சில நேரங்களில் உண்மைகள் கசக்கவே செய்யும்.. ஆனாலும்
உண்மை என்னவென்பதை பொதுமக்கள் தெரிந்துக்கொண்டு விழப்புணர்வுடன் இருப்பது
அவசியம்.
இந்தியாவில் மட்டும் வருடத்துக்கு சுமார் நாற்ப்த்தி
நாலாயிரம் குழந்தைகள் மற்றும் சிறுமிகள் விப்சசாரத்துக்காக
கடத்தப்படுகின்றார்கள். இதில் பதினோராயிரத்துக்கு
மேற்ப்பட்ட குழந்தைகள் எங்கே போனார்கள் என்னவானர்கள் என்று எந்த தகவலையும்
கண்டுபிடிக்கமுடியவில்லை என்கின்றனர் தொண்டு நிறுவனத்தினர் .
விபச்சாரத்துக்காக அப்பபாவி குழந்தைகளையும்
சிறுமிகளையும் கடத்தி துன்புறுத்தி விபச்சாரத்தில் தள்ளும் கொடுமை இந்தியாவில்
அனுதினமும் நிகழ்ந்து வரும் ஒரு நிகழ்வு… மனிதாபிமானமற்ற மனிதர்கள் இருக்கும்
இந்த உலகத்தில் எந்த பெண் குழந்தையும் எப்போது
வேண்டுமானாலும் கடத்தலுக்கு உட்படுத்தபடுவார்கள் என்பதால் உண்மை சம்பவங்களின்
அடிப்படையில் விழிப்புனர்வை ஏற்ப்படுத்த
உலகம் எங்கும் திரைப்படங்கள் வந்து
க்கொண்டு இருக்கின்றன அந்த வரிசையில்... இந்த ஸ்பானிய படமும்..
அந்த பெண்ணை பார்க்கையில் நம்ம ஊர் தென்மாவட்டத்து
பெண் போல இருக்கின்றார்… சின்ன பெண்…. ஆனால் ஏழ்மையான குடும்பம்… அந்த
ஏழ்மையை மையமாக வைத்து அவளை விபச்சாரத்தில் தள்ளுகின்றது ஒரு கும்பல் அதில்
இருந்து அந்த சின்ன பெண் மீண்டாளா? இல்லையா என்பதுதான் இந்த படத்தின் கதை…
சின்ன பெண் பாத்திரத்தில் நடித்து
இருக்கும் அந்த பெண் மிக அழகாக அப்பாவி தனத்தை வெளிப்படுத்தி
நடிப்பில் பட்டையை கிளப்புகின்றார்…. நிறைய கனவுகளோடு ஸ்பெயின் வரும் அவள்
ஏர்போர்ட்டிலேயே அவளுக்கு வந்தாலும் திரும்பி போவது என்பது சாத்தியமில்லை…
காரணம் பிளைட் செலவுக்கு பணம் செலவு செய்த
பணத்தை கொடுத்தால் மட்டுமே அவளால் அந்த
காண்ட்டிராக்டில் இருந்து வெளி வர முடியும்.. அது மட்டுமல்ல… பாஸ் போர்ட்டை
வாங்கி வைத்துக்கொண்டு அவளை பாடாய் படுத்துகின்றார்கள் அது மட்டுமல்ல…
அவனை
வேலை செய்யும் காண்டிராக்ட் விசாவில் அழைத்து செல்லாமல் டுரிஸ்ட் விசாவில்
அழைத்து செல்லும் போதே படம் என்ன சொல்ல வருகின்றது என்பதை யூகித்தாலும்
கிளைமாக்ஸ் ஒரு பெரிய டுவிஸ்ட்டை கொடுத்து இருப்பது உண்மை….
அவள் தப்பிக்க வேண்டும் என்று போராடுகின்றாள்... அவளுக்கு தப்பிக்க நல்ல வாய்ப்பு ஒன்று கிடைக்கின்றது... ஆனாலும்... சரி படத்தை பார்த்து தெரிஞ்சிக்கோங்க..
இயக்குனர் Isabel de Ocampo தொலைகாட் நிகழ்ச்சிகளில் பணிபுரிந்தவர்.. இதுவரை முன்று படம் இயக்கி இருக்கின்றார்... இது மூன்றாவது படம்... நிறைய உலக படவிழாக்களில் கலந்துக்கொண்டு பாராட்டை பெற்ற திரைப்படம் இது..
கேமரா ஆங்கிள்ஸ் எல்லாம் அசத்தல் ரகம்... சின்ன பட்ஜெட்... ஆனாலும் அருமையாக எடுத்து இருக்கின்றார்கள்.. நாயகி இசபெல்லா ஊர் லோக்கேஷன் நம்ம ஊரை நினைவுபடுத்தும் ஒரு லோக்கேஷன்.
=======
==
பைனல்கிக்
அவசியம் பார்க்க வேண்டிய திரைப்படம். அந்த இசபெல்லா பாத்திரத்தில் நடித்த பெண்ணின் நடிப்புக்கா...
=======
படத்தோட ரேட்டிங்..
பத்துக்கு ஆறு
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
அண்ணா டவுன்லோட் லிங்க் ப்ளஸ்
ReplyDelete