Maan Karate-2014/மான் கராத்தே சினிமா விமர்சனம்.



ரஜினியின் மேனாரிசங்களை சிம்பு பயண்படுத்தி பார்த்தார்.. அது ரசிக்கவும் செய்தது... ஆனால் அதை பெரியதாய் படத்துக்கு படம் பயண்படுத்த வில்லை.. ஆனால் சிவகார்த்திகேயன் இதுவரை மூன்று படங்களில்  நடித்து இருக்கின்றார்.. 

ரஜினி மேனாரிசத்தை அப்படியே பாலோ செய்கின்றார்... அது மிகவும் ரசிக்கப்படுகின்றது... முக்கியமாக குழந்தைகளுக்கும் இளம் பெண்களுக்கும் அது ரொம்பவே பிடிக்கின்றது...


பொதுவாக பெண்களுக்கு ஒரு  ராஜகுமாரன்  தேவை... வெகுளியாக இருப்பது போல இருந்துக்கொண்டே புத்திசாலியான வேலைகளை  அந்த ராஜகுமாரன் செய்ய வேண்டும்...  கேஷூவலாக சிரிக்க சிரிக்க  பேச வேண்டும்... அது ரொம்ப ரொம்ப முக்கியம். இது அத்தனை குணங்களும்  ஒரு ராஜ குமாரனுக்கு  வேண்டும்... அவன் குதிரையில் வர வேண்டும் என்று அவசியம் இல்லை... சிவகார்த்திகேயனை போல த பாய்  நெக்ஸ் டோர் போல இருந்தாலே போதுமானது...


அஜித், விஜய், ஆர்யா போன்றோர்.. படங்களின் நடித்து பெண்களின் மனதை கவர்ந்தார்கள் என்றால் சிவகார்த்திகேயன் டிவியில் நடித்து பெண்களின் குழந்தைகளின் உள்ளங்களை கவர்ந்து பின்பு பெரிய திரைக்கு வந்து இருப்பதால் அவர்  வளர்ச்சியை இப்போதைக்கு யாரும் அசைத்துக்கொள்ள முடியாது என்பதே  நிதர்சன உண்மை.


நேற்று எல்லா தியேட்டர்களும் ஹவுஸ்புல்..   மெரினா பெசன்ட் நநகர் போன்று பொழுது போக்கு தளங்கள் உள்ள  சென்னையிலேயே டிக்கெட் கிடைக்கவில்லை... தியேட்டர் புல் எனும் போது... கோவை போன்ற  இடங்களில் சினிமாவை தவிர பொழுது போக்கு அம்சங்கள்  மிக குறைவு அதனாலே  நேற்று அங்கே ஹவுஸ்புல் என்று நண்பர் கோவை நேரம் ஜீவா அவரது பேஸ்புக்கில் செய்தியை பகிர்ந்து இருந்தார்....

பெண்கள் ஒரு ஆளை ரசித்து விட்டால் போதும்.. அவன் கிராப்  உடனே இறங்குவது என்பது சாத்தியமில்லை.  சிவ கார்த்திகேயனை தியேட்டரில் அப்படித்தான் கொண்டடாடுகின்றார்கள்..

 கதை... பேன்டசி  ரொமான்டிக் டைப் அதனால லாஜிக் எல்லாம் பார்ப்போம் என்று சொன்னால் நீங்கள் இந்த படத்துக்கு போகாமல் இருப்பது நலம்.. ஒரே பாட்டில் படையாப்பாவில் ரஜினி எப்படி பெரிய அளாக ஆனார் என்று வினா எழுப்பாதவரா நீங்கள்.. அப்படி என்றால் இந்த படம் உங்களுக்கு  ஓகே...

சிவகார்த்திகேயன் மேலும் மேலும் அழகாகிக்கொண்டு வருகின்றார்... அவர் நடித்த படங்கள் பெரிய ஓப்பனிங் பெற்று இருப்பதால்   அவரை வளர்த்து விட்ட தனுஷே சற்று ஆடிப்போயிருப்பதாக கோடம்பாக்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

 அது மட்டுமல்ல.. இவ்வளவு நாள்.... நாமளும் கோடம்பாக்கத்துல சுத்திக்கிட்டு இருந்தோம் திடிர்ன்னு ஒவர் நைட்டுல ஒருத்தன் மாஸ் ஹீரோவா மாறிட்டானே என்று நிறைய பேருக்கு  சிவாவை பார்த்து வயிறு பர்னிங் ஆகிக்கொண்டு இருக்கின்றது...

சின்ன லாஜிக்தான்... ஒருத்தன்  பொண்டாட்டியை தப்பா பேசினாலோ...  அல்லது குடும்ப உறுப்பினர்களை  வம்புக்கு இழுத்தாலோ அவன் பாக்சரோ சாதாரண ஆளோ... கோவம்  வந்து ஒரு ஆடியாவது அடிப்போம் இல்லை... அதைதான் இந்த படத்துலேயும் சினிமாட்டிக்காக வைத்து இருக்கின்றார்கள்....

பேன்டசி கதை என்று சொல்லி விட்ட பிறகு லாஜிக் பார்த்தால் வேலைக்கு ஆகாது.. இந்த  கேள்விகளை கேட்கும் முன்..  காசினோவில் ஓடும் லெஜன்ட் படத்தை மட்டும் ஒரு முறை பார்த்து விடுங்கள்.. அதன் பிறகு லாஜிக் பற்றி கேள்விகளை  இந்த ஜென்மத்துக்கு கேட்கமாட்டீர்கள்...

சித்தர் , தினத்தந்தி பேப்பர் என்று பேன்டசி கதையோடு களம் இறங்கி சுவாரஸ்யபடுத்துகின்றார்கள்...


 முன்கூட்டியே நடக்கும் விஷயம் தெரிந்த படித்த கும்பல்  ஒன்று குத்து சண்டை கிலோ என்ன விலை என்று கேட்கும் ஒருவனை  ஜெயிக்க வைத்து கிடைக்கும் பரிசுதொகையை  லபக்கி விட  படித்த கூட்டம் ஒன்று முயற்சி செய்கின்றது.. அதில் சிவ கார்த்திகேயன் மாட்டுகின்றார்.. அதே நேரத்தில் ஹன்சிகாவுடன் காதலில் விழுகின்றார். அவர்  ஜெயித்தாரா என்று ச்சே கோர்வையாவே சொல்லி தொலைக்கலை இல்லை.. இப்படித்தான் லாஜிக் மீறல்கள் இருந்தாலும்  முதல் பாதியில் ரசிக்க வைத்து பின் பாதியில் கொஞ்சம் தொய்வடைய   செய்து வழக்கம்  போல ஹேப்பி எண்டிங்...
இன்னும் பத்து படத்துக்கு சிவகார்த்திகேயன் இதே டயலாக் டெலிவரியை வச்சிக்கிட்டு அடிச்சி விடலாம்.

ஹன்சிகா இந்த படத்தில் நடித்த போதுதான் சிம்புவுடன் லவ் பிட்டுக்கொண்டது... பல பிரேம்களில் முகத்தில் கவலை  ரேகைகள்... விசில் அடிக்க சொல்லி வெட்கப்படும் இடத்தில் நன்றாக நடித்து இருக்கின்றார்.. யாழினி என்று அழகான தமிழ் பெயரை சூட்டி இருக்கின்றார்க்ள். 

லிப்ட்டில் ஒரு தடியன் குசு விட்டு செல்ல..  அதில் சிவா மற்றும் ஹன்சிகா மாட்டிக்கொள்வது செமை ரகளை.


சுகுமார் கேமராவில் பாண்டிச்சேரியும் அந்த பேக் ரவுன்ட்  லைட் சாங்கும் அசத்தலாய் படம் பிடித்து இருக்கின்றார்...  அதுவும் ஹன்சிகா கைலி போல ஒரு உடை அணிந்துக்கொண்டு  ஆடும் அந்த பாடலில் அவ்வளவு எனர்ஜி..ஒரு ஸ்டில்கேமராமேன்  படிப்படியாக ஒளிப்பதிவாளராக தன்னை   நிரூபித்துக்கொண்டு  மேலும் மேலும் வளர்வதை பார்க்க சந்தோஷமாய் இருக்கின்றது.


அனிருத் வழக்கம் போல இந்த படத்திலும் வெற்றிக்கொடி  நாட்டிஇருக்கின்றார்... தேவா குரலை திரும்பவும் கேட்க வைத்து இருக்கின்றார்கள்.

தமிழ் குறள் சொல்லும் காட்சிகளும்   ஹன்சிகாவை ஒருதலையாக காதலிக்கும் அந்த கேரக்டரும்... அதை சித்தப்பா என்று கலாய்க்கும் இடமும் அருமை.

=============

டிரைலர்.



============

படக்குழுவினர் விபரம்/

Directed by Thirukumaran
Produced by P. Madhan
Screenplay by Thirukumaran
Story by A.R.Murugadoss
Starring Sivakarthikeyan
Hansika Motwani
Soori
Vamsi Krishna
Writer Shaji
Sathish
Music by Anirudh Ravichander
Cinematography Sukumar
Editing by Aswin
Studio Escape Artists Motion Pictures
Release dates
4 April 2014
Running time 159 minutes
Country India
Language Tamil
Budget INR20 crore 

==========
பைனல்கிக்.

ஆனால் மான் கராத்தே என்றால் என்ன என்று ஒரு டெபனிஷன் வைக்கின்றார்கள் பாருங்கள் சான்சே இல்லை...லாஜிக் பாத்திங்கன்னா இரண்டாவது பாதி உட்காரவே முடியாது... 
லாஸ்ட்டா  பாக்சிங் பைட்... நடக்கும் அந்த காட்சி சென்ட் தாமஸ் மவுன்ட் மேல செட்டு போட்டு எடுத்தாங்களா??? இல்லை அதுக்கு பக்கத்துல  இல்லை அடையாறு பக்கம் கட்டி முடிக்கப்படாத ஏதாவது ஒரு இடத்துல மேல  செட்டு போட்டாங்களா? தெரியலை.

லாஜிக் பார்க்காமல் ஒரு முறை இந்த டைம்பாஸ் படத்தை  பார்த்து விட்டு வரலாம்.

=======
படத்தோட ரேட்டிங்..
பத்துக்கு ஐந்தரை.

பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.


நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

8 comments:

  1. நல்ல விமர்சனம்! நன்றி!

    ReplyDelete
  2. One of the worst ever movie I had seen in my life.. Total waste of money & time.. Even though I am not a logical thinker.. but entertainment is missing.

    ReplyDelete
  3. லாஜிக் பார்க்காமல் சிவகார்த்திகேயனுக்காக ஒருமுறை பார்க்கலாம்.

    ReplyDelete
  4. படு மொக்க படம்

    ReplyDelete
  5. படு மொக்க படம்

    ReplyDelete
  6. யாழினி என்று அழகான தமிழ் பெயரை சூட்டி இருக்கின்றார்க்ள்


    anna super

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner