isai-2015- இசை திரைவிமர்சனம். தமிழ்ல 2009 ஆம் ஆண்டு அவர் நடிப்பில் வெளியான  நியூட்டன் மூன்றாவது விதி திரைப்படம்தான் அவருக்கும் தமிழில் அவர் நடித்த கடைசி திரைப்படம். 
2005 ஆம்ஆண்டு அவர் இயக்கத்தில் வெளியான அன்பே ஆருயீரே திரைப்படத்துக்கு பிறகு  சரியாக பத்து வருடங்கள் கழித்து அவர் எழுதி இயக்கிஇருக்கும் தமிழ் திரைப்படம் இசை...


இந்த திரைப்படத்தில் முக்கியமான விஷயம் என்னவென்றால்... முதல் முறையாக இந்த திரைப்படத்துக்கு இசையமைத்து இருக்கின்றார்... அதனால் படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பு அது மட்டுமல்ல.. படத்துக்கான போட்டோ ஷூட்நடத்தி வெளியே வரவும்  இசை படத்தை பற்றிய பேச்சாகவே இருந்தது...

 அது மட்டுமல்ல.. சாவித்திரி என்ற நடிகையின் தாராளம்... படத்துக்கு மேலும் எதிர்பார்ப்பை கொடுத்தது என்றே சொல்ல வேண்டும். அதை விட இளையராஜா மற்றும்  ஏஆர் ரகுமான் இருவரின் கதை என்று வதந்தி பரவ படத்துக்கு மேலும் எதிர்பார்ப்பை  கிளப்பி விட்டது நிஜம்.

நான்கு வருட  போரராட்டத்துக்கு பிறகு ரிலிஸ் ஆகும் இந்த  திரைப்படம். எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிம் எகிறியது நிஜம்.

=======
இசை படத்தின் கதை என்ன...?

இசை ஆளுமைமிக்க  இரண்டு இசையமைப்பாளர்களில் ஒருவர் மற்றவனை பார்த்து பொறாமை பட்டால் என்னவாகும் என்பதுதான் படத்தின் ஒன்லைன்...

====
 எஸ்ஜே சூர்யா, சத்தியராஜ்  ஆளுமை மிக்க  இசையமைப்பார்கள்க நடித்து இருக்கின்றார்கள்.. சாவித்திரி  சூர்யா காதலியாக வருகின்றார்.. உதட்டு முத்தம் கொடுக்கின்றார்.

படத்தின் முதல் 30நிமிடங்கள் சுவாரஸ்யபடுத்துகின்றார்.. அதை விட  நாயகி அறிமுகம் அந்த செட்டுகள் எல்லாம் தெலுங்கு படம் பார்க்கும் உணர்வை கொடுக்கின்றன...
அழகம்பெருமாளிடம் சத்தியராஜ் துப்பி இசையமைக்கும் காட்சி போல படம் நெடுக இசைக்கு முக்கியத்துவம் கொடுக்க கூடிய காட்சிகள் இருக்கும் என்று எதிர்பார்த்தால்  படம் வேறு ஒரு ரூட்டில் பயணிக்கின்றது...,

இடைவேளைக்கு பிறகு... நிறைய இடங்களில் படம் பார்க்கும் நம்மை சோதிக்க  வைக்கின்றார்.

கிளைமாக்சில் நிமிர்ந்து பார்க்க வைத்த விஷயத்தை படம் நெடுகிலும்  சூர்யா  தூவி இருக்க வேண்டும்..

பொதுவா எஸ்ஜே  சூர்யா படத்தில் ஒரு கிளிவர்நஸ் இருக்கும் அது இந்த படத்தில் ஊசல் ஆடுகின்றது என்பதே நிஜம்.

படம் பார்க்கும் நமக்கு மிகப்பெரிய ஆறுதலை கொடுப்பவர் சாவித்திரிதான்... படம் முழுக்க  சீதுரு தாவணி அணிந்து படத்தை கவனிக்க விடாமல்  செய்கின்றார்...

சூர்யாவுக்கு  மச்சினிச்சியாக  நடித்து இருக்கும் நடிகை  சூர்யா காமிஷேஓனில் பத்து நிமிடத்தில்  இடைவேளைக்கு பிறகு வந்தாலும்  கவனம் ஈர்க்கின்றார்... ஏன் கவனம் ஈர்க்கின்றார் என்று படம் பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள்.

சத்தியராஜ் கஞ்சா கருப்பு வரும் இடங்களில் தியேட்டரில் கலகல... முக்கியமாக டீ வைக்கும் இடம் கிளவர்.

இசை பற்றி  ஒன்றும் சொல்வதற்கில்லை..இசையோடு வீசி பாடல் நன்றாக இருந்தாலும்ட சாவித்திரி தன் மைதா மாவு உடம்போடு வெறும் ஜாக்கெட் மற்றும் உள் பாவடையோடு ஆடும் காட்சிகளில்  அந்த பாடல் மனதில் பதிய மறுக்மதல் கற்பனை சனியன் வேறு வேறு விஷயங்களை யோசிக்க வைத்துள்ளது...


 கேவி ஆனந்ததின்  உதவியாளர் ஒளிப்பதிவாளர் சவுந்தர்ராஜன் பின்னி இருக்கின்றார்.. காடு அருவி  அருகே இருக்கும் செட் போன்றவை கண்ணுக்கு இனிமையாக இருக்கின்றது.. என்றாலும்  நிறைய காட்சிகள் ரொம்ப லேகாக இருக்கின்றன....
சர்ச்சில்  பாதிரியாராக நடிக்கும்  காட்சிகள் செமை லென்த்....  நிறைய இடங்களில்  சூர்யா நியூ படத்தில் வரும் சின்ன பையன் போலவே பேசுகின்றார்...

முதல் பாடலில்  எஸ்ஜே  சூர்யாவுக்கு வலப்பக்கம் ஆடும்  வெள்ளைக்கார பெண் ஷாரன் ஸ்டொன் போல  இருக்கின்றார் அதனாலே அவர் ஆடுவதை பார்க்காமல்  அந்த பெண்ணை மட்டும் பார்த்துக்கொண்டு இருந்தேன்..

=========
படத்தின் டிரைலர்..


=======
படக்குழுவினர் விபரம்.

Directed by S. J. Surya
Produced by S. Subbiah
Victor Raj Pandian
S. J. Surya
Written by S. J. Surya
Starring
S. J. Surya
Savithri
Music by S. J. Surya
Cinematography Soundararajan
Edited by K. M. Riyas
Production
company
SS Productions
Distributed by Annai Mary Madha Creations
Release dates
January 30, 2015[1]
Running time
190 minutes
Country India
Language Tamil
===
பைனல்கிக்.
 இந்த படம்  நடிப்பதோடு  நிறுத்தி இருந்தால் இந்த திரைப்படம்  வேறு ஒரு கட்டத்துக்கு சென்று இருக்கும் ஆனால் இசையமைத்துதான் ஆவேன்  என்று விடாப்பிடியாக இருந்த காரணத்தால்  பிள்ளையார் பிடிக்க போய்   என்ற பழ மொழியை நினைவுபடுத்துகின்றது.. இடைவேளைக்கு பிறகு வரும் காட்சிகள் அயர்சியை தருகின்றது...  கிளைமாக்ஸ் கொஞ்சம் ரிலிப் என்று சொல்ல  வேண்டும்.. இந்த படம்  எஸ்ஜேசூர்யா ரசிகர்களை கண்டிப்பாக மகிழ்ச்சியடைய வைக்கும். இந்த படம் பக்கா டைம்பாஸ் படம்.
=====
படத்தோட  ரேட்டிங்.
 பத்துக்கு ஆறு.
========
பிரியங்களுடன்

ஜாக்கிசேகர்.

 வீடியோ  விமர்சனம்.


நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

3 comments:

  1. உண்மையான விமர்சனம்...
    அருமை அண்ணா.

    ReplyDelete
  2. இந்தப் படத்தின் இறுதிக் காட்சியை 'செம டிவிஸ்ட்' என்று நீங்கள் நினைத்தால், தயவு செய்து 'முதல் தேதி' என்ற சிவாஜி படத்தை பாருங்கள்.

    http://sivigai.blogspot.com/2015/02/2015.html

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner