கண்ணில் பட்டவை 2 (07/04/2014)

சென்னை பறக்கும் ரயில் நிலையம் இந்திரா நகர் நிலையம்....


இரவு இந்திரா நகர் ஸ்டேஷனில் இருந்து மயிலை ஸ்டேஷனுக்கு வர ஒன்பது மணி டிரெயினுக்கு எட்டே முக்காலுக்கு டிக்கெட் எடுத்தேன். யாழினி பிளாட்பாரத்தில் விளையாடிக்கொண்டு இருந்தாள்...

காவி உடையுடன் மத்திய வயதை கடந்தவர் பிளாட்பாரத்துக்கு வந்தார்... மகாவீரர் போல சம்னமிட்டு பிளாட்பாரத்தில் அமர்ந்தார். பக்கத்தில் இருந்த இருக்கையில் மூன்று பெண்கள் ஒரு பெரியவர் உட்கார்ந்து இருந்தார்கள்.. அன்னமிட்டக்கை எம்ஜிஆர் பாடலை... துக்க வீட்டில் பாடுவது போல சுருதி குறைந்து பாடினார். வறுமை குரலில் எதிரொலித்தது....

யாரிடமும் கை நீட்டவில்லை... கொடுக்க விருப்பமுள்ளவர்கள் கொடுத்தால் போதும் என்று இருந்தார்... யாரும் அவரை சட்டை செய்யவில்லை... மூன்று பெண்கள் மொபைல் போன் நோண்டுவதில் மும்முரமாக இருந்தார்கள்... அவர்களுக்கு அருகே உட்கார்ந்து இருந்த பெரியவர் டிரெயின் வரும் பாதையை வெறித்து பார்த்துக்கொண்டு இருந்தார்.....

நான் பாக்கெட்டை தூழவினேன்.. ஏழுரூபாய் சில்லரை இருந்தது... யாழினியிடம் கொடுத்து அந்த தாத்தாவிடம் போய் கொடுக்க சொன்னேன்... அவள் ஒடினாள் , பாடிய தாத்தாவை விட்டு விட்டு பெண்களோடு சிவனேன்னு உட்கார்ந்து இருந்த தாத்தாவிடம் பணம் கொடுக்க ,... அவர் மிரண்டு போய் என்னை முறைக்க... என் மனைவி பாடிய பெரியவரிடம் பணத்தை கொடுக்க சொன்னாள்...

பாடகர் தாத்தா என்று சொல்லாதது என் பிசகு.. நான் அவர் பக்கம் ரயில் எறும் வரை நான் திரும்பி பார்க்கவேயில்லை... என் முதுகை உக்கர காளியின் பார்வை போல இரண்டு ஜோடிக்கண்கள் என் முதுகை சிவந்த கண்களோடு பார்த்துக்கொண்டு இருப்பதை திரும்பியிருந்தாலும் என்னால் உணர முடிந்தது...

பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

3 comments:

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner