புதியதலைமுறைஇதழ் விவாதம் எனது கருத்துக்கள்...

இன்றைக்கு  வெளியாகும்  புதிய தலைமுறை   இதழில்  இருக்கும் வாக்காளர் விவாதம் பகுதியில் கட்டுரையில் எனது கருத்தை முன் வைத்து இருக்கின்றேன்.
 வெளிநாட்டுவாழ் இந்தியர்கள் வாக்களிக்கலாமா ??இல்லையா? என்பதுதான் விவாதம்... அதற்கு வாக்களிக்க அவர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டாம் என்பது என் வாதம்... வாய்ப்ளிக்கலாம் எப்போது என்பதையும் ரொம்ப விரிவாய் எழுதி உள்ளேன்...


முதலில்  ஒரு விஷயத்தை தெளிபடுத்தி விரும்பகின்றேன்.. வெளி நாட்டில் வாழ்ப்வர்களுக்கு ஓட்டுரிமை  வேண்டுமா வேண்டாமா என்பதுதான் வாதம்… வெளிநாட்டு வாழ் இந்தியர்கள்   வாக்களிக்க  வாய்ப்பு தேவையில்லை என்பது என் கருத்து.. அது இந்திய அரசின் கருத்து அல்ல…  அது என்  கருத்து மட்டுமே…ஏன்   வேண்டாம் என்கின்றேன் என்று பிறகு காரணம் கூறுகின்றேன்….

  
சரி  நான் வாழ்ந்த கடலுருக்கு  பக்கத்தில் இருக்கும் பாண்டியில் இன்னும் பிரேஞ்சு தேசத்தில் தேர்தல் நடந்தால் இங்கே இருக்கும் பிரேஞ்சு சிடிசன்கள் வாக்களிக்கலாம்  என்பதை நான் பார்த்து இருக்கின்றேன். அப்புறம்  ஏன் வேண்டாம் என்கின்றேன்.. சொல்கின்றேன்..

அதற்கு முன் ஒரு விஷயத்தை நான்  நன்கு தெளிவுபடுத்த விரும்புகின்றேன்… வெளிநாட்டில் வாழும்  இந்தியர்களை நான் ஏதோ எதிரி போல பாவிப்பதாக நேற்றே சில நண்பர்கள் கருத்து தெரிவித்து பொங்கி பொங்கல் வைத்து  இருந்தனர்….எனக்கே வெளிநாட்டில் வேலை வாய்ப்பு கிடைத்தால் நான் வெளிநாடு சென்று பொருள் ஈட்டி என் கடனை அடைக்க  நல்ல  வாய்ப்பு கிடைத்தால் நானே குடும்பத்துடன்  வெளிநாடு செல்வேன் என்பதையும் தாழ்மையுடன் இங்கே தெரிவித்துக்கொள்கின்றேன்… நானே அன்னிய செலவானி  ஈட்டும் சக்தியாக மாறவும் சித்தமாக இருக்கின்றேன் என்பதை தெரிவித்துகிகொள்கின்றேன்...


இது விவாதம் மட்டுமே... ஓப்பனா சொல்லனும்னா.... பல வெளிநாட்டு வாழ் நண்பர்களின் வியர்வை என்னை முன்னேற்றி இருக்கு... அதில் மாற்றுக்கருத்து இல்லை..... லக்கி ஓட்டு தேவையா இல்லையான்னு ஒரு கருத்து கேட்டார்... நான்  சொன்னேன் அது தேவையில்லை... காரணத்தை அடுக்கினேன்..ஆனா பிளாக் போல எல்லாக்ருத்தையும் சொல்ல புதிய தலைமுறை  இதழ்  இடம் ஒதுக்காது  இல்லையா.... நான் சொன்ன சாரம்சத்தை வைத்து  எழுதி இருக்கார்... அதுக்காக வெளிநாட்டு வாழ்காரனை ஏதோ எதிரியாக சித்தரிப்பது போல சிலர் கருத்திட்டு வருகின்றார்கள்... அட போங்கடா என்று தோன்றுகின்றது...ஓட்டு தேவையில்லை என்பது என் கருத்து..  மட்டுமே இந்தியாவின்  முடிவுகளை எடுக்கும்  வல்லமை அதற்கு இல்லை... அது ஏன் தேவையில்லை என்ற காரணத்தை அடுக்கிறேன்... அரை பக்கத்தில் அவ்வளவுதான் சொல்ல  முடியும்.. அதை லக்கி கொஞ்சம் உணர்ச்சி மேலிட எழுதி இருக்கார்...ரைட்... நானே சில வருடங்களா வெளிநாட்டு   வேலையை எதிர்பார்த்து காத்து இருக்கின்றேன்... அபபடி கிடைத்தால் மாதம் 28 ஆயிரம் ரூபாய் கட்டும் ஹவுசிங்க லோனில் இருந்து வெளியே வர ஆயுத்தமாக இருக்கின்றேன்.. நானும்  அன்னியசெலவானியை கொடுக்கவும் தயராக இருக்கின்றேன் என்பதையும் இத்துடன் தெரிவித்து கொள்கின்றேன்

ஒரு பத்திரிக்கையின் கால் பத்தியில் நாம் என்ன சொல்கின்றோம் என்பதை அப்படியே எழுத முடியாது… அது சாத்தியம் இல்லை… அதே வேளையில் பதில் சொன்ன சாரம்சத்தை வைத்து கட்டுரையாளர் எழுத முடியம்… அப்படித்தான் நிறைய கட்டுரைகள் வெளிவருகின்றன.

லாஜிக்காய் இரண்டு விஷயங்களை நான் சொன்னேன்.
வீடியோ கான்பிரன்சிங்கில்  எல்லாம் திறக்ககலாம்….பேசலாம்,  பொங்க வைக்கலாம்… பிளறலாம் எல்லாம் செய்யலாம்.. ஆனால்  ஏன்  ஓட்டுரிமை மறுக்கப்பட வேண்டும் என்கின்றேன்…

 எட்டுமணி நேர மின் வெட்டை அதன் வாழ்வியல் துயரத்தை  அந்த கச கசப்பை ,  வெளிநாட்டு வாழ் இந்தியன் அனுபவத்து இருக்க நியாமில்லை..வியர்வையில் கொசு கடிக்க  பச்சை பிள்ளைகள் தூக்கம்  வராமல் எத்தனை  இரவு தூக்கத்தை நாங்கள்  கடந்து வந்து இருக்கின்றோம் என்பதை நாங்கள்  மட்டுமே  அறிவோம்… அவர்கள் அப்படி ஒரு  சூழ்நிலையை அறிய  நியாயம் இல்லை. அந்த துயரம் அறியாத காரணத்தாலே நான் அவர்களின் ஓட்டுரிமை  தேவையில்லை என்று சொல்கின்றேன்… அதை அறிந்தவனால் மட்டுமே  உணர்ந்து ஓட்டிட முடியும்.. அப்படியும் பணம் வாங்கி கொண்டு மாற்றி போடவும் வாய்ப்புகள் இருந்தாலும் போர்களத்தில் உள்ள வீரனுக்கே சூழ்நிலையின்  வீச்சு புரியும் என்பதால் அப்படி சொல்கின்றேன்.…

 எப்போதும் நடிகை சுகாசினி சொல்லுவார்..  அழுக்கான  ஆட்களை அவருக்கு பிடிக்கவே பிடிக்காது… பிரேம்   முழுக்க ரிச்சாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்… அது போலத்தான் வெக்கேஷனுக்கு வரும் வெளிநாட்டு வாழ் இந்தியார்களும்  சென்னையில் வசதியான இடங்களில்  ஒரு  மாதகால வெக்கேஷனை கழித்து விட்டு,  தான் வாழ்ந்த தாய் திரு நாடு முன்னேறி விட்டதாக  நினைத்து அப்படியே வெளிநாட்டில் போய் என்னமாதிரி வளர்ச்சி தெரியுமா என்று மார் தட்டுவார்கள்….

ஆனால்   இயல்பில் இந்த நாட்டின் மனிதர்கள்   எல்லோரும் அப்படியானவர்கள் அல்ல… சென்னை சென்ட்ரல் எதிரே உள்ள பூங்கா ரயில் நிலையத்தை ஒட்டி ஒரு குடிசைப்பகுதி இருக்கின்றது…  அங்கே இருக்கும் அத்தனை பேரும் அழுக்கானவர்களே… அந்த குடிசைப்பகுதியில் இருந்து  பாதம் கொட்டை பொறுக்க போன பையன்தான் துப்பாக்கி சூட்டில் இறந்து போனான்.
 செருப்பு அணிந்து இருப்பவனுக்கே அதன் வலியும் வேதனையும் அறிய முடியும் என்பதால்  அப்படி சொன்னேன்…

ஒரு அறுவை சிகிச்சை நிபுனன்  அமெரிக்காவில் இருந்து  வீடியோ  காண்பிரன்ஸ் மூலம் கண்டிப்பாக நோயாளியின்  உடல் நிலை பார்த்து கருத்து  சொல்லலாம்… ஆனால்  நேரில் அப்பரேஷன்  செய்வது போல வராது..

இன்னைக்கு அரசு வேலையில் இருப்பவர்கள்… ரெகுலராக பள்ளியில் போய்    படித்தவர்களுக்கு மட்டுமே வேலைவாய்ப்பில் முன்னிருமை…. ஏன் ஓப்பன் யுனிவர்சிட்டியில் பயில்பவர்கள் அரசு வேலைவாய்ப்பில் முதலிடம்…அவ்வளவுஏன் கடைசி இடம் கூட அளிப்பது இல்லை.. அது போலத்தான்… இங்கே இருக்கும் மக்கள்  ரெகுலராக பள்ளி சென்று பயின்றவர்கள்..  பள்ளிக்கே போகாமல் திடிர் என்று ஓப்பன் யூனிவர்சிட்டியில் படித்து  விட்டு நானும் உனக்கு சரிக்கு சமம்… எனக்கும் வேலைவாய்ப்பில் முன்னுருமை என்பதை ஏற்றுக்கொள்ள  முடியுமா? சொல்லுங்கள்… அதேதான் ஓட்டு விஷயத்துலும் பாரினில் இருப்பவர்கள் ஓப்பன் யுனிவர்சிட்டியில் படித்து டிகிரி வாங்கியவர்கள் என்கின்றேன்.

நகரித்தில் செயின் அறுப்பு தெருவுக்கு தெரு நடந்துக்கொண்டு இருக்கின்றது.. வெளிமாநிலத்துக்கு போய் இருந்த  எல்லா குண்டர்களும் இங்கே வந்து  விட்டார்கள் திருச்சியில்  ஏர்போர்ட்டில் இருந்து மூன்று கிலோமீட்டரில் கூட்டம் நடக்க இருக்கும் இடத்துக்கு செல்ல  வசதி இருந்தும் புது ஹெலிப்பேட் அமைத்து  லட்சக்கணக்காக  மரங்களை வெட்டி வீழ்த்தியதை இங்கே தமிழ் நாட்டில் இருக்கும எந்த ஊடகமும் வாய் திறக்வில்லை.. தமிழ் நாட்டில் இருக்கும் முக்கால்  வாசிப்பேருக்கு இந்த விஷயமே தெரியாது... அப்படி இருக்க  தினமலர் மற்றும் விகடன் பேக்கேஜ் வெளிநாட்டு வாழ் இந்தியருக்கு இந்த விஷயம் எப்படி தெரியும்..

 பள்ளி இறுதி பரிட்சைக்கு பிள்ளைகள் கரென்ட் இல்லாமல் படிக்கும் அவல  நிலை  தெரியுமா?

 போன ஆட்சியில்  கலைஞர் இரண்டு மனைவியோடு கொட்டம் அடிக்கவே  நேரம் சரியாக இருக்கின்றது என்று பொங்கல் வைத்தவர்கள் தான்.... தன் திருமணத்தையே மறைத்த மோடியை தலையில் தூக்கி வைத்துக்கொண்டாடுகின்றீர்கள்...

 இரண்டு மணி  நேர சினிமா பராட்டு விழாவில்  கலந்து கொண்டதை  ஓட்டி விட்டு கொட நாட்டில் ஓய்வு எடுப்பதையும் ... ஒரு அரசாங்கமே மலைவாசஸ்தளத்தில் செயல்பட்டதை பார்த்து அமைதி  காத்தீர்கள்...   புதிய தலைமைசெயலகத்துக்கும் பழைய தலைமைசெயலகத்துக்கும் ரொம்ப தூரம் என்று சொன்ன அதே வாய்தான்  சென்னையில் இருந்து  500 கிலோ மீட்டா தூரத்தில் இருக்கும்  கொட நாட்டில் ஆட்சி யை நடத்தினார்... அதை பற்றி ஒரு வார்த்தை இங்கே இருக்கறவனே வாய் மூடி கம்முன்னு இருக்கான்.. நீங்க  என்ன செஞ்சிட  முடியும்...

 யானையை நேரில்   சங்கிலியால் கட்டி திமிரிக்கொண்டு இருக்கின்றது... அம்மாவை ஜெயிக்க வைத்தால் ஹெலிகாப்ட்ரில் போய் மீன்  பிடிக்கலாம் என்று சொல்வதை தமிழ் நாட்டில் இருக்கும் நாங்களே கம்முன்னு பார்த்துக்கிட்டு இருக்கோம்... பார்வையற்றவர் போல  யானையை தடவி பார்த்து சொல்லும் உங்கள் கருத்து இன்னும் வலுவிழந்தாகவே இருக்கும் என்பதே என் கருத்து...

ரைட்..  ஒரு நண்பர்  வெளிநாட்டில்  வாழ்நண்பர்களின் வாழ்க்கை  பார்த்து  நான் எரிச்சல் அடைந்து இருப்பதாக...  ஒரு நண்பர் ஒரு திரியில் சொல்லி இருந்தார்... ஒரே அறையில் முப்பதுக்கு மேற்ப்பட்டவர்கள் தங்கி சிங்கப்பூர் கம்பெனிகளில் தங்கி வேலைபார்க்கும் அவல நிலைகளை நான் அறிவேன்..

சுக போகமாக இருப்பவன் சீர்  தூக்கி பார்த்து ஓட்டு போட  மாட்டானா  என்று நண்பர்  பலா பட்டறை சங்கர் கேட்டு இருக்கின்றார்.... பலாபட்டறை சங்கர் சுக போகமா சென்னையில்  வசிக்கின்றார் என்று வைத்துக்கொள்ளுவோம்... ஆனால் வெயில் வாட்டுவதை அவர் அறிகின்றார்.. அதனால் தன் வீட்டு  தோட்டத்தில்  நீரையும்   தானியங்களையும் நிரப்பி கோடை வெயிலில் இருந்து குருவிகளை தற்காத்துக்கொள்ள அமைத்துள்ளார்...  இந்த வெயிலை சென்னை வெயிலை உண்ந்தவனால் அந்த படத்தின் தன்மையை உணர  முடியும்.. ஆனால் ஏற்க்கனவே சென்னையில் இருந்து  அமெரிக்கா சென்றவனால் கூட  இப்போதைய  சென்னை வெயிலை அனுபவித்தால் மட்டுமே அந்த போட்டோவும்.. குருவிக்கு கொடுத்து முக்கியத்துவத்தையும் நன்கு அறியமுடியும்..

ஏழு டிராக்கில் 150 கிலோ மீட்டர் வேகத்தில் பிரிவேயில் கார் ஓட்டுபவனால் சென்னையில்  இருக்கும் டிராபிக் கசகசப்பை உணர முடியாது.. நான் வெக்கேஷனுக்கு சென்னைக்கு வந்து இருக்கேன்.. ஐ நோ....  வாட்  அபவுட் டிராபிக் இன் சென்னை...? நீ ஒரு  மாசம்   வெக்கேஷன் ..ஏசி கார்   பெரிசா  தெரியாது.. பைக்ல போய் பாரு  செத்துருவ...

சென்னையில இருப்பவனுக்கு  மட்டுமே  கூவத்தில் அமைக்கப்பட்டு இருக்கும் பறறக்கும் சாலையில் மகத்துவம்  அறிய முடியும் என்று சொல்கின்றேன்..

 உதாரணங்கள் போதும்..  சரி... மத்திய அரசு ஓட்டு அளிக்க  வாய்ப்பு கொடுத்தால்  கொடுத்துவிட்டு போகட்டும்.. வேண்டாம் என்பது என்  கருத்து அதற்கான காரணங்கள் சொல்லிவிட்டேன்.. அப்படி  வாய்ப்பு கொடுத்தால் அதற்கு ஏதாவது அரசியல் காரணங்கள்  கண்டிப்பாக இருக்கும்... அப்படி கொடுத்தமைக்கு பொங்கி பொங்கல் வைக்க எல்லாம் போகப்போவதில்லை...

அதே போல வெளிநாட்டு வாழ் இந்தியர் என்றால் சமுக வலைதளங்களில் இருக்கும்   நண்பர்களை மற்றும் கணக்கில் எடுத்துக்கொள்கின்றார்கள்...  சரியோ தவறோ ஒரு சிலராவது சமுக வலைதளங்களில்  தங்கள் கருத்தை  தெரிவிக்கின்றார்கள்... ஆனால் இங்கே படித்து முடிந்து வெளிநாடு போய் புல்ஷிட் இந்தியா  என்று சொல்லும் என்ஆர்ஜகள் நிறைய விழுக்காடு இருக்கின்றார்கள்.. அந்த புல்ஷிட் இந்தியாக்கள் ஒரு போதும் வலுவான பாரதத்தை ஆளும் ஆட்களை தேர்ந்து எடுக்க சரிப்பட்டு வரமாட்டார்கள் என்பது என் கருத்து...
அப்ப நீங்க தேர்ந்து எடுத்துடுவிங்களா?-

நாங்க சரியா வலுவா  தேர்ந்து எடுக்கலைன்னாலும்...  கோனதா இருந்தாலும் என்னோடதாக்கும் என்ற ஸ்டைல்தான்.

சரி எப்போது ஓட்டு உரிமை கொடுக்கலாம்..????

 பிரான்ஸ் போல வளந்த நாடாக மாறியபின் கொடுத்தது போல ... எப்படி வளர்ந்த நாடுன்னு கண்டுபிடிக்கறது....? ஒழுக்கத்துல  பொருளாதரத்துல எல்லாம்...

கொஞ்சம் புரியும் படியா சொல்லுங்க...

வெளிநாட்டுல எல்லா சுத்தங்கள்யும் , டிராபிக் ரூல்ஸ் எல்லாம் பாலோ  பண்ணிட்டு  சென்னை அல்லது இந்திய ஏர்போர்ட்டில் இறங்கியதும் மாவா  போட்டு  பொச்சக்குன்னு எச்சி துப்பறதை நிறுத்தும் போது வெளிநாட்டு வாழ்  இந்தியர்களுக்கு  ஓட்டுரிமை கொடுக்கலாம்...


 நன்றி  வணக்கம்...




நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

38 comments:

  1. "வெளிநாட்டுல எல்லா சுத்தங்கள்யும் , டிராபிக் ரூல்ஸ் எல்லாம் பாலோ பண்ணிட்டு சென்னை அல்லது இந்திய ஏர்போர்ட்டில் இறங்கியதும் மாவா போட்டு பொச்சக்குன்னு எச்சி துப்பறதை நிறுத்தும் போது வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு ஓட்டுரிமை கொடுக்கலாம்..."

    Interesting view.

    ReplyDelete
  2. //வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் வாக்களிக்க வாய்ப்பு தேவையில்லை என்பது என் கருத்து..//

    சரியான கருத்துதான் சகோ.

    ReplyDelete
  3. ஜாக்கி

    உங்கள் கருத்தின் படி, இந்தியாவில் நாங்கள் கஷ்டப்படுகிறோம், வெளி நாடு வாழ் இந்தியர்கள் சுகமாக இருக்கிறார்கள்.என்றால், இந்தியாவிலேயே சுகமாக இருப்பவர்களுக்கு ஓட்டுரிமையை இல்லை என்பீர்களா? அல்லது ராணுவத்தில் உள்ளவர்களுக்கு, ஒருவருக்கு இரண்டு ஒட்டு கொடுக்கச் சொல்வீர்களா?

    இந்தியன் என்றால் அவன் இங்கிருந்தாலும் இந்தியன் தான். (விண்வெளியில் இருந்தாலும்- Space Station) இந்திய கடவு சீட்டு வைத்திருக்கும் ஒவ்வொருவருக்கும் எல்லா உரிமையும் இருக்க வேண்டும். அது தான் ஜனநாயகம்.

    அன்புடன்,
    சங்கர நாராயணன் தியாகராஜன்.
    ஆம்ஸ்டர்டாம்

    ReplyDelete
    Replies
    1. Sankar , Nobody is stopping you to vote in Indian Elections . If you wish you can fly to nearest city , reach your booth and exercise your duty . No one will stop you . We will be very happy if it increases the vote percentage

      Delete
    2. கைலாஷ்,
      ஒரு அரசியல்வாதி போல எழுதி இருக்கிறிர்கள். வெளி நாடு வாழ இந்தியர்கள் இந்திய தூதரகத்தின் வழியாக தங்கள் ஓட்டினை போடும் வசதியைப் பற்றி பேசும் போது, நீங்கள் தலையைச் சுற்றி மூக்கைத் தொட சொல்கிறிர்கள். அதுவும் தப்பாக... அருகாமையில் உள்ள நகருக்குச் சென்று ஓட்டுப் போடா முடியாது. என் ஒட்டு உள்ள ஊருக்கு செல்ல வேண்டும் அதற்கு..
      உங்கள் கரிசனத்திற்கு நன்றி.

      அன்புடன்,
      சங்கர நாராயணன் தியாகராஜன்



      Delete
    3. / If you wish you can fly to nearest city , reach your booth and exercise your duty ./

      If you cant understand this basic statement , there is no use of arguing with you , i dint asked you to vote in the nearest city .

      Delete
  4. super sekar sir... your views are cent percent correct.. If at all they will vote they will vote only with what they hear about their country.. But here the reality is different.. May be we can do one thing... we can take their vote on account but they should not directly cast their vote, instead a blood relation who will show all the proof can cast their vote as extra vote on behalf of their blood relative.

    ReplyDelete
  5. உங்கள் கருத்துக்களின் உண்மை புரியுது. அனால் இங்க இருக்க எல்லாரும் இப்படி பகுத்து ஆராய்ந்து எல்லாம் ஒட்டு போடறதில்லையே. அதேபோல வெளிநாட்டு போனதும் இந்திய பத்தி கிண்டல் பண்ணிட்டு கடமையா முடிச்சுக்கிற ஆட்களுக்கு இந்த வாய்ப்பும் ஒரு பொருட்டே கெடையாது. அனால் அங்க இருக்கும்போதும் ஏதோவொருவகையில் இந்தியாவோட ஒரு பிணைப்பை வச்சிக்க நினைக்குறவங்களுக்கு இது ஒரு நல்லதுதானே

    ReplyDelete
  6. வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் எல்லாம் ஏதோ சுகபோக வாழ்க்கை வாழ்வது போல இருக்குறீங்க, இங்க வந்து நாய் படுற பாடு இங்கு உழைக்கும் சகோதரர்களை பார்த்தால் தான் தெரியும். 12 மணிநேரம் தான் அவர்களை மிக குறைந்தபட்ச வேலை நேரம். குடும்பம் , நண்பர்கள் , மனைவி , குழந்தைகள் , அண்ணன்,தம்பி என்று எல்லோரையும் விட்டு இங்கு வந்து 5 ,6 வருஷங்கள் தாண்டியும் தன் வீட்டு கஷ்டங்கள் தீராமல் ,தங்கை & அக்கா திருமணங்கள் முடியாமல் தினம் தினம் கண்ணீர் சிந்தி அழுவதற்கு கூட வாய்ப்பில்லாமால் உழைக்கின்றார்கள்.

    ReplyDelete
  7. மிகவும் சரியான கருத்து...

    இங்கே வாழ்ந்து பார்த்தான் தெரியும்
    அங்கே இருந்து பார்த்தா ஒன்னும் தெரியாது.

    அதனால அவங்க போடும் ஓட்டு தவறான கட்சியை தேர்ந்தெடுக்க அதிக வாய்ப்பு உண்டு...

    உங்கள் கருத்தை நான் 100விழுகாடு ஆதரிக்கிறேன்.

    ReplyDelete
  8. அங்க குழந்தை அழுகிறது உடல் நிலை சரி இல்லை என்றால் இங்கே உறங்காமால் வேலை ஓடாமல் திட்டு வாங்கி கொண்டே பரிதவிப்போர் எத்தனை பேரை உங்களுக்கு தெரியும். டாமேட்ரி 20000 பேர் தங்கி இருக்காங்க ஒரே அறையில் 20, 25க்கும் மேற்பட்டவர்கள்.

    ReplyDelete
  9. அங்க குழந்தை அழுகிறது உடல் நிலை சரி இல்லை என்றால் இங்கே உறங்காமால் வேலை ஓடாமல் திட்டு வாங்கி கொண்டே பரிதவிப்போர் எத்தனை பேரை உங்களுக்கு தெரியும். டாமேட்ரி 20000 பேர் தங்கி இருக்காங்க ஒரே அறையில் 20, 25க்கும் மேற்பட்டவர்கள்.

    ReplyDelete
  10. ஜாக்கி, உங்களது வாதமுறை கரடுமுரடாக இருந்தாலும் சொல்ல வரும் விஷயத்தை பளிச்சென்று சொல்லிவிடுவீர்கள்.

    தேர்தலில் வெல்லுபவர்கள் மக்கள் பிரதிநிதிகள். அதாவது அவரவர் வசிக்கும் தொகுதி மக்களின் பிரதிநிதிகள். எனவே தொகுதியில் வசிப்பவர்கள் வாக்களித்து அவரை தேர்வு செய்வதே சரியாக இருக்கும். தொகுதிக்கு தொடர்பில்லாத இடங்களில் வசிப்பவர்கள் குறிப்பிட்ட தொகுதியின் பிரதிநிதியை தேர்ந்தெடுக்கக்கூடாது என்கிறீர்கள்.

    எனக்கும் இக்கருத்தில் உடன்பாடு உண்டு.

    அவரவர் வசிக்கும் பகுதி பிரதிநிதிகளைதான் அவரவர் தேர்ந்தெடுக்க வேண்டும். வெளிமாநிலங்களில் வசிப்பவர்கள் கூட அவர்கள் வசிக்கும் பகுதியில் வாக்களிப்பதுதான் சரியாக இருக்கும்.

    ReplyDelete
  11. Dears,
    Even though I am in India, I can not vote in Tamil Nadu as I have voter ID in Bangalore :(
    So, Please understand , We do agree "We are all Indian" but to Vote, we have to be there in the respective location :)

    ReplyDelete
  12. //தேர்தலில் வெல்லுபவர்கள் மக்கள் பிரதிநிதிகள். அதாவது அவரவர் வசிக்கும் தொகுதி மக்களின் பிரதிநிதிகள். எனவே தொகுதியில் வசிப்பவர்கள் வாக்களித்து அவரை தேர்வு செய்வதே சரியாக இருக்கும். தொகுதிக்கு தொடர்பில்லாத இடங்களில் வசிப்பவர்கள் குறிப்பிட்ட தொகுதியின் பிரதிநிதியை தேர்ந்தெடுக்கக்கூடாது என்கிறீர்கள்.

    எனக்கும் இக்கருத்தில் உடன்பாடு உண்டு.

    அவரவர் வசிக்கும் பகுதி பிரதிநிதிகளைதான் அவரவர் தேர்ந்தெடுக்க வேண்டும். வெளிமாநிலங்களில் வசிப்பவர்கள் கூட அவர்கள் வசிக்கும் பகுதியில் வாக்களிப்பதுதான் சரியாக இருக்கும்.///

    but the reality is different ....PM candidate is contesting in other state :-)

    ReplyDelete
  13. இன்றைய தேதியில் டாஸ்மாக்கில்
    புழங்கும் 1000 ரூபாய் நோட்டுகள் எங்கிருந்து
    வந்தன ...என்பதை ஈஸியா ஸ்கெட்ச் செய்து
    வேட்பாளரை ...அல்லது கட்சியை டிரேஸ் பண்ணிடலாம்...!
    1000 க்கு போதையில் நன்றிக்கடனா விழப் போகும் வாக்கை விட
    என்.ஆர்.ஐ ..வாக்குகள் நேர்மையானதாக.. நிதானமாக இருக்கும்..
    என்பது எனது கருத்து. ஒரு காலத்தில் வாழ்ந்த அல்லது மறுபடியும்
    வந்து வாழப்போகிற ஊருக்கு / கோவில், பள்ளிகளுக்கு அவர்களில் பலர்
    செய்த நல்ல விஷயங்களை பயன்படுத்திக்கொள்ளும்போது ...
    ஒரு நல்ல வேட்பாளரைத் தெரிவு செய்யும்
    ஆர்வத்தை சிதற அடிப்பதில் ...நாடு சுபிட்சமாகிவிடாது !
    வாக்களிக்கும் உரிமையை பறிக்கக் கூடாது ....
    வாக்களிக்க முன்வருவோரை நாட்டுபற்று
    மிக்கவராகக் கருதி பாராட்ட வேண்டும்...!

    ReplyDelete
  14. இது வேறு ஒண்ணும் இல்லை......மோடி பயம்.

    ReplyDelete
  15. அன்பின் நானா ஷாம்.... பிரதிநிதியை தேர்ந்து எடுக்க அந்த பகுதியில் வாழ்பவராக கண்டிப்பாக இருக்க வேண்டும் என்பது என்னுடைய வாதம். ஆனால் பலர் வெளிநாட்டில் பணிபுரிகின்றவர்கள் கஷ்டப்படுகின்றார்கள்... அன்னிய செலாவனி இது போன்ற விஷயங்கள் இதில் எப்படி புகுந்து கொண்டன என்பதை என்னால் விளங்க முடிவில்லை.. அதே வேளையில் நீங்கள் வைத்து இருக்கும் லாஜிக் பாயிண்ட்டை ஏற்கின்றேன்...நன்றி..

    ReplyDelete
    Replies
    1. Is it true that the candidate always belong to the constituency????? The system allows them to stand from anywhere and in that case no one should vote???

      Delete
  16. வெளிநாட்டுல எல்லா சுத்தங்கள்யும் , டிராபிக் ரூல்ஸ் எல்லாம் பாலோ பண்ணிட்டு சென்னை அல்லது இந்திய ஏர்போர்ட்டில் இறங்கியதும் மாவா போட்டு பொச்சக்குன்னு எச்சி துப்பறதை நிறுத்தும் போது வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு ஓட்டுரிமை கொடு ..சரிதான்

    ReplyDelete
  17. வெளிநாட்டுல எல்லா சுத்தங்கள்யும் , டிராபிக் ரூல்ஸ் எல்லாம் பாலோ பண்ணிட்டு சென்னை அல்லது இந்திய ஏர்போர்ட்டில் இறங்கியதும் மாவா போட்டு பொச்சக்குன்னு எச்சி துப்பறதை நிறுத்தும் போது வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு ஓட்டுரிமை .......சரிதான்

    ReplyDelete
  18. @nanashaam and others : Nobody is stopping NRI's to vote in election . If they are really interested in fulfilling their duties as a citizen , they can plan their home trip during election and exercise their franchise .

    ReplyDelete
  19. Jackie, pls post sruthi hassan's latest photo :-)

    ReplyDelete
  20. Jackie Anna! There is two group of people considered as NON-RESIDENT INDIANS. One is settled with their family in abroad! and the others are working temporarily to meet their financial needs in India. So please point out your suggestion with above points. As I am a foreign worker, I want VOTE Rights abroad and not for those people settled abroad. We know all the status of our country as you stated in your articles. India is an ingenious country but why still we need to come abroad to meet our financial needs? Almost all of the people connected via social network not only Dinamalar and Vikatan and also we are calling India atleast one time a day. We want the rights to select a good government as like other Indian citizens atleast to vote for NOTO!

    ReplyDelete
  21. Dear Jackie, I think you missed the subject plot. They are Non Resident Indians (NRIs) only. Our Indian government gives legal permit to work abroad. If criminals, cheats and gangsters are eligible for voting in India then why not for NRIs. You can argue that NRIs may not know the local candidates very well and also they may not understand the problems faced during everyday's life. ...Come on Jackie, we are in the 21st century. Problems are everywhere in the world ("Ikkaraikku akkarai pachai"). Our new generation media exposes the current politics very well. Moreover, these NRIs too face the real situations during their visits to India. They may work in foreign, but there mind, soul & family always stay in India. I think you have a wrong opinion on the NRIs. They usually teach good things/behaviors which they have learnt from the foreign countries. It is OK if there is any technical difficulties to provide voting system to NRIs. But make sure that at least you vote to the right local candidate in order to get rid of your day to day problems.

    ReplyDelete
  22. Dear Jackie, I think you missed the subject plot. They are Non Resident Indians (NRIs) only. Our Indian government gives legal permit to work abroad. If criminals, cheats and gangsters are eligible for voting in India then why not for NRIs. You can argue that NRIs may not know the local candidates very well and also they may not understand the problems faced during everyday's life. ...Come on Jackie, we are in the 21st century. Problems are everywhere in the world ("Ikkaraikku akkarai pachai"). Our new generation media exposes the current politics very well. Moreover, these NRIs too face the real situations during their visits to India. They may work in foreign, but there mind, soul & family always stay in India. I think you have a wrong opinion on the NRIs. They usually teach good things/behaviors which they have learnt from the foreign countries. It is OK if there is any technical difficulties to provide voting system to NRIs. But make sure that at least you vote to the right local candidate in order to get rid of your day to day problems.

    ReplyDelete
  23. good post. even though i am a nri i support your view. as lucky rightly said 'elected leaders are people's representatives'. if people are not living in their constituency why they should vote?

    ReplyDelete
  24. ennovo indiavil irukinravennalam yokiyan pola ezthuthi yirukinga bosss. kittathatta ella NRI kalukkum avarkaludaiya sonatha pantham, avarkalaudaiya kudumbam ellam indiavil thanirukirathu. current cut pattriyellam ungali vida engalukku nanragave theriyum bro. Indiavil irrukkum ella pannadaikalum india arasin porulathara kollkaigalai alasi arayanthu ethu sari allathu ethu thavaru enru therinthu piragu ottalikirargala enna?. ungalukku ellam, 1 rupai rice, free current kodutha sirappana aatchi. otha central governmentla okkanthukittu nalla thirudi sampathcha pannikalukku sariyana padam karpikka vendum. India vila irukkira ethanai perukku india arasin porulathara kolgai patri akkarai irrukirathu. avargal thittmittu kollai adipatharkku avarkalagave satthai iyatri kolkirargal. ithaiyellam keppatharkku nathiyilla kalainzarukku sombadikka mattum theriyum. NRI kku votturimai vendammnu sollra thukku mattum nadunilamiyoda sinthikkirramaa. mattrapadi kalaignar enna thriudi sapptadulam avara support pannni sombadikka vendiyathu.

    ReplyDelete
  25. First negative Vote to Mr.Jackie. Agree with view of Mr.சங்கர நாராயணன் தியாகராஜன்.. I hope 90% of NRIs are just paying home loans / family loans, not running multi-billion company in India by enjoying the outfit of foreign countries. At times, we have to live on the shoes of others to understand Or getting better view. Playing role of NRI is one of the kind.

    Thanks
    Sriram.

    ReplyDelete
  26. தன் திருமணத்தையே மறைத்த மோடியை தலையில் தூக்கி வைத்துக்கொண்டாடுகின்றீர்கள்...//

    ஜாக்கி இந்த விஷயத்தில் கலைஞரையும் மோடியையும் சமப்படுத்தி மோடியை அசிங்கப்படுத்த வேண்டாம். அவர் அதை மறைக்கவில்லை மறைக்க வேண்டிய அவசியமும் இல்லை. ராஜாத்தி யார் என்ற கேள்விக்கு கனிமொழியின் தாய் என்று வார்த்தை விளையாட்டுகளில் ஈடுபடவில்லை. இணைவி, துணைவி, மனைவி என்று வாழவில்லை, தன் உற்றார் உறவினருக்கு சீட்டு வாங்கித் தரவில்லை, குடும்ப அரசியல் என்றால் என்ன என்ற கேள்விக்கு ஒற்றை சொல்லாய் "கலைஞர்" என்று பெயரெடுக்கவில்லை. தயவு செய்து இது போன்ற அபத்தங்களை எழுத வேண்டா!!

    ReplyDelete
  27. தன் திருமணத்தையே மறைத்த மோடியை தலையில் தூக்கி வைத்துக்கொண்டாடுகின்றீர்கள்...

    அவர் தன் திருமணத்தை மறைக்கவில்லை, மறைக்க வேண்டிய அவசியமும் இல்லை. இந்த பதிவுக்கு சம்பந்தம் இல்லாத விஷயம்.

    1. ராஜாத்தி யார் என்ற கேள்விக்கு "கனிமொழியின் தாய்" என்று வார்த்தைகளால் விளையாடவில்லை மோடி.
    2. தன் குடும்ப அங்கத்தினர்களுக்காக சீட்டு பெறவில்லை.
    3. மனைவி, இணைவி, துணைவி என்று அடுக்கவில்லை.

    தயவு செய்து கலைஞரையும் மோடியையும் ஒப்பிடாதீர்கள்.

    ReplyDelete
  28. யாகவார் ஆயினும் நாக்காக்க காவாக்கால்
    சோகாப்பர் சொல்லிளுக்கு பட்டு

    ReplyDelete
  29. யாகவார் ஆயினும் நாக்காக்க காவாக்கால்
    சோகாப்பர் சொல்லிளுக்கு பட்டு

    ReplyDelete
  30. sariyaana vadivamaippu karutthukkal...
    valga india.velga num tamil....

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner