சார்  படம்
பார்க்கும் போது எனக்கு முடிவு சுபமா இருந்தாதான் நான் படத்தை பார்ப்பேன் சார்....
 என்ன மாதிரி
முடிவுன்னு சொல்லுங்க....
 அதுவந்து 
சார்... படம் முடியும் போது ஹேப்பி என்டிங் சார்.... அப்படின்னா...??
ஹீரோவுக்கு ரொம்ப பிடிச்ச  ஆளு யாராவது 12வது  ரீல்ல 
சாவலாம்.. ஆனா ஹீரோ சாவக்கூடாது.. கடைசியா 
சந்தோஷமா படம்  முடியுனும்...
இந்த படம் அந்த வகை இல்லை... அதனால் பொட்டியை
கட்டிக்கிட்டு கிளம்பு...
படத்தோட  ஒன்லைன் ரொம்ப சிம்பிள்.. டிரக் டிராபிக்கிங்...
நிறைய டிடெயில் கலெக்ட் பண்ணிக்கிட்டு ஸ்கிரிப்ட்
எழுத உட்கார்ந்து இருக்கானனுங்க... அவ்வளவு டீடெயில்டு.
டிரக் எந்த எந்த விதத்துல கடத்துவாங்கன்னு பார்த்து
மிரண்டு போயிடுவிங்க...
 மரியா புல்
ஆப் கிரேஸ் படம்.. பெரிய அளவுல டிரக் பிரச்சனையும்... அது கடத்தும் போது
பாதிக்கப்படும் அப்பாவிகளின் வாழ்க்கை சம்பவங்களை பற்றி அதிகம் பேசிய படம்...
அதில் இருக்கும்  அந்த கான்செப்ட்டை அயன்
படத்தில் பார்த்தோம்...
இங்கே ஒரு பேருந்து நிறைய டிரக் டிராபிக்கர்ஸ்... ஒரு
டோல்கேட்டில் பேருந்து நிற்கும் போது  படம்
பரபரப்பாகின்றது... அதில் இருந்து படம் முடியும் வரை சான்சே இல்லை.. பின்னி பெடல்
எடுத்து இருக்கின்றார்கள்.
எவ்வளவு ஷாட்.. எல்லாம் ஹேன்டில்டுஷாட்டுதான்..  ஒரு வாரம்... அதன் டிராவல்... நைட்டு டேன்னு
லோக்கேஷ்ன் சேஞ்சிங்ன்னு பின்னி இருக்காங்க... 
எத்தனை நாள்ல ஷூட் முடிச்சி 
இருப்பானுங்கன்னு புரேம்களை பார்க்கும் போதே அசத்துகின்றது... ஒரு நிமிடம்
கூட  யோசிக்க விடாத  சேசிங்...
ஒரு போதை 
பொருள் கடத்தல் குற்றவாளி போலிசிடம் சிக்குகின்றான்... அவனை வைத்து மற்ற
ஆட்களை பிடிக்க போலிஸ் வலை விரிக்கின்றது.. போலிஸ் வெற்றி பெற்றதா  இல்லையா என்பதே கதை..
போலிஸ் போர்சில் நடித்த அத்தனை பேரும் உயிரை பணையம்
வைத்து நடித்து இருக்கின்றார்கள்... அல்லது அது போல நம்ப  வைத்து இருப்பதே அவர்கள் நடிப்புக்கு கிடைத்த
வெற்றி.
 பணத்தை
போட்டு எரித்து ஆத்மா ச சாந்தி அடைய செய்யும் மாற்றுத்திறனாளி குற்றவாளிகள்
என்று  வித வித மான கேரக்டர்களை   உலவ 
விட்டு  இருக்கின்றார்கள்... அழம்
அந்த ஹா ஹா ஹா கேரக்டர்  அசத்தி
இருக்கின்றது...
 ஒரு சில
படங்களை ரொம்பவும் வியக்க முடியாது.. அனுபவிச்சா தெரியும் அது போல திரைப்படம்தான்
டிரக் வார்...
கிளைமாக்ஸ் பின்னி இருக்கானுங்க.. அருமை போங்க..
இந்த படத்தை இயக்கி இருப்பது ஹாங்காங்கின்
தவிர்க்க   முடியாத இயக்குனர் ஜானி டூ
கிரைம் கதைகளை எடுப்பதில் ஒருஸ்டைலிஷான 
இயக்குனர்... ஹாங்காங்கின் குவாடின் 
என்றும் சொல்லலாம்..
 நம்ம
ஊர்  இயக்குனர் முத்துராமன் போல ஓரே
ஆக்டர்  டெக்னிஷியன்களை வச்சிக்கிட்டு படம்
எடுப்பார் என்று இவர் மீது குற்றச்சாட்டு உண்டு... 
இயக்குனர் ஷங்கர் படத்துக்கு
படம் பெரிய பெரிய கேமராமேன் 
மாத்திக்கிட்டே இருப்பார்... காரணம் புது புது உத்திகள்... அவுங்ககிட்ட
இருக்கும் என்பதால்... ஆனால் சொன்னதை புரிஞ்சிக்கிட்டு ஷாட் வைக்கறது  சில நேரத்துல சொதப்பும்... கருத்து மோதல் நிகழும்..
எல்லாம் நடக்கும்.. 
ஆனா தெரிஞ்ச கேமராமேன் 
அர்ட்டிஸ்ட்ன்னா... படம் எடுத்து தள்ளிக்கிட்டு போய்க்கிட்டு இருக்கலாம்
இல்லையா? அதைதான் ஜானி டூ எல்லா படத்திலேயும் 
பின் பற்றி இருக்கார்.
தவிர்க்க முடியாம  வில்லன் கூட்டத்தில்   போதை பவுடரை எடுத்ததும் துடித்து போய் வேறு வழியில்லாமல் அதனை  குறைக்க செய்யும் காட்சிகள் பரபரப்பு...
மாற்றிதிறனாளிகள் ரொம்ப கிளவராக  செய்யும் தொழிலும்  பணம் எரிக்கும் நெகிழ்ச்சியும்.....
யாரும் எதிர்பார்க்தா  அந்த கிளைமாக்ஸ் பைட்.. அருமை.
======
படத்தின் டிரைலர்..
 =========
படக்குழுவினர் 
விபரம்
 Directed by Johnnie To
Produced by 
Johnnie To
Wai Ka-Fai
Written by 
Wai Ka-Fai
Yau Nai-hoi
Ryker Chan
Yu Xi
Starring 
Louis Koo
Sun Honglei
Huang Yi
Wallace Chung
Music by Xavier Jamaux
Cinematography Cheng Siu-keung
Editing by Allen Leung
Studio 
Beijing Hairun Pictures
Milkyway Film Production
Distributed by Media Asia Distributions (Hong Kong)
Variance Films (North America)
Release dates 
November 15, 2012 (Rome Film Festival)
April 2, 2013 (Mainland China)
April 18, 2013 (Hong Kong)
July 26, 2013 (North America)
Running time 105 minutes
Country 
China
Hong Kong
======
பைனல்கிக்.
ஆக்ஷன் படம் எடுக்கனும்ன்னு யாராவது வெறித்தனமா
இருக்கற எதிர்கால டைரக்டர்ஸ்க்கு  நான்
இந்த படத்தை பரிந்துரை செய்வேன். 
காரணம்  அவ்வளவு ஷாட்ஸ்... அதை
எல்லாம் விறு விறுப்பா மாத்தறது சாதாரண விஷயம் 
இல்லை.. 
 சான்சே   இல்லை... இந்த படம் பார்த்தே தீரவேண்டிய
திரைப்படம்.
=====
படத்தோட ரேட்டிங்
பத்துக்கு ஏழு...
====.
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...




நல்ல விமர்சனம்...
ReplyDeleteடவுன்லோட் போட்டாச்சி... வடிவேல் படம் சவுண்ட் கிளியர் இல்ல அதனால இன்னைக்கு இதைதான் பார்க்கபோறேன்..
ReplyDeleteஇத சொல்றத்துக்கு வெட்கப்படல வேதனப்படப்படல துக்கப்படல துயரப்படல.. வருத்தப்படுரங்கன்னா ஏன்னா இங்க தியேட்டர் இல்ல.
|Thanks Mr.jackie.... Downloading...
ReplyDeleteHI Jackie.,
ReplyDelete" The Body " french padam parthittu sollunga..
Hi Jackie,
ReplyDelete" The Body " padam parthittu sollunga