அன்புள்ள எழுத்தாளர்
ஜெயமோகன் அவர்களுக்கு ஜாக்கிசேகர் எழுதிக்கொள்வது வணக்கம்… வாழிய நலம்.
தங்களின் அறம் சிறுகதைகளில் சோற்றுக்கணக்கு கதையை சில நாட்களுக்கு முன் வாசித்தேன்… கடைசி பாராவுக்கு
வரும் போது கண்கள் ஒரு மாதிரி கலங்கியது.. கட்டுப்படுத்தியும் கண்ணீரை அடக்க முடியவில்லை…
வாசித்து முடித்தவுடன் உங்களுக்கு கடிதம் எழுத
தோன்றியது… உடனே எழுத கை பறபரத்தது.. ஆனாலும் அந்த ஆர்வத்தை கட்டுப்படுத்திக்கொண்டேன்.
காரணம்.. இன்னும்
சில நாட்கள் இதே போன்ற ஒரு பீல் இருந்தால்
கண்டிப்பாக எழுதலாம் என்று நினைத்தேன்… சக்கரை கம்மியாக
காபி ஆர்டர் செய்து குடித்து விட்டு,
அடுத்த அரைமணி நேரத்துக்கு போகும் வழியெல்லாம் தொண்டையில் காபி சுவையோடு அலைவார்களே… அது போல அந்த
சுவை தொடர்ந்து இருந்தால் எழுதலாம் என்று எண்ணி
எழுதாமல் விட்டு விட்டேன்.…
ஒருவாராமாகியும் அப்படியேதான் இருக்கின்றது…முதல் முறையாக ஒரு பெண்ணின் சின்ன சின்ன அங்கீகாரங்களோடு அவளை நெருங்கி முத்தமிடும் போது ஒரு படபடப்பு இருக்குமே
அவள் மேல் வீசும் ஒரு வாசம் நாசி முழுக்க
வியாபித்து இருக்குமே…? அப்படித்தான் இருக்கின்றது… அந்த பெண்ணை பற்றியும் அந்த முத்தத்தை பற்றி யோசித்தால்
அவள் வாசமும் சேர்ந்தே நினைவுக்கு வருமே…
அது போல கடந்த ஒரு வாரமாக உணவு உண்ணும் போது
எல்லாம் கெத்தேல் சாஹிப்பின் முடியோடு இருக்கும்
கடுமையான காய்த்து போன கரம் நினைவுக்கு வந்து
போகின்றது… வறுத்த மீன் சிக்கனை பார்க்கையில் எல்லாம், அந்த கெத்தேல் சாகிப்பின்
நினைவுகள்....
சோற்றுக்கணக்கை கதை பற்றி இவ்வளவு சிலாகிக்க காரணம்..
நானே நேரடியாக பாதிக்கப்பட்டு இருக்கின்றேன்…மாம்பலம் கணபதி தெருவில் பையில் காசில்லாத ஒரு தருணத்தில் இரண்டு நாட்களாக தண்ணியும் டீயும் கொடுத்த தெம்பில்
உயிர் வாழ்கையில் மூன்றாவது நாள் காலை என்
கம்பீரம் தோற்றுவிட்டது. உயிர் போகும் பசி, கொலை செய்ய வைக்கும் பசி, அப்படி ஒரு
பசியை என் வாழ்நாளில் பார்த்தது இல்லை...
அறை நண்பன் குளிக்க சென்ற போது அவன் வைத்து இருந்த பழைய சோற்றுக்குண்டானில் கை விட்டு மூன்று பிடி சோறு சாப்பிட்டதும், தண்ணீரை மடக்கென்று குடித்து விட்டு, அது தெரியாமல் இருக்க இரண்டு டம்பளர் தண்ணியை
ஊற்றி சரி செய்ததும் உங்களின்
சோற்றுக்கணக்கு கதையை வாசிக்கையில் என் நியாபக
அடுக்களில் அந்த நிகழ்வு நேற்று நடந்தது போல வந்து போகின்றது. அதனாலே சோற்றுக்கணக்கு கதாபாத்திரங்கள் இன்னும்
என்னோடு மிகவும் நெருங்கி சினேகமாகி
இருக்கின்றன.
சரி கதைக்கு
வருவோம்
தவறி குளத்து தண்ணீரில் விழுந்து தத்தளிக்கும்
தேளை ஒரு துறவி காப்பாற்றினார்... ஆனால் தேளுக்கு அவர் காப்பாற்றுகின்றார் என்று
அறியாமல் உயிர் பயத்தில் அவரை
கொட்டுகின்றது.. திரும்புவம் அதை காப்பாற்றுகின்றார்
மீண்டும் தேள் கொட்டுகின்றது... திரும்பவும் தேளை காப்பாற்றுகின்றார்.. திரும்பவும்
கொட்டுகின்றது... தூரத்தில் இருந்து
பார்த்த மனிதர் துறவியிடம்
கேட்கின்றார்... அதுதான் கொட்டி தொலைக்கின்றதே..?? ஏன் அதை காப்பாற்றி தொலைகின்றீர்கள் என்று
அதற்கு துறவி சொன்னார்... தேள் கொட்டும் இயல்புடையது மனிதன் காப்பாற்றும் இயல்புடையவன் என்று.... இந்த ஜென் கதை உங்களுக்கும் தெரிந்து இருக்கும்...
அந்த ஜென் துறவியாகத்தான் நான் கெத்தேல் சாகிப்பை பார்க்கின்றேன்... என்ன வேணா
நக்கல் விட்டுக்கொள்ளுங்கள்... என் வேலை
வயிறாற சாப்பாடு போட வேண்டும்.. என் எதிரில் யாரும் பசியால் வாடக்கூடாது...
காசு
முடிந்தால் கொடு... இல்லையா கவலை இல்லை...காசே கொடுக்காமல் தேள் போல
கொட்டினாலும் நான் மனிதன் .. காப்பாற்றும்
என் இயல்பில் இருந்து நான் ஒரு போதும்
மாறப்போவதில்லை என்பதே.
அப்படியும் கெத்தேல் சாகிப் டீ விற்கும் போது
ஏழைப்பெண்ணின் மூலை பிடித்து கசக்கிய காரணத்துக்கு ஒருவனை
அடிக்கின்றார்.. அவன் காது கேட்காமல் வலிப்பு வந்து இருந்து போகின்றான்....
நியாயம்
தர்மம் என்று கடைசி வரை வாழ்பவர்களை சோதனைகள்
பிடித்து ஆட்டினாலும் அதில் இருந்து மீண்டு வரும் போது பத்து மட்ங்கு
பலத்துடன் வாழ்வார்கள்... அறைந்த அந்த
கை நேர்மையை சொன்ன கை... அன்னமிட்டகை,
தர்மம் செய்த கை, அதனால்தான் குழுவாக
தாக்கப்பட இருந்தவர் கூட ஒரு
டிரஸ்டியின் மிரட்டலில் தாக்க வந்த குழுவினர் தொலைந்து போனார்கள்.
கெத்தேல்
சாகிப் கடையில் சாப்பிட போகும் முன் அவன் படும வேதனைகள்.. பயம் கொள்ள வைக்கும்
மிடில் கிளாஸ் மனசாட்சி, திடிர்ன்னு பெரிய புடுங்கியாடா நீ... என்று சோறு
போட்டவனையே மனதில் எதிர்த்து நிற்பது...
சான்சே இல்லை... திரும்ப சாப்பிடும் போது
ஜென் நிலையில் யாரை பற்றியும் எனக்கு கவலை
இல்லை.. என் பணி சாப்பிட வரும் குப்பனோ ?சுப்பனோ? தேவகுமாரனோ.. யாராக இருந்தாலும் நான் உணவிடுவேன்
என்பதே...
அப்போதுதான்
அவன் உணர்கின்றான்...
//என் வாழ்நாளில் எவருமே எனக்கு பரிந்து சோறிட்டதில்லை.
ஆழாக்கு அரிசியைக் கஞ்சி வைக்கும் அம்மாவுக்கு அந்த கடுகடுப்பும் வசைகளும் சாபங்களும்
இல்லாவிட்டால் எல்லாருக்கும் பங்கு வைக்கவே முடியாது. நான் நிறைந்து சாப்பிடவேண்டும்
என எண்ணும் முதல் மனிதர். எனக்கு கணக்கு பார்க்காமல் சாப்பாடு போடும் முதல் கை. அன்னமிட்ட
கை என்கிறார்களே, அந்திமக் கணம் வரை நெஞ்சில் நிற்கும் அன்னையின் கை என்கிறார்களே.
தாயத்துகட்டிய மணிக்கட்டும், தடித்து காய்த்த விரல்களும் ,மயிரடர்ந்த முழங்கையும் கொண்ட
இந்த கரடிக்கரமல்லவா என் தாயின் கை? அதன்பின் நான் கெத்தேல் சாகிப்புக்கு பணமே கொடுத்ததில்லை.//
இந்த வரிகளை
படிக்கும் போதே எனக்கு கண்கள் கலங்க ஆரம்பித்தன.... வீட்டில் சாப்பிட குறைவு
இல்லை.. ஆனால் அம்மா ஒரு கட்டத்தில் கஷ்ட ஜீவனத்தில் ஐந்து ரூபாய்க்கு 20 சங்க மீன் வாங்கி... அதில் பத்தை வறுத்து மீதம் பத்தை குழம்பில் போட்டு
விடுவாள்... எனக்கும் அப்பாவுக்கும் இரண்டு இரண்டு சூம்பிய சங்கரா துண்டுகள் தட்டில் இடம் பெறும்....
சென்னையில் அதுவும் இல்லாமல் சோற்றுக்கு கஷ்டப்பட்ட
காலத்தில் இன்னும் சோறு பற்றிய எண்ணம் அதிகரித்து இருக்கின்றது.... சென்னையில் கண்ணாடி போட்ட கடை என்றால் வெறித்து வேடிக்கை பார்க்க மட்டுமே இறைவனால் படைத்து
இருக்கின்றது என்று நினைத்துக்கொள்வேன்...
நிறைய
சம்பாதிக்கும் போது கணக்கில்லாமல் மீனும்
நண்டும், இராலும் ஞாயிற்று கிழமை வாங்கி போட்டு மனைவியாகின்றவள் வித விதமாக சமைத்து போட ,வியர்த்து விறு
விறுத்து சாப்பிட வேண்டும் என்று நினைத்து இருக்கின்றேன்.. ஆனால் பியூர் சைவ பெண்ணை காதல் மணம் புரிந்த காரணத்தால் அது
சாத்தியமில்லை.. ஆனால் ஒட்டல்களில் வெட்டு
வெட்டு என்று வெட்டுவேன்.
((நான் அவ்வப்போது வீட்டுக்குப் போவேன். அம்மா நல்ல அரிசி
வாங்கி மீன்குழம்பு வைத்து அவளே பரிமாறுவாள். ஆனால் எத்தனையோ காலமாக நீண்டு நின்ற வறுமை.
அவளுக்கு பரிமாறத்தெரியாது. ஒரு கண் எப்போதும் பானையில் இருக்கும் சோறையும் சட்டியில்
இருக்கும் குழம்பையும் கணக்குபோடுவதை தவிர்க்க தெரியாது))
உண்மைதான்
வறுமையை தாண்டி வெளி வந்தாலும் சத்தியம்
தியேட்டரில் 100 ரூபாய் கொடுத்து பாப்கான்
வாங்கி தின்றாலும்.. அதற்கு கொடுத்த அநியாய விலை நினைவில் மறுநாள் வரை
நினைவில் வந்து போய்க்கொண்டே
இருக்கும்...
வேலையில் சேர அப்பாயிண்ட்மென்ட் ஆர்டர் கிடைத்து அந்த
மகிழ்ச்சியை தடித்த மணிக்கட்டு கையிடம் சொல்லப்போக ....அவர் மீன் குழம்பு கிண்டிக்கொண்டு இருக்க அதை
அவரிடம் சொல்ல நியாயம் இல்லை என்று திரும்பும் இடம் அருமை.
சம்பளம்
கேட்ட அந்த அப்பாவின் வன்மம் என் அப்பாவிடமும் இருந்து இருக்கின்றது...
அம்மா சட்டென் அதிகார தொரனைக்கு மாறும் இடம்... வாழ்க்கையை விளிம்புநிலையிலும்
வாழ்ந்தவனால் மட்டுமே அப்படி எழுத முடியும்..
புறவாசல் வழியாக ஓடி மாமனுக்கு டீப்பொடி வாங்கி கருப்பட்டி போட்டு கொடுக்கும் ராமலட்சுமி....
சீட்டில்
எடுத்த பணத்தை கெத்தேல் சாகிப்பு கடையில் இருக்கும் டப்பியில் போட வேறு டப்பா
வேண்டும் என்று கேட்க..,? டப்பா மாற்றடா... என்று சொல்லி விட்டு எதை பற்றியும் கவலை படாமல் சோறுபோட்டு செல்ல... உண்மையில்
அந்த கணத்தில் எனக்கு கண்ணீர்
புரள ஆரம்பித்து.
நான் ஆளாகிட்டேன்
என்று கெத்தேலிடம் சொல்ல ஆசை...
ஆனால் அந்த முரட்டு கைக்கு மட்டுமாவது சொல்ல வேண்டும் என்று
பிரியப்பட்டால் அது எதிரில் உட்கார்ந்து
இருக்கும் நபரின் பசியை மட்டுமே பார்க்கின்றது.. லவ்லி... சான்சே
இல்லைங்க...
கதையில்
கடைசி வரை கெத்தேல் எந்த
இடத்திலேயும் இயல்பு மாறவேயில்லை...
அப்பர் பெருமான் போல என்கடமை பணி செய்து கிடப்பதே...
என்று வாழும் வாழ்க்கை ஒரு கொடுப்பினை... அதனால்தான் சாகிப்பு இன்றுவரை நம்முடன்.
வறுமையில் இருந்து மேலலே வருபவனால்தான் மன்னிக்கும் பக்குவம் இருக்கும் பார்ன் இன் சில்வர் ஸ்பூன் பேலோசிடம்
மன்னிக்கும் குணம் இருந்தாலும் பர்சன்டேஜ் மாறுபடும்...
தண்ணீர் விட்ட சோற்றில் குழம்பு ஊற்றியவள்தான்...
பார்டைம் வேலைக்கு போறேன் என்றதும்
நோட்புக்கில் சோற்றுக்கு கணக்கு
எழுதி பணம் கேட்டவள்தான்... நிம்மதியாக
இருக்க விடாதவள்தான்... ஆனாலும் தங்க இடமும் ஒரு வேளை சோறாவது போட்டு இருக்காளே... அதுக்குதான் காபி டபரா கீழே 50 ரூபாய் வைத்து
விட்டுவந்தது...
ஆனாலும் படிக்கற பொண்ணு பார்க்க சொல்லி கடிதம் எழுதி போட்டாலும் நல்லா வாழ்ந்த
அத்தைக்காரி தவிடு குத்தி பொழைக்கை சொல்ல... மனசு கொஞ்சம் அதிர்ந்து போவும்
இல்லையா...??
அதனால்தான் எந்த வனப்பும் பார்த்து மையல் கொள்ளாமல்
வகிட்டை மட்டும் பார்த்து விட்டு ராமலட்சுமி திருமணம் செய்து கொள்கின்றான்.. ஆயிரம் கொடுமை படுத்தினாலும்... தங்க இடம்
கொடுத்து ஒருவாய் கவளம் சோறு கொடுத்து
அத்தை இந்த என் சான் உடம்பை இயங்க வைக்க காரணமாய் இருந்து இருக்கின்றாள்...
அல்லவா..,
((கெத்தேல் சாகிப் மாறி மாறி கோழியும் குழம்பும் மீனும்
கொஞ்சுமாக பரிமாறிக்கொண்டிருந்தார். நான் எதிர்பார்த்தது அவரது கண்களின் ஒரு பார்வையை.
நானும் ஒரு ஆளாகிவிட்டேன் என்று என் தாய்க்கு தெரியவேண்டாமா இல்லையா? அனால் அவரது கண்கள்
வழக்கம்போல என்னை சந்திக்கவேயில்லை. மீண்டும் மீன்கொண்டுவைக்கும்போது கனத்த கரடிக்கரங்களைப்
பார்த்தேன். அவை மட்டும்தான் எனக்குரியவைபோல. அவை என் வயிற்றை மட்டுமே அளவெடுக்கும்போல.
அன்று ஊருக்கு கிளம்பிச்சென்றேன். ராமலட்சுமியை அடுத்த
ஆவணியில் திருமணம்செய்து கூட்டிவந்தேன்.))
அடுத்த
ஆவணியில் திருமணம் செய்து கூட்டி வந்தேன்...
கிளாஸ்....
அப்படியே கடைசி வரி படிக்கும் போது வெடித்து அழுதேன்...சின்ன கதை
ஆனால் அதில் நடமாடிய அத்தனை முக்கிய பாத்திரங்களுக்கும் உள்ள உணர்வை அழகாக
விளக்கி... சான்சே இல்லை... என்ன மாதிரியான விவரிப்பு....
கதை படித்த
உடன் சவுதியில் வசிக்கும் எனது நண்பர் அயனாவரம் ஆனந்தை தொடர்பு கொண்டேன்.. படித்து விட்டு பேசுங்க என்றேன்....
ஏன் என்றால் அவர் சவுதி அரேபிய
தெருக்களில் தன் வாழ்வை தேடி
அலைந்து இருக்கின்றார்... அவரின் கதையை கூட நான் உப்புக்காத்து என்ற தொடரில் எழுதி
இருக்கின்றேன்...
பத்து
நிமிடத்தில் போன் வந்தது.... குரலில் தழு
தழுப்பு இருந்தது... ங்கோத்தா
என்னா ரைட்டிங்க... கலங்க வச்சிட்டான்யா என்றார்...
அயனாவரம் ஆனந் கதையை வாசிக்க இங்கே கிளிக்கவும்...
அயனாவரம் ஆனந் கதையை வாசிக்க இங்கே கிளிக்கவும்...
அறம் கதைகள்
வெளி வந்த போது நண்பர் நித்தியகுமாரன்... அடிக்கடி உங்கள் வலையை வாசிக்க சொல்லி படுத்தி எடுத்தி இருக்கின்றார்.. நீ எழுதற உப்புக்காத்து போலவே ஆனா செம டீடெயிலா அறம் தொடர் எழுதிக்கிட்டு வரார் நீ படி நீ படி என்று சொல்லியும் நான் வாசிக்கவேயில்லை... என் வாழ்வை எழுத்தில் மூலம் செம்மை படுத்திய
பாலகுமாரனை தவிர்த்து பல வருடங்களாக எதையும் வாசிக்க வில்லை.... கண்மணி
குணசேகரனின் நெடுஞ்சாலை மட்டுமே
சமீபத்தில் நான் வாசித்த பெரிய நாவல்.... அதனாலே எதையும் வாசிக்கும் எண்ணம்
எனக்கு வரவில்லை என்பதை விட வாசிக்க தகுந்த சூழல் அமையவில்லை என்பதுதான் உண்மை.
ஜெய மோகன் பேய் போல எழுதுவார்.... அப்படி எழுதி
தள்ளுவார் என்று நண்பர் நித்யா அடிக்கடி சொல்லி இருக்கின்றார்....
சில
நாட்களுக்கு முன் அறிமுகமான நண்பர் திருநாவுக்கரசு இந்த கதையை மட்டும் நெட்டி ஓப்பன் செய்து என்னை வாசிக்க
சொன்னார்...
படித்து முடித்தவுடன் ஏன் இவ்வளவு நாட்கள்
வாசிக்கவில்லை என்று வருத்தமே எழுந்தது..
உங்களை பற்றி
ஆயிரம் விமர்சனங்கள்...
எனக்கு அதை பற்றி கவலை இல்லை....
என்னை பற்றி கூட சாருவை ஒப்பிடும் போது
அலெக்சா ரேங்கில் அதிகமாக இருக்கின்றேன் என்று உங்கள் வலைதளத்தில் என்னை குறிப்பிட்டு இருந்தீர்கள்... என்னை
பற்றி நீங்கள் நண்பர்கள் வட்டத்தில் பேசி
இருப்பதாக வெளிநாட்டு நண்பர் ஒருவர் பெங்களூர் வந்த போது என்னிடத்தில் சொல்லி இருக்கின்றார்...
எது
எப்படியோ...ஒரு சிறுகதையில் ஒரு மனிதனை உலுக்கி போட வைத்து விட்டீர்கள்...கண்
கலங்க வைத்து விட்டீர்கள்... இனி எந்த நண்பரை நான் பார்த்தாலும் சோற்றுக்கணக்கை வாசிக்க சொல்லுவேன்...
யானை
டாக்டர் படித்து விட்டு முதுமலைக்கு செல்லும் வழியில் கிடக்கும் பீர் பாட்டிலை
பார்த்து வெறுத்து போய் இருக்கின்றேன்.. ஆனால் அது யானையின் காலில்
ஏறினால் காட்டு மகராஜா கோவிந்தா
என்று படிக்கும் போது நெகிழ வைத்து விட்டது... சப்போஸ் காட்டுல கண்ணுல பீர்
பாட்டில் கிடந்தா பொறுக்கி அட்லிஸ்ட் குப்பை தொட்டியில் போட வேண்டும் என்று முடிவு
எடுத்து இருக்கின்றேன்.. அதுதான் யானை டாக்டர் கதையில் சிறப்பு... யானை டாக்டரும்
தேளை காப்பாற்றும் ஜென் துறவி மனநிலைதான் இன்னும் அறத்தில் சில கதைகள் இருக்கின்றது... வாசித்துக்கொண்டு
இருக்கின்றேன்..
இனி
தொடர்ந்து வாசிப்பேன்....
இந்த கடிதம் சோற்றுக்கணக்கை படித்து நெகிழ்ந்து எழுதிய கடிதம்.. இதை எப்படி நீங்கள் எடுத்துக்கொள்வீர்கள் என்று
தெரியாது... எப்படி எடுத்துக்கொண்டாலும்
அதை பற்றி நான் கவலைகொள்வது கிடையாது... பார
நிறைவான
நெகிழ்ச்சியான கதையை வாசிக்க காரணமாய் இருந்த எழுத்தாளர் ஜெயமோகனுக்கு என் வாழ்த்து கலந்த நன்றிகள்..
வெகு
நாட்களுக்கு பிறகு என் கடந்த கால வாழ்வை
அசை போட வைக்க காரணமாய் இருந்த
அந்த எழுத்துக்கு.....
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
தயவு செய்து கதையின் லின்க் தரவும்
ReplyDeleteஅருமையான விமர்சனம்! கதை வாசிக்க தூண்டுகிறது! வாசித்துவிட்டு வருகிறேன்!
ReplyDeletehttp://www.jeyamohan.in/?p=11992
ReplyDeleteஆஹா! நல்ல கதைகள் எல்லாம் படிப்பீர்கள் போலவே? நல்லா எழுதி இருக்கீங்க!
ReplyDeleteஅருமையான சிறுகதை ,
ReplyDeleteஉஹும் நீ ரொம்ப ரொம்ப லேட் ஜாக்கி...
ReplyDeleteசோ யானை டாக்டர் படிச்சாச்சி... சொத்து கணக்கு படிச்சாச்சி... அப்போ நெக்ஸ்டு ஊமை சென்நாய் தான்...
அதையும் படிச்சிட்டு கொஞ்சம் எழுதுங்க... உங்க ரைட்டிங்ல விமர்சனம் படிக்க ஆசையா இருக்கு...
+1
ReplyDelete""""நான் எதிர்பார்த்தது அவரது கண்களின் ஒரு பார்வையை. நானும் ஒரு ஆளாகிவிட்டேன் என்று என் தாய்க்கு தெரியவேண்டாமா இல்லையா? அனால் அவரது கண்கள் வழக்கம்போல என்னை சந்திக்கவேயில்லை""
ReplyDeleteஅவ்ளோதான், கண்ணீர் வந்தே ஆகணும் !!
நன்றி நண்பர்களே... ஏழ்மையில் இருந்து மீண்டு வந்த அத்தனை பேருக்கும் இந்த கதை கண்டிப்பாக பிடிக்கும் என்பதுதான் நிதர்சனம்.
ReplyDeleteAnna please read the following stories too. Its available in Jeyamohan Sir website Itself.
ReplyDeleteAnal Kaatru
Vanangaan
Aram
Kadaisi Mugam
Padugai
Kanni Nilam
Iravu