ENDRENDRUM PUNNAGAI-2013 என்றென்றும் புன்னகை / சினிமா விமர்சனம்ரொம்ப  நாளைக்கு அப்புறம் செம ஜாலியான யூத் சப்ஜெக்ட்...
இப்படி ஒரு சப்ஜெக்ட்டை எடுத்துக்கிட்டு தமிழ்சினிமாவுல மொக்கை போட்டு... இருந்த இடம் தெரியாம காணாம போன இயக்குனர்கள்  பட்டியல் தமிழ் சினிமாவில்   நிறையவே இருந்தாலும்... அந்த பட்டியலில் தன்னை இணைத்துக்கொள்ளாமல் தப்பித்து கொண்டு இருக்கிறார் இயக்குனர் அகமது.  

ஜெய்யை வச்சி வாமணன்னு ஒருதிரில்லர் படத்தை கொடுத்துட்டு  பெயிலியர் ஆகி கையை பிசஞ்சிக்கிட்டு இருக்கும் போது  எடுத்த படம்தான் என்றென்றும் புன்னகை.


ஜீவா அம்மாசின்ன வயசுல ஓடிப்போயிடுறாங்க... அதனால பொண்ணுங்க அப்படின்னாலே ஜீவாவுக்கு பிடிக்காது... அதனால் அவுங்க அப்பா  நாசர் ஜீவாவை ஊட்டியில் இருந்து  சென்னைக்கு கூட்டி வந்து படிக்க வைக்கிறார். அப்ப சின்ன பையனா இருக்கச்சே... வினய், சந்தானம் பிரண்ட்ஸ் ஆகறாங்க.. அவுங்களும் கடைசி வரை கல்யாணம் செஞ்சிக்க மாட்டோம்ன்னு  ஜீவாவுக்காக சத்தியம் செஞ்சிட்டுமீறிடுறாங்க... அதனால் நட்புக்குள்ள பிரிவுவந்துடுது... அவுங்க எப்படி கடைசியா  ஒன்னா  சேருகின்றார்கள் என்பதுதான் என்றென்னும் புன்னகை.


காமெடி என்ற  பெயரில் மொக்கை காமெடி அடிக்காம ரொம்ப ஜாலியா இந்த படத்தை அகமது எடுத்துக்கிட்டு போயிருக்கார். அதனால் படம் தப்பிச்சிடுச்சி.
மவுனம் பேசியதே படத்தோட அப்பட்டமான  காப்பின்னு யாராவது எழுதி தொலைச்சிடாதிங்கப்பா... அந்த படத்தின் சாயல் நிறைய இடங்களில் இருப்பது உண்மைதான்.. இருந்தாலும் களம் வேறு வேறு,....


முக்கியமாக எனக்கு  தெரிந்து இந்த  திரைப்படத்தின்  வெற்றிக்கு ரொம்பவும்  அடிப்படை இவுங்க எடுத்துக்கிட்ட  விளம்பர பின்னனியை களமாக எடுத்துக்கொண்டதால்... படம் இன்னும் பிரஷ்ஷாக இருக்கின்றது...

 உடை மாற்றும் இடத்தில் சிவப்பு  பிரா ஒன்று ஏற்கனவே இருக்க. அதை போட்டு  பார்க்கும் ஆசையில் சந்தானம் போட்டு கண்ணாடியில் அழகு  பார்க்க  திடிர் என்று துணிக்கடையில் தீப்பிடுத்துக்கொள்ள அப்படியே பிராவோடு  உயிர் தப்பிக்க சந்தானம் ஓடும் காட்சி ஒரு விளம்பரத்துக்கான காட்சி  எனும் போது இன்னும் ரசிக்க வைக்கிறது.


 சந்தானம் கவுண்டரின் காமெடியை பின்புலமாக வைத்துக்கொண்டு இப்போதைக்கு ஏற்ற டிரென்டுக்கு அடித்து விட்டாலும் நிறைய காட்சிகளில் இந்த படத்தில் ரசிக்கவே வைக்கின்றார்... ஒரு நண்பர்கள் வட்டத்தில் நடக்கு கலாய்யசல் நிகழ்வு போல காமெடி காட்சிகள் இருப்பதுதான் படத்தின் பெரிய சக்சஸ்.


நாம கடைசி வரை கல்யாணம் செஞ்சிக்க வேண்டாம் என்று ஜீவா சொல்ல அதை அதை சந்தானம் அமோதித்து ஆமாம் மச்சி கடைசி வரை கல்யணாம் செஞ்சிக்காம மொட்டை பசங்களா கேரியல் இல்லாத சைக்கிள் போல வாழுவோம்   என்று கலாய்ப்பது... செம கலாய்.
 அது என்ன பிரியா என்ற பெயர் மீது  தமிழ் சினிமாவுக்கு இருக்கும் மையல் என்று தெரியவில்லை... பிரியா பிரியா என்று பிரியா புராணம் பாடிக்கொண்டு இருக்கின்றார்கள்,.. பேரை மாத்துங்கப்பு...பிளிஸ்..


ஹாரிஸ் வழக்கம் போல கேட்ட பாட்டு போல இருக்கேன்னு நினைக்க வைக்குதேன்னு நினைக்கும் போதே  அந்த பாட்டையும் ரசிக்கவே வைக்கின்றார்...

ஒளிப்பதிவாளர் மதிக்கு டீம் தேங்ஸ் சொல்லனும்.. இல்லை இயக்குனர் அகமது... இதுக்கு முன்ன டிவி ஷோஸ் மற்றும் ஈவன்ட் மேனேஜ்மன்ட் பண்ணி இருக்கறதால ரெண்டு பேரும் டிஸ்கஸ் பண்ணி கூட எடுத்து இருக்கலாம்..  சென்னை மற்றும் படத்தின் பிரேம்களை ரொம்ப அழகா எடுத்து இருக்காங்க...முக்கியமா சென்னையின் லாங்க ஷாட்டு லேண்டு மார்க்குங்க புதிய கோணத்துல ரொம்ப பிரஷ்ஷா எடுத்து இருக்காங்க..  முக்கியமா புதிய தலைசெயலக ஷாட் மற்றும் சுவிஸ் நகரத்து லாங் ஷாட்டுகள் சான்சே  இல்லை...


 ஆன்ட்ரியா மழை பாட்டு நம்ம தூக்கத்தை கெடுக்க  வித விதமான அசைவுகள் மூலம்  நிறைய முயற்சிகள் செய்யறாங்க.. முக்கியமா ஜீவாவோட சுவிஸ் ஓட்டல்ல கால் மேல கால் போட்டுக்கிட்டு பேசும் போது நாம் மொபைலை நோன்ட ஆரம்பிச்சிட்டேன்..


திரிஷாவின் வயது முதிர்வு அனைவருக்கும் தெரியும் என்றாலும் திரிஷா யங் அண்டு எனர்ஜியாக இருக்கின்றார்.. டிஓபி மதிக்கு அவர் தேங்ஸ் கண்டிப்பா சொல்ல வேண்டும். சுவிஸ்ல ஆள் இல்லை ஆண்ட்ரியா கோச்சிக்கிட்டு போயிடுச்சி... வேற ஆள் இல்லை.. ஆட் பாதியில நிக்குது.. மாடல் இல்லை பட் ஜீவாவுக்காக திரிஷா மாடல்  டிரஸ் போட்டுக்கிட்டு நடிக்க வராங்க... திரிஷா தேவதை போல இருக்காங்க..... சான்சே இல்லை... அதனாலதான்  டிஓபி மதிக்கு தேங்ஸ் சொல்ல சொல்லறேன்...


சில இடங்களில் தொய்வு ஏற்படுவதை சந்தானம் கூட்டனிதான் ..   சநதானம் தன் மனைவிக்கிட்ட  என்ன டின்னர் நைட்டுக்குன்னு கேட்க??ஒரு டம்ளர் விஷம்ன்னு  மனைவி சொல்ல... அப்ப நீ குடிச்சிட்டு தூங்கு.. நான்  வர ஒன்அவர் லேட்டாகும் என்று   சொல்லும் காமெடி துணுக்குகள்  படம் நெடுக ஏராளம்... படத்தை ரிலாக்ஸ்  செய்ய வைப்பதும் இதுவே..


===========
படத்தின் டிரைலர்.==============
படக்குழுவினர் விபரம்.


Directed by I. Mueenuddin Ahmed
Produced by G.K.M. Tamil Kumaran
Dr. Ramadoss
Written by I. Mueenuddin Ahmed
Starring
Jiiva
Trisha Krishnan
Vinay Rai
Santhanam
Andrea Jeremiah
Music by Harris Jayaraj
Cinematography R. Madhi
Editing by Praveen K. L.
N. B. Srikanth
Studio Tamilkumaran Productions Pte Ltd
Distributed by Red Giant Movies
Release dates
20 December 2013
Running time 152 minutes
Country India
Language Tamil

==================
பைனல்கிக்.

படம் முடியும் போது  சந்தானம் கபாலம் கலங்க குடிக்காலாம் மச்சி என்று சொல்ல... அதுக்கு திரிஷா... இப்பதான் லவ் சொல்லி இருக்க... என் கூடகொஞ்சம் டைம் ஸ்பென்ட் பண்ணுன்னு சொல்ல...மச்சி  இவுங்க கூட கொஞ்ச நேம் குடிக்கனுமாம் என்று சொல்வது சான்சே இல்லை... இந்த படத்தை  கண்டிப்பாக  பார்த்து ரசிக்கலாம்...
========
பட்டாளி மக்கள் கட்சி தலைவர்  ஜிகே மணி  பையன் தமிழ் குமரன்  இந்த படத்தை தயாரித்து இருக்கின்றார். படத்தை ரெட்ஜெயன்ட் உதயநிதி வெளியிட்டு இருக்கார்... சினிமா சமுகத்தை கெடுக்குதுன்னு சொன்னவங்களோட அடுத்த தலைமுறை படத்தயாரிப்பில் இறங்கி இருக்காங்க... செம டைமிங்

==========
படத்தின் ரேட்டிங்

பத்துக்கு ஆறரை..

============
பிரியங்களுடன்


ஜாக்கிசேகர்.

நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

4 comments:

 1. அருமையான விமர்சனம்! நன்றி!

  ReplyDelete
 2. என்றென்றும் புன்னகை புன்னகைக்க வைக்கிறது என்கிறீர்கள்...

  ReplyDelete
 3. I wish to add a point - 'Even the film - Madhubana Kadai has not this much scenes with alcohol.'. This movie produced by PMK member, who oppose drink culture. :) If santhanam was not in this movie, it would be utter flop.

  ReplyDelete
 4. அருமையான விமர்சனம். உளம் நிறைந்த வாழ்த்துக்கள் தலைவரே!

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner