THE BEST OFFER-2013/உலக சினிமா/ இத்தாலி/ காதல் படுத்தும் பாட்டில் சிக்கிய பெரியவர்.காதல் என்ற  அனுபவம் மட்டும்  இந்த பூவுலகில்  இல்லையென்று நினைத்து  சற்றே கற்பனையில்  யோசித்து பாருங்கள்...

 கவிதை இல்லை,

நேசம் இல்லை,

பரிவு இல்லை

காமம் இல்லை

இலக்கியம் இல்லை

 போர் இல்லை

  ஆண் கம்பீரம் காட்ட வேண்டிய அவசியம் இல்லை.

கள்ளக்காதலன் கள்ளக்காதலி  டைட்டில் இல்லை.

இப்படி பக்கம்  பக்கமாக அடிக்கிக்கொண்டு போகலாம்.... அதை நானும் விரும்பவில்லை.... அதை படிக்கும்  நீங்களும் விரும்பமாட்டீர்கள் என்று நம்புகின்றேன்.


  முதல் மரியாதை படம் பார்த்து இருக்கின்றீர்களா?  

சிவாஜி சிங்கம் போல டிகினிட்டி போல நடந்துக்குவார்... ஆனா  மீன்  விக்கற ராதா அந்த ஊருக்கு பரிசில் ஓட்ட வந்த பிறகுதான்..... அவரோட வாழ்க்கையில் பெரிய சந்தோஷத்தை அடைவார்...

இத்தனைக்கு  ராதாவுக்கு சிவாஜிக்கும் உடல் ரீதியான தொடர்பு கூட இருக்காது... 
((அப்படி தமிழ் சினிமாவுல  காட்டினாத்தான் நம்ம ஆளு மன்னிப்பான் ...மதிப்பான் ... இல்லைன்னா இந்த வயசுல   அந்த  ஆளுக்கு கிடைச்சிது எனக்கு கிடைக்கலைன்னு  பொருமி பொருமி  பேஸ்புக்குல ஒரு ஸ்டேட்டஸ் போடுவான்.. இந்த வயதில்  அவரை விட 30 வயது சின்ன பெண்ணுடன் கும்மாளம்  போடுகின்றாரே  இதை வன்மையாக கண்டிக்கறேன்னு சொல்லுவான்... அவனுக்கு அதரவா ஒரு அல்லக்கை கூட்டம்  ஆமாம் ஆமாம் அப்படின்னு கத்திக்கிட்டு இருக்கும்.. சமீபத்துல மலையாளத்துல  மம்முட்டி நடிச்ச படம்.. பால்யகால சகி...  மலையாளத்தில்  மிக பிரபல எழுத்தாளர் வைக்கம் முகமது பஷிர் எழுதிய நாவ்ல் பால்யகால சகி... இதை அப்படியே படமா எடுத்தாங்க...  மம்முட்டிக்கு  ஜோடி இஷா தல்வார் நடிச்சி இருந்தாங்க.. மம்முட்டிக்கு 62 வயசு... இஷா தல்வாருக்கு 26  வயசு... படத்துல    நாயகனின் காதலை காண்பிக்க இயக்குனர் கொஞ்சம் ரொமாண்டிக் ஷாட்ஸ் வைக்க அதுக்கு  கேரளாவில் அதற்கு பெரிய எதிர்ப்பு கிளம்பியது.... சிவாஜி படத்துல ரஜினி ஷரையோ கூட லவ் பண்ணும் போது...  ஜொள்ளு விட்டுக்கிட்டே அடப்பாவின்னு சொன்ன அதே  தமிழ் சமுகம்தான்... ரிக்ஷாக்காரன் படத்துல சின்ன பொண்ணு மஞ்சுளா கூட  தலைவர் எம்ஜிஆர் ஜோடியா நடிக்கும் போது எதுவும் சொல்லலை.. கரெக்ட்டா???? .))

 ரைட்  டாபிக்கை விட்டு எங்கேயோ போறம் இல்லை..??
 விஷயத்துக்கு வருவோம்..

 1988 ஆம் ஆண்டு இத்தாலியில்  ஒஒரு படம் ரிலிசாகி.... உலகம் எங்கும் கொண்டாடப்பட்டது.... அது அத்தனை பேர் வாழ்க்கையிலும் நீக்கமற நிறைந்து இருக்கும் தியேட்டருக்கு ஒரு சின்ன பையனுக்கும் இருந்த  உறவை மிக அழகாக உணர்வு பூர்வமாக சினிமா பாரடைசோ படத்துல காட்சியா  வச்சி இருப்பார்... 


 அவர்  எடுத்த இரண்டு படங்கள்  அவர் பெயர் சொல்லும் திரைப்படங்கள்...
 சினிமா பாரடைசோ... மற்றது... ஸ்டார் மேக்கர். சினிமா பாரடைசோ படத்தை திரும்ப ஒரு வாட்டி பார்க்கும் போதுதான்...  மகிழ்வித்து மண்ணாய் போன தியேட்டர்கள் தொடர் எழுத ஆரம்பிச்சேன்.. நேரம் இல்லாத காரணத்தால் ஒரு தியேட்டர் பத்தி எழுதி அப்படியேநிக்குது.... அதை வாசிக்க இங்கே கிளிக்கவும்.

 ரைட் சினிமா பாரடைசோ இயக்குனர்  Giuseppe Tornatore இயக்கத்தில்  கடந்த வருடம் 2013 ஜனவரியில் வெளி வந்த திரைப்படம்தான்  பெஸ்ட் ஆப்பர்


 சான்சே இல்லை... மனுஷன் பின்னி எடுத்து இருக்கான்...57 வயசாகும் இந்த இத்தாலி  டைரக்டர் எடுத்த இந்த திரைப்படம்...  காதலும் காமமும்  கட்டையில் போற  வரைக்கும் வாழ்க்கையில்   வியாபிக்கும் என்பதுதான் படம் சொல்லும்  சேதி...

 நம்ம ஆளுக்கு.. 50 தாண்டினா  குருவி செத்துடனும்ன்னு நினைக்கறான்... இல்லைன்னா வலுக்கட்டாயமா சாகடிச்சிடுறான்.. 

(( நன்றி யாமிருக்க பயமேன் திரைப்படக்குழு.... குருவியை ஊர்  உலகுக்கு அறிய வைத்தமைக்கு.))
=========
 பெஸ்ட் ஆப்பர் படத்தின் கதை என்ன?

  பெஸ்ட் ஆப்பர்   பழங்கால பொருட்களை  சேகரிக்கும்   விஜில் என்பவர்  விலை மதிக்க முடியாத ஒவியங்களை சேகரிப்பதுதான் அவர் பொழுது போக்கு... கல்யாணம் கூட  பண்ணிக்கலை... தனியா இருக்கார்... ஒரு   ஏலக்கடையை வச்சி நடத்திக்கிட்டு இருக்கார்... பர்பெக்ட் ஜென்டில் மேன்....   

வயசு... ஒரு 60 இருக்கும்... 

ஆனா யாரு கிட்டயும் ஒரு வார்த்தை கூட மனுஷன் பேச மாட்டான்...  கடலும் காவேரிபோல வீடு வச்சிக்கிட்டு நைட்டு டின்னருக்கு அப்புறம் வேலைக்காரங்க  எல்லாரையும்  வீட்டுக்கு அனுப்பிச்சிடும் டைப்....

  ஒரு நிமிடத்தை கூட வேஸ்ட்டாக்காத  டைப்...

   அந்த   ஆளுக்கு ஒரு போன் வருது...  ஒரு சின்ன பொண்ணு குரல்... அப்பா அம்மா செத்து போயிட்டாங்க.. எங்கிட்ட ஒரு வில்லா இருக்கு.. அதுல பழங்கால அரிய பொருட்கள் இருக்கு... அதை பார்த்து நீங்க  ரேட் சொன்னா போதும் என்கின்றது..
அந்த  போன்காலில் இருந்து  வாழ்க்கை மாறுகின்றது.  அந்த பெரிய மனிதர் என்னவாகின்றார் என்பதுதான் கதை...
=====
காதல்  படுத்தும் பாட்டினை காட்சிகளாக விவரித்த விதம் .. கொஞ்சம் கொஞ்சமாக அந்த  போன் குரலுக்காக நிறைய விட்டுக்கொடுத்து செல்லும் அழகு... சான்சே இல்லை....

 படத்துல பிரேம் பை  பிரேம் மிக அழகாக படம் பிடித்து இருக்கின்றார்கள்.... தன் ஆஸ்த்தியை விட  ஒரு பெண்ணுக்கா எல்லா வற்றையும் விட்டுக்கொடுக்க வேண்டும் என்றால் அந்த பெண் எவ்வளவு அழகாக இருக்க வேண்டும்.. அப்படி ஒரு  தேவதையை  தேர்வு செய்து இருக்கும் இயக்குனர் ஒரு கலாரசிகன்தான்..


 காமத்தையும் சென்டிமென்டையும் மிக  சரியாக கலந்து கொடுக்கும் இயக்குனர் Giuseppe Tornatore ...

 முக்கியமாக கிளைமாக்சில் இரண்டு பேருடைய உடலுறவு காட்சிகளோடு இன்டர் கட்டில் காட்டும் இடங்கள்.. அது எந்த அளவுக்கு அந்த  வயதானவனை பாதித்து இருக்கின்றது என்பதை காட்சிகள் மூலம்  உணர வைத்த அழகு இருக்கின்றதே... அதுதான் சினிமா...

 ஒரு இடத்துல கூட புலம்வது போல  டயலாக் வைக்கலை.... டீ முதல் முதலாக குடுக்கும்  காட்சியில் இருந்து.. அசத்தி இருக்கின்றார்கள்...  படம் பார்க்கும்  போதே யூகிக்கும்  திரைக்கதை என்றாலும் .. அந்த கிளைமாக்ஸ் ஷாட்டில் சர்வர் இடம் பேசிவிட்டு கேமரா பின்னாடி லென்தியாக செல்லும் அந்த காட்சியும்... அது சொல்லும் உணர்வுகளும் ஏராளம்...

 விர்ஜில் ஓல்ட் மேன் கேரக்டரில் நடித்த  Geoffrey Rush நடிப்பு சான்சே இல்லை.... மனுஷன் என்னமா பின்னறான்....??? கிங் ஸ்பீச்.. படத்துல தெத்துவாய்  ராஜாவுக்கு  ஸ்பீச் தெரபி   கற்றுக்கொடுத்த கேரக்டர்ல பின்னு எடுத்து பெஸ்ட் சப்போர்ட்டிங் ஆக்டர் விருதுகளை அள்ளி குவிச்ச மனுஷன்...  இதுலயும் அசத்தி இருக்கான்... அதுவும்.. அந்த ஏலக்கடையில் ஏலம்   விடும் அழகு இருக்கின்றதே.. தொழில் முறை ஏலக்காரன் போல...  அருமை... அருமை...
====

 படத்தின் டிரைலர்.


========
படக்குழுவினர் விபரம்.


Directed by Giuseppe Tornatore
Produced by Isabella Cocuzza
Arturo Paglia
Written by Giuseppe Tornatore
Starring
Geoffrey Rush
Jim Sturgess
Sylvia Hoeks
Donald Sutherland
Music by Ennio Morricone
Cinematography Fabio Zamarion
Editing by Massimo Quaglia
Studio Paco Cinematografica
Warner Bros.
Distributed by Warner Bros.
Release dates
1 January 2013
Running time 124 minutes
Country Italy
Language English
Budget $18 million
Box office $19,255,873
=============
  பைனல் கிக்
 கண்டிப்பாக பார்த்தே தீர வேண்டிய  திரைப்படம்.... அதுவும் 50 வயதை கடந்தவர்கள் நிச்சயம் பார்க்க வேண்டிய திரைப்படம்... மனித உணர்வுகைளை பதிவு செய்வதிலேயே பாசங்கோடு  பதிவு செய்வதுதான் நம் சினிமா.. அப்புறம் எப்படி கலை வளரும்???
மிக அழகாக உணர்வுகளை  கடைசி 15 நிமிடத்தில் பதிவு செய்து இருக்கின்றார்கள்..
 சான்சே இல்ல.... கண்டிப்பாக  படத்தை பாருங்க...

=======
படத்தோட ரேட்டிங்
பத்துக்கு எழரை
====


பிரியங்களுடன்

ஜாக்கிசேகர்.


நினைப்பது அல்ல நீ 
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS... 

7 comments:

 1. டவுன்லோடு போட்றலாமாண்ணே.

  ReplyDelete
 2. where download this movie jackie sir?

  ReplyDelete
 3. where to download these movies jackie sir? or we can buy in burma bazar shop?

  ReplyDelete
 4. Www.yify-torrents.com. Lot of good movies with blue Ray quality available here. // Www.kickass.to // also good site

  ReplyDelete
 5. http://kickass.to/the-best-offer-2013-brrip-xvid-s4a-t7426798.html Torrent link

  ReplyDelete
 6. jackie , indha msg type pannnum bodhu nanum kitta thatta Mr.Oldman oda mananelamaila thaan irukken , but i am not old .
  kadhal manasula vandhutta adhu oru theee thalumbu mathiri pogadhu. room fulla photographs irukkura mathiri irukku after watching this. a very very touchy movie and i am feel pitty on the charecterization of Mr.Geoffrey Rush. thanks jackie once again

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner