MONTAGE-2013/உலக சினிமா/கொரியா/மகள் கொலைக்கு நியாயம் வேண்டி போராடும் தாய் இந்த   மே மாசம் வெயில்ல ஜீன்ஸ் பேன்ட்டு போட்டுக்கிட்டு அலையறதுக்கு பதிலா ஒரு கோமணம் கட்டிக்கிட்டு ஒரு குளியலை போட்டா எப்படி இருக்கும்ன்னு மவுண்ட் ரோட்ல  கானல் நீர் கால்ல அடிக்க சொல்ல...வெயில் கொளுத்தும் போது எல்லாம் நினைச்சிக்குவேன்... 

அப்படி சென்னையில் மே மாசம் வெயில்  அடிக்கும் அதே வேலையில் கொரியாவில் போன வருஷம் இந்த கிரைம் திரில்லர்  மே மாசம் 16ஆம் தேதி  2013 இல் ரிலிஸ் ஆச்சி....


 சான்சே இல்லை... எப்படி இப்படி ஒரு கிரைம் திரில்லரை மிஸ் செஞ்சோம்ன்னு  படம் பார்க்கும் போது கிடந்து அடிச்சிக்குது மனசு... அப்படியே ஏவனாவது பார்த்து இருந்தாலும் ஒரு வார்த்தை இந்த படத்தை பத்தி சொல்லி இருக்க கூடாது...??? நான் எத்தனை படம் உங்களுக்கு சொல்லறேன்... அறிமுபடுத்தறேன்... ஒரு படத்தை பத்தி சொல்லி அதன் டவுன்லோட் லிங்க் அனுப்பி வச்சா குறைஞ்சா போயிடுவிங்க.. படவா ராஸ்கோலுங்களா,?? சரி இனிமே அப்படி செய்யாதிங்க... படத்தை பார்த்துட்டு  எனக்கு  ஒரு மெயில் தட்டி விடுங்க... dtsphotography@gmail.com  என்ன புரிஞ்சிதா???

 சான்சே இல்லை...  இந்த படம் அப்படி ஒரு பரபரன்னு ஒரு  திரைக்கதை... சும்மா அடிச்சி தும்சம் பண்ணறானுங்க...

இந்த சப்பை மூக்கு காரணுங்க எல்லாம் எப்படிதான் யோசிக்கறானுங்கன்னு தெரியலை... என்னத்தை தின்னு தொலைச்சிட்டு யோசிக்கறானுங்கன்னு புரியலை... ச்சே என்ன வாழ்க்கைடா இது....ஆனா இந்த படம் ஸ்டார்ட் அயிடுச்சின்னா  படத்தை  பற்றி மட்டும்தான்  யோசிச்சிக்கிட்டு இருப்பிங்க...

அந்த அளவுக்கு ரொம்ப ஸ்மார்ட்டான திரைக்கதை....

ஒரு பங்கஷன்ல நைட்டு படுத்துக்கறதுக்கு பாயும் தலைகாணியும் கொடுக்கலைன்னு சொல்லிட்டு பத்து வருஷம் பேசாம இருந்து சொந்தக்காரங்களை எனக்கு தெரியும்... சாதராண   போர்வை பாய் தலைகாணிக்கே இந்த  நிலைமைன்னா.... நாம  நேசிக்கறவங்னளை நம் கண் எதிரிலேயே கடத்தி கொலை பண்ணும் போது  எவ்வளவு  கோபம் இருக்கும்??? 

எவ்வளவு வெறி இருக்கும்?? 

அந்த வெறி ,கோவத்தை செல்லுலாய்டில்  சிறை பிடிப்பதில்  கொரியாக்காரனுங்க  ரொம்ப  பெஸ்ட்டுன்னு எனக்கு தோனுது...

 படம் எங்க ஆரம்பிக்குது தெரியுமா?-


ஒரு தாய்.... அவளின் ஒரே செல்ல மகளை  கடத்தி கொலை செய்யப்பட்டு 15 வருடங்கள் ஆகி விட்டன... கேசை விசாரித்த டிடெக்டிவ்   அவன்   உதவியாளனுடன்  மகளை பறிக்கொடுத்த அந்த  தாயின் வீட்டுக்கு  வருகின்றான்....

அவள் பதினைந்து வருட காலமும் தன் மகள் யாரால் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டாள் என்று தெரிந்துக்கொள்ள வேண்டும்...? 

அந்த படுபாவியின் முகம் எப்படி இருக்கும்? 

அந்த சண்டாளன் என்  அன்பு மகளை மட்டும் ஏன்   கடத்த வேண்டும்?? 

அந்த பொறம்போக்குக்கு நல்ல சாவு வருமா?

அவன் கேட்ட பணத்தை கொண்டு வந்து  போலிசுக்கு தெரியாமல் கொடுத்தும்..???

 ஏன் என் மகளை நடு  ரோட்டில்  சாகடித்து போட வேண்டும்...???

 அந்த சின்ன குருத்து என்ன பாவம் செய்தது..??? காப்பாற்றுகின்றேன் என்று என் குழந்தைக்கு  வாக்கு கொடுத்தும்  அவளை  காப்பாற்ற முடியவில்லையே என்று நினைத்து நினைத்து நடை பினமாக வாழ்ந்துக்கொண்டு இருக்கின்றாள் அந்த தாய்... சரி பதினைஞ்சி வருசமா இந்த கேசை வச்சிக்கிட்டு தேவுடு காக்கின்ற...  அல்லது உப்புமா  கிண்டுகின்ற போலிஸ்காரர்கள்  இத்தனை வருடம் கழித்து வீட்டுக்கு வந்து இருக்கின்றார்கள்.. ஒரு வேளை   கொலையாளியை பற்றி தகவல் கிடைத்து விட்டாதா? சின்ன கிளு கூட இல்லாமல் அந்த குற்றவாளி எப்படி தப்பிக்க முடியும்? அவன் என்ன  அவ்வளவு பெரிய அப்பாடக்கரா?   வந்த ஆபிசர்களுக்கு ஆப்பிள் கட் பண்ணிக்கொடுத்து விட்டு கேட்கின்றாள் அவ்ள அம்மா... சொல்லங்க கேஸ்ல எதாவது முன்னேற்றம் தெரிஞ்சுதா,,--?....

அந்த டிடெக்ட்டிவால் பதில் சொல்ல முடியவில்லை.. 

வீடு முழுவதும்  கொலையான மகளை பற்றி பேப்பர் கட்டிங்.. 

அந்த விசாரனை பற்றி சின்ன வரி பத்திரிக்கையில் வெளிவந்தாலும் அதையும் கட் பண்ணி டைரியில் ஒட்டி வைத்து  எப்படியும் கொலையாளியை கண்டு பிடித்து விடுவார்கள் என்று நம்பிக்கையோடு  இருக்கும் தாயிடம்.. ஒரு அதிர்ச்சி தகவலை அந்த டிடெக்டிவ் சொல்ல விழைகின்றான்... 

ஆனால் அவனால் சொல்ல முடியவில்லை அவனது ஈகோ  மற்றும் சுய இரக்கம்  தடுக்கின்றது.. அவனது உதவியாளன்  சொல்கின்றான்.

எந்த ஒரு கேசை விசாரிக்கவும்  ஒரு எல்லைக்கோடு  வேண்டும்..  விடை தெரியாத ,தடயம் இல்லாத கேசை கட்டிக்கிட்டு  எங்க வீட்டுக்காரனும் கச்சேரிக்கு போறேன்னு சொல்லிக்கிட்டு சுத்தறதுலயோ... அல்லது தடயம் ஏதும் இல்லாத கேசை கட்டிக்டிகட்டு எத்தனை வருஷத்துக்கு மாரடிக்கறது??? 

ஒரு கேசுக்கு 15 வருஷம்தான் கொரியாவுல    ஆயுட்காலம்.. அதுக்குள்ள  புடுங்க  முடிஞ்சா புடுங்குங்க.. இல்லையா  தலையை  சுத்தி கேஸ் கட்டை பக்கத்துல இருக்கற ஆத்துலயோ அல்லது கொளத்துலயோ எரிஞ்சிக்கிட்டு போயிக்கிட்டே இருங்க என்பதுதான் கொரிய போலிசின் சட்டம்.

அதை சொல்லதுக்குதான் அந்த தாயோட வீட்டுக்கு வராங்க...அவ அந்த செய்தியை கேட்டு வானுக்கம் பூமிக்கும் குதிக்கறா..

தடயம் இல்லையா... எவ்வளவு எவிடென்ஸ் இருக்கு ஆனா கண்டு பிடிக்க முடியலைன்னு சொல்லறது... உங்களுக்கு  வக்கு  இல்லைன்னு சொல்லுது என்று  அழுது ஆர்பாட்டம் செய்கின்றாள்.

அவுங்க வீட்டை விட்டு வெளியே வராங்க...

உதவியாளன் சொல்றான்..

நான் அப்பவே சொன்னேன் இல்லை.. பேசாம  நோட்டிஸ்ல சொல்லி இருக்கலாம்..  உங்க கேஸ் எக்ஸ்பயரி ஆக போகதுன்னு அதை விட்டு விட்டு.... நேரில் வந்து  சொல்லி தேவையில்லாம ஸ்டெரஸ் ஏறனதுதான் மிச்சம் என்கின்றான்...

அந்த தாய் வெளியே வருகின்றான்...

டிடெக்டிவ் ஓ..... என்று சத்தமாக அவனை   அழைக்கின்றாள்..

 எப்படியும் கொலைகாரனை புடிச்சிடுவேன்னு  சத்தியம் பண்ணி நீங்க  சொன்னிங்க.....

ஆனா??? கொலைகாரனை புடிக்கலை... இதை சொல்லறதுக்காக இங்க வந்திங்கன்னு கேட்கறா..?

ஒரு மீசை வச்ச ஆம்பளையா இருந்தா... எப்படி துடிக்கனும்?? அப்படித்தான் அந்த டிடெக்ட்டிவுக்கு துடிக்குது,. ஆனா அவனுங்கு மீசை இல்லை.... இன்னும் கேஸ் எக்ஸ்பயரி ஆக ஒரு வாரம்தான்....


குழந்தை  கடத்தி   ஹைவேஸ் ரோட்டுல செத்துகிடந்து அன்னைக்கு  15 வது நினைவுநாள்... குழந்தையை புதைச்ச  இடத்துக்கு போய்... பிரார்த்தனை பண்ணி  பிளவர் பொக்கே வச்சிட்டு கௌம்பறா....

இன்னாட இந்த பொம்பளை இப்படி நம்மளை தென்ட கருமாந்திரம்ன்னு சொல்லிடுச்சேன்னு டிடெக்ட்டிவ்  அந்த பொண்ணு செத்துக்கிடந்த ரோட்டுக்கு போய் கார்ல நின்னு யோசிக்கறான்... 

சாரி உட்கார்ந்துக்கிட்டு  யோசிக்கறான். அந்த பொண்ணு செத்துக்கிடந்த  இடத்துல ஒரு பிளவர்  பொக்கே இருக்கு...?

அம்மாகாரிக்கு போன் பண்ணி ஏம்மா நீ உன் பொண்ணு செத்த இடத்துக்கு இன்னைக்கு நீ  போனியா..?? போய் பூங்கொத்து ஏதாவது வச்சியான்னு  கேட்கறான்... நான் ஏன் அங்க போறேன் சொல்றா...?


அப்ப  அந்த பொண்ணு செத்த  நாள்ல பதினைஞ்சி வருஷம்  கழிச்சி வந்து பூ  வைக்கறவன் கண்டிப்பா கொலைகாரணதான் இருக்கும்??  ஓகே  அப்ப எப்படி கண்டு பிடிக்கறது??, அங்க ரோட்டு சிசிடிவி கேமரா இருக்கு... 15 வருஷம் கழிச்சி முதல் குளு கிடைக்குது---

ஓத்தா டிடெக்டிவ் பரபரப்பாகின்றான்.. படம் பார்க்கும் நாமும் பரபரப்பாகி விடுகின்றோம்... அந்த சிசிடிவி பார்த்தா கொலைகாரனை  கண்டுபிடிச்சிடுலாம்ன்னு நீங்க நினைக்கலாம் கொலைகாரன் ஒன்னும் எப்பை சோப்பை இல்லை.... பின்னி பெடலெடுங்கும் சேசிங்கூடன் படம் பரபரப்பாகின்றது.

 யப்பா எழுதி எழுதி கை வலிக்குது... அந்த அம்மா கேரக்டரில் நடித்து இருக்கும் பெண் சான்சே இல்லை,..  நடிப்பில் அசத்தி இருக்கு....  முக்கியமா  நினைவுநாள்  நாள்  அன்னைக்கு புதைச்ச இடத்துல ஷூ வச்சிட்டு அதன் லேஸ் அவுந்து இருக்க அதை அழகாய் போட்டு விடும்  காட்சி  கவிதை..

கொலைகாரனையும் காரையும் கண்டு பிடித்தாகிவிட்டது... அதுவும் ஓட்டலில் எதிரில் உட்கார்ந்து இருக்கும் சேசிங் காட்சி இருக்கே.. சான்சே இல்லை...

படத்தை பத்தி அதிகம் எழுதினா  படம் பார்க்க  சொல்ல இண்ட்ரஸ்ட் இருக்காது... இந்த படத்தை பார்த்துட்டு உங்க பீலிங்குகளை எனக்கு மெயில் அனுப்பவும்.. அல்லது பின்னுட்டத்தில் தெரிவிக்கவும்.

===========
படத்தின் டிரைலர்.========
படக்குழுவினர் விபரம்.

Directed by Jeong Keun-seob
Produced by Ahn Young-jin
Noh Jae-hoon
Written by Jeong Keun-seob
Starring Uhm Jung-hwa
Kim Sang-kyung
Song Young-chang
Music by Koo Ja-wan
Ahn Hyeon-jin
Cinematography Lee Jong-yeol
Editing by Steve M. Choe
Park Kyung-sook
Distributed by Finecut
Release dates
May 16, 2013
Running time 119 minutes
Country South Korea
Language Korean
Box office ₩15,002,458,500


========
பைனல்கிக்...

சரி இந்த படத்துக்கு எதுக்கு மான்டேஜ் என்று பெயர் வைத்தார்கள் என்று மண்டையை போட்டு குழப்பிக்கொண்டேன்...  சினிமாகாரர்கள் மற்றும்   மீடியா ஆட்களுக்கு மான்டேஜ் என்றால் என்ன என்று தெரியும்.. ஒழுங்கற்ற காட்சிகளின் தொடர்ச்சி என்று சொல்லாம்...  கட்டிங் வெட்டிங் என்று சொல்லலாம்.... அதுக்கு அர்த்தம் கிளைமாக்சில்  தெரியும்...

கேசை முடிக்க முடியாமல் தினறும் கிரைம் போலிஸ் ஆபிசர்ஸ்...  திரைக்கதையை அமைக்க போராடும் உதவிஇயக்குனர்கள் நாளைய இயக்குனர்கள் இன்றைய இயக்குனர் என அத்தனை பேரும் பார்த்தே தீரவேண்டிய திரைப்படம் இது...


==========

படத்தோடரேட்டிங்.
பத்துக்கு எட்டு

பிரியங்களுடன்

ஜாக்கிசேகர்.


நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

6 comments:

 1. I recommend, The perfect number - korean movie.
  Also, You will come to know one surprise truth while watching this movie

  ReplyDelete
 2. Fantastic movie... but i think they missed to show the 15 years of age difference in almost all characters... The killer is walking and looking same even before 15 years... the mom looks very young at present, and then how she should have looked 15 years ago...

  ReplyDelete
 3. Fantastic movie.. one disappointing factor is they didn't show the 15 years of age difference in almost all characters. the killer is walking the same way and looks week 15 years ago.. the mother is looking very young now.. then how she should have looked 15 years ago.. but she looks same in past and present...

  ReplyDelete
 4. இந்த அற்புதமான படத்தை பாராட்டி எழுதிய கேபிள் சங்கருக்கு நன்றி. அவருக்கு இப்படத்தை அறிமுகம் செய்த உங்கள் ரசனைக்கு வாழ்த்துக்கள் ஜாக்கி. டவுன்லோட் செய்து பார்த்த உடன் இந்த பின்னூட்டத்தை எழுதிகிறேன். NOT TO BE MISSED THRILLER.

  ReplyDelete
 5. மிக மிக அற்புதமான திரைப்படம் (மான்டேஜ்). மிக அருமையான விமர்சனம் எழுதி என்னை படம் பார்க்க தூண்டிய திரு. ஜாக்கி சேகருக்கு நன்றிகள்.

  என்ன ஒரு திரைக்கதை! எத்தனை திருப்பங்கள்! நேற்று இரவு இந்த படம் பார்த்து, இன்னும் அதிலிருந்து மீளவே இல்லை.

  மதிப்பெண் 10 க்கு 8 என்பது மிக சரியே!

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner