இன்னும் திறக்கப்படாத முண்டகக்கன்னியம்மன் ரயில் நிலையம்.




சென்னையில் இருக்கும் கட்டிடங்களிலேயே வின்னர் வடிவேலு கணக்காக விழி பிதுங்கி இருக்கும் ஒரே கட்டிடம் எதுவென்றால்  அது மயிலையில் வீற்றிருக்கும் முண்டகக்கன்னியம்மன் கோவில் ரயில்  நிலைய கட்டிடம்தான்....


 கடந்த 12 வருடமாக  கட்டுகின்றார்கள் கட்டுகின்றார்கள் தாஜ்மஹால் போல  இழைத்து இழைத்து கட்டி இருக்கும் ஒரே கட்டிடம் இந்த  ரயில் நிலைய கட்டம்தான்....

 சென்னை பறக்கும் ரெயில்  தினமும் ஒரு லட்சம் பேர் பயணிக்கின்றனர்.... வெகு  நாட்களாக  லைட் ஹவுஸ் ரயில்வே ஸ்டேஷனுக்கும் மயிலை ரயில் நிலையத்துக்கும் நடவே ரயில் நிலையம் வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைக்க  எம்ஆர்டிஎஸ் அதற்கு செவி சாய்த்து . இந்த முண்டகன்னியம்மன் கோவில் ரயில் நிலையத்தை  2002 ஆம் ஆண்டு கட்ட துவங்கினார்கள்... 

சுமார் பண்ணிரண்டு வருடங்களாக  இழைத்து  இழைத்து கட்டிய கட்டிடம் என்ற பெருமை இந்த கட்டிடத்துக்கு உண்டு.... போன வருடம்தான்  முழுதாக கட்டி  முடித்து விட்டோம் திறப்பு  விழாவுக்கு நாங்கள் தயார் என்று மார் தட்டியது...  தென்னக ரயில்வே.12 வருஷம் ஒரு ஸ்டேஷன் கட்ட எடுத்துக்கொண்டோம் என்ற குற்ற உணர்வே அவர்களிடத்தில் இல்லை... என்ன  செய்வது... ???

கடற்கரை சாலையில் கம்பீரமாக காட்சி அளிக்கும் மாநிலக்கல்லூரி கட்டிடம் கட்டி முடிக்க  மூன்று வருடங்கள் மட்டுமே ஆயின என்றால்  உங்களால் நம்ப முடிகின்றதா?-
அவ்வளவு பெரிய பிரமாண்ட கட்டிடம் தொழில் நுட்ப வளர்ச்சி பெறாத அந்த காலத்தில்   மூன்று வருடத்தில்  கட்டி முடித்தார்கள்  ஆனால் இந்த கட்டிடத்தை  12 வருடங்கள் ஆயிற்று கட்டி முடிக்க....

 சரி விஷயத்துக்கு வருவோம்....

 கட்டி  முடிச்சிட்டா... ங்கோத்தா... நாங்க சும்மா விட்டுவோமா? என்ற  நம்ம ஆட்கள்  நம்ம பங்கிற்கு பிரச்சனையை ஆரம்பித்தார்கள்... முண்டகன்னியம்மன்  கோவில் ரயில் நிலையம் என்று வைக்க எதிர்ப்பு தெரிவிக்கின்றோம்... அது என்ன ??முண்ட, கண்ட,தொண்டை என்று   சிலர் நக்கல் விட்டார்கள்....

 நாங்க...  சொல்லறோம் பெயர் என்று மாதவபெருமாள் சமிதி கோவில் ஸ்டேஷன்  என்றார்கள்... அடுத்து தமிழ் ஆர்வலர்கள்   பொங்கி எழுந்து.... வள்ளுவர் ரயில் நிலையம் என்று பெயர் வைக்க  சொன்னார்கள்..

 காரணம்  சில மீட்டர்   தூரத்தில் வள்ளுவர் சிட்டிங் பொசிஷனில்  உட்கார்ந்து இருப்பார்...  மற்ற  எல்லா பெயருக்கும் நான்  எதுவும் நினைக்கவில்லை... ஆனால்  வள்ளுவர் என்று   பெயர் வைக்க ஆரம்பித்தால் தமிழ்நாட்டில் கிலி பிடித்து விடும்.. 

வள்ளுவர் கோட்டத்தின் இன்றைய நிலை.. போன  ஆட்சியில் வள்ளுவரை  கொண்டாடினால்  இந்த ஆட்சியில் அவரை  தொங்கலில் விடுவோம் அதைத்தான் தமிழகம் சிமீபகாலமாக பார்த்து வருகின்றது.....  வள்ளுவர்  சிலை பராமரிப்பு... சமச்சீர் கல்வி புத்தகத்தின் பின்னால் இருந்து வள்ளுவர்   போட்டோவுக்கே ஆபாச பட ரேஞ்சிக்கு ஸ்டிக்கர் ஒட்டி மறைத்ததை நம்மால் எப்படி மறந்து விட முடியும்---???

    வள்ளுவர்   பெயர் வைத்தால் இந்த ஸ்டேஷன் ஒரு போதும் இந்த  ஆட்சியில் திறக்கபடமாட்டாது என்று நினைத்தேன்....  நான் பயந்தது போல எதுவும் நடக்கவில்லை...அது போல  பெயர்  எதையும்  வைக்க வில்லை...

 சரி டாபிக் எங்கேயோ போவுது...

 திடிர் என்று ஒரு கும்பல் முண்டகன்னியம்மன் என்று எழுதி இருந்த நேம் போர்டை   வெள்ளை அடித்து மறைத்து சில்மிஷம் செய்ய... அப்படி  சில்மிஷம் செய்தவர்கள் யார் என்று இன்றுவரை கண்டு பிடிக்கமுடியவில்லை...  அது  யார் என்பது... யாருக்கும்  இன்றுவரை எதுவும் தெரியவில்லை...

சரி பெயர்   குழப்பம் நீடிக்க...

 வழக்கு நீதி மன்றம் சென்றது...

முண்டகன்னியம்மன் பேரு வைக்க  கூடாது... அது சொல்லறதுக்கே ஸ்டைலா இல்லை... அதுவும் இல்லாம.. ரொம்ப நாளா  மாதவ பெருமாள்தான் அங்கே   இருக்கார்... அதனால் அவர் பெயர் தான் வைக்க வேண்டும் என்பது போன்று வழக்காடினார்கள் என்று   பேச்சு உலாவியது....

 தென்க ரயில்வே  பெயர் வைக்கற சமாச்சாரத்துக்கும்  எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை....  நாங்க ரயில் உடுவோம்....  ரயில் நிக்கற எடத்துக்கு ஆளை போடுவோம்... கட்டிடம் கட்டி கொடுப்போம்... பேர் வைக்கற பிசினஸ் நமக்கு ஒத்துப்பட்டு வராது என்று கழண்டுக்கொள்ள....நீதிமன்றம் மாநில அரசு முடிவெடுக்கும் படி அவகாசம்  கொடுக்க...

முண்டகன்னியம்மன் பேர் நல்லாத்தானே இருக்கு...   அதையே வச்சிடுங்க என்று முதல்வர் ஜெ அறிவிக்க.... திரும்ப திறப்பு விழாவுக்கு தயாரானது   கட்டிடம்...  



முதல்வருக்கும் இருக்கும்   அலுவலகபணியில் இதனை கவனிக்க  நேரம் இருக்காமல்  போக.. இன்று வரை  ஆனாதை  குழந்தையாக திரும்பவும் கேட்பாறற்று கிடக்கின்றது.
முண்டகன்னியம்மன்  ரயில்வே நிலையம்.


 கட்டிடங்களுக்கு சிலைகளுக்கும்  நம்ம முதல்வர் அம்மாவுக்கும் எப்போதுமே  ஏழாம் பொருத்தம்தான்...

இராணி மேரி கல்லூரியில் தலைமைசெயலம் என்றார்கள்... பெயடித்து போல ஆடிப்போனது ராணிமேரி கல்லூரி கட்டிடம்..... கண்ணகி சிலைக்கு பிரேக் பிடிக்காத லாரி போய் பயமுறுத்தி  கண்ணகியையே  பீதி கொள்ள வைத்தது...கண்ணகியை அருங்காட்சியகத்தில் எடுத்து போய் வைத்தார்கள்... 

இது போன பீரியட்...

இந்த பிரீயடில் ஆட்சிக்கு வந்தார்கள்... பார்த்து பார்த்து கட்டிய தலைமைசெயலகம் பன்னோக்கு மருத்துவமனையாக மாற்றுவேன் என்று சூளுரைத்தார்... இடி தாக்கனது  போல ஆயிடுச்புதிய  தலைமைசெயலக  கட்டிடம்.. இப்ப மருத்துவமணையா மாறிடுச்சி.. 

அப்புறம் வள்ளுவர் சிலை பராமரிப்புக்கு அமொவுன்ட் ஒதுக்காத காரணத்தால்.... தன் 133 அடி பெரிய உடம்பில் கடற்கரை காத்து பட்டு அரிப்பெடுத்து  தடித்து வீங்கி வைக்க.... அப்புறம் அதிக எதிர்ப்பு எழ... அவருக்கு ஒரு  அமவுன்டை ஒதுக்கினார்கள்... 

அடுத்து சிம்மக்குரலோன் சிவாஜி பிராணனை விட்டும்  சிலையா மாறியும்  கிலிப்பிடிச்சி கிடைக்கார்... அவரு எலெக்ஷன் முடிஞ்சா நம்மளை  எங்க ஷிப்ட்டு பண்ணுவாங்களோன்னு  யோசிப்பை வெளிக்காட்டிக்காம  கடற்கரை  காத்தை வாங்கிகிட்டு கம்பீரமா நின்னுக்கிட்டு இருக்கார்...

அதே வரிசையில் இந்த முண்டகன்னியம்மன் ரயில்வே ஸ்டேஷன் கட்டிடமும் திரிசங்கு சொர்கத்தில் உள்ளது...

  ரயில்வே அத்தாரிட்டி என்ன சொல்லுது... நாங்க கட்டி முடிச்சிட்டோம்ன்னு சொல்லுது..  முன்பக்கம் எல்லாம் பக்கவாக  டைல்ஸ் எல்லாம் ஒட்டி திறப்பு விழாவுக்கு காத்து இருக்கின்றது... ஆனால் இன்னும் திறப்பு   விழா நடந்த பாடில்லை.

அம்மாவின் கடைக்கண் பார்வை படறதுக்குள்ள  எலெக்ஷன் கமிஷன் முந்திரிக்கொட்டை போல முந்திக்கிட்டு எலெக்ஷனை அறிவிச்சிட்டாங்க... அம்மா ஹெலிகாப்டரில் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்க்கொண்டு  வருகின்றார்கள்...   ஆர்மர் ஆப் காட் படத்தில் வருவது போல மக்கள் ஹெலிகாப்ட்டரை  வணக்கி மகிழ்கின்றார்கள்...

மக்களுக்கு சிரமம் கொடுக்க  வேண்டாம் என்பதாலே ஹெலிக்காப்டரில் வலம் வருவதாக முதல்வர் சொல்லி இருக்கின்றார்.... அப்படியே மக்கள் சிரமபட்டு மயிலை ரயில் நிலையத்துக்கும் கலங்கரை விளக்க ரயில்நிலையத்துக்கும் அலைஞ்சிக்கிட்டு கிடக்கதுங்க.. பக்கத்துல பிஎஸ் பள்ளி வேறு  இருக்கின்றது...  மக்கள்  சிரமத்தை மனசுல வச்சி... ஹெலிகாப்டரை விட்டு கீழ இறங்கின உடனே... இந்த ரயில்வே ஸ்டேஷனை திறந்து வச்சிடுங்கம்மா...

உங்களுக்கு புண்ணியமா போவும்....

 என்னங்க ஜாக்கி....  கெஞ்சறா போல கைன்டா  எழுதி இருக்கிங்க..?

 யோவ் கலைஞர் ஆட்சியா நடக்குது---?? யார் வீட்டு பணம் தெரியுமான்னு சவுண்ட் விடறதுக்கு...?

 கேட்க வந்துட்டாரு  பெரிசா கேள்வி....

அம்மா இது கிராஸ்டாக்... நீங்க மனசுல எதுவும் வச்சிக்காதிங்க..

நீங்க சொல்லறது போல மக்கள் நல அரசா செயல்படுங்க....குதிரையில் சிறகு போல பறக்கும் குதிரை சிலை கூட வச்சிக்கோங்க  எங்களுக்கு  ஒன்னும் பிரச்சனையில்லை... தயவு செஞ்சி  திறந்து வச்சிடுங்கம்மா  உங்களுக்கு புண்ணியமா போவும்..

முண்டககன்னியம்ம அத்தா...  ஸ்டேஷன் திறக்க நீதான்  நடவடிக்கை எடுக்கோனும்... பத்து கோடி ரூவா  பக்கிங்காம்  கால்வாய்ல பாழப்போவுது... ஆத்தா..


பிரியங்களுடன்

ஜாக்கிசேகர்.



நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

8 comments:

  1. ரொம்ப நாள் வரைக்கும் அந்த ஸ்டேஷனை கிராஸ் பண்ணிப் போறப்பல்லாம் எதுக்கு அதோட பேர் என்னவா இருக்கும்னு நினைச்சு குழம்பினதுண்டு- அதுக்குப் பின்னாடி இவ்ளவு இருக்கா சேகர்?

    ReplyDelete
  2. மயிலாப்பூரில் அருகே நைனார் நாடார் தெருவில் வசிக்கும் எங்களுக்கு இருந்த ஆதங்கத்தை அப்படியே எழுத்தில் வடித்து விட்டீர்கள்.

    முண்டகக்கன்னியம்மன் ரயில் நிலையம் திறக்கும் நாள் எங்களுக்கு ஒரு இனிய நாள்..

    நன்றி தாங்கள் தந்த தகவலுக்கு..............

    ReplyDelete
  3. நன்றி தாங்கள் தந்த தகவலுக்கு..............

    ReplyDelete
  4. //ஆர்மர் ஆப் காட் படத்தில் வருவது போல மக்கள் ஹெலிகாப்ட்டரை வணக்கி மகிழ்கின்றார்கள்...//

    இந்த வரியை படிக்கும்போது குபீரென்று வந்த சிரிப்பை எவ்வளவு முயன்றும் அடக்க முடியவில்லை...

    ReplyDelete
  5. Amma Enral Jackie kooda ketta varthai illammal post podararu. Amma enral avvaluvu BAYAM sorry Bavyam

    ReplyDelete
  6. ரயில்வே ஸ்டேஷணையும் விட்டுவைக்கலியா அரசியல் வாதிங்க! சீக்கிரம் திறப்பு விழா நடந்தா சரி!

    ReplyDelete
  7. Really liked the way you compared 'Armour of God'...:-)

    ReplyDelete
  8. Jackie...Really liked the way you compared 'Armor of God'...Good one.:-)

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner