SECRETLY GREATLY -2013/உலக சினிமா/தென்கொரியா/ மூன்று உளவாளிகளின் வாழ்வா சாவா போராட்டம்

முதல்ல இந்த பதிவை படிக்கும் முன்  அல்லது இந்த படத்தை பார்க்கும் முன் நாம கண்டிப்பா   கொரியாவை பத்தி தெரிஞ்சிக்கனும் சாரி...
 சாரி...  1945 வரைக்கும் தான் கொரியாவா இருந்திச்சி.... அப்புறம் சவுத் கொரியா நார்த் கொரியான்னு ரெண்டா பிரிஞ்சிடுச்சி....

கொரியாவுக்குன்னு பெரிய பாராம்பரியம் இருக்கு.... இந்த ஜப்பான்காரன்க ரொம்ப தடிப்புல இருந்த நேரத்துல  நாடு பிடிக்கும் கொள்கையின் படி 1910 ஆண்டு  கொரியாவை  போர்ல ஜெயிச்சி  ஜப்பான்காரன் கட்டுப்பாட்டுல  கொரியா  சின்ன வீடு போல இருக்க ஆரம்பிச்சிச்சி... எல்லாரும் சப்பை மூக்கா இருந்ததால  எந்த பிரச்சனையும் இல்லை... ஒருவேளை ஜப்பானின் காலனி நாடா நாம இருந்து இருக்கறதா கொஞ்சம் கற்பனை பண்ணி பார்த்துக்கோங்க... செம ஜாலியா இருக்கும்   இல்லை...

 ரைட்டு இப்படியே போய்க்கிட்டு இருந்துச்சி... இரண்டாம் உலக போர் வந்துச்சி... கொரியாவுக்கு சனியன்  அமெரிக்காகாரன்  ரஷ்யாக்காரன் பனியன் வழியா வர ஆரம்பிச்சிடுச்சி. இரண்டாம் உலக போரில் ஜப்பான் துண்டைக்காணோம் துணியை காணோம் என ஓட..

ரஷ்யாகாரன் கொஞ்சம்.... அமெரிக்காகாரன் கொஞ்சம்ன்னு   பிரட் ஆம்லேட்டுல போட்ட பிரட்டு போல இரண்டா பிரிச்சிக்கிட்டானுங்க... அப்ப நடுவுல இருக்கும் ஆம்லேட்..... அதான் கொரியாகாரன்களோட... விருப்பம் ஆசை ஆபிலாஷைக்கு வச்சிக்கோங்களேன்.... அதை தூக்கி நாய்க்கிட்ட போட்டுட்டு இரண்டு பேரு என் மயித்துக்கு என்னன்னு போயிட்டானங்க...

ரஷ்யா கட்டுப்பாட்டுல இருந்த  பகுதி.... வடகொரியா.... அமெரிக்காகாரன் கட்டுப்பாட்டுல இருந்த பகுதி தென் கொரியா....

அதாவது ஒரு காலத்துல முழு கொரியாவுக்கும் எதிரி யாருன்னு  பார்த்தா ஜப்பான்காரன்.... ஆனா இன்னைக்கு  நிலைமை அப்படி இல்லை.. 1953 இறுதியில்   வடகொரியா தென் கொரியா பிரிஞ்சிடுச்சி.... இந்த இரண்டு  பேரும் பிரிஞ்சதுல.. ரஷ்யாகாரனும், அமெரிக்காகாரனும் பெரும் பங்கு வகிக்கறானுங்க...

 ஜப்பான்காரன் ஒரு காலத்துல  எதிரியா  இருந்தான்.... ஆனா இன்னைக்கு பாருங்க... சகோதர யுத்ததுல கொரியா காரனுங்க அடிச்சிக்கிட்டு சாகரானுங்க...

தென்  கொரியா வெளிப்படையான பொருளாதார கொள்கைகாரணமா  பெரும் வளர்ச்சி பெற்று செழிப்போட இருக்கு... ஆனா வட கொரியாவுல கம்யூனிச   சர்வாதிகார ஆட்சி நடக்கறதால... எந்த வளர்ச்சியும்.. இல்லை.. பெரும் தொகை ராணுவத்துக்கு செலவிடறாங்க.. எதிர்த்து கேள்வி கேட்டா... நாயை விட்டு கடிக்க வச்சே கொன்று விடுவார்கள்.

வளர்ச்சி இல்லை.... போலி சித்தாந்தம் பேசிக்கிட்டு மக்களை நாறடிச்சிக்கிட்டு அமெரிக்காவை மிரட்ட அணுகுண்டு சோதனை நடத்திக்கிட்டு  பெரிய அழிவை சந்திச்சிக்கிட்டு இருக்கு.... நார்த் கொரியாவுல எல்லாம் ராணுவம்தான்... அது சொல்லறதுதான் சட்டம்.... ஜனநாயகம்ன்னு  பேச்சுக்கே இடமில்லை.. அது அப்படித்தான்.

ஒரு சின்ன உதாரணம்... நைட்டு எடுத்த சார்ட்டிலைட் போட்டோவை  உங்களுக்கு கொடுக்கறேன்.. பாருங்க.. நைட்டுல சவுத் கொரியா எப்படி ஜகஜோதியா இருக்குன்னு... அதே போல  நார்த் கொரியாவை பாருங்க... கரண்டுல  தமிழ்நாடு  அழுது வடியறது போல அழுது வடியுது  பாருங்க....


ஒரே மொழி ஒரே காலாச்சாரம்... ஆனாலும் எப்படி  பாக்கிஸ்தான் பிரிஞ்சதில் இருந்து எப்படி நமக்கு தலைவலியோ அது போல சவுத் கொரியாவுக்கு நார்த்கொரியா தலைவலிதான்...

இப்ப கூட ரீசன்ட்டா அமெரிக்க அதிபர்  ஒபாமா  தென் கொரியாவுக்கு போனார். ஆசியாவில் ராணுவ தளங்களை நிறுவ மேற்கொண்ட ஆசியா பயணம்...  அதனால் ஒபாமா தென் கொரியாவுக்கு போயி அங்க இருக்கற  பாராம்பரியம் மிக்க  அரண்மணை எல்லாம் சுத்தி பார்த்துட்டு  நார்த் கொரியாவுக்கு எச்சரிக்கை விட்டார்... 

காண்டாயி நார்த்  கொரிய என்ன சொல்லிச்சி தெரியுமா-?ஒரு  வாரத்துக்கு  முன்ன  இங்க கீழ இருக்கும் பத்திரிக்கை செய்தியை  பாருங்க.. அப்ப புரியும்....

 சவுத் கொரியாவும், நார்த் கொரியாவும் ஏன் எலியும் பூனையுமா? அடிச்சிக்கறாங்கன்னு..?
====

தென் கொரியா தலைநகர் சியோ லுக்கு 2 நாள்   சுற்றுப் பயணம் மேற் கொண்ட .அதிபர் தென் கொரியாலின் பெண் அதிபர் பார்க் ஷியுன்  ஹையை சந்தித்து பேசினார்.

அதன் பின்னர் அவர்கள் இருவரும் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது, அண்டை நாடான வட கொரியா   4-வது அணுகுண்டு  சோதனை நடத்த தயாராகி வருகிறது. அது செயற்கை கோளின் புகைப்படங்கள்   மூலம் தெள்ள தெளிவாக தெரிகிறது. எனவே அதை தடுத்து நிறுத்த வேண்டும் என்றார்.

அதற்கு பதில் அளித்த அமெரிக்க அதிபர் ஒபாமா, வட கொரியா இது போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டால் சர்வதேச நாடுகளிடம் இருந்து தனிமைப்படுத்தப்படும். மேலும் பல பொருளாதார  தடைகள் விதிக்கப்படும் என எச்சரித்தார்.

இது வட கொரியாவுக்கு கடும் எரிச்சலையும்,  ஆத்திரத் தையும் ஏற்படுத்தியுள்ளது. அதை பிரபலிக்கும் வகையில் இந்நாட்டு  அதிபர்களையும் ஆபாச வார்த்தைகளால் கடுமையாக தாக்கியுள்ளது.

இதுகுறித்து வட கொரியா வின் கொரியா சமாதான மறு சீரமைப்பு கமிட்டி விடுத்துள்ள  அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கடந்த சில நாட்களாக தென் கொரிய அதிபர் பார்க் மற்றும் அமெரிக்க அதிபர் ஒபாமா   ஆகியோரின் நடவடிக்கைகள் மிகவும் கீழ்த்தரமாக   உள்ளது. தென்கொரிய அதிபர் பார்க் அறிவு வளர்ச்சியற்ற ஒரு பெண்.  அவரின் செயல் தனக்கு பிடிக்காதவர்களை ரவுடிகளை  ஏவிவிட்டு தாக்கும்படி கெஞ்சுவது போன்று உள்ளது.

அல்லது ஒரு புத்திசாலித் தனமான விபசாரி ஒருவரை அழிக்க பலமிக்க புரோக்கர் (ஒபாமா)  ஒருவரிடம் தனது உடலை விற்பது  போன்று கருத வேண்டியுள்ளது.

அவர்கள் இருவரும் வேறு நாட்டின் விவகாரஙக்ளில் தலையிடுவதை   சகித்து கொள்ள முடியாது. ஒபாமாவும், பார்க்கும் எங்கள் மீதான மிரட்டல் மற்றும் பிளாக் மெயிலை நிறுத்தி கொள்ள வேண்டும்.   அவர்கள் முட்டாள் தனமான மிரட்டல்களுக்கு நாங்கள் அஞ்ச மாட்டோம் என கூறப்பட்டு உள்ளது.

வடகொரியாவின் இந்த  செயல், ஒழுக்கங்கெட்ட செயல் என தென் கொரியா கண்டனம் தெரிவித்து உள்ளது


=====
இதான் மேட்டர் இப்ப புரிஞ்சிதா...  நார்த் கொரியா சவுத் கொரியா சகோதர யுத்தம் இப்படித்தான்... 

சரி இந்த விஷயம் ஒரு பட விமர்சனத்துக்கு எதுக்கு...??? தெரிஞ்சவங்களை விடுங்க... தெரியாதவங்களுங்ககு இந்த மேட்டர்... அப்பதான் இந்த படமும் இது ஏற்ப்படுத்தும் வலியும் புரியும்.

அது மட்டுமல்ல.. இந்த மேட்டர் தெரியாம இந்த படத்தை பார்க்கறது என்பது... தலையும் தெரியமா... வாலும் தெரியாம படம் பார்க்கறதுக்கு சமம்... 
இந்த வரலாற்று பின்னனி தெரிஞ்சாதான் படத்துல நடிக்கற கேரக்டர்களை பத்தி புரிஞ்சிக்க முடியும்... இல்லைன்னு வச்சிக்கோவேன்.....தாலி கட்டிய அன்னைக்கு நைட்டே  அவளுடைய ஆசை அபிலாஷைகள்   தெரியாம  எல்லாத்தையும் அவுத்து காட்டுன்னு  சொன்னா... எப்படி  பொண்ணு படபடப்பாவா?  கன்பியூஸ் ஆவா..? அது போலத்தான்.... தலையும் தெரியமா வாலும் தெரியாமா---?? 

ரைட் விஷயத்துக்கு வரேன்....

போன வருஷம் 2013  வந்த படம் இது.....

 SECRETLY GREATLY   தென் கொரிய படத்தின் கதை... நார்த் கொரியா ராணுவ முகாம்ல ஆரம்பிக்குது கதை...எஸ்....நல்ல டிரேயின்டு ஆர்மி பசங்களை....சவுத் கொரியாவுக்கு உளவு வேலைக்கு அனுப்பறாங்க.... அதாவது  சவுத் கொரியாவுக்கு போயி  அங்க எதாவது ஊர்ல தாயும் புள்ளையா பழகிட்டு இருக்கும் போது...  சார்த் கொரிய  ராணுவ தலைமை திடிர்ன்னு ஒரு மேசேஜ் அனுப்பினா.. அங்க இருக்கற முக்கிய ஆட்களை அழிக்கனும்.. இதுதான் டார்கெட்...

 சரி நான் சவுத் கொரியாவுக்கு போயி ராணுவ நடவடிக்கை  புடிக்காம செட்டில் ஆயிட்டா...???
அவ்வளவுதான்... உனக்கு அடுத்த நிமிடமே சங்குதான்...  நீ சரியா உளவு பார்க்கிறியான்னு ஒன்னை உளவு பார்க்கவே இரண்டு பேரு சுத்திக்கிட்டு திரிவானுங்க...

 நல்லா பழகி இருந்தாலும் தலைமை என்ன சொல்லுதோ அதை அப்படியே கடை பிடிப்பானுங்க... அதுதான் நார்த் கொரியாவின் ராணுவ ஸ்டைல்...
 உதாரணத்துக்கு  ஒரு 40 பேரை டிரேயின் பண்ணி சவுத் கொரியாவுக்கு நார்த் கொரியா உளவு பார்க்க அனுப்பி வச்சி இருக்குன்னு வச்சிக்கோ..... அதுல ஒருத்தன் மாட்டிக்கிட்டா  எல்லாரையும் ரவுண்ட் கட்டிட்டா என்ன பண்ணறதுன்னு நீங்க எல்லாம் சூசைட் பண்ணிக்கிட்டு செத்துடுங்க என்று சொன்னால் அடுத்து நொடியே  அந்த 40 பேரும் சூசைட் பண்ணிக்கிட்டு செத்துடுவானுங்க... அப்படி பட்ட ஆளுங்கதான்  நார்த்கொரிய சோல்ஜர்ஸ்....

அப்படி ஒரு  மூன்று பேர் சவுத் கொரியாவுல உளவு வேலைக்கு வந்து செட்டில் ஆயிடுறானுங்க... ஆனா அவனுங்களை தற்கொலை  பண்ணிக்கிட்டு  சாவுங்கன்னு செய்தி வருது... எந்த வேலையும் செய்யாம... ஏன் தற்கொலை பண்ணிக்கனும்-?  நிறைய பேர் தற்கொலை பண்ணிக்கறாங்க.. ஆனா மூன்று பேர் எதிர்கேள்வி கேட்கறாங்க.. அவுங்க மூன்று பேர் கதி என்ன என்பதுதான் படத்தின் நெகிழ வைக்கும் கிளைமாக்ஸ்.

 படத்தின் ஹீரோ...Kim Soo-hyun வயதான அம்மா நடத்தும்  பங்க் கடையில் எடு புடியா... பைத்தியம் வேஷம்  போட்டுக்கிட்டு  வாழ்க்கையை ஓட்டும்   காட்சிகளில்  மனிதர்  நடிப்பில்  பின்னி எடுக்கின்றார்... சின்ன பசங்களுங்ககு பைத்தியம் வேஷம் போடுவதில் இருந்து..  அந்த தெருவில் கடக்கும் பெண்ணை பார்க்கும் போது  வழிந்து பைத்தியம் வேஷம் போடுவது வரை அழகு...

 ஒரு மழை நாள் இரவில் உளவு பார்த்து விட்டு வரும் போது பசங்களை அசத்த பைத்தியம் வேஷம் போட்டு நடு ரோட்டில் ஆய் போவது போல நடிக்க  தினமும் அவனை  பார்த்து சிரித்து விட்டு போகும் அந்த பெண்  பார்க்க..... அசடு வழியும் அந்த  காட்சி   அருமை...
அதே போல சொங்கி போல உடம்பை வச்சிக்கிட்டு திடிர்ன்னு உடம்பை  முறுக்கி காட்டு காட்சிகள்  அசத்தல்.

  படம் புல்லா பாதிக்கு மேல பரபரன்னு பிச்சிக்கிட்டு பறக்குது... அவளை போய்  காப்பாத்து என்று சொல்லும் போது.. எதுக்கு? அவ சவுத்கொரியா...? அவளை எதுக்கு போய் நான் காப்பாத்தனுடம் என்று சொல்லும் காட்சிகள்.............

இப்பயும் சொல்லறோம்... நாங்க சொல்லறதை கேளுங்க.. எங்க அம்மா வேணா தப்பா  இருக்கலாம்.. ஆனாலும் எங்க அம்மா என்று  பொருள் படும் வசனங்கள் படத்தின் பெரிய பலம்...

 நன்றாக வாழும்  வாழ்க்கை திடிர் என்று  ஒரே நாளில் புரட்டி போட்டு விடும்.. மேஜர் முகுந்.. காஷ்மீர் தீவிரவாதிகளோட நடந்த சண்டையில் கொல்லப்பட்ட  போது திடிர் என்று அந்த குடும்பம்  சூறாவளியால்  புரட்டி போட்டது போல மாறி விட்டது.... அதுதான் ராணுவ வாழ்க்கை....
ராணுவ வாழ்க்கைக்கும் இயல்பு வாழ்க்கைக்கும்  போராடும் இளைஞர்களின் மன உணர்வுகளை மிக அழகா காட்சிகளாக பதிவு செய்து இருக்காங்க...

பாஸ்புக்குல சின்னதா அமவுன்ட் போட்டுக்கிட்டு வந்து அது கொஞ்சம் கொஞ்சமா அதிகமாகி... என் புள்ளை கல்யாண செலவுக்குன்னு பணத்தை போட்டுக்கிட்டு வரும் காட்சியாக மாறும் போது.... அந்த  காட்சியில் மழை பெய்யும்.. உங்கள் கண்களிலும் மழை பெய்யும்... அதான் படத்தோட பெஸ்ட் இயக்கம்ன்னு சொல்லுவேன்.. அது  அழகான கிராப்ட்.. எதிராளியை  உண்மை போல நினைக்க வச்சி அழ வைப்பது... அது  இந்த படத்தின் கிளைமாக்சில் உணர்வீர்கள்..

கொரிய திரைப்படங்களில் ரிலிசான முதல் நாளே அதிக கலெக்ஷ்ன் பார்த்த திரைப்படம் இது...

அதே போல கடந்த வருடம்  பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனில்  அள்ளிய திரைப்படமும் இதுவே.
=========

படத்தின் டிரைலர்.=====
படக்குழுவினர் விபரம்.

Directed by Jang Cheol-soo
Produced by Kim Yeong-min
Written by Yun Hong-gi
Kim Bang-hyeon
Based on Covertness 
by Hun
Starring Kim Soo-hyun
Park Ki-woong
Lee Hyun-woo
Music by Jang Young-gyu
Dalparan
Cinematography Choe Sang-ho
Editing by Kim Sun-min
Distributed by Showbox/Mediaplex
Release dates
June 5, 2013
Running time 123 minutes
Country South Korea
Language Korean

Box office US$43,186,90
========
பைனல்கிக்..

  கண்டிப்பாக இந்த திரைப்படம் பார்த்தே தீரவேண்டிய திரைப்பபடம்... உளவாளிகள் வாழ்க்கை என்பது  கொடுமையானது...  மத்தளத்துக்கு ரெண்டு பக்கமும் இடி கதைதான்.... அதைதான் இந்த  தென்கொரிய திரைப்படம்   விரிவாய் தேன் தடவி சொல்ல முயற்சிக்கின்றது. தென் கொரிய  திரைப்படம் என்றாலும் நார்த் கொரியாவின் பிரச்சனைகளையும் சரிசமமாய்  அலசாவிட்டாலும் ஓரளவுக்கு நேர்மையாக அலசுகின்றது என்று சொல்லாம்..

========
படத்தோட ரேட்டிங்.
பத்துக்கு ஏழு.

=====
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.

நினைப்பது அல்ல நீ 
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

7 comments:

 1. jackie where can i find dvds of these films?

  ReplyDelete
 2. இந்த மாதிரி படங்கள எழுதும்போது டொரண்ட் லிங்க், சப் டைட்டில் லிங்க் எல்லாத்தையும் குடுத்திங்கன்னா எங்களுக்கு தேடற நேரம் மிச்சம். படம் கிடைச்சாலும் சப் டைட்டில் கிடைக்காம எவ்ளோ படம் தூங்குது. அப்படியே கிடைச்சாலும் சிங்க் ஆக மாட்டேங்குது.

  ReplyDelete
  Replies
  1. http://kickass.to/secretly-greatly-2013-bluray-720p-x264-aac-atlan64-t8537896.html#main

   Delete
 3. http://kickass.to/secretly-greatly-2013-bluray-720p-x264-aac-atlan64-t8537896.html#main

  ReplyDelete
 4. http://subscene.com/subtitles/secretly-and-greatly/english/866796

  ReplyDelete
 5. தல..உங்களுக்கு சினிமா பத்தி தெரியும்...அத பத்தி சொன்னீங்கனா நம்புற மாதிரி இருக்கு...ஆனா summa net ல படிச்சுட்டு...இல்லனா யாராவது சொல்றத வெச்சு தென் கொரியா அப்டி நார்த் கொரியா இப்டி னு காமெடி பண்ணாதீங்க.. இன்னும் நமக்கு தமிழ் நாட்லயே நெறைய உண்மை தெரியாது...

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner