யாழினி அப்பா (04/04/2014)


கடந்த ஒரு வார காலமாக  யாழினியை பள்ளியில் சேர்க்க அலைந்துக்கொண்டு இருக்கின்றோம்...
அப்ளிகேஷனை வாங்கி பில் பண்ணி  போஸ்ட்  செய்து... ரிசல்ட் ஒட்டிய கரும்பலகையை வெறித்து பார்த்து  திரும்புகின்றோம்..

மந்தவெளியில்  உள்ள பிரபல பள்ளியில்  சீட்  இருக்கா  என்று ரிசப்ணனிஸ்ட் பெண்ணிடம் கேட்டேன்... ... இருக்கா  இல்லையான்னு  தெரியாது... பட் ...இந்த  அப்ளிகேஷனை வாங்கி பில் பண்ணி  பிரின்சிபலை பார்த்தால்தான்   தெரியும் என்றார்கள்.... நான்  அப்பளிகேஷன் எவ்வளவு என்றேன்....2000 ரூபாய் என்றார்கள்...


நாட் ரீபன்டபுள் என்றார்கள்....சப்போஸ் சீட் இல்லை  என்று சொல்லி விட்டால்--???... அவ்வளவுதான் 2000 கோவிந்தா  என்று  ஐஸ்ட் லைக் தட்டாக சொல்லிவிட்டார்கள்....இப்பையே இப்படி என்றால் இன்னும் குழந்தையை சேர்த்து விட்டால்  சொத்தையே எழுதி கேட்பார்கள் என்பதால் விட்டு விட்டேன்.


 யாரு.... வடமலையா?

 ஆமாங்க..

 உன் பையனா,.?

ஆமாங்க...

பேரு என்ன-?

தனசேகரன்

இன்னும் செல்லமயர் துணிக்கடையிலதான் வேலை பார்க்குறியா?

ஆமாங்க...

அப்பா என் பெயர் மற்றும் வீட்டு விலாசம் கொடுத்தார்...

தலையை சுற்றி காதை தொடச்சொன்னார்கள்... தொட்டேன்..

போய் வரிசையில் உட்கார சொன்னார்கள்..

போய் உட்கார்ந்தேன்.. வரிசை மெல்ல நகர்ந்தது....

அம்மா என்னை பார்த்துக்கொண்டு   அப்பாவோடு  நின்றுக்கொண்டு இருந்தார்.

எதிரில் சரஸ்வதி வீனை வாசித்தபடி போட்டோவில் வீற்று இருந்தார்...  பெரிய வாத்தியார் எதிரில்  சம்மனம் இட்டு உட்கார்ந்தேன்

 என் கை பிடித்து முதலில் அரிசியில் அ எழுதினார்...

பின்னர்  என் சிலேட்டில் அ ஆ இ எழுத்துக்களை  என் கை  பிடித்து எழுதினார்...

ஆரஞ்சு மிட்டாய் பாக்கெட்டை அம்மா கொடுத்தார்... அதில் இருந்து ஒரு மிட்டாயை என் வாயில் போட்டார்.... பாக்கெட்டில் இருந்த மிச்ச மிட்டாய்களை ஒன்னாம் வகுப்பு  தோழர்களுக்கு கொடுக்க  சொன்னார்கள்... கொடுத்தேன்.. அவ்வளவுதான் பள்ளியில் சேர்த்து விட்டார்கள்...

இப்படித்தான் கடலுர் அக்கிள் நாயுடு தெருவில் இருந்த ராமகிருஷ்ணா உதவி பெறும் நடுநிலைப்பள்ளியில் சேர்க்கப்பட்டேன்... ஆனால் இன்று எல்லாமே தலைகீழ்,...ஒரு வார காலத்தில் எல்லா பள்ளிகளையும் பார்த்து விட்டதாலோ என்னவோ...  யாழினிக்கு எல்லா பள்ளி பெயர்களும் அத்துப்படி....  எதையாவது  கிறுக்கி எழுதி பார்ப்பதற்கு ஒரு டைரியை அவளிடத்தில் கொடுத்து   வைத்திருக்கின்றோம்...


 நேற்று இரவு வீட்டுக்கு போனேன். நான் போனதும்  எதையாவது செய்து என் கவனத்தை கலைத்து என்னிடம் ஒரு பாராட்டோ அல்லது தலைகோதிவிடலோ இருக்க வேண்டும் என்பதில் ரொம்ப குறியாக இருப்பாள்...

முக்கியமாக குட் கேர்ள்  என்று நான் சொல்ல வேண்டும் என்பதே அவள் எதிர்பார்ப்பு.

நிறைய கியூக்களில் நாங்கள் நிற்பதை பார்த்த காரணத்தால்...   நான் வீட்டுக்கு வந்தவுடன் அவள்  டைரியை எடுத்தாள்..

ஒரு பேப்பரை சரக்கென்று கிழித்தாள்... அப்பா இந்தா  அப்பளிக்கேஷன்... நான் அலட்சியமாக வாங்கினேன்...


அப்ளிக்கேஷனை மடக்க வேண்டாம் என்றாள்... அடுத்த பக்கம் சரக்..... இப்போது அவள் அம்மாவுக்கு ஒரு அப்ளிகேஷன்...  நான்  சொல்லற வரைக்கும் இரண்டு பேரும் அதில் எழுத வேண்டாம் என்று  கட்டளையிட்டாள்...


அப்ளிகேஷன் பீஸ் கொடுங்க என்று  எங்கள் இருவரிடத்திலும் அதட்டி சொன்னாள்...

நான் பர்ஸ் பிரித்து பத்து ரூபாய் கொடுத்தேன்....

இந்த பணம் கண்டிப்பாக ரீபன்ட் ஆகும் என்ற நம்பிக்கையில்....==================


தெரியத்தனமா இரண்டு நாளைக்கு முன் பாரிசில் ஒரு சோட்டா பீம் பொம்மை வாங்கி யாழினிக்கு கொடுத்து விட்டேன்.

சாப்பிடுவது,படிப்பது, விளையாடுவது, மனது விட்டு பேசவது வரை... இவ்வளவு ஏன்.... டிவி பார்ப்பதில் இருந்து பாத்ரூமுக்கு போவது வரை சோட்ட பீம் யாழினியோடு உடன் இருக்கின்றார்...

பள்ளிக்கு அவரை அழைத்து செல்லட்டுமா??? என்று யாழினி கேட்ட போது, வேண்டாம் செல்லம்... அவருக்கும் ஒரு அட்மிஷன் போட்டு உட்கார வைத்து விடுவார்கள் என்ற பயத்தின் காரணமாக பள்ளிக்கு அவரை அழைத்து செல்ல வேண்டாம் என்று அவளை தாஜா பண்ணி கேட்டுக்கொண்டேன்.

படுக்கையில் அவரிடம் அதிகம் பேசுகின்றாள்.. தலை தட்டி தூங்க வைக்கின்றாள்... தூங்கவில்லை என்பதால் தலையில் ரெண்டு கொட்டு கொட்டி தூங்க வேண்டும் என்று நேற்று இரவு மிரட்டினாள்...... ஆனாலும் பீம் தேமெ என்று பார்த்துக்கொண்டு இருந்தது...

சப்போஸ் நம்ம பக்கம் திரும்பிட்ட என்ன செய்வது என்று எண்ணி....அடுத்த கொட்டுக்கு பயந்து, கண்ணை இருக்க மூடி அவளுக்கு எதிர்புறம் புரண்டு படுத்தேன்..

இன்று காலையில் ஒரு ஆக்ஸ் ஸ்பிரே காலியானது.... மனம் கமழுகின்றதே என்று அறையை விட்டு வெளியே வந்தேன்...

யாழினி சொன்னாள்...

அப்பா பீமை குளிக்க வச்சிட்டேன் சென்ட் அடிச்சி... ஸ்கூலுக்கு கிளப்பிக்கிட்டு இருக்கேன் என்றாள்... எனக்கு தலை சுற்றியது...

யாழினி பல் விளக்கும் போது கூட கீழே வைக்காமல் பாதுகாக்கும் பீம் .....இரண்டு நாளைக்கு முன் பொம்மைகடையில் வைக்கப்போர் போல குவிச்ச்சிக்கிடந்த இடத்துல சரிஞ்சிக்கிடந்த சோட்டாக்களை பொம்மைக்காரன் காலால எத்தி விட்டுக்கிட்டு இருந்தான்...

காலால எத்துப்பட்டதுங்க.. இப்ப எந்த விட்டுல பசங்க கொடுக்கற ராஜ மரியாதையாதையில திளைச்சிக்கிட்டு இருக்குதோ என்று யோசித்து படி ஆக்ஸ் காலி டின்னை குப்பை கூடையில் வீசினேன்.

டிவி ஸ்டேன்ட் மேல் இருந்த சென்ட் பாட்டிலை உயரமான இடத்தில் வைத்தேன்.

அலட்சியமாக சிலர் சுய நலத்தின் காரணமாக காலால் எத்துப்பட்டவர்கள் கீழேயே விழ்ந்து கிடக்கமாட்டார்கள்... என்பதுதான் பீம் பொம்மை சொல்லும் சேதி.=============
போன வார குமுதத்தின் நடுப்பக்கத்தில் யாழினியும் சோட்டாபீமும்.. ....

யாழினி பிறந்தநாளின் போது .... சோட்டா பீம் கேக்கை பார்த்து வாவ் என்று பார்த்து ஆச்சர்யப்படும் போட்டோவை எடுத்து பேஸ்புக்கில் போட்டோ போது அந்த போட்டோ மிக அழகாக இருந்ததாக நண்பர்கள் பகிர்ந்து கொண்டார்கள்...

நண்பர் பிரியா கல்யாணராமன் அந்த புகைப்படத்தை யூஸ் பண்ணிக்கொள்ளலாமா? என்று கேட்டு இருந்தார்... தாரளமாக என்று சொல்லி இருந்தேன்.... இந்த வார குமுதத்தில் நடுப்பக்கத்தில் யாழினி போட்டோ வெளியாகி இருக்கின்றது..

நன்றி பிரியா கல்யாணராமன் சார்.. குமுதம் கையில் வாங்கி உடனே போன் செய்து எனக்கு தெரிய படுத்திய பிரபுவுக்கு நன்றிகள்...
==========
மெது வடை எண்ணெய் சட்டியில் ஐல்லிக்கரண்டியால் வைத்து அழுத்த…தண்ணீரில் மூச்சு விட போராடும் மனிதனை போல ஐல்லிக்கரண்டிக்கு போக்கு காட்டி விட்டு மேலே வந்து பொறிந்து கொண்டு இருக்கும் எண்ணெய் குமிழ்களுடன் சுதந்திர காற்றை சுவாசித்து கொண்டு இருந்தது…

மாலை வேளை என்பதால் யாழினிக்கு சினாக்ஸ் வாங்கி கொடுக்க வேண்டுமே என்று ஒரு பேச்சுக்கு கேட்டேன்… யாழினி வடை சாப்பிடுறியா….?

இல்லைப்பா…

ஏன்மா..? பசிக்கலை…

அது ஹெல்தி இல்லைப்பா…. எனக்கு கான்( சோளம்) வாங்கி கொடுங்க.

பய புள்ளை பத்துரூபாய் மேட்டரை முடிக்கலாம்ன்னு பார்த்தா…. இருபத்தி ஐஞ்சு ரூபாய்க்கு வேட்டு வைக்குது…

அது மட்டுமல்ல…

அப்பா எனக்கு டாமினோஸ் பீட்சா வாங்கி கொடுக்கறறிங்களான்னு யாழினி கேட்குறா.. வீட்டுல இதுக்கு முன்னாடி பீட்சா சாப்பிடதே இல்லை…யார் சொல்லிக்கொடுத்தாங்கன்னு தெரியலை…

அதுவும் பிராண்ட் நேமோடு பீட்சா வேணுமாம்..! பிராண்ட் நேமோடு பீட்சா கேட்டப்பவே நேக்கு புரிஞ்சிடுத்து பொண்ணு மயிலை வாசியா மாறிட்டா…

நான் இன்னும் உளத்தம் வடை ரெஞ்சிலேயே இருக்கேன். இருந்துட்டு போறேன்….. என்ன நான் சொல்லறது…?????

===========


யாழினி ரெட்டை சிண்டு போட்டுக்கோ… அப்பதான் நீ அழகா இருப்பே…
அப்பா போடலியேம்மா…
அப்பாவுக்கு முடி இல்லை அதனால போட்டுக்கலை…

யாழினி ரெட்டை சிண்டு போட்டுக்கிட்டாதான் பெரிசா முடி வளரும்…

எப்படி வளரும்…?

சிண்டு போடும் போது ஹேரை ஸ்டெரெச் பண்ணும் இல்லை… அதனால முடி வளரும்.

அம்மா ஸ்டெரெச் பண்ணா வலிக்கும்… முடி வளராது… அப்பாவுக்கு வேணா போட்டு விடு….

ஙே…………….

============

நேற்று இரவு மகளை முத்தமிட்டேன்....

அப்பா...

என்னம்மா...

ஷேவ் பண்ணலையா நீயி...??

இல்லைப்பா செம வேலை மறந்துட்டேன்மா..

ஷேவ் பண்ணுங்கப்பா..... அப்பதான் என்னை போல கிளீனா இருப்பிங்க... என்று அவள் கண்ணத்தை காட்டி சொன்னாள்...

நான் அவளையே பார்த்துக்கொண்டு இருந்தேன்..

காலையில் எழுந்து சின்ன சின்ன வேலைகள் செய்து கொண்டு இருந்தேன்....

அவள் படுக்கையில் புரண்டு கொண்டு இருக்கின்றாள்... எப்போது வேண்டுமானாலும் எழுந்து விடும் சாத்திய கூறுகள் உள்ளன...

நான் தற்போது கன்னத்தில் சோப்பு நுரை தடவிக்கொண்டு இருக்கின்றேன்.


=============

அப்பா டூ பாத்ரூம் வருது...

உடைகள் கழற்றி டாய்லெட்டில் யாழினியை விட்டேன்...

நான் அவளை பார்த்தேன்...

அவள் என்னை பார்த்தாள்....

அவள் திருவாய் மலர்ந்தாள்... அப்பா கொஞ்ச நேரம் வெளியே இருங்க...

சத்திய சோதனை என்று நான் தலையில் அடித்துக்கொண்டு பாத்ரூம் வெளியே கதவருகே நின்று கொசு வத்தியை சுழல விட்டேன்...

அப்ப எல்லாம் எங்க டூ பாத்ரூமுக்கு டாய்லட் எல்லாம்...??? ஸ்கூல் பக்கத்துல ஒரு குட்டை இருக்கு .. அதுக்கு பக்கத்துல இருந்த பூண்டு செடியில டிராயரை கழட்டி வச்சிட்டு ஆய் போயிட்டு கழுவிட்டு வந்து பார்த்தா... என் டிரவுசரை காணோம்...அப்பயே அதை அபிட்டு உட்டுட்டானுங்க...

பள்ளியில் இருந்து அழுதுக்கொண்டே என் பாட்டியிடம் வந்து சொன்னேன்...

டேய் உங்க அப்பனுக்கு தெரிஞ்சா கொன்னுபுடுவான் என்று சொல்லி....வேறு டிரவுசர் எதையும் போடாமல் அம்மனமாகவே என்னை அழைத்துக்கொண்டு என் பேரன் டிரவுசரை பார்த்திங்களா ? என்று என்னை நிர்வாணமாக அழைத்து போனார்... உதாரணத்துக்கு திநகர் பனகல் பார்க் அருகே டரவுசர் தொலைந்த இடம் என்று வைத்துக்கொள்ளுங்கள்...அந்த இடத்தை விட்டு விட்டு என் பாட்டி தேனாம்பேட்டை சிக்னல் அருகே என் பேரன் டவுசரை பார்த்திங்களா என்று போவோரை வருவோரை கேட்டுக்கொண்டு இருந்தது...

எனக்கு இரண்டு வயது...

இப்படியே அழைச்சிக்கிட்டு போறியே..?? எனக்கு வேற டிரவுசர் போட்டு அழைச்சிக்கிட்டு போனாதான் வருவேன் என்று சொல்ல வாய் வரவில்லை...

ஸ்கூல் கிட்ட தொலைச்ச டிரவுசர் எப்படி முத்தாலம்மன் கோவில் கிட்ட எப்படி கிடைக்கும்??? என்று கேள்வி எழுப்ப தோனவில்லை...

பெரியவர்கள் சொன்னதை அப்படியே ஏற்றுக்கொண்டதுதான் நினைவுக்கு வருகின்றது...

ஆனால் இப்போது அப்படி இல்லை... இந்த தலைமுறையில் நிறைய கேள்வி கேட்கின்றார்கள்.. சரியே தப்போ.... தன் மனதில் உள்ள கேள்விகளை தைரியமாக வெளிப்படுத்தி விடுகின்றார்கள்....

யாழினிக்கு இரண்டரை வயது...தனக்கு சங்கோஜம் என்பதை ரைட் ராயலாக என்னிடத்தில் வெளிப்படுத்தியதில் எனக்கு மிகவும் சந்தோஷமே...

பெரியவர்களிடம் பேசவே பயப்பட்ட காலம் அது.....

ஆனால் இன்று அப்படி இல்லை... நானாவது மக்காக இருந்துட்டு போறேன்.

அப்பா..

என்னம்மா..?

கிளின் பண்ண வாங்க...?

தோ வரேன்...
=========


என் அப்பாவின் காது... எனக்கு ரொம்ப பிடித்த மான விஷயம்.. காது கடுக்கன் போடும் இடத்தில் சற்றே பெரியதாய் இருக்கும்.. அதாவது அப்பா காதின் நுனி பழைய ஐம்பது பைசா சைசுக்கு லைட்டா ரவுண்டா கியூட்டா இருக்கும்... அதை தோட்டுப்பார்க்கனும்ன்னு எனக்கு ரொம்ப நாள் ஆசை.. அப்பா மேல இருந்த பயம் காரணமா... அதை நான் தொட்டு பார்த்ததே இல்லை...

ஒரு நாளும் எந்த புள்ளையையும் அப்பா தூக்கி கொஞ்சி உச்சி முகர்ந்ததே இல்லை... ஆனா எங்க ஆத்தா செஞ்சி இருக்கா... இப்ப அப்பா காதை தொட முடியும்.. ஆனா சின்ன வயசுல இருந்த அந்த ஆர்வம் இப்ப என்கிட்ட இல்லை.

யாழினி தினமும் என் காதை திருகி விளையாடுவது அவளுக்கு பிடித்த விஷயம்.. சில புள்ளைங்க தூங்கும் போது அல்லது கை சப்பும் போது சில்க் துணியை நிமின்டிக்கிட்டே கை சப்பிக்கிட்டு தூங்கி போயிடுங்க...

ஆனா யாழினிக்கு கை சப்பும் பழக்கம் இல்லை.. ஆனா அவ தூங்கனும்னா என் காது நுனியை போட்டு நிமின்ட்டிக்கிட்டே தூங்கி போய் விடுவா-? தூக்கி வச்சி கொஞ்சும் போது கூட, என் காது நுனியை கிள்ளறது அல்லது அதை இழுக்கறதுன்னு அதிகமா விளையாடுவா...

யாழினி....அப்பாவுக்கு ஒரு முத்தா கொடுன்னு சொன்னா கூட, கண்ணத்துல கொடுத்துட்டு அடுத்த முத்தம் என் காது நுனிக்குதான்...

சில நேரத்துல அவ இழுத்து விளையாடும் போது, வலி உயிர் போகும்... ஆனாலும் எதுவும் சொன்னது இல்லை...ரொம்ப வலிச்சா சின்ன மிரட்டல் அம்புட்டுதான்...

என் அப்பா காது ரொம்ப ஆசையான விஷயம்.. என் மகளுக்கு அது சாத்தியம்.. தலைவர் சுஜாதா சொன்னது போல...

“நாம் எல்லோரும் ஒரே மாதிரியான வாழ்க்கையைதான் வாழ்ந்துக்கொண்டு இருக்கின்றோம்....”==========
தூறல் நின்னு போச்சு திரைப்படத்துக்கும் எனக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு...


அந்த படம் வெளியான ஆண்டு 1982 ....அப்போவோடு நான் திரையரங்கில் நான் பார்த்த முதலும் கடைசியுமான திரைப்படம் அது ஒன்றுதான்... அதன் பிறகு அப்பா என்னை எந்த திரைப்படத்துக்கும் அழைத்து சென்றது இல்லை...


காரணம் இல்லாமல் இல்லை...


இரண்டாம் வகுப்பு படிக்கின்றேன்... அப்பா என்னை தூறல் நின்னு போச்சி திரைப்படத்தக்கு அழைத்து செல்கின்றார்...என் சோக கதையை கேளு தாய்க்குலமே.. பாட்டு வெகு பிரபலம்... நான் அதனை மனப்பாடம் செய்து நிறைய முறை பாடி இருக்கின்றேன்...

அப்பா எப்போதுமே பர்ஸ்ட் கிளாஸ் டிக்கெட்டில்தான் செல்லுவார்.. ஒரு நாளும் எழுப்பத்தி ஐந்து பைசா டிக்கெட்டில் அவர் சென்றதே இல்லை...ரொம்ப டீசன்சி மெயின்டெயின் பண்ணுவார்.

அம்மா பாட்டி வீட்டுக்கு சென்ற காரணத்தால்.... அப்பா என்னை தூறல் நின்னு போச்சு படத்துக்கு அழைத்து சென்றார்....

கடலூர் ஓடியில் இருந்து வரும் போது ரமேஷ் தியேட்டர் என்று ஒரு தியேட்டர் இருந்தது.. அது பாலாஜியாக மாறி இப்போது அந்த தியேட்டர் மண்ணோடு மண்ணாக போய் விட்டது. அந்த தியேட்டரில் படம் பார்க்க அழைத்து சென்றார்...


அதுக்கு முன்னே எனக்கு ஏன் சோக கதையை கேளு தாய் குளமே பாடல் அத்துப்படி என்றால் முன்னாள் நம்பியார் பேசும் வசனத்தில் இருந்து வீரபாண்டி கட்டபொம்மன் வசனம் போல மனப்பாடம்...
பாட்டு ஆரம்பிக்கும் முன் நம்பியார் அந்த பாட்டுக்கு ஒரு இன்ட்ரோ கொடுப்பார்... அதையும் பாட்ரைடயும்.. பாட்டு வருவதுக்கு முன்னே சத்தமாக தியேட்டரில் டயலாக்கோடு பேசி பாடி விட்டேன்....

மற்றவர்கள் என் பால்ய ஆர்வத்தை ரசித்தார்கள்.. என் அப்பா அடிக்கவில்லை ஆனால் ஒரு முடிவு மட்டும் எடுத்தார் இனி என் பிள்ளையோடு எந்த சினிமாவும் பார்க்க மாட்டேன் என்று வீர சபதம் எடுத்தார்... அதை இன்று வரை காப்பாற்றுகின்றார்.......

நேற்று திருவாண்மியூர் தியாகராஜா எஸ் டூ வில் கிராவிட்டி படம்.. குடும்பத்தோடு போய் இருந்தோம்.... மற்ற தமிழ்படங்கள் விடாது பேசிக்கொண்டு இருப்பார்கள் அதனால் யாழினி எது பேசினாலும் கேட்காது... படத்தின் முதல் காட்சி... புல்லக்கும் குளூனியும் ஸ்பேசில் அமைதியாக உரையாடிக்கொண்டு இருக்கின்றார்கள்...

யாழினி அவள பக்கம் கவனத்தை ஈர்க்க பேச ஆரம்பித்தால்...

அப்பா எனக்கு டெய்ரி மில்க் சாக்லேட், லட்டு எல்லாம் எனக்கு வாங்கி தாப்பா.. சஷ்மிதாவுக்கு வேண்டாம்பா என்றாள்...

அதன் பிறகு அணா ஆவன்னா சொல்ல ஆரம்பித்தாள் அமைதி காக்க சொன்னாலும் திரும்ப பேச ஆரம்பித்தாள்...1982 ஆம் ஆண்டு தூறல் நின்னு போச்சி படத்துக்கு என்னை அழைத்து போய் என் அப்பா என்ன மன நிலையில் இருந்தாரோ... அப்படி ஒரு மனநிலையில் நான் இருந்தேன்.. ஆக்ஷூவலா அவ தூங்குடுவான்னு நினைச்சா,... கொட்ட கொட்ட முழச்சிக்கிட்டு புல் படமும் பார்த்துச்சி....

மற்றவங்க அவ பேசினதுக்கு சிரிச்சாலும் எனக்கு சங்கடமா இருந்திச்சி... எங்க அப்பா பீல் பண்ணியதை இப்ப நாண் உணருகின்றேன்.

ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது...ஒரு வகை ஆற்றலை அழித்தால் சேதமில்லாமல் மற்றோரு வகை ஆற்றலாக சேதாரமில்லாமல் வெளிப்படும் என்று நியூட்டனின் மூன்றாவது விதி கூற்றில் உண்மை இல்லாமல் இல்லை.=========

யாழினி சிக்னலில் ரெட் விழுந்தா... நிக்கனும்...
பச்சை விழுந்தா போகனும்... மஞ்சள் விளக்கு எரிஞ்சா?

தெரியலைப்பா....

ரெடியாகிக்கோன்னு அர்த்தம்.

அப்போது ஆம்புலன்ஸ் அவசரமாக ஒய்யிங் ஒய்யிங் ஒய்யிங் என்று அலறிக்கொண்டு சென்றுக்கொண்டு இருந்தது.....

யாழினி அம்மா.. யாழினியிடம் சொன்னாள்... யாழினி இந்த மாதிரி சத்தம் போட்டுக்கிட்டு வேகமா வண்டி போனா என்ன சொல்லனும்?-

என்ன சொல்லனும்மா-?

உம்மாச்சி காப்பாத்து, பிளஸ் யூன்னு சொல்லனும்....

என்ன சொல்லனும்?

உம்மாச்சி காப்பாத்து, பிளஸ் யூன்னு சொல்லனும்...

கொஞ்சதூரம் வண்டியில் பயணப்பட்டுக்கொண்டு இருந்தோம்.... ஒரு கார் ரிவர்ஸ் எடுக்க.... ஒய்யிங் ஒய்யிங் ஒய்யிங் சவுண்ட் கொடுத்த படி பின்னால் வந்தது.

யாழினி கை கூப்பி சொன்னாள்...

உம்மாச்சி காப்பாத்து, பிளஸ் யூ............

======

என் குடும்பத்தில் என் தாத்தா தலைமுறையில் யாரும் அப்படி அழைத்தது இல்லை... என் அப்பா தலைமுறையிலும் அப்படி அழைத்தது இல்லை... என் குடும்பத்தில் என் உறவுகளில் யாரும் அப்படி அழைத்து நான் பார்த்தது இல்லை.... இவ்வளவு ஏன்? என் ஊரில் யாருமே அப்படி அழைத்து நான் பார்த்தது இல்லை... எனக்கே இது புது வித அனுபவமாக இருக்கின்றது. இவ்வளவு நாட்கள் யாழினி என்னை அப்பா என்று அழைத்தாவள்... சில நாட்களாக டாடி என்று அழைக்கின்றாள்.. பிளே ஸ்கூலில் இருக்கும் பசங்க.. அவுங்க பெற்றோரை அழைப்பதை பார்த்து இவளும் அப்படி அழைக்கின்றாள்...

எல்லாத்தை விட கொடுமை என்ன தெரியுமா? ஆதித்யா சேனல் பார்த்துட்டு, டாடி எனக்கு ஒரு டவுட்டு என்று திரும்ப, திரும்ப ,திரும்ப ,திரும்ப ,திரும்ப சொல்லுகின்றாள்... ஏன்டி இப்படி படுத்துற...???

============

நள்ளிரவு ஒரு மணிக்கு பிள்ளை கொசுக்கடியில் சினுங்க,வெறியோடு தூக்கம் உதறி...கொசுbatயை எடுத்துக்கொண்டு இன்டு, இடுக்கு, சந்து ,பொந்து ,என்று எல்லா இடத்திலும் தேடி தேடி கொசுவை கொல்லும் அத்தனை தகப்பன்களும் சீரியல் கில்லர்களே...


===============
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.


நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

5 comments:

 1. யாழினிக்கு நல்லபள்ளி கிடைக்க வாழ்த்துகள். .உங்கள் மகளின் குறும்புகள் ரசனை.

  ReplyDelete
 2. சின்ன குழந்தைகளின் குறும்புகள் சுவாரஸ்யம்தான்! சோட்டா பீம் என்றால் எல்லா குழந்தைகளுக்கும் பிடிக்கிறது!

  ReplyDelete
 3. உங்கள் மகளின் குறும்புகள் ரசனை.

  ReplyDelete
 4. Jackie try to publish after 3 years YAZHINI APPA as a book definitely it will be a milestone in your career. Fantastic Experiences only an Anjel's Faher can feel it.(pennai petravargalukke baakiyam)

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner