THE CLIENT-2011/உலகசினிமா/கொரியா/ மோதும் வக்கில்கள்.





முதல்லயே சொல்லிடறேன்... வக்கில் வேலைக்கு படிக்கறவங்க... வக்கில் வேலை பார்த்தவங்க....  பார்க்கறவங்க  எல்லாரும் இந்த படத்தை பார்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்..


அட அட அட என்ன மாதிரி படம்....

ரொம்ப நாள் ஆயிடுச்சி.... இப்படி ஒரு படத்தை பார்த்து....

சும்மா சொல்லக்கூடாது... கொரியாக்காரனுங்க.,... அசத்தி பின்னறானுங்க.. சான்சே இல்லைன்றேன்..... சும்மா  அடிச்சி  ஆடும் பட்ங்களா எடுத்து தள்ளறானுங்க... பின்னறானுங்க.....

மொத்த படமும் ஒரு வார்த்தை ஒரு வாக்கியத்துல போட்டு பொரட்டி எடுத்துடறானுங்க...

கிளைன்ட் படம் சான்சே இல்லை....

 எல்லாம் சுபம்ன்னு நினைக்கும் போது ஓத்தா.. நீ அப்படி நினைச்சிட்டா நாங்க விட்டு விடுவோமா? என்று கம்முன்னு அடி வயித்துல குத்தி பொரட்டி போட்டு,  பொங்குன்னு மூக்குல குத்தி வெத்தலப்பாக்கு பொட்டுக்கவச்சா எப்படி இருக்கும்... அப்படி  இருக்கு இந்த படத்தின் கிளைமாக்ஸ்... சான்சே இல்லை..


கல்யாண நாள்....

 பொண்டாட்டிக்கு மலர்  கொத்து வாங்கிட்டு வரான்... பெரிய அப்பார்ட்மென்ட்ல எட்டாவது மாடியில அவன் வீடூ....வாசல்ல புல்லா கூட்டமா நிற்குது... தயங்கி தயங்கி  வீட்டுக்கு போறான்....  பெட்ரூம்ல பொண்டாட்டிக்கு பதில் ரத்தம்  குட்டையா தேங்கி நிற்குது...

 பொண்டாட்டி பாடி அங்க இல்லை...

போலிஸ் சொல்லுது... நீதான் கொலைக்காரன்... அதனால உன்னை கைது பன்னறோம்ன்னு....

கல்யாண நாளை செலிபிரேட் பண்ண நான்  பொக்கே வாங்கி வந்து இருக்கேன்... நான்  எதுக்கு என் ஒய்ப்பை  கொல்லப்போறேன் ?என்று சொல்லிக்கொண்டு இருக்கும் போதே காவல்துறை அவனை கைது செஞ்சிடுது.

புருசன் ஜெயில்ல களி திங்கறான்...

THE MURDER WITH OUT THE BODY இதுதான் படத்தோட ஒன்லைன்... அப்ப யாரு கொலை செஞ்சி இருப்பா... யார் சஸ்பெக்ட்... அதுதான்  படத்தை பரபரப்பா பார்க்க வைக்குது.

ஒரு வக்கில் அவன் கேசை எடுத்து வதாடி அந்த அப்பாவி புருசனை விடுவிக்க நடத்தும் போராட்டம்தான் இந்த திரைப்படத்தின்  மொத்த கதையும்..

சான்சே இல்லை...


 கோர்ட் சீன்.... அதில் வாதடும் காட்சிகள்.. வாதி பிரதிவாதிகளின் தர்க்க வாதங்கள்... நீதிபதி... அவருக்கு பக்கத்தில் ,உண்மை கண்டு அறியும் குழு....  முக்கியமா கோர்ட் இன்டிரீயர்  பார்த்திங்கன்னா... அசந்தடுவிங்க.... கார்பரேட் ஆபிஸ்  போல இருக்கு... நம்ம ஊர்  கோர்ட் இது போல மாறனும்ன்னா எப்படியும் இன்னும் ஒரு நூற்றாண்டு கண்டிப்பா தேவை... வலிமையான நல்லது செய்யும் மத்தியில் அமைந்தால்... ஒரு 25 வருடத்தில் அது சாத்தியப்படும்...

நடிப்பில் எல்லா கதாபாத்திரங்களும்  பின்னி எடுக்கின்றார்கள்...

ஒட்டு மொத்த படத்தையும் திருப்பி போட்டு.. பார்வையாளைனை அட போட வைக்க  ஒரே ஒரு வரி வசனத்தால முடியுமா? அது எப்படி முடியும்??? வாத்தியார் சுஜாதா எழுதிய நாவல் கொலையுதிர்காலம்....450 பக்கத்துக்கு மேல இருக்கும்... அனா கடைசி இரண்டு பத்தியில  ஜஸ்ட்லைக்தட்டா ரெண்டு பத்தியில மொத்தகதைக்கு பதில் சொல்லி இருப்பார்... இந்த படத்துல அந்த சீன் பார்த்த போது  எனக்கு அந்த சீன்தான் எனக்கு நினைவுக்கு வந்துச்சி.



சூழ்நிலைகளை மட்டுமே  வைத்து குற்றவாளி என்று சொல்லிவிட முடியாது.. குற்றவாளி என்று சொன்னால்  வலுவான ஆதாரம் வேண்டும் என்று சொல்லும் போது.. அது கொஞ்சம் நேரத்தில் தடம்புரள்வதும்.. வாவ். 

சரி வளவளன்னு  பேசி..... டுவிஸ்ட்ட சொல்லிடபோறேன்.. அவசியம் இந்த படம் பார்த்தே தீரவேண்டிய திரைப்படம்... 

===
படத்தின் டிரைலர்.




======
படக்குழுவினர் விபரம்.

Directed by Sohn Young-sung
Produced by Yu Jeong-hun
Kim Jho Kwang-soo
Shin Chang-gil
Written by Sohn Young-sung
Lee Chun-hyeong
Starring Ha Jung-woo
Jang Hyuk
Park Hee-soon
Music by Jo Yeong-uk
Cinematography Choi Sang-ho
Editing by Kim Seon-min
Studio Generation Blue Films
Distributed by Showbox/Mediaplex
Release dates
September 29, 2011
Running time 123 minutes
Country South Korea
Language Korean

Box office $15,780,280
=====
பைனல்கிக்.

கண்டிப்பாக பார்த்தே தீர  வேண்டிய திரைப்படம்... பிரசவ வலியால துடிக்கும் போது திடிர்ன்னு பனிக்குடம் உடைஞ்சதும்  உடம்பு அப்படியே பிரியா ஆவுமே  அது போல  கோர்ட்டுல  டுவிஸ்ட்  உடையும் அந்த நேரம் ஒரு பெரிய மகிழ்ச்சி பரபரப்பு ஒரு சேர அமையும் என்பதை  படம் பார்க்கும் போது உண்ர்வீர்கள்  என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன்.

====

படத்தோட ரேட்டிங்..

பத்துக்கு ஏழு.

====
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.

நினைப்பது அல்ல நீ 
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

12 comments:

  1. link eh kedaika matenguthu.. any one pls hlp..:-(

    jackie,MONTAGE nu oru super padam..recommeneded...

    ReplyDelete
  2. I watched this movie last week and stunned by the climax.Absolutely brilliant making!

    ReplyDelete
  3. I watched this movie and stunned by the climax! Absolutely brilliant making!

    ReplyDelete
  4. Good Movie, I watched it, Thank you for your review and introduction about this kind of movie, please recommend this kind of movies in future.

    ReplyDelete
  5. //சும்மா சொல்லக்கூடாது... கொரியாக்காரனுங்க.,... அசத்தி பின்னறானுங்க.. சான்சே இல்லைன்றேன்..... சும்மா அடிச்சி ஆடும் பட்ங்களா எடுத்து தள்ளறானுங்க... பின்னறானுங்க...../// Jackie.. it is a copy of hollywood movie...Primal Fear...

    ReplyDelete
    Replies
    1. boss primal fear is copy of this movie i guess...!!!

      Delete
    2. சைலன்ஸ் அப்படிங்கற பேர்ல இந்த படத்தை மலையாளத்துல கொலையா கொன்னு இருக்காங்க...!!!

      Delete
    3. Primal Fear - தான் இந்த படத்தோட காப்பின்னு நெனக்கிறேன்.

      Delete
  6. Its such a wonderful movie for suggested us. Its really great to worth watching!!! We cannot imagine the climax!!! its absolutely brilliant...Thanks!!! Aadicha pothai irankidichi boss!!!

    ReplyDelete
  7. @Vignesh .. Refer the movie link below... Its good.. Worth watching!!
    http://thepiratebay.se/torrent/9836193/(KOREAN).The.Client.2011.720P.BRRIP.H264.AAC-MAJESTiC

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner