Oru Kanniyum Moonu Kalavaanikalum/2014 ஒரு கன்னியும் மூன்று களவானிகளும் சினிமா விமர்சனம் ஜெர்மன் இயக்குனர்  Tom Tykwer அவருடைய 14 வருட மெயின் ஸ்டீரீம் சினிமா கேரியல்,  முத்தான நான்கு பாடங்களை கொடுத்து இருக்கின்றார்.... ஹேவன்,ரன் லோ லா ரன், பர்பியூம்,இன்டர்னேஷனல்.  போன்ற படங்களை குறிப்பிட்டு சொல்லலாம்...
இதுல  ஹேவன் மற்றும் இன்டர்நேஷனல் படத்தை பத்தி நம்ம தளத்திலேயே எற்கனவே நான்   எழுதி இருக்கின்றேன்..


ரைட் ....Tom Tykwer இயக்கி உலக படங்கள்  தமிழ் நாட்டில்  பட்டி தொட்டியெங்கும் பேமஸ் ஆகாத கால காட்டமான ,1998 இல் அவர் இயக்கத்தில் வெளி வந்த  திரைப்படதான் ரன் லோ ரன்... புல் பெக்குல   அகிராவோட ரோஷமன் படத்தை  பத்தி ரொம்ப   யோசிக்கும் பொழுது இந்த படத்தின் நாட்டை பிடித்து  அவர்  பிடித்து இருக்கலாம் என்பது என் அனுமானம்...

 ரன் லோலா ரன்  படத்தின் கதை ....லோலாவின் காதலன்  பணத்தை  தொலைத்து விட்டு சிக்கலில்  மாட்டிக்கொள்ள  சரியான நேரத்தில் பணத்தை  கொடுக்கவில்லை என்றால் பணத்துக்கு சொந்தக்காரர்கள் கொலை செய்து விடுவேன் என்று மிரட்ட...தன் காதலனை காக்க  பணத்தை குறுகிய நேரத்தில் புரட்டி காதலனை காப்பாற்ற  காதலி லோலா ஓடுகின்றாள்... இதில் மூன்று வெர்ஷன்களில் அந்த ஓட்டம் இருக்கும்  நிமிட இடைவேளைகளில் பயணிக்கும் போது அது  எந்த  விதமான முடிவை நோக்கி நகர்கின்றது என்பதுதான் படத்தின் சுவாரஸ்யம்...


இந்த பிளாட்டை தமிழில் யாரும் தொட்டுப்பார்க்கவில்லை... ஆனால் அதை சிம்புதேவன் தொட்டு இருக்கின்றார்... அதற்காகவே  அவரை  பாராட்டலாம்.. ஆனால் அதை எக்சிபிட் பண்ண விதத்தில், ஆர்ட்டிஸ்டுகளை தேர்ந்து எடுத்த விதத்தில் கோட்டை விட்டு இருக்கின்றார்.

அருள்நிதி ஒரு  பணக்கார பெண்ணை காதலிக்கின்றார்...  நண்பர்களுடன் சேர்ந்து  அந்த  பெண்ணை கடந்த திட்டம் போடுகின்றார்...ஒரு ஒரு நிமிட வித்தியாசத்தில் இந்த கடத்தல் நடந்தால்  விதியின் பயணாக என்ன என்ன  விளைவுகள் ஏற்ப்படும் என்பதுதான் படத்தின் கதை.. ரன் லோலா ரன் பார்த்தவர்கள் ஓரளவுக்கு படத்தை மனக்கண்ணில் ஓட்டி பார்த்து இருப்பார்கள்....

பார்ன் இன் சில்வர் ஸ்பூன் நடிகர் அருள் நிதியை  வைத்து இந்தஅளவுக்கு வேலை  வாங்கியதே  பெரிய விஷயம்தான்...  ஆனால் ஒரு பரபரப்பான பிளாட் கதையில் பிளாக் ஹீயுமரையும் சேர்த்து விட்டதால் பரபரப்பு இல்லாமல் சுவாரஸ்யமற்று அர்த்த நாரிஸ்வரராக  இருக்கின்றது என்பதே உண்மை....

உதாரணத்துக்கு இது போன்ற நொடிகளை என்னும் கதையில்   சூழ்நிலைகள்  , மனிதர்கள் வில்லனாகி  விடுவார்கள்... நொடிக்கு நொடி  அதை தாண்டி  நிக் அப் டைமுக்குள் முடிக்க வேண்டும் ஓட வேண்டும்  என்பதுதான் திரைக்கதையின்  பரபர...

ஆனால் இதில்  பெண்ணை சார்ச்சில் கடத்த போகின்றோம் என்று டைம் குறித்து  விட்டு,  கேஷுவலாக ஆஸ்பிட்டல் போவது... அப்பார்ட்மென்ட்டில் இருந்து   கிளம்பும் போது எதிர்படும் ஆட்களிடம்  சாவகாசமாக பேசி விட்டு செல்வது என்பதுதான்  படத்தின் பலவீனம்.. இப்படித்தான் சாவகாசமாக ரிலாக்சாக போக போகின்றார்கள் என்றால் அப்புறம் எதுக்கும் அப்பார்ட்மென்ட்டில் இருந்து ஓட வேண்டும்... நடராஜின் பின்னனி இசைக்கு ஒரு டெம்பான ஷாட் வேண்டும் என்பதற்காக எடுத்தது போல இருக்கின்றது...

பட் சந்திக்கும் அத்தனை கேரகடர்களும் முத்திரை பதிக்கின்றார்கள்... பரபரவென நகரும் கதையை எடுத்துக்கொண்டு அதில் பிளாக் ஹீயுமர் மற்றும் சிவன் நாராதர் என்று ஜல்லி அடித்து இருக்க வேண்டாம்... அது எல்லாமே டெம்போவை கெடுக்கின்றது என்பதுதான் உண்மை...

ஒரு அவசரமான காரியம்... திருச்சிக்கு போக வேண்டும்... போயே ஆக வேண்டும் ... இல்லை என்றால் காதலி திருமணம் நடந்து விடும் ...   வெகு  விரைவாக  சென்று காதலியின் திருமணத்தை நிறுத்தி விட வேண்டும்... கார் இல்லை பைக் இல்லை... பேருந்து பயணத்தக்கே  நாதி இருக்கின்றது..


விரைவு பேருந்து  என்று அழைக்கப்படும் பாயின்ட்  டூ பாயிண்ட் பேருந்தில்  ஏறி உட்கார்ந்தும் விடுகின்றீர்கள்... இந்தனைக்கு ஐந்தரை மணி நேரம்  பயண நேரம் என்று கொட்டை எழுத்தில் பேருந்தில் எழுதி இருக்கின்றார்கள்..... அப்படி என்றால் அந்த பேருந்து 100 இல் பறக்க வேண்டும் அல்லவா?

பேருந்து அரைக்கி அரைக்கி மெதுவாக செல்கின்றது.. தாம்பரம் தாண்டுவதற்க்குள் ஒரு மணி  நேரம் காலி....  பெருங்களத்தூர் தாண்டி கட்டங்கொளத்தூர் எஸ்ஆர்எம் காலேஜை தொடும் போது,இரண்டரை மணி நேரம் காலி.. சரி இதுக்கு  அப்புறம் வேகம் எடுப்பான்னு பார்த்தா... மாமன்டூர்ல போய் வண்டியை போட்டு விட்டு டீ காப்பி டிபன் சாப்பிடறவங்க சாப்பிடலாம் சார்ன்னு சொன்னா?- எப்படி இருக்கும்?-?? ஒரு மாதிரி கடுப்பா ஆயிடாது... அதைதான் படத்துல வரும் காட்சிகள் ஏற்படுத்துகின்றன...

  முதல்  காட்சியில் பெண்ணை  தூக்க திட்டம் போடுவது எல்லாம் அருமை.. அருள்நிதி மிளிர்கின்றார்... ஓட்டமும் ஓகே... ஆனா புது பைக்க நான்  ஓட்டறேன்னு சொல்லிட்டு  மூனு பேரை வச்சிக்கிட்டு பைக்கை கத்துகறவங்க போல ஆட்டி ஆட்டி ஓட்டறப்ப  ரசிகன் அந்த டெம்ட்டுலருந்து வெளியே வந்துடறான்...அம்மாவுக்கு உடம்பு சரியில்லை...,  துப்பாக்கி வாங்கனும், காதலியை கடத்துனும்... எந்த அளவுக்கு பதட்டம் மூஞ்சியில இருக்கனும் அது எதுவுமே   பெரிசா இல்லை.. பைக் எப்படி பறக்கனும் அதுவும் இல்லை...


வித்தியாசப்படுத்தறேன்னு ஏகப்பட்ட கேரக்டர்களை இன்வால்வ் பண்ணியது படத்தோட டெப்ட்டை குறைத்து ரசிகர்களை சத்தம் போட வைக்கின்றது...
பட் படத்தை கொஞ்சமேனும் ரசிக்க வைப்பது.. மியூசிக் டைரக்டர் நட்ராஜ்  மற்றும் வசனங்கள்...


 மூன்று டைப்  காலங்கள்.... அதே ஆட்கள் அதே  சூழ்நிலைகள்  ஆனால் வித்தியாசப்படுத்த வேண்டும்.. அதை மிகசிறப்பாக செய்து இருக்கின்றார்.
 வசனங்கள் அருமை..

பொறுப்பை எடுத்துக்காம நல்லவனா இருந்து என்ன புரயோஜனம்...
மூன்று லவ்சிக்வென்ஸ்களில்  முதல்   சிக்வென்ஸ் ஆன பாத்ரூமுக்கு காதலி அழைத்து செல்லும் காட்சி டச்சிங்..
=======

படத்தின் டிரைலர்
============
படக்குழுவினர் விபரம்.

Directed by Chimbu Deven
Produced by M. K. Tamilarasu
Written by Chimbu Deven
Starring Arulnithi
Bindu Madhavi
Ashrita Shetty
Music by Natarajan Sankaran
Cinematography S. R. Kathiir
Editing by Raja Mohammed[1]
Studio Mohana Movies
Country India

Language Tamil

=======
பைனல்கிக்..

பிந்து மாதவி மட்டும் இல்லையென்றால் இன்னமும் போர் அடித்து இருக்கும்...  பிரேமுக்கு பிரேம் ஓடி உற்சாகபடுத்துகின்றார்.


 படத்தை சமயங்களில் தூக்கி நிறுத்துவது.. பகவதி  பெருமாள்.... அசத்தி இருக்கின்றார்....

 அருள்நிதி  நடித்த இரண்டு படங்கள்.... வம்சம் , மற்றும் மவுன குரு.... இரண்டுமே அசத்தல்  திரைப்படங்கள்... பெட்டர் லக்  நெக்ஸ்டைம் அருள் மற்றும் சிம்புத்தேவன்..,.


 பட்  ஒரு விஷயம் குறிப்பிடனும்..

இப்படி ஒரு விஷயத்தை தமிழ் சினிமாவுல டிரை பண்ணதுக்கு சிம்புதேவனுக்கு ஒரு பூங்கொத்து..

எறும்பு கேக்கை தின்று மீதம்  எடுத்துக்கொண்டு  திரும்புவது.

டூட்டி நர்ஸ் மாறி இருப்பது...

முதல் காட்சியில் இடிக்கும்  டாக்டருடைய   கோட்....  அடுத்த டைம் லைன்  காட்சியில் பெட்டி மேல் வைத்து ரிசப்ஷனில்  பேசும் போது அந்த டாக்டர் கோட்டை லபக்குவது.. மரத்தின் மீதான  காக்கைகள்.... என்று நிறைய காட்சிகளில் அட  பொட வைக்கின்றார்கள்... கன்டினியூட்டி  பார்த்து அசிஸ்டென்ட் டைரக்டர்களுக்கு தாவு தீர்ந்து இருக்கும்.... அந்த அளவுக்கு உழைப்பை கொட்டி இருக்கின்றார்கள்...

 என்ன கொட்டி என்ன?

ஒரு முறை சினிமா ரசிகர்கள் அவசியம் பார்க்கலாம்... ரன் லோ லா ரன்  எப்படி தமிழில் டிரை செய்து இருக்கின்றார்கள என்று காண...

டைம் பாஸ் திரைப்படம்.
========

படத்தின் ரேட்டிங்.
 பத்தக்கு ஐந்து.

==========
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...

4 comments:

 1. உதயநிதி மிளிர்கின்றார்...//// அருள்நிதி தானே...
  அருள்நிதி நடித்த இரண்டு படங்கள்.... வம்சம் , மற்றும் மவுன குரு.//உதயன் அப்டின்னு ஒரு படம் அத உட்டுட்டீங்களே


  ReplyDelete
 2. படத்தின் வேகத்திற்கு நீங்கள் சொன்ன திருச்சி பஸ் உதாரணம் சூப்பர். இது போன்ற வித்தியாசமாக கதையை முயற்சிக்க வேண்டும் என்று நினைக்கும் இயக்குனர்களுக்கு ஸ்பீடு பிரேக்கர்களாக இருந்து படத்தைக் கெடுப்பது பாடல்களும் நகைச்சுவையுமதான் என்பது என் கருத்து.

  ReplyDelete
 3. ரெண்டு மாசம் முன்னாடி ஒரு படம் நடிச்சிருந்தாரே அருள்நிதி

  ReplyDelete
 4. நல்ல விமர்சனம்னே. ரன் லோலா ரன் பாத்தவங்க இந்த படத்தை பாக்காம இருக்கனும். டென்ஷனாயிடுவோம். புதுசா பாக்கரவங்களுக்கு பிடிக்கலாம். அருள்நிதி தகறாறு என்ற படத்திலும் நடித்திருக்கிறார். அவர் நடித்து தேறிய ஒரே படம் மௌனகுரு.மத்ததெல்லாம் மொக்கைதான். இதே தீம்ல ஷாம் நடித்து 12பி என்ற படமும் வந்திருக்கிறது. ஞாபகம் இருக்குங்களா.

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner