எங்க தலை அஜித் எப்ப ஹாலிவுட் போனாருன்னு???
எல்லாம் கேட்டு
தொலைக்காதிங்க.. ஒரு புளோவுல டைட்டில் வைக்கனுமேன்னு வச்சி தொலைச்சிட்டேன்…ஆனா ஒரே
ஒரு சம்பந்தம் இருக்கு.. எஸ் இந்த படத்தோட கேரக்டர் ஒரு கார் ரேஸ் வீரர்….
ரைட்
ஜென்டில் மேன் படம் பண்ண இயக்குனர் சங்கர் தாயரிப்பாளர்க்கிட்ட கதை சொல்ல போன போது,
ஊட்டி மலை ரயிலை இரண்டு ஜீப்பு தாண்டுதுன்னு சொன்னதும், எல்லாரும் வேற ஏதாவது கதை இருந்தா சொல்லுங்க… இது
நம்ம பட்ஜட்டுக்கு சரி பட்டு வராதுன்னு சொல்லிட்டு அடுத்த சிகரேட்டை பத்த வச்சிக்கிட்ட்ங்களாம்…
காரணம் பட்ஜெட்… ஊட்டி மலை ரயிலை வாடகை எடுத்து அதுல ஹீரோ பைட்.. போலிஸ் துரத்தல் அப்ப
இரண்டு போலிஸ் ஜீப் ரயிலை தாண்டிக்குதிக்கதுன்னு ஒரு அசிஸ்டென்ட் டைரக்டர் கதை சொன்னா புரொட்யூசருக்கு வயத்துல புளியை கரைக்காது??
ஆனா
இந்த படத்தோட இயக்குனர் Courtney Solomon ஒரு கனடா நாட்டு இயக்குனர்… இப்படி ஒரு படம் பண்ண போறேன்னு சொன்னதும் டார்க்
கேஸ்டில் மற்றும் வார்னர் பிரதர்ஸ் வாய் மூடி உட்கார்ந்துக்கிட்டு இருந்தானுங்க.. காரணம்
சேப்ட்டி… எஸ்.. 1974 ஆம் ஆண்டு இதே பேர்ல இதை கதையில ஒரு படம் வந்து பேயாட்டம் ஆடிட்டு போயிடுச்சி… அந்த வெற்றி கொடுத்த மமதையில
இந்த ஆளு சொன்னதை நம்பி படம் எடுத்து இருக்காங்க…
சார்
கதைக்கா பஞ்சம்..?? எத்தனை சிறுகதை தமிழ் ல இருக்கு தெரியுமா? இயக்குனர் சசி பூ படத்தை
ஒரு சிறுகதையில் இருந்து திரைக்கதை அமைத்து
படம் பண்ணல..?? டைட்டில் கூட ஏன் சார் அதையே
வச்சி உயிரை வாங்கறானுங்க..??, அதுக்கு கூடவா பஞ்சம்…??? திருவிளையாடல்ன்னு கூகுள்
அடிச்சா தனுஷ் வந்து நிக்கறான்… தலையோ தலையோன்னு அடிச்சக்கனும் போல இருக்கு… கதையைதான்
எடுக்கானுங்கன்னு பார்த்தா டைட்டிலை கூடவா சார் ரீமேக் பண்ணி தொலைக்கனும்..?
பாருங்க நாகேஷ் சாரோட அற்புத கிளாசிக் எதிர் நீச்சல் அதை
கூகுளில் தேடினா…. சிவகார்த்திகேயன் வந்து நிக்கறான் என்று தமிழ் சினிமாவுல புலம்பறதை கேட்டு இருக்கோம்… இங்க
மட்டும் அல்ல… எல்லார் ஊர்லயே இதே காமேடிதான்…
இந்த படத்தோட கதை பேரு எல்லாம் அப்படியே 74இல் வந்த படத்தோட ரிமேக் டைட்டிமொதக்கொண்டு… வாத்தியார் சுஜாதா சொன்னது போல நாம் எல்லாரும் ஒரு
மாதிரியான வாழ்க்கையைதான் வாழ்த்துக்கிட்டு இருக்கோம்…
சரி
படத்தோட கதையை பார்த்துடலாம்…
ஒரு
கார் ரேஸ் டிரைவர் அவனோட
மனைவியை கடத்தி வச்சிக்கிட்டு, அவனை ஒரு ஹைடெக் காரை சிட்டியில வேகமமா ஓட்ட சொல்லி சிட்டியை குழப்ப சொல்லறான்… போலிஸ் கிட்டவும் மாட்டிக்க
கூடாது… வேகமா ஓட்டனும் எந்த இடத்துல வலைய சொன்னாலும் வலைஞ்சி தொலைக்கனும்… அவன் சொல்லற
செகன்ட் குள்ள இடத்தை அடையனும் காரை விட்டு வெளியே போக முடியாது…கார்ல இருக்கற கேமராவுல
பார்த்துக்கிட்டே இருப்பான்…
எப்படி அவன் பொண்டாடிட்டியை வில்லன் கிட்ட இருந்து அதுவும் அந்த சைக்கோ வில்லன் கிட்ட இருந்து எப்படி
காப்பாத்தினான் என்பதுதான் படத்தோட கதை.
டிரான்சிஸ்ட்
அப்படின்னு ஒரு படம் போன வருடத்துல இந்த ஆளு
Courtney Solomon டைரக்ட் பண்ண படம்தான்… செமசூப்பரா இருந்துச்சி…அந்த படத்தோட விமர்சனம் வாசிக்க இங்னே கிளிக்கவும்..
படம்
ஆரம்பிச்சி படம் முடியும் வரை கார் விர் விர்ன்னு
போய் தலை வலியை உண்டாக்குது… படம் ஆரம்பிச்சி முடியறதுக்குள்ள எத்தனை கார் உடைஞ்சது
எத்தனை கார் பறந்துச்சின்னு பேசாம கணக்கு எடுத்து
போட்டி வைக்கலாம்.. அந்த அளவுக்கு நிறைய கார்கள் பணால்… பணம் நிறைய சாப்பட்டு இருக்கும்…
என்னை
பொறுத்தவரை இந்த படம் டைம் பாஸ் படம்..
இந்த படம் பார்க்கும் போது.. போன வாரம் செத்து போன… பால் வால்கர் அகால மரணம்… ரொம்ப மனசை வருந்த செய்யிது…பார்ஸ்ட் பியூரியஸ் ஸ்டைல் வேற.. பட் அது போல வந்து இருக்க வேண்டிய படம்.. பெட்டர் லக் நெக்ஸ் டைம்…Courtney Solomon.
படத்தோட ரேட்டிங்-... யோவ் டைம் பாஸ் படம்ன்னா... பத்துக்கு அஞ்சி அல்லது அதுக்கு கீழ.. போதுமா....
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS..
.

0 comments:
Post a Comment