பரிசு பொருட்கள்

பரிசு பொருட்கள்
என்பது இப்போது சாதாரணம்... ஐந்து பிள்ளைகள்  உள்ள வீட்டில் மூன்று வேளை உணவே சரியாக கிடைத்தால் போதுமானது என்ற வாழ்க்கை...



பிறந்தநாள் என்றால் இரவில் அப்பா வாங்கி வரும்  குடை கேக் என்று சொல்லப்படும்  ஒன்னாரை ரூபாய் வஸ்துவோடு பிறந்தநாள் கழிந்து விடும்.. ஆனால் ஒரு தகப்பனாய் மாறியபின்... எல்லா பிள்ளைகளின் பிறந்தநாளுக்கு  குடை கேக் வாங்கி  கொடுக்க... அப்பா  உழைத்த உழைப்பை நினைக்காமல் இந்த நாளில் இருக்க முடியவில்லை.

 என்னுடைய 23 வயது வரை எனக்கு  என்று யாரும் எந்த பரிசு பொருட்களையும் எனக்கு கொடுத்ததில்லை... நானும் அப்படித்தான்...

முதன் முதலாக எனக்கு பரிசு என்று கொடுத்தது யார் என்று கேட்டால்... இப்போது மனைவியாக இருக்கும் என் முன்னாள் காதலிதான்.

ஐ லவ்யூ எல்லாம் சொல்லி காதலை டிக்ளேர் செய்யவில்லை.. எதிர்காலத்துல . ரெண்டு பேரும் சேர்ந்து  வாழ்ந்தா நல்லா இருக்கும் என்ற வார்த்தையைதான்   இரண்டு பேருமே உதிர்த்துக்கொண்டோம்.

இரண்டு பேருக்கும் ஒரே நாளில்  பிறந்தநாள் என்பது  சில நாட்களில்  தெரிந்து போனது...  காதலிக்க ஆரம்பித்து இரண்டு பேருக்கும் அது முதல் பிறந்தநாள்...  கடலூர்  கூத்தப்பாக்கம்  முருகன் கோவில் பஸ் ஸ்டான்ட்.. கைலி கட்டிக்கிட்டு சைக்கிள்ல போய் நின்னேன்...

ஒரு கவர் கொடுத்தா...
என்ன...??

திறந்து பாருங்க..

திறந்து பார்த்தேன்.. ஒரு டீஷர்ட்  இருந்தது... என்  வாழ்நாளிலேயே பிறந்தநாளுக்கான முதல் பரிசு அதுதான்.....

என் கையில்  ஒரு  பத்து ரூபாய் பைவ் ஸ்டார்....பேருந்து  வந்தது..  பள்ளிக்கு சென்று விட்டாள்.

 அவுங்க சைடு ஆட்கள் எல்லாம் வெள்ளைகலர்...  நான்  திராவிட கலர்.... அந்த  நினைப்புல  எனக்கு சிவப்பு கலர் டீ ஷர்ட்  எடுத்துட்டா போல...

இந்த டீ ஷர்ட்டுல நீங்க ரொம்ப நல்லா இருங்கிங்க என்று அவள்   சொல்லிவிட்ட காரணத்தால்...

  இரண்டு நாளைக்கு ஒரு முறை  அந்த டீ ஷர்ட்டை போட்டுக்கொண்டு கடலுர் வாசிகளை  டரியல் ஆக்கி கொண்டு இருந்தேன்.

அந்த டீ ஷர்ட்இன்னமும்   என்னிடத்தில் இருக்கின்றது.

 காசாப்புக்கடை பாய் போல இருக்கடா என்று  என்னை பார்த்து சிரித்து  கேலி பேசினார்கள்.

கேலி பேசுபவர்களுக்கு  தெரியாது....

அந்த சிவப்பு கலர் டீ ஷர்ட்தான் என் வாழ்வின் முதல் பிறந்த நாள்  பரிசு என்று...

பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்
01/02/2015






நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

11 comments:

  1. காதலியிடம் பெற்ற முதல் பரிசு மறக்க முடியாததுதான்
    காதலில் வெற்றிபெற்று வாழ்விலும் வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துக்கள் நண்பரே

    ReplyDelete
  2. Nice post. Why senti? இன்று தங்கள் பிறந்த நாளா. ? வாழ்த்துக்கள் உங்கள் இருவருக்கும்

    ReplyDelete
  3. வாழ்த்திய நண்பர்களுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  4. Dear Brother many many happy returns of the day.

    ReplyDelete
  5. Anna Birthday wishes for both of you.

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner