண்ணி எடுப்பாள்....நகரத்துக்கு எந்த பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்கும் ஷெரிப்புக்கு அவ்வப்போது கொள்ளையர்களால் பாதிப்பு ஏற்பட அவர்கள் கொட்டத்தை அடக்குவதுதான் ஷெரிப்பின் வேலை..... இந்த கதைகளில் அதிகம் என்னை கவர்ந்தது துப்பாக்கி சண்டைதான்..... அதே போல் டைகர் ஹென்றி, டொன்டொயிங் என்ற வார்த்தைகள் அப்போது பிரசித்தம்.... ஜேம்ஸ் பாண்ட் கதைகள் எனக்கு ரொம்பவும் பிடித்தவை.. சரியான நேரத்தில் நினைவு படுத்திய யாசவிக்கு என் நன்றிகள்


பேட்மேன் , மந்திரவாதி மான்ட்ரேக், ஆர்ச்சி,போன்றகதைகளும் ரொம்ப பேமஸ்.... இருப்பினும் லயன் காமிக்ஸ்ல் , முத்துக்காமிக்ஸ்,மந்திரக்கை மாயாவி கதைகள்தான் என் ஆல்டைம் பேவரிட்,கொள்ளையர்களை அவர்கள் இடத்தில் மறைந்து சென்று துப்பறிவது எனக்கு ரொம்ப பிடிக்கும்.. அதிலும் அவருக்கு பவர் போய் விட்டால் ஏதாவது ஒரு கரண்ட் கனெக்ஷனில் கை வைத்து மாயமாகிவிடுவார்... அப்புறம் எனக்கு ரொம் பிடித்த கதை என்றால் ஸ்பைடர்மேன் கதைககள்தாள் , சில கதைகளில் ஸ்பைடர்மேன் வில்லனாகவும் நல்லவனாகவும் வருவார்...தலைப்புகள் எல்லாம் செம கமெடியாக வைத்து இருப்பார்கள்..... விசித்திர விமாணங்கள்,திமிங்கில அரக்கன், மர்மத்தீவில் மயாவி போன்ற அசத்தல் தலைப்புகள் இடம் பெற்று இருக்கும் ஆனால் இப்போதெல்லாம் காமிக்ஸ் புத்தகங்கள் கண்ணில் அதிகம் படுவதில்லை....

அங்கொன்றும் இங்கொன்றுமாய் புத்தகங்கள் கண்ணில் தென் படுகின்றன... பள்ளி வருடக்கடைசி கோடை விடுமுறையில் இந்த புத்தகங்களுக்கு நல்ல மதிப்பு எங்கள் மத்தியில், புத்தகங்கள் பகிர்ந்து கொள்வோம், அதற்காகவே சண்டை அதிகம் போட்டுகொள்ளமாட்டோம்.... சண்டை போட்டுவிட்டால் யாரிடம் போய் முத்து காமிக்ஸ், லயன் காமிக்ஸ் வாங்குவது சொல்லுங்கள்???

இப்போதெல்லாம் சுட்டி டிவியில் எல்லாவற்றையும் பிள்ளைகள் பார்த்து விடுகின்றார்கள். இதனால் பிள்ளைகளின் கற்பனை திறன் குறைந்து இருந்தாலும் அது வேறு வழியில் இயற்க்கை சமன் செய்து விடும்.... காரணம் முன்னைவிட பிள்ளைகள் ரொம் சுட்டியாக இருக்கின்றார்கள்,. கிராமம் நகரம் என்ற வேறுபாடுகள் இல்லாமல் ஸ்மார்ட்டாக இருக்கின்றார்கள் அதற்க்கு காரணம் டிவி என்றால் அது மிகையில்லை...

நிறைய படக்கதை படிக்க எதாவது தப்பு செய்து விட்டு ஜெயிலுக்கு போய் ஒரு அறை முழுவதும் காமிக்ஸ் பத்தகங்கள் நிரப்பி, அம்மாவின் கடைக்கு போய் வா என்ற இம்சை இல்லாமல் எந்த டிஸ்டர்பும் இல்லாமல் தொடர்ந்து படித்துக்கொண்டு இருக்க வேண்டும் என்று நினைத்த காலங்ககள் எல்லாம் ஒரு காலம். நிச்சயமாக அது ஒரு கனாகாலம்தான்

அன்புடன்/ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....

வாத்தியார் மாமா (சிறுகதை)

வாத்தியார் மாமா (சிறுகதை)





எங்கள் பள்ளியில் நாதமுனி வாத்தியார் மாணவர்களின் அபிமானம் பெற்ற வாத்தியார்...எல்லோரும் மாணவர்களை அடக்க பிறம்போடு திடிர் கூட்டனி சேர்கையில், வாத்தியார் நாதமுனி மட்டும் அன்பால் அடக்குபவர்.., மன்னிக்கவும் அன்பால் மாணவர்களை கட்டுக்குள் கொண்டு வருபவர்..பாடம் நடத்தும் போது கூட தன் நகைச்சுவை உணர்வோடு சப்ஜெக்ட்டையும் கலந்து தரும் மந்திரக்காரர்....


உலக விஷயங்களையும் உள்ளுர் விஷயங்களையும் பாடத்தின் போது கலந்தது வகுப்பு எடுப்பதால், வகுப்பில் எந்த மாணவனும் தூங்கிநான் பார்த்து இல்லை...பள்ளியின் வளாகத்தில் பட்டபெயர் வைத்து அழைக்காத ஒரே வாத்தியார் நாதமுனி வாத்தியார்தான்.....சைக்கிளில் நாதமுனி வாத்தியார் வீட்டுக்கு போகையில் அவர் சைக்கிள் பின் சீட்டில் அவர் வீட்டை தான்டி செல்லும் யாரவது ஒரு பையன் உட்கார்ந்து செல்வான்....


இவைகள் எல்லாவற்றையும் விட,நாதமுனி வாத்தியாரை எல்லா மாணவர்களுக்கு பிடிக்க மற்றுமொறுக்காரணம் பரிட்சை ஹாலில் சூப்பர்வைஸ் செய்ய வரும் வாத்தியார்கள் எல்லாம் இஞ்சி தின்ன குரங்கு போல் முகத்தை வைத்து கொண்டு குறுக்கும் நெடுக்குமாக பின்புறம் கைகட்டி தர்பார் மண்டபத்தில் நடப்பது போல் நடக்கும் போது, ஒன்மார்க் கேள்விகளுக்கு விடை சொல்லி கொடுக்கும் ஒரே வாத்தியார் நாதமுனி வாத்தியார்தான்.


தொண்டையில் இருக்கும் ஆனால் எழுத வராது பேந்த, பேந்த திருட்டு முழி முழிக்கும், மாணவன் அருகில் வந்து அவன் கேட்காமலேயே தொண்டையில் இருக்கும் வார்த்தையை எடுத்துகொடுப்பவர் அவர்தான்.... அதற்க்காக அவர் மாணவர்களை காப்பி அடிக்க ஒருபோதும் அவர் அனுமதித்ததில்லை... அப்படி ஒரு பரிட்சையில் நாதமுனிவாத்தியார்தானே... செம ஜாலி பார்ட்டி... நம்மல எங்க பிடிக்கபோறாறு ?என்று அலட்சிய்த்தோடு காப்பியடித்த மாணவனை பேப்பரை வாங்கி கொண்டு, அந்த பையனை பரிட்சைஹாலை விட்டு வெளியே அனுப்பிவிட்டார்..

அவன் கெஞ்சினான், கதறினான், கண்ணில் நீர் வைத்தான்.. கடைசிவரை அவர் உறுதியாய் நின்றார்...அப்போதுதான் நாமுனி வாத்தியர் எவ்வளவு ஜாலிடைப்போ அதே போல் அவர் ரொம்ப சீரியசாகவும் மாறுவார் என்பதை மாணவர்கள் அந்த சம்பவத்தின் மூலம் உணர்ந்தார்கள் என்னையும் சேர்த்துதான்..


நான் அவரை வாத்தியார் மாமா என்று அழைப்பேன். அவர் எனக்கு தூரத்து சொந்தமும் கூட எங்கள் வீட்டில் இருந்து அவர் வீடு பத்து வீடுகள் தள்ளி இருந்தது. அவருக்கு மூன்றுஆண் ஒரு பெண் குழந்தை இருந்தது...என் வீட்டில் நான் ஒரே பையன் என்பதால் நான் அவர் வீட்டில்தான் போய் விளையாடுவேன், அவர் பையன்கள்தான் எனக்கு நண்பர்கள்...என் அப்பாவும் அவரும் பால்ய சிநேகிதர்கள்.... வாத்தியார் மனைவி அதாவது என் அத்தை அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும், அவர் பிள்ளைகள் போலவே என்னையும் ஒரு பிள்ளையாக பார்த்துக்கொண்டார்...

வாத்தியார் மாமா எவ்வளவு ஜாலியான ஆளாக என்னிடம் அவர் வீட்டில் பழகினாலும், பள்ளியில் என்னை ஏறெடுத்து கூட பார்க்கமாட்டார்..இவ்வளவு ஏன் அதே பள்ளியில்தான் அவர் மூன்று மகன்களும் படித்தார்கள்...அவர்களோடு ஒருநாள் கூட பேசி எனக்கு நினைவு இல்லை...பரிட்சை சமயத்தில் பேப்பர் கட்டுகளை பள்ளி முடிந்ததும் தன் மூன்று மகன்களில் யாரிடமாவது கொடுத்து பத்திரமாக வீட்டுக்கு எடுத்து செல்ல பணிப்பார்... அதே போல் அவர்கள் மகன்களும் ஒருநாளும் பள்ளியில் தான் வாத்தியதர் மகன் என்று பெருமை கொண்டதில்லை... சிறு வயதில் நான் அவர் வீட்டு தோட்டத்தை கடக்கையில் வாத்தியார் மாமா என்னை குட்டியானை என்று அழைப்பார்... ஏன் என்றால் என் அப்பா சற்று உடல் பருமன் உள்ளவர்.. அதனால் அவர் பெரிய யானை அதனால் நாதமுனிவாத்தியாருக்கு மாமாவுக்கு நான் குட்டியானை ஆகிவிட்டேன்.... தோட்டத்தில் கோமணம் அணிந்து வெண்டை ,கீரைச்செடிகளுக்கு அவர் நீர் பாய்ச்சும் அழகே அழகுதான்...

பள்ளியில் நான் பரிச்சை எழுதும்,பரிட்சை ஹாலுக்கு அவர் வந்தாலும் கூட அவர் எனக்கு எதையும் சொல்லிதந்தது இல்லை, நானும் அதை எதிர்பார்தது இல்லை...தெரிந்ததை எழுதுவேன் தெரியாததை எழுதமாட்டேன்... அவர் இருக்கும் போது முழிப்பதோ,அல்லது பாவமாக அவர் முகத்தை பார்பதோ எனக்கு பிடிக்காத விஷயங்கள்...அவருக்கும்தான்..

வாத்தியார் மாமா என்னை இரண்டு முறை திட்டி இருக்கின்றார். ஒன்று அவர் புது வீடு கட்டிய போது, புதுதாய் கட்டிய சிமென்ட் சுவருக்கு தண்ணீர் ஊற்றும் போது நான் ஒரு புது சில்வர் குடத்தை போட்டு உடைத்தேன்...அது புதிய குடம் என்பதால் “மம்ட்டி, மம்டடி ஒரு குடத்தை புடிக்க கூட துப்பில்லை என்று தி்ட்டினார்...

அடுத்த திட்டு அரையாண்டு பரிச்சை பேப்பர் திருத்தும் போது எனது நண்பனின் தம்பி மார்க்கை பார்த்தவிட்டு அவனிடம் சொல்ல அது பள்ளி முழுவதும் தெரிய, என்னை அழைத்த நாதமுனி வாத்தியார் மாமா இனி என் வீட்டு பக்கம் தலை வைத்து படுக்காதே என்றார்...

நான் செய்தது தப்பு என்றாலும் வீட்டுவாசல் மிதிக்காதே என்ற வார்த்தை என்னை ரொம்பவே காயப்படுத்தி விட்டது.அதன் பிறகு அவர் வீட்டு வாசல் நான் மிதித்ததே இல்லை.. அவர் எதி்ரில் வந்தால் கூட அவருக்கு ஒரு வணக்கம் கூட வைக்காமல் அவரை முறைப்போடு கடந்து போவேன்...அவர் பள்ளி ஆண்டு விழாவில் அசிரியர்கள் குழு நடத்திய தெரு கூத்து நிகழ்ச்சியில் அவர்தான் கெட்டிக்காரன்.

மாணவர்கள் எல்லோரும் அந்த நிகழ்ச்சியை பார்த்து டேய் உங்க வாத்தியார் மாமா கலக்குறார்டா என்று எண்ணிடம் கமென்ட் அடித்த போது எனக்கு அது ரசிப்பாய் இருக்கவில்லை.. எப்படி வீட்டுக்கு வரக்கூடாது என்று சொல்லலாம் என்ற கோபம் எனக்குள் ஆழ பதிந்து விட்டது....

அவர் பிள்ளைகளிடம் மட்டும் பள்ளியில் பேசுவதுண்டு...சிறு வயதில் இருந்து பாகிய பழக்கமாயிற்றே....அதே போல் எங்கள் அந்தை எங்கள் ஊர் பொன்விளைந்த களத்தூர் கோவிலுக்கு வாரந்தோரும் வெள்ளிக்கிழமை வரும் போது என்னை பார்த்து நலம் விசாரிப்பாள்...

“மாமா ஏதோ கோபத்துல ஒரு வார்த்தை சொல்லிட்டார், அதுக்காக வீட்டு பக்கமே வராம இருக்குறாதா? ” மாமா உன்ன்னை பத்தி அடிக்கடி விசாரிப்பாருடா? ஒரு வார்த்தை சொல்ல கூட அவருக்கு உரிமை இல்லையா? என்று திட்டி விட்டு போனாள்...

அவர் அதன் பிறகு 9ம் வகுப்பு நான் படித்த போது வாத்தியார் மாமாவுக்கு உடம்புக்கு முடியாமல் போய் விட்டது என் அப்பா அவரை மருத்துவமனையில் போய் பாத்து விட்டு இந்த வாரம் தாண்டுவது சந்தேகம் என்று கண்கலங்கி ரொம்ப வருத்தப்பட்டு சொன்னார்...அதன் பிறகு நான் வாத்தியார் மாமாவை மறந்துபோய்விட்டேன்..

ஒரு மாதம் கழித்து ஒரு வியாழக்கிழமை அன்று பள்ளி விட்டு மாலை நாங்கள் வெளிவரும் போது, நாதமுனி வாத்தியார் இறந்து விட்டதாக சொன்னார்கள்...எனக்கு எந்த வருத்தமும் இல்லை..என் நண்பன் லெனின் நாளைக்கு வீவு மச்சான் என்று சொல்லி குதித்தான். இன்னொரு வெளியூர் நண்பன் வெள்ளி, சனி,ஞாயிறு மூன்று நாளும் லீவு என்று கணக்கு போட்டு ஆனந்த கூத்தாடினான்...

நான் பள்ளியை விட்டு வீட்டுக்கு வரும் போதே ஊரில் சாவு மேளம் காதை கிழித்தது. தென்னை மட்டைகள் வெட்டி தெருவோரம் நட்டார்கள்...ஊரில் பெரிய சாவு என்பதால் ஊரே சோகத்தில் ஆழ்ந்தது இருந்தது...என்னை எந்த சோகமும் தாக்கவில்லை சில காலனி பெண்கள் ஆண்டைய்யா என்ற மார்பில் அடித்து கொண்டு தலைவிரி கோலமாக ஓடிக்கொண்டு இருந்தார்கள்..நான் புத்தகபையை வீட்டில் வைத்து முகம் கழுவும் போது அம்மா தலை குளித்து பாவாடை மேலேற்றி மார்பில் கட்டி, தலை குனிந்து முடியை துண்டால் அடித்து சிக்கு எடுத்துக்கொண்டே, அம்மா சொன்னாள்...

“நான் சாவு வீட்டுக்கு போயிட்டு வந்துட்டேன் செம கூட்டம்”.
அப்பா கள்ளகுறிச்சி வரை போயிருக்கார், அவருவர்ர வரைக்கும் நீ,சாவு வீட்ல அப்பா சார்பா இரு என்று அம்மா சொன்னாள்...

என்னை வீட்டு பக்கம் தலை வைத்து படுக்காதே என்று உயிரோடு சொன்ன வாத்தியார் மாமாவை உயிர் இல்லாமல் பார்க்க நான் என் வீட்டில் இருந்து கிளம்பினேன்...
அவர் உயிரோடு இருந்தவரை அவர் வீட்டு பக்கம் போகவில்லை...நான் அங்கு போன போது ஊரில் உள்ள எல்லா பெரிய தலைகளும் இரும்பு சேரில் உட்கார்ந்து மாலைமலர் பேப்பர் படித்துக்கொண்டு இருந்தனர்..இன்னும் சில பேர் சாவுக்கு வந்தவர்களுக்கு டீ,காபி கொடுத்க்கொண்டு இருந்தனர்.
எங்கள் ஊர் நாட்டமைகாரர் இரவு 5 பெட்ரோமாக்ஸ் லைட்டு வேண்டும் என்று, லைட்டுகாரரிடம் ஆர்டர் கொடுத்து கொண்டு இருந்தார்..

வீட்டின் ஒப்பாரி சத்தம் தெருவில் கேட்டது...நான் உள்ளே போனேன் நல்ல கூட்டம், போகும் போதே என்னிடம் வாத்தியார் பெரிய பையன் கண்ணீரும் கம்பலையுமாக,
“டேய், மாமாவை பாருடா நம்மளை எல்லாம் விட்டுட்டுரொம்ப சீக்கிரமா மேல போயிட்டாரு.. என்று கதற இதுவரை அவன் அழுது பார்க்காத நான் அவன் அழுகை என்னை கொஞ்சம் சலனபடுத்தியது...
சவம் ஹாலில் வைக்கபட்டு இருந்தது என்னை பார்த்ததும் என் அத்தை,வாத்தியார் மாமா சவத்திடம்,

ஐயா, பாருய்யா உயிரில்லாத உன் உடம்பை பார்க்க ரோஷக்காரன் வந்து இருக்கான்யா,
“அப்படி என்ன சொல்லிட்டேன்? அந்த குட்டியானையை??? கோபத்துல ஒரு வார்த்தை சொல்லிபுட்டேன், அதுக்காக இந்த பய ,இந்த வீட்டு பக்கமே வரமாட்டேன்கிறானேன்னு சொல்லி நீ எப்பவுமே வருத்தபடுவியே,

“என்ராசா, இப்ப வந்திருக்கான் பாருயா...உன்னை பார்க்க குட்டியானை வந்துருக்கான், கண்முழுச்சி பாருய்யா”

என்று என் அத்தை மார்பில் அடித்தக்கொண்டு அழுத போது, என் கண்களில் எங்கிருந்து கண்ணீர் சுரந்தது என்று தெரியவில்லை, வாத்தியார் மாமா என்னை விட்டுட்டு போயிட்டியே என்று கத்தி தலையில் அடித்துக்கொண்டு அழ ஆரம்பித்தேன்... பெருங்குரல் எடுத்து அழுத என்னை ஊரில் உள்ளவர்கள் வித்யாசமாக பார்த்தார்கள்.......


அன்புடன்/ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....

(THE PURSUIT OF HAPPYNESS) உலக சினிமா / அமெரிக்கா....கமலுக்கு இனையான நடிகர்...


கடவுள் உங்கள் பிரார்தனைக்கு மூன்று வழிகளில் பதில் தருவார்...கடவுள் உங்களுக்கு உடனே யெஸ் என்ற சொல்லிவிட்டால், நீங்கள் என்ன கேட்டாலும் உடன் கிடைத்து விடும்... அவர் இல்லை என்று சொன்னாலும் இருப்பதில் கொஞ்சம் நல்லது கி்டைத்துவிடும்... அவர் வெயிட் என்று சொல்லிவிட்டாள் கலலைபடாதீர்கள் இருப்பதிலேயே நல்லதைதான் உங்களுக்கு அவர் தருவார்...அப்படி ஒரு கஷ்டபடும் தகப்பனுக்கு கடவுள் ஆறுமாதத்திற்க்கு வெயிட் என்று சொல்ல, கடவுள் ஒரு சாமான்ய தகப்பனுக்கு இருப்பதிலேயே பெஸ்ட்டை எப்படி கொடுத்தார் என்பதுதான்... பர்சூட் ஆப் ஹேப்பினஸ் படத்தின் கதை....

சில விஷயங்கள் தாமதமாய் கிடைக்கின்றது என்றாலும் அதற்க்கு எப்படியும் ஒரு வலுவான காரணம் இல்லாமல் இல்லை... அது நமக்கு தாமதமாய் கிடைத்தாலும் அது தரமானதாய் இருக்கும் என்பதை சொல்லும் படம்...


அமெரிக்காவில் இருக்கும் எல்லோரும் சுபிட்சமான வாழ்க்கை வாழ்வதாக நம்மில் பலர் நினைத்து கொண்டுதான் இருக்கின்றோம், அப்படி இல்லை அங்கேயும் வறுமையும் சோகமும் குடி கொண்டு இருக்கின்றது என்பதை தோலுரித்து காட்டிய படம்.....


இன்ப துன்பத்தில் பங்கு கொள்கின்றேன் என்று கைபிடித்த மனைவி, கட்டிலில் ஆசையோடு எல்லாவற்றிர்க்கும் ஈ டுகொடுத்து, புரண்ட மனைவி, அதன் விளைவாய் பெற்ற ஒரே ஒரு அழகானஆண்பிள்ளை, இப்படி அழகாய் போகும் குடும்பத்தில் வறுமை வலை விரிக்க... அந்த பெண் கணவனிடம் நீ வெட்டிக்கேசு வெண்ணை லிங்கம் என்று சொல்லி வீட்டை விட்டு திடும் என பிரிந்து போனாள் ஒருவன் என்ன செய்வான்-???

பர்சூட் ஆப் ஹேப்பினஸ் படத்தின் கதை இதுதான்...

கிரிஸ் கார்ட்னர் (வில்ஸ்மித்) ஒரு சாதாரன குடும்பத்தலைவன் தன் மனைவி, அழகான ஆண் குழந்தையுடன் வாழ்ந்து வருபவன். தெரியாத்தனமாக ஒரு சேகனிங் மெஷினில் அதிக அளவு இன்வெஸ்ட் செய்ய, அந்த மாடல் பெயிலியர் மாடலாக, அவனுக்கு பெருத்த நஷ்டம் ஏற்படுகின்றது... வீட்டு வாடகை கூட கொடுக்க முடியாமல் கஷ்டபடும் போது அவனது மனைவி லின்டா (தான்டி நுயூட்டன்) இந்த வறுமையை பார்த்து வெறுத்து போய் கணவனையும் பிள்ளையையும் அம்போ என்று நடு ரோட்டில் விட்டு விட்டு போய் விடுகின்றாள்...கார்னர் மனைவி விட்டு போன சோகம், பிசினசில் பெருத்த நஷ்டம், பொதுவாய் இந்த மனநிலையில் உள்ளவர்கள் தற்கொலைக்கு முயல்வார்கள், ஆனால் கார்ட்னர் என்ன செய்தான்?, அவன் வறுமை எவ்வாறு அலைகழித்தது? அவன் பிள்ளைக்கு மூன்று வேளை சோறு போட்டானா? போன்ற கேள்விக்கான விடைகளை வெண்திரையில் காண்க...

படத்தின் சுவாரஸ்யங்களில் சில....

இது ஒரு உண்மைகதை....கிரிஸ் கார்ட்னர் என்ற மனிதர் சந்தித்த வாழ்க்கை பிரச்சனைதான் கதை...
இப்படிகூட அழகாய் கவித்துவமாய் படம் எடுக்க முடியுமா? அப்படி ஒரு அழகியல் இந்த படத்தில் இருப்பதை நாம் யாராலும் மறுக்க முடியாது, அது போன்ற வலுவான திரைக்கதையும் கூட....

நடு ரோட்டில் உன்னை விட்டு போகின்றேன் என்று சொல்லி விட்டு போகும் மனைவியிடம் எவ்வளேவோ சமாதான வார்த்தைகள் சொல்லியும் கேளாமல் போவேன் என்று அடம் பிடிக்கும் போது... போ இந்த இடத்தை விட்டு போ... போய் சந்தோஷமாக வாழ் என்று மனையிடம் சொல்லும் போது அந்த நடிகனை நான் மிகவும் நேசித்தேன்....

மனைவி போய் விட்டாள். ஆறு மாதத்திற்க்கு ஸ்டாக் புரோக்கர் வேலைக்கு டிரைனிங் டைம், சம்பளம் இல்லை, மகன்கூடவே , வாடகை கொடுக்க முடியாமல் வீட்டையும் காலி செய்து நடுத்தெருவில்....சாமி என்னமாதிரியான திரைக்கதை இது????

ஆறுமாத சம்பளம் இல்லாத வேலை, அதற்க்கு 20 பேர் போட்டி அதில் ஜெயித்து ஆக வேண்டிய கட்டாயம் ....ஆறு ஸகேனர் மட்டும்தான் அவன் வசம்... அது கூட விற்றால்தான் கையில் காசு

பார்க்கிங் காசு இல்லாமல் ஜெயிலில் அடைபட்டு இன்ட்ர்வியுவுக்கு போகும் போதே அவன் நேற்று பெயின்ட் அடித்த சட்டையோடு இன்டர்வியு செல்ல, இன்டர்வியுவுக்காக,அழைக்கும் பெண் கிரிஸ் என்று அழைக்க, காதில் விழாதது போல் இருந்து விட்டு, எப்படி இந்த லட்சணத்தோடு உள்ளே செல்வது என்று யோசித்து விட்டு சட்டென எழுந்து உள்ளே செல்வதும்.....


சட்டையே இல்லாமல் இன்டர்வியுவுக்கு வருபவைனை நீ எப்படி பார்ப்பாய் என்று கேட்க அவன் போட்டு இருக்கும் பேண்ட்டை அழகான பேன்ட் என்று பார்ப்பேன் என்று சமயோஜிதமாக சொல்வது அழகு...

அப்பா கஷ்டபடுவது பிள்ளைக்கு தெரிந்து அவன் ஒரு டிப்பார்ட்மென்ட் ஸ்டோரில் சாக்லெட்டை ஆசையோடு பார்க்க, வேண்டுமா என்ற கேட்க? வேண்டாம் என்று சொல்லும் அந்த குழந்தையை உச்சி முகர்ந்து கொஞ்ச தோன்றும்....

கடைசி ஸ்கானரை வெளிச்சம் இல்லாத இடத்தில் ரிப்பேர் செய்துபோராடுவது அழகு.. படுக்க இடம் இல்லாமல் ரயில்வே ஸ்டேஷன் பார்ரூமில் தன் பிள்ளையுடன் படு்த்து இருக்க அந்த நேரத்தில் பாத்ரூம் போக யாரோ ஒருவன் கதவை தட்ட தன் பிள்ளை தூக்கம் கெட கூடாது என்று சத்தம் வராமல் குலுங்கி விசும்பி அழுவது அழகு...

ஸ்கேனர் தொலைவதும் அதை மீட்க போராடுவதும் கவிதையான காட்சிகள்...

நாளையில் இருந்து நீ வேலைக்கு வரலாம் என்று சொல்லும் போது ,வில்ஸ்மி்த் வெளிபடுத்தும் எக்ஸ்பிரஷன் இன்னோரு கமலை பார்த்தது போல் இருந்தது.. அதே போல் அந்த இடத்தில் முழுவதும் கேமரா குளோசப்பில் ஸ்மித்தை பாலோ செய்வதும், வெளியே வந்து தன் சந்தோஷத்தை பகிர கூட யாரும் இல்லாமல், தனக்கு தானே சந்தோஷம் கொள்ளும் காட்சிகள் கவிதை...

இந்த படத்தின் கதாநாயகி மிஷின் இம்பாசிபிள் படத்தின் இரண்டாம் பாகத்தின் நாயகி..Thandie Newton

வில் ஸ்மித் உண்மையான மகனே இதில் பையன் கேரக்டர் செய்து இருக்கின்றார்.....Jaden Smith

ஸ்மித் இந்த படத்தின் தயாரிப்பாளரும் கூட....

இந்த படம் ஸ்கீரிமர் வெசஸ் ஸ்கீரிமர் படத்தினை லேசாக ஒத்து இருக்கும்

இந்த படத்தை பார்க்காதவர்கள் உடனே இந்த படத்தை பார்க்கவும் சந்தோஷத்தை துரத்தும் ரகசியத்தை நீங்கள் கற்பீர்கள்.....


இந்த படம் விருதை வாரிகுவித்து இருப்பதை பாரீர்,இந்த படத்தின் விருதுகள் விபரம் கீழே....
* Academy Award for Best Actor (Will Smith, nominee)
* Golden Globe Award for Best Actor - Motion Picture Drama (Will Smith, nominee)
* Golden Globe Award for Best Original Song ("A Father's Way," words and music by Seal, nominee)
* Black Reel Award for Best Film (nominee)
* Black Reel Award for Best Actor in a Motion Picture (Will Smith, nominee)
* Black Reel Award for Best Breakthrough Performer (Jaden Smith, nominee)
* NAACP Image Award for Outstanding Motion Picture (winner)
* NAACP Image Award for Outstanding Actor in a Motion Picture (Will Smith, nominee)
* NAACP Image Award for Outstanding Supporting Actor in a Motion Picture (Jaden Smith, nominee)
* NAACP Image Award for Outstanding Supporting Actress in a Motion Picture (Thandie Newton, nominee)
* Screen Actors Guild Award for Outstanding Performance by a Male Actor in a Leading Role - Motion Picture (Will Smith, nominee)



* MTV Movie Award for Best Male Performance (Will Smith, nominee)
* MTV Movie Award for Best Male Breakthrough Performance (Jaden Smith, winner)
* Broadcast Film Critics Association Award for Best Actor (Will Smith, nominee)
* BFCA Critics' Choice Award for Best Young Actor (Jaden Smith, nominee)
* BET Award for Best Actor (Will Smith, nominee)
* PFCS Award for Best Performance by Youth in a Leading or Supporting Role - Male (Jaden Smith, winner)
* Chicago Film Critics Association Award for best actor (Will Smith, nominee)
* Italian National Syndicate of Film Journalists for Best Score (Andrea Guerra, nominee)
* David di Donatello Awards for Best Foreign Language Movie (Gabriele Muccino, nominee)
* Capri Award for Movie of The Year (winner)


Directed by Gabriele Muccino
Produced by Will Smith
Steve Tisch
James Lassiter
Todd Black
Jason Blumenthal
Written by Steven Conrad
Starring Will Smith
Jaden Smith
Thandie Newton
Brian Howe
Dan Castellaneta
Music by Andrea Guerra
Cinematography Phedon Papamichael
Editing by Hughes Winborne
Distributed by Columbia Pictures
Release date(s) December 15, 2006 United States
January 12, 2007 United Kingdom
Running time 117 minutes
Country United States
Language English
Budget $55 million
Gross revenue $307,077,295

இந்த படம் பார்க்காதவர்கள் உடனே பார்க்க வேண்டிய படம் மட்டும் அல்ல வாழ்க்கை போராட்த்தையும் சவாலையும் கற்றுத்தரும் படம் இது....

குறிப்பு... சான் பிரான்சிஸ்க்கோ ஹரிராஜகோபாலனுக்கு இந்த பதிவு சமர்பணம்

அன்புடன்/ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....

உங்கள் வாழ்க்கையில் இது போல் நிகழ்ந்து உள்ளதா?


வாழ்க்கை எடுக்கும் வகுப்புகள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வோரு விதமாய் இருக்கும் அது வகுப்பு எடுக்கும் ஸ்டைலே தனிதான்....சிலருக்கு புளிய மரத்தடி, சிலருக்கு கீற்றுக்கொட்டாய், சிலருக்கு டெஸ்க்டேபிள், சிலருக்குஎசி வகுப்பறை என்று சொல்லிக்கொண்டே போகலாம்.....

கல்யாண பந்தியில் அப்பளம் வைத்துக்கொண்டே வருவான் நம்மிடம் வந்தது அந்த அப்பளம் ஒன்று சூம்பி போய் இருக்கும் அல்லது உடைந்த அப்பளமாய் பாதியை வைத்து விட்டு தயவுதாட்சனை இல்லாமல் முகம் பார்க்காமல் போய் கொண்டே இருப்பான்....

மெதுவடை ரொம்ப நன்றாக இருப்பதாக நினைத்து இன்னொன்று கேட்கையில் அது தீர்ந்து போய் இருக்கும்.......

புது படத்திற்க்கு ஒரு மணிநேரத்துக்கு முன்னதாகவே ஒருவர் மட்டும் நடந்து போகும் அளவுக்கு, டிக்கெட் கவுன்டரில் வால் போன்ற வழியில் வேர்த்து விறுவிறுக்க , கால் மாற்றி நின்று கொண்டு இருக்கையில், மேலுள்ள கம்பிய பிடித்தபடி ஒரு அடாவடி கூட்டம் தான் போட்டு இருக்கும் ஜட்டியை நமக்கு கண்பித்தபடி நம் தலைக்கு மேல் ஸ்பைடர் மேன் போல் போய் கொண்டே இருப்பார்கள்....( ஊரில் எல்லோருஙம் கைலி கட்டிக்கொண்டுதான் படம் பார்க்க வருவார்கள்.... அப்படி பேன்ட் போட்டு வந்தால் அவர்கள் ஏன் 5ரூபாய் டிக்கெட்டுக்கு வர வேண்டும்???15 ரூபாய் பஸ்ட் கிளாஸ் டிக்கெட்டில் படம் பார்க்கலாமே....?)

நமக்கு கீழே பக்கத்தில் இருப்பவன் நிக்கோடின் வாய் நாற்றத்துடனும், பான்பராக் கப்புடனும் சகித்து கொண்டு இருக்கையில், தியேட்டரில் டிக்கெட் கொடுக்க பெல் அடித்து கூட்டம் மெல்ல நகரும் போது கடவுளையும் வேண்டிக்கொள்வோம்... கவுன்டருக்கும் நம் கைக்கும் பத்து இன்ச் இருக்கும் வேளையில், டிக்கெட் இல்லையென சட்டென கவுண்டர் சாத்தப்பட்டு, படுபாவி பசங்கள் விளக்கையும் அனைத்து விடுவார்கள்.... வியற்வையுடன் தொப்பலாக நனைந்து தடவி தடவி வெளியே வந்து வியற்வை நாற்றத்துடன் சுத்தமான காற்றை சுவாசி்த்து, 5 ரூபாய் டிக்கெட்டை 25 ருபாய்க்கு வாங்கி படம் பார்க்கும் போது,

நெரிசலில் சிக்காமல் நேரடியாக பிளாக்கில் டிக்கெட் எடுத்து பார்த்து இருக்கலாமோ ....என்று எவ்வளவுதான் மனசாட்சி சொன்னாலும், அடுத்த புதுபடம் ரிலிசாகும் போது, அதே வியர்வை, கலர் ஜட்டிகள், நிக்கோடின் நாற்றம், கவுன்டர் மூடல்... ச்சே எவ்வளவுதான் பட்டாலும் இந்த மிடில் கிளாஸ் மாதவனுக்கு புத்தியே வராது.....

மனைவிக்கு தலைவலி.... ஜன்டுபாம் வாங்க மெடிக்கல் போவோம்... இப்போதாவது நடந்து போவோமே என்று கைலி கட்டி அடுத்த தெரு்வுக்கு போகும் போது.... ஜன்டுபாம் ஸ்டாக் நேத்துதான் தீர்ந்து போய் விட்டதாய் சொல்லும் போதே நமக்கு உள்ளுக்குள் குருவி கத்த தொடங்கும்....

சரி பக்கத்தில் இருக்கும் வேறு ஒரு கடைக்கு போனால் அன்று அந்த கடைக்காரரின் ஒன்று விட்ட மாமா இறந்து போனதால், கடை விடுமுறை விட்டு இருப்பார்... அப்போதுதான் நான் லுங்கியுடன் பக்கத்து தெருதானே என்று வந்த அலட்சியமும், கூடவே வண்டி எடுத்து வராதது எவ்வளவு பெரிய தவறு என்பதையும் அப்போதுதான் உணர்ந்து நொந்து கொண்டு இருக்கும் சமயம்....


சரி இவ்வளவு தூரம் நடந்து திரிசங்கு சொர்க நிலைக்கு வந்து விட்டோமமே என்று ,ஆண்டவன் மீது பாராத்தை போட்டு இன்னும் அரை கிலோமீட்டர் நடந்து ஒரு மெடிக்கல் ஷாப்பை அடைந்தேன்...

“ஜண்டுபாம் இருக்கின்றதா? ”

“ஓஇருக்கே”

என்று சொல்லி அழுக்கு துணியால் ஜண்டுபாம் கவர் மேலுள்ள புழுதியை துடைக்கும் போது ஒரு வெற்றி சிரிப்பு நம்மிள் கூடி கொண்டு இருக்கும்.... பாக்கெட்டில் இருக்கும் 100 ரூபாய் தாளை நீட்டும் போது, 100ரூபாயா? இப்பத்தானே சில்லரையை கலெக்ஷன்காரன் கிட்ட கொடுத்தேன்.... சுத்தமா சில்லரை இல்லை என்று சொல்லுபவனை செவிட்டிலேயே ஒரு போடு போட மனசு துடித்தாலும்,

ஏன்டா கொய்யாலே ஒரு 100ரூபாய்க்கு சில்லரை கூட வச்சிக்காம இன்னா மயித்துக்குடா கடையை தொறந்து வச்சி இருக்கீங்க???? என்று கோபத்தில் கேள்வி தொண்டை வரை வந்தாலும், கேட்காமல் உதட்டில் ஒரு வெறுமை சிரிப்புடன் வந்து விடுவேன்....

பாய் வீட்டு கல்யாணம் நன்றாக பிரியானி தின்னும் மூடில் போய் இருப்பேன்...எல்லோருக்கும் தட்டு தட்டாய் நண்பர்கள் மூலம் பாஸ் செய்யப்பட்டு பிரியானி தட்டை இலையில் கவிழ்ப்பார்கள்... பக்கத்து இலையில் பார்த்தால் நல்ல பீஸ் நிறைய இருக்கும். என் இலையில் கொழுப்பும், எலும்பும் ஒன்று சேர்ந்து, மே மே மே என்று கத்தி என் வயிற்று எரிச்சலை கொட்டிக்கொள்ளும்....

சரி இதெல்லாம் விடுங்கள் தலைவாழை இலையில் சாப்பிடுவது, ரொம்ப பிடிக்கும்..எனக்கு மட்டு்ம்பந்தியில் குட்டி இலை வந்து மெல்லிய பூன்னகை பூக்கும்.. சில நேரத்தில் கிழிந்த இலைகள் கூட வரும்....

ஹோட்டலில் ரூம் எடுத்து தங்கினால் எல்லோருடைய ரூம் டிவியும் ஒழுங்காக
இருக்கும் என் ரூம் டிவியில் மட்டும் கோடுகோடாக படம் தெரியும்...

ஆம்னி பஸ்சில் நல்லபடம் போடுவார்கள் என்று நினைத்தால் நம்ம நேரம் அன்று எதாவது ராமராஜன் படத்தை போட்டு வைப்பார்கள்....

பேருந்தில் பக்கத்து இருக்கை காலியாக இருக்கும் போது, ஒரு பாட்டியும் பேத்தியும் சீட் தேடி என் பக்கத்தில் வரும் போது,எப்படித்தான் அந்த சித்து வேலை நடக்கும் என்று தெரியாது, பாட்டி கையில் என்பக்கத்தில் இருக்கும் இருக்கை எண் கொண்ட டிக்கெட்டை வைத்து இருக்கும்.... தேவுடா....

இப்படி எழுதி கொண்டே போகலாம்... ஆனால் இது போன்ற விஷயங்கள் எப்போதாவதுதான் நடக்கும் அடிக்கடி நடந்தால் அவ்வளவுதான்.... நல்ல மந்திரவாதியை பார்க்க போய் இருப்பேன்....இல்லையென்றால் கடைசிகட்டமாக அண்ணன் உண்மை தமிழன் போல எம்பெருமான் முருகப்பெருமானை துணைக்கு அழைப்பதை தவிர வேறு வழியி்ல்லை....

இது முழுக்க முழுக்க நகைச்சுவைக்காக எழுதப்பட்டது.... இரவில் தூக்கத்தை கண்ணில் வைத்து டைப் அடிப்பதால் ஏதேனும் எழுத்து பிழை இருந்தால் பொறுத்தருள்வீராக.... உங்களுக்கு இது போல் நடந்து இருந்தால் பின்னுட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்...

அன்புடன்/ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....

சாண்ட்விச் அன்ட் நான்வெஜ் (03,08,09)

ஆல்பம்....

நேரம் என்பது என்ன தெரியுமா?
வீட்டில் வெட்டி ஆபிசராக உட்கார்ந்து கொண்டு ஒரு நாளைக்கு 3 பதிவுகள் 4 பதிவுகள் போட்டபோதெல்லாம், தமிழ்மண நட்சத்திர பதிவராக அழைக்கும் மெயில் எனக்கு வரவில்லை... இப்போது காலையில் 5,30க்கு போனால் இரவு 8,30க்குதான் வீடு வரும் அளவுக்கு பெண்டு கிழியும் வேலை... இப்போது தமிம்ண நட்சத்திர பதிவராக எழுதும் வாய்ப்பு கிடைத்து இருக்கின்றது.... என்ன செய்வது இதுதான் நேரம் என்பது.....ஆனால் ஒரு நாளைக்கு ஒரு பதிவு நிச்சயம்..... கடவுளின் கருனையும் நேரமும் கிடைத்தால் மேலும்....

நீயா நானாவில் தான் கலந்து கொண்டு தனக்கு பணமுடிப்போ அல்லது பரிசுமுடிப்போ, கொடுக்கின்றேன் என்று சொல்லி ஏமாற்றிய கதையை எழுத்தாளர் சாரு வருத்தப்பட்டு விகடனில்எழுதி இருந்தார்... அதற்க்கு நீயா நானா தயாரிப்பாளர் இயக்குநர் ஆண்டனி, பிரபலங்கள் யாருக்க பண முடிப்பு கொடுப்பதில்லை என்றும், அவர்களுக்கு பணம் கொடுத்தால் அது செட் செய்ததது போல் ஆகிவிடும் என்று சொல்லிஉள்ளார்.... ஒரு இடத்திற்க்கு ஒரு பிரபலத்தை வரச்செய்து அவர்களை வைத்து ஷோவும் நடத்திவிட்டு ஏதும் கொடுப்பதில்லை என்று சொல்வதில் எனக்கு துளியும் உடன்பாடு இல்லை...நிச்சயமாக 3000 ரூபாய் மதிப்புள்ள எதாவது ஒரு பரிசுப்பொருளை அன்பளிப்பாக அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எல்லா பிரபலத்துக்கும் கொடுக்கவேண்டும் அதுதான் அந்த கலைஞனுக்கு செய்யும் மரியாதை... இந்த இடத்தில் சாரு அல்லாத வேறு எந்த பிரபலமாக இருந்தாலும் நான் வாதாடி இருப்பேன்... பிரபலம் என்பதாலும் அந்த கான்செப்டுக்கு அந்த பிரபலம் செட் ஆவார் என்றுதானே அழைக்கின்றீர்கள்... ரோட்டில் போகும் குப்பனையோ சுப்பனையோ அழைக்கவில்லையே.... சரி இதுவே ஒரு அனாதை ஆசிரமத்துக்கு நிதி திரட்ட போய் அங்கு பேசி எனக்கு எதுவும் கொடுக்கவில்லை என்று சொன்னால் அது அந்த பிரபலத்துக்கு இழுக்கு....

நீங்கள் அந்த நிகழ்ச்சிமூலம் வருமானம் பார்க்கின்றீர்கள்.... அதற்க்கு ஒரு கருவியாக பிரபலத்தை பயன்படுத்துகின்றீர்கள்....நீங்கள் கொடுப்பதை சில பிரபலங்கள் வாங்கவில்லையா?.... அது அவர்கள் பெருந்தன்மை... வந்த விருந்தினருக்கு கொடுப்பது உங்கள் கடமை அல்லவா?

விஜய் டிவியில் நீயா நானா, சமுக முன்னேற்றத்திற்க்காக இலவசமாகவா ஒளிபரப்பு செய்கின்றார்கள்???? அல்லது கோபி போன்றவர்கள்தான் இலவசமாக ஷோ நடத்தகிறார்களா?????

மிக்சர்....

நிறைய நண்பர்கள் படங்களின் லிஸ்ட் கேட்கின்றார்கள், நேற்று கூட தமிழ் படங்களின் லிஸ்ட் வேண்டும் என்று மெயில் அனுப்பியிருந்தார் நண்பர் ஒருவர்....நான் பார்த்த பல படங்கள் உலக படங்கள்,அந்த படங்களை உலக படவிழாக்களில் பார்த்து, அதன் டிவிடிக்கள் உங்களுக்கு கிடைக்காது ரொம்ப ரேர்... எப்போதோ பார்த்த படங்களை நினைவில் வைத்து நெட்டில் அலசி ஆராய்ந்து எழுதுகின்றேன் அவ்வளவே....இதுவரை அறிமுகப்படுத்திய படங்களின் லிஸ்ட் லேபிளில் இருக்கின்றது.... படித்து பயன் பெறவும்.....

விளையாட்டு இல்லாத நேரங்களில் 3 மணி நேரத்துக்கு ஒரு முறை தாங்கள் எங்கு இருக்கின்றோம் என்பதை கிரிக்கெட் வீரர்கள் சொல்ல வேண்டும் எனபதெல்லாம் ரொம்ப ஓவர் நீங்கள் என்ன சொல்லுகின்றீர்கள்....


விஷுவல் டேஸ்ட்.... நான் எடுத்ததில் பிடித்தது......

சென்னையில் கோயம்பேட்டில் ஒரு மாலைநேரப்போழுது.....

பரிணாமத்தின் வளர்ச்சிதான் இந்த காட்சி, என்ன அச்சம் என்பது மடமையடா என்று குதிரை வண்டி ஓட்டி ,பாடும் பாக்கியத்தை இழந்ததுவிட்டோம் நாம், என்ன செய்ய.....

ஊட்டி ஏரிக்கு எதிரே கேரட் விற்க்கும் மலைவாசிபெண்....

சின்ன சின்ன ஆசை.... ஊட்டியில் குதிரை மீது அமர்ந்து போஸ் கொடு்க்கும் இளைஞனும் அவன் ஆசையை சட்டத்திற்க்குள் பதிவு செய்ய முயற்ச்சிக்கும் குதிரை ஓட்டியும்.....( படங்களை கிளிக்கி பெரிதாக பார்க்கவும்)


நான்வெஜ்.....

நைட் ஷீப்டுக்கு போய் உடல்நிலை சரியில்லாமல் உடனே வீடு வந்த கணவன் மனைவியிடம் சொன்னான்... யார் போன் செய்தாலும் நான் வீட்ல இல்லைன்னு சொல்லு என்றான்... அவன்சொல்லி முடிச்ச அடுத்த செகன்ட் போன் வந்தது டிரிங் டிரிங் என்று, அவள் போன் எடுத்தாள்....ஹலோ, அவர் இருக்கார் என்று சொன்னாள்.... கணவன் கோபத்துடன் சன்டாளி ஏன்டி அப்படி சொன்னே? என்று கேட்டான் அதற்க்கு அவள் சொன்னாள் அது என் லவ்வர் என்று.....

பரிணாம வளர்ச்சி....
17ம் நூற்றாண்டில் தாய் மகனுக்கு சொன்னாள், நம்ம ஜாதியிலேயே பொண்னை கல்யாணம் பண்ணிக்கோ என்றாள்...18ம் நூற்றாண்டில் நம்ம மதத்து பொண்னா பார்த்து கல்யானம் செய்துக்கோ என்றாள்.19 ம்நூற்றாண்டில் நம்ம அந்தஸ்த்துக்கு குறைவில்லாத பொண்ணை கல்யாணம் செய்துக்கோ என்றாள்...20 நூற்றாண்டில் நமது நாட்டு பெண்ணையே கல்யாணம செய்துக்கொள் என்றாள்....21 ம் நுற்றாண்டில் தாய் தன் மகனிடம் கெஞ்சுகின்றாள் எதுவா இருந்தாலும் பரவாயில்லை தயவு செஞ்சு பொம்பளை புள்ளய கல்யாணம் செய்துக்கோ என்று......
மேலுள்ள பரிணாம வளர்ச்சி ஜோக்குக்கும் இந்த படத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை நண்பர்களே...

நேற்று பிரண்ட்ஷீப்டே அதற்க்காக ஒரு பஞ்ச்....

காதல் என்பது காக்கா சுட்ட வடை மாதிரி, ஒழுங்காக பாத்துக்கலைன்னா காக்கா தூக்கிட்டு போயிடும்.... ஆனா நட்பு என்பது அந்த வடை சுட்டஆயா மாதிரி எவனும் தூக்கிட்டு போகமாட்டான்...


அன்புடன்/ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....

என்னை பற்றி ஒரு சிறு அறிமுகமும், நன்றிகளும்....

தமிழ்மணம் நட்சத்திர பதிவராக என்னை தேர்ந்து எடுத்து இருக்கின்றது,என்னை பற்றி தெரியாதவர்களுக்கு ,
என்னை பற்றிய ஒரு சிறிய அறிமுகம்....

பெயர்... ஜாக்கிசேகர்.... இயற்பெயர்/வ. தனசேகரன் ...வயது 34
தொழில்..கேமராமேன்,போட்டோகிராபர்...
கடந்த 4 வருடங்களாக சென்னை இந்துஸ்தான் கல்லூரியில் எலக்ட்ரானிக் மீடியா, விஷுவல் கம்யூனிகேஷன் மாணவர்களுக்கு “வீடியோகிராபி டெக்னிக்ல் இன்ஸ்டெக்டராக” பணி புரிந்தேன்... தற்போது பெரிய திரையில் கேமராமேன் ஆக முயற்ச்சி செய்து கொண்டு இருக்கின்றேன். எனக்கு சினிமா மீதான காதல் சிறு வயது முதலே. அதில் மிகப்பெரிய கேமராமேனாக , சாதிக்க வேண்டும் என்பதே எனது லட்சியம். பெரிய அளவிலான இலக்கிய வாசிப்புகள் கிடையாது.... சமுககோபங்களை எனக்கு என் அம்மா ஊட்டி வளர்த்தால்...சில மாதங்களுக்கு முன்தான் எனக்கு திருமணம் நடந்தது.. வசிப்பிடம் சென்னை. எனக்கு சொந்த ஊர் கடலூர்...இப்போது மதுரை காமராஜர் தொலைதூரக்கல்வி அஞ்சல் வழி மூலம் எம் ஏ மாஸ் கம்யூனிக்கேஷன் ஜெர்னலிசம் கடைசி வருடம் படித்து வருகின்றேன்....

நன்றிகள்....

கம்யூட்டரில் தமிழ் எழுத்துக்கள் எழுதி அதனை படிக்க முடியும் என்பதே எனக்கு சில வருடங்களுக்கு முன்புதான் தெரியும்... எனக்கு பதிவுலகை அறிமுகப்படுத்திய நண்பர் நித்யகுமாரனுக்கு என் நன்றிகள், அவர்தான் எனக்கு பிளாக்கரில் கணக்கு தொடங்கி கொடுத்தவர்...
பெரிய அளவிலான வசிகரிப்பான எழுத்து என்னுடையதில்லை என்பது எனக்கே நன்றாக தெரியும்... என்னை விட இலக்கிய வாசனையோடு எழுதுபவர்கள் பார்த்து பொறாமை கொண்டுள்ளேன் . இருப்பினும் என் எழுத்து மேல் நம்பி்கை வைத்து என்னை நட்சத்திர பதிவராக தேர்ந்து எடுத்த தேர்வு குழு உறுப்பினர்களுக்கும், தமிழ்மண நிர்வாகத்துக்கும் மீண்டும் என் இதயம் கனிந்த நன்றிகள்....

என் முதல் பதிவை இப்போது நினைத்து பார்க்கின்றேன் அதனை உங்களுக்காக கீழே கொடுக்கின்றேன்...

சமர்பணம்

கிராமத்தில் பிறந்த எனக்கு கனிப்பொறியும் ,வானவியலும் கற்றூ கொடுத்த ஏகலைவன், கற்றதும் பெற்றதுமில் நான் பெற்றதே அதிகம், ஏன் எதற்க்கு எப்படி படிக்கவில்லை எனில் இன்னும் நான் கோவில் கோவிலாக அலைந்து கொண்டுஇருப்பேன் ,ப்த்தாம் வகுப்பு படித்த நான் blog எழுத இவரே காரணம் என் எழுத்தையும் ஆசிர்வதிப்பார் என்ற நம்பிக்கையுடன் , அன்புடன் / ஜாக்கி சேகர்

மேலுள்ளதுதான் என் முதல் பதிவு அந்த பதிவை அடித்து முடிப்பதற்க்குள் மேல் மூச்சு கீழ் மூச்சி வாங்கிவிட்டது.... எப்படி தமிழில் அடித்து எழுத போகின்றோம் என்ற மலைப்பு என்னுள் எழுந்தது... கடவுள் கிருபையால் இப்போது தேவலாம்.... ஆனாலும் எழுத்து பிழைகள் இருக்கின்றன....பதிவை அலசி ஆராய்ந்து போடும் அளவுக்கு நேரமின்மையும் ஒரு காரணம்... எல்லாம் பொறுத்து என்னை ஆதரிக்கும் உங்களுக்கு என் நன்றிகள்

277 பதிவு இதுவரை எழுதி விட்டேன், தொடர்ந்து என் எழுத்துக்களை வாசித்து பி்ன்னுட்டம் இட்டு என்னை தொடர்ந்து என்னை உற்சாகபடுத்தும் முகம் தெரியாத அனைவருக்கும் என் நன்றிகள் பல...

பொதுவாய் பல விஷயங்களை பற்றி எழுதுவதுதான் எனக்கு பிடிக்கும், அப்படிம்தான் எனது தளம் இயங்கி வந்தது... ஆனால் உலக படங்கள் எழுத எழுத நிறைய பேர் என்னை உற்சாக படுத்துவதால் சினிமா பற்றிய விஷயங்கள் கொஞ்சம் தூக்கலாய் இருக்கும்...

எனக்கு தொடர்ந்து என் எழுத்துக்களை வாசித்து வரும் 146 பாலோயர்களுக்கும், உடனுக்கு உடன் பின்னுட்டம் இட்டு உற்சாகபடுத்தும், நையாண்டிநைனா,ஜமால்,கலையரசன்,சூரியன்,ஸ்டார்ஜன்,ஸ்ரீ,தன்டோரா,கேபிள் ,நித்யகுமாரன்,மங்களுர் சிவா,ஜெட்லி புதுவை சிவா, வால்பையன், விக்னேஷ்வரன்,கிரி,வந்தியதேவன், வழிப்போக்கன், ராஜா கேவிஆர்,கார்த்திகை பாண்டியன்,பிரிதீப் பாண்டியன்,ராஜராஜன், சரவணகுமரன், வண்ணத்து பூச்சி,பிஸ்கோத்து பயல், இந்த பதிவால் ,என் எழுத்தால் ஈர்க்கப்பட்டு எனக்கு நல்ல நட்பான பெண்மணி(பெயர் வேண்டாமே) போன்றவர்களை இந்த நேரத்தில் நினைவு கூறுகின்றேன்... சில பிரச்சனைகளின் போது ஒரு மூத்த பதிவராய் எனக்கு அட்வைஸ் செய்த லக்கி லுக்குக்கும் இந்த நேரத்தில் நான் நன்றி சொல்கின்றேன்...இதில் பலர் தளங்களுக்கு நான் சென்று வாசித்தது கூட இல்லை....இவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் பல... இது போன்ற நண்பர்களால்தான்,அவர்கள் கொடுக்கும் உற்சாகத்தால்தான், நான் தூங்கும் நேரத்தை குறைத்து கண்களில் தூக்கத்தை மிச்சம் வைத்து எழுதி கொண்டு இருக்கின்றேன்....

மீண்டும் உங்கள் எல்லோருக்கும் என் இதயங்கனிந்த நன்றிகள் வரும் பத்தாம் தேதி வரை தமிழ்மண முகப்பில் சந்திக்கின்றேன்....

அன்புடன்/ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....


அயன் படத்தின் கதை சுடப்பட்ட கதையா?


தியேட்டரில் அயன் படம் பார்த்தது விட்டு வெளியே வந்ததும் எனக்கு தோன்றிய விஷயம் அயன் படம் கேட்ச்மீ இப் யூ கேன் என்ற ஆங்கில படத்தின் தழுவல் என்று படம் பார்த்த உடன் எனக்கு தோன்றியது...இதற்க்கு முன் கேவி ஆனந் இயக்கிய கனாகண்டேன் படம் என்னை பொறுத்தவரை எந்த தவறும் இல்லாத நீட் பிலிம் என்பேன்...

அந்த படம் பார்த்த பின்பு நான் அந்த படத்தின் கதைவசனக்கர்த்தாக்களும், எனது நண்பர்களுமான சுபா அவர்களுக்கு கைபேசியில் தொடர்பு கொண்டு பாராட்டுகளை தெரிவித்தேன்... அந்த படத்தின் சில முக்கிய காட்சிகளை நான் பாராட்டிக்கொண்டு இருந்த போது, அப்போது அவர்கள் ஏன் இந்த விஷயத்தை நீங்கள் இயக்குனரிடம் பகிர கூடாது என்று கேவி நம்பர் கொடுத்தார்கள்... அதன் பிறகு கேவி ஆனந்திடம் ஒருமணிநேரம் பேசிய போது,நான் உழைத்து எடுத்த காட்சிகளை பாராட்டிய ஒரு சிலரில் நீங்களும் ஒருத்தர் என்றார்...

அதன் பிறகு உலகபடவிழாவில் கேவி ஆனந்தை, சுபா ஆவர்களுடன் பார்த்து பேசி இருக்கின்றேன்..அவரின் முதல் படத்தை பற்றி நிறைய பேசி இருக்கின்றேன்.. அந்த படத்தில் பிருத்திவிராஜ்ன் நடிப்பும், அழகாய் டிசன்டாக இருப்பவர்கள் எல்லாம் நல்லவர்கள் இல்லை, என்ற இமேஜை உடைத்த படம் அது ... அதே போல் காதல் கனிந்த உடனேயே செக்ஸ் வைத்துக்கொள்வார்கள்... கல்யாணத்துக்கு அப்புறம்தான் எல்லாம் என்று காலம்காலமாய் தமிழ் சினிமா டயலாக்கை மாற்றிக்காட்டியவர்... இதற்க்கு முன்பு அந்த காட்சிகள் மற்ற படத்தில் கையாண்டாலும், அந்த காட்சி ஜோடனை வெகு இல்லாமல் இயல்பாய், மிகுந்த காதலாய் இருக்கும்...

அப்புறம் கேவி ஆனந்தை, நான் தொடர்பு கொள்ளவில்லை... அயன் படம் வந்த பிறகு பேசலாம் என்று இருந்தேன்..படம் பார்த்த எனக்கு சற்று வருத்தம்... கேட்மீ இப்யூ கேன் படத்தின் தழுவல் என்பது படம் பார்த்ததும் எனக்கு தெரிந்து போனது நான் மறுநாள் காலை சுபாவுக்கு போன் செய்தேன்

“ சார் நான் நேத்து அயன் படம் பார்த்தேன் அது கேட்சு மீ இப் யூ கேன் படத்தை பார்த்து எடுத்து போல இருக்கே என்று கேள்வி எழுப்ப... அதற்க்கு அவர்..நேரில் வீட்டுக்கு வாருங்கள் சிலது பேச வேண்டும் என்று சொன்னார்...நானும் நேரம் கிடைத்த போது சென்றேன் அப்போது., நாங்கள் கேச்மீ இப் யூ கேன் படம் வருவதற்க்கு முந்தியயே,நாங்கள் மாலைமதி இதழில் மாடிப்படி குற்றங்கள் என்ற கதையின் அடிப்படையே அயன் படம் என்றார்கள்...

அந்த கதையை கொடுத்து படிக்க சொன்னார்கள் ஒரு ஜகஜால கில்லாடியான திருடன் எப்படி காவல் துறையில் சேர்கின்றான் என்பது போல கதை முடிந்து இருந்தது... அதற்க்கு முன் இதே போல் இந்தியாவில் நடந்த பதிதிரிக்கை செய்தியையும் அவனை பற்றிய தகவல்களை ஆராய்ந்து எழுதபட்ட கதைதான் அது. கேட் ச்மி இப் யூ கேன் படம் எங்கள் கதையை ஒத்து இருப்பதாக மாலை மதி நிர்வாகத்திடம் இவர்கள் சொல்லி,மாலைமதி நிர்வாகம் கேட்ச் மீ இப் யூ கேன் படக்குழுவினரை தொடர்பு கொண்டு கேட்க, ஸ்பில்பெர்க் அவர்கள், அதே கில்லாடி போல,அமெரிக்காவில் நடந்த உண்மை சம்பவங்களின் அடிப்படையில் எடுத்தோம் என்றார்களாம்.... ஆனால் நான்தான் தவறாக நினைத்து விட்டேன்... பாலாவிடம் சாரி கேட்டேன்...பரவாயில்லை , நடிகர்சூர்யாவே அப்படித்தான் நினைத்தார் அப்புறம் நாங்கள் இந்த கதையை சொல்லி படிக்க கொடுத்த பின்பே ஒத்துக்கொண்டார் என்றார்கள்....அதே போல் கமர்சியலுக்காக மரியா புல் ஆப் கிரேஸ் படத்தின் மெயின் விஷயத்தை இந்த படத்தில் சென்டிமென்டாக பயன் படுத்திக்கொண்டார்கள்.....

ஏதாவது பழைய புத்தக கடையில் சுபா அவர்கள் மாலைமதியில்எழுதிய மாடிப்படி குற்றங்கள் புத்தகம் கிடைத்தால் வாசித்து பாருங்கள்.....நான் சொல்வதன் அர்த்தம் உங்களுக்கு புரியும்


அன்புடன்/ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner