Hasee Toh Phasee-2014/ ஹசி தோ பசி /பார்த்தே தீரவேண்டிய படம்.



கீழ்கண்ட  கேள்விகளை கேட்கின்றேன்... முக்கியமாக பெண்களுக்கு....  பதில் சொல்லுங்கள்...

நீங்கள் சுயமரியாதை  மிக்கவரா?


எவருக்காகவும் உங்கள் நிலைபாட்டை மாற்றிகொள்ளாதவரா?

நீங்கள் வளரும் துறையில் அதிக நம்பிக்கை கொண்டவரா?

எந்த பிரச்சனையாக இருந்தாலும் சமாளிக்கும் தைரியம் கொண்டவரா?

உங்கள்  நிலைப்பாட்டிற்கு பங்கம் வருமாயின்   சொத்து சுகம் அத்தனையும் துறந்து கடைசி வரை ஒரு கை பார்க்கும்  தைரியமுள்ளவரா?

அப்படி பட்ட பெண்மணியா நீங்கள்....

ம்.... ஒன்று சொல்ல மறந்து விட்டேன்....

முக்கியமாக உங்கள் தகப்பனை  அளவு கடந்து   நேசிப்பவரா?

 ஆம் என்றால் அடித்து பிடித்து உடனே இந்த திரைப்படத்தை பார்க்கவும்... நேசிக்கும் அப்பாவை  இன்னும் காதல் கொள்வீர்கள்....

அவ்வளவு என் படத்தில்  வரும் ஒரு காட்சிக்கு ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும்  ஷேம் ஷேம் பப்புஷேமாக அழுவீர்கள்...  நானும்  அந்த காட்சியை பார்த்து அழுது வைத்தேன்.

அப்பாவை   நேசித்த பெண்கள் இந்த படத்தை உடனே பாருங்கள்...

மகளை  நேசிக்கும் தகப்பன்கள் நீங்களும் இந்த படத்தை பாருங்கள்....

காதலை கொண்டாடும் காதலர்களே நீங்களும் இந்த படத்தை  பாருங்கள்....


மனம் ஒத்த போகாமல் திருமணம்  செய்துக்கொண்டவர்களா? நீங்களும் இந்த திரைப்படத்தை பாருங்கள்.

ரைட் விஷயத்துக்கு வருவோம்... வட நாட்டில்  இருக்கும் பெரிய டைரக்டர்ஸ் யாருக்கும்  கொம்பு முளைச்சிக்காது... தெரியலைன்னா கேட்டு தெரிஞ்சிக்குவாங்க... அதே போல ஒன்னா சேர்ந்து படம் தயாரிப்பாங்க.... இவர் படத்துக்கு அவர் கதை வசனம் எழுதுவாங்க... அவரு படத்துக்கு இவரு கதை வசனம் எழுதுவாரு... இப்படி மாத்தி மாத்தி எழுதுவாங்க. பட்  இங்க அது போல இருந்தாலும் வட நாட்டை கம்பேர் செய்யும் போது இது  தமிழ்நாட்டில் குறைவு.


 பாலிவுட்டின் பெரிய டைரக்டர்களான கரண்ஜோஹர், அனுராக் கஷ்யாப், விக்ரம் மோத்வானி எல்லோரும் சேர்ந்து   தயாரித்து வெளி வந்து பட்டையை கிளப்பிய படம் இது..

 படத்தின் கதை ரொம்ப சிம்பிள்.

தன் வாழ்க்கையை  தான் இஷ்டப்படி வாழும் இரண்டு ஆண் பெண்  கேரக்டர்கள் சந்தர்பவசத்தால் பிரிஞ்சி போனாலும்  திரும்ப அவர்கள்  எப்படி ஒன்று சேர்ந்தார்கள்  என்பதுதான் படத்தின் ஒன்லைன்.

நிகில் கரிஷ்மா  ரெண்டு  பேரம் காதலர்கள்... அவர்களுக்கு ஒரு வாரத்தில் திருமணம்.... ஒரு வாரத்தில் 5 கோடி சம்பாதிக்க வேண்டும் என்பது டீல்.  இந்த நேரத்தில் கிரிஷ்மாவின் ஓடிப்போன  தங்கை மீடா  வருகின்றாள்... திருமணத்தின் போது அவள் வந்தால் பி ரச்சனை ஆகி விடும் என்பதால்  திருமணம் முடியும் வரை அவளை அவனத கஸ்டடியில் வைத்துக்கொள்ள சொல்ல .... நிகில் மற்றும் மீடா இரண்டு பேரின் மனமும் ஒத்துப்போகின்றது.. காரணம்  இதற்கு முன்பே  இரண்டு பேரும் சில வருடங்களுக்கு முன்  கரிஷ்மா அக்காவின் திருமண வைபவதில்  சந்தித்து  இரண்ட பேருக்கும்  அலைவரிசை ஒத்து போகின்றது ஆனாலும் பிரிந்து விடுகின்றார்கள்... ஒரு வாரத்தில் திருமணம்  முடிந்தால் மச்சினிச்சியாக வர வேண்டியவள்....ஆனாலும் அவர்களுக்குள் அலைவரிசை ஒத்துப்போகின்றது.. எப்படி? ஏன்.,? 

ஒரு வாரத்தில் 5 கோடி சம்பாதித்தானா? போன்றவைற்றை திரையில் பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள்.

 காதலை பற்றி அதன்  உணர்வுகளை பற்றி படம் எடுப்பது எப்படி என்று இந்த படத்தை பார்த்து கற்றுக்கொள்ள  நிறைய இருக்கின்றது.. பழமையாக சம்பிரதாயங்களை  கொஞ்சமும் விட்டுக்கொடுக்காமல்    காதல் உணர்வுகளையும்   சேர்த்து ஜகல் பந்தியே நடத்துகின்றார்கள்...

முதல்ல இந்த மாதிரி படத்துல  ஹீரோயிக் பர்பாமன்ஸ்தான் முக்கியம் .. சான்சே இல்லை பரினிதி சோப்ரா மீட்டா கேரக்டர்ல அசத்தி இருக்கின்றார்.. அந்த கிட்டிஷ்... வீட்டை வீட்டு வெளியே ஓடும் போது பசங்க  விளையாடும் பால் பிடித்து ஸ்டைலாக கிளின் போல்ட்  செய்வது.. பசியில் ஓட்டலில் இரண்டு ஆப் சிக்கன் ஆர்டர் பண்ணி பசியை தனிப்பது அதற்க்கான விளக்கம்.. என்று அசத்துகின்றார்...


ஸ்மார்ட்டான பெண்ணை அசத்தி காதல்  கொண்டு காமுறுவது போன்ற சுகம் போல்  இந்த உலகத்தில்  எதிலும் இல்லை  என்பேன்... முக்கியமாக ஒத்த அலைவரிசை கண்டிப்பாக  தேவை....

சித்தார்த் மல்ஹோத்ரா சான்சே இல்லை... அசத்தி இருக்கின்றான்.. ரூமை விட்டு  வெளிய வரவேண்டாம் என்று  சொல்லி விட்டு  போக அவள் புடவையில் ஒன்னுக்கு போய்விட... இந்த பெண்ணை இந்த  அளவுக்கு படித்தி எடுத்துவிட்டோமே என்று கட்டிக்கொள்ளு அந்த காட்சியும்... நான்  எவ்வளவோ டிரை பண்ணி அடக்கினேன் ஆனால் முடியவில்லை என்று கதறும் காட்சியும்.. இந்தி படத்தில் மட்டுமே  சாத்தியம்.. அல்லது சின்ன நடிகையாக வளராத நடிகையாக இருந்தால் மட்டுமே தமிழில் சாத்தியம்..
 சார் சாரியில  ஒன்னுக்கு போவது போல நடிப்பார்களா? என் இமேஜ் என்ன ஆவது என்று எதிர்கேள்வி கேட்டு தொலைவார்கள்...


 அப்பாவை பார்க்க வேண்டும் என்று சொல்லி நள்ளிரவில் அப்பாவை பால்கனிக்கு அழைத்து வந்து காட்டியவன் மீது காதல் வந்து அவனையே பார்த்துக்கொண்டு வர.. பேருந்தில் ஏறியும் அவன் மீது கண் விலகாமல் இருக்க... ஏன்டி என்னை பார்க்கறே... வேற எங்காயவது பார்க்க வேண்டியதுதானே ?என்று கேட்க...  என் அக்கா உனக்கு சரிபட்டு வரமாட்டா..  என்னை கட்டிக்கோ.. உனக்கு நான்தான் சரியான ஆளு என்று போட்டு உடைக்கும் இடம் கவிதை... 

அதன் பிறகு வரும் பாடல்... அதில் ஒரு மான்டேஜ் ஷாட்டில்.... ரயிலில் ஏறி விடுவார்கள்... அவள் பர்ஸ்ட் கிளாஸ் இவன் ஜென்ட்ரல் கம்பார்ட்மென்ட்... அவள் எங்கே என்று தேடும் போது  மறைந்து நின்று பயம் காண்பிப்பதும்,.. அந்த கோவத்தோடு இருக்க .. அந்த கோவத்தை அவள் ரசிக்கும் அழகு இருக்கின்றதே அட அட...அடுத்து ஸ்டேஷனில் அவன் கம்பார்ட்மென்ட் வந்து அவன் அருகில்   நிற்பதும் கவிதை...



 அவள் திருடி என்று குற்றம் சுமத்த....

ஆமாம் அவள் திருடிதான்... அவள் அப்பன் பணத்தை திருடினாள்... அவளுக்கு சொந்தம் இல்லையா என்று கண்ணீர் விடும் தகப்பனை வச்சக்கண் வாங்காமல் பார்த்து விட்டு இதற்கு காரணமான நிகிலை கட்டிப்பிடித்து நன்றி  தெரிவிப்பது.. ஏர்போர்ட் சென்று மனம்   கேட்காமல் அழுது புரண்டு  ஓடி வருவது என்று கவிதையான காட்சிகளில்     நெகிழ்ச்சி படுத்துகின்றார் பரினிதி.... .

 படத்தோட முக்கிய பலம்  பாடல்கள்.... சான்சே இல்லை... எல்லாம் பட்டையை கிளப்புது.... எல்லாமே வாவ் ரகம்....

 படத்துல கவர்ந்த ரொம்ப முக்கியமான இன்னோரு ஆளு யாருன்னா பரினிதாவை   ஒன்சைடாக காதலிக்கும்  உறவுக்கார பையன்... வாயில்  போடும் மியுசிக் மற்றும் சேட்டைகள்.. டிவி நிகழ்ச்சியில் கலந்துகொள்ள போகின்றேன் என்று உதார் விட்டு அலைவது என்று அசத்துகின்றான்.


அதே போல அந்த டுவின்ஸ் பாட்டிங்க... கலக்கல்... அதுவும் அந்த துணி எடுக்க போகும் சீன்...

லாஸ்ட்டுல  வரும் மன்சலா சாங்குல ஏர்போர்ட்டுல நிற்கும் பரினிதி... ஏதோ தடிப்பு மேல  நிக்கறா மாதிரி  தெரிஞ்சாலும்... சட்டென கண்ணீல் நீர்  வழிய அவள் துடைக்கும் இடம் அருமையான நடிப்புக்கு  உதாரணம்.

பரினிதா ஏர்போர்ட்டில் வெடித்து  அழும்  போது மனதை ஒரு  நிலைப்படுத்த இரண்டு கைகளையும் தூக்கி தியானம்  செய்யும் காட்சிகள் அசத்தல்.

இயக்குனர் Vinil Mathew.... உணர்வு பூர்வமான படத்தோட பக்கா ரொமான்ஸ் கலந்துக்கட்டி கொடுத்து இருக்கின்றார்... வாழ்த்துகள் Vinil Mathew

======

படத்தின் டிரைலர்.


.===========

 படக்குழுவினர்  விபரம்.

Directed by Vinil Mathew
Produced by Karan Johar
Vikas Bahl
Vikramaditya Motwane
Anurag Kashyap
Written by Harshavardhan Kulkarni
Starring Parineeti Chopra
Sidharth Malhotra
Adah Sharma
Music by Vishal-Shekhar[1]
Cinematography Sanu John Varughese[1]
Studio Phantom Films
Distributed by Dharma Productions
Release dates
7 February 2014
Running time 141 minutes
Country India
Language Hindi
Budget INR25 crore
Box office INR38.41 crore

==========
பைனல் கிக்.

வாழ்க்கையும் அது சொல்லிக்கொடுக்கும் பாடங்களும் மிக சுவாரஸ்யமானது... இதுதான் சரி என்று வாழும் வாழ்க்கை ஒரு  நொடிப்பொழுதில் புரட்டி போட்டு பெப்பே காட்டி விடும்.. புரிந்து கொண்ட உறவுகள்தான்   நட்புகள்தான் வாழ்நாள் முழுக்க சுவாரஸ்யப்படுத்தும்.. இந்த திரைப்படம் அப்படியான கதை அமைப்பை கொண்டது. அவசியம் இந்த திரைப்படத்தை பார்த்தே தீர வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்.

=======
படத்தோட ரேட்டிங்.
 பத்துக்கு எட்டு.
====
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.


நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

4 comments:

  1. after read ur review in fb, i seen this movie more than 5 times... my ring tone is isha blavaa... day and night am listening this song... thank you jackie...

    ReplyDelete
  2. படம் சான்ஸ் இல்ல ஜாக்கி சார்,,,Marvaleous
    உங்க review பார்த்த பிறகு தான் நானும் படம் பார்த்தேன்,,,,, Thks for Introduce such a Nice movie thala,,, உங்கள் பணி தொடரட்டும்,, thks

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner