SPETTERS-1980/ நெதர்லேன்ட்/மூன்று இளைஞர்களின் வாழ்க்கை.



மெரினாவுல இன்னைக்கு நைட்டு போனாலும்  அந்த குருப்புகளை பார்க்கலாம்....
எல்லோரும் 220 சிசி பைக்கை  வச்சிக்கிட்டு பைக் சைடு ஸ்டான்டு போட்டு அதுல சாஞ்சிக்கிட்டு பேசிக்கிட்டு இருப்பானங்க.. எல்லார் கையிலும் தம்மும் காதுல கடுக்கன் சர்வ  நிச்சயமாய் இருக்கும்..

பேசுவார்கள் பேசுவார்கள் அப்படி என்ன பேசுவார்கள் என்று  தெரியாது... சிலர்  சிவபாணத்தை மறைவில் எங்கோ இழுத்து விட்டு வந்து இருக்கின்றார் என்று அசர் கண்கள் காட்டிக்கொடுக்கும் அவனின் செயல்பாடுகள் மட்டும் எல்லோரையும் விட வித்தியாசமாய் இருந்த தொலைக்கும் எல்லாத்துக்கும் கெக்கே பெக்கே என்று சிரித்துக்கொண்டு இருப்பான்.

 திடிர் என்று களைந்து செல்வார்கள்.. அவர் அவர்   பைக்கில் ஏறிக்கொண்டு பறப்பார்கள்... எப்படியும் இரண்டு பைக்குகளின் முன் பக்க வீல்  காற்றில் மிதந்துக்கொண்டு புவியீர்ப்பு விசை நோக்கி தேடும்...

முட்டு சந்து மற்றும் சின்ன சின்ன டீக்கடை வாசல்களில் இப்போது எல்லாம் இளைஞர் அதிகம் புழங்குகின்றார்கள். அப்படி பார்ப்பது இப்போதுதான்.. ஒரு 20 வருடம் முன் வெறும் சைக்கிள்கள்தான் எங்கும் வியாபித்து இருக்கும்...ஆனால்  இப்போது திரும்பும் இடத்தில் எல்லாம் பைக்குகள்... பட் 1980 களில் அதாவது 35 வருஷத்துக்கு முந்தி ஷாட்டுல இருந்து சீன்ஸ்வரை கலக்கி இருக்கின்றார்... இந்த நெதர்லேன்ட் இயக்குனர் .



பவுல் வெர்ஹோவன்.

டச் மற்றும் ஹாலிவுட் இயக்குனர்....1934 இல் பிறந்தவர். 1970களில் இந்த ஆள்   எடுத்த படங்கள் எல்லாம்  காம ரசம் சொட்டுபவை...  இதையெல்லாம்  படமா எடுக்கலாமா? காட்சியா வைக்க முடியுமா? என்பதை எல்லாம்  அசல்ட்டாக காட்சிகளாக வைத்த சினிமா பார்ப்பவர்களுக்கு ஷாக் கொடுக்கும் கலைஞன்...  இவருடை டச் மூவி  நாயகிகள் யாரும் பிரா போட அனுமதிக்கவே  மாட்டார்.... மார்புகாம்புகள் கொஞ்சமாவது  வெளியே தெரிய வேண்டும் எனும் விருப்பம் கொண்டவர்... அவர்  விருப்பம் புரிந்ததாலே என்னவோ.. அவருடைய நாயகிகளும் அப்படியே...



ஆனால் ஹாலிவுட்டில் இந்த ஆள் எடுத்த படங்கள் எல்லாம்  சூப்பர்  டூப்பர் ஹிட் திரைப்படங்கள் ஆக்ஷன் திரைப்படங்கள்....


பவுல் வேர்ஹோவனுக்கும் எனக்கும் நிறைய சம்பந்தம் உண்டு.. நெதர்லேன்ட்ல பொறந்த அந்த ஆளுக்கும்   எனக்கும்  என்ன சம்பந்தம் 1990 டூ 1995 கால கட்டங்களில் உருவாச்சின்னு சொல்லலாம்.

பாண்டி ரத்னா தியேட்டரில்  டோட்டல் ரிகல் படம்...

வீடியோ கேசட் மூலம் தமிழகத்தில் உள்ள  கடலூரில் அர்னால்டு சுவாஷநெகர் கால் பதித்த நேரம்...  பிரிடியேட்டர், காமாண்டோ போன்ற படங்கள் மூலம் அவருக்கு  ரசிகர் மன்றம் அமைக்க    பாண்டி கடலூர் ரசிகர்கள் யோசித்துக்கொண்டு இருந்த நேரம்...

டோட்டல் ரிகல் பியூட்சர்ல இந்த உலகம் எப்படி இருக்கும் என்பதையும்  செவ்வாய் கிரகம் எப்படி இருக்கும் என்பதையும் மிக அழகாக விளக்கி சொன்ன படம் ஒரு கிரைம் திரில்லர் திரைப்படம்...

 அதுக்கு அப்பறம் ஸ்டார்ஷிப் டுரூப்பர்ஸ்... ரோபோகப்  போன்ற படங்கள் பார்த்தவர்கள் பவுல் வெர்ஹோவனை பற்றி நன்கு அறிந்து இருப்பார்கள்... முக்கியமா ஹாலோவ் மேன்... இப்படி ஆக்ஷன் படம் ஹாலிவுட்ல எடுக்கும் போது  அவர் ஸ்டைலில் முழுக்க முழுக்க காமம் சொட்ட சொட்ட எடுத்த  கிரைம் திரில்லர்தான் பேசின் இன்ஸ்டிங்ட்...

 போலிஸ்   ஷரன்  ஸ்டோனை விசாரிக்கும் போது  கீழ ஜட்டிக்கூட போடாம ஷேம் ஷேம் பப்பி ஷேம் போல ஷரன் உட்கார்ந்து ஸ்டைலாக சிகரேட் பிடித்ததையும், அப்படியே கால் மேல் கால் போட்டு அண்ட சராசரத்தையும் நொடிகளில் காட்டிய போது வாயில் ஈ போகாமல் பார்த்துக்கொண்டு இருந்ததை  தமிழ் ரசிக மகாஜனங்களுக்கு எதிரைளியை நிலைய குலைய வைக்கும் காட்சிகளை வைப்பதில் அவருக்கு நிகர் அவரே.....



 அப்படி பட்ட  டைரக்டர் பவுல் வெர்ஹோவன் 1988ல சொந்த நாட்டுல பண்ண படம்... மூன்று இளைஞர் அவர்களின் அக புற வாழ்க்கை  மற்றும் ஆசை அபிலாஷைகளை இந்த படம் விவரிக்கின்றது.

சரி இந்த படத்தில் மூன்று  நண்பர்கள்  அவர்களுக்கு மோட்டர்   சைக்கிள் போட்டிகளில் வெற்றி பெற வேண்டும் என்பது கனவு... அந்த ஊரில் இருக்கும் வின்னரோடு நட்பு பாராட்டுகின்றார்கள்... அந்த ஊருக்கு ஒரு மொபைல் ஸ்நாக்ஸ் கடை  வருகின்றது... அதை ஒரு பெண்  நடத்துகின்றாள். அவளுக்கு அவுங்க அண்ணன் உதவி செய்கின்றாள்....

மோட்டர் சைக்கிள் சாம்பியன் ஷிப் ஆக நினைக்கும் நண்பன் விபத்தில்  படுத்த படுக்கையாகி அவர்கள் நட்பு சின்னா பின்னமாக போய் விடுகின்றது... மூன்று இளைஞர்களும் படம் முடிவதற்குள் என்னவாகின்றார்கள் என்பதுதான் படத்தின் கதை.

ஹோமோ ஆட்கள் சமுகத்தினால்  படும்  துயரங்களை 1988 இல் காண்பிக்க தில் வேண்டும்...

 நெதர்லேண்ட் 1980 எப்படி இருந்துச்சி... அங்க இருந்த  இளைஞர்களின் நோக்கம் என்னவா இருந்திச்சி.. அதை விட கிருஸ்துவத்தை அநியாயத்துக்கு பகடி செஞ்சி கலக்கி இருப்பார்... மீடியா நண்பர்கள் அவசியம் பார்க்கவும்.. முக்கியமா டிவி மீடியா ஆட்கள்... அந்த காலத்தில் ஓபி வேன் எல்லாம் வைத்துக்கொண்டு பெரிய பெரிய கேமராவோடு இருக்கும் காட்சிகள்.. கிளாசிக் ஸ்வீட்.

===
படத்தின் டிரைலர்.


=======
படக்குழுவினர் விபரம்...

Directed by Paul Verhoeven
Produced by Joop van den Ende
Written by Gerard Soeteman
Jan Wolkers (uncredited)
Starring Hans van Tongeren
Renée Soutendijk
Toon Agterberg
Maarten Spanjer
Marianne Boyer
Jeroen Krabbé
Rutger Hauer
Music by Ton Scherpenzeel
Kayak
Cinematography Jost Vacano
Editing by Ine Schenkkan
Distributed by The Samuel Goldwyn Company
Release dates 25 February 1980
Running time 120 minutes
Country Netherlands
Language Dutch

==========

பைனல்கிக்..
இந்த படம்  டைம்பாஸ் படம்...  ஜஸ்ட்   பார்க்கலாம்.. ரொம்பவும் நீட்டி மொழங்கி இருப்பார்.. இன்னைக்கு வேணும்னா.. இந்த படம்  லேக் இருக்கறது போல  தெரியலாம்...ஆனா எப்படி இப்படி பட்ட படங்கள் எடுத்துட்டு ஹாலிவுட்ல  எப்படி பரபரபான  ஆக்ஷன் படங்கள் எடுத்தார் என்பதுதான் எனது மில்லியன் டாலர் கேள்வி.

 =========
படத்தோட  ரேட்டிங்.

பத்துக்கு ஐந்து.
=========
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.


நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

1 comment:

  1. Paul Verhoeven னின் தற்போதைய படங்கள் என்னென்ன? அவர் ஹாலிவுட்டில் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதையும் அடுத்த பதிவில் தெரிவியுங்கள்! மேலும் தெரிந்து கொள்ளலாம்!

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner