ஊட்டி மலை ரயில் ஒரு பார்வை, ஊட்டி ரயில் டிரைவரின் சோகம்???



பாரம்பரிய ஊட்டி மலைரயிலில் பயணம் செய்வது என்பது மிகவும் கொடுத்து வைத்த விஷயம் என்று அனைவரும் சொல்லுவார்கள் நான் ஊட்டிக்கு பல முறை சென்றாலும் மலை ரயில் பயணம் இது வரை சாத்தியப்பபட்டதில்லை. அதற்க்கு காரணம் அதற்க்கு முன்பே ரிசர்வ் செய்ய வேண்டும் என்பதால் அது நடுத்தர குடும்பமான எனக்கு சாத்தியம் இல்லாத விடயம்.

கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு வந்து பஸ் ஏறினால் மட்டுமே என் பயணம் சாத்தியப்படுவதாக அர்த்தம் அது வரை அந்த பிளான் ஜெயலலிதா ஈழ ஆதரவு போல் தெளிவில்லாமல் இருக்கும். இந்த முறை நான் குடும்பத்துடன் ஊட்டியில் இருந்ததால் அது சாத்தியப்பட்டது .

“சார் ரிசர்வ் இல்லாத ஓப்பன் டிக்கெட் கிடைக்கும் ஒரு 50 டிக்கெட் வரை கவுன்டர்ல கொடுப்பாங்க”

நீங்க வரிசையில நில்லுங்க உங்க லக் கிடைச்சாலும் கிடைக்கும் என்ற அந்த ஊர் ஆட்டோ டிரைவர் சொல்ல என் லக்கை சோதித்தேன் லக்கில் டிக்கெட் கிடைத்து . ஊட்டி டூ குன்னுர் டிக்கெட் எடுத்தோம் ஒரு டிக்கெட் விலை வெறும் 3 ரூபாய் மட்டுமே இதில் கொடுமை என்ன வென்றால் பிளாட்பார்ம் டிக்கெட் அதே மூன்று ரூபாய்தான்...

நான் எப்போதுமே எந்த ஊர் சென்றாலும்அந்த ஊரின் ஆட்டோ டிரைவ்ர் பொதுஜனம் போன்றவர்களிடம் எனக்கு எழும் சந்தேகங்களை தயங்காமல் கேட்பேன்.அப்போதும் பல சுவாரஸ்யமான உண்மைகள் வெளி வரும்.

எல்லோரும் ரயிலில் ஏற முண்டியடித்து கொண்டு இருக்கும் போது நான் ரயில் டிரைவரிடம் பேச்சு கொடுத்தேன், ஏனென்றால் மக்கள் எல்லோரும் மிக ஆவலாக பயணம் செய்ய இருக்கும் ரயிலை ஓட்டும் டிரைவரிடன் மன நிலை எப்படி இருக்கும் என்று பேச்சுக்கொடுத்தேன் , அவரிடம் பேச வேறு காரணமும் உண்டு . நான் பள்ளியில் படித்த போது பெரியவர்களாக மாறியதும் என்ன வேலைக்கு போவிர்கள் என்ற அரத பழசான கிராமத்து கேள்வியை எங்கள் முன் ஆசிரியர் கேட்ட போது நான் தயங்காமல் சொன்ன வேலை ரயில் என்ஜீன் டிரைவர் ஆக வேண்டும் என்பதுதான். அது என் கனா, வாழ்வின் மிகப்பெரிய லட்சியம் ஆனால் கால ஓட்டத்தில் அந்த லட்சியம் கரைந்தோடி விட்டது.

ஊட்டி ரயில் டிரைவர் சோகம் இங்கே...
உலகத்துல கொடுமையான வேலைன்னா அது இந்த மலை ரயிலை ஓட்டறதுதான் இப்ப நான் குன்னுர் போறேன் திரும்ப சரியான நேரத்துக்கு திரும்ப வருவன்னு சொல்ல முடியாது, சில நேரத்துல நிறைய மழை பேஞ்சு பாறை டிராக்ல சரிஞ்சு கிடைக்கலாம்,


இதோ இந்த பயோ என்ஜீன் திடிர்னு மக்கார் பண்ணலாம், திடிர்னு கூட்டமா காட்டு விலங்குகள் டிராக்கை வழிமறிச்சு நகராம நிக்கும், அதனால இந்த வேலை ரொம்ப கொடுமையானது சார் அது மட்டும் இல்லாது எல்லா பயணிகளின் பாதுகாப்பு ரொம்ப முக்கியம் இவங்களை எல்லாம் கொண்டு போய் பத்திரமாய் சேர்க்கும் வரை எனக்கு டென்ஷன்தான் என்று, பீலிங்கை என்னிடத்தில் கொட்டினார். பெயர் போட்டோ வெளியயிடக்கூடாது என்ற கன்டிஷன் வேறு...

எல்லாவற்றையும் விட கொடுமை எந்த ஸ்டேசன்லியும் வண்டியை நிறுத்திட்டு ஒன்னுக்கு கூட போக முடியலை. வியாசர்பாடி சென்டரல் ஸ்டேசன்ல ஒரு கேனை வண்டியை கடத்தி போய் இடிச்சாலும் இடிச்சான், எங்கலை வண்டியை வீட்டு டீக்கூட குடிக்க போக கூடாதுன்னு சொல்லறாங்க.. இவ்வளவு ஏன் வண்டியை விட்டு எறங்கவே கூடாதுன்னு சொல்லறாங்க...
நீங்க சொல்லுங்க குளிர்ல அடிக்கடி உச்சா வேற வந்து தொலையுது, எங்களுக்கு என்ஜீன்ல டாய்லட்டா கட்டி கொடுத்து இருக்காங்க? நியாமான கேள்வி பதில் பேசாமல் அவர் பரிதாப முகத்தை பார்த்து கொண்டு இருந்தேன். இதைதான் எங்க ஊர்ல தென்னை மரத்துல தேள் கொட்டனா, பனமரத்துல நெறிக்கட்ம்னு சொல்லுவாங்க... ரயிலை கடத்துனது சென்னைசென்ட்ரல்ல அது ஊட்டி டிரைவர் ஃபரியா உச்சா போறதை தடுக்குது இது தான் நியுட்டன் முன்றாவது விதியா????

நமக்கு ஒரு எண்ணம் எப்போதும் இருக்கும் பிரபல நடிகை அல்லது நடிகரை பார்க்க நாம் முன்டியடித்து கொண்டு இருப்போம் ஆனால் அவர் அவரின் கார் டிரைவரிடம் சகஜமாக தோளில் கை போட்டு பேசுவார், ச்சே அந்த டிரைவர் எவ்வளவு சந்தோசமா? இருப்பார்னு நாம நினைச்ச அது முட்டாள்தனம்தான். பிரபல நடிகை அல்லது நடிகர் கொடுக்கிற ஓத்தாம்பட்டு அவனுக்குதான் தெரியும். அதுபோல்தான் ஊட்டி ரயிர் என்ஜீன் டிரைவர் நிலையும்.

ரயில் நிலையத்தில் வரிசையில் நிற்க்க வைத்தார்கள் அதனால் நிறைய பேரின் கைக்குட்டைக்கும், ஹென்ட் பேகுக்கும் அவசியம் இல்லாமல் போனது. ரயில் வந்தது. கூட்டம் நின்ற கொண்டு பயணித்தது. குகை வரும் போது விளக்கு எறிந்து பெட்டி இருட்டாகி பின்பு குகைவிட்டு வெளிச்சம் வந்த போது ரயி்லில் குழந்தைகளின் சத்தம் காதை பிளந்தது.

எனக்கு அப்படி ஒன்றும் ஊட்டி மலை ரயில் ஈர்க்க வில்லை. ஒரு வேளை பன்னிரன்டு வயதில் ஊட்டி ரயிலில் ஏறி இருக்க வேண்டுமோ?????

பதிவர் சந்திப்பும், குட் டச் பேட் டச் பற்றிய கருத்தரங்கமும்....(நிழற்படங்களுடன்)


something is better than nothing என்று சொல்லுவார்கள் அதாவது எதவுமே செய்யாமல் வெட்டியாக இருப்பதை விட எதையாவது செய்யுங்கள் என்பதே மேலுள்ள ஆங்கில வாக்கியத்தின் தமிழாக்கம். ஒன்னு வீரப்பன் போல மாறு இல்லை அப்துல்கலாம் போல மாறு அல்லது எதாவது செய் ஆனால் ஏதும் செய்யாமல் இருக்காதே...

இதுவரை நான் கலந்து கொண்டது வரை பதிவர் சந்திப்பு கும்மி, அரசியல், போட்டோ ,மெரினா லைட்ஹவுஸ் டீக்கடை,நீங்கதான் ஜாக்கியா? என்ற வினாவுடனான முகங்கள்,சிகரேட், டீ, மானிக்சந்த், உலக சினிமாக்கள், இடஒதுக்கிடு, பிராமனதுவேஷம்,ஜெயலலிதா, கருணாநிதி அரசியல் நிலைப்பாடு போன்றைவைகளோடு பொதுவாக இதுவரை நான் கலந்து கொண்ட பதிவர் சந்திப்புகள் நடந்து முடிந்து இருக்கின்றன.. கவனிக்கவும் நான் கலந்த கொண்ட...

ஆனால் இந்த சந்திப்பு சற்றே வித்யாசமாக இருந்தது, பதிவர் சந்திப்பு ஆரம்பித்து 15 நிமிடத்தில் உத்தி பிரிந்து சின்ன சின்ன குழுவாக மாறி மெரினா டீக்கடை சென்று கலைந்து போகும் அந்த வகையில் இந்த பதிவர்சந்திப்பை பாராட்டலாம்.
வந்த 50 பேரும் எங்கும் நகரவில்லை மூன்று மணிநேரம் கூட்டம் கலையாமல் அமைதி காத்தது...

நல்ல பச்சை பேக்குரவுண்டுடன் மைக் செட் எல்லாம் அமைத்து கொடுத்து, நடுவில் காரசேவ், காபி,ஸ்விட் மற்றும் இலவச புத்தகங்க்ளை யும் கொடுத்து அதற்க்கு மேல் கிழக்கு பதிப்பக மொட்டைமாடியை கொடுத்த பத்ரி சாருக்கு என் நன்றிகள்.

குழந்தைகளிடம் எப்படி பெரியவர்கள் நடந்து கொள்வது, அதுவும் 9 வயதிலிருந்து 13வயது அதாவது அவள் பருவம் எய்துவது வரை அவளை சில கயவர்களிடம் எப்படி காப்பது என்று கருத்தரங்கு நடந்தது.

கருத்தரங்குக்கு டாக்டர் ஷாலினி மறறும் டாக்டர் ருத்ரன் தலமை தாங்கி வாசகர்கள் ஐயப்பாட்டையும் ஆழ்ந்த கருத்துக்களையும் சகித்து ஏற்று பதிலலித்தனர். பெண்பதிவர்களா? அல்லது வாசகர்களா என்று தெரியவில்லை, முதன் முறையாக 33பர்சென்ட் இடத்தை அடைத்து கொண்டு இருந்தனர்.

பொதுவாக எந்த பிரச்சனையையும் குழந்தைகளுக்கு கதைகள் முலமாவே சொல்ல வேண்டும் என்று இருவரும் சொன்னார்கள். பொதுவாக இருவரின் அளுமையும் எனக்கு பிடித்து இருந்தது. ஒரு நண்பன் போலே இருவரும் உரையாடினார்கள்.

எந்த இடத்திலும் தான் என்று அகந்தை கிஞ்சித்தும் எட்டிப்பார்க்கவில்லை உதாரணமாக டாக்டர் ஷாலினி 15 நிமடம் பேசிய கருத்துதனக்கு ஏற்புடையதல்ல என்ற பதிவர் பைத்தியக்காரன் மறுதலித்தார் , டாக்டர் ஷாலினி ரொம்ப கூலாக டென்ஷனாகாமல் பரவாயில்லை சார் நீ்ங்க கண்டுபிடித்து விட்டீர்களே என்று அந்த கேள்விக்கு முற்றுப்புள்ளி வைத்தார்..கிஞ்சித்துத் தன் கருத்து சரியென்று வாதாடவில்லை.

பல பதிவர்க்ளின் கேள்விகள் சிறுபிள்ளைதனமாக இருந்தாலும் அது அவர் அவர் கருத்தாக எடுத்துக்கொன்டேன். மற்றபடி இந்த சந்திப்பு மிகுந்த மன மகிழ்வை தந்தது.

நான் புகைப்படம எடுக்கும் போது என் வலைதளத்தில் ஓப்பன் செய்ய முடியவில்லை என்றும் அதில் வைரஸ் இருப்பதாகவும் அது என் தமிள் எச்டிஎம்மளை எடுத்து விட சொன்னார்கள். எடத்து விட்டேன் அப்படி ஏதாவது பிரச்சனை என்றால் dtsphotography@gmail.com என்ற எனது வலை முகவரியில் தயவு செய்து தெரிவிக்கவும்.

டெக்னிக்கல் விஷயங்களை என்க்கு எப்போதும் போதிப்பவர்கள் நட்டு போல்டும் அக்னி பார்வையும்தான்.

அதிஷா வந்த பதிவர்களிடம் பெயர் மற்றும் இமெயிலை டோண்டு சார் போல எழுதி வாங்கி கொண்டு இருந்தார். சந்திப்பில் நடந்த கேள்விபதில்கள் சாரம்சம் ஒரு வரி விடாமல் தெரிய

Good touch, bad touch


நம்ம பதிவர் டொண்டு சார் விடிய விடிய கண்விழித்து எழுதிய பதிவை படித்த பயன் பெறவும். தண்டோராவை தனியாக படம் எடுத்து அவர் ஆசையையும் கேபிள் ஆசையையும் நிறைவேற்றினேன்.

பொதுவாக பெண்கள் இருந்ததால் நான் படம் எடுக்க தவிர்த்தேன் அப்புறம் செறங்கு சொறிஞ்ச கையும் கேமரா பிடிச்ச கையும் சும்மா இருக்குமா? அப்புறம் பர பரன்னு நம்ம வேலையை காட்டிட்டேன்.

சரி முக்கிய சில போட்டோ எடுத்துட்டமே என்று கேமராவை உள்ளே வைத்தால் சால்வை போர்த்துவதை படம் எடுக்க லக்கி கேட்டுக்கொண்டார் படம் எடுத்துதேன், பெயர் போடவில்லை அதற்க்கு நேரம் இல்லை, பெயர் போட்டர்ல் எல்லா பெயரையும் போட வேண்டும். அடுத்த முறை பதிவர் சந்திப்புக்கு இது போல் என் கேமராவை எடுத்து போய் பெயரோடு படம் போடுகிறேன்...

விழா முடிவில் ருத்ரன் சார் சொன்னார் உங்களை எல்லாம் வலைதளத்தில் பார்ப்பதை விட உங்களை உணர்வு பூர்வமாய் நேரில் பார்க்கும் போது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக சொன்னார்... அந்தத கூற்றில் இருந்த உண்மையை என் மணம் அசைப்போட்டபடி என் வாகனத்தை எடுத்து பெருங்களத்துரில் அவள் அத்தை வீட்டில் மொக்கை போட்டுக்கொண்டு இருந்த என் மனைவியை அழைத்து வர கிளம்பினேன்.

அன்புடன் /ஜாக்கிசேகர்

மிரண்டு போன கடவுள் ??? பெண் பதிவர்கள் மன்னிக்கவும்...


உண்மை தமிழன் போன்ற ஒரு கேரக்டர் கடவுளிடம் அதாவது அப்பன் முருகனிடம் மனம் முருக வேண்டி வரம் கேட்டது.
அதுவும் ஒருநாள் இல்லை இரண்டு நாள் இல்லை ஒருவாரம் அப்பன் முருகனை விடாமல் டிஸ்டர்ப் செய்து அல்லது இம்சை கொடுத்து அப்பன் முருகனிடம் அப்பாயிண்ட்மெண்ட் கேட்டது...

முருகன் தலைவர் கலைஞர் போன்று ரெண்டு பொண்டாட்டிகாரர் ரொம்பவும் பிசி வேறு அது மட்டும இல்லாமல் பெண்களின் மன ஆழங்களை நன்றாக அறிந்தவர்.

உத கேரக்டர் தவ வலிமையை மெச்சி ஒரு நாள்

உத கேரக்டர் எதிர்பாராத வகையில் அப்பன் முருகன் எதிரில் வந்து உட்கார்ந்தார். கேள் பக்தா உன் ஆசை எதுவாயினும் அதை நிறைவேற்றுகிறேன் என்றார்.

உத கேரக்டர் ரொம்ப புத்திசாலிதனமாக கடவுளிடம் அவர் பவரை சோதிக்க எண்ணி எனக்கு அமெரிக்காவில் இருந்து சென்னைக்கு ஒரு ஒத்தையடி பாதை இருந்தா போதும் என்று வேண்டியது ...

அப்பன் முருகன் அப்செட்...

ரிசஷன் பிரியட்ல எதாவது நல்ல கம்பெனியில் வேலை வேண்டும் என்று கேட்காமல் இது போல் கேட்டது அப்பன் முருகனையே அப்செட்டாக்கியது..

சுதாரித்து கொண்ட முருகன் அது இப்போது சாத்தியப்படாது வேறு ஏதாவது கேள் நான் செய்கிறேன் என்று அப்பன் முருகன் பிராமிஸ் செய்தார்..

உத கேரக்டர் இந்த உலகத்தில் ஒரே ஒரு பையனை மட்டும் விரும்பும் படி ஒருபெண்ணை உங்கள் பவரை கொண்டு மாற்றுங்கள் என்று சொல்ல,

உடனே வேர்த்து வேலவேலத்து போன அப்பன் முருகன் மகனே உத உனக்கு அமெரிக்காவுல இருந்து சென்னைக்கு சிங்கிள் ரோடு வேண்டுமா? அல்லது டபுள் ரோடு வேண்டுமா? அல்லது நெஷனல் ஹைவேஸ் வேண்டுமா எது வேண்டுமானாலும் கேள் உடனே செய்கிறேன் என்று நெற்றி வியர்வையை துடைத்தபடி அப்பன் முருகன் சொன்னார்...


அன்புடன்/ஜாக்கிசேகர்

காம பதிவர்கள் (கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும்)


ஒரு பெண் சற்றே பெரிதான வயிற்றை வைத்துக்கொண்டு இரவு ஒன்பது மணிக்கு அவசரம் அவசரமாக பதிவர் புருனோ போன்ற ஒரு நல்ல மருத்தவரை பார்க்க போயிருந்தாள்...கண்களில் தாரை தாரையாக கண்ணீர்,வார்டு பாய் அவள் உட்கார இடம் இல்லாதகாரணத்தால் அவன் இருக்கையை அவளுக்கு கொடுத்தான்.

தாரைதாரையாக தண்ணீர் அவள் கண்களில்வந்து கொண்டே இருந்தது வரவேற்ப்பு அறையில் இருந்த டிவியில் கோலங்கள் ஓடிக்கொண்டு இருந்தது, ஆதி எப்போதும் போல் ஹீஸ்ட்டிரியா பேஷன்ட் போல் கத்திக்கொண்டு இருந்தான்.

அவளுக்கான டோக்கன் எண்19 அவள் புடவை தலைப்பை வைத்து கேவி கேவி அழுததை பார்த்த வார்டு பாய் அவளை உடனே டாக்டரை பார்க்க அனுமதித்தான்.. அழுத கண்களுடன் வார்டு பாயிக்கு கண்களால் நன்றி சொல்லிய படியே அவள் உள்ளே சென்றாள்..

மருத்துவர் உட்கார சொன்னார் அப்போதும் அவள் கேவி கேவி அழுவதை நிறுத்தவில்லை டாக்டர் பத்து நிமிடம் பொறுமை காத்தார்.. அவள் சற்றே சகஜ நிலைக்கு வந்து, கணவனை அழைத்து வராமல் குடும்பக்கட்டுப்பாடு செய்ய ஏதாவது மருந்து இருக்கிறதா? என்று வினவினாள்.

டாக்டர் பொறுமையுடன் சொன்னார் அதற்க்கு சாத்தியம் இல்லை என்று...

டாக்டர்/ உனக்கு திருமணம் ஆகி எத்தனை மாதம் ஆகின்றது?

அவள்/எழு மாதங்கள் டாக்டர்

டாக்டர்/ எழு மாதம்தானா? அதற்க்குள் ஏன் கணவணுக்கு குக ஆபரெஷன் செய்ய ஆர்வமாய் இருக்கிறாய்?

அவள்/அவள் அழுத கண்களுடன் டாக்டர் நான் ஆறுமாசம், என் தங்கை ஐந்து மாசம்,என்தங்கையோட நண்பி நாலுமாசம், எங்க பக்கத்து வீட்டு ஆண்ட்டி மூனு மாசம், எங்க வீட்டு வேலைக்காரி இரண்டு மாசம்,இதெல்லாம் விட கொடுமை எங்க பாட்டி ஒருமாசம் டாக்டர் என்று சொல்லி கேவி கேவி அழுதாள்.

டாக்டர்/இதெல்லாம் ஆம்பளையா பொறந்தா சகஜம் என்று சொல்வதற்க்குள் அவள் வீருட் என்று எழுந்து புடவைதலைப்பாள் மூக்கை சிந்தியபடி எது சகஜம் டாக்டர் என் வீட்டு நாய் ஜீம்மி நாளு நாளா வாந்தி எடுத்துக்குனு இருக்கு டாக்டர் என்று அவேச பட்டாள். டாகடர் ஆர்வாமாகி உங்க கணவர் எப்படி இருப்பார் என்று கேட்க இதோ இந்த பிளாக்ல இருக்கிற ஒரு வரி விடாம நிறுத்தி நிதானமா ஆர்வமா ரொம்ப நேரமா படிக்கிறாறே அவர்தான் என்றாள் அந்த பெண்....


குறிப்பு/ பல ஜோக்குகள் படித்து ரசித்து அது என்னோடும் என் உதட்டு புன்னகையுடனும் போய் விடுகின்றது அது உங்களை மகிழ்வித்து உங்களை புன்னகை மன்னனாக்க இது போன்ற சோக்குகள் உங்களை இனி மகிழ்விக்கும். நாலு வரியில் நான் படிக்கும் இந்த மாதிரி சோக்குகள் என் கற்பனை நடையில் கதை போல் எழுதலாம் என்று இருக்கிறேன்,

காமத்தை ரசித்து கொண்டே காமத்தை எதிர்க்கும் தமிழர்களான நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்?????

அன்புடன்/ஜாக்கிசேகர்

எச்சரிக்கை இப்ப ஊட்டிக்கு போகாதிங்க....


எல்லா நகரத்து சாலைகளும் ரோம் நகரத்தை நோக்கி செல்கின்றன என்பது போல் 3 நாள் சேர்ந்தாற் போல் லீவு விட்டால் எல்லா வாகனங்களும் கொடைக்கானல் மற்றம் ஊட்டி மலைபதையை நோக்கி செல்கின்றன என்பது புது மொழி....

மே1ம் தேதி வெள்ளிக்கிழமை வர அதன் அடுத்த இரு தினங்களும்சனி ஞாயிறு என்று தொடர்ந்து விடுமுறை நாளாக வர தமிழகத்தில் உள்ள எல்லோருடைய வீட்டிலு்ம் பெட்டிக்கட்டிக்கொண்டு புறப்படும் இடம் ஊட்டி அல்லது கொடைக்காணல்தான் அல்லது வேற ஏதாவது மலைவாசத்தலம்.

என் நண்பிக்கு மே1 அன்று திருமணம் என் திருமணத்துக்கு புயல் மழையில் வந்தவள் என்பதாலும் மிக நெருங்கிய நண்பி என்பதாலும் நான் மனைவியுடன் ஊட்டி சென்றோம் 4 நாட்கள் டேரோ போட்டோம்...

பணம் பெருத்தவர்கள் மட்டும் இந்த மாதிரிகோடை விடுமுறையில் ஊட்டிக்கு செல்லலாம். பட்ஜெட் பேமிலி கோடைக்கால ஊட்டிக்கு போக வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்... நடுத்தர குடும்பத்தினர் ஊட்டி செல்வதை தவிற்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்
எனென்றால் 750 ரூபாய் பெறுமானம் கொண்ட ரூம் வாடகை 2500 ரூபாய்க்கு ஏறி இருக்கின்றது.. அது மட்டும் இல்லாது எல்லா விலைகளும் உயர்ந்து இருக்கின்றன...

காரை பார்க் செய்து பொட்டானிக்கார்டன் போவதற்க்குள் தாவு தீர்ந்து விடுகின்றது... சட்டென டிராபிக் ஜாம் வேறு ஆகி அது கிளியர் ஆவதற்க்குள் நம் மூளை நரம்புகள் வெடித்து விட போட்டி போடுகின்றன...

காரணம் எல்லோரும்டிராபிக்கில் ஒரே சைடில் வெயிட் செய்து கொண்டு இருக்கும் போது பெரிய புடுங்கி மாதிரி காரை முன்னாடி எடுத்துக்குனு போன ஆப்போசிட்ல வர்றவன் இவன் அம்மாவை தேவிடியான்னு கத்தறான்.


எல்லா இடத்திலும் குப்பைமலை போல் குவிந்து கிடக்கின்றன... முக்கியமாக வாட்டர் பாட்டில் மற்றும் பெப்சி மிரான்டா பாட்டில்கள் குப்பை எங்கும் இறைந்து கிடக்கின்றன...
இரண்டு நிமிடத்தில் சேரிங் கிராஸ் வர வேண்டியதூரத்தை ஒன்வே என்று சொல்லி பதினைந்து நிமிட மாக்குகின்றார்கள்... அங்கும் நல்ல வெயில் தான்.ஊட்டியி்லும் கழுத்து வியர்வை பிசுபிசுக்கின்றது, என்ன வாகனத்தில் போகும் போது நன்பகல் பண்ணிரண்டுக்கு குளிர் காற்று முகத்தில் அடித்து தமிழக தேர்தல் பற்றி குசாலம் விசாரிக்கின்றது...

குடும்பத்துடன் செல்பவர்கள் ஆப் சீசன் என்று அழைக்கப்படும் டிசம்பர் மாதத்தில் செல்ல வேண்டுகிறேன்... ஒரு குரோம் பேட்டை குடும்பம் நடு இரவில் வந்து 10 பேருடன் வந்திறங்கி ரூம் கிடைக்காமல் தவித்து, கம்பளி கூட கொடுக்காமல் 4500 ரூபாய் வாங்கி ரூம் கொடுத்து தாலி அறுத்த கொடுமையும் நடந்தது.

ஊட்டி ஆட்டோகாரர்களை கம்பேர் செய்யும் போது சென்னை ஆட்டோக்காரர்கள் தெய்வத்தின்ட தெய்வம்...

ஆகவே நண்பர்களே புதிதாய் திருமணம் ஆனவர்களே இதனால் அறியப்படும் நீதியாதெனில் ஊர் ஓடும் போது நீயும் ஓடு என்ற பழமொழிக்கு ஆப்போசிட்டாக ஊர்ல பல பேர் ஊட்டிக்கு போகும் போது நீ போகாதே என்பதுதான் புது மொழி ...

ஊட்டி பற்றிய பதிவு புராணங்கள் வரும் பதிவுகளில்....

அன்புடன்/ஜாக்கிசேகர்

புதுமையை புகுத்திக்கொண்ட தமிழ்நாடு அரசு போக்குவரத்துதுறை


வீடியோ கோச் அரசு பேருந்துகளில் பயனம் செய்யும் தென்மாவட்டத்து மக்கள் இந்தக்கொடுமையை நன்கு அறிந்து இருப்பார்கள், சில நேரங்களில் தூக்கம் வராது அவர்கள் போடும் படத்தை பார்த்தே தொலைத்து தீர வேண்டிய கட்டாயம்...

இப்படித்தான் நான் ஒரு முறை மதுரை செல்ல நேர்ந்த போது ராமராஜன் சேது அபிதா நடித்த பெயர் நினைவில் நிற்க்க மறுத்த படத்தை போட்டார்கள் நானும் சகித்து பார்த்து தொலைத்தேன், மதுரை இறங்கி சின்னதாக ஒரு இன்டர்வியு எடுத்து அன்று மாலை அதே பேருந்தில் சென்னை திரும்ப இரவும் அதே படம் என்நிலை நினைத்து நொந்து சாப்பிட நிறுத்திய இடத்தில் ஒரு குவாட்டர் வாங்கி தண்ணீர் கலக்காமல் கோபத்துடன் அடித்து சுருண்டு படுத்தேன்...

நல்ல படத்தை போட்டு கிளைமாக்ஸ் நெருங்கும் நேரத்தில் ஊர் வந்து தொலைக்க சட்டென டிவி பொட்டியை ஆப் செய்து சில கண்டக்டர்கள் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்ததோடு அல்லாமல் சத்தியம் தியேட்டர் ஆப்பரேட்டர் போல் நக்கல் பார்வை வேறு பார்ப்பார்கள்...

சில மாதங்களுக்கு முன்பு புதுவையில் இருந்து சென்னை கிழக்கு கடற்க்ரை சாலையில் பயணம் செய்து கொண்டு இருந்த போது வீடியோவில் தொடர்ந்து எம்ஜீஆர் பாடல்கள் ஓடிக்கொண்டு இருந்தது.

இன்பமே உந்தன் பேர் பெண்மையோ என்று பாடி உடன் நடித்த பெண்ணை படுக்கையில் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதை அனைத்தையும் ஒரு அருவி பக்கத்தில் உதட்டு சுழிப்புடன் முன்னாள் முதல்வர் எம்ஜியார் செய்து கொண்டு இருந்தார்..

நான் டிரைவரிடம் சென்றேன் யார் இந்த பாடலை போட்டது? என்றேன்.
நான்தான் எனக்கு தலைவர் பாடல்னா ரொம்ப பிடிக்கும் என்றார் . டூட்டி முடிஞ்சு உங்க வீட்ல போய் உங்க பொண்டாட்டி புள்ளைங்களோட பாருங்க உங்களை வேணாங்களை, எங்க பொறுமையை ஏன் சோதிக்கி்றீர்கள் என்றேன் பாட்டு மாற்றப்பட்டு வீடியோவில் காக்க காக்க சூர்யா வந்தார்...


இப்போது இது போன்ற தொல்லைகளுக்கு எல்லாம் தீர்வாய்இப்போது ஒரு புதிய முறையை தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை அறிமுகப்படுத்தியுள்ளது
அதாவது ஒரு கம்யூட்டர் பிளாட் மானிட்டர் ஒன்று டிவி பெட்டிக்கு பதில் வைத்து உள்ளார்கள் அதோடு ஒரு சின்ன சீப்பியூவையும் பொறுத்தி உள்ளார்கள்...

கண்டக்டர் டிக்கெட் கொடுத்து விட்டு சுவிட்சை போட்டால் போதும் கம்யூட்டர் ஆனாகி வின்டோஸ் எழுத்துக்கள் திரையை ஆக்கிரமித்து படம் ஓடுகின்றன இதில் சிறப்பு அம்சம் யாதெனில் திரைப்படம் ஏதும் ஒளிபரப்பாமல் ஏதாவது ஒரு படத்தில் இருந்து இரண்டு காமெடி காட்சிகள் இரண்டு பாடல்கள் என்று ஓடு்கின்றது. நடு நடுவில் விளம்பரங்கள் என்று வருகின்றது. இதன் மூலமும் போக்குவரத்து கழகத்துக்கு அதிக வருமானம் கிடைக்கும்..


சோதனை ஒளிபரப்பாக இப்போது அனைத்து தமிழ்நாடு அரசு வீடியோ கோச் நெடுந்தூர பேருந்துகளிலும் காமெடிக்காட்சிகள் ஓடுகின்றன . இதன் சிறப்பு மானிட்டர் என்பதால் ஒளிஒலி துல்லியமாக இருக்கின்றது...அதே போல் போக்கு வரத்து தலமையகத்தில் ஏற்கெனவே பதியப்பட்ட படங்கள்தான் பேருந்தில் ஓடும் இதனால் புதிய படங்கள் திருட்டு வீடியோவாக அரசு பேருந்துகளில் ஓடாது...


கண்டெக்டர் டிரைவர் விறுப்பு வெறுப்பு இல்லாமல் காட்சிகள் ஓடுகின்றன வாழ்த்துக்கள் தமிழ்நாடு அரசு போக்குவரத்துதுறை

ஒரு சின்ன விண்ணப்பம்

பேருந்துகளில் உள்ள பயணிகள் சீட்கவர் எல்லாம் அழுக்கு ஏறி மட்டமாக வாந்தி வருவது போல் உள்ளது அதே போல் மூட்டை பூச்சிகள் கூட ஒரு சில பேருந்துகளில் உயிரை எடுக்கின்றன...

எப்போதும் புதுமைக்கு முதல் குரல் கொடுக்கும் தமிழக போக்குவரத்து துறை இது போன்ற அடிப்படைவசதிகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும்

அன்புடன்/ஜாக்கிசேகர்

அப்புறம் என்ன மயித்துக்குடா காசு வாங்கறிங்க-????


சில இடங்களில் சுத்தமாக லாஜிக் என்பது இருக்கவே இருக்காது, அப்படி லாஜிக் சுத்தமாக இல்லாத விஷயத்தை உங்ககிட்ட நான் பகிர்ந்துக்கிறேன்...
பல லட்சக்கணக்கான மக்கள் வந்து போற இடம் கோயம்பேடு பேருந்து நிலையம்..

உதாரணத்துக்கு மாம்பலத்தில் இருந்து புருஷன் பொண்டாட்டி ரெண்டு பேர் கோயம்புத்தூர் போறாங்கன்னு வச்சுக்குங்க...அங்க ரெண்டு நாள் தங்கிட்டு வராங்கன்னு வச்சுக்குங்க அல்லது மிட்நைட்ல வந்து கோயம்பேடு இறங்கினா ரொம்ப ஈசியா இருக்கறது டூவீலர் எடுத்து வந்து கோயம்பேடு பஸ்ஸாண்டுல போட்டுட்டு ஊருக்கு போறதுதான் சிக்கனமான வழி....

இல்லன்னா மாம்பலத்தில் இருந்து கோயம்பேடுக்கு வருவதற்க்கு ஆட்டோவுக்கு 150 ரூபாயும் சப்போஸ் மிட்நைட் வந்து இறங்கிட்டா 200 ரூபாயும் ஆட்டோக்காரன்கிட்ட தெண்டம் அழனும். அதனால பொதுவா கோயம்பேடு பார்க்கிங் ஸ்டேண்டுல டூவலர் போட்டுட்டு ஊருக்கு போறதுதான் புத்திசாலிதனம்..
ஊருக்கு போயிட்டு
4 நாளைக்கு கழிச்சி வந்ததாக்கூட வெறும் 40ரூபாய்தான் பார்க்கிங் சார்ஜ்ஆகும். இப்ப பிரச்சனை பார்க்கிங் சார்ஜ் கட்டணத்தை பத்திதான். நேத்துதான் எதெச்சையா பார்க்கிங்ல கொடுத்த சிலிப்பை திருப்பி பார்த்தேன்.

அதாவது ஒருநாள் கட்டணம் பத்து ரூபாய்....

அதுல இருந்த மூணாவதா இருந்த நிபந்தனையை படிச்சு பார்த்துட்டு அப்படியே ஷாக்காயிட்டேன்... அதாவது ஊர்தியை நிறுத்தப்பட்ட காலத்துக்குள் வாகனத்துக்கு ஏற்படுகின்ற சேதத்திற்க்கோ அல்லது திருட்டுக்கோ நிர்வாகமோ அல்லது நிறுத்துமிட அலுவலரோ பொறுப்பு இல்லை என்று சொல்கிறது...

அப்புறம் எதுக்கு பார்க்கிங் சார்ஜ் வாங்கறிங்க? திருடிக்கிட்டு போன நாங்க பொறுப்பு இல்லைன்னு சொல்லறிங்க இல்லை , அப்புறம் எதுக்கு இங்க வண்டியை நிறுத்திட்டு காசு கொடுத்துட்டு போகனும்.... காசு கொடுக்காம ஏதாவது பொறம் போக்குல நிறுத்திட்டு போறோம்... காசு கொடுக்கறது வண்டியை எந்த சேதமும் இல்லாம பாத்துக்கறதுக்குதானே? அப்புறம் எதுக்குடா
காசு வாங்கறிங்க???
அது மட்டும் இல்லாம சென்ட்ரல் ஸ்டேசன் பார்க்கிங் சிலிப்லயும் இந்த கொடுமை கூத்துதான் நடக்குது... அது மட்டும் இல்லாம வண்டியை எடு்க்கும் போது எப்படியும் இரண்டு இண்டிகேட்டரையாவது உடைச்சி வச்சிடறானுங்க பண்ணடை பசங்க...

அப்புறம் என்ன மயித்துக்கு பார்க்கிங் காசு?


அன்புடன் அடங்காத கோபத்துடன்...
ஜாக்கிசேகர்

கலைஞரை மட்டும் ஏன் எல்லோரும் திட்டுகிறார்கள்?



கலைஞருக்கு வக்காலத்து வாங்குவது இந்த பதிவின் நோக்கம் அல்ல, ஆனால் கலைஞரை மட்டும் ஏன் எல்லோரும் திட்டு கிறார்கள் என்பதை சற்று யோசித்தால் கிழிள்ளவைதான் பதிலாய் வருகின்றது....


உளவியல் ரீதியாகவே இதை பார்ப்போம் பொதுவாக தமிழனுக்கு நம்ம அக்மார்க் கலரான கருப்புக்கலரில் எவன் முன்னேறினாலும் பிடிக்காது... ச்சே ச்சே இன்னா சார் அப்படி திங் பன்றிங்க, அப்படி எல்லாம் கிடையாது சார் , நாங்க கலர் பார்க்கமாட்டோம். சரி அப்படின்னா சொளக்கார் பேட் புல்லாவும் சேட்டு, எப்படி வந்தான், இன்னமும் கிராமத்துல வட்டி மேல வட்டி போட்டு நம்ம ஆள் பணத்தை முழுசா அட்டை பூச்சி போல உறியறானுங்களே அது எப்படி?


இதுவே நம்ம ஆள் பணத்தை வட்டிக்கு நியாயமா கொடுத்தாலும் அவனை எமாத்துறதுலயும் அவனை கவுக்கறதுலயையும் உறுதியா இருப்பான்.

அதே போல தமிழை தப்பா பேசனும் அப்படி பேசறவனைதான் தமிழ்ன் நம்புவான் இதை தனது பிதாமகன் படத்துல கூட கின்டல் செய்து இருப்பார் பாலா...


ரெண்டாவது தாழ்த்தபட்ட இடத்துல இருந்து மேலை வந்தவன் எப்படி இவ்வளவு செல்வ செழிப்போட இருக்கறது, இதுவே அவன் உயர்ந்த சாதியா இருந்தா கேள்வியே கிடையாது....

தமிழ் நாட்டுல ஒரு சேட் தப்பா தமிழ் பேசி கோடியை சுருட்டுலாம், வெள்ளையா இருந்தா அவன் நல்லவன் என்ற நிலைப்பாடு நம்ம சமுகத்துல காலம் காலமா இருக்கு...

ஆங்கில புலமை மட்டும் இருந்தாதான் வட இந்திய சேனல்கள் எல்லாம் மதிக்கும் இதற்க்கு கூட அன்பே சிவம் படத்தை உதாரணத்துக்கு சொல்லலாம் மூஞ்சு கோனையான கமல் மாதவனுக்கு நல்லதுதான் செய்வாரு ஆனா அவன் நம்பறதும் பேசி பழக ஆசைப்படுவதும் பிராடு கேரக்டர்ல நடிச்ச யூகிசேதுகிட்டதான்... ஏன்னா அவன் இங்கிலி்ஷ் பேசுவான் அவ்வளவுதான்...



25 பைசா எடுத்துக்கிட்டு வந்து சென்னையில் வளர்ந்த விஜிபி பன்னிர்தஸை ஒத்துக்குவோம் பெட்ரோல் பங்குல பெட்ரோல் போட்ட அம்பானியை ஒத்துக்குவோம் இன்னம் நிறைய சொல்லலாம்


கலைஞர் அப்ப யோக்கியமா என்ற கேள்வி நிச்சயம் கேட்பார்கள் அவர் யோக்கியம் என்று நான் சொல்ல வில்லை அவர் மீதும் தவறு இருக்கின்றது ஆனால் அவரை மட்டும் குற்றம் சொல்வதைதான் நான் வன்மையாக கண்டிக்கிறேன்


கலைஞர் செய்த ஒரே தப்பு தமிழனாக பிறந்ததும், பார்பானியத்தை எதிர்த்ததும், திராவிடத்தை பரப்பியதும்தான், பார்பானியத்தை எதிர்பவர்கள் எல்லொரும் நம்மை பொறுத்தவரை கேட்டவர்களே....
எனென்றால் அவர்கள் எல்லோரும் சொல்லும் இடத்தில் இன்னமும் இருக்கின்றார்கள். (தினமலர் இந்து துக்ளக்)
நாம் கேட்டு கொள்ளும் இடத்தில் இன்னமும் இருக்கின்றோம் அவ்வளவுதான்.....

பார்பானியத்தை எதிர்த்த கோபம்தான் கலைஞரை திரும்பிய பக்கம் எல்லாம் தாக்குகின்றது...


அன்புடன்/ஜாக்கிசேகர்

சனிக்கிழமை ( 24/04/09)பதிவர் சந்திப்பு ஒரு பார்வை....







பொதுவாக ஞாயிறு மாலை நடைபெறும் பதிவர் சந்திப்பு இந்த முறை சற்றே முந்திக்கொண்டு சனிக்கிழமை நடந்தது, இது எனது மூன்றாவது பதிவர் சந்திப்பு...இரண்டு மூறை மறத்தமிழனாய் தியேட்டரில் படம் போட்டு கால் மிதித்து மன்னிப்பு கேட்டு உட்கார்ந்து படம் போட்டு பத்து நிமிஷம் இருக்கமா? என்ற கேனக்கேள்வி கேட்பவன் போலதான் நான் பதிவர் சந்திப்புக்கு போய் இருக்கிறேன்.

அதனால் இந்த முறை எப்படியும் முன்பே போய் விட வேண்டும் என்று மெரினா சாலையில் விரைந்து காந்தி சிலை சென்ற போது மொத்தம் 4 பேர் இருந்தார்கள் அப்போது மணி 5,10 என்க்கு ரொம்ப சந்தோஷம்....

ஆசிப் மீரான் , செல்வேந்திரன், மற்றம் இரண்டு பேர்.
நிறைய பேர் வந்த கொண்டு இருந்ததாலும் நிறைய பேசியதாலும் பெயர்கள் இயல்பாய் மறந்து விட்டன மன்னிக்கவும் ,மன்னிக்கவும் ...

ஜெயரோம் சுந்தர், காவேரிகனேஷ் அக்னிபார்வை, பாலபாரதி,செல்லமுத்து குப்புசாமி(கிழக்கு பதிப்பக பிரபாகரன் புத்தகம் எழுதியவர்) , பைத்தியக்காரன் , தண்டோரா, வால்பையன் மூத்த பதிவர் சிவஞானம், வெயிலான்,டோண்டு,லக்கிலுக்,புருனோ,அதிஷா,அப்துல்லா,நர்சிம்,தமிழ் ஸ்டுடியோ அருன்,
ஸ்ரீ,கேபிள் சங்கர் போன்றவர்கள் வந்ததும் பதிவர் சந்திப்பு கலை கட்ட தொடங்கியது....


பொதுவாக இந்த முறை பழம் தின்று கொட்டை போட்ட பதிவர்கள் எல்லோரும் ஒத்துக்கொண்ட விஷயம்இந்த சந்திப்பு போல் எப்போதும் கூட்டம் இருந்தது இல்லை என்று, அதாவது 40பேருக்கு மேல் வந்து இருந்தார்கள்...


முன்பு எல்லாம் பதிவர் சந்திப்பு என்றால் 5 பேர் பத்து பேர்தான் வருவார்கள் என்று சொன்னார்கள்

வழக்கம் போல் டோண்டு தன் கைப்புத்தகத்தை கொடுத்து அனைவர் பெயரையும் எழுத சொன்னார் நான் பார்த்த சந்தித்த பதிவர்களிளேயே, சின்சியர் சிகாமணி டெடிகெஷன்னு சொன்னா இந்த விஷயத்துல டொண்டு சார்தான்,

எங்களிடம் கூட ஒரு அலட்சியம் குடி கொண்டு இருக்கும் அவர் எப்போதும் வந்தாலும் பதிவர்கள் பெயரை கேட்டும் அவர்கள் டீடெயில் வாங்கி உடனே வீட்டுக்கு போய் பதிவு போடுவதில் அவருக்கு நிகர் அவரே..

பதிவர்சந்திப்பில் எனக்கு பிடித்த விஷயம் கலைஞரை திட்டினவனும் ஜெயலலிதாவுக்கு வக்காலத்து வாங்கியவனும் ஒன்னா நின்னு சிகரெட்டும் டீயும் குடிப்பாங்க...

இதுதான் ஆரோக்யம், இந்த நட்புக்காகவே எத்தனை முறை வேண்டுமானாலும் போய் பதிவர் சந்திப்பில் கலந்து கொள்ளலாம்...

வால்பையன்ன ஒரு கேரக்டர்தான் இந்த முறை என்க்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியவர்,. அவர் பதிவுல லாங்ஷாட்ல சின்ன பையன் போல போட்டோ போட்டு இருந்தார் நானும் ரொம்ப சின்ன பையன் நினைச்சிட்டேன்,ரொம்ப இல்ல கொஞ்சம்தான் சின்ன பையன் காது பக்கம் கொஞ்சம் நரைச்சிறுக்கு...

டோண்டு என்னோடு அறிமுகம் அவும் போது காசி தியேட்டர் ஓனர் நலமா என்று கூசாலம் விசாரித்தார்...

அப்புறம் எல்லோரும் அறிமுகப்படலம் நடந்தது எல்லோரும் உள்ளேன் அய்யா என்று பள்ளி்யில் பெயர் சொல்வது போல் கைஉயர்த்தி பெயர் சொன்னார்கள்.

நான் வந்ததும் சில போட்டோக்கள் எடுத்தேன் நான் போட்டோ எடுக்கும் போது கொஞ்சம் அட்டேன்ஷனில் வந்தார்கள் எனென்றால் நான் போட்டோகிராபர் என்பதால் ஆனால் கொண்டு போனது டப்பா கேமரா அனால் அடுத்த முறை பதிவர்கள் போட்டோவை தெள்ளதெளிவாக எடுத்து அவர்கள் பற்றிய கருத்துக்களை எழுதுகிறேன்...


அரசியல்வாதி போல் கஞ்சி போட்டோ வெள்ளை சட்டை வெள்ளை வேட்டியில் முத்த பதிவர் சிவானம் வந்து இருந்தார் ....

ஈழத்தை பற்றிதான் டாபிக் இருந்தது பதிவர்சந்திப்பில் சூடாக எதாவது விவாதிப்பார்கள் என்றால் அப்படி எதும் கிடையாது விவாதிப்பு என்றால் அது ஒரு சிறு சிறு குழுவாக விவாதிக்க ஆரம்பிப்பார்கள் அது அவர்கள் என்ன ஓட்ட அலைகளுக்கு செட் ஆனாவர்கள் அந்த குழுவில் இருப்பார்கள்... அதே போல் உண்மையான விவாதம் அல்லது கலை கட்டுதல் என்றால் லைட்ஹவுஸ் பக்கத்தில் இருக்கும் டீக்கடைதான்.

நான் எப்போதும் ஒரு குழுவில் பேசினாலும் மற்ற குழுக்களில் என்ன டாபிக் ஓடுகின்றது என்று எட்டிப்பார்பது வழக்கம்...



நான், அக்னிபார்வை புருனோ, பைத்தியக்காரன் தண்டோரா என்று குழுவாக பேசிக்கொண்டு இருந்தோம், செல்வமுத்து குப்புசாமி ரொம்பவும் பேசுவதற்க்கே கூச்சப்பட்டதால் அவரிடம் பேசிக்கொண்டு இருந்தேன்..

பீச்சில் நல்ல கூட்டம் லீ்வ் வேறு விட்டு விட்டதால் டாடி பீச்சக்கு கூட்டிட்டு போங்க போன்ற வேண்டுகோள்களை ஒருவாரத்துக்கு கேட்டு கொண்டுஅதற்க்காக பிள்ளைகளை பீச்சுக்கு கூட்டிக்கொண்டு வந்தவர்கள் ஏராளம்... அழகான பெண்களாய் இருக்கிறார்கள் ஆனால் கையில் ஒரு குழந்தை வைத்து இருக்கிறார்கள் எப்படி? என்று தெரியவில்லை...

40 பேர் கொண்ட கூட்டம் என்பதால் சுண்டல் பையன்கள் இலங்கை ராணுவம் போல் சுற்றி வளைத்து முகத்துக்கு நேரே சுண்டல் பாத்திரத்தை நீட்டி அண்ணா சுண்டல் என்றார்கள்... நாங்கள் சோனியா மன்மோகன் போல் எதற்க்கும் மசியவில்லை என்பது குறிப்பிடதக்கது...

இதற்க்கு நடுவில் ரெண்டு வாண்டுங்க புடிக்கிற ஆட்டம் வெளையாடுச்சிங்க அதுங்க மறைச்சிக்கறதுக்கு பதிவர் சந்திப்பு கூட்டத்தல வந்து மறைச்சிக்கிட்டு ஆட்டம் ஓட்டம் காட்டி கொண்டு இருந்துச்சிங்க..

வேலை வாய்ப்பு கேள்வி குறி ஆனதால் ஐகாக்ஸ் வளாகம் தவிர்த்து காந்தி சிலை பின்பு இரண்டு நவ நாகரிக பெண்கள் உட்கார்ந்து ஒரு பையணிடம் பேசிக்கொண்டு இருந்தார்கள் உடம்பு நன்றாக காற்று வாங்கும் உடை அணிந்து இருந்தார்கள். நம் கழுகு கண்ணக்கு தப்பவில்லை.. ஒரு பெண் முன்பக்கம் பாதி காற்று வாங்வது போல் உடை அணிந்து இருந்தால் இன்னோரு பெண் பின்பக்கம் முழுவதும் திறந்து வைத்து இருந்தாள்.



பதிவர்கள் லைட்ஹவுஸ் டீக்கடைக்கு போகும் போது இந்த காட்சியை பார்த்து இருக்கலாம் பார்த்தவர்களுக்கு மச்சம் பார்க்காதவர்களுக்கு மச்சம் இல்லை அவ்வளவுதான்.

லைட்ஹவுஸ் டீக்கடையில் காரசாரமான சிறு குழு விவாதங்கள் நடைபெற்றன. நான், அக்னி ,புருனோ, ஊர்சுற்றி,தன்டோரோ, தமிழ் குரல் போண்றவர்கள் நிறைய பேசினோம் , பாலபாரதி, லக்கி,அதிஷா,கேபிள் சங்கர் போண்றவர்கள் விடை பெற்றார்கள்..

என்னவோ தெரியவில்லை இந்த சந்திப்பில் திடிர் அறிமுகமாய் மருத்துவர் புருனோவோடு நான் அதிகம் நட்பு பாராட்டினேன்... அப்புறம் அவரரைசென்னை மருத்துவக்கல்லூரியில் அவர் அறையில் விட்டு விட்டு, விருந்தோம்பலாய் தண்ணீர் காரசேவ் கொஞ்சம் சாப்பிட்டு விட்டு, சில பதிவர் கைபேசி எண்கள் வாங்கி கொண்டு, பூந்த மல்லி சாலையில் இரவு பத்து மணிக்கு வண்டியில் வேகம் கூட்ட சில்லென காற்று முத்த மிட்டது

எவ்வளவுதான் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் நேரில் பார்க்கும் போது நட்பு பாராட்டவதும், அப்த ரெக்கர்ட் விஷயங்கள் மனம் விட்டு பேசவும், நம் கருத்துக்களை எந்த சோடைனையும் இன்றி பறிமாறவும் வலைபதிவர் சந்திப்பு வாரா வாரம் நடத்தபட வேண்டும்

வாரா வாரம் பதிவர் சந்திப்பு நடத்தலாம். நானும் கலந்து கொள்ளலாம் ஆனால் என் மனைவி பத்திரக்காளியாக மாறி விடுவாள்...காளி வேஷத்தை விட என் மனைவிக்கு மதுரை மீனாட்சி வேஷம் மிக பொறுத்தமாய் இருக்கும் அதனால் பாத்து செய்யுங்க... அதே போல வாரா வாராமான்றதையும் முடிவு செய்யுங்க...


அன்புடன் /ஜாக்கிசேகர்

பிரபல முன்னனி கதாநாயகிகளை பாழ் படுத்திய நடிகர்???


பிரபல கதாநாயகிகள் பல படங்களில் நடித்து பெயர் வாங்கி இருக்கிறார்கள் அவர்கள் நடித்த பல படங்கள் வெற்றிப்படமாகவும் அமைந்து இருக்கின்றன.. அதில் ஒரு சில படங்கள் 100 நாட்களை கடந்த படங்கள் ....அந்த பபிரபல நடிகைகள் மற்றும் படங்கள் கீழே....

நயன்தாரா .........சந்திரமுகி, பில்லா.
ஜெனிலியா.........சந்தோஷ் சுப்ரமணியம்
சிம்ரன் ..............வாலி
ஸ்ரேயா...................சிவாஜி
ரீமா சென்.............. மின்னலே
சினேகா..................வசூல் ராஜா
திரிஷா.......................சாமி
மீரா ஜாஸ்மீன்.........ரன்

மேலுள்ள படங்கள் எல்லாம் 100 நாட்கள் வெற்றிக்ரமாய் ஓடியவைஇப்போது இதே நடிகைகள் நடித்த பிளாப் படங்களை இப்போது பார்க்கலாமா?

நயன்தாரா..................... வில்லு
ஜெனிலியா....................சச்சின்
சிம்ரன்..............................உதயா
ஸ்ரெயா..........................அழகிய தமிழ் மகன்
ரீமா சென்.......................பகவதி
சினேகா .........................வசிகரா
திரிஷா ..........................ஆதி , குருவி
மீரா ஜாஸ்மீன்............புதிய கீதை


மேலுள்ள நடிகைகள் மார்கெட்டை டவுன் செஞ்சது
ஒரே ஒரு ஆள்தான் அவருதான் நம்ம கீரேட் டாக்டர்இளையதளபதி விஜய்...


எதாவது கிசு கிசு இருக்கும்னுதானே வந்திங்க... மாமா பிஸ்கோத்து.....


அன்புடன்/ஜாக்கிசேகர்

கணத்த இதயத்துடன் இந்த படங்களை பாருங்கள் பதிவர்களே, பாவம் அந்த பெண்...










குறிப்பு...

சிலர் இந்த பாடத்தை பார்த்து இதழோரத்தில் புன்னகையை வரவைக்கலாம் ஆனால் ரஜினி கமலை விட தலைவருக்க ஒரு பெரும் சிறப்பு இருக்கின்றது... அறிமுகப்படத்தில் இருந்து 48 படங்கள் வரை கதாநாயகனாகவே நடித்து வந்து இருக்கிறார் என்பது குறிபிடத்தக்கது... இது தமிழ்நாட்டில் எந்த நடிகருக்கும் கிடைக்காத பேரு....

இன்னும் இரண்டு படங்கள்தான் இருக்கின்றன 50 என்ற இலக்கத்தை எட்ட அதுவரை தமிழ்நாடு தாங்குமா?

அன்புடன் /ஜாக்கிசேகர்

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner