THE MAN FROM NOWHERE /2010/ கொரியா/அவன் யார்?




உலக அளவில் கதற கதற அனைத்து   நாட்டு இயக்குனராலும் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளான திரைக்கதை எது  தெரியுமா?


 ஒரு காட்டுத்தனமான அமைதியான ஆள்.... அவன் யாருன்னே யாருக்கும் தெரியாது..?.. அவன் ஒரு  புரியாத புதிர்... அவனுக்கு இரக்கம் என்பதே இல்லை. யாரிடமும் பேசமாட்டான்.. தனிமைதான் அவன் வாழ்க்கை...

எல்லோருக்கும் அவன் யார் என்று தெரிந்துக்கொள்ள வேண்டும் என்று படம் பார்க்கும் அத்தனை பேருக்கும் இருக்கும் அது மட்டுமல்ல...  படத்தில் நடிக்கும்  அத்தனை கேரக்டர்கள் முதற்கொண்டு அவன் யார் என்று அறிந்துக்கொள்ள ஆசை...

ஆனா திரைக்கைதை  ஆசிரியர்... அவன் யார் என்று எளிதில்  சஸ்பென்ஸ்சை உடைக்க மாட்டார்.... அவன் யாரு தெரியுமா? என்று  ஆரம்பிக்கும் போது எல்லாம்  அதை சொல்ல விடாமல் ஏதோ ஒரு பிரச்சனை வந்து தடுத்துக்கொண்டே இருக்கும்.

 கண்டிப்பாக அந்த அமைதியான  ஆளை எதிர்  கேள்வி கேட்டு பாசத்தில் கட்டிப்பொட் சின்ன பையனோ.. அல்லது  சின்ன பெண்ணோ கதையில் வர வேண்டும்.,.. அவர்கள் அவன் வாழ்க்கையில்  ஒரு  தென்றலாய் நுழைவார்கள்.. யாருக்கும் மசியாத காட்டுத்தனமான ஆள்.. அந்த குழந்தையின் அன்புக்கு  முன்னால் மண்டியிட்டு போவான்..
அவன் யாரு அப்படின்றதை குழந்தைக்கு கதை  சொல்வது மூலமாக  தன் கடந்தகாலகதையை சொல்லுவான்.. அல்லது மிஷ்கின் போல கருப்பு கண்ணாடியை கழட்டி வச்சிட்டு கல்லரையில் மெழுகு வத்தி ஏத்தி  வச்சிட்டு  ஐந்து  நிமிஷத்துக்கு கேமரா  பார்த்துக்கிட்டு சிலேடையா கதை சொல்லலாம்...

 ரைட் விஷயத்துக்கு வருவோம்....

அந்த குழந்தைக்கு எப்படியும் எந்த ரூபத்திலியாவது  ஆபத்து ஏற்படும்.. அதை தடுத்து அந்தகுழந்தையை  ஹீரோ காப்பாற்றுவான்.. சில நேரங்களில் தன் உயிரையும் கொடுத்து காப்பாற்றும் போது   இறந்தவனின் உடல் பார்த்து குழந்தை  எழுந்திரு அங்கிள் எழுந்திரு அங்கிள் என அழ...  படம் பாக்கும் நாமும் அழுது  விட்டு ,கர்சிப் எடுத்து கண் துடைக்கையில் பைக்   டோக்கன் தவற விட்டு விட்டு     வெளியே வந்து கேனை போல தேடிக்கொண்டு இருப்போம்...

உதாரணத்துக்கு

பூவிழி வாசலிலே....

ஓநாயும் ஆட்டுக்குட்டியும்

மணிரத்னம் கூட  அஞ்சலி படத்துல  பிரபு கேரக்டரை சின்ன   போர்ஷன்ல அதே  போல நடிக்க வச்சி இருப்பார்....

மொத்த டிரான்ஸ் போர்டர் படமும்  அப்படித்தான்.. கொஞ்சம் வித்தியாசப்படுத்தி காட்ட வேண்டும் என்றால் அந்த குழந்தையை  பதினெட்டு  வயது பருவ பெண்ணாக ஆக்கி விட வேண்டும்... முக்கியமாக  அந்த பெண் ஜீன்ஸ் டீஷர்ட் போட்டு இருப்பாள்.... முக்கியமாக வெள்ளை பனியன் கண்டிப்பாக  அணி வேண்டும் என்பது விதி...

தமிழ் படமாக இருந்தால்  அந்த பெண்... ஹீரோவோடு ஒரு தலை காதலை வளர்த்துக்கொள்ளுவாள்..  கடைசியில் வயது  வித்தியாசம் காட்டி   தமிழ் ஹீரோ  திருமணம் செய்துக்கொள்ள மறுத்து விடுவார்... ஆனால்  தெலுங்கு ஹீரோ அதையும் கரேக்ட் பண்ணி பெட்ரூம்ல கதவை சாத்தும் போது கண்ணடிபார்... அத்தோடு படம் முடிந்து  கூட்டம் கலைய தொடங்கும்.,

 ஆங்கிலத்தில் இது  போல நிறைய படங்கள் வந்து இருக்கின்றன.... நம்ம பிளாக் அண்டு ஒயிட் காலத்திலேயே இது போன்ற நிறைய படங்கள் வந்து இருக்கின்றன...இப்போதைக்கு  யோசித்து  எழுத நேரம்இல்லை  என்பதால் அப்படியே கதைக்கு அப்பீட் ஆயிக்கிறேன்..

இதே கதையம்சமுள்ள படம்  ஒன்னு THE  MAN FROM NOWHERE ன்னு 2010ல ரிலிஸ் ஆகி செக்கை போடு போட்டுச்சி..... கொரிய வரலாற்று கொள்ளை காசு சம்பாரிச்சி கொடுத்த படம்ன்னு சொல்லறாங்க...

 படத்தோட கதை ....????

யோவ் வெடிய வெடிய ராமாயணம் கேட்டுட்டு சீதைக்கு ராமன்  சித்தப்பாவான்னு கேட்பியா? சொல்லு---  முன்னாடி வரிசைய சொல்லி கிளாஸ்  எடுத்தது எதுக்கிய்யா..-?

பட்.. சாப்ட் கேரக்டர்ல  Won Bin  அடிச்சி ஆடி இருக்காப்புல.... இதுக்கு முன்னாடி அதாவது  2009 ஆம் ஆண்டு கொரியாவுல  வெளி வந்த சஸ்பென்ஸ் திரில்லர்  திரைப்படம் மதர்... அந்த படத்துல  Won Bin கீலா  போலவே   நடிச்சி இருப்பார்... மதர் படத்தை பார்க்காதவங்க உடனே பாருங்க.. அப்படியும் இல்லையா.?? உடனே   அந்த படத்தை பத்தி நான் எழுதிய பதிவை படிக்க இங்கேகிளிக்கவும்.


இந்த படத்தோட டைரக்டர்  Lee Jeong-beom மோதல்ல ஷார்ட் பிலிம் எல்லாம் எடுத்துக்கிட்டு இருந்தார்... அதுக்கு அப்புறம்  ஸ்கிரிப்ட் ரைட்டரா  மாறி  அப்புறம்  டைரக்டரா மாறி இந்த படத்தை  எடுத்து கொழுத்த லாபத்தையும் புகழையும் பார்த்தவர்...

 படத்துல ஹீரோயிசத்தை  கட்டமைக்கும் காட்சிகள்... அந்த டிரான்சிஷன் எல்லாம் கச்சதமா செஞ்சி இருப்பார்...


நல்ல  கேரக்டர் சேஷன்... முக்கியமா வில்லன் கேரக்டர்... மொத்து  மொத்துன்னு மூஞ்சியில  அடி வாங்கிட்டு அந்த கேரக்டர் விஸ்வருபம் எடுக்கற கேரக்டர் இருக்கே...  சான்சே இல்ல....

========

படத்தோட டிரைலர்..


================
Produced by    Lee Tae-heon
Written by        Lee Jeong-beom
Starring           Won Bin
Kim Sae-ron
Music by          Shim Hyun-jeong
Cinematography          Lee Tae-yoon
Editing by        Kim Sang-beom
Distributed by  CJ Entertainment
Release dates  
August 4, 2010
Running time   119 minutes
Country           South Korea
Language        Korean
Box office         $43,059,790
directed by       Lee Jeong-beom
Produced by    Lee Tae-heon
Written by        Lee Jeong-beom
Starring           Won Bin
Kim Sae-ron
Music by          Shim Hyun-jeong
Cinematography          Lee Tae-yoon
Editing by        Kim Sang-beom
Distributed by  CJ Entertainment
Release dates  
August 4, 2010
Running time   119 minutes
Country           South Korea
Language        Korean
Box office         $43,059,790
===============
பைனல்கிக்.

இந்த படம் பார்க்க வேண்டிய திரைப்படம்... நல்ல சஸ்பென்ஸ்  ஆக்ஷன் திரில்லர் படம் பார்க்கறவங்களுக்கு இந்த படம்  கண்டிப்பா   பிடிக்கும் ..  முக்கியமா கிரைம் படத்துக்கு ஒரு ஸ்டைலான இயக்கம்  தேவை படும்... அது இந்த படத்துல கண்டிப்பா உண்டு... அவசியம் பார்க்கலாம்... நான் படம் டைரக்ட்  பண்ணும் போது கண்டிப்பா இப்படி ஒரு படம் ஆக்ஷன் பிளாக் மேட்டர்ல  பண்ணுவேன்....

======
படத்தோட ரேட்டிங்.
 பத்துக்கு ஏழு.
======
 பிரியங்களுடன்

ஜாக்கிசேகர்.

====
நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 


4 comments:

  1. //நான் படம் டைரக்ட் பண்ணும் போது கண்டிப்பா இப்படி ஒரு படம் ஆக்ஷன் பிளாக் மேட்டர்ல பண்ணுவேன்....//

    Super anna.... (y)

    ReplyDelete
  2. நான் படம் டைரக்ட் பண்ணும் போது கண்டிப்பா இப்படி ஒரு படம் ஆக்ஷன் பிளாக் மேட்டர்ல பண்ணுவேன்
    ippa neenga asst. directora?

    ReplyDelete
  3. Annaa .. Please do write about the following movies in your style ... Want to know your view/feeling on the same ... Your way of writing is very emotional with humor and commercial elements.. you can able to mesmerize a common man feelings with your writings anna.. the list as follows (I am started reading your web a month before only, so if you already written about the below movies, kindly provide me the links) :

    Shasank Redemption
    God Father
    Forrest Gump
    Buried
    The lives of Others
    Life is Beautiful
    Schindlers List
    Saving the private ryan
    Citizen Kane
    Gone with the wind
    Casablanca
    Good Bad Ugly
    Psycho
    Dial M for Murder
    Pursuit of Happiness
    I am Legend
    Seven
    Troy
    Usual Suspects
    Good Fellas
    Scarface
    500 Days of Summer
    Wolf of the Wall Street
    Cast Away
    Pirates of the Carribean
    Shining
    Ring
    Mirrors
    Quentin Tarantino Movies like ( Pulp Fiction, Reservoir Dogs, Inglorious Bastards etc.)
    Prestige
    Momento
    Inception
    Birds
    One who fly over the cuckoos nest
    Rain Men
    Scent of a Women
    Dog Day Afternoon
    Motor Cycle Diaries
    Che
    Gandhi
    Shutter Island
    Sixth Sense
    Silence of the Lamps

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner