NEDUNCHAALAI-2014/ நெடுஞ்சாலை/ சினிமா விமர்சனம்

  


ஒரு படத்தை பத்தி எழுதும் போது ரொம்ப ரசிச்சி ருசிச்சி எழுதனும்ன்னு நினைச்சியே   எழுத நினைத்து   சோம்பேறிதனத்தால் அப்புறம் எழுதலாம் என்று  நினைத்து நினைத்து எழுத முடியாமல் போய் விட்ட படங்களின் லிஸ்ட்  எடுத்தால் நிச்சயம் 300 படத்தக்கு மேல் தோன்றும் ... இனி கால் பக்கமோ அரை பக்கமோ என்ன  தோன்றுகின்றதோ அதை எழுதி போஸ்ட் பண்ணி விடலாம் என்று முடிவு எடுத்துள்ளேன்..... அப்படி தமிழில் நான்  ரசித்து ருசித்து எழுத வேண்டும் என்று நான்  நினைத்த படம்..  இதற்கு தானே  ஆசைப்பட்டாய் பாலகுமாரா... பட் இன்னும் எழுத முடியலவில்லை.... அவ்வளவு அற்புதமா அந்த படத்துல கேரக்டர் சேஷன் பண்ணி இருப்பாங்க... சான்சே இல்லை...

 அதே போல  சமீபத்தில்தான்  நெடுஞ்சாலை படம் பார்த்தேன்... வாவ் மிக அருமையான கேரக்டர் சேஷன்.. அற்புதமான மேக்கிங்... நம்ம ஊர்லயே அம்புட்டு கதை இருக்குங்கோ... ஆனா அதை சுவாரஸ்யமா காட்சி படுத்தும் வித்தைதான் நமக்கு கைவரமாட்டேங்குது என்ன செய்ய??

பட் சில்லுன்னு  ஒரு காதல் இயக்குனர் கிருஷ்ணா ரொம்பவே நல்லா பண்ணி இருக்கார்... கிளைமாக்ஸ் மட்டும் எனக்கு விருப்பம் இல்லை.. பட் இந்த  படம்  கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்...  மொத ஒரு 40 நிமிஷத்துக்கு அசத்திட்டாங்கன்னே சொல்லலாம்..

லாரி  ஓட்டுனர்கள் மற்றும் முதலாளிகளின் களம்...  ரொம்ப டீடெயில்டா படத்தை கொடுத்து இருக்காங்க...

தார் பாய் முருகன் வாகன விபத்தில் பொறக்கறதில் இருந்து அவன் லாரியில்  பொருட்களை  கன்னம் வைப்பது வரை மிக நேர்த்தியான மேக்கிங்கில் படம் பண்ணி இருக்கின்றார்கள்..

 பொதுவாக பெல்லாரி சைட்ல இது போல நிறைய  நடக்கும்ன்னு எங்க ஆயா சொல்லி கேள்விபட்டு இருக்கேன்...

அதே போல இந்த படத்துல வரும் போலிஸ் இன்ஸ்பெக்டர்  கேரக்டர் உஉடல் மொழி நடிப்பு என்று பின்னி இருக்கின்றார்...  இயக்குனர் நல்லா வேலை  வாங்கி இருக்கின்றார்.....
 படத்துல எனக்கு  ரொம்ப  பிடிச்ச கேரக்டர்  மலையாள நடிகர் சலீம் குமார்  மனுஷன் பிரிச்சி மேஞ்சி இருக்கான்.... என்ன நடிப்பு என்ன உடல் மொழி....  பொண்டாட்டியை கூட்டிக்கொடுக்கும் கேரக்டர்தான்... அருமை. படத்தை தாங்கி பிடிக்கறது.. மங்கா கேரக்டர்ல நடிச்சி இருக்கும்  ஷிவாதா.. இந்த படத்துல  அறிமுகம்...  பொண்ணு பாவடை சட்டை போட்டு பின்னு இருக்கு...
 முருகன்  கேரக்டருக்கும் மங்கா கேரக்டருக்கும் காதல் பூக்கும் காட்சிகள்  மிக அருமை.
 படத்துல  நிறைய டுவிஸ்ட் பட்.. சிலது  யூகித்து விடலாம்... பட் நல்ல மேக்கிங்... சத்யாவின்  இசை படத்துக்கு பெரிய பலம்.   கேமராமேன் ராஜாவேல் திறமைக்கு  சான்றான முருகனின் பர்ஸ்ட்   அசைன்ட்மன்ட்டை  படம் பிடித்து இருக்கும்  விதத்தை சொல்லலாம்...

===========
படக்குழுவினர் விபரம்

Directed by N. Krishna
Produced by Aaju
C.Soundarajan
Starring Aari
Shivada Nair
Prashant Narayanan
Music by C. Sathya
Cinematography Rajavel
Editing by Kishore Te.
Studio Fine Focus
Distributed by Red Giant Movies
Release dates March 28, 2014
Country India
Language Tamil
=========
பைன்ல கிக்
 அவசியம் பார்க்க வேண்டிய திரைப்படம்.  வாழ்த்துகள் முக்கியமாக இது போன்ற கதை களனை தேர்வு செய்தமைக்கு... இயக்குனர் கிருஷ்ணாவுக்கு வாழ்த்துகள்.ஹரி இந்த படத்துல நடிப்புல பின்னி எடுக்கின்றார்...  இந்த படம் அவரு கேரியர்ல ஒரு பிரேக்தான். அதே போல அந்த போலிஸ்காரர் மற்றும்   சலீம் குமாரை  தமிழ் திரையுலகம் தத்து எடுத்துக்கொள்ள வேண்டுமாய் கேட்டுக்கொள்கின்றேன்

======
படத்தோட ரேட்டிங்
 பத்துக்கு ஆறு.

பிரியங்களுடன்


ஜாக்கிசேகர்..


நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...

 

4 comments:

 1. பாஸ், நீங்க சொன்ன மாதிரி இது நல்ல படம்தான்.ஹீரோ கூட நல்லாதான் நடிச்சிருக்கார்....அவர எதுவுமே சொல்லலயே!!!அவரு மேல எதாவது கோபமா???

  ReplyDelete
 2. Boss tharpay murugan solli oruthara nan madurai areale kelvipattukken

  ReplyDelete
 3. இந்த பட ஹீரோ பருத்தி வீரன் கார்த்தி மாறியே Manerism பண்றார். பாட்டுலாம் அது மாறியே இருக்கு. லுங்கிய தொடைக்கு மேல தூக்கி கட்றதுனு பருத்தி வீரன ஞாபகபடுத்துது

  ReplyDelete
 4. this attempt to be appreciated.... gud making....

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner